Thursday, June 18, 2009

குங்குமத்துக்கு என்ன ஆச்சி!!!

குங்குமத்துக்கு என்ன ஆச்சின்னு தெரியலை, என்னோட மொக்கை இடுக்கை எல்லாம் வெளியிட்டு இருக்காங்க,இது வெளி வந்ததும் எனக்கு தெரியலை, நண்பர் ஜீவன், நண்பி ரம்யா இருவரும் சொல்லித்தான் எனக்கே தெரியும். இந்த வார அதவாது 25/06/2009.இதழிலே பக்கம் 110-111 வெளி வந்து இருக்கு.அதாவது காதனும் காதலியும் என்ற தலைப்பிலே எழுதிய மொக்கை தான் அது.

குங்குமத்திலே எல்லாம் வெளிவந்தாலே இனிமேல மொக்கை எல்லாம் எழுத மாட்டேன்னு நினைக்காதீங்க, உடல் மண்ணுக்கு,உயிர் தமிழுக்கு, எழுத்து மொக்கைக்கே என்று வாழ்பவன் நான், இடுக்கைகளிலே எந்த மாற்றம் இருக்காது, கடை வழக்கம் போல செயல் படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படியெல்லாம் சொன்ன இதுவும் என்னோட கனவுலதான் வந்து இருக்கும்னு நீங்க நினைக்க வாய்ப்பு இருக்கு.அதோட அத்தாட்சியையும் கிழே இணைத்து இருக்கேன் பாருங்க, என்னோட சேர்த்து மயாதி எழுதிய கவிதையும் பிரசுரமாகி இருக்கிறது.

குங்குமம் இதழுக்கு ஒரு விண்ணப்பம், அப்படியே சன் பிச்சர்ல இருந்து ரெண்டு பேரை ௬ட்டிட்டு வந்து என்னோட வில்லு, நான்கடவுள், வாரணம் ஆயிரம், எந்திரன்,கந்தசாமி விமசர்சனங்களையும்,இனிமேல எழுதபோற அசல்,வேட்டைக்காரன் விமர்சனத்தையும் காட்டுங்க, இதுக்கு பேருதான் இடத்தை கொடுத்தா மடத்தை பிடுங்குறதுன்னு எங்க ஊரு புளியங்குடியிலே சொல்லுவாங்க.நான் ரெம்ப அடக்க ஒடுக்கமானவன் சுய விளம்பரம் அதிகம் விரும்ப மாட்டேன் சொன்னா நம்புவீங்கதானே.


46 கருத்துக்கள்:

சென்ஷி said...

:-)

வா(வ்)ழ்த்துக்கள்!!!

மயாதிக்கும்!!

குடுகுடுப்பை said...

அடுத்த சன் டிவில வருவீங்க தானே?

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள்...

seik mohamed said...

வாழ்த்துகள்...

RAMYA said...

வாழ்த்துக்கள்!!!

மயாதிக்கும்!!

வினோத் கெளதம் said...

வாழ்த்துக்கள்!!!

மயாதிக்கும்!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் நசரேயன்!
உங்கபேர போடாம போட்டதில் உள்குத்து எதுவும் இல்லையே!
யாருக்கு செலக்டிவ் அம்னீசியாவோ?
குறைந்த பட்சம் உங்களுக்குத் தெரிவித்தார்களா?
இப்படித்தான் கார்பொரேட் கம்பெனிஎல்லாம் நடக்குதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்...

நசரேயன் said...

//
வாழ்த்துகள் நசரேயன்!
உங்கபேர போடாம போட்டதில் உள்குத்து எதுவும் இல்லையே!
யாருக்கு செலக்டிவ் அம்னீசியாவோ?
குறைந்த பட்சம் உங்களுக்குத் தெரிவித்தார்களா?
இப்படித்தான் கார்பொரேட் கம்பெனிஎல்லாம் நடக்குதா?
//

எந்த வித முன் அறிவிப்பு இல்லை.. சம்மதம் எல்லாம் கேட்கலை, அவங்களே போட்டு கிட்டாங்க, இதுதான் நவின கலாச்சாரமானு தெரியலை !!!

வால்பையன் said...

மத்தியானம் ரம்யா சொல்லிதான் தெரியும்!
ஓடிபோய் கடையில கும்குமம் கேட்டா ந்ர்த்தியில வைகிற கும்குமம் தர்றான்,

டே புத்தகம் குடுடான்னு கேட்டா எல்லாமே தீர்ந்து போச்சாம்!

பாருங்களேன் உங்க பேர் வந்தவுடன் புத்தகம் கூட பறக்குது!

பழமைபேசி said...

வாழ்த்துகள் தளப்தி!

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள்!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள்

♫சோம்பேறி♫ said...

என் ஆழ்ந்தவாழ்த்துக்கள்னு சொல்ல வந்தேன்..

Unknown said...

மொக்கை கதை எழுதி.....


என்றென்றும் வெற்றி பெரும்.......எங்கள் ஆருயிர் தோழர்.....நசரேயன் நட்புக்கு ....


வாழ்த்துக்கள்......வாழ்க வளமுடன்.....!!!!

எம்.எம்.அப்துல்லா said...

//குங்குமத்துக்கு என்ன ஆச்சி!!! //

ஆச்சியா?? அப்ப குங்குமம் செட்டியாரா???

அளவில்லா சந்தேகத்துடன்,

அப்துல்லா.

:)

அ.மு.செய்யது said...

அட..நம்ம நசரேயன்..

வாழ்த்துக்கள் !!!!!! அடுத்து விஜய் டிவில நீயா நானாவுக்கு நீங்க தான சிறப்பு விருந்தினர் ??

Suresh said...

வாழ்த்துகள் தலைவா

வில்லன் said...

"குங்குமத்துக்கு என்ன ஆச்சி!!!"

சந்தன மார்பிலே சேந்து போச்சி... ஒ மதி ஒ மதி

வில்லன் said...

//இதுக்கு பேருதான் இடத்தை கொடுத்தா மடத்தை பிடுங்குறதுன்னு எங்க ஊரு புளியங்குடியிலே சொல்லுவாங்க.//

உண்மைய ஒத்துகிட்டதுக்கு ரொம்ப சந்தோசம்.

இருந்தாலும் உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள். ஆமா பார்ட்டி எப்ப.... ரசிகர்களா இருந்து வளத்து விட்ட எங்கள மறந்துராதிங்க

ஷண்முகப்ரியன் said...

வாழ்த்துகள்,நச்ரேயன்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் மயாதிக்கும்!!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

நட்புடன் ஜமால் said...

மயாதிக்கும் வாழ்த்துகள்

sakthi said...

வாழ்த்துக்கள் நசரேயன் அண்ணா

மிக மிக சந்தோஷம்

ராயல்டி எல்லாம் ஒழுங்கா குடுத்தாங்களா

குடுக்கலைன்னா சொல்லுங்க கோர்ட்க்கு போயிடலாம்....

மயாதி said...

அட நீங்கள் சொல்லியதால்தான் எனக்கும் தெரிய வந்தது...
மொக்கை போட்டு இன்னும் நிறையப் பேரை மொட்டை போட வாழ்த்துக்கள்..

குங்குமத்தில் வந்ததுக்கும் வாழ்த்துக்கள்.


நன்றி நண்பரே....

செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் நசரேயன் !!

Vidhoosh said...

வாழ்த்துக்கள் நசரேயன்!

Anonymous said...

வாழ்த்துக்கள்ப்பா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் நசரேயன்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

கதைய படிச்சுட்டு நானும் அஞ்சு நிமிஷம் விடாம சிரிச்சேன், முக்கியமா அந்த ஷேம்பூ கவிதை,, சான்ஸே இல்ல நசர்.

எந்த வித முன் அறிவிப்பு இல்லை.. சம்மதம் எல்லாம் கேட்கலை, அவங்களே போட்டு கிட்டாங்க, இதுதான் நவின கலாச்சாரமானு தெரியலை !!! //

வெரிகுட், சொல்லிவெச்சு போட்டா அதுக்கு பேரு விளம்பரம், நம்ம கிட்ட சொல்லாம போட்டா அதுக்கு பேரு களேபரம் (என்னவோ வாய்க்கு வந்தத உளறிட்டேன்)

தமிழ் said...

மச்சான் வாழ்த்துக்கள் டா!

Anonymous said...

வாழ்த்துக்கள் நசரேயன்

மதிபாலா said...

வாழ்த்துக்கள் நண்பர் நசரேயன்.

கிரி said...

கலக்குங்க :-)

குடந்தை அன்புமணி said...

நானும் படிச்சேன். வாழ்த்துகள்! ம்! நடத்துங்க!

வேத்தியன் said...

வாழ்த்துகள் ...

அத்திரி said...

அண்ணாச்சி கலக்குங்க கலக்குங்க கலக்கிட்டே இருங்க.........போன வாரம் உங்க ஊருக்கு போய் வந்தேன்

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்

வாழ்த்துகள் நண்பா

vasu balaji said...

வாழ்த்துகள். மொக்கைகள் தொடரட்டும்/

Prabhu said...

நான் இதுக்கு முன்னயே பதிவுலகத்தில் இருந்தாலும் சிலகாலத்துக்கு, முன்பு என்னுடைய ப்ளாக் கூகுலால் விழுங்கப் பட்டதால் எனது பதிவுகள் புதிய முகவரியில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது. இதை எல்லா நண்பர்களுக்கும், அவர்கள் கூடும் இடங்களிலும் சொல்ல்னும்ல. அதான்
http://pappu-prabhu.blogspot.com/

இதுதான் என் ப்ளாக்கோட முகவரி.

Anoch said...

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

ராஜ நடராஜன் said...

கடைப்பக்கம் கொஞ்ச நாளா வரலை.இங்க வந்தப்பதான் தெரிஞ்சது.தாமதமான வாழ்த்துக்கள்.கொடி பறக்கட்டும்!

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

வாழ்த்துக்கள்.

முகவை மைந்தன் said...

வாழ்த்துகள் மாப்ள. குழும அஞ்சல் பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன். கதைத் திருட்டை மையமா வைச்சு நசரேயன், நயன்தாரா துப்பறியும்னுஉ ஒஒரு தொடர் எழுதேன்! வாசகர் விண்ணப்பம் மறுக்காத.