Thursday, May 7, 2009

கந்தசாமி விமர்சனம்

மஜா, பீமா விலே வாங்கிய அடியிலே அஸ்திவாரம் ஆட்டம் கண்டு கொண்டு இருக்கும் விக்ரமிற்கு கந்தசாமி ஒரு கற்பக சாமி.அவரது சரிவை தூக்கி நிறுத்த வந்து இருக்கும் ஏணி தான் கந்த சாமி, திரையிலே பார்ப்பவர்களை ஈர்க்கும் காந்தசாமி இந்த கந்தசாமி.முன்னுரையை முழக்கி நீட்டி மொக்கை அடிக்காம நேர கதைக்கு ஓடுவோம், அதுக்காக நீங்க வேற கடைப்பக்கம் ஓடவேண்டாம்.

கந்தசாமி வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஆள் அனுப்பும் அலுவலகத்திலே வேலை செய்கிறார். சென்னையில் அவரோட முக்கிய வேலை திருட்டுத்தனமா ஆளுங்களை வெளி நாட்டுக்கு அனுப்புவதுதான், அவர்கள் கொடுக்கும் பணத்திலே கிராமங்களுக்கு நல்லது செய்கிறார், இவ்வளவு செய்யலைனா தமிழ் பட கதாநாயகனா இருக்க முடியாது.

இப்படி நகரும் கதையிலே புயலாய் சிரேயாவின் வரவு கண்களுக்கு விருந்தாய் அமைகிறது.அது விருந்தா இல்ல விருதாவன்னு பார்கிறகவங்க சொல்லணும். சிரேயா தான் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும் அதற்க்கு விக்ரமின் உதவியை நாடுகிறார்.விக்ரம் திருட்டு தனமா பெண்களை வெளிநாட்டு அனுப்புவதில்லை என் ௬றி அனுப்பி விடுகிறார்.


திருடனா
இருந்தாலும் தாய் குலங்கள் மேல மரியாதையை இருந்தாத்தான் தமிழ் சினிமாவிலே நிலைத்து நிக்க முடியுமுன்னு அப்படி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறன்.அவரு சொன்னதை கதாநாயகி ஏத்து கிட்டா பத்து நிமிஷத்து மேல படம் எடுக்க முடியாதுன்னு, விடா முயற்சியா விக்ரம துரத்தி வாரங்க நாயகி,இதை வழக்கமான நாயகி, நாயகனை விரட்டுற மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.இதெல்லாம் படத்திலேதான் நடக்கும், ஆனா நிஜத்திலே துண்டு போட அலைந்தே கால் தேய்ஞ்சி கை ஆகிவிடும்.

விக்ரம் கை,காலை பிடிச்சி சம்பதம் வாங்கும் முன்னே ஒரு குத்து பாட்டு ரெண்டு சண்டை முடிந்து இருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இருக்காது.ஒரு வழியா நாயகன் சம்மதிக்க, நாயகி இன்னும் ஒரு நிபந்தனை விதிக்கிறாங்க, ஆனா அதுக்கு என்னவோ அவரு உடனே சம்மதிச்சி விடுகிறார்,நீ ௬ட வந்தா ராஜ பக்சே வேசத்திலே வன்னிக்கே வருவேன்னு ஒரு வசனத்தை சொல்லி,இதுவரைக்கும் உள்ளூர்ல மெய்ஞ்ச கதை வெளிநாடு அதாவது சுவைன் ப்ளு கண்ட மெக்சிகோவுக்கு போகுது.

சிரேயாவின் நடவடிக்கை மேல சந்தேகப் படுகிற விக்ரம், அவங்க வேலை தேடி வரலை,யாரையோ தேடி வந்து இருக்காங்கனு தெரிய வருகிறது.கஷ்டப்பட்டு அதையும் கண்டு பிடிக்கிறார் நாயகன்.அந்த விவரங்களை சிரேயாவிடம் கேட்கும் போது தான் தன் அண்ணனை தேடி வந்து இருப்பதாக உண்மையை சொல்லுகிறார்.அவரை கண்டு பிடிக்க தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.அவரின் புகை படத்தை பார்த்து விக்ரம், தான் தான் அவனை திருட்டு தனமாக வெளிநாடு அனுப்பி வைத்த தாகவும் சொல்லி அவளுக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுக்கிறார்.

இங்கே இடை வேளை வருமுன்னு யாரும் நினைச்சா அதற்க்கு கதை ஆசிரியர் பொறுப்பு இல்லை.ஒருவழியா ரெண்டு பேரும் தேடி சிரேயா அண்ணனை கண்டு பிடிக்கிறார்கள், ஆனா அவரு ஒரு போதை பொருள் கடத்தும் கும்பலிடம் மாட்டி கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது, உள்ளூர் காவல் துறை உதவியுடன் அங்கே செல்லும் அவரை மீட்டு வருகிறார்கள்.மீட்டு வந்து அண்ணனை பார்த்த சந்தோசத்திலே அண்ணனை சிரிச்சி கிட்டே சுட்டு தள்ளுறாங்க சிரேயா,இப்படி ஒரு காட்சி எந்த படத்திலேயும் வரலை, இனிமேலும் வருமான்னு சந்தேகமே

இப்பவும் இடைவேளை விடலைன்னா எல்லோரும் தெறிச்சி ஓடிடுவாங்கன்னு பார்பவர்களின் நலம் கருதி இடைவேளை டீ, காபி குடிக்கிறவங்க, போயிட்டு வாங்க.

என்னதான் பாதி படம் ஓடினாலும் இனிமேல்தான் கதையே ஆரம்பிக்குதுன்னு சொன்னா நம்பவா முடியும், சிரேயா தான் யாரு என்கிற கொசுவத்தி சுத்த வேண்டிய கட்டாய நிலை, அவங்க இந்திய உளவுத்துறை அதிகாரி என்பதையும் நம்ம நாட்டிலே இருந்து வெளிநாட்டிற்கு தப்பி சென்ற கும்பல் இந்தியாவுக்கு எதிரா தேச விரோத சக்திகளில் ஈடு படுவதாக இந்திய உளவுத்துறைக்கு தகவலுடன் புகைப்படமும் வந்ததால் அவர்களை அழிக்கும் முயற்சியே இது என்பது தெரிய வருகிறது,ஆனா இதை எல்லாம் கேட்க விக்ரம் வெளியிலே இல்லை,
ஜெயில்ல இருக்காரு, அவரு மேல வெளிநாட்டுக்கு சட்ட விரோதமா ஆள் அனுப்பிய குற்றத்திற்காக கைதாகி கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்.


அவரிடம் இந்திய உளவுத்துறை விசாரணை நடத்த வருகிறது, அவர்களிடம் சிரேயா கொன்றது தீவிரவாதி இல்லை என்பதும், அவரை நன்றாக தனக்கு தெரியும் என்பதையும் சொல்லுகிறார்.நம்ப மறுக்கும் அதிகாரிகளை இறந்தவரின் கிராமத்திற்கு சென்று அவர் நிரபராதி என்றும், அவர்கள் ஒரு குழுவாக செயல் பட்டு வெளிநாட்டு சென்று கிராமங்களுக்கு நன்மை செய்வதாகவும் தானே அக்குழுவின் தலைவர் என்பதை சொல்லுகிறார்

இப்படி முடிச்சி மேல முடிச்சி இருக்கிற கதையின் நோக்கம் என்ன என்று யாருக்காவாது சந்தேகம் வந்தால் உண்மைய சொல்லுறது ஒரு விமர்சகரோட கடமை, தவறான தகவல் தந்த அந்த குழுவின் நோக்கம் என்ன, மேலும் விகரமின் கனவுத்திட்டம் நிறை வேறியதா என்பது தான் மீதி கதை உண்மையை கண்டு பிடிக்கிற விக்ரமுக்கு துணையாக சிரேயா, படத்தோட இறுதியிலே துணைவி ஆகிவிடுகிறார்கள்.

கதையோட இறுதியிலே அந்த கருப்பு ஆடு உளவுத் துறையின் தலைவர் என்பதை கண்டு பிடித்து சூரசம்காரம் செய்கிறார் இந்த கந்தசாமி. இதோட படமும் முடியுது விமர்சனமும் முடியுது. படத்திலே குத்து வசனம் எல்லாம் கிடையாது, படம் நல்ல படியா தியேட்டர் விட்டு ஓடாம நின்னு ஓடினா போதும் என்று நினைத்து விட்டார்கள் போல தெரியுது



59 கருத்துக்கள்:

ராஜ நடராஜன் said...

குவைத்ல மணி இரவு 11.இந்தியாவுல எல்லாரும் தூங்கப் போயிட்டாங்க.

அய்.கடையே காத்து வாங்குது.நானே முண்டியடிக்காம முந்திகிட்டு முதல்:)

குடுகுடுப்பை said...

ஆரம்பிச்சாச்சா ஆட்டத்த

ஆளவந்தான் said...

எச்சூஸ்மி.. என்ன நடக்குது இங்கே?

Indy said...

I'm the fourth :-)

- இரவீ - said...

நல்லா கொடுக்கராங்கைய்யா டீடைல்லு ...
நல்லாருக்கு... நல்லாருக்கு...

புதியவன் said...

//இப்பவும் இடைவேளை விடலைன்னா எல்லோரும் தெறிச்சி ஓடிடுவாங்கன்னு பார்பவர்களின் நலம் கருதி இடைவேளை டீ, காபி குடிக்கிறவங்க, போயிட்டு வாங்க.//

நீங்க டீ குடிச்சீங்களா..?...இல்ல காபியா...?

Anonymous said...

இன்னொரு இஸ்திரின்னு(அயன்னு) சொல்ல வர்ரீங்க.

வால்பையன் said...

கடைசியில பஞ்ச் டயலாக் வைக்க மறந்துட்டிங்க!

கந்தசாமி, ஒரே கப்புசாமி!

yesu said...

Vikram is great

Mahesh said...

கெட்ட கெட்ட கெனாவா வருது.... நயந்தாரா அஷ்டகம், நமிதா சஹஸ்ர நாமம்னு எதாவது சொல்லிட்டு தூங்கப் போங்க !!

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆரம்பிச்சிடீங்களா??

http://urupudaathathu.blogspot.com/ said...

இனி நிறுத்த முடியாது

http://urupudaathathu.blogspot.com/ said...

கந்தசாமி --- நொந்தசாமி

http://urupudaathathu.blogspot.com/ said...

யாருமே இல்லியா??

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்போ என்னோட ஆட்டத்த ஆரம்பிக்க வேண்டியதுதான்

http://urupudaathathu.blogspot.com/ said...

///வரது சரிவை தூக்கி நிறுத்த வந்து இருக்கும் ஏணி தான் கந்த சாமி, திரையிலே பார்ப்பவர்களை ஈர்க்கும் காந்தசாமி இந்த கந்தசாமி///


என்னது இது?? டீ.ஆர் ரேஞ்சுக்கு இருக்கு..
( பொட்டியில பணம் வாங்கிட்டீயலா?)

http://urupudaathathu.blogspot.com/ said...

//முன்னுரையை முழக்கி நீட்டி மொக்கை அடிக்காம ///


அப்போ இவ்ளோ நேரம் போட்டது மொக்கை இல்லியா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///விக்ரம் கை,காலை பிடிச்சி சம்பதம் வாங்கும் முன்னே ஒரு குத்து பாட்டு ரெண்டு சண்டை முடிந்து இருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இருக்காது.////


அப்படியா என்னகு தெரியாதே??

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்போதைக்கு போறேன்..

ஆனா மறுபடியும்..,







































வருவேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

பாத்தீங்களா சொன்னா மாதிரி
































வந்துட்டேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///இதுவரைக்கும் உள்ளூர்ல மெய்ஞ்ச கதை வெளிநாடு அதாவது சுவைன் ப்ளு கண்ட மெக்சிகோவுக்கு போகுது.///


அப்போ அது ஸ்வைன் ப்ளு கிடையாது, ஸ்ரேயா ப்ளு..

http://urupudaathathu.blogspot.com/ said...

///இதுவரைக்கும் உள்ளூர்ல மெய்ஞ்ச கதை வெளிநாடு அதாவது சுவைன் ப்ளு கண்ட மெக்சிகோவுக்கு போகுது.////



அப்போ இவிங்க தான் அந்த ஸ்வைன் ப்ளுக்கு காரனமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///கதையோட இறுதியிலே அந்த கருப்பு ஆடு உளவுத் துறையின் தலைவர் என்பதை கண்டு பிடித்து சூரசம்காரம் செய்கிறார் இந்த கந்தசாமி///


அவ்வ்வ்.. இப்பவே கண்ன கட்டுதே..

http://urupudaathathu.blogspot.com/ said...

இன்னும் எத்தினி படத்துக்கு இப்படி முன்னுரை எழுத போறீங்களோ??








நாங்களும் பாவமில்லியா??

http://urupudaathathu.blogspot.com/ said...

படம் வரத்துக்கு முன்னாலே விமர்சனம் எழுதுறது உமக்கு பேஷனா போச்சு..



சரியில்லை..

அம்புட்டுதேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

25 போட்டாச்சு..



















இப்போ நிஜமாவே அப்பலிக்க வரேன்,..

Prabhu said...

ஹேய், என்னய்யா நடக்குது இங்க? படமே வரல. கதை ஓடுது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))0

RAMYA said...

கொஞ்சம் தாமதம், உடல் நலம் சரி இல்லை மன்னிக்கவும்!!

RAMYA said...

//இப்பவும் இடைவேளை விடலைன்னா எல்லோரும் தெறிச்சி ஓடிடுவாங்கன்னு பார்பவர்களின் நலம் கருதி இடைவேளை டீ, காபி குடிக்கிறவங்க, போயிட்டு வாங்க.//

அது சரி!! சாமி கண்ணை கட்டுதே :)

RAMYA said...

உங்க கனவுகளுக்கு எந்த கண்டிப்பு, கட்டாயம் எதுவும் இல்லை.

நல்லா எல்லாத்தையும் போட்டு தாக்கற மாதரி கனவுகள்தான் வருது.

நல்ல சினிமா விமரிசனம் பண்ணறீங்க. யாராவது Producer பார்த்தா உங்களை அள்ளிகிட்டு போய்டுவாங்க.

நகைச்சுவையாகவும் சொல்லி இருக்கீங்க. சரி அந்த படம் பார்க்கலாமா?? வேண்டாமா??

S.R.Rajasekaran said...

கந்த சாமி - கந்தலான சாமீ உங்க கதைக்கு தலைப்பு இப்படி வச்சிருக்கலாம்

S.R.Rajasekaran said...

இப்படி நகரும் கதையிலே புயலாய் சிரேயாவின் வரவு கண்களுக்கு விருந்தாய் அமைகிறது


விருந்துன்னா எப்படி .இதை தெளிவாக விளக்குமாறு கேட்டுக்கிறேன்

S.R.Rajasekaran said...

விக்ரம் திருட்டு தனமா பெண்களை வெளிநாட்டு அனுப்புவதில்லை என் ௬றி அனுப்பி விடுகிறார்



வாழ்க M.G.R

S.R.Rajasekaran said...

வழக்கமான நாயகி, நாயகனை விரட்டுற மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமா இருக்கு



ஆமா ,ஆமா யானைல போய் தொரத்துறாங்க

S.R.Rajasekaran said...

ஆனா அதுக்கு என்னவோ அவரு உடனே சம்மதிச்சி விடுகிறார்



மீட்டருக்கு மேல போட்டு தாரேன்னு சொல்லிருப்பாங்க

S.R.Rajasekaran said...

சிரேயாவின் நடவடிக்கை மேல சந்தேகப் படுகிற விக்ரம்



கல்யாணத்துக்கு முன்னாடி சந்தேகமா

S.R.Rajasekaran said...

கஷ்டப்பட்டு அதையும் கண்டு பிடிக்கிறார் நாயகன்



பின்ன 3 பைட்டு போட்டுல்ல கண்டுபிடிக்கிராரு

S.R.Rajasekaran said...

அண்ணனை சிரிச்சி கிட்டே சுட்டு தள்ளுறாங்க சிரேயா,இப்படி ஒரு காட்சி எந்த படத்திலேயும் வரலை,


ஒருவேளை- சிரிச்சுக்கிட்டே சுடுற மேனியான்னு- ஏதும் புதுவகையான வியாதியோ என்னவோ

S.R.Rajasekaran said...

இப்பவும் இடைவேளை விடலைன்னா எல்லோரும் தெறிச்சி ஓடிடுவாங்கன்னு பார்பவர்களின் நலம் கருதி


அடடா இப்பதான் இடைவேளையா இதுதெரியாம படம் முடிஞ்சிருச்சின்னு எல்லாரும் வீட்டுக்கு போறாங்க

S.R.Rajasekaran said...

என்னதான் பாதி படம் ஓடினாலும் இனிமேல்தான் கதையே ஆரம்பிக்குதுன்னு சொன்னா நம்பவா முடியும்



இனிமேல் திரைல எழுதி காமிங்கப்பா -இனிமேல் தான் கதை ஆரம்பம்-அப்படின்னு

S.R.Rajasekaran said...

சிரேயா தான் யாரு என்கிற கொசுவத்தி சுத்த வேண்டிய கட்டாய நிலை


கொசுவத்தி பழைய மெத்தடு ,இனிமேல் liquid ஓட்டை போட்டு சொட்டு சொட்டா வடியற மாதிரி காட்டுங்கப்பா

S.R.Rajasekaran said...

ஆனா இதை எல்லாம் கேட்க விக்ரம் வெளியிலே இல்லை


ஆமா அவரும் டீ குடிக்க கடைக்கு போய்ட்டாரு

S.R.Rajasekaran said...

அவர்கள் ஒரு குழுவாக செயல் பட்டு வெளிநாட்டு சென்று கிராமங்களுக்கு நன்மை செய்வதாகவும் தானே அக்குழுவின் தலைவர் என்பதை சொல்லுகிறார்



அப்பாட இப்பதான் படத்துல கதையே ஸ்டார்ட் ஆகுது

S.R.Rajasekaran said...

கனவுத்திட்டம் நிறை வேறியதா என்பது தான் மீதி கதை



மீதியை வெண் திரையில் காண்க அப்படின்னு படம் முடியுது

S.R.Rajasekaran said...

இப்படி முடிச்சி மேல முடிச்சி இருக்கிற கதையின் நோக்கம்



யாரவது கண்டுபிடிச்சிங்கனா அவங்களுக்கு 'முடிச்சி அவிழ்த்த மொள்ளமாரி' அப்படிங்கற பட்டமும் கீழ்பாக்கம் மருத்துவமனையின் அனுமதி சீட்டும் இலவசமா நம்ம படக்கம்பெனியின் சார்பா வழங்கப்படும்

S.R.Rajasekaran said...

கதையோட இறுதியிலே அந்த கருப்பு ஆடு உளவுத் துறையின் தலைவர் என்பதை கண்டு பிடித்து சூரசம்காரம் செய்கிறார் இந்த கந்தசாமி


ஆனா படம் பாக்குற யாரும் உளவுதுறைல இல்லியே

S.R.Rajasekaran said...

இதோட படமும் முடியுது விமர்சனமும் முடியுது



படம் பாக்குரவங்களுக்கும்,மொக்கைய படிக்கிறவங்களுக்கும் போன உயிர் திரும்ப வருது

S.R.Rajasekaran said...

49

S.R.Rajasekaran said...

5555555555555555555555555555555555555
0000000000000000000000000000000000000

50 போட்டதுக்குத்தான் இந்த அலும்பு

ஷண்முகப்ரியன் said...

வெளி வராத படத்துக்குக் கதை திரைக்கதை, வசனத்தோடு நான் படித்த முதல் விமர்சனம் இதுதான்,நச்ரேயன்.
வாழ்க உங்கள் புதுமை.வளர்க உங்கள் கற்பனை.

தாரணி பிரியா said...

படத்து கதையை விட உங்க கதை நல்லா இருக்கு நசரேயன். காபிரைட் வாங்கி வச்சுகோங்க. யாராவது சுட்டுற போறாங்க

வில்லன் said...

யாரப்பா கந்தசாமி தயாரிப்பாளரு....... சொத்து பத்த வித்து கடன கட்டுற வழியப்பாரு..... தலைவரு விமர்சனம் போட்டுட்டாரு... கண்டிப்பா படம் ஊத்திக்கும். இல்ல GV மாதிரி முடிவெடுக்க வேண்டியதுதான்.

வில்லன் said...

!!!!!!!!! புதியவன் said...
//இப்பவும் இடைவேளை விடலைன்னா எல்லோரும் தெறிச்சி ஓடிடுவாங்கன்னு பார்பவர்களின் நலம் கருதி இடைவேளை டீ, காபி குடிக்கிறவங்க, போயிட்டு வாங்க.//

நீங்க டீ குடிச்சீங்களா..?...இல்ல காபியா...?!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ச!! ச!! நமக்கு இந்த டீ, காபி எல்லாம் புடிக்காது. பாட்டில் சரக்கு தான் இடைவேளை

வில்லன் said...

// தாரணி பிரியா said...
படத்து கதையை விட உங்க கதை நல்லா இருக்கு நசரேயன். காபிரைட் வாங்கி வச்சுகோங்க. யாராவது சுட்டுற போறாங்க//

நீங்க எப்ப படம் பாத்திங்க.... Preview ஷோ பாத்திங்களோ!!!!!!!!!!!!!!!!

வில்லன் said...

// தாரணி பிரியா said...
படத்து கதையை விட உங்க கதை நல்லா இருக்கு நசரேயன். காபிரைட் வாங்கி வச்சுகோங்க. யாராவது சுட்டுற போறாங்க//

நீங்க எப்ப படம் பாத்திங்க.... Preview ஷோ பாத்திங்களோ!!!!!!!!!!!!!!!!

Unknown said...

யோவ் நசரேயா!!!
உன்னோட சுயரூபம் தெரியாம விமர்சனத்தையும் வாசிச்சுட்டு படம் எங்க ஓடுதுன்னு தியேட்டர் வெப்சைட்டெல்லாம் தேடியிருப்பேன்...நல்ல காலம் நீ எப்பவோ எழுதின வாரணம் ஆயிரம் கண்ணில் பட்டு தப்பித்தேன்....ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ!!!!!!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

படிக்கும்போதே கண்ணக்கட்டுதே

மேவி... said...

அவங்களை எல்லாம் அகோரி பாபா கிட்ட தான் மாட்டி விடனும் .....