Sunday, August 31, 2008

குஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்

தமிழ்மண நிருபர்: நீங்க கற்பு பற்றி கூறிய உங்க கருத்துக்கு விளக்கம் கொடுக்க போரதா சொல்லுறீங்க, அதை கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா ?

குஸ்பு : என்னோட கருத்துகளை மக்கள் தப்பா புரிஞ்சுகிட்டாங்க.அதை தெளிவாக விளக்கி இணைய தளம் முலமாக தமிழை பரப்பும் உங்கள் வழியாக மக்களுக்கு சென்று அடையனுமுனு என் நீண்ட நாள் ஆசை.

தமிழ்மண நிருபர்: உங்க வாழ்த்துக்கு ரெம்ப நன்றி. மேல சொல்லுங்க
குஸ்பு : நான் என்ன சார் சொன்னேன் " கல்யாணத்துக்கு முன் உறவுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்"

தமிழ்மண நிருபர்: ஆமா.. நீங்க பெண்களை பத்தி சொன்னதினாலே தானே பிரச்சனையே வந்தது

குஸ்பு :நாம ஊருல(நம்ம ஊரா?) பொண்ண பெத்தவாங்க என்ன சொல்லுவாங்க. வயத்துல நெருப்பு கட்டிக்கிட்டு இருக்க மாதிரி இருக்கு

தமிழ்மண நிருபர்: ஆமா.. அதுக்கும் நீங்க சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்

குஸ்பு: இருக்கு, ஒரு பெண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி யாருகூட வேணுமுனாலும் பழகலாம் ஆனால் எல்லை மீற கூடாது.இந்த உள்கருதை யாரும் புரிஞ்சுக்கலை

தமிழ்மண நிருபர்: ஆகா என்ன ஒரு அருமையான விளக்கம்.உங்களுக்கு இப்படிஎல்லாம் பேசத்தெரியும்னு யாருக்கும் தெரியாது

குஸ்பு: இன்னொரு விளக்கமும் இருக்கு.. நான் அந்த உறவை சொன்னதாக நினைத்தாலும் அதிலேயும் தப்பு இல்லை

தமிழ்மண நிருபர்: எந்த உறவு ?

குஸ்பு: ஆமா பால் குடி மறக்காத பாப்பா .. உங்களுக்கு நான் சொல்லவாறது ஒண்ணுமே தெரியாது

தமிழ்மண நிருபர்: ஓஹோ.. நீங்க அங்க வாரீங்களா.. சீக்கிரம் சொல்லுங்க அதை கேக்க தானே தவியாய் தவிக்கேன் ..

குஸ்பு: அதுதான் உங்க மூஞ்ச பாத்தாலே தெரியுது. இன்னைக்கு தேதிக்கு இந்த உலகத்துலே ரெம்ப கொடிய நோய் எது?


தமிழ்மண நிருபர்: அது எய்ட்ஸ் மேடம்


குஸ்பு: ஒரு மனுஷன் புற்று நோய், இதய நோய் மற்றும் சக்கரை நோய் முலமாகவோ இல்ல உள்மூலம் வெளிமூலம் முலமா செத்தாலும் சாகலாம் ஆனா எய்ட்ஸ் வந்து சாக கூடதுநு நினைகிறாங்க

தமிழ்மண நிருபர்: எய்ட்ஸ் தவிர எந்த நோய் வந்தாலும் சந்தோசமா சாவாங்க


குஸ்பு: அதனாலே பாதுகாப்பான உறவு வைத்து கொள்ளவேண்டும் என சொல்லுறதுல என்ன தப்பு.. இதை புரிஞ்சுக்காத மக்கள் எனக்கு கண்டது கழுதை எல்லாம் தபால் மூலம் அனுப்பி என்னை கஷ்டபடுதிடாங்க


தமிழ்மண நிருபர்: மேடம் மக்களை தப்பா பேசாதீங்க என்ன நானும் அவங்களுல ஒருத்தன். அவங்க உங்களுக்கு நன்மை தான் செய்ய நினைத்தார்கள்.


குஸ்பு: அப்படியா..இது நாள் வரை இதை கேள்வி படவே இல்லை


தமிழ்மண நிருபர்: இதுதான் மக்கள் உண்மையாய் நினைத்து.உங்களுக்கு கோவில் கட்டினோமே ஞாபகம் இருக்கா?

குஸ்பு: அதை எப்படி வாழ் நாளில் மறக்க முடியும்.. அகில உலகிலும் தமிழர்களின் கலை பற்று பரவ காரணமே என் கோவில் தானே

தமிழ்மண நிருபர்: உங்கள் கோவிலின் அமைப்பை சொல்ல முடியுமா?

குஸ்பு: மனப்பாடமா இருக்கு .. நாலு பக்கமும் சுவர்கள் அதற்கு ஒரு நுழைவு வாயில்
தமிழ்மண நிருபர்: உங்க சிலை எங்க இருந்தது ?

குஸ்பு: ஒரு தனி அறையிலே மாலை மணி மகுடம் அணிந்து


தமிழ்மண நிருபர்: அந்த அறைக்குள்ள யாரவது வர முடியுமா?

குஸ்பு: கோவில் குருக்கள் தவிர யாரும் போகமுடியாது, அவர் வீட்டுக்கு போகும் பொது நல்ல பெரிய பூட்டு வைச்சு என்னோட அறையையும் கோவில் வாசல் கதவையும் பூட்டி விட்டு வீட்டுக்கு போவர்


தமிழ்மண நிருபர்: அவரு எது சிலை இருக்கும் அறையை பூட்ட னும் ?


குஸ்பு: நம்ம ஊரிலேதான் சிலை திருடுவதற்கு என்றே ஒரு கூ ட்டம் இருக்கே. நம்ம அகில உலக புகழ் பிள்ளையார் கதை ஊருக்கே தெரியுமே
தமிழ்மண நிருபர்: சிலையை தூக்க ஒரு கூ ட்டம் இருக்கும் போது உங்களையே தூக்க ஒரு கூ ட்டம் இருக்காதா?

குஸ்பு: அப்படியா ?


தமிழ்மண நிருபர்: என்ன மேடம் இப்படி சொல்லிடீங்க, உங்களை நம்ம இ...................

அப்புறமா

............. .................. .................. ...........

இவங்க எல்லாம் உங்களையே தூக்கிரத்க்கு முயற்சி செய்தாங்க

குஸ்பு: போதும் இது மேல வேண்டாம்

தமிழ்மண நிருபர்: அப்புறமா மும்பையிலே

...... ..... .... .. ....

டெல்லியிலே

..... ..... ....
( மேற் கூறிய பட்டியல்கள் இந்திய இணைய தள தனிக்கை குழுவினரால் தடை செய்யப்பட்டு விட்டது என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்)

குஸ்பு: நீங்க போகிற வேகத்தை பார்த்தால் "குஸ்புவின் காதலர்கள்" என்று இன்னொரு கட்டுரை தமிழ் மணத்திலே வரும் போலே தெரியுது.


தமிழ்மண நிருபர்: இப்படி உங்களை சுற்றி ஒரு கூ ட்டம் இதுக்காவே இருக்கு, உங்களை அவர்களிடம் இருந்து காப்பற்ற நாங்கள் செய்த திட்டம்

குஸ்பு: மெய்யாலுமா ?

தமிழ்மண நிருபர்: ஆமா .. நான் பொய்யே சொன்னதே இல்லை

குஸ்பு: இப்படி ஒரு புண்ணிய பூமியில இருக்க கொடுத்து வைக்கணும்.இந்த தமிழ் மணம் வழியாக தமிழ் மக்களுக்கு ஒன்னு சொல்லட்டுமா?

தமிழ்மண நிருபர்: ஒ.. தாராளமா சொல்லலாம், ஆனா எவ்வளவு பேர் இதை படிப்பாங்கன்னு சொல்லமுடியாது.

குஸ்பு: பரவா இல்லை இதை படிக்க வார ஒன்னு ரெண்டு பேருக்காவது நான் மக்களை புரிச்சு கிட்டேன் தெரிந்சா போதும்.
கம்பிகளுக்கு பின்னால் நின்ற என் கற் சிலையை பாத்து காக்க வேலி அமைத்த நீங்க.
என்னை உண்மையிலே கம்பிக்கு பின்னால தள்ளி பாது காக்கணுமுனு நினைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்.



தமிழ்மண நிருபர்: குஸ்புக்கு இப்படியெல்லாம் தமிழ் பேச தெரியும் இனிமேல எல்லாரும் தெரிஞ்சுகுவாங்க

குஸ்பு: அதுமட்டுமில்லை இனிமேல செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பக்த தரிசனம் கொடுக்க முடிவு செஞ்சுட்டேன். அதுல வர்ற காணிக்கை எல்லாம் தமிழ் மண இணைய தளத்திற்கு நன் கொடையா தருவேன். ( ஐயா சாமிகளா அவங்க கோவிலில் வந்து தரிசனம் கொடுகிறதை சொல்லி இருக்காங்க)
தமிழ்மண நிருபர்: தமிழ் வாழ்க .. தமிழ்மணம் வாழ்க ..


Monday, August 25, 2008

மீண்டும் பொன்னியின் செல்வன்

நான் எதோ பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் எழுத போறதா நினைத்து தலைப்பை பாத்து வந்தா தயவு செய்து வேற பக்கம் போய்டுங்க... இல்லை நேரம் போகலை எந்த கர்மத்தையாவது வாசிக்கலாம்னு நினைச்ச இந்த கர்மத்தை வாசிங்க

(ராஜாதி ராஜா வான ராஜ ராஜ சோழனும் அவரது மகனும் ராஜேந்திர சோழனும் தங்களுடைய சந்ததிகள் எப்படி நாட்டை வழி நடத்துகிறார்கள் என்று பார்வை இட இப் பூமிக்கு மறுபடி வருக்கிறார்கள்


அவர்கள் தம் முப்பாட்டனார் கரிகால சோழன் கட்டிய உலகில மிக பழமையான கல் அணைக்கு வருகிறார்கள், வந்தவர்கள் தங்கள் சம்பாசனைகளை இவ்வித மாக தொடக்குகிறார்கள்)



அப்பா நம் பாட்டனார் கட்டிய அணை எவ்வளவு கம்பிராமாக துளி அளவும் சேதம் இல்லாமல் இருக்கிறது


ம்ம்ம்.. நானும் பார்த்து கொண்டுதான் இருக்கிறேன்


அப்பா இடை பட்ட கால சுழற்சியில் எவளோவோ மாற்றங்கள் இன்றும் நம் புகழ் பறை சாற்றி கொண்டு இருக்கிறது.நம் மக்களின் வாழ்கை தரம் எவ்வளவோ உயர்ந்து இருக்கிறது


ஏதும் வியப்பாக இல்லை ராஜேந்திரா...நாம் இருந்த காலத்திலேயே இந்த பூங்கா அடர்ந்த காடுபோல இருக்கும், ஆனால் இன்று பூங்கா என்ற பெயரில் ஒரு சில மரங்களை தான் பார்க்க முடிகிறது.இந்த அணையின் நீர்மட்டம் ஒரு நாளும் குறைந்ததில்லை, இப்பொது தண்ணிர் இருபதே தெரிய வில்லை.நாம் குதிரை படைகள்,காலால் படைகள் மற்றும் யானை படைகள் நடந்து செல்ல அமைத்த சாலைகள் அப்படியே இருக்கிறது.மக்களின் நடை உடை பாவனைகளில் இருகின்ற மாற்றம் அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் இல்லை


நானும் கவனித்தேன் அப்பா, ஆனால் உங்களுக்கு நம் மண்ணை குறை பற்றி கூறினால் பிடிகாது எனவே தான் அவைகளை பற்றி பேச வில்லை


ராஜேந்திரா நானும் நீயும் போன பிறகு நம் தாய் மண்ணை தமிழனை விட அயல் நாட்டினரே அதிகமாக ஆட்சி புரிந்துள்ளனர்


அதன் பின் மன்னர் ஆட்சி முடிவுற்று மக்கள் ஆட்சி வந்ததாக கேள்வி


ஆம், இன்று நடப்பது மகள் ஆட்சி தான்.சேர, சோழ, பாண்டியர், சாளுக்கியர், கலிங்கர்,கங்கபாடி,நோலம்பவடி மற்றும் எல்லோரும் சேர்ந்து இந்தியா என்ற நாட்டின் கீழ் இருக்கிறார்கள்


ஒற்றுமையை இருகிறார்களா?


இனம்,மொழி,மதம்,நீர் மற்றும் நிலம் இவைகளை தவிர


ஒற்றுமையில் அங்கம் வகிக்க வேண்டியவைகளே இவைகள் தானே...!!!

மகனே, அணையின் நீர்மட்டம் பற்றி சொன்னேன் அல்லவா, அதற்கு காரணம் இங்கு நடக்கும் இரு மாநில அரசுகளின் உரிமை பிரச்சனை தான்

அப்பா.. நீங்கள் ஆட்சி செய்யும் போதும் கூட இந்த காவிரி நதிக்காக சாளுக்கியர்கள் மீது படை எடுத்து அவர்கள் கொட்டத்தை அடக்கினோம்.அதற்கு சான்றாக நந்தி மலையில் இன்றும் நாம் நிர்மாணித்த கோவில்கள் மற்றும் சிலைகள் உள்ளன. (Nandi ஹில்ல்ஸ் பெங்களூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது)

ம்ம்ம்.. அது பழைய கதை அப்போது அவர்கள் எதிரிகள், இப்போதோ ஒரு எல்லோரும் தாயின் பிள்ளைகள்

அப்படியானால் அவர்கள் சகோதர்கள், சகோதர பாசத்திற்கு முன்னுதாரணமாக தாங்கள் செய்த தியாகத்தை யாரும் எண்ணி பார்க்கவில்லையா?(தனக்கு கொடுத்த அரியணையை தன் பெரியப்பா மகன் உத்தம சோழனுக்கு விட்டு கொடுத்து.மேலும் விவரங்களுக்கு கல்கியின் பொன்னியின் செல்வன் படித்து தெரிந்து கொள்ளளவும்) சகோதர்களுக்குள் ஏன் இந்த பிரச்னை?

சகோதர்களாக தங்களை வெளி காட்டி கொண்டாலும் உண்மைகள் அவர்கள் சகோதரர்களா என்பது யாருக்கு தெரியும்.இதை இவர்களால் மட்டும் மல்ல இவர்களின் தாயினால் கூட தீர்க்க முடிய வில்லை.இவர்களின் பிரச்சனைகளை வருண பகவானும் என்னை சிறு வயதில் காப்பாற்றிய இந்த காவேரி தாயும் தான் தற்காலிகமாக தீர்த்து வைக்கிறார்கள்.

சகோதர்களுக்குள் விட்டு கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்பு தன்மையும் இல்லாத வரையில் இப் பிரச்சனைக்கு ஒரு முடிவே கிடையாது.

சரியாக சொன்னாய் ராஜேந்திரா.அப்படி இல்லாத பட்சத்தில் நாம் இன்னும் 1000 ஆண்டுகள் கழித்து வந்தாலும் இந்த பிரச்சனை இருக்கும்

அப்பா இதை பற்றி இன்னும் பேசினால் ராஜா ராஜனும் ராஜேந்திரனும் எங்களை குறை சொல்லி விட்டார்கள் என்று "வாட்லாறு நாகராஜ்" மற்றும் கன்னட அமைப்புகள் அங்கு உள்ள நாம் தமிழக மக்களுக்கு தொல்லை தரலாம் வாருங்கள் நாம் நீங்கள் கட்டிய தஞ்சை கோவிலுக்கு போவோம்


Friday, August 22, 2008

ரஜினியும் அரசியலும்

"கண்ணா நான் எப்ப வருவேன்..எப்படி வருவேன் தெரியாது..ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வருவேன் கண்டிப்பா" அப்படின்னு தலைவர் சொன்னாலும் சொன்னார்(அதாவது எழுத்தாளர் எழுதியதை) மனுசனை போட்டு என்ன பாடு படுத்துகிறோம்

அவரு "என்னை வாழ வைக்கும் ரசிக பெருமக்களே" சொன்ன மனுஷன் எதோ கஞ்சிக்கு வழி இல்லாம சொல்லுராருனு நினைத்து இவன் போய் படம் பாத்து ஓட வைகலைனா அவரு வீட்டுல உலை கொதிகாதுனு நினைப்பு எல்லாருக்கும்(என்னையும்)

ஐயா சாமிகளா... உடனே கண்டனம் தெரிவிக்க வரிஞ்சு கட்டிகிட்டு வராதீங்க முழுசா படிங்க.

மேல சொன்ன கணக்கு படி பாத்தா நாம தலைவர் படம் தான் தமிழ் நாட்டுல ஓடனும், ஏன்னா வேற யாரும் "என்னை வாழ வைக்கும் ரசிக பெருமக்களேனு" சொல்லுறது கிடையாது.அவரை தவிர எவ்வளவோ பேர் நடிச்ச நிறைய படங்கள் வெள்ளிவிழா, வெற்றி விழா னு கொண்டாடுது

சரி நீ(என்னையும் சேத்துதான்) சொன்ன மாதிரி வந்தாலும் ரஜினி நடிச்ச எல்லா படத்தையும் ஓட வைக்குரோமா இல்லையே...

நேத்து பாபா பட்ட பாடு நாடே அறியும்
இன்னைக்கு குசேலன் படுற பாடு உலகமே அறியும்

இந்த மாதிரி இருக்கப்ப நம்மளை நம்பி அரசியல்ல இறங்கினா அவருக்கே கோவிந்தா போட வைக்க மாட்டோம் என்று என்ன நிச்சயம்..

இல்ல... அப்படியே வந்தாலும் ஜெயிச்சி ஆட்சியை பிடிப்பார் என்பதக்கு யாராவது உத்திரவாதம் கொடுக்க முடியுமா(அப்படி கொடுத்த தமிழ் நாடை அவங்க பேருல எழுதி வைக்கலாம்)

பாவம் அந்த மனுசனும் ரசிகர்கள் சொல்லிடாங்கலேனு நினைச்சு படத்துல வார வசனத்தை நீக்கிட்டு உக்காந்து இருக்காரு .

சரி வசனத்தை நீக்கினதால படம் 200 நாள் ஓடும்னு சொல்லமுடியுமா?

அரசியலுக்கு வாரதும் வராததும் அவோரோட சொந்த விருப்பம், Audience puls நல்லா தெரிஞ்ச அவரு படத்துக்கே ஆப்பு வைக்கிற நாம Politics puls தெரியாம களத்துல இறங்கினா ஆப்பு *(பெருக்கல்) ஆப்பு வைக்கமாட்டோம்னு என்ன நிச்சயம்.

இப்ப படம் நல்லா ஓடலைனு கொடி புடிக்கிற திரைஅரங்கு உரிமையாளர்களும் நம்மளை மாதிரி ஒரு ரசிகர் தான், ஆனா அவரு பிரச்னை வேற தலைவர் படம் 200 நாள் ஓடின நல்லா கல்லா பெட்டி நிரஞ்சி வழியும், அப்படி வழியிரப்ப என்னமோ இவரு அதிகமா வார பணத்தை திருப்பி கொடுத்த மாதிரி, படம் ஓடலைனா உடனே பணத்தை திருப்பி கொடுனு கோசம் போட ஆரமிச்சுடுறாங்க. உண்மையான பச்சோந்தியை எங்கையும் தேட வேண்டாம் ஐயா ..

இவங்க ரூபத்துல இருகாங்க,இதை ஏன் இங்க சொல்ல வரமுணா, இவங்களும் மக்களுல ஒருத்தங்க நாளைக்கு நம்ம தலைவர் அரசியலுக்கு(ஒரு வேளை) வந்தால் இவர்களும் ஓட்டு போடுவார்கள்

இதை நம்ம சாலமோன் பாப்பையா பாணியில சொல்லனுமுனா
"ஆக மொத்ததுல எல்லாரும் கொடி புடிச்சுட்டு தான் இருக்கோம்

சிலபேரு வருவியா..வரமாட்டியா...
சிலபேரு தருவியா..தரமாட்டியா..
தரலைனா உன் பேச்சு கா..
வரலைனா உன் பேச்சு கா.."

இப்படியே பாடிகிட்டு இருந்தால் இப்ப அடிகடி இமையமலை போற நாம தலைவர் அங்கேயே நிரந்தமாக இருந்துருவாரு

முக்கிய குறிப்பு: இது யாரோட மனசை புண் படுத்தனுமுனு நினச்சு ஏழுதலை, அப்படி யாராவது இருந்தால் அவங்ககிட்ட கூல கும்புடு போட்டு மன்னிப்பு கேக்குறேன் சாமியோ.....


சிறகு விரித்தால்

கதிரவன் சிறகு விரித்தால் தாமரை மலரும்
சந்திரன் சிறகு விரித்தால் அல்லி மலரும்
மொட்டுக்கள் சிறகு விரித்தால் மலர்கள் மலரும்
மலர்கள் சிறகு விரித்தால் மணம் மலரும்
கன்னியின் கடை கண் பார்வை சிறகு விரித்தால் காதல் மலரும்
இதயம் சிறகு விரித்தால் மனித நேயம் மலரும்
மனித நேயம் சிறகு விரித்தால் ஒற்றுமை மலரும்


Thursday, August 21, 2008

எண்ணம்

அவள் அழகு முகத்தையே உற்று பார்த்தேன்
என்னை முறைத்தாள்
என் அலங்காரம் பிடிக்கவில்லை என நினைத்தேன்
நடை உடைகளை மாற்றி கண்களால் பேசினேன்
முகத்தை சுழித்துவிட்டு வேறு பக்கம் திருப்பினாள்
எனது மவுன மொழி புரியவில்லை நினைத்தேன்
கைகளால் செய்கை செய்தேன்
தன் காலணிகளை கழட்டி காட்டினாள்
அவள் புதியதாக வாங்கியதை கட்டுகிறாள் என் நினைத்தேன்
அவள் அருகில் சென்றேன்

என்னை அலசியம் செய்தாள்
என் மனம் திறக்க இடை அவளை மறித்தேன்
என் கன்னத்தில் அறைந்து விட்டாள்
என்னை தீண்ட அவள் செய்த யுக்தி என் நினைத்தேன்

இவ்வளும் நினைத்த நான் அவளுக்கு
என்னை எள்ளளவும் பிடிக்கவில்லை என நினைத்தேன்
சிறையில் கம்பி என்னும்போது தான்


Thursday, August 14, 2008

கதாநாயகன்

கதை எழுத வேண்டும் நீண்ட நாள் ஆவல். அந்த முயற்சியின் பலன் தன் இந்த சிறுகதை. இது கதையா இல்லை நேரத்தை விரயம் செய்யயப்பட்ட கிறுக்கலா என்பது வாசிபவர்களுகே வெளிசம். முன்னுரையை கடந்து நேராக கதைக்குள் செல்வோம்.

அந்த மார்கழி மாதத்திலே நாம் கதையின் நாயகன் எனபடுகிற ராம் பேருந்து நிலையத்திலே தான் அலுவலகம் செல்லும் பேருந்துக்காக காத்து நின்றான். அவன் செல்ல வேண்டிய பேருந்து வந்தது, அதில் வழக்கம்போல கட்டுகடங்கா கூட்டம், ஆனால் எப்படியும் இவன் போகவேண்டும்.


கூட்டதிலெ முண்டி அடித்து அவனுக்கு இடம் கிடைத்தது படியில், அது ஒன்றும் புதிது இல்லை அவனுக்கு கல்லுரி நாள்களில் நிறைய அனுபவம். பேருந்து கிளம்பியதும் அவன் முகத்தில் சில்லென்று பனிகாற்று வீச, அவன் முகத்தை பேருந்துக்கு உள்பக்கமாக திருப்பினான்.

பேருந்து உள்ளே இருப்பவர்களை ஒரு நோட்டம் விட்டான், ஒரு இடம் வந்தும் அவன் கண் அசைய மறுத்து. அதற்கு இடையூரால நடத்துனர் குரல்


"யார் எல்லாம் டிக்கெட் எடுக்கலை, சீக்கிரம் எடுங்க"

அவர்க்கு வேகமாக சில்லறை கொடுத்து விட்டு. மீண்டும் தன் பார்வை சென்ற பழைய இடத்திற்கு சென்றான்.அங்கு ஒரு நல்ல அழகு உள்ள பெண் நின்று கொண்டு இருந்தாள்.அவள் அழகை வர்ணித்து கதையின் போக்கை மாற்ற என்னக்கு விருப்பம் இல்லாததால் நீங்கள்(யாராவது வாசித்தல்) யூகித்து கொள்ளுங்கள். அவள் நின்ற இடத்தின் அருகில் சுழன்ற ராம்மின் கண்கள், அவளை சுற்ற ஆரமித்தது, நொடியில் அவளை கண்கள் முலம் மனதிகுள் பதித்தான்.

மீண்டும் அவள் நோக்க ஆரம்பித்தான், இம்முறை அவள் முகத்தை, பார்த்த அவனுக்கு ஆச்சர்யம் அவளும் இவனையே பார்ப்பது போன்று, சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் அவளை பார்பதாக தெரியவில்லை, அதை உறுதி படுத்தி கொண்டு மீண்டும் அவளை நோக்கினான், அவள் பார்வை அவனை விட்டு அகன்றதாக தெரியவில்லை.



அந்த நிகழ்வை ஒரு உலக அதிசயமாகவே எண்ணினான்.ஏனெனில் கல்லுரி நாள்களில் எவளவோ கடுமையாக முயற்சி செய்தும் பலன் இல்லாமல் போனதால் பெண்களிடமே ஒரு வெறுப்பு இருந்தது. அந்த வெறுப்பு எல்லாம் மறைந்து விருப்பாய் அவளை பார்த்தான், அவளும் இவனையே பார்க்கிறாள் என்று மீண்டும் உறுதி படுத்திகொண்டான்

பார்வையிலே நேரம் கடத்தாமல் அவளை நோக்கி புனைகை பூவை உதிர்த்தான். அவளும் மறுமொழியாக புனகையை பதிலாய் தந்தாள். இந்த ரம்யமான சுழலுக்கு இடையுரலாக ராம் இறங்கும் இடம் வந்தது.


வேறு ஒரு நாளாக இருந்தால் அவளுடனே கூட போய் இருப்பான், அலுவலகத்தில் முக்கிய வேலை இருப்பதால் வேண்ட வெறுப்பாக பேருந்தில் இருந்து இறங்கினான். இறங்குவதக்கு முன் அவள் இவனை நோக்கி கண்களால் விடை பெற்றாள். அன்று பகல் முழுவதும் அவன் நனைவுகள் அவளை சுற்றியே வந்தது.

இன்று நடத்த சம்பவம் அவனுக்கு ஜோசியத்தின் மீது ஒரு அபார நம்பிக்கை வந்தது, ஏனெனில் ஜோசியதிலே அவனுக்கு காதல் கல்யாணமே நடக்கும் என்றும் அது நிச்சயம் நடக்கும் என்று ஜோசியகர்கள் சொல்லும் பொது அதை நம்பவில்லை இப்போது அதை நம்பினான். அதை பரிச்சை பண்ணவே தனக்கு திருமணம் செயவேண்டும் என்று ராம் அம்மா சொல்லும்போது இதை மனதில் வைத்துக்கொண்டு நாள்களை கடத்தினான்.

அவன் எதிர் பார்த்த அந்த தருணம் இவ்வளவு சீக்கிரம் நடந்ததால் அவனுக்கு வானளாவிய மகிழ்ச்சி, அன்று பகலும் இரவும் ஆமை போல செல்வதாய் உணர்ந்தான்.


அடுத்த நாள் எப்போது வரும் என்று நொடிகளை எண்ணிக்கொண்டு இருந்தான். பொழுதை கழித்தான், இரவும் கடந்தது அதி காலையிலே எழுந்து குளித்து நேற்று வாங்கிய புது உடைகளை மாட்டி கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றான் இன்று அவளுடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்ற தீர்மானம் எடுத்தவனாய் காத்து இருந்தான்.

பேருந்தும் வந்தது அதிகம் கூட்டம் இல்லை ஏறிய உடனே அவன் கண்கள் அவளை தேடின அவளும் அகப்பட்டாள், ஆனால் அவள் இவனை பார்த்தும் அவள் முகத்தில் எந்த அசைவையும் காணமுடியவில்லை. மாறாக மிகவும் சோகமாக காணப்பட்டாள்.


எதிர் பார்க்காத இந்த ஏமாற்டத்தை அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை. அவள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள். பேருந்து கிளம்பு முன் வேறு சிலர் ஏறினார்கள்.

"என்ன கொடுமை சார்" என மனசுக்குள்ள நினைத்தாலும்,மறுபடியும் ஒரு கல் எறிவோம் என்று அவளை பார்த்தால் இம்முறை அவனுக்கு கை மேல் கனியே கிடைத்தது.


அவள் இவனை சந்தோசமாக பார்த்து குறுநகை புரிந்தாள். அவன் வேதனை பகலவனை கண்ட பனி போல மறைந்து மலர்ந்த செந்தாமரை முகத்தை போல் ஆனது.

அவளை பார்த்து அவனும் சிரித்தான். யாரோ உறவுகாரகள் இருந்திருப்பார்கள் அதனால் தான் அவளிடம் தன்னிடம் அப்படி நடந்து கொண்டதாக எண்ணினான். அதை புரிந்து கொள்ளாமல் அவளை தவறை நினைததற்காய் அவளின் பேசும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என எண்ணினான்.

இவ்வாறாக ராம் யோசித்து கொண்டு இருக்கையில் அவன் எதிர் பாரவகையிலாக அடுத்து வந்த பேருந்து நிறுத்ததிலே அவள் இறங்கினாள். முன் அறிவிப்பு இன்றி நடந்த காரியத்தில் செய்வது அறியாமல் ஒரு கணம் யோசித்தான் பின் சுதாரித்து கொண்டு அவனும் இறங்கினான்.


அவனுடன் அந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியவர்களும் இறங்கினார்கள். இறங்கியதும் அவள் போகும் திசையிலே நடந்து சென்றான். அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று ஆவலை வேகமாக நடந்து பின் தொடர்ந்தான். அவளுக்கு கூப்பிட்டால் கேட்கும் தொலைவில் நின்று அவன்

"ஹலோ கொஞ்சம் நில்லுங்கள்" என்றான்


அவள் அவனை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் நடக்க ஆரமித்தாள்.
அவனும் விடவில்லை தொடர்ந்து சென்றான். மீண்டும் ஒரு முறை ஹலோ என்று சொல்ல வாய் எடுத்தான்.


இவன் "ஹலோ" என்று ஒரு குரல் தன் பின்புறம் இருந்து வருவதை கேட்டான்.

ராம் திரும்பி என்ன என்று கேட்பதற்குள் அவனை கூப்பிட்ட குரலுக்கு சொந்தக்காரன் ராம் முகத்தில் ஒரு குத்து விட்டான். குத்து விழுந்த வேகத்தில் அவன் மூர்ச்சை அடைந்தான்.

மூர்ச்சை தெளிந்து பார்கையில் அவன் ஒரு மருத்துவமையில் இருப்பதாய் உணர்ந்தான்.தனக்கு என்ன நடந்தது என்பதை நினைத்து பார்க்க அவனால் முடியவில்லை.

காதல் கதைக்கு எப்போதும் வில்லனின் ஆரம்பம் குறைத்த பச்சம் ஒரு கனவு டூயட் பாட்டு முடிஞ்சவுடனே தானே வரும். ஆனால் எனக்கு இன்னும் காதலே ஆரமிக்கலை அதுக்குள்ளே வில்லனா? என நினைத்து கொண்டு எழுந்திரிக்க முயன்றான்.

அதற்குள்


"என்னை மனிக்கவும்"

என்ற குரலை கேட்டு தன் பார்வையை திருப்பினான்.அவனை பார்த்தும் அவனால் நம்பமுடிய வில்லை அவன் வேறு யாருமல்ல.

ராம் மருத்துவமனை வர காரணமாக இருந்தவன். அவன் பின்னால் ஒரு பெண் நின்று கொண்டு இருந்தாள். அவள் யாருமல்ல ராமின் காதலி என்று நினைத்து கொன்று இருக்கும் அந்த பைங்கிளி.

அவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்து அவன் குழப்பம் மேலும் அதிகமானது. ராமின் எண்ணத்திற்கு இடையுரலாக அவன் இடை மறித்தான்

"என் பெயர் சுந்தர், நடந்த சம்பபதிற்காக நான் மிகவும் வருத்தபடுகிறேன். தயவு செய்து மனதில் ஒன்றும் வைத்து கொள்ளவேண்டாம்".

அவன் சொல்லி முடித்தவுடனே அவள் ராமிடம்

"இப்ப உங்க உடம்பு எப்படி இருக்கு"

என்றாள். அவள் குரலை கேட்டு ஆகா என்ன ஒரு அருமையான தெய்விக குரல் என்று நினைத்தான். அவள் தொடர்ந்து பேசினாள்.

" என் பெயர் பல்லவி, நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்லுறதுன்னு தெரியலை. உங்களால நான் இன்றைக்கு புது வாழ்வு பெற்றேன்"

இந்த வார்த்தைகளை கேட்டவுடனே ராம் மனம் ஒரு புள்ளி மானை போல துள்ளி குதித்தது என்று சொன்னால் அது உண்மை. இவள் என் மீது வைத்திருக்கும் காதலுக்கு என்ன மரியாதை, இப்படி ஒரு பெண்ணை அடைய நான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும் என எண்ணினான்.

இப்போது சுந்தர் இடைமறித்து


" ஆமாங்க நானும் உங்களுக்கு நன்றி சொல்லணும் நீங்க இல்லேன்னா நாங்க ரெண்டு பெரும் சேரமுடியாமல் போய் இருக்கும்"

இதை கேட்ட ராம் சுந்தரை உற்று பார்த்தான், அவன் பேசியதின் அர்த்தம் தெரிந்து தான் பேசுகிறானா என்று நினைத்தான்.

மீண்டும் பல்லவி தன் பல்லவியை தொடர்ந்தாள்,


" ஆமா இவர் சொல்லுறது உண்மை, நானும் இவரும் காதலர்கள்,எங்களுக்குள் ஒரு சின்ன மனஸ்தாபம், அதை சரி செய்ய பலமுறை முயன்றேன் ஆனால் என்னால் முடியவில்லை.

உங்களை பேருந்து சந்திப்பிலே பார்த்தவுடனே எனக்கு இந்த யோசனை வந்தது. அதின் பலனாக எனக்கு நான் தொலைத்து திருப்ப கிடைத்தது. என்னை மனிசுடுங்க அண்ணா".

அதன் பின் அவள் பேசிய ஏதும் அவன் காதில் விழவில்லை.

"ஐயோ யாராவது என்னை காப்பாற்றுங்கள், இங்கு என்ன நடக்கிறது,நான் இருப்பது கனவு உலகிலையா இல்லை நினவு உலகிலா ஏன் எல்லோரும் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்கள்" என்று சப்தமிட்டான்.

அப்போது அந்த வழியாக வந்த மருத்துவர் அவனிடம் வந்து


"ராம் நீங்க வீட்டுக்கு போகலாம், நீங்கள் பரிபுரணமாய் இருகிறார்கள், நான் தரும் மாத்திரைகளை ஒரு வாரம் சாபிடுங்கள்"

என்றதும் தன்னை சுற்றிலும் பார்த்தான், மருத்துவர் தவிர யாரும் அங்கு இல்லை, அவன் மருத்துவரிடம் எல்லா விவரங்களையும் கேட்டறிந்தான்.அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் புரிய வந்தது.

ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம்மாக தெரிந்தது அவன் கனவு காணவில்லை என்று, மருத்துவமனையை விட்டு ஒரு தெளிந்த சிந்தையுடன் ராம் வெளியே வந்தான்.


நினைவுகளை பினோக்கினான், பல்லவி கூறியதை கேட்டு அதிக உணர்ச்சி வசத்தால் தான் மீண்டும் நினவு இழந்துருக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் கழித்து சென்று இருக்க வேண்டும்.

இன்று காலையில் தன்னை பார்த்து அவள் எந்த சலானம் இல்லாமல் இருந்ததற்கும் இப்பொது விடை கிடைத்தது.


பல்லவி சுந்தரை எதிர் பார்த்து காத்து இருந்திருப்பாள், அவன் வராததால் அவள் சோகமாக இருந்திருப்பாள். சுந்தர் பேருந்திலே அடுத்த நிறுத்ததிலே ஏறி இருப்பான். அவன் ஏறியதும் அவள் தன் காதல் சோதனையை தொடர்ந்து இருப்பாள்.

முதலில் அம்மாவிடம் சொல்ல வேண்டும் தனக்கு ஒரு நல்ல பெண் பாருங்கள் என்று மனதில் நினைத்தான்.


அது மட்டுமில்லாமல் இந்த கதையில் தன்னை கதைநாயகனாக சித்தரித்த கதை ஆசிரியரை தன் மனதிற்குள் வசை பாடிகொண்டே சென்றான்.