Wednesday, June 24, 2009

முதல் காதல் சந்திப்பு

கிட்டததட்ட பத்து வருஷம் துண்டை கையில வச்சிக்கிட்டு கிடைக்கிற இடம் பார்க்கிற இடம் எல்லாம் போட்டு பார்த்தேன், துண்டு போட்டு துவண்டது தான் மிச்சம்.என் மேல பரிதாப பட்டோ, என் அழகை பார்த்து பரிதாப பட்டோ நான் போட்ட கடைசி துண்டை திரும்பி வரலை.என்னோட பத்து வருஷ லட்சியம் இப்பத்தான் நிறைவேறி இருக்கு.அழகா இருந்ததா தான் காதல் வரும் என்பதை கட்டுடைத்த தெய்வீக காதல் இது. நான் அம்மாவாசை சிகப்பு, அவ அதுக்கு அடுத்த நாள் சிகப்பு.நான் கருப்பு அஜித்(வாலிக்கு முன்னாடி), அவ கருப்பு சினேகா

இது நாள் வரை மொபைல் போன் இருப்பதையே மறந்த நான் இப்பெல்லாம் காலையிலே எடுத்த போன் எப்ப வைப்பேன்னு எனக்கே தெரியாது, சில சமயங்களில் மொபைல் கம்பெனியிலே இருந்து போன் பண்ணி உங்களால எங்க சர்வர் டவுன் ஆகுது, நீங்க போனை ஆப் செய்யுங்க சொல்லுவாங்க, அப்படி விடாமல் அடைமழை பேச்சி நடந்து கிட்டு இருக்கு, இத்தனைக்கும் நான் அவளோட பேச ஆரம்பித்து ஒரு வாரம் தான் ஆச்சி.போன் பில் கட்ட முடியாம கையிலே கழுத்திலே கிடந்தது எல்லாம் வட்டி கடைய நோக்கி அடிச்சி பிடிச்சி ஓடினாலும் போன் சத்தம் நின்ன பாடில்லை.

துண்டு போட்டதிலே நான் மஞ்ச துண்டு போட வேண்டிய சோகம் இருந்தும் அதிலே ஒரு சுகமும் இருக்கு நான் போடுற மரண மொக்கையை கேட்கதுக்கும் ஒரு ஜீவன் இருக்குன்னு நினைக்கும் போது ,இன்னறைக்கு முதல் நாளா நானும் அவளும் வெளியே சந்திக்கிறோம்.


நான் அரைமணி நேரத்துக்கு முன்னமே அந்த இடத்திருக்கு வந்தேன், முன் பதிவு செய்து ஒரு இடத்திலே அமர்ந்தேன், நாங்க குறித்த நேரம் சென்று அரை மணி நேரம் கழித்து ஒரு பெண் என்னை நோக்கி வந்தாள். அவ அழகாய் இருந்தாலும் ரசிப்பதற்கு நேரம் இல்லாமல் வருத்தத்தோடு ஹோட்டல் மெனு வை பார்த்து கொண்டு இருந்தேன், வந்தவள் என்னெதிரே அமர்ந்தாள், அப்பத்தான் அவளை நல்லாப் பார்த்தேன்,அவள் வேறு யாருமல்ல அவளேதான்.

"ரெம்ப நேரமா காத்து கிட்டு இருக்கீங்களா, கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சி"

அவ முகம் அரை இஞ்சிக்கு வீங்கி இருப்பதன் காரணமும், தாமதமா வந்ததின் காரணமும், எனக்கு அவளை கண்டு பிடிக்க முடியாம போன காரணத்துக்கும் விடை கிடைத்தது.எப்போதுமே விடை கிடைக்க முடியாத கேள்விகளுக்கு விடை கிடைப்பதுதான் காதலின் மகத்துவம் என்பதை தெரிந்து கொண்டேன்.

நான் கடை திறக்க முன்னாடி வந்து காத்து கிடக்கேன்னு உண்மையை சொல்லி, என்னை காக்க வைத்து விட்டோமே என்ற உணர்விலே அவ பிஞ்சி மனசை பிஞ்சிபோகப் பண்ண விரும்பலை,அதனாலே வாழ்கையிலே பொய்யே சொல்லாத நான்,அய்யன் வள்ளுவன் மேல பாரத்தை போட்டு

"நானும் கொஞ்சம் தாமதமாத்தான் வந்தேன்னு ஒரு பொய்யை சொல்லி சமாளிச்சேன்."

அப்புறம் கொஞ்ச நேரம் என்ன பேசுறதுன்னு தெரியாமா விட்டத்தை பார்த்து கொண்டு இருந்தோம், போன் சூட்டுல கரிஞ்சி போற அளவுக்கு கடலை போட்டாலும், நேரிலே முன்னபின்னே அனுபவம் இல்லாததாலே, வாய்வரைக்கும் வந்த வார்த்தைகள் எல்லாம், வழி தெரியாம மறுபடி கிழே போய்விட்டது.இப்படியே ஊமை படம் காட்டிக்கொண்டு இருந்தால் கடைப்பக்கம் வந்தவங்க எல்லாம் சொல்லாம கொள்ளாம தலை தெறிக்க ஓடிவிடுவீங்கனு தெரியும்,அதனாலே நானே ஆரம்பித்தேன்.அதற்குள் அவள்

"நாம இங்கே எதுக்கு வந்தோம்"

"போன் பில் கட்டி முடியலை, காசு கட்டுப்பாடு பண்ண இப்படி குடும்ப கட்டுப்பாட்டை மீறி சந்திக்கிறோம்"

"பரக்கா வெட்டி மாதிரி இருந்தா எப்படி?"

"போன்ல உன் குரல் குயில் மாதிரி இருந்தது, அதைப் பத்தி தான்.."

"அப்ப நேரிலே...."

"குயிலோட குயில் குழைஞ்சி பேசுற மாதிரி இருக்கு"

ஒ..அப்படியா

"சாப்பிட்டா இன்னும் நிறைய பேசலாம்"

வேண்டியதை எடுத்து வரச்சொன்னோம்,நான் தான் காசு கொடுக்கணும் என்பதாலே கொஞ்சம் அளவாத்தான் நான் சாப்பிட முடிவெடுத்தேன்.

இப்படி வில்லங்கமா ஆரம்பித்த பேச்சு, விவகாரமா ஆகாம, உள்ளூர் கதையும், உலக கதையும் புரணி பேசாமல் அளவா பேசி அன்பா முடிச்சிகிட்டோம்.நாங்க சம்பாசனைகளையும், சாப்பாட்டையும் முடிச்சிட்டு கிளம்பும்போது மழை பெய்ய ஆரம்பித்தது, காணததை கண்டதைப் போல மழையே சந்தோசப் பட்டு விட்டது போல என நான் நினைத்து கொண்டேன்.இது சோக மழையா சந்தோஷ மழையான்னு தெரியலை, என்னாலே நாலு விவசாயீங்க நல்லா இருந்தா சரிதான்.

நான் அவளை வழி அனுப்பி விட்டுட்டு திரும்பியபோது என்னைப் பார்த்து ஒருத்தர் சிரித்து கொண்டு இருந்தார், என்னிடம் வந்த அவர்

"உன்னை இப்படி பார்க்கிறதிலே ரெம்ப சந்தோசம், ஒரு நாலு வருசமா நீயும் பொண்ணு தேடி அலுத்து போன,இப்பவாது பொண்ணு கிடைச்சி இருக்கே"


"எல்லாம் உங்க தயவுதான்"

"சொன்னதோடு இருக்கப்புடாது,பேசினதை விட அதிகமா புரோக்கர் கமிசன் கொடுக்கணும், நான் உனக்காக எவ்வளவு பரிஞ்சி பேசி இந்த பெண்ணோட அப்பாவை சம்மதிக்க வைத்தேனு உனக்கு தெரியும், உன் போட்டோவை பார்த்து இருளடைந்து போனவரை வெளிச்சத்துக்கு கொண்டு வர நான் பட்ட கஷ்டம் என்னோட கல்யாண தரகர் வாழ்கையிலே ஒரு மைல் கல்,இதை ஒரு சாதனையா நான் எல்லோரிடமும் சொல்லி கிட்டு இருக்கேன்."

சபையிலே உண்மையை உடைச்சி மானத்தை வாங்கின அவரிடம் சரி என தலை ஆட்டிவிட்டு கிளம்பினேன் சோகமான சந்தோசத்திலே


35 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

இது சோக மழையா சந்தோஷ மழையான்னு தெரியலை, என்னாலே நாலு விவசாயீங்க நல்லா இருந்தா சரிதான்.//

அறுவடை நேரத்தில மழை பேயுது நீங்க இப்படி சொல்றீங்க

நட்புடன் ஜமால் said...

காமெடியா கொண்டு போயிருந்தாலும் ஒரு வித சோகம் இழையாடுதே!



(ஏதோ! நம்மால இயன்றது)

sakthi said...

நான் கடை திறக்க முன்னாடி வந்து காத்து கிடக்கேன்னு உண்மையை சொல்லி, என்னை காக்க வைத்து விட்டோமே என்ற உணர்விலே அவ பிஞ்சி மனசை பிஞ்சிபோகப் பண்ண விரும்பலை

என்ன ஒரு நல்ல எண்ணம்

sakthi said...

எப்போதுமே விடை கிடைக்க முடியாத கேள்விகளுக்கு விடை கிடைப்பதுதான் காதலின் மகத்துவம் என்பதை தெரிந்து கொண்டேன்

தத்துவமா கொட்டியிருக்கீங்க....

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

சாப்பிட்டதுக்கு பில்லு யாரு கட்டுனது......?? நீங்க பில்ல கட்டுனேன்னு சொன்னா நம்ப முடியாது..........!! கடைசியா ப்ரோக்கர் இப்புடி விமர்சனம் குடுத்டுட்டாரே......!!


அனுபவம் நல்லருக்கு......!!!

ஷண்முகப்ரியன் said...

நான் கருப்பு அஜித்(வாலிக்கு முன்னாடி), அவ கருப்பு சினேகா//

புதிய வர்ணனை,நச்ரேயன்!

அன்புடன் அருணா said...

இப்படிப் புரோக்கர் போட்டுக் கொடுத்திட்டாரே!!!

Anonymous said...

"போன் பில் கட்டி முடியலை, காசு கட்டுப்பாடு பண்ண இப்படி குடும்ப கட்டுப்பாட்டை மீறி சந்திக்கிறோம்"

நடைமுறை உண்மை ஹிஹிஹி.... நல்லாத் தான் துண்டு போட்டு இருக்கீங்க.....

Vidhoosh said...

//நான் அம்மாவாசை சிகப்பு, அவ அதுக்கு அடுத்த நாள் சிகப்பு.//

//பேசினதை விட அதிகமா புரோக்கர் கமிசன் கொடுக்கணும்//

அடப்பாவி. இதெல்லாம் உங்க வேலைதானா!!!
:)))

மனிப்பயலின் பதில்களைப் படித்தீர்களா?

குடந்தை அன்புமணி said...

நல்லாத்தானே போயிட்டிருந்திச்சு... இந்த புரோக்கர் வர்ற வரைக்கும்... வாழ்த்துகள்!

வேத்தியன் said...

போன் பில் கட்ட முடியாம கையிலே கழுத்திலே கிடந்தது எல்லாம் வட்டி கடைய நோக்கி அடிச்சி பிடிச்சி ஓடினாலும் போன் சத்தம் நின்ன பாடில்லை.//

அட...
பாத்து கவனமா பேசுங்க சாரே...
:-)

வேத்தியன் said...

நானும் கொஞ்சம் தாமதமாத்தான் வந்தேன்னு ஒரு பொய்யை சொல்லி சமாளிச்சேன்//

அட்ராசக்க...
ம்.. ம்..

வேத்தியன் said...

குயிலோட குயில் குழைஞ்சி பேசுற மாதிரி இருக்கு//

பொய் இன்னும் ஸ்டாக்கில இருக்கா???

வேத்தியன் said...

நன்னாருக்கு...
:-)

ஆ.ஞானசேகரன் said...

///சில சமயங்களில் மொபைல் கம்பெனியிலே இருந்து போன் பண்ணி உங்களால எங்க சர்வர் டவுன் ஆகுது, நீங்க போனை ஆப் செய்யுங்க சொல்லுவாங்க,///
நல்லாயிருக்கே

ஆ.ஞானசேகரன் said...

//"நானும் கொஞ்சம் தாமதமாத்தான் வந்தேன்னு ஒரு பொய்யை சொல்லி சமாளிச்சேன்."//

பாராட்டுகள் நண்பா

S.A. நவாஸுதீன் said...

"நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்" டைப்ல இருக்கு கதை. சில இடங்களில் பொருத்தமான நகைச்சுவை வரிகள் பிளஸ் பாயிண்ட்

சந்தனமுல்லை said...

//சபையிலே உண்மையை உடைச்சி மானத்தை வாங்கின அவரிடம் சரி என தலை ஆட்டிவிட்டு கிளம்பினேன் சோகமான சந்தோசத்திலே//

அவ்வ்வ்வ்வ்வ்!

//நான் கருப்பு அஜித்(வாலிக்கு முன்னாடி), அவ கருப்பு சினேகா//

:-) நல்ல வர்ணனை!

ராஜ நடராஜன் said...

//இது நாள் வரை மொபைல் போன் இருப்பதையே மறந்த நான் இப்பெல்லாம் காலையிலே எடுத்த போன் எப்ப வைப்பேன்னு எனக்கே தெரியாது, சில சமயங்களில் மொபைல் கம்பெனியிலே இருந்து போன் பண்ணி உங்களால எங்க சர்வர் டவுன் ஆகுது, நீங்க போனை ஆப் செய்யுங்க சொல்லுவாங்க//

இதோ இப்பத்தான் அட்மின் வந்து சர்வர் டவுன் பொலம்பல்.இதெல்லாம் உங்க வேலைதானா?

ராஜ நடராஜன் said...

//அதனாலே வாழ்கையிலே பொய்யே சொல்லாத நான்,அய்யன் வள்ளுவன் மேல பாரத்தை போட்டு

"நானும் கொஞ்சம் தாமதமாத்தான் வந்தேன்னு ஒரு பொய்யை சொல்லி சமாளிச்சேன்."//

எப்படி இப்படியெல்லாம்:)

ராஜ நடராஜன் said...

//"போன் பில் கட்டி முடியலை, காசு கட்டுப்பாடு பண்ண இப்படி குடும்ப கட்டுப்பாட்டை மீறி சந்திக்கிறோம்"//

காதலன் காதலி நினைவுக்கு வந்துடுச்சு:)

Anonymous said...

அஜீத்து கருப்பா இருந்தா அழகா இருக்கமாட்டாரோ :)

சின்னப் பையன் said...

:-)))))))))))))))))))

Anonymous said...

:)))


puthugai.abdulla

துபாய் ராஜா said...

//"சொன்னதோடு இருக்கப்புடாது,பேசினதை விட அதிகமா புரோக்கர் கமிசன் கொடுக்கணும், நான் உனக்காக எவ்வளவு பரிஞ்சி பேசி இந்த பெண்ணோட அப்பாவை சம்மதிக்க வைத்தேனு உனக்கு தெரியும், உன் போட்டோவை பார்த்து இருளடைந்து போனவரை வெளிச்சத்துக்கு கொண்டு வர நான் பட்ட கஷ்டம் என்னோட கல்யாண தரகர் வாழ்கையிலே ஒரு மைல் கல்,இதை ஒரு சாதனையா நான் எல்லோரிடமும் சொல்லி கிட்டு இருக்கேன்."//

நல்ல நகைச்சுவைதான் போங்கள்.

வால்பையன் said...

//அவ முகம் அரை இஞ்சிக்கு வீங்கி இருப்பதன் காரணமும், தாமதமா வந்ததின் காரணமும், எனக்கு அவளை கண்டு பிடிக்க முடியாம போன காரணத்துக்கும் விடை கிடைத்தது.//

என்னாது அந்த வடை!

வழிப்போக்கன் said...

சபையிலே உண்மையை உடைச்சி மானத்தை வாங்கின அவரிடம் சரி என தலை ஆட்டிவிட்டு கிளம்பினேன் சோகமான சந்தோசத்திலே//

இது சூப்பர்...
:)))
அதென்ன “சோகமான சந்தோசம்”???

ILA (a) இளா said...

இது சோக மழையா சந்தோஷ மழையான்னு தெரியலை, என்னாலே நாலு விவசாயீங்க நல்லா இருந்தா சரிதான்.//

Prabhu said...

அடப் பாவி, கல்யாணத்துக்கு பாத்த பொண்ணத்தான் இப்படி கடலைய போட்டிருக்கானா? நான் என்னவோ தட்டுத்தடுமாறி கரெக்ட் பண்ணிடான்ல நெனச்சுட்டேன்.

வில்லன் said...

//என் மேல பரிதாப பட்டோ, என் அழகை பார்த்து பரிதாப பட்டோ நான் போட்ட கடைசி துண்டை திரும்பி வரலை//

கெடச்சது மிச்சம்ம்னு துண்ட அமுக்கிட்டு போயருபாங்கா........

வில்லன் said...

//இன்னறைக்கு முதல் நாளா நானும் அவளும் வெளியே சந்திக்கிறோம்.//

நல்ல சந்திப்பா கள்ள சந்திப்பா அத சொல்லும் மொதல்ல.

வில்லன் said...

//"சாப்பிட்டா இன்னும் நிறைய பேசலாம்"//

சரியான வைதாளியா இருப்ப போல....... எவளோ பில்லு சாப்பிட்டதுக்கு......

வில்லன் said...

//"உன்னை இப்படி பார்க்கிறதிலே ரெம்ப சந்தோசம், ஒரு நாலு வருசமா நீயும் பொண்ணு தேடி அலுத்து போன,இப்பவாது பொண்ணு கிடைச்சி இருக்கே"//

நாலு வருசமா இல்ல நாப்பது வருசமா..........

வில்லன் said...

//"சொன்னதோடு இருக்கப்புடாது,பேசினதை விட அதிகமா புரோக்கர் கமிசன் கொடுக்கணும்//

வாஸ்தவமான பேச்சு..... ஏன்னா மாமா வேல பாக்காருல்லா அவரு