Sunday, November 22, 2009

காதல் துடிப்பு

ஹாய்


ஒ.. ஹே.. எப்படி இருக்க

ம்ம்.. எதோ சொல்லனுமுன்னு சொன்ன.

எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியலை, நம்ம வாத்தியார் digital signal processing எடுக்கிற மாதிரி ஒண்ணுமே புரியலை.

அது எப்படி புரியும் அவரு இங்கிலீஷ் ல பாடம் எடுக்கிறாரு.

நான் அவரை பத்தி சொல்லலை, நம்ம ரெண்டு பேரை பத்தி சொல்லுறேன்.

சொல்ல என்ன இருக்கு, நீ மாப்பிள்ளை பெஞ்ச், நான் மச்சினிச்சி பெஞ்சி, இதை தவிர வேற என்ன இருக்கு.


ஹேய் இன்னைக்கு நீ தலைக்கு குளிச்சியோ

இது என்ன கேள்வி, நான் தினமும் தான் தலைக்கு குளிக்கிறேன்.

இல்லை நீ தலைக்கு குளிச்சி ஒரு மாசம் ஆச்சி.போன மாதம் ஆறாம் தேதி அது சனிக்கிழமை.

ஷ்ஷ்ஷ்... மெதுவா பேசு.. ஊரை ௬ட்டி சொல்லுவா போல இருக்கு, ஆமா ரெம்ப நாளைக்கு அப்புறம் தலைக்கு குளிச்சேன். இதை எல்லாம் எப்படி கணக்கு பண்ணுவ.

குளிச்ச தலைக்கு பின்னல் போட மாட்ட, கொஞ்சம் அழகா தெரிவ, ஆனா குளிகலைனா அழகை ௬ட்டனுமுன்னு மூஞ்சியிலே அரை இன்ச்சிக்கு மேக் அப் இருக்கும்.

நீ கணக்கிலே 200/200 மார்க் வாங்கினாயா?

எப்படி சரியா சொன்ன?

எல்லாம் கணக்கு தான், ஆக நீ என்னைய கணக்கு பண்ணுற

உண்மைதான், எனக்கு ஏன் அப்படி உன் மேல அக்கறையா இருக்கனுமுன்னு தெரியலை, உன்௬ட பேசணும், உன்கிட்ட எதுவுமே ஒளிவு மறைவு இருக்க ௬டாதுன்னு.

என்னை மன்னிச்சுடு, உனக்கு இப்படி எண்ணம் வர காரணமா இருந்த குளியலை இனிமேல நிறுத்திடுறேன்.

நீ கொஞ்சம் நேரம் தாமதமா வந்தா உனக்கு என்னவோ, எதோ ஆகிட்டு நெஞ்சம் துடிக்குது, நீ வீடு போகும் போது உன்௬டவே வரணுமுன்னு நினைக்கிறேன். நீ கல்லூரி வரைலைன்னா ஆளுனருக்கு போன் போட்டு உன்னை காணவில்லைன்னு புகார் கொடுக்கணும் போல தோணுது.

ஏன் முதல்வர், பிரதமரை எல்லாம் விட்டுட்ட.

நம்ம இந்தியாவிலே வேலை வெட்டி இல்லாம உசத்தி சம்பளம் வாங்குகிற வங்களில் அவங்களும் ஒருத்தர்,சரி.. சரி பேச்சை மாத்தாதே. எனக்கு ஏன் இப்படி நினைக்க தோணுது.

இப்போதைக்கு என் கிட்ட பதில் இல்லை, ரெண்டு வாரம் கழிச்சி சொல்லவா?

இப்பக்௬ட பாரு உனக்காக எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்து இருக்க சொல்லுது.

அதிகம் ரெண்டு வாரம் போதும், எங்க மாமா மனநல மருத்துவர், அவட்ட உன் பிரச்னையை சொல்லி கேட்கிறேன்.

என் மனநிலையை தீர்த்து வைக்கும் மருத்துவர், நீ இருக்கும் போது உன் மாமன் வளுக்கையன் கிட்ட என் போகணும்.

நீ என்னைய காதலிக்கிறாயா?

உன்னையே பத்தி நினச்சி, உன் ௬ட பேசனுமுன்னு நினச்சா, அது காதல்னு நீ எப்படி முடிவு பண்ணலாம், என்னோட நண்பர்கள் ௬டேயும் நான் இப்படித்தான் பேசுறேன், காதலுக்கும், நட்புக்கும் உள்ள வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாத உன்னோட பழகிறதே தப்பு, சந்கேதப்பட்டு நீ பார்க்கிற பார்வை எல்லாம் சங்கத்திலே முடியும்.

நான் சனிக்கிழமை குளிச்சதை கணக்கு எடுத்தவன், எங்க மாமா வளுக்கையன்னு சொன்னது, போகும் போதும் வரும் போதும் நாய் குட்டி மாதிரி கூடவே வரணுமுன்னு நினைக்கிறதை என்னனு சொல்ல, பாசம்னு சொல்லனும்மா, விருப்பமுனு சொல்லனுமா?

அன்றைக்கு எதேர்ச்சையா உன்னை கோவில்ல பார்த்தேன், நீ போன வண்டியிலே பின்னாடி செஞ்சிலுவை சங்க குறியீட்டை போட்டு மனநல மருத்துவருன்னு போட்டு இருந்தது, அந்த ஆளைப் பார்த்தாலே உங்க மாமா மாதிரி இருந்தார். குளியல் விஷயம் நான் பள்ளிகுடம் படிக்கும் போதே இருக்கு.

இப்ப நீ என்னதான் சொல்ல வார?

ஒரு நட்பு பாத்திரத்திலே நஞ்சை கலந்திட்டே.

...............
.............

(மேலே நடந்த சம்பவத்திற்கு பின் ஒரு மணி நேரம் கழித்து )

என்னடி எப்பவுமே அவன் கிட்ட பேசிட்டு வந்தா மூஞ்சி, வாய் எல்லாம் சிவந்து பெங்களூர் தக்காளி மாதிரி வருவ, காவிரி தண்ணி வராம காஞ்சி போன நெல் நாத்து மாதிரி வார.நீ துண்டு போடுறதை சொல்லுறதுக்கு முன்னே அவன் துண்டு போட்டுட்டானா?

அவன் என் கழுத்திலே துண்டு போட்டுட்டான். காதல் பல்ஸ் பார்க்கலாமுன்னு, கொஞ்சம் விட்டு பிடிக்கலாமுன்னு நினைச்சா என் பல்லை பிடிங்கிட்டான்.

ஆமா நீ காதல் பல் டாக்டர், அவன் காதல் பல் நோயாளி, நீ அவனுக்கு பல்ஸ் பார்த்து உன் பல்லை உடைச்சி கிட்ட

அவன் என்னை பறக்க வெட்டி மாதிரி பார்க்கும் போது, என்னைப் பார்க்க வரும் போது, இருக்கிறதிலே நல்ல பேன்ட், சட்டையை ஓசியிலே போட்டுட்டு வரும் போது, கிளி காதல் பாட்டு பாட வருதுன்னு நினச்சேன், இப்படி கடைய காலி பண்ணிட்டு போவான்னு நினைக்கவே இல்லை.

கடைசியிலே என்னதான் சொன்னான்.அந்த கட்டையிலே போற பய

ஹேய் அவனுக்கு சென்னை, அங்கே கட்டை எல்லாம் கிடைக்காது, அதனாலே எரிப்பாங்கன்னு நினைக்கிறேன்.

அடியே.. இது ரெம்ப முக்கியம்.. விசயத்துக்கு வா

"இனிமேல நான் உன்௬ட பேசினா என் நாக்கை அறுத்து நடு சந்தியிலே போட்டுடுவேன், இனிமேல நீ யாரோ நான் யாரோ" ன்னு சொல்லிட்டு போய்ட்டான்

அவன் பேசுறது உனக்கு மட்டும் தான் புரியும், உன்௬ட பேசலைன்னா, அவன் நாக்கை அறுத்து காக்கைக்கு போட வேண்டியதான்.

சரி விடு ஒரு சனியன் விட்டு ஒழிந்ததுன்னு நினைச்சி தலைய முழுகு.

(அடுத்த அரைமணி நேரத்தில்)

என்னடா மாப்ள எப்போதும் திருட்டு விட கோழி தின்னவன் மாதிரி இருப்ப சூப்பி போட்ட பனங்கொட்டை மாதிரி இருக்க

எல்லாத்துக்கும் அவ தான் காரணம், ஒரு மனுஷன் எத்தனை தடவை இலை மறைவா சொல்லுறது,அவ எதுவுமே தெரியாத மாதிரி மங்குனி மாதிரி இருக்கா,எவ்வளவு தடவை தான் இதயத்தை திறந்து காட்டுறது, ஒண்ணுமே புரியாத மாதிரி பேசினா அவ என்னை காதலிக்கலைன்னு தானே அர்த்தம்.

எனக்கே இப்பத்தான் தெரியும் நீ அவளைக் காதலிக்கிறன்னு, அப்படி என்ன தான் சொன்னா?

ஒண்ணுமே சொல்லலை

அதனாலே

நல்லா திட்டுபிட்டு வந்தேன், இனிமேல உன் மூஞ்சிலே முழிக்க மாட்டேன்.

டேய் அவ தினமும் நம்ம வகுப்புத்தான் வருவா, அவ மூஞ்சிலே முழிக்காமல் முதுகிலே மூழிப்பியோ, துண்டு போட நாயா பேயா அலைய வேண்டியது, கிடைக்கலைன்னு அலைந்த கோபத்தை எல்லாம் காட்டி திட்ட வேண்டியது.

மாப்ள, நான் என்னை அவ காதலிக்கலைன்னு திட்டலை, நான் அவளை காதலிக்கிறன்னொன்னு சந்தேகப் பட்டத்துக்கு திட்டிவிட்டு வந்தேன்.

என்ன மாப்ள ஒரு தடவை இதயத்தை பிச்சி அள்ளி வெளியே எடுத்து போட வேண்டியதானே, ரெண்டிலே ஒரு முடிவாது தெரிஞ்சு இருக்கும்.

டேய் இல்லைன்னு சொல்லுமுன்னு வேண்டாமுன்னு சொல்லிடனும், தோல்வி நிச்சயமுன்னு தெரிஞ்சா ஆட்டைய கலைச்சிடனும்

டேய் கேட்கதுக்கு ரெண்டு காது பக்கத்திலே இருக்கு என்பதற்காக இப்படி எல்லாம் பேசி என்னை கொல்லப்புடாது.கிழே விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டலைன்னு சொல்லுற

ஆமா .. ஆமா

டேய் நான் இன்னைக்கு தண்ணி அடிக்க காரணமே இல்லாம திண்டாடிக்கிட்டு இருந்தேன், கடவுளாப் பார்த்து ஒரு நல்ல காரணம் கொடுத்திட்டாரு. வா மாப்ள போகலாம். ஒரு முக்கிய மான விஷயம், தண்ணி அடிச்ச உடனே அவளை நினைச்சி நீ அழல்லாம் கூடாது.

கண்டிப்பா, சும்மா போறோம். போதையிலே வாறோம்.


Wednesday, November 18, 2009

தள தளத்த தமிழும், கவர்ச்சி இந்தியும்

உலகத்திலே ரெண்டாவதாக அதிக அளவிலே பேசப்படும் மொழி(அப்படித்தான் சொல்லுதாங்க), இந்தியாவிலே அதிக மக்கள் பேசப்படும் மொழி, இந்திய தேசிய மொழி(?) இத்தனை பெருமையுடை மொழி இந்தி மொழி, இப்பேர்ப் பட்ட மொழியை படிக்க முடியாமல் படிக்க முடியாமல் இழந்ததை எண்ணிக்கையை கணக்கிட்டு சொல்லும் அளவுக்கு திறமையுள்ள கணினி இன்றளவும் கண்டு பிடிக்கப் படவில்லை. இப்பேற்பட்ட அறிய மொழியை படிக்காமல் அழிந்து போன ஒரு ஆத்மாவின் கதை, இதை படித்து விட்டு உங்கள் கண்களிலே தாரை தாரையா கண்ணீர் வந்தா அது உலகத் தரம் வாய்ந்த இந்திக்கே சமர்ப்பணம்.



நான் கல்லூரி படித்து கொண்டு இருந்தேன், அப்பத்தான் இந்தி மொழி யைப் பத்தி நிறைய கேள்வி பட்டேன், அதற்கு முன்னாடி எல்லாம் எங்க ஊரிலே மும்பை வரைக்கும் போய் தாக்கரே குடும்பத்தோட தடி அடியை தாங்க முடியாமல் திரும்ப ஓடி வந்தவர்களின் முடி வெட்டும் கடைகளிலே மீசை இல்லாமல் வைத்திருக்கும் புகைப் படங்களிலே மட்டுமே பார்த்து இருக்கிறேன்.

கல்லூரி நண்பன் சென்னைக்காரன் துண்டு போட்டு உசார் பண்ணிய எங்கள் வகுப்பு தோழியோட இந்திப் படம் பார்க்க திருச்சி போவான்,சும்மாதானே இருக்கேன்னு என்னை துணைக்கு ௬ப்பிடமாட்டான், நானே போய் இலவசமா இணைஞ்சுக்குவேன், அவனும் வேற வழி இல்லாம என்னை ஒரு நாள் ௬ப்பிட்டு போனான்.

படம் போட்ட ஒரு மணி நேரத்திலே வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டு வெளியே வந்து, அவன் ஆளை வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு என்னிடம்
"கிறுக்கு பெயலே கொஞ்சமாவது அறிவு இருக்கா, நானே நம்ம ஆளுங்க ௬ட்டம் குறைவா வருமுன்னு, ஹிந்தி படம் பார்க்க வந்து கடலை போடனுமுனா, நீ ஏன்டா லோட லோட ன்னு நச்சரிச்சு கிட்டு இருக்க"

"மச்சான், அவங்க படத்திலே வாயை திறந்த மூட மாட்டங்குறாங்க, அப்படி என்னதான் அம்புட்டு நீளமா பேசுவாங்கன்னு தெரியாம மண்டை குழம்பி விட்டது"


அதற்கு அப்புறமா அவன் எங்கே போனாலும், என்னை ௬ப்பிடுறதே இல்லை.அதோட போச்சு ஹிந்தி படிப்பு, ஒரு வழியா ரெம்ப கஷ்டப்பட்டு முன்னாடி பின்னாடி இருந்தவர்களை பார்த்து தேர்வு எழுதி வகுப்பிலே கடைசியிலே இருந்தாலும் இருந்தாலும் முதல் வகுப்பிலே தேர்ச்சி அடைந்தேன்.


படிப்பு முடிந்து ரெண்டு வருஷம் சென்னை சாலைகளை அளந்து விட்டுசொல்லாம கொள்ளாம பெங்களூர்க்கு ஓடி வந்தேன் , ரெம்ப ஊரை சுத்தாமவேலையும் கிடைத்தது . ரெம்ப நாள் மறந்து போய் இருந்த ஹிந்தி மறுபடியும் பரிச்சயம் ஆனது, காரணம் புதுசா கம்பெனிக்கு வடக்கூர் பெண்ணாலே, அவங்க சேர்ந்த புதிசிலே அவளுக்கு தனியா பொட்டி தட்ட கணனி இல்லாததாலே நாங்க ரெண்டு பெரும் ஒரு பொட்டிய பகிர்ந்து கிட்டோம்.

இங்கே ஒரு உண்மையை சொல்லவேண்டிய கட்டாயம், சத்தியமா அவளுக்குநான் துண்டு போடலை, காரணம் அவ அளவு கடந்த அழகா இருந்ததாள்.சுமாரா இருந்தாலே என்னைப் பார்த்து சிலுத்துகிட்டு போவாங்க, அதனாலே சீ..சீ இந்த துண்டு புளிக்குமுனு விட்டுட்டேன்.

அலுவலக வேலை விசயங்களை பத்தி உரையாடும் போது என்ன சொல்ல வாறேன்னு நான் பேசின அரைகுறை இங்கிலிபிசு அவளுக்கு புரியலை, அவ பேசின முழு இங்கிலிபிசு எனக்கு புரியலை.வெறுத்து போன அவள் ஒரு நாள் "நீ ஏன் இந்தி படிக்க டாதுன்னு, எங்க அப்பா மராட்டி, ஆனா இந்தி வாத்தியாரு, நானும் ஒரு குட்டி வாத்தியார் தான்னு சொன்னா"

அம்புட்டு அழகா இருக்கவகிட்ட முடியாதுன்னு சொல்ல மனசு வரலை,
இந்தியோட சேர்த்து காதல் பாடமும் வராதன்னு நப்பு ஆசையிலேயும், ஒரு பாடத்திலே ரெண்டு பரிச்சையிலே தேர்வு அடைவோம் என்ற நம்பிக்கையிலும், சம்மதம் சொன்னேன்.

ஒருவாரம்,ரெண்டு வாரம், மூனு வாரம் போச்சி நான் "நமஸ்தே" யை தாண்டலை, "அவ என்ன மச்சான் எப்படி இருக்கன்னு" நமிதா அக்கா மாதிரி டமில் பேச ஆரமிச்சிட்டா.

ஒரு மாறுதலா இருக்கட்டுமேன்னு தமிழ் பாட்டு போட்டு காட்டினேன், மின்னலே வசீகரா பாட்டை கேட்டுட்டு, பாடல் ரெம்ப நல்லா இருக்குன்னு சொன்னா ,
அதையே சாக்கா வச்சி பிரண்ட்ஸ் படம் பார்க்க ௬ட்டிட்டு போனேன், வடிவேலு காமெடியை பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சவா, தமிழ் நாட்டிலே எவ்வளவோ திறமைகள் இருக்கு, எனக்கெல்லாம் தெரியாம போச்சி, நான் இது நாள் வரைக்கும் சூரியன் உதிக்கிறதும், மறையறதும் மும்பையிலே தான்ன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.

பூனை கண்ணை மூடி கிட்டு பால் குடிச்சா, உலகமே இருட்டுன்னு நினைக்குமாம் என்ற பழமொழி ஞாபகம் வந்தாலும், அரை மணி நேரமா இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்ல ன்னு யோசித்து முடியாம விட்டுட்டேன்.

அதன் பின் நிறைய தமிழ் வார்த்தைகள் சொல்லி கொடுத்தேன்.ஒரு நாள் என்னோட பெயருக்கு என்ன அர்த்தமுன்னு கேட்டா

"ரெம்ப அழகானவன்னு" சொன்னேன்.அப்படியே பேய் அறைந்த மாதிரி ஆகிட்டா, அடுத்த ரெண்டு நாள் அலுவலகம் வரலை, என் அழகை பார்த்து மயங்கி விழுந்து விட்டாளோன்னு நினைச்சேன், ரெண்டு நாள் கழிச்சி வந்தவகிட்ட "என்னாச்சி" ன்னு கேட்டேன்.

மாரடைப்பு வருகிற மாதிரி ஒரு தகவலை தந்தா, என்னாலே எப்படி அதிர்ச்சியை தாங்க முடியும்.
அவளோட அழகை ட அவ கிட்ட பேசவே இல்லை அதற்கு அப்புறம்.இப்படி நாங்க பாடம் படிச்சி கிட்டு இருக்கும் போதே அமெரிக்க பொருளாதாரம் சரிய எங்க பாடத்திலே மண்ணை அள்ளி போட்டுட்டாங்க, அடுத்த வாரத்திலே ஒரு நாள் எங்க டமேஜெர் ௬ப்பிட்டாரு என்ன நடந்ததுன்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாம்.

பொறுப்பு அறிவித்தல் : (உபயம் வால்பையன்) இந்த கதையை சம்பந்தம் உள்ளவர்கள் படித்தால், இது கற்பனை என கொள்க



Sunday, November 15, 2009

குடும்பச் சண்டை

அவனுக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து அவங்க வீட்டிலே குடும்ப சண்டை நடக்கும், அவனோட அப்பா அந்த குடும்பத்திலே நடு, கிராமங்களில் மழை இல்லாமல் போன மனசு கொள்ளாது, அதுவரையிலே அவரவர் வேலையை செய்தவர்கள், விளை நிலங்களின் வெப்பம் பார்த்து கொதித்து போனவர்கள்,தங்களோட கோபத்தை கொட்ட வழி இல்லாமல்குடும்பத்திலே சண்டை ஆரம்பிக்கும்.



மூவரில் யாராவது ஒருத்தர் சண்டைக்கு திறப்பு விழா வைப்பார்கள், அதன் பிறகு அண்ணன், தம்பியும் இணைந்து மூவரும் இடையில்லாமல் வான் மழை இல்லாத பஞ்சத்தை வசவு மழைகளால் நிரப்புவார்கள்.



இவர்களோட சண்டையை வேடிக்கை பார்த்து விலக்கு தீர்க்க வந்தவர்களுக்கும் சில சமயங்களில் சண்டையிலே ஐய்கியம் ஆகி விடுவார்கள்,சில சமயங்களில் கணவன் மார்கள் எல்லாம் ஒரு பக்கமாகவும்,அவரவர்களின் மனைவி மார்கள் தனியாக சண்டை போடுவார்கள், குடுப்ப தலைவர்கள் தங்கள் சண்டையை வாயோடு முடித்து கொண்டாலும், தலைவிகளின் சண்டை குடுமிகளோடு நீண்ட நேரம் நடக்கும்.



குடும்ப தலைவர்கள் வாய் சண்டையில் மட்டுமல்ல குடியிலேயும் மன்னர்கள், சண்டை ஓய்ந்ததும் மூவரும் தனித்தனியே சாராய கடையை நோக்கி போவார்கள், குடியின் ஆரம்பத்திலே கோபத்தின் விளிம்பிலே இருந்தவர்கள், இறுதியிலே பாசத்தில் பிணைந்து சாராய கடையிலே இருந்து வரும்போது மூவரும் தோளிலே கைகளை போட்டு கொண்டு வருவார்கள். முன்பு இவர்களை வேடிக்கை பார்த்த அதே ௬ட்டம் இப்போதும் வேடிக்கை பார்க்கும்.



அவர்களின் மது மயக்கத்தின் பாசம், அது தெளியும் வரை மட்டுமே நிலைக்கும்,அதன் பின் மூவருமே அந்த சம்பவம் நடந்த சாயல் தெரியாமல் நடந்து கொள்வார்கள்.ஒவ்வொரு முறை சண்டை நடக்கும் போதும் இது ஒரு வாடிக்கையான விஷயம்.அவன் பள்ளி முடிந்ததும், நண்பர்களோடு விளையாடி விட்டு வரும்போது ஒரு வித பயத்திலே வருவான், வீட்டின் முன் ௬ட்டம் ௬டி இருந்தால் மீண்டும் விளையாட போய் விடுவான், அந்த நேரம் வீட்டிற்கு போனாலும் அவனை வரவேற்க ஆட்கள் இருந்தாலும் அவர்களின் கவனம் இவன் மேல் இருக்காது.


சிலசமயங்களில் அவன் விளையாடும் இடத்திற்கே விஷயம் வந்து விடும் வீட்டிலே சண்டையென்று, இந்த சம்பவங்களினால் அவன் பாதிக்க பட்டு, பின் பழக்கப் பட்டு விட்டான், இது அவன் அப்பாவை வெறுப்பதற்கு ஒரு முக்கிய காரணம், அவர் சொன்னதற்கு எதிராகவே செய்து அதிலே ஆனந்தப் படுவான். நாட்கள் நகர்வது போல குடும்பச் சண்டையும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது, அவர்களின் சண்டையைப் பார்த்து சலித்துப் போனவன், யாரிடமும் சண்டை போடுவதில்லை. அவர்களின் சண்டையிலும் தலையிடுவதில்லை.

காலம் கடந்தது பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்கு போக தயார் ஆனான், அவன் தந்தை விருப்பத்திற்கு மாறான ஒரு பாடத்தையும், இடத்தையும் தேர்ந்து எடுத்தான், குடும்பச் சண்டையின் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், இல்லாமல் இல்லை. இதற்கு பயந்தே கல்லூரி நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதில்லை.

கல்லூரி சென்றது முதல் அவனின் தேவையை எல்லாம் அம்மாவிடம் சொல்லியே பெற்று கொண்டான், தந்தையிடம் பேசுவதை குறைத்து கொண்டான்,எதாவது கேட்டால் பதில் மட்டும் சொல்லுவான், சில சமயங்களில் அதை சட்டை செய்யாமல் கடந்து சென்று விடுவான்.


ஒரு நாள் கல்லூரி விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி செல்ல ஆயத்தம் ஆகி கொண்டு இருந்தான், அவன் அப்பா ௬ப்பிட்டாரு , வேண்டா வெறுப்பா அவர் பக்கத்திலே உட்கார்ந்தான் ,அவர் அவனோட மடியிலே படித்து "இனிமேல அம்மா ஒருகண்ணு, தங்கச்சி ஒருகண்ணு" ன்னு சொல்லிட்டு அவரால வந்த அழுகையை அடக்க முடியலை. அவர் செய்தது பைத்தியக்கார வேலையா இருந்தது, வெறுப்பின் உச்சத்துக்கே போய் விட்டான்.ஏதும் பேசாமல் கல்லூரிக்கு போய் விட்டான்.


அவன் போய் ஒருமாதத்திலே நள்ளிரவிலே நண்பர்கள் அவனை எழுப்பினார்கள்,


"டேய் மச்சான் எழுந்திரி, நாம உங்க ஊருக்கு போகணும்.. சீக்கிரம் கிளம்பு" என்றவனை


"என்னடா சொல்லுற?"


"உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையாம்"


"சரி, அதனாலே என்ன.. காலையிலே வீட்டுக்கு போன் பண்ணி கேட்கலாம்" என்று ௬றியவனை விடாப்படியாக கிளப்பினார்கள்,அவர்களின் அவசரத்தை பார்த்ததும் எதோ நடந்து இருக்கு உணர்ந்தான்.பேருந்திலே அவனையும் ஏற்றி விட்டு, அவனோடு அவன் நண்பர்களும் ஏறினார்கள், அவர்களும் அவனோடு ஊருக்கு வருவதாக கூறினார்கள்.

அவன் சந்தேகம் வலுவடைந்து


"எங்க அப்பாவுக்கு என்ன ஆச்சி?"


"உடம்புக்கு ரெம்ப முடியலையாம்"


"மச்சான், உண்மையை சொல்லுங்கடா" முதலில் சொல்ல மறுத்தாலும், அவனது வற்புறுத்தலின் காரணமாக உண்மையை சொன்னார்கள், அவனால் அழமுடியாமல் ஏதோ ஒன்று நெஞ்சை அடைத்துக்கொண்டது.வீட்டுக்கு சென்ற அவனைப்பார்த்ததும் சொந்தம் எல்லாம் மீண்டும் அழ ஆரம்பித்தார்கள், அதை கேட்கும் நிலையிலே அவனும் அவன் தந்தையும் இல்லை. ஈம சடங்குகள் எல்லாம் முடிந்த அடுத்த வாரத்திலே தந்தையை நம்பி கடன் கொடுத்தவர் எல்லாம் நெருக்க ஆரம்பித்தார்கள், வேறு வழி இல்லாமல் இருந்த நிலத்தில் பாதியை விற்று கடன் அடைத்தார்கள்.இழப்பின் வலியை உணர ஆரம்பித்தான்.அது வரை பணம் பற்றி கவலை இல்லாத குடும்பத்திலே அதுவே பிரதான கவலையானது.


அதுவரையிலே நடந்த சண்டையும் அறவே நின்று போனது. கஷ்டப்பட்டு கல்லூரியை முடித்தான். முதல் ஆளாய் சென்னைக்கு ஓடினான், கால் கடுக்க நடந்து ஒரு வேலையைப் தேடிபிடித்தான். ஆயிரம் ரூபாயிலே இருந்து இன்று முப்பதாயிரம் ரூபாய் வாங்கும் வரை உயர்ந்து விட்டான். பழைய கடன்களை எல்லாம் அடைத்து இழந்த பூர்விக நிலத்தையும் மீட்டு கொண்டார்கள். ஒரு முறை விடுமுறைக்காக ஊருக்கு வந்து இருந்தான்.

பள்ளித்தோழர்களை பார்த்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தான்.


நீண்ட நாட்களுக்கு பின்பு அவன் வீட்டுக்கு முன் ௬ட்டம் ௬டி இருந்தது, நின்றவர்களை விலக்கி விட்டு வீட்டுக்கு சென்றான், அவன் தாய்

"என்ன ஐயா, பக்கத்து ஊருக்கு போய் உன் ௬ட படிச்சவனை பார்க்க போறேன்னு சொன்ன, போகலையா?"


அதற்கு பதில் சொல்லாமல் "வெளியே என்ன?"


"உங்க சித்தப்பனும், பெரியப்பனும், ரெம்ப நாளைக்கு பிறவு, ௬த்து கட்டுறாங்க" ஏதோ நினைவு வந்தவளாய் ஒரு பெருமூச்சோடு சமையல் அறையை நோக்கி நடந்தாள்.அவனும் வெளியே வந்து எந்நாளும் இல்லாமல் சண்டையை வேடிக்கைபார்த்தான், மேலே வானம் வெறுமையா இருப்பதைப் பார்த்தான், இந்த சண்டையை எங்காவது ஒரு இடத்திலே இருந்து அவன் தந்தை வேடிக்கை பார்ப்பதைப் போல உணர்ந்தான். அவனை அறியாமலே அவன் கண்கள் கலங்கின, கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே நடந்தான்.


Wednesday, November 11, 2009

நெப்போலியன் மேல சத்தியம்

என்னடா எந்நாளும் இல்லா திருநாளா, இன்னைக்கி ரெம்ப அலப்பறையா இருக்கே,ஆயிரம் மீனுக்கு வலை வீசி இருக்கேன்னு சொன்னே மீன் ஏதும் சிக்கி இருக்கா?

ஒண்ணு இல்ல மச்சான் இல்ல ரெண்டு வந்து இருக்கு, அதுவும் வடக்கூர்காரிங்க.

நம்மை எல்லாம் நாயா விட கேவலமா பாப்பாங்க, அவங்க எல்லாம், அது உனக்கு நம்பவே முடியலையே.

நீங்க இந்த விஷயத்திலே என்னை நம்ப மாட்டீங்கன்னு தெரியும் அதனால்தான் அவங்க அனுப்பிய ஈமெயில பிரிண்ட் பண்ணி எடுத்திட்டு வந்து இருக்கேன்.

எங்க குடு பார்க்கலாமுனு (ராம்நாடும், புது கோட்டையும் ஓடிவராங்க)

டேய் ராம்நாடு மெயில் பார்த்தா உண்மைனு தான் தெரியுது, அனுப்புனர் விலாசம் எல்லாம் சரியாத்தான் இருக்கு.

ஆமா எட்டப்பா, அதுவும் ஆபீஸ் ஐ.டி யிலே இருந்து வந்து இருக்கு.

டேய் கருப்பா எனக்கு ஒரு சந்தேகம், காதல் கடிதாசி எழுதுறவங்க எதுக்கு ஆபீஸ் ஐ.டி யிலே அனுப்பனும்.

எட்டப்பனுக்கு எப்போதுமே சந்தேகம் தான், என் அழகிலே மயங்கி, காதல் வெறியிலே எழுதி இருப்பாங்க.ஈமெயில் பார்த்த நிமிசத்திலே இருந்து என் ஈரக் கொலையெல்லாம் நடுங்குது.

பார்த்துடா, காதல் கை ௬டி வரும் முன்னே நீ காலாவதி ஆகிவிடாதே.

டேய் நீ மாநிறமா இருந்தும் உனக்கு உங்க ஊரு தண்ணி இல்லா காடு மாதிரி, உன் காதல் நிலம் வரண்ட பூமியா இருக்கிறதாலே என்னைப் பார்த்து பொறாமை படாதே.

எல்லாம் என் நேரம்டா இதை எல்லாம் கேட்கணுமுன்னு என் தலை எழுத்து.

டேய் ராம்நாடு அமைதியா இரு, கருப்பா இப்ப என்ன முடிவு எடுத்து இருக்கே, உனக்கு ரெண்டு துண்டு விழுந்து இருக்கு, எதையாவது ஒண்ணு எடுத்துட்டு, ஒண்ணை விடு ஆத்தேட போட்டும்.

ஆமாடா, ஒருத்தி வாழ்க்கை தான் வீணாப் போறதை எங்களால பார்த்து சகித்து கொள்ள முடியும்.

டேய் துண்டு வாங்கினவன் நான், நீங்க ரெண்டு பேரும் வாயிலே இனாமா வருதுன்னு அள்ளிப் போடுறீங்க, வாங்க தெரிந்த எனக்கு எப்படி எடுக்கணுமுன்னு தெரியும், நீங்க கொஞ்சம் அடங்குங்க.

அப்ப ரெட்டை தோணியிலே போகணுமுன்னு முடிவே பண்ணிட்டியா?

நான் அழகா இருக்கிறதாலே, அளவுக்கு அதிகமா துண்டு விழுந்தாலே, எல்லாத்தையும் கள்ளத்தோணியிலே ௬ட்டிட்டு போற அளவுக்கு பேராசைக்காரன் இல்லை, நீங்க ரெண்டு பெரும் ஈமெயில் பார்த்தீங்க, அதை இன்னும் படிக்கலை, நான் இது வரைக்கும் ஐநூறு தடவை படித்து விட்டேன். இப்ப ஐநூத்தி ஒண்ணாவது தடவையா உங்களுக்காக,மாப்பிளைகளா அவங்க பேரு எல்லாம் உங்க வாயிலே நுழையாது, அதனாலே காதலி ஒண்ணு, காதலி ரெண்டு.

காதலி ஒண்ணு:
என் கண்கள் எப்போதுமே உன்னைத் தேடும், அது உன்னோட கவர்ச்சியா இருக்குமோன்னு நினைப்பேன், ஆனா இப்ப என்னோட இதயமும் உன்னைத் தேடுது, இது காதலா இருக்குமோன்னு நினைக்கிறேன், நினைவலைகளை வானலைகளாக மாற்ற சந்திக்க விரும்புகிறேன், சனிக்கிழமை காலை 11 மணிக்கி லால் பார்க்கிற்கு வரவும்.
உங்கள் அன்புள்ள,

(பெயர் பாதுகாப்பு காரணம் கருதி குறிப்பிட வில்லை)

காதலி ரெண்டு:
மும்பையிலே இல்லாதது என்ன இங்கே இருக்கிறது என் வேலையை தவிர என்று பல ஆயிரம் முறை யோசித்து இருக்கிறேன். விருப்பம் இல்லாமல் வந்தேன், இப்போது உங்களை விரும்புவதற்காகவே வருகிறேன், உங்கள் விருப்பம் அறிய விண்ணை நோக்கி காத்து இருப்பேன் லால் பார்க்கிலே சனிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு

அன்புடன்,
(மேல சொன்னதுதான் இங்கேயும்)

கருப்பா நெஞ்சை பிழிஞ்சிடாங்க, எனக்கு ஒரு சந்தேகம் ஈமெயில்ல அவங்க பேரு இருக்கு, ஆனா உனக்கு எழுதுதற்குன்னு அத்தாட்சியா உன் பேரை போடலை.

ஒருவேளை புருஷன் பேரை சொல்லக்௬டாதுன்னு விட்டு
இருப்பாங்களோ

அடி செருப்பால, ஆடே அறுக்கலை அதுக்குள்ளே தலைக்கு பறக்கியோ.

எனக்கும் ஒரு சந்தேகம், அவளுங்க இங்கிலீஷ்ல எழுதி இருக்காளுங்க, அதை எப்படி கிட்டத்தட்ட தமிழாக்கம் பண்ணின.

டேய் என் ஆங்கில அறிவைப் பத்தி என்ன நினைக்குறீங்க.

அடச்சீ.. உண்மைய சொல்லு மூதேவி.

சென்னைகாரனுக்கு அனுப்பி தமிழாக்கம் பண்ணினேன்.

டேய் கடைசியிலே ரெண்டு மூனு வரிக்கு இன்னும் சரியா தமிழாக்கம் பண்ணலியே.

அது அவனுக்கே தெரியலைன்னு சொல்லிட்டான், ஆனா ஒண்ணும் பயப் படுற மாதிரி எழுதலைன்னு சொல்லிட்டான்.

சென்னைகாரனுக்கே தெரியலைன்னா வடக்கூர் காரிங்க எல்லாம் இங்கிலீஷ் புலி தான் போல.

சனிக்கிழமை போறேன், சந்திக்கிறேன், அப்புறமா முடிவு எடுப்பேன். ரெண்டிலே எது அளவுக்கு அதிகமா என் மேல பைத்தியமா இருக்கோ, அதுக்கு வாய்ப்பு கொடுத்திட்டு.

இன்னும் ஒண்ணை !!!!!!!!!!! இன்னும் ஒண்ணை !!!! (இருவரும் சேர்ந்து)

டேய் நான் இன்னும் முடிக்கலை. கொஞ்ச நாள் கழிச்சி தான் முடிவு எடுப்பேன் ரெண்டாவதை என்ன பண்ணலாமுன்னு.

அப்ப நானும் உன் ௬ட வாரேன்.

காதல் பூமியிலே கந்தக காட்டுக்கு என்னடா வேலை?

மச்சான், நீ கழட்டி விட நினைச்சதுகிட்டே எனக்கு ஒரு அறிமுகம் கொடு, உன் பேரை சொல்லி நானும் கொஞ்சம் முயற்சி செய்யுவேன். நீ வேண்டாமுன்னு சொல்லும் போது நான் துண்டை போட்டுறேன்.

அடத்தூ ....இந்த பொழைப்புக்கு நீ எல்லாம் நாண்டுகிட்டு நின்னு சாகலாம்.

கொஞ்சம் கருணை காட்டுடா.. ரெம்ப பசியா இருக்கேன்

சரி..சரி வந்து தொலை, ஆனா என் பக்கத்திலே நீ வரவே ௬டாது

நீ என்ன சொன்னாலும் கேட்டுகிறேன்.

அப்ப நான் என்ன செய்ய???

எட்டப்பா ரெண்டு தானே இருக்கு, வச்சிட்டா வஞ்சகம் பண்ணுறேன், அடுத்த முறை மாட்டிச்சினா சொல்லுறேன்.பாவம் ராம் நாடு பொழைச்சி போகட்டும்.

அப்ப அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நல்ல பிகரா தேத்து.

ராம், எதுக்கும் சனிக்கிழமை நீ குளிக்காம வா, என்னை விட நீ கொஞ்சம் அழகு குறைவா இருக்கணும், நீ என்ன என்ன பண்ணனுமுன்னு இதிலே தெளிவா எழுதி இருக்கேன். ஒழுங்கா படி, பரிச்சசைக்கு படிச்ச மாதிரி படிக்க ௬டாது.

எப்படி இப்படி?

முசப் பிடிக்கிற நாய்க்கு மூஞ்சை பார்த்தா தெரியாது(மணி அண்ணே?). அதான் முன் எச்சரிக்கையா தயார் பண்ணினேன்.

நீ ஒரு காதல் குரு மச்சான்.

(சனிக்கிழமை காலை)

டேய் ராம்நாடு கருப்பனை காணும், உன்னை விட்டுட்டு ஓடிப் போய்ட்டானா?

இல்லடா கோயிலுக்கு போய் இருக்கான், ரெண்டு பேரு பேரிலையும் அர்ச்சனை பண்ண.

அவன் அலும்பு தாங்கலைடா, அவன் ஆட்டத்தை நிப்பாட்டுடா.

சென்னைக்கரனையும் வரச்சொல்லி இருக்கான், சாயந்திரம் பெரிய விருந்தே இருக்கு.இதோ காதல் மன்னன் வந்துட்டான்

ராம்நாடு சீக்கிரம் வாடா, போய் காதல் இன்டெர்வியு போகலாம், சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கா?

ஒ..எல்லாம் இருக்கு

எட்டப்பா சென்னைக்காரன் வருவான், அவனை இருக்க சொல்லு, அவனுக்கும், உனக்கும் அடுத்த முறை உசார் பண்ணும் போது பாத்துக்கலாம்.

(சனிக்கிழமை மாலை 7 மணி)

எட்டப்பா என்னடா இன்னும் கருப்பனையும், ராம்னாடையும் காணும்.
உசார் பண்ணி ஹிந்தி படம் பாக்க போய்ட்டாங்களா? அதுக்கு வாய்ப்பே இல்லை.


(ராம், கருப்பன் இருவரும் வருகிறார்கள்)


என்னடா ஆச்சி ராம்.

மெட்ராஸ் மச்சான், இன்னைக்கு எதோ தப்பித்தே பெரிய விஷயம் தான், கால் கடுக்க நின்னதுதான் மிச்சம், அவளுக வரவே இல்லை, ஒரு ஆறுமணிக்கு காதல் மன்னன் அவங்களுக்கு போன் போட்டான். என்ன திட்டு திட்டுறாங்க, ஒருத்தி என்னடான்னா நீ என்னை காதலிகிறேன்னு சொன்னதுக்கு தற்கொலை பண்ணுவேன்னு மிரட்டுறா, இன்னொருத்தி உன் மேல மான நஷ்ட ஈடு வழக்கு போடுவேன்னு சொல்லுற, இது ரெண்டும் தான் எனக்கு புரிஞ்சது, அப்புறம்மா இந்தியிலேயும் கொஞ்சம் காய்ச்சினாங்க, கடைசியிலே ரெண்டு பேருமே இனிமேல ஆபீஸ்க்கு வரவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க.

அப்படியா,நான் கும்பிட்ட தெய்வம் கை விடலை. தெய்வம் இருக்குடா.

எட்டப்பா நானே கொலை வெறி கோபத்திலே இருக்கேன்.

விடு மாப்பிள காதல்ங்கிறது புளிரசம் வைக்கிற மாதிரி, அது எல்லோருக்கும் வருமான்னு சொல்லமுடியாது.இப்போதைக்கு இவ்வளவு தான். இன்னொரு விளக்கம் இரவு 9 மணிக்கு

(இரவு 9 மணிக்கு,காதல் களை இழந்து சொகக்களையுடன் இருந்தவனிடம், சென்னை நண்பன்)

மாப்ள உனக்கு SMTP பத்தி தெரியுமா?

நானே எவன் இடையிலே புகுந்து ஆட்டைய கலைச்சான்னு யோசித்து கிட்டு இருக்கேன், நீ வேற SMTP, HMT ன்னு வாட்ச் கடை பேரை சொல்லுற.

டேய், நீ பார்க்கிற ஈமெயில் SMTP protocal வழியாத்தான் வேலை செய்யுது, அதிலே SMTP Client க்கு நீயே ப்ரோக்ராம் எழுதலாம், அதை வச்சி யாரோட from அட்ரஸ் போட்டு மெயில் அனுப்பலாம். நான் என் ப்ரோஜெக்ட்க்கு பயன் படுத்துகிறேன்.

என்னடா மச்சான் சொல்லுறா, அப்ப இதை எல்லாம் செய்த குள்ள கருப்பு ஆடு நீதானா?

நான் இல்ல நாங்க,யோசனை என்னோடது, மற்ற வேலைகளை எல்லாம், எட்டப்பனும், ராம்னாடும் பாத்து கிட்டாங்க.அவங்க தான் சொன்னாங்க நீ காதலி கிடைக்கணுமுன்னு கோயில்.. கோயிலா தேடி அலையுறன்னு, அதான் உனக்கு ஒரு காதல் பாடம் எடுத்தோம், இந்த உலகத்திலே காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை. அது ஒரு நிகழ்வு, அதற்காக உன் வாழ்கையை தியாகம் பண்ணக்கூடாது, கோயில் குளத்தை சுத்துறை விட்டுட்டு உங்க அம்மா கால்ல விழு அவங்களே ஒரு நல்ல பெண் பார்த்து உனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க.

டேய் எல்லா வில்லத்தனத்தையும் பண்ணிட்டு கடைசியிலே நாயகன் மாதிரி அறிவுரையா?

உன்னை மாதிரி என்னாலே காதலி வாங்கி கொடுக்க முடியலை, அதான் அறிவுரை கொடுத்தேன்.

நீ சொன்னது என்னவோ உண்மைதான், நாளைக்கு மறுபடியும் அவங்களுக்கு போன் பண்ணி

மறுபடியுமா!!!!!!!!!!!!

மன்னிப்பு கேட்டுட்டு, இனிமேல நானும் துண்டை குப்பையிலே எறிந்து விட்டு என் பொழைப்பை பார்கிறேன், இது இந்த நெப்போலியன் மேல சத்தியம்.


Sunday, November 8, 2009

பதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்!!

தமிழ் திரை உலகிலே இருக்கிற காதல், மோதல், விறுவிறுப்பு, சண்டை , வில்லன், குத்து பட்டு இப்படிப்பட்ட பல பரிமாணங்களை கொண்டு பதிவர்கள் பற்றி படம் எடுத்தால் எப்படி இருக்கும் என் அயராத பணிகளுக்கு கிடையிடையே இல்லாத மூளையை கசக்கி பிழிந்து வெள்ளாவியிலே வைத்து துவைத்த போது எழுந்தது தான் இந்த காவிய கதை, இது பல விருதுகளை பெற்று ஆஸ்கார் உட்பட தயாரித்தவர் துண்டை போடும் அளவுக்கு வந்தால் அந்த பெருமை இதை எழுதிய எழுத்தாளரை (???) யல்ல பதிவர்களையே சேரும் என்பதை மிக்க பணிவன்போடு தெரிவித்து கொள்கிறேன்.முன்னுரையோட பேரை சொல்லி ஒரு பாராவுக்கு தேத்தியாச்சி, முன்னுரை முக்கியமல்ல கதையே முக்கியமுன்னு நினைக்கிறவங்க கிழே போகலாம்.



கதையின் ஆரம்பத்திலே கதாநாயகன் கல்லூரி வாலிபன் துண்டு போட அலைந்து திரிந்து, நொந்து, மனம் கசந்து இனிமேல துண்டு போட வழியே இல்லாத படி எல்லா கதவுகளும் அடைபட, அவன் நொந்த சோகத்தை கேட்க யாருமே இல்லாத நிலையிலே, அவன் எண்ண குமுறல்களை வெளிப்படுத்த நாதி இல்லாமல் அலைந்த போது பதிவுலகம் பற்றி ஒரு அறிமுகம் கிடைக்கிறது.


மெரீனா கடற்கரையிலே சுண்டல் வாங்கி திங்கும் போது ஒரு ௬ட்டம் கடைப் பக்கம் ஆட்கள் வரத்து குறைந்து விட்டது என தீவிர விவாதம் நடத்தி கொண்டு இருக்கையிலே, வியாபார ௬ட்டம் என நினைத்து விழுந்து அடித்து ஓடும் முன் அவன் சுண்டல் கிழே விழுந்து விட விதியும் அவனை பதிவுலத்திலே தள்ளுகிறது.


இந்த புதிய கதைகளுக்கு நாயகன் கருவாலி மாதிரி இருந்தாலும் நாயகி கனகச்சிதமா இருந்தாதான் மக்கள் ஆதரவு பெருகும் என் பதிலே கதையாசிரியர் உறுதியா இருந்த படியாலே நாயகியோட அறிமுக காட்சியிலே பாட்டு கிடையாது, ஆனா நாயகி புல்லு கட்டு, நெல் நாத்து கட்டு, இப்படி சீட்டு கட்டுகளை தவிர பல கட்டுகளை தலையிலே சுமந்து கொண்டு செல்கிற மாதிரி அறிமுகப் படுத்துகிறோம். ஒரு புறத்திலே இப்படி மாடாய் உழைப்பதை காட்டியதுமே தாய் குலங்கள் பேராதரவு கிடைத்து கிட்ட பேரு மூச்சி, மறுபுறத்திலே பி.எ படித்து விட்டு வேலை கிடைக்காகமல் செந்த உழைப்பிலே சம்பாதிப்பதற்காக வேலை செய்கிறாள், அவள் நேரம் கிடைக்கும் போது இணைய தளத்திலே ஒரு கடை யை ஆரம்பித்து வியாபாரம் செய்கிறாள்.


இப்படி காதாநாயகியை புல்லு கட்டு தூக்க வைத்து விட்டானே என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக ஓசி டிக்கெட் கிடைக்கும்.கதாநாயகன் கதாநாயகி அறிமுகம் முடிஞ்சாலும் கதைக்கு இன்னும் கரு கிடைக்கலைனு கவலை வேண்டாம், ரெண்டு பெரும் அறிமுகம் இவரு அவங்க கடையிலே பொய் கருத்து சொல்ல, இவங்களும் சொல்ல கருத்து பரி மாற்றம் நடிக்கிறது, இன்னும் காதலை பரி மாறவில்லை.


இவர்களை தவிர்த்து நாம அன்றாடம் பார்க்கிற கருத்து பரிமாற்றம், எதிர்கருத்து, எதிர் பதிவு என பல விசயங்கள் அடங்கும், இந்த மாதிரி ஒரு சம்பவத்திலே கதையின் நாயகன் பதிவுலத்திலே பழுத்த பழமாக இருந்த ஒருவரின் கருத்தை கன்னா பின்னானு விமர்சிக்க பதிவுலகப் படை அவரை இடுகைகளால் கொலை வெறி தாக்குதல் நடத்துகின்றனர். இதை பார்த்த நாயகி அவனைப் பார்த்து பரிதாப் படுகிறாள். இந்த உலகத்திலே காதல் அழகிலே மயங்கி வரலாம், பரிதாப் பட்டு அனுதாப அலை காதல் வலையாக மாறலாம், இந்த கதையின் காதல் ரெண்டாவது வகை.


அவருக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி விடுறாங்க, ஒரு பெண் எப்படி அனுப்பலாமுன்னு யாரவது கேள்வி கேட்டா, அவங்களுக்கும் ஓசி டிக்கெட் அனுப்பி வைக்கப்படும், இப்படி தன்மேல கொலை வெறி தாக்குதல் நடந்தாலும், இப்படி ஒரு உறவு கிடைத்ததாலே அதை எல்லாம் தூசி மாதிரி தட்டி விட்டு விட்டார், பதிவுலகம் விட்டு ஓடி விடுவான்னு நினச்சவங்களுக்கு கல்தா கொடுத்து விட்டு தன்னோட வித்தியாசமா எழுத்துக்காளாலே மீண்டும் வெற்றி பவனி வருகிறார், அதுவரைக்கும் காத்து வாங்கிய கடை அதற்க்கு அப்புறம் என்ன எழுதினாலும் சூடான இடுக்கைக்கு போய்விடும்.


இதற்குகிடையே நாயகியும், நாயகனும் காதலுக்கு முந்திய நிலையான குழம்பிய நிலை அல்லது மரை கழண்ட நிலைக்கு போய் விடுகிறார்கள். அவன் சொல்லுவானு இவளும், இவள் சொல்லுவான்னு அவளும் நினைத்தே ரெண்டு பாட்டை தேத்தி விடுறாங்க.


ரெண்டு பெரும் சந்திகிறதா முடிவு எடுக்கிறாங்க, இடமும் தேதியும் குறித்து விடுகிறார்கள், பதிவர் சந்திப்புகளுக்கிடையே இப்படி ஒரு ரகசிய சந்திப்பு நடைபெறுகிறது, ரெண்டு பெரும் குறித்த இடத்திலே சந்திக்கவும் செய்கிறார்கள். மறுபடிம் பாட்டா என்று கொலை வெறி கோபத்தில் இருந்தவர்கள் நிம்மதி அடைகிறார்கள், ஏன்னா அங்கே பாட்டு இல்லை, சண்டை நடக்கிறது. நாயகி அவனை திட்ட ஆரம்பித்தவள் நிறுத்தவே இல்லை. கடைசியிலே என் கடைப் பக்கம் வராதே நானும் நீ இருக்கும் திசையிலே எட்டிக் ௬ட பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டு போய்விடுகிறாள். இங்கே கண்டிப்பா இடைவேளை.


இப்படி சொல்லாம வந்த காதல் சொல்லிட்டு போகுதேன்னு கவலையா இருந்தாலும், என்ன நடந்தது என்று கண்டு பிடித்து நிரபராதி என நிருபிக்க வேண்டிய கட்டாயம், கதாநாயகி இவனை திட்டி விட்டு போகும் போது, அவன் முகத்திலே காகித கட்டுக்களை எரிந்து விட்டு செல்கிறார்கள். அதை எல்லாம் எடுத்துப் பார்த்தால் கதாநாயகி பற்றி உரையாடியிலே பேசியவைகள் நாயகியை தரக்குறைவாகவும், மேலும் பல மலையாளப் பட சிந்தனைகளையும் தன் நண்பர்களுக்கு பகிர்ந்தத்தின் அத்தாட்சிகள் இவைகள்




இதைஎல்லாம் அவன் செய்யவில்லை என இதை படிக்கிற ஒண்ணு ரெண்டு பேருக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை ஊருக்கு வெளிப்படுத்த வேண்டும் ஆதாரத்துடன் இதை முடிப்பதே இரண்டாம் பாதியின் வேலை, இதற்கான ஆராட்சியில் நாயகன் நுழைந்து அனானிகளையும், கடை இல்லாமல் பெயரில் வருபர்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்கிறார்.இப்படிப்பட்ட அனுபவத்திலே பாதிக்கப் பட்ட ரெண்டு மூன்று பேரை சந்தித்து அவன் நிலையை விளக்கி ௬றி அவர்களின் உதவியால் ஒரு விரிவான புலன் அறிக்கை தயார் செய்தது விடுகிறார்.


இதற்கிடையே ஒரு புதிய பெண் பதிவர் தன்னோட விபரப் பட்டியிலே அவங்களோட அழகான படத்தையும் மேலும் வசிகரிக்கும் எழுத்தையும் பார்த்து புதிதாக உருவாகிய வங்க புயல போல பதிவு உலகத்திலே வீசி கொண்டு இருக்கிறார்கள். இவங்க நாயகனோட நண்பி ஆகி விடுகிறார்கள், அது எப்படின்னு கதையிலே விபரமாக வரும், அவர்களுக்கும் கொஞ்ச நாள் கழித்து இப்படி மர்ம கடிதங்கள் வருகிறது, வரும் ஐ.டி களை வைத்தும் அவர்களை மின் அஞ்சல் நேரம் வைத்து அவர்கள் எந்த நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை முதலிலே கண்டு பிடிக்கிறார்கள்.


இருவரின் பின்னூட்டங்களை வைத்து நாயகி ஒரு உண்மைக்கு வந்து விடுகிறாள். சோகபாட்டு எல்லாம் இல்லை சாமி இங்கே, ஆக முகமுடிகளின் நாடு கண்டு பிடித்து விட்டாச்சி, அவர்களோட இருப்பிடம் கண்டு பிடிக்க வேண்டும், ஐ.பி ட்ரசெர் உட்பட பல மென் பொருட்களை வைத்தும். முக முடிகளின் ஐ.டி யை ஹக் செய்ய ஆர்.எஸ்.எ(RSA),ஆர்.சி6(RC6) இப்படி பல அல்கோரிதங்களை படுத்தி உண்மையை உடைக்கிறார்.


அவங்களை தேடி பிடிச்சி அடிச்சி உதைச்சி, உண்மையை வெளி உலகிற்கு கொண்டு வருகிறார். இவ்வளவு வேலை செய்யலைன்னா யாரும் கதாநாயன்னு எப்படி சொல்ல முடியும். உண்மை வந்து விட்டது, மறுபடியும் காதலியை பார்க்க போகிறார், இதற்குள் பல பேர் நாயகியை தொடர்பு கொண்டு உண்மையை சொல்லி விட்டார்கள், இருந்தாலும் நாயகிக்கு கோபம் போகலை ஏன்னா ஏற்கனவே நாயகன் சைடு துண்டு போட்டு இருக்கிறார் என்பதாலே, நாயகியை சந்திக்கும் நாயகன், அந்த அழகான பெண் மூலம் பதிவு எழுவது நான் தான் என்ற உண்மையும் நிருபிக்கிறார். ஆக எல்லா பிரச்சனையும் முடிந்து பதிவு வுலகமே திரண்டு வந்து இவங்களோட திருமணத்தை வாழ்த்துகிறது. எல்லோரும் சந்தோசமா வந்து அடுத்த நாள் இணைய தளத்தை திறந்தால் மீண்டும் அதே மாதிரி தரக்குறைவான இடுக்கைகள், பார்த்து விட்டு எல்லோரும் அதிர்ச்சியிலே உறைய வும் ஊட்டிக்கு தேனிலவு சென்ற கல்யாண தம்பதிகள் முத்தம் கொடுக்கவும் .. தொடருமுன்னு போட்டு படம் சுபம்.


Tuesday, November 3, 2009

வெள்ளைக்காரியும் குரோடன்சும்

என்ன மாப்ள வீட்டிலே பார்க்கிற எல்லா பெண்ணையும் வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டு திரியுரியாமுல்லா, ஏன் அடிக்கடி இங்க இரவு நடன விடுதிக்கு போறியா?

மாமா அது இல்லாம அமெரிக்காவிலே என் பொழைப்பு ஓடாது.சல்சவையும், சரக்கையும் கலக்கி ஆடலைனா தூக்கம் வர மாட்டேங்குது

விடிய விட வெள்ளையம்மா ௬ட சல்சா ஆடிட்டு, காலையிலே வீட்டிலே அனுப்பிய பெண்ணோட போட்டோ பார்த்தா எப்படி பிடிக்கும்

அது என்னவோ உண்மைதான் மாம்ஸ், இங்கே வெள்ளையம்மா ௬ட குடியோட குடித்தனம் பண்ணிட்டு, காலையிலே நம்ம ஊரு பெண்களை பார்த்தால் நிற குருடிலே எல்லாமே கருப்பு மயமா இருக்கு, இதை எல்லாம் பார்க்கும் பொது பேசாம ஒரு வெள்ளையாம்மவுக்கு துண்டு போடலாமுன்னு இருக்கேன்.

அளவுக்கு அதிகமா ஆடதேடா

ஆட்டத்தோட அருமை உனக்கு எப்படி தெரியும், நீ அடங்கி போன கட்டை

அந்த காலத்திலேயே நான் போகாத கிளப்பா ? நான் போடாத துண்டா, நான் போன வேகத்துக்கு கிளப்க்கு வாட்ச் மேன் வேலை பார்கிறனோன்னு நிறைய பேருக்கு சந்தேகம் வந்து விட்டது, நான் அங்கே செலவழிச்ச காசுக்கு அண்ணா சாலையிலே ஒரு கட்டடம் விலைக்கு வாங்கி இருப்பேன்.


ஏதாவது தேறுச்சா?

வெள்ளையம்மா எல்லாம் என்னைப் பார்த்து இந்த மாதிரி ஆகிடுவாங்க, என்னை பார்த்து பரிதாப்பட்டு ஒரு கருப்பம்மா தான் ஓசியிலே ரெண்டு பீர் வாங்கி கொடுத்தது, அதுக்கு நான் இருநூறு பீர் வாங்கி கொடுத்ததுக்கு அப்புறமா?


நான் பரவாஇல்லை ரெண்டு வெள்ளைக்காரிக்கு பீர் வாங்கி கொடுத்து உசார் பண்ணிட்டேன்.

உசார் பண்ணிட்டியா?

அப்புறம் என்ன நடந்தது?

ஒன்னும் நடக்கலை, நன்றின்னு சொல்லிட்டு அவ பாய் பிரண்ட் ௬ட ஆடப்போயிட்டா.இன்னும் கொஞ்ச நாள்ல பாரு, பின்னி படல் எடுப்பேன்



அதானே பார்த்தேன், நீ எங்கே என்னை விட ஒரு படி மேல போயிட்டோன்னு நினைத்தேன்.


மாம்ஸ் உன்னையும் என்னையும் தயவு செய்து ஒப்பிட்டு பேசாதே, உனக்கு பீர் வாங்கி கொடுத்த தெத்து பல் காரி இன்னும் வந்து கிட்டு இருக்கா


மாப்ள அது ஒரு காலம், அந்த காலத்திலேயே இப்ப இருக்கிறதை விட கொஞ்சம் அழகு குறைவா இருந்தேன், அதனாலே என்னை வெள்ளையம்மா எல்லாம் கண்டுக்கலை, இப்ப அளவுக்கு அதிகமா அழகா இருக்கிறதாலே என்னை பார்த்து எல்லோரும் ஒதுங்கி விடுறாங்க.

மாம்ஸ் அது அப்படி இல்லை, வயசான ஆளு ஒருத்தர் வார வழியிலே வழுக்கி அவங்க மேல விழுந்து அவங்க இரவை நாசப் படுத்த ௬டாதுன்னு ஒதுங்கி இருப்பாங்க.என்னைய பாரு சல்லிப் பயலா இருந்த நான், சல்சாவிலே ஆடுற ஆட்டத்திலே எல்லோரையும் கிறங்கடிக்கிறேன்.

ஏன் அவுத்து போட்டுட்டு ஆடுதியோ?

நீ எல்லாம் சினிமாவிலே பாட்டு போட்டா எழுந்து தம் அடிக்கப் போறவன், உனக்கு என்ன தெரியும் ஆட்டத்தோட அருமை.நானும் முதல்ல அப்படித்தான் போய் பட்டிகாட்டுகாரன் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி இருப்பேன், அப்புறமா ஆட்டத்தை கத்துகிட்டேன், அதுதான் என்னை ஆட்டி வைக்குது, ஆனா வெள்ளையம்மா எல்லாம் நம்ம ஊரு புள்ளைகா மாதிரி நிற வித்தியாசமோ, அழகோ பார்ப்பதில்லை

மாப்பிள்ளை வெள்ளையம்மா எல்லாம் குரோட்டன்ஸ் மாதிரி அவங்க எல்லாம் வீட்டுக்கு முன்னாடி வைக்கிறதுக்கு தான் நல்லா இருக்கும், அதே மாதிரி அதுகளோட பராமரிப்பு செலவு ரெம்ப அதிகம், அவங்களுக்கு முகச்சாயம், நகச்சாயம் போடுவதற்கு உன் மாத சம்பளம் பத்தாது.ஆனா நீ எதிர் பார்க்கிற வெள்ளையம்மா மாதிரி குரோட்டன்ஸ் செடி நம்ம ஊரிலே இருக்குமான்னு தேடினால் கிடைக்காது, ஏன்னா நம்ம ஊரு குரோடன்ஸ் சோடி எல்லாம் கண்ணிலே படாது, அவங்களுக்கு எல்லாம் பாலிவுட் நடிகரையோ, ஹாலிவுட் நடிகரையோ நினைத்து கனவு காணவே நேரம் சரியா இருக்கும்.

மாம்ஸ் இங்கே இருக்க வெள்ளையப்பன்,கருப்பு அண்ணாச்சி எல்லாம் வெள்ளையம்மா ௬டத்தானே சுத்துதான்.

மாப்ள இவங்க கலாச்சாரம் அப்படி, சின்ன வயசிலே இருந்து அதிலே வளர்ந்து வந்தாலே இவங்களுக்கு ஒரு செடியை பார்த்ததும், அது குரோடன்ஸ் செடியா இல்லை கள்ளி செடியானு நல்லா தெரியும், நாம அப்படியா சொந்த வீட்டை தவிர வேற எல்லா வீட்டு புள்ளைகளும் எப்படி வேணுமுனாலும் இருக்கலாம்னு நினைக்கிறவங்க,புற அழகாய் பார்த்து மயங்குகிறதை விட, அக அழகாய் ரசிக்க பழகிக்கோ.

மாம்ஸ் தண்ணி போட்டு இருக்கியா, ஒரு அருவை மழையை கொட்டுற, நீ கொஞ்ச நாள் இப்படித்தான் காஞ்ச மாடு மாதிரி துண்டை கையிலே வச்சி அலைந்தாய், ஒண்ணும் தேரலை, நான் எங்கே வெள்ளையம்மாவை உசார் பண்ணி உம்மா கொடுத்து விடுவேன்னோன்னு பொறாமை உனக்கு, ஒழுங்கா வாயை அடக்கி வாசித்தா அளவுக்கு அதிகமா மீன் கிடைக்கிற அன்றைக்கு உனக்கு ஒரு துண்டு இனாமா தருவேன்.

டேய் சத்தமா பேசாதே டா, உன் ௬ட ௬ட்டு சேர்ந்து விட்டேன்னு எனக்கு ஒரு வாரமும், மெய்த மாட்டை கெடுக்கிற மெனக்கெட்ட மாடுன்னு உனக்கு ஒரு வாரமும் அடி விழப் போகுது,அது எல்லாம் ஒரு பருவ கோளாறு தான், விடக் சேவல் மாதிரி அலைந்த நான், பல்லு போன பாம்பு ஆகி விட்டேன்.எனக்கும் இப்படித்தான் ஒரு காலத்திலேயே அறிவுரை கொடுத்தாங்க, கேட்டு திருத்தவே இல்லை பட்டுத்தான் திருந்தினேன், அதனாலே நீயும் பட்டு திருந்துவன்னு நம்பிக்கை இருக்கு,அழகுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லைன்னு புரியுற காலம் வரும்

சூப்பர் மாம்ஸ்.. சூப்பர் மாம்ஸ்


நல்லா இருந்ததா, உன் மனசு மாறிப் போச்சா, நான் ௬ட அதிகமாவே பேசிட்டனோன்னு நினச்சேன்.


அட நீ வேற போன வாரம் ஓசியிலே பீர் வாங்கி கொடுத்த வெள்ளையம்மா இன்னைக்கு கிளப் க்கு வாறியான்னு sms அனுப்பி இருக்கா, அவ பாய் பிரண்ட் வரைலையாம், சும்மா சொல்லக் ௬டாது, பன்னி மூஞ்சியா இருந்தாலும் நரி களை இருக்கு உனக்கு


மாப்ள நான் இன்னும் பேசி முடிக்கலை.


உன் பேச்சை கேட்க எல்லாம் நேரம் இல்லை, எதுவா இருந்தாலும் ரெண்டு நாள் கழிச்சி பேசலாம்