Tuesday, September 30, 2008

வாரணம் ஆயிரம் விமர்சனம்

காக்க காக்க விற்கு பிறகு சூர்யா கவுதம் மேனன் இணையும் படம், சூர்யா வின் கடின உழைப்பு அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் தெரிகிறது.


தமிழ் சினிமாவை உலக அரங்கில் எடுத்து செல்லக்குடிய நல்ல தரமான படம் தான் வாரணம் ஆயிரம். இந்தக்கதையும் இதுவரையில் உலகில் சொல்ல படாத கதை என்பதும் இதற்கு முன் யாரும் எடுக்கவில்லை எனக்கு தெரிந்த வரையில் உண்மை. சரி கதைக்கு செல்வோம்.


தாயில்லாமல் வளரும் முரட்டு வாலிபனும், பொறுப்பு இல்லமால் ராணுவ பள்ளியில் படிக்கும் இளைஞர்களின் திடீரென ஏற்படும் சம்பவங்கள் மற்றும் அதன் பின் விளைவுகளே கதையின் கரு, இரு பாத்திரங்களையும் அழகாக வித்தியாச படுத்தி இருக்கிறார் சூர்யா. குழப்பமான கதையை ரசிகர்கள் ஏற்றுகொள்ளும் வகையில் கொடுத்த கவுதமுக்கு ஒரு 'ஓஹோ' போடலாம்


படத்தின் முதல் காட்சி மருத்துவ மனையில் ஆரமிக்கிறது, கல்லூரி பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகிறது அந்த விபத்தில் படுகாயமடைந்த சூர்யா, ரம்யா இருவரும் மருத்துவ மனையில் செர்க்கபடுகிறார்கள், அதே சமயம் ராணுவ பயிற்சி முகாமில் நடந்த தீவிர வாத தாக்குதில் படுகாய மடைந்த இன்னொரு சூர்யாவும் சேர,இருவரின் வாழ்கை சம்பவங்களை விளக்க கதை பின் நோக்கி சொல்கிறது


தாயில்லாமல் வளரும் ஒரு முரட்டு இளைஞ்சன் வாழ்வில் அன்பு கிடைக்காமல் வளருகிறான்.முரட்டு இளைஞனாக வரும் சூர்யா முரடனாகவே வாழ்ந்து இருக்கிறார்.கல்லூரியில் சேரும் சூர்யா,முதல்வர் சிம்ரனின் கண்டிப்பான நடவடிக்களை கண்டிக்க அவர் வீட்டுக்கு செல்லும் சூர்யா அங்கு காக்கா வலிப்பினால் துடிக்கும் குத்து ரம்யா வைக் காப்பாற்றுகிறார்.


கல்லூரியில் வரலாறிலே மாணவர் தேர்தல் நடந்தது கிடையாது. அதை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற முயற்சியில் உள்ளூர் தொழில் அதிபர் மகன் முயற்சி செய்கிறார், அதற்காக அவன் எடுக்கும் முயற்சிகளை குத்து ரம்யா சூர்யாவின் உதவியால் முறியடிக்கபடிகின்றன.இதற்குள் அவர்கள் இருவருக்கும் காதல் வந்திருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை .

ஏமாற்றம் அடைந்த தொழில் அதிபரும், அவரின் மகனும் சந்தர்பத்தை எதிர் பார்த்து காத்திருக்கையில் கல்லூரி சுற்றுலா வருகிறது, வட இந்தியாவில் உள்ள ரவுடிகளை(தீவிரவாதிகள்) சூர்யாவை கொல்ல செய்ய ஏற்பாடு செய்கிறார்கள். கல்லூரி சுற்றுலா செல்லும் சூர்யா,ராம்யா இருவரும் கொலை செய்ய படுகிறார்கள்.

மருத்துவமனியில் உயிருக்கு போரடிகொண்டிருக்கும் ராணுவ வீரன் சூர்யா விக்கு, இறந்த சூர்யாவின் உடல் உறுப்புகள் பொருத்தப்பட்டு உயிர் பிழை கிறார். உயிர் பிழைத்து வரும் சூர்யா பள்ளியில் சேர்ந்து முதல் நடந்தது வரை நினைத்து பார்ப்பது போல கதை சொல்லப்படுகிறது.

ராணுவத்திலே மேஜர் பதவி வகித்தவர் தன் மகனும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டுமென தன் மகனை ராணுவ பள்ளியில் சேர்த்து விடுகிறார்.அதிலே விருப்ப்பம் இல்லாமல் தந்து காலனியில் காதலி சமீரா ரெட்டி யுடன் நேரத்தை செலவழிக்க பள்ளியில் இருந்து தப்பித்து காதலியை சந்திப்பதே பொழுது போக்காக வைத்திருக்கும் காதல் மாணவன் சூர்யா, காதலர்கள் சந்திக்கும் காட்சிகள் கொள்ளை அழகு.

படித்து முடித்து ராணுவத்திலே இடமும் கிடக்கிறது, ராணவ ரோந்து வரும் வேளையில் சூர்யாவின் வாகனம் தாக்கப்படுகிறது. அதன் பின் நடந்த வற்றை மேலே குறிப்பிட்ட படியினால் , மருத்துவனையில் இருந்து வரும் சூர்யா தனது கடின உழைப்பால் மற்றும் உடற் பயிற்சி மூலம் கமேண்டோ படை வீராகிறார்.

ராணுவத்தின் கெடுபிடி காரணமாக பதுங்க இடம் பெயரும் திவிரவாதிகளுக்கு சூர்யாவை கொலை செய்ததற்க்காக அடைகலம் தருகிறார் தொழில் அதிபரும் அவர் மகனும், அவர்களது தலைவன் கைது செய்யப்படவே,இறந்து போன சூர்யாவின் கல்லூரி திவிரவாதிகளால் முற்றுகை இடப்படுகிறது.

அதை மீட்க அனுப்பும் ராணுவபடையில் சூர்யாவும் இடம் பெறுகிறார். அங்கு சொல்லும் அவர்கள் தீவிர வாதிகளை கொன்று கல்லுரியை மீட்கிறார், தீவிர வாதிகளுக்கு அடைகலம் தந்த உள்ளூர் தொழில் அதிபரையும் அவரின் மகனும் இந்த தாக்குதலில் அவர்களும் இறந்து விடுகிறார்கள்.

சூர்யாவின் சேவையை பாராட்டி அவருக்கு ராணுவத்தின் உயர்ந்த விருது வழங்கி அவர் கவுரவ படுத்தப்படுவதோடு கதை முடிகிறது. கதாநாயகிகள் இருவரும் அவர்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து உள்ளனர் . படத்தின் சிறப்பு அம்சம் எடிட்டிங், சூர்யாவின் கடின உழைப்பு கவுதம் மேனனின் வெற்றி பட வரிசையில் வாரணம் ஆயிரம் இன்னொரு மைல் கல்.நானும் விமர்சனத்திலே இருந்து விடை பெறுகிறேன்முழு படத்தை தியேட்டர்ல பார்த்து விட்டு நீங்க உங்க முடிவை சொல்லலாம்.




Tuesday, September 23, 2008

குத்து பாட்டு

பாடல் ஆசிரியர் : நாம இன்னைக்கு போடுற மெட்டு அடுத்த 10 வருசத்துக்கு வேற பட்டை யாருமே கோக்கபுடாது
இசை அமைப்பாளர் :பாட்டை சொல்லுங்க,பட்டி தொட்டி எல்லாம் கலக்கிபுடலாம்
பாடல் ஆசிரியர் : படிகவன் வயத்த கலக்காம இருந்தா சரி.யப்பா சொந்தமா ராகம் போடு, வழக்கம் போல காளவான்ட்டு வந்த ராகத்தை போடாத.பாட்டு ஒழுங்கா வரல உனக்கு பாடை தான்
பா.அ :இசை பனிக்கட்டியா உறைஞ்சு கிடக்கு, நீங்க பாட்ட சொல்லுங்க அது உருகி வெள்ளமா ஓடும்
பா.ஆ : வாரதை கொஞ்சம் காவிரி பக்கம்s திருப்பி விடுஅப்பு.கொஞ்ச நாளகைக்கு தண்ணி சண்டை வராம இருக்கும்.பாட்டுக்கு பல்லவி சொல்லுறன் கேட்டுக்கோ
"வல வலைய வாயில போடு"
"பல பலைய பையிலே போடு "
இ.அ : ஆகா!!நவீன தெரு குறள்!! வல.. பலனு.. எதுகை மோனை தூள்.இந்த ஆண்டோட சிறந்த பாடல் ஆசிரியர் விருது உங்களுத்தான் (சனியன் பல் விளகுரதை பாட்டா படிக்கு)
பா.ஆ : லோட லொடன்னு பேசாம பாட்டுக்கு மெட்டு போடு சாமி.
இல்ல அட்டிய கழட்டிடுவேன்.
இ.அ : இதையே பாட்டோட அடுத்த ரெண்டு வரியா வைக்கலாம் போல
(அப்போது இ.௮ வெட்டு வேலைக்காரன் காப்பி எடுத்துக்கொண்டு வருகிறான், அதை பார்த்தும் பா.ஆ கோபமாக)
பா.ஆ : ஐயயோ!! என் பாட்டை திருட்டிடான்.. என் பாட்டை திருட்டிடான்
இ.அ : எங்க வீட்டு வேலைகாரங்க நீங்க களைப்பா இருபீங்கன்னு குடிக்க காபி கொண்டு வாரான்
பா.ஆ : காபி கொண்டு வார சாக்குல பாட்டை காப்பி அடிச்சுடுவான்.நோகாம நொங்கு திங்க எவ்வவோ பேர் நாக்க தொங்க போட்டு அலையு ராங்க .இவனை அனுப்புங்க இல்ல நான் வீட்டுக்கு போறேன்.எனக்கு டென்ஷன் ஆகிடுச்சி நான் ஒரு தம் போடனும் ..(சிகரட் எடுத்து பூ....பூ ... உதுகிறார், இதற்குள் இ.அ வேலைகாரனோடு அவரு பொன்ட்டாடியையும் சேத்து அனுப்பி விட்டுடுறார்)
பா.ஆ : அப்பாட.. என் பாட்டு தப்பிசுரிச்சி..
இ.அ : சரி பாட்டுக்கு வருவோம். ரெண்டு வரி ஆச்சு.
பா.ஆ : இடை..இடையிலே கு..கு..குத்து பட்டு கு..கு..குத்து பட்டு பாட்டு அப்படின்னு வரணும் சரியா
இ.அ : பண்ணிட்ட போச்சு

பா.ஆ : ஹும்ம்ம் .. அடுத்து ஒரு ஐடியா வந்து விட்டது.. இதுக்கு டான்ஸ் உரல்ல அரிசி குத்துற மாதிரி வைக்கணும் ..
இ.௮ : சார்:உங்களோட சேர்ந்து எனக்கும் ஒரு யோசனை வந்தது. இந்த பாட்டை உதித் நாராயணன், மதுஸ்ரீ யை வைச்சு படிக்க வைக்கலாம்.
பா.ஆ :மூக்குவாயனும் நாக்கு மூக்கியுமா?
இ.௮ :அவங்க எல்லாம் மெட்டு கெட்டி பாடினால் ஊரே சேறு தண்ணி சாப்புடாம நின்னு கேக்கும். அவங்களை இப்படி பேசக்குடாது
பா.ஆ :அவங்க வென வடக்கூர்ல பெரிய பாட்டுக்காரரா இருக்கலாம், ஆனா தெக்கூருக்கு வந்த ஒழுங்கா படிக்கவேண்டாமா? அவங்க படிக்கிறதை விளக்கம் சொல்லுரதுக்குனு ஒரு பட்டி மன்றம் வைக்கணும்
இ.௮ :அப்படி என்ன குறையை கண்டுடீங்க
பா.ஆ :"சகானா சாரல் தூவுதோ" எழுதினா இந்தாளு "சகானா சாறல் தவ்வுதோ".இவரு வீட்டுக்கு கட்டடம் கட்ட சாறல் அடிச்சா மாதிரி படிக்காரு. அந்த அம்மா "அன்பால் ஆணை இடு அழகை சாகவிடு" அப்படின்னு எழுதினதை "அன்பாய் வாளி எடு அதிலே சாணியை எடு" என்னய்யா இது வாளியை எடு சாணியை அள்ளுன்னு.இவங்களை பத்தி பேசி டென்ஷன் ஆகிடுச்சு சிகரெட் வேணும் (ப்பூ...ப்பூ...ப்பூ)
இ.௮ :குறை இல்லாம யாரு இருக்கா,குறையை விட்டுட்டு நிறையை பாருங்க.
பா.ஆ : என்ன குறை நிறைனு நாய் மாதிரி குரைசுகிட்டு இருக்க
இ.௮ : உஸ்ஸ்..ரெம்ப சத்தமா பேச புடாது உங்க பேச்சுக்கு கண்டனம்,ஆர்பாட்டம்,கடை அடைப்பு வரும்.தமிழ் நாட்டுல யாரு சார் தமிழா பேசுறா,படிக்கா எல்லாம் இங்கிலீஷ் பேசி படிகிறதையே பெருமையை நினைக்காங்க.
பா.ஆ : என்னைவே யோசிக்க வச்சுவிட்டியே. விஜய் டி.வி யிலே சொல்லி குத்து சிங்கர் ஒரு போட்டி வச்சி தமிழ் படிக்கவங்களை புடிக்கலாம்.சரி பாட்டுக்கு வருவோம்.
இ.௮ :ஐயா சாக்கடகை கவிஞ்சரே நீ ஒரு மண்ணும் சொல்லவேண்டாம்.பொழுது விடிஞ்சு பொழுது போனா கதை எழுதுறன் கவிதை எழுதறனு கண்ட கண்ட கருமாந்துரத்தை எழுத வேண்டியது.போய் உருப்படியா வேற வேலைய பாரு.மிச்சத்தை நானே எழுதிக்கிறேன்.

பா.ஆ : பஞ்சத்துக்கு பாட்டுக்கு மெட்டு நீ பரம்பரையா பாட்டு எழுதுற என்னை?
இ.௮ : உன் பரம்பரை எல்லாம் தேவயானி மாமியா மாதிரி இட்லி கடை வச்சு இருக்காங்கனு எனக்கு தெரியும்டி.பச்ச புள்ளைக பேசுறத பாட்டா எழுதி பவுசா பண்ணுற
வள வலய வாயில் போடு
பல பலய பையிலே போடு

கொல கொலையை கொல்லையில் போடு
அட அடையை அடுப்புல போடு

மல மலைய மடியில போடு
தல தலைய தலைல போடு

சல சலய சாக்குல போடு
கரு கருவ கண்ணுல போடு

துரு துருவ தூக்கி போடு
இதை எழுதுணவனை எண்ணைல போடு

படிச்சவனை(இதை படித்தவர்களை அல்ல) படையில போடு
மல மலனு மண்டைய போடு

இப்படி ஒரு கேவலமான பாட்டுக்கு வைரமுத்து மாதிரி குறை அடிக்கிற. குறை சொன்ன இந்த வாயை (வாயிலே குத்து கையிலே பாட்டு இதுதான் குத்து பாட்டு)


வைகை புயலும், கேப்டனும்

அடி தடி போரை நடத்தி அக்கபோரு நடத்தி கொண்டு இருக்கும் தென் பாண்டி சிங்கங்களா, கொஞ்ச நாள் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு சண்டை போட்டீங்க அதை நாங்க வேடிக்கை பாத்தோம், இப்பவும் நாற்காலி சண்டை தான் உங்க வீட்டுல நாற்காலி உடைஞ்சதுக்காக நீக்க முதல்வர் நாற்காலி வேணுமுன்னு ஒத்த காலிலே நிக்குறீங்க அதையும் நாங்க வேடிக்கை பார்க்கிறோம்.


இதை உங்க பாணியில சொன்ன "என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு". நீங்க சினிமா விலே காமெடி பண்ணுறீங்க,அதனாலே நீங்க சொல்லுற எல்லாத்தையும் நகைசுவையா பாத்து பாத்து, இப்ப நீங்க விடுகிற அறிக்கை எல்லாம் பாத்தா சந்திரமுகி பேய் அடிச்ச குழப்பத்துல நாங்க இருகோம். இதை வச்சி நீங்க காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலையே.

கேப்டன் அவர்களே சமிப காலமா பத்திரிகைக்கு எல்லாம் தலைப்பு செய்தியா இருந்த நீங்க இப்ப தலை வலி செய்தியால்லா இருக்கீங்க.நீங்க பாகிஸ்தான் பார்டர்ல எதிரிகளை பின்னங்காலலே எட்டி உதைக்கும் போதும் எல்லாம் கைய தட்டி சிரிச்சோம், இப்ப கைய கொட்டி சிரிக்கோம்.

ஊரு ரெண்டு பாட்டால் கூ த்தாடிக்கு கொண்ட்டாட்டம் மாதிரி நீங்க அடிக்கிற கொட்டதாலே என்ன எழுத்தை நினைத்து கொண்டு இருந்த எங்களுக்கும் பொழப்பு ஓடுது.நீங்க உங்க சண்டையை சீக்கிரம் முடிகலைனா, உங்களை பத்தி எழுதி எழுதி எங்க கை ஓடிஞ்சுடும்.
இதை வச்சி கருத்து கிருத்து ஏதும் சொல்லுவானு நினைச்சு யாரும் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்ல சாமி


Sunday, September 21, 2008

தமிழை கொல்லும் கிந்திக்காரர்கள்

எதோ வழக்கம் போல நம்ம பால்/மோர்/தயிர் தாக்கரே மும்பையில இருக்க தமிழ் ஆளுங்களை அடிச்சி விரட்ட ஆரமிச்சுடாரோனு நினைக்க வேண்டாம் .அவரு உ.பி காரங்களையும் பீகார் காரங்களையும் அடிச்சு விரட்டுரதுகே நேரம் சரியா இருக்கு


நாம் ஊரு இசை அமைப்பாளர்கள் ஒரு நல்ல தமிழ் பாட்டை எப்படி கொலை பண்ணுறாங்க என்பதை தான் நான் இங்க சொல்லபோறேன்.சொன்னதுல தப்பு இருந்த வீடு தேடி வந்து அடிச்சுட்டு போங்கோ



பாடல் ஆசிரியர் பாட்டு எழுதி கொடுத்த உடனே பெட்டியை கட்டி மும்பை ஓடி நேரா நம்ம மூக்கு வாயன் உதித் நாராயணன் வீட்டுலயும்,இல்ல நாக்கு மூக்கி மதுஸ்ரீ வீ ட்டுல இறங்க வேண்டியது.பாடல் ஆசிரியர் அர்த்தமே இல்லனாலும் அழகா தமிழ்ல எழுதுனதை அரை குறை கிந்தியில மாத்தி அவங்களை வச்சி பாட சொல்லுறது.





அவங்க அர்த்தத்தோட பாடுறாங்களா, வாய்க்கு வந்தபடி பாடுறாங்களா எதையும் பாக்கது கிடையாது.எதோ படிச்சா போதும் அவங்க பேரை சொல்லி விளம்பர படுத்தி நாலு காசு கூட சம்பாதிக்கலாம்னு நினப்புல படிச்சதை வாங்கிட்டு வரவேண்டியது.



நாமும் பெரிய இசை அமைப்பாளர் போட்ட மெட்டுன்னு வாங்கி கேட்டா

"சகானா சாரல் தூவுதோ"
எழுதினா இந்தாளு
"சகானா சாறல் தவ்வுதோ"

எதோ இவரு வீட்டுக்கு கட்டடம் கட்ட சாறல் அடிச்சா மாதிரி படிக்காரு.
அந்த அம்மா
"அன்பால் ஆணை இடு அழகை சாகவிடு"

அப்படின்னு எழுதினதை
"அன்பாய் வாளி எடு அதிலே சாணியை எடு"


என்னய்யா இது
வாளியை எடு சாணியை அள்ளுன்னு.


மொழி தெரியாதவங்க கிட்ட பாட்டை கொடுத்து என்னயா ஏற்கனவே குத்துயிரும் குலயுயிருமா இருக்க தமிழ்ல வெந்த புண்னுல வேல பாய்ச்சுகிற மாதி பண்ணுறது என்ன நியாயம்.
இவங்க படிச்சா தான் பாட்டு கோட்போம்னு யாராவது உங்க காலுல விழுந்து அழுதாங்களா,உங்க வீட்டு முன்னாடி ஆர்பாட்டம் பண்ணினோமா,உண்ணா விரதம், கடை அடைப்பு உண்டா?


பாட்டு நல்லா இருந்தா "பரவை" முனியம்மா பாடினாலும் புகழின் உச்சிக்கே கூட்டிடு போறோம்.
ஏற்கனவே "பிரியமானவளை ரசிக்கலாம்" அப்படின்னு வைரமுத்து ஐயா எழுதனதை
"பெரியம்மா மகளை ரசிக்கலாம்" ன்னு
படிக்கிறாங்கன்னு மேடையிலே சொன்னதுக்கு அப்புறமும் திருந்த வேண்டாமா?
தயாரிப்பாளர் உங்க சுதந்திரத்துல கை வைக்க விரும்ப வில்லை என்பதற்காக தமிழோட சுதந்திரத்துல நீங்க எப்படி கை வைக்கலாம்.
உங்களை மாதிரி கலைஞர்களுக்கு வேணா மொழி இல்லாம இருக்கலாம், ஆனால் எங்களுக்கு நடப்பதற்கும்,பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மொழி இருக்கு என்பதை புரிஞ்சுகோங்க சாமி.
அரசாங்கம் நல்ல தமிழ் உச்சரிப்போட படிச்சா பாட்டுக்கு ஐந்து ஆயிரமுனு அறிவிச்சா உடனே குத்து சிங்கர், மெலடி சிங்கர், டூயட் சிங்கர் இப்படி பல போட்டிகளை தொலை காட்சியில நடத்திஇருப்பிங்க.
வட நாட்டுல இருந்து நடிகைகளை இறக்குமதி பண்ணுறீங்க. அவங்களுக்கு தமிழ் தெரியலைனாலும் வாயை கோணல் மானலா அசைக்க சொல்லி பின்னணி குரல் வச்சு சமாளிக்குரீங்க. பின்னணி பாடகர்களுக்கு எப்படி பின்னணி குரல் கொடுக்க முடியும்?
உங்களை பத்தி குறை சொல்லுற அளவுக்கு நான் ஒன்னும் நக்கீரன் இல்ல(நம்ம கடா மீசை நக்கீரன் கோபால் இல்ல). தமிழை தரமில்லாமல் உச்சரிக்கும் உங்களை சீத்தலை சாத்தனார் உயிரோடு இருந்தால் அவரிடம் இருந்த எழுத்தாணியை வச்சி உங்க தலையிலே கும்மாங் குத்து குத்துவாரு என்பது மட்டும் நிச்சயம்.


Sunday, September 14, 2008

தீவிரவாத தாய்

மவனே,

தொடர்ச்சியா பெங்களுரு, அகமதாபாத் இப்ப டெல்லில குண்டு வச்சு, அத நான் தான் பண்ணினேன் சொல்லி பெருமையா பீத்திகிட்டு அலையும் நதாரிக்களா .

என்னமோ சப்ப மூககன் சீனா காரன்கிட்ட சண்ட போட்டு ஜெய்ச மாறி பல்லை காட்டிகிட்டு மார் தட்டி நிக்கும் கோழை பெயளுவளா

இப்படி அடுத்தவன் குடி யை கெடுக்க கங்கணம் கட்டிக்கிட்டு நீ தெரு நாய் மாறி நாக்க தொங்க போட்டுக்கிட்டு அலையுவனு தெரிஞ்சு இருந்தால் உன்னைய கள்ளி பால் ஊத்தி காலி பண்ணியிருப்பேனே

முதுகு காட்டி ஓடும் ஓடுகாலி உனக்கு பால் கொடுத்த என் மார்பை மட்டுமல்ல என் தலையையும் அல்லவா வெட்டி இருப்பேன்

கொஞ்ச நாளா சாமியை காப்பாத்த போறோம்னு சொல்லிக்கிட்டு அடுத்தவன் வாயில மண் அள்ளி போட்டீங்க, இப்ப பொழுது போகலைனா பெட்டியை கெட்டிகிட்டு குண்டு வைக்க கிளம்பிடுரீங்க.

அறிவு கேட்ட மவனே, என்னைக்கு நீ கடவுளை காப்பத்த கிளம்பிநியோ அன்னைக்கே சாமி செத்து போச்சுடா, அவரு இந்த உலகத்தை படைச்சவரா இருந்த அவர காப்பாத்த அவருக்கு தெரியாதா.

அவரை காப்பத்த நீ படுற பாட்டுக்கு நீ அவர கும்புட கூடாது, அவரு தான் உன்னை சாமியா கும்பிடனும். அவருக்கு சக்தி இருந்தா ஜனங்க முன்னால வந்து சொல்லி இருப்பார் நான் தான் கடவுள்னு

இல்லாத ஒன்னுக்கு சண்ட போட்டு இருகவன் குடியை கெடுகிறதா நினச்சு கிட்டு உன் குடியவே கெடுத்துகிட்டு அலையுற கிறுக்கு பெயலே

மூளை இருந்தா இதெல்லாம் உனக்கு நான் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது, அதனால்தான் உனக்கு குதிரை மாறி லாடம் காட்டி கடிவாளம் போட்டு சுலபமா பழக்கி டுராங்க

இந்திய தாயே நீ மதசார்பு இல்லாதவள் னு சொல்லிக்கிட்டு மதத்துக்கு பின்னாடி போற பெரியாத்தா, நீ மனித நேயத்தை வளக்க முயற்சி எடுக்கணும் தாயி,இப்படியே போச்சுனா உன்னைய குழி தோண்டி புதைக்க மாட்டாங்க குண்டு வைச்சே புதைசுருவாங்க

இதை மாத்த ஊருக்குள்ள நாங்க தான் பெரிய பருப்புன்னு சொல்லிக்கிட்டு திரியுற அரசியல் வாதிகளுக்கு மட்டுமல்ல, அந்த பெரிய பருப்புகளை தேர்ந்து எடுக்கு சிறு பருப்பாகிய நமக்கும் இருக்கு

ஊருக்குள்ள இருக்க குப்பை யை கொட்ட குப்ப தொட்டி வச்சா அதுல குண்டு வச்சு, இருக்க மனுசனை எல்லாம் குப்பை ஆக்கிகிட்டு இருக்கிற இவனுக மனசே ஒரு குப்ப தொட்டி ஆத்தா

நான் சொல்லுறதை சொல்லிட்டேன், நீ சீக்கிரம் கேட்கலைனா உன்னை உலக வரை படத்துல இருந்து எடுதிடுவானுக இந்த எடுப்பட்ட பெயலுக


Wednesday, September 10, 2008

மதங்கள் விற்பனைக்கு

ஐயா ஹிக்ஸ் பாசன்,

கடந்த 2000 ஆயிரம் வருசமா இந்த மனுசங்களை ஆட்டி படைசொமையா, இப்ப திடிர்னு பிக்-பேங்க் னு சொல்லி எங்களை பேங்க் பேங்க் பண்ணுன நாங்க எங்க போவோம் சாமியளா

ஆட்டை கடிச்சி, மாட்டை கடிச்சி, மனுசன கடிக்க வச்ச எங்களையே கடிக்க வாரிகளே சாமி, நாங்க என்ன செய்ய, ஏய் மாரி ஆத்த, மேரி யாத்த, அல்லா அப்பா எங்களை காப்பாத்துங்க.

மதம் பிடிச்ச மனுசங்க எல்லாம் தின்னுட்டு தின்னுட்டு குப்புற படுத்தா எதுக்கு அப்பு எங்களுக்கு பிரச்சனை.

தின்ன சோறு செமிக்கம சண்ட போட்டு மண்டை உடைச்சத்னாலே சாமி இருந்த இந்த சோதனை.

எங்களை வச்சி காசு பாக்க எல்லா சாமியும் பிரேமாந்த சாமி ஆகிடு வாங்கலே இந்த கொடுமைய எந்த கோயில்ல போய் சொல்ல.

நான்தான் பெரியசாமி .. நான்தான் பெரிய சாமின்னு சண்டை போட்ட எங்களை ஆசாமி ஆக்கிடியலே

சோதனை பண்ணி கருப்பு ஓட்டை வந்து அதுக்குள்ள போய் நீ மண்டையை போட்ட நாங்க என்ன செய்ய சாமி.

ஹிக்ஸ் பாசன் னை கண்டு புடிச்சா எங்களை கிக் அவுட்டு பண்ணி நாக் அவுட்டு பன்னீர்வியலே சாமியலே.

மனுசனை குடஞ்சி பேய் ஆட்டம் போட வச்சோமே,எங்களை புரோட்டோனை வச்சு கும்மி அடிச்சு, குத்தாட்டம் போட்டு புரோட்ட மாவு மாறி ஆவபோரமே

புலி வருது புலி வருதுன்னு பயங்காட்டுன எங்களை கொட்டை எடுத்த புளி ஆக்கிருவியலே சாமி

இப்ப வருவேன், அப்ப வருவேன், எப்படினாலும் வருவேன்,ஆனா கண்டிப்பா வருவேன் ரஜினி மாதிரி பஞ்ச் பேசுன எங்களை, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு பஞ்சர் வசனம் பேச வச்சிடியலே சாமியளா.

எல்லாருக்கு மத சாயம் பூசுன எங்க சாயமும் வெளுத்து போச்சே, இனி உங்களை நம்மி பிரயோசனம் இல்ல சாமி நாங்க செவ்வா கிரகத்து போக போரம், இனிமேலாவது சண்டை கிண்டை போடாம சமாதனமா இருங்கையா