Monday, February 23, 2009

அமெரிக்காவிலே பீர் அடிக்காதீங்க

கல்யாணத்திற்கு முன் தண்ணி அடிகிறதை விடைலைனா கல்யாணம் இல்லன்னு சொன்னதுனாலே, எனக்கு இந்த பெண்ணை விட்டால் வாழ்கையிலே கல்யாணமே நடக்காதுன்னு நல்லா தெரிஞ்சதாலே ஒரு முரட்டு சத்தியம் பண்ணி தாலிய கட்டியாச்சு. திருமணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல ஒரு நாள் பீர் மூடியை மோந்து பாத்து விட்டேன்னு ஒரு மாசத்துக்கு கட்டை பிரமச்சாரி ஆனேன். கையிலே காலிலே விழுந்து சமாதானப்படுத்தி அப்புறமா இங்கே வந்தேன்.ஒரு நாள் என்னோட தொல்லை தாங்காம நண்பர்களுடன் சேர்ந்து பீர் அடிச்சேன், நான் அரை பீர் அடிச்சாலே அரை நாள் சலம்புவேன், அன்னைக்குன்னு பார்த்து ஒரு பீர் அடிச்சுபுட்டேன்.அது தலை சுத்தி, வாந்தி வரவழைச்சு விட்டது.

தங்க்ஸ்க்கு என்ன செய்யுறதுன்னு தெரியாம போனை எடுத்து நம்பர் போட்டாள், அடுத்த முனையில் உள்ளவரிடம்

"என் புருஷன், வாந்தி எடுக்கிறார்..வாந்தி எடுக்கிறார்".

போன் வைத்த அடுத்த 2 வது நிமிஷம் வீட்டு முன்னே ஆம்புலன்ஸ், போலீஸ் கார் எல்லாம் வந்தது, அந்த ஏரியாவையே சுத்தி போலீஸ் பட்டாளங்கள் வந்தது.அப்பத்தான் எனக்கு புரிந்தது அவள் 911 க்கு போன் பண்ணி இருக்கிறாள்.


நேர உள்ளே வந்த ஒரு ஆபிசர் நான் வாந்தி எடுத்ததை பார்த்து என்னை நேர மருத்துவ படுக்கையிலே படுக்க வைத்தார்.உடனே திபு...திபு உள்ளே வந்த ஆபிசர் எல்லாம் என் மனைவியிடம் எதோ விசாரணை பண்ணினார்கள், இதற்குள் அங்கு வந்த பெண் போலீஸ் வெள்ளையம்மா என்னை ஆம்புலன்ஸ் வண்டியிலே ஏற்றி விட்டார்கள்.


அந்த வெள்ளையம்மா என்னை பார்த்து "டோன்ட் வொரி ஹனி"


நான்,"என் பேரு கனி இல்லை, நச" ன்னு முடிக்கலை அவங்க மேல வாந்தியபிசேகம் பண்ணி அவங்களை நனைச்சுபுட்டேன்,அதிலே வெள்ளையம்மா நிறம் குறைந்து பளுப்புஅம்மவா மாறிட்டங்க


உடனே வெள்ளையம்மா


"இவன் பீர்ல கலந்து குடிச்சி இருக்கான், சீக்கிரம் போனாத்தான் நல்லது,இல்லைனா இவன் உயிருக்கே ஆபத்து ஆகிடும்" ன்னு சொன்னங்க. உடனே வண்டி கிளம்பியது, நம்ம ஊரு மாதிரி இல்லை ஆம்புலன்ஸ் வண்டியப்பாத்தாலே வழி விடுவாங்க, மருத்துவ மனையை அடைந்தது. அதற்குள் அங்கு தயாராக இருந்த மருத்துவர் குழு என்னை வண்டியிலே இருந்து அழைத்துசென்றது.


நாம் ஊரில் மருத்துவர்கள் எல்லாம் நாம சொன்னதைத்தான் கேட்பார்கள், ஏன்னா நாமதான் சொல்லணும் நமக்கு காய்ச்சல்,தலைவலி ன்னு, அவரு அதுக்கு உடனே மருந்து கொடுப்பார். இங்க நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க, நீங்க அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட வந்தாலும், ரத்தத்தை சோதித்துதான் சொல்லுவாங்க உனக்கு என்ன பிரச்சனை என்று.


அதான் எனக்கும் நடந்தது நான் சொன்னேன்


" நான் குடிச்சேன், அதான் வாந்தி,இது பித்த வாந்திதான்" யாரும் காது கொடுத்து கேட்க்கலை, ஏற்கனவே நான் வாந்தியபிசேகம் பண்ணின வெள்ளையம்மா போலீஸ் அதிகாரியை எல்லோரும் பார்த்த்தினாலே என் பக்கம் யாருமே வரலை, ஒருத்தர் வந்து மட்டும் ரத்தம் எடுத்துட்டு போனாரு


அப்புறமா இதயம், இல்லாத மூளை ஒன்னு விடாம ஸ்கேன் பண்ணினார்கள், அதற்குள் ரத்த சோதனை முடிவும் வந்தது, எல்லோரும் ௬டி, ௬டி பேசினாங்க, தலையை தூக்கிப்பார்த்த எனக்கே கொஞ்சம் பயம் வந்தது, உண்மையிலே தமிழ் படத்திலே வார மாதிரி ஏதும் புது வியாதியா இருக்குமோ?


ஒத்தை பீர் குடிச்சதுக்கு உடம்பு பூரா ஆராய்ச்சி பண்ணுராங்கலேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.


மருத்துவர் ஒருவர் வந்து " நீங்க பீர் குடிச்சு இருக்கீங்க, அதான் வாந்தி எடுத்து இருக்கீங்க"

நான் அதை தானுங்க நான் முதல்லே இருந்தே சொன்னேன்.அவரு நீ சொல்லுவதை கேட்க நாங்க படிக்கலையேன்னு சொல்லிட்டு என் தங்க்ஸ் கிட்டயும் அவருக்கு ஒன்னும் இல்லை, நீங்க வீட்டுக்கு போகலாம்.

"ஐயா பீர் அடிச்சா ஜெயில்ல போடமாட்டீங்களானுன்னு கேட்டாங்க" இந்த கேள்வியை எதிர்பார்க்காத மருத்துவர்.


"நீங்க கொலை வெறி கோபத்திலே இருந்தா பீர் அடிங்க" ன்னு


சிரிச்சி கிட்டே சொன்னாரு. தங்க்ஸ் வேற வழி இல்லாம என்னை வீட்டுக்கு ௬ப்பிட்டு வந்தது.


அடுத்த வாரம் ஒரு நாற்பது பில் வந்தது, அதிலே 911 ஆம்புலன்ஸ், மருத்துவர்,மருத்துவமனை, ஸ்கேன் செலவு மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேத்து 40 ஆயிரம் டாலர் பில் வந்தது.தங்க்ஸ் பயங்கர குசியாகி "ஒரு பீர்க்கு 40 ஆயிரம் டாலர் செலவு செய்த முதல் ஆள் நீங்க தான்" ன்னு சொன்னங்க.


நான் "இதெல்லாம் இன்சூரன்ஸ்ல கொடுப்பாங்க" ன்னு சொன்னேன். ஒரு வில்லச்சிரிப்பு சிரிச்சு புட்டு, அவனும் பில் அனுப்பி இருக்கான், இதுக்கு எல்லாம் நாங்க பணம் கொடுக்க முடியாதுன்னு, நீங்க உங்க கை காசு தான் கொடுக்கணும் ன்னு சொல்லி அவன் அனுப்பி இருந்த கடிதத்தை காண்பித்தார்கள்.

மஞ்ச நோட்டீஸ்சும் கொடுக்க முடியாம, பெயில் அவுட் கிடைக்காம இன்னும் காசு கட்டிக்கிட்டு இருக்கேன்,இப்பெல்லாம் பீர் ன்னு எழுதினாலே படிக்கிறது ௬ட கிடையாது.


அமெரிக்கா மருத்துவம் நவீனமானதுதான், அதனாலேவோ என்னவோ அதுக்கு விலையும் ரெம்ப அதிகம்.


83 கருத்துக்கள்:

பழமைபேசி said...

Ok! Right!!

சந்தனமுல்லை said...

//தங்க்ஸ் பயங்கர குசியாகி "ஒரு பீர்க்கு 40 ஆயிரம் டாலர் செலவு செய்த முதல் ஆள் நீங்க தான்" ன்னு சொன்னங்க.//

lol!

ராஜ நடராஜன் said...

//இப்பெல்லாம் பீர் ன்னு எழுதினாலே படிக்கிறது ௬ட கிடையாது. //

கனவு நாயகரே!அச்சச்சோ!

எம்.எம்.அப்துல்லா said...

பீர் அடிச்சாதான பிரச்சனை?? ஏதாவது விஸ்கி,பிராந்தி இந்த மாதிரி டிரை பண்ணுங்க :))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பேசாம மெடிக்கல் டூரிஸம்ன்னு சொல்லிட்டு இந்தியா வந்திருக்கலாம் பாஸ்..

Anonymous said...

ஒத்தை பீருக்கே இந்த ஆட்டமா???

Anonymous said...

எம்.எம்.அப்துல்லா said...
பீர் அடிச்சாதான பிரச்சனை?? ஏதாவது விஸ்கி,பிராந்தி இந்த மாதிரி டிரை பண்ணுங்க :))

February 23, 2009 10:25:00 AM
**********
நல்ல ஐடியாதாங்க

Aero said...

unmaya sollu da...911 ku phone panninangala..illa ammayuku phone panninangala.....

enaku unma theriyume?

ஆதவா said...

என் ப்ரண்டு ஒருத்தன் இப்படித்தான் பண்ணினான். அவனை நினைச்சுக்கிட்டேங்க.... அன்னிக்கு நான் பட்ட பாடு இருக்கே1!!!! சொல்லி மாளாது!!!

அதுசரி, 40 ஆயிரம் டாலரைக் கொடுத்தீங்களா இல்லையா???

அதிக விலைக்கு பீர் குடிச்ச இந்தியர்னு ஒரு பட்டம் வேணும்னா கொடுக்கலாம்.... ஹி ஹி ஹி

ஆதவா said...

வெள்ளையம்மா!!!!!

சூப்பர் ட்ரான்ஸ்லேஷன்!!!

ஸ்ரீதர்கண்ணன் said...

//எனக்கு இந்த பெண்ணை விட்டால் வாழ்கையிலே கல்யாணமே நடக்காதுன்னு நல்லா தெரிஞ்சதாலே ஒரு முரட்டு சத்தியம் பண்ணி தாலிய கட்டியாச்சு.

ஐயோ நசரேயன் பாவம் நீங்க :)

இப்பெல்லாம் பீர் ன்னு எழுதினாலே படிக்கிறது ௬ட கிடையாது.

:)))))))))))))))

ஆதவா said...

பீர் அடிச்சாதான பிரச்சனை?? ஏதாவது விஸ்கி,பிராந்தி இந்த மாதிரி டிரை பண்ணுங்க :))

உட்காந்து யோசிப்பீங்களோ?

ஸ்ரீதர்கண்ணன் said...

நான்,"என் பேரு கனி இல்லை, நச" ன்னு முடிக்கலை அவங்க மேல வாந்தியபிசேகம் பண்ணி அவங்களை நனைச்சுபுட்டேன்,அதிலே வெள்ளையம்மா நிறம் குறைந்து பளுப்புஅம்மவா மாறிட்டங்க

முடியல :)))))))))

யாத்ரீகன் said...

adapaavi makka :-)

S.R.Rajasekaran said...

\\\கல்யாணத்திற்கு முன் தண்ணி அடிகிறதை விடைலைனா கல்யாணம் இல்லன்னு சொன்னதுனாலே,\\\
கிட்டத்தட்ட தண்ணி தெளிச்சி விட்டும்

S.R.Rajasekaran said...

\\\ஒரு முரட்டு சத்தியம் பண்ணி தாலிய கட்டியாச்சு. \\\
ஏமாத்தி கல்யாணம் முடிச்சத எவ்ளோ நேக்கா சொல்றான் பாருய்யா

S.R.Rajasekaran said...

\\ஒரு நாள் பீர் மூடியை மோந்து பாத்து விட்டேன்னு ஒரு மாசத்துக்கு கட்டை பிரமச்சாரி ஆனேன்.\\\இது "பீர் குடுச்சி பீமன்" ஆகும் நல சங்கத்துக்கு எதிரானது .

குடுகுடுப்பை said...

SUREஷ் said...

பேசாம மெடிக்கல் டூரிஸம்ன்னு சொல்லிட்டு இந்தியா வந்திருக்கலாம் பாஸ்..
//
அதுக்குதான் பில்டப்பு

S.R.Rajasekaran said...

\\கையிலே காலிலே விழுந்து சமாதானப்படுத்தி அப்புறமா இங்கே வந்தேன்\\


போச்சி, போச்சி புளியங்குடிக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போச்சி ,பழமை பேசி இத வச்சி ரெண்டு வாரம் நக்கல் பண்ணுவார்

S.R.Rajasekaran said...

\\ஒரு நாள் என்னோட தொல்லை தாங்காம நண்பர்களுடன் சேர்ந்து பீர் அடிச்சேன்\\


அதென்ன அடிச்சேன் ,அடிக்க வைக்கப்பட்டார்கள்

S.R.Rajasekaran said...

\\அன்னைக்குன்னு பார்த்து ஒரு பீர் அடிச்சுபுட்டேன்\\\


அங்கெல்லாம் 5 லிட்டர் கேன்லையா மாப்பிள்ள வருது!!!

S.R.Rajasekaran said...

\\தங்க்ஸ்க்கு என்ன செய்யுறதுன்னு தெரியாம போனை எடுத்து நம்பர் போட்டாள் அப்பத்தான் எனக்கு புரிந்தது அவள் 911 போன் பண்ணி இருகிறாள்\\என்ன செய்றது அடிச்சும் பாத்தாச்சி தெருவுல போட்டு மிதிச்சும் பாத்தாச்சி கடைசியா

S.R.Rajasekaran said...

\\\அந்த வெள்ளையம்மா என்னை பார்த்து "டோன்ட் வொரி ஹனி"\\\அட பக்கி அதுவும் 'மப்புல' இருந்துச்சா

ஸ்ரீதர்கண்ணன் said...

என்ன செய்றது அடிச்சும் பாத்தாச்சி தெருவுல போட்டு மிதிச்சும் பாத்தாச்சி கடைசியா

நசரேயன் டோட்டல் டேமேஜ் .... இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும் :)

ஸ்ரீதர்கண்ணன் said...

\\\அந்த வெள்ளையம்மா என்னை பார்த்து "டோன்ட் வொரி ஹனி"\\\

அட பக்கி அதுவும் 'மப்புல' இருந்துச்சா


என்ன இருந்தாலும் உங்க ஊர்காரர இப்படி போட்டு தாக்க்க கூடாது சார்....

S.R.Rajasekaran said...

\\\உடனே திபு.திபு உள்ளே வந்த ஆபிசெர் எல்லாம் என் மனைவியிடம் எதோ விசாரணை பண்ணினார்கள்\\\நல்லா யோசனை பண்ணி பாரு ,மப்புல பழைய நெனைப்புல ஏதும் வெள்ளையம்மாவுக்கு கிஸ் கொடுத்து சீரியஸா ஏதும் ஆயுடுச்ச்சா

S.R.Rajasekaran said...

\\"இவன் பீர்ல கலந்து குடிச்சி இருக்கான்\\


என்ன ஒரு கண்டுபிடிப்பு அடுத்த நோபல் பரிசிக்கு சிபாரிசு பண்ணுவோம்

இராகவன் நைஜிரியா said...

ஒரு பீருக்கே இந்த அலம்பலா...

செஞ்சாலும் செய்வீங்க...

அம்மணிய பயமுறுத்த இது மாதிரி எல்லாம் செய்யலேயே...

S.R.Rajasekaran said...

\\\நாம் ஊரில் மருத்துவர்கள் எல்லாம் நாம சொன்னதைத்தான் கேட்பார்கள், ஏன்னா நாமதான் சொல்லணும் நமக்கு காய்ச்சல்,தலைவலி ன்னு, அவரு அதுக்கு உடனே மருந்து கொடுப்பார்\\\


அப்பதானே அந்த டாக்டர் நல்லவர்ன்னு நம்புரிங்க.இதுல ஒரு சிலர் எனக்கு இந்த மருந்து போடுங்கன்னு டாக்ட்டருக்கே பீதிய கிளப்புவாங்க

S.R.Rajasekaran said...

\\\ஒத்தை பீர் குடிச்சதுக்கு உடம்பு பூரா ஆராயிச்சி பண்ணுராங்கலேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்\\வேற என்ன பண்றது அன்னைக்கு வேற பாடியும் கிடைக்கல .எவ்ளோ நேரம்தான் சும்மாவே இருக்கிறது

S.R.Rajasekaran said...

\\\மருத்துவர் ஒருவர் வந்து " நீங்க பீர் குடிச்சு இருக்கீங்க, அதான் வாந்தி எடுத்து இருக்கீங்க"\\\


அடப்பாவிகளா இதத்தான ஆரம்பத்துல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கான்

S.R.Rajasekaran said...

\\\"ஐயா பீர் அடிச்சா ஜெயில்ல போடமாட்டீங்களானுன்னு கேட்டாங்க"\\\மாப்புள இதுக்கு நான் எவ்வளவோ பரவாயில்ல .என்ன ஒரு நாலு நாளைக்கு நாய் பொழப்பா இருக்கும் வீட்டுக்குள்ள சோறு கிடைக்காது .அதிக பட்சம் டைவேர்ஸ் வரைக்கும் தான் மிரட்டல் இருக்கும் .நீ ரெம்ப பாவம் தான்

S.R.Rajasekaran said...

\\ஒரு பீர்க்கு 40 ஆயிரம் டாலர் செலவு செய்த முதல் ஆள் நீங்க தான்\\


இந்தியாவுக்கு வந்து ஒருவாரம் ரூம்போட்டு தண்ணி அடிச்சா கூட இதுல கால் வாசி கூட வராது .

S.R.Rajasekaran said...

\\\இப்பெல்லாம் பீர் ன்னு எழுதினாலே படிக்கிறது ௬ட கிடையாது. \\\உடனே குடிச்சிருது தான்

S.R.Rajasekaran said...

இதனால சகலருக்கும் சொல்றது என்னன்னா ,அடிங்க அளவோட அடிங்க அதுவும் வீட்டுக்கு தெரியாம அடிங்க

ஸ்ரீதர்கண்ணன் said...

இதனால சகலருக்கும் சொல்றது என்னன்னா ,அடிங்க அளவோட அடிங்க அதுவும் வீட்டுக்கு தெரியாம அடிங்க

:)))))

அது சரி(18185106603874041862) said...

என்னக் கொடுமை இது....ஒரு பியர் அடிச்சதுக்கு 40 ஆயிரம் டாலரா?? ஒங்களையெல்லாம் வீட்ல எப்படி வச்சிருக்காங்க வெரட்டி விடாம?

அது சரி(18185106603874041862) said...

//
அதிலே வெள்ளையம்மா நிறம் குறைந்து பளுப்புஅம்மவா மாறிட்டங்க
//

//
ஒத்தை பீர் குடிச்சதுக்கு உடம்பு பூரா ஆராயிச்சி பண்ணுராங்கலேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்
//

அவ்வளவு செலவு பண்ணியும் இப்பவும் அடிச்சிட்டு தான் எழுதுன மாதிரி இருக்கே....தெளிஞ்சதும் எழுத்துப் பிழையை சரி பண்ணுங்க :0))

(தப்பா நினைக்காதீங்க நசரேயன்..)

Unknown said...

நல்ல நகைச்சுவ்வை உணர்வுங்க உங்களுக்கு

Unknown said...

எனக்கு இந்த பெண்ணை விட்டால் வாழ்கையிலே கல்யாணமே நடக்காதுன்னு நல்லா தெரிஞ்சதாலே ஒரு முரட்டு சத்தியம் பண்ணி தாலிய கட்டியாச்சு
////


ஹையோ ஹையோ

Anonymous said...

//ஒரு பீர்க்கு 40 ஆயிரம் டாலர் செலவு//

இம்புட்டா?:0

இதுக்கு எங்க ஊரு தேவலை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

நசரேயன்...உங்களுக்கு...எதாவது..சின்ட்றம்...மேனியா..அப்படி..எப்படி சொல்லி இருப்பங்களே

அ.மு.செய்யது said...

ஆனாலும் ஒரு பீருக்கு இந்த அலப்பற கொஞ்சம் ஓவரு...

முகவை மைந்தன் said...

//ஒரு நாள் என்னோட தொல்லை தாங்காம நண்பர்களுடன் சேர்ந்து பீர் அடிச்சேன்//

//நான் அரை பீர் அடிச்சாலே அரை நாள் சலம்புவேன்//

:-))))))

கிரி said...

//திருமணம் முடிஞ்சு கொஞ்ச நாள்ல ஒரு நாள் பீர் மூடியை மோந்து பாத்து விட்டேன்னு ஒரு மாசத்துக்கு கட்டை பிரமச்சாரி ஆனேன்//

:-))))))))))

//உண்மையிலே தமிழ் படத்திலே வார மாதிரி ஏதும் புது வியாதியா இருக்குமோ?//

நல்லா கிளப்புறாங்கய்யா பீதிய!

அப்துல்மாலிக் said...

அய்யா தாங்கலே ஒரு பீரு மேட்டரை பெரிய ஊரு மேட்டராக்கி ஹய்யோ ஹய்யோ

அப்துல்மாலிக் said...

//டோன்ட் வொரி ஹனி"
நான்,"என் பேரு கனி இல்லை, நச" ன்னு முடிக்கலை //

ஹா ஹா

வெள்ளையம்மா‍‍ நல்ல வர்ணனை

அப்துல்மாலிக் said...

//"ஐயா பீர் அடிச்சா ஜெயில்ல போடமாட்டீங்களானுன்னு கேட்டாங்க" /

எல்லா குடி(?) மகனும் ஜெயில்லேயிலே இருக்கனும்

நல்லருக்குங்க உங்க பதிவு

kaarthy m madhan said...

soooper ponga...naanum adhae koothu dan adichen...enna oru bottle wine ah kudichu..

Anonymous said...

:))

Anonymous said...

50-வது நான் தானா?

Unknown said...

உன்ன பெத்ததுக்கு கால் கிலோ அரிசிய பெத்துஇருக்கலாம் உங்கம்மா..
நாங்க பொங்கியாவது சாப்பிடிருபோம்................

ஹேமா said...

என்ன நசரேயன்,அமெரிக்காவுக்கு வாறவங்களுக்கு எச்சரிக்கை,அங்க பீர் அடிக்காதீங்கன்னு ஒரே பயமுறுத்திக்கொண்டே இருக்கிறீங்க.

ஒரு பீர்க்கு 40 ஆயிரமா!அடக் கடவுளே!

ஹேமா said...

உங்க தங்ஸ் போலீஸுக்கு போன் பண்ணி...வைத்தியம் பண்ணி பாவம் உங்ககூட இப்பிடி அல்லாடுறாங்களே!இன்னும் வேற ஏதாச்சும்கெட்ட பழக்கங்கள் இருந்தா விட்டிடுங்க.
அப்புறம் அதுக்கும் பில் வந்து தொலைக்கப் போகுது.

ஹேமா said...

//ஆகாயமனிதன்.. said...
உன்ன பெத்ததுக்கு கால் கிலோ அரிசிய பெத்துஇருக்கலாம் உங்கம்மா..
நாங்க பொங்கியாவது சாப்பிடிருபோம்................//

அதானே நல்லா சொன்னீங்க.

Mahesh said...

பீரு ஒரே அக்கப்போரா ஆயிருச்சா? ஆனா நல்ல கதை விடறீங்க... நடத்துங்க... நடத்துங்க... :")))

ராஜ நடராஜன் said...

நெருப்பு நரிக்கும் எக்ஸ்புளோரருக்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு.ஒரே நேரத்தில் இரண்டு மடிக்கணினியில் வேலை செய்யும் சங்கடத்தில் நெருப்பு நரியில் தெரியும் அமெரிக்காவில் பீர் அடிக்காதீங்க தலைப்பு எக்ஞ்புளோரரில் அமெரிக்காவில் பீர்
அடிக்காதிங்க ன்னு மயக்கம் போட்டு தெரியுது.நான் அமெரிக்காவில் அடிக்காதீங்க புதுசு போலன்னு திரும்ப வந்துட்டேன்:)

வேத்தியன் said...

நான் அரை பீர் அடிச்சாலே அரை நாள் சலம்புவேன், அன்னைக்குன்னு பார்த்து ஒரு பீர் அடிச்சுபுட்டேன்.அது தலை சுத்தி, வாந்தி வரவழைச்சு விட்டது.//

இது தேவையா ???
:-)

வேத்தியன் said...

அதிலே வெள்ளையம்மா நிறம் குறைந்து பளுப்புஅம்மவா மாறிட்டங்க //

ஓஹோ...
சூப்பர்ங்க...
:-)

வேத்தியன் said...

மருத்துவர் ஒருவர் வந்து " நீங்க பீர் குடிச்சு இருக்கீங்க, அதான் வாந்தி எடுத்து இருக்கீங்க"
நான் அதை தானுங்க நான் முதல்லே இருந்தே சொன்னேன்.//

:-))))

வேத்தியன் said...

அமெரிக்கா மருத்துவம் நவீனமானதுதான், அதனாலேவோ என்னவோ அதுக்கு விலையும் ரெம்ப அதிகம்.//

ஆமா ஆமா...
:-)
ஒருக்கா நம்ம கடைக்கு வந்து ஒரு லுக்கை விட்டுட்டு போறது...

Unknown said...

//அடுத்த வாரம் ஒரு நாற்பது பில் வந்தது, அதிலே 911 ஆம்புலன்ஸ், மருத்துவர்,மருத்துவமனை, ஸ்கேன் செலவு மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேத்து 40 ஆயிரம் டாலர் பில் வந்தது.//

ஹஹஹஹா.... அமெரிக்காவுல தங்கம் தங்கமா மருத்துவமனையில கவனிக்கிறது, இதுக்குதான் நண்பரே :)

S.R.Rajasekaran said...

\\\உன்ன பெத்ததுக்கு கால் கிலோ அரிசிய பெத்துஇருக்கலாம் உங்கம்மா..
நாங்க பொங்கியாவது சாப்பிடிருபோம்................\\\


அப்புறம் சாம்பார் ,பொரியல்,அவியலுக்கு யாரு, யாரு அம்மாகிட்ட கேக்கலாம்

சின்னப் பையன் said...

:-))))))))

அத்திரி said...

அண்ணாச்சி உண்மையிலே நீங்களும் என்ன மாதிரிதானா????????அவ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்

அத்திரி said...

//எனக்கு இந்த பெண்ணை விட்டால் வாழ்கையிலே கல்யாணமே நடக்காதுன்னு நல்லா தெரிஞ்சதாலே ஒரு முரட்டு சத்தியம் பண்ணி தாலிய கட்டியாச்சு//

விதி வலியது,,,,,,,,,,

RAMYA said...

//
கல்யாணத்திற்கு முன் தண்ணி அடிகிறதை விடைலைனா கல்யாணம் இல்லன்னு சொன்னதுனாலே, எனக்கு இந்த பெண்ணை விட்டால் வாழ்கையிலே கல்யாணமே நடக்காதுன்னு நல்லா தெரிஞ்சதாலே ஒரு முரட்டு சத்தியம் பண்ணி தாலிய கட்டியாச்சு.
//

அப்போ அங்கே சத்தியம்
சக்கரை பொங்கல் ஆனாதா?

அது சரி பாவம் தங்கமணி.

RAMYA said...

//
நான் அரை பீர் அடிச்சாலே அரை நாள் சலம்புவேன், அன்னைக்குன்னு பார்த்து ஒரு பீர் அடிச்சுபுட்டேன்.அது தலை சுத்தி, வாந்தி வரவழைச்சு விட்டது.
//

இப்பவும் பாவம் தங்கமணி
ஆஹா என்னா அருமையான சலம்பல்!!!

RAMYA said...

//
தங்க்ஸ்க்கு என்ன செய்யுறதுன்னு தெரியாம போனை எடுத்து நம்பர் போட்டாள், அடுத்த முனையில் உள்ளவரிடம்

"என் புருஷன், வாந்தி எடுக்கிறார்..வாந்தி எடுக்கிறார்".


போன் வைத்த அடுத்த 2 வது நிமிஷம் வீட்டு முன்னே ஆம்புலன்ஸ், போலீஸ் கார் எல்லாம் வந்தது, அந்த ஏரியாவையே சுத்தி போலீஸ் பட்டாளங்கள் வந்தது.அப்பத்தான் எனக்கு புரிந்தது அவள் 911 க்கு போன் பண்ணி இருக்கிறாள்.

//

அதுதான் சொன்னேனே தங்கமணி ஒரு அப்பாவின்னு.

இப்படி எல்லாம பயமுறுத்துவது???

RAMYA said...

//
நேர உள்ளே வந்த ஒரு ஆபிசர் நான் வாந்தி எடுத்ததை பார்த்து என்னை நேர மருத்துவ படுக்கையிலே படுக்க வைத்தார்.உடனே திபு...திபு உள்ளே வந்த ஆபிசர் எல்லாம் என் மனைவியிடம் எதோ விசாரணை பண்ணினார்கள், இதற்குள் அங்கு வந்த பெண் போலீஸ் வெள்ளையம்மா என்னை ஆம்புலன்ஸ் வண்டியிலே ஏற்றி விட்டார்கள்.

//

அதானே எங்கேடா வெள்ளையம்மாவை
காணோமேன்னு வந்துட்டாங்களா !!!

RAMYA said...

//
அந்த வெள்ளையம்மா என்னை பார்த்து "டோன்ட் வொரி ஹனி"நான்,"என் பேரு கனி இல்லை, நச" ன்னு முடிக்கலை அவங்க மேல வாந்தியபிசேகம் பண்ணி அவங்களை நனைச்சுபுட்டேன்,அதிலே வெள்ளையம்மா நிறம் குறைந்து பளுப்புஅம்மவா மாறிட்டங்க
//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
அருமை அருமை அருமை!!

RAMYA said...

//
" நான் குடிச்சேன், அதான் வாந்தி,இது பித்த வாந்திதான்" யாரும் காது கொடுத்து கேட்க்கலை, ஏற்கனவே நான் வாந்தியபிசேகம் பண்ணின வெள்ளையம்மா போலீஸ் அதிகாரியை எல்லோரும் பார்த்த்தினாலே என் பக்கம் யாருமே வரலை, ஒருத்தர் வந்து மட்டும் ரத்தம் எடுத்துட்டு போனாரு

//

ஐயே!! யாரு வருவா பாவம் வெள்ளையம்மா நொந்து போயிருப்பாங்க.

RAMYA said...

//
அப்புறமா இதயம், இல்லாத மூளை ஒன்னு விடாம ஸ்கேன் பண்ணினார்கள், அதற்குள் ரத்த சோதனை முடிவும் வந்தது, எல்லோரும் ௬டி, ௬டி பேசினாங்க, தலையை தூக்கிப்பார்த்த எனக்கே கொஞ்சம் பயம் வந்தது, உண்மையிலே தமிழ் படத்திலே வார மாதிரி ஏதும் புது வியாதியா இருக்குமோ?

//

எல்லாம் பத்திரமா இருக்குதா ???

RAMYA said...

//
ஒத்தை பீர் குடிச்சதுக்கு உடம்பு பூரா ஆராய்ச்சி பண்ணுராங்கலேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்
//

அவங்களுக்கு தான் உண்மை தெரியாதே
அவங்களோட நேரமும் வீண்.

வெள்ளையம்மா துணி பளுப்பாகிப்போனதும் வீண்.

RAMYA said...

//
அடுத்த வாரம் ஒரு நாற்பது பில் வந்தது, அதிலே 911 ஆம்புலன்ஸ், மருத்துவர்,மருத்துவமனை, ஸ்கேன் செலவு மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேத்து 40 ஆயிரம் டாலர் பில் வந்தது.

தங்க்ஸ் பயங்கர குசியாகி "ஒரு பீர்க்கு 40 ஆயிரம் டாலர் செலவு செய்த முதல் ஆள் நீங்க தான்" ன்னு சொன்னங்க.

//

பில் கட்டினீங்களா இல்லையா??

RAMYA said...

//
நான் "இதெல்லாம் இன்சூரன்ஸ்ல கொடுப்பாங்க" ன்னு சொன்னேன். ஒரு வில்லச்சிரிப்பு சிரிச்சு புட்டு, அவனும் பில் அனுப்பி இருக்கான், இதுக்கு எல்லாம் நாங்க பணம் கொடுக்க முடியாதுன்னு, நீங்க உங்க கை காசு தான் கொடுக்கணும் ன்னு சொல்லி அவன் அனுப்பி இருந்த கடிதத்தை காண்பித்தார்கள்.
//

இவ்வளவு வெள்ளையா இருக்கீங்க
சலம்பல் பண்ணது நீங்க
இன்சூரன்ஸ் அதுக்கு பில் பணம்
கொடுப்பாங்களா?

RAMYA said...

//
மஞ்ச நோட்டீஸ்சும் கொடுக்க முடியாம, பெயில் அவுட் கிடைக்காம இன்னும் காசு கட்டிக்கிட்டு இருக்கேன்,இப்பெல்லாம் பீர் ன்னு எழுதினாலே படிக்கிறது ௬ட கிடையாது.

//

இதுக்கு போயி 40 ஆயிரம் டாலர் செலவு செய்த முதல் ஆளு நீங்களாத்தான் இருக்கும்.

RAMYA said...

சும்மா சொல்லுங்க இதுவும் கனவுதானே
உண்மையா????????????

வல்லிசிம்ஹன் said...

நம்பிட்டோம்:)

கல்கி said...

40000 $ க்கு பீர் சாப்பிடவன்னு உங்கள வரலாறு பெருமையா பேசும்ணே... :)

Arasi Raj said...

அம்மாடியோவ்.....ஒரு பீர் அடிச்சதுக்கு இந்த பாடா?..அம்மணி இருந்தாலும் இப்டி பழி வாங்கிருக்க வேண்டாம் .

நல்லா வேலை பில்லைப் பத்தி சொன்னீங்க .....ஒரு நாள் கடைக்கு போயிருந்தப்போ நிலா என் காத்து கம்மலை எடுத்து வாயில போட்டு choking ஆகி....கடைக்காரன் 911, EMS எல்லாம் கூப்டுட்டான்....எங்க அம்மா கூட இருந்ததுனால முதுகு தடவி விட்டு அப்டி இப்டின்னு கொஞ்ச நேரத்துல இந்த வாயாடி கம்மலை மெதுவா துப்பிட்டா....அப்புறம் எல்லாருக்கும் மறுபடி போன் பண்ணி வேண்டாம்னு சொல்லிட்டோம்....நல்லா வேலை இல்லன்ன இன்னும் நானும் பில் கட்டிட்டு இருக்கணுமோ

வில்லன் said...

இது எப்ப நடந்துச்சு எனக்கு தெரியாம???????????

ப்ரியமுடன் வசந்த் said...

இம்புட்டு பேர் பீர் குடிப்பாங்க என்று அறிய வைத்த தாங்கள் வாழ்க