Tuesday, May 11, 2010

சூப்பு சுந்தரி

மேற்கு கே.கே நகர் அமுதம் பேருந்து இறக்கத்திலே இறங்கி கைக்கான் குப்பம் விலாசத்தை வைத்து போகும் வழியிலே விசாரித்து கொண்டு சென்றேன்,  நண்பன் தங்கி இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்புக்கு முன் வந்து, அருகிலே இருந்த டீ கடையிலே விசாரித்து உறுதி செய்த பின், அவரிடம் டீ கொடுக்க சொன்னேன்.

டீ குடித்து விட்டு 100 ரூபாயை நீட்டினேன், கடைக்காரர் என்னிடம் சில்லறை இல்லை, டீ குடிக்க நூறு கொடுத்தா எப்படி, சில்லறை இருந்தா கொடுங்கன்னு சொன்னார்.

"வச்சிகிட்டா வஞ்சகம் பண்ணுறேன், என்கிட்டே சில்லறை இல்லை"

"என்கிட்டயும் இல்லை"

"நான் அப்புறமா வந்து தாரேன்" ன்னு சொன்னவுடனே, எதோ வாய்க்குள்ளே முணுமுணுத்து விட்டு உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து ஒரு இளம் பெண் வந்தாள்.

என்னோட கோலத்தை பார்த்து விட்டு என்ன நினைத்தாளோ, எனக்கு பக்கத்திலே இருந்தவரிடம் நீங்க தானே 100 ரூபாய் கொடுத்தது, அவர் பதில் சொல்லும் முன் நான் "நான் தான் கொடுத்தேன்", அவள் என்னை நம்பின மாதிரி தெரியலை, அருகிலே இருந்தவரிடம் விசாரித்து விட்டு மறுபடியும் உறுதி செய்து விட்டு என்னிடம் சில்லறையை கொடுத்தாள்.

சில்லறை வரலையே என்கிற கவலையிலே அவளை கவனிக்க மறந்து விட்டேன், வந்தும், வாங்கியதை மறந்து, கொடுத்தவளை கவனித்தேன்,உலக அழகியா இல்லாவிட்டாலும், உள்ளத்தை கவரும் அழகிதான், இப்படி யோசித்து கிட்டு இருக்கும் போதே உள்ளே இருந்து வெளிய வந்தவர், அவளிடம் வேற பாசையிலே பேசின மாதிரி இருந்தது, அவங்க பேசுறது மலையாளமுனு அப்புறமா தெரிஞ்சது, எனக்கு மலையாளப் படம் பரிச்சயம் ஆனது எல்லாம் அஞ்சரைக்குள்ள வண்டி, அவனோட ராவுகள் போன்ற கலை ஆர்வம் மிக்க கருத்தாழம் செறிந்த படங்கள் வழியாத்தான்.

அன்றைக்கு நூறு ரூபாய் கொடுத்து சில்லறை வாங்கியவன், அந்த சில்லறைகள் காலி ஆகும்  வரை சேட்டன் கடையிலே தான் டீ குடித்தேன், வேலை தேடி அலைந்த நேரம் போக மீத நேரம் சேட்டன் கடையை குட்டி போட்ட பூனை மாதிரி சுத்திகிட்டு வந்தேன், சேட்டன் கடையிலே எனக்கு பிடிச்சது சூப்பு தான், ஏன்னா சூப்பு சுந்தரி கையாலே கிடைக்கும். அவளைப் பார்க்க வந்து சூப்பு சாப்பிட்டே சீக்கிரம் சில்லறை தீர்ந்து விட்டது, சில்லரையோட சுந்தரியைப் பற்றி சிலபல விசயங்கள் தெரிந்து கொண்டு நல்ல அறிமுகம் ஆனேன்.நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய விசயங்கள் பேசினோம், ஒரு நாள் இப்படித்தான் என்னிடம்

"முகிலன் உங்க பேருக்கு என்ன அர்த்தம்?"

"முகில்ன்னா மேகம், குளிர்ந்தா மழையாவேன்"

"உங்க விருதுநகர் கந்தக பூமியாமே மழையெல்லாம் பார்க்கிறதே இல்லையாமே, ஊரிலே தான் மேகமும்,மழையும் இல்லை, பேரிலே யாவது இருக்கட்டுமேன்னு வச்சி இருக்கீங்களோ?" அப்படின்னு சொல்லிட்டு நமட்டு சிரிப்பு சிரிச்சா

கண்ணாயிரமுனு பெயரு இருந்தா ஆயிரம் கண்ணு இருக்கனுமுன்னு அர்த்தம் இல்லைன்னு சொல்லலாமுன்னு நினச்சேன், ஆனால் அவளோட சிரிப்பிலே சின்னா பின்னமாகிப் போன நான், ௬ட கொஞ்ச நேரம் கலாய்க்க மாட்டாளா என்று ஆர்வமே வந்தது.இப்படி எங்களுடைய சம்பாசனைகளிலே பெரும்பாலும் என்னையை கலாய்த்து சந்தோசப்படுவாள்.அவளோட சந்தோசத்துக்காக சோறு தண்ணி இல்லாம எவ்வளவு நாள் வேணுமுனாலும் பட்டினி கிடக்கலாமுன்னு தோணும்.அவளைப் பார்த்து சம்பந்தம், சம்பந்தம் இல்லாம பேசுறதாலே என்னை பிதற்றுற.. பிதற்றுற.. அந்த ஞாபகம் இன்னிவரைக்கும் இருக்கு.

சென்னை வந்து இரண்டு மாதம் ஆனது வேலை கிடைக்கவில்லை,கையிலே இருந்த காசும் காலியானது.காசு கொடுத்து டீ கொடுக்கும் வரை புன்முகத்தொடு வரவேற்ற சேட்டன், கையிலே காசு இல்லாம கடனா டீ வாங்கி குடிச்ச ரூபாயை திருப்பி தர வழியில்லாமல் போனதாலே என் மேல எரிச்சலை காட்டினர்.

ஆரம்பத்திலே அடக்கி வாசித்தாலும், கொஞ்ச நாளல்ல எங்களை கடை பக்கம் வர விடுவதில்லை, நான் செல்லும் முன்னே

"காசு இருந்த கடைக்குள்ளே வந்து ஓசி பேப்பர் படி, இல்லைனா இங்கே வர வேண்டாம்"

சேட்டன் டீ என்கிற பெயரிலே போடுகிற வெண்ணி தண்ணீர் குடிக்க நான் போகலைன்னு அவனுக்கு தெரியுமா?
வேற வழி இல்லாம சேட்டன் கடைக்கு போக முடியலை, இருந்தாலும் மாலையிலே எங்கேயாவது தூரத்திலே இருந்து சூப்பு கொடுக்கும் சுந்தரியையும் பார்த்து கொள்வேன்.சில சமயங்களில் என்னையை பார்த்து சிரிப்பாள். அதை அவள் அருகிலே இருந்து ரசிக்க முடிய வில்லையே என்று ஆத்திரமாக வரும், இவ்வளவுக்கும் காரணமான சேட்டன் மேல கொலை வெறி கோபத்தை வளர்த்தேன்.(இதைப் படிச்சிட்டு உங்களுக்கும் கொலைவெறி கோபம் வந்தா நீங்க இலக்கியவாதி)

என்னோட கோபத்திற்கு பலம் சேர்கிற மாதிரி முல்லை பெரியாறு அணைப் பிரச்சனையும் வந்தது, சேட்டனுக்கு எப்படியாது தொல்லை தரணுமுன்னு முடிவுக்கு வந்து விட்டேன்.பல யோசனைகளை வந்தாலும், அவனோட கடைக்கு சேதம் ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன்.

ஒரு நாள் இரவு இரண்டாம் ஆட்டம் படத்திற்கு போய்விட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்திலே சேட்டன் கடைக்குள் புகுந்து, வாங்கி வைத்து இருந்த மண்எண்ணெயை கடைக்கு வெளியே கட்டி இருந்த தட்டியிலே கொஞ்சம் கொட்டி, மீதம் இருந்ததை அடுப்புக்கு கீழே வைத்து பத்த வைத்தேன், இரண்டும் நன்றாக தீப்பிடிக்கும் மட்டும் மறைவிலே இருந்து பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.

அதி காலையிலே எழுந்து நான் வைத்த தீ கொழுந்து விட்டு எரியுதான்னு உறுதி செய்ய ஆர்வமாக வந்தேன். கடை முக்கால் வாசிக்கு மேல எரிந்து சாம்பல் ஆகி இருந்தது, பக்கத்திலே வீடுகள் ஏதும் இல்லாததாலே தீ பரவவில்லை, என்னை கரித்து கொட்டிக்கொண்டு சந்தோசமாக இருந்த சேட்டன் சோகம் கலந்த முகத்தைப் பார்த்ததிலே எனக்கு திருப்தி.அன்று மாலையிலே சேட்டன் வைத்து இருந்த லட்ச ரூபாயும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது என்று தெரிந்து கொண்டேன்.இரட்டிப்பு சந்தோசம் ரெம்ப நாளைக்கு அப்புறமா மனதுக்குள்ளே.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் சுந்தரியை தெருவிலே சந்தித்தேன், ரெம்ப கவலையா இருந்தா, அவங்க திரும்பவும் கேரளாவுக்கே போறதாகச்
சொன்னாள், நான் வச்ச தீ இவ்வளவு தூரம் பத்தி எரியுமுன்னு எதிர் பார்க்கலை. பழைய மாதிரி என்னை கலாய்க்க வில்லை. கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பு முன்

"முகிலன், இது இனிமேல எனக்கு தேவைப் படாது, நீங்க வச்சிகோங்க" என்று ஒரு காகித உறையைக் கொடுத்தாள்.

அதை வாங்கி நான் பிரிப்பதற்குள், அவள் சென்று விட்டாள். அதை வேகமாகப் பிரித்துப் பார்த்தால்

நான் முதல் நாள் கொடுத்த, அதே நூறு ரூபாய் நோட்டு, அதன் வெள்ளைப் பகுதியிலே, முகிலன், சுந்தரி என்று இதய அடைப்புக்குள், என்னை அறியாமலே கலங்கிய கண்களின் துளிகள் இரண்டு காகித இதயத்தை அழித்து கொண்டு இருந்தது.

பொறுப்பு அறிவித்தல் : ஆட்டோ அனுப்ப முகவரி, முகிலனின் கடையிலே இருக்கு, தாராளமா பயன்படுத்துங்க, நான் ஒண்ணும் தப்பா நினைச்சிக்க மாட்டேன்.


30 கருத்துக்கள்:

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு.

Anonymous said...

இது முகிலனை கலாய்க்கவா :)

Anonymous said...

//பொறுப்பு அறிவித்தல் ://

இது எல்லாம் என்னது தளபதி புதுசா !!!!
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு நல்லாவே இல்லை :)

நசரேயன் said...

//சின்ன அம்மிணி said...
//பொறுப்பு அறிவித்தல் ://

இது எல்லாம் என்னது தளபதி புதுசா !!!!
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு நல்லாவே இல்லை :)
//
பாராட்டு விழா எடுப்பீங்களா?

Anonymous said...

எடுத்துட்டாப்போச்சு

ELIYAVAN said...

Enda Sarae,
Your title is just like Sarojadevi's story "Sooththu Sundari"

நசரேயன் said...

//Enda Sarae,
Your title is just like Sarojadevi's story "Sooththu Sundari"//

இப்படித்தான் சரியா எழுதி இருக்கிறதை தப்பா படிக்கணும்

Chitra said...

:-) ha,ha,ha,ha....

ஈரோடு கதிர் said...

//அவங்க பேசுறது மலையாளமுனு அப்புறமா தெரிஞ்சது//

ம்ம்ஹூம் நம்ம ஊர்ல ஒரு வெள்ளக்காரனாவது டீக்கடை வைக்கிறானான்னு பாருங்க ((:

T.V.ராதாகிருஷ்ணன் said...

ha..ha.haa

vasu balaji said...

சின்ன அம்மிணி said...

// ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு நல்லாவே இல்லை :)//

அந்த குறையெல்லாம் வைக்கவே மாட்டாரு. அம்புட்டு நல்லவருங் அம்மிணி.
1.காலி ஆகும் சேட்டன் (வரை மிஸ்ஸிங்)
2.முகில்ன்னா
3.சேறு தண்ணி இல்லாம
4.என்னை பிதற்றுற.. பிதற்றுற.. அந்த ஞாபகம் (என்னாது இது அண்ணாச்சி)
5.நாளல்ல
6.இருந்த கடைக்குள்ளே
7.வெண்ணி
8.மண்எண்ணெய்

இம்புட்டு தப்பு விட்டுபோட்டு

நசரேயன் said...


பாராட்டு விழா எடுப்பீங்களா?//

என்னா ஒரு கான்ஃபிடன்ஸ்:))

vasu balaji said...

எளக்கியம் மேல அப்புடி என்ன வாய்க்கா வரப்பு தகராரு. ஃப்ளைட்ல அங்க இங்க அசையமுடியாம கொமட்டுல குத்துவாங்கிட்டே வரணும்னு ப்ளானா?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நன்னா எழுதுறேள் நசரேயன்!

சாந்தி மாரியப்பன் said...

//ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு நல்லாவே இல்லை//

@ அம்மிணி, ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுபிடிக்கிறதுக்காகவே படிக்கிற நம்மள தளபதி ஏமாத்த மாட்டார். சாம்பிள் இதோ...

//அவளோட சந்தோசத்துக்காக சேறு தண்ணி இல்லாம எவ்வளவு நாள் வேண்டுமானாலும் பட்டினி//

எப்பூடி?.....

Anonymous said...

//பாராட்டு விழா எடுப்பீங்களா?//

என்னா ஒரு கான்ஃபிடன்ஸ்:))//

நசரேயன் பதிவு படிச்சு ஸ்பெல்லிங் மிஸ்டேக்னா என்னான்னு மறந்து போயிடுச்சு போல இருக்குங்க வானம்பாடி ஐயா.

க.பாலாசி said...

//ஆட்டோ அனுப்ப முகவரி, முகிலனின் கடையிலே இருக்கு, தாராளமா பயன்படுத்துங்க, நான் ஒண்ணும் தப்பா நினைச்சிக்க மாட்டேன்.//

என்னா வில்லத்தனம்....

//ஏன்னா சூப்பு சுந்தரி கையாலே கிடைக்கும். அவளைப் பார்க்க வந்து சூப்பு சாப்பிட்டே சீக்கிரம் சில்லறை தீர்ந்து விட்டது //

தீராதாபின்னே...கொடுத்தது யாரு....சூப்பு சுந்ந்ந்ந்ந்ந்தரியாச்சே..........

ராஜ நடராஜன் said...

//இது எல்லாம் என்னது தளபதி புதுசா !!!!
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம பதிவு நல்லாவே இல்லை :)//

சேறு தண்ணி

பா.ராஜாராம் said...

:-))

அட்டகசம். ச்சே.. அட்டகாசம்!(பின்னூட்டங்களும்)

விடுங்க,

சின்ன அம்மிணி, பாலா சார் மேல கோஸ்...ச்சே..கேஸ் போட்றலாம் நசர். :-)

சந்தனமுல்லை said...

ஆனாலும் முகிலனை இவ்ளோ டேமேஜ் பண்ணியிருக்க வேணாம்...LoL!

சந்தனமுல்லை said...

மத்த படி...உங்க அக்மார்க் போஸ்ட்...ஸ்பெல்லிங் மிஸ்டேக்..நான் கவனிச்சதில்லியே ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :-))

நசரேயன் said...

சின்ன அம்மணி, ஒரு பின்னூட்டம் போட்டு, தூங்கிகிட்டு இருந்த சிங்கங்களை எல்லாம் எழுப்பி விட்டுடீங்க, என்னைய கடிச்சி குதறிபுட்டாங்க, ஏன் இந்த கொலைவெறி ?

பாராட்டை பத்தி பேசுனதுக்கே இப்படின்னா?

பாராட்டு விழா நடந்தா ஆளை காலி பண்ணிடுவாங்களோ?

நேசமித்ரன். said...

இடுகையும் பின்னூட்டங்களும் சபாஷ்

ஹேமா said...

நசர்....ஒண்டும் யோசிக்காதேங்கோ.நான் சொல்லித் தாறன் நல்ல வடிவான தமிழ்.
எல்லாரும் உங்களை
நக்கலடிக்கினம் பாருங்கோ.

இதில வேற ஆட்டோவை முகிலனுக்கு அனுப்பணும்.நீங்க ஒண்ணும் தப்பாவும் நினைக்கமாட்டீங்க.
அப்பாடி...எப்பிடியப்பு இப்பிடி !

நசரேயன் said...

//நசர்....ஒண்டும் யோசிக்காதேங்கோ.நான் சொல்லித் தாறன் நல்ல வடிவான தமிழ்.
எல்லாரும் உங்களை
நக்கலடிக்கினம் பாருங்கோ.

இதில வேற ஆட்டோவை முகிலனுக்கு அனுப்பணும்.நீங்க ஒண்ணும் தப்பாவும் நினைக்கமாட்டீங்க.
அப்பாடி...எப்பிடியப்பு இப்பிடி !
//

கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சிட்டாங்க ஹேமா

Mahesh said...

கனவா நனவா????

எல்லாஞ்செரி... கெனாவுல துக்ளக் தெரியறதில்லையோ?? நெம்ப நாளாச்சு நம்மூட்டுப் பக்கம் வந்து... :(

Jerry Eshananda said...

ஆட்டோ சர்வீசுக்கு போயிருக்குபா

அன்புடன் மலிக்கா said...

என்னமோ நடக்குது. நடக்கட்டும் நடக்கட்டும்..

அன்புடன் நான் said...

நீங்க இப்படித்தான்... மலையாளம் கத்துகிட்டிங்களா???

பதிவு ரசனையா இருக்கு. பாராட்டுக்கள்.

தமிழ் மதுரம் said...

உலக அழகியா இல்லாவிட்டாலும், உள்ளத்தை கவரும் அழகிதான்//


ஆஹா... நகைச்சுவை வளம் கலக்குது..

தமிழ் மதுரம் said...

அவளோட சந்தோசத்துக்காக சோறு தண்ணி இல்லாம எவ்வளவு நாள் வேணுமுனாலும் பட்டினி கிடக்கலாமுன்னு//
இது கொஞ்சம் ஓவர்..


சூப்பு சுந்தரி ஆரம்பத்தில் நகைச்சுவையாக நகர்ந்து சென்றாலும் இறுதியில் உள்ளத்தை உறுத்தும் வகையில் கண்ணீரோடு முடித்து விட்டீர்கள்..


சூப்பு சுந்தரி! வாழ்வில் கலந்து விட்ட வரலாற்றின் நிஜப் பதிவு.