இந்திரலோகத்தில் திலகங்கள்
மக்கள் எல்லாரும் வரிசையா பெட்ரோல் வங்க நிக்காங்கலோனு ஒரு சந்தேகமா போன அவங்க எமன் கிட்ட முதல் தகவல் அறிக்கை வாங்கி அதை வைத்து இந்திரன் கொடுத்த அழைப்பு ஆணை (summon) காரணமாக அவரிடம் சார்ஜ் சீட் வாங்க போறாங்க. நடிகர் திலகமும் அந்த கூட்டதுல ஒருவர்.என்னடா அவரோட அறிமுகம் இப்படி சப்பையா இருப்பதற்கு நான் பொறுப்பு இல்ல. அவரு எப்போதும் ஆடம்பர அறிமுகத்தை விரும்புறது இல்ல. அவரு மனசு என்னை சட்டியிலே போட்ட மனுஷன் மாதிரி தக..தக ன்னு கொதிச்சிகிட்டு இருக்கு. கூட கொஞ்ச நாள் இருந்து கலை சேவையும் பண்ணி நாலு காசு பாக்குறதுக்குள்ள பொசுக்குனு இழுத்துட்டு வந்துட்டான் படுபாவி எமன்,இப்படி எமன் மேல கொலை வெறி கோபத்துல்ல இருக்காரு. அவரை பாத்த நம்ம ஊருக்காரங்க வழக்கம் போல கை எழுத்து வேட்டையில இறங்கிட்டாங்க.ஊருல தான் நம்ம பெயலுக நம்மை பாக்க ரெம்ப கஷ்ட படுவாங்க.இங்க பயப்பட என்ன இருக்கு எண்ணெய் சட்டியை தவிரனு என நினைத்து அவரும் சளைக்காம கையெழுத்து போடுறாரு எமன் அந்த வழியாக வாராரு, அவரு பாஸ்போர்ட்,விசா, டிக்கெட் ஏதும் இல்லாம கூட்டிட்டு வந்த எல்லோரையும் பார்த்து கொண்டே பெருமையை நடந்து வாராரு. பூமியிலெ என்ன பஞ்சம் வந்தாலும் மக்கள் பஞ்சம் வந்ததேஇல்லை. கூட்டமா நிக்கவன்களை உருட்டி மிரட்டிகிட்டு நம்ம மாமுல் போலீஸ் மாதிரி போறாரு.நடிகர் திலகம் கிட்ட நின்ன கூ ட்டத்தை ஒரு சின்ன தடி அடி நடத்தி கலைசுட்டாரு.அவரை தவிர எல்லாரும் ஓடி போய்ட்டாங்க, வழக்கம் போல எமன் கிட்ட நெஞ்ச நிமித்து நின்னாரு. அற்ப மானிட நீ திமிராக காட்டும் நெஞ்சை நிறுத்தியதே நான் என்று தெரியாதா? அதுவும் தெரியும் அதற்க்கு மேலும் தெரியும், அன்னை தன்ன இன்னுயிரை அவளறியாமல் எட்டி நின்று தட்டி பறிக்கும் கோழை. மக்களின் உயிரை தந்திரமாய் பறிக்க ஆலாய் பறக்கும் குள்ள நரி. மாலை இட்ட மணவாளனை மாய்த்து விட்டு எங்குல பெண்ணுக்கு வேசி பட்டம் கட்ட துடிக்கும் மதி கேட்டவன். உனக்கெல்லாம் மதி ஒரு கேடா.உனக்கெல்லாம் எம அதர்மன் என்றல்லவா பெயரிட வேண்டும்.உனக்கும் உன் வாகனத்துக்கும் ஒரு வித்தியாசம் கண்டுபிடித்தால் கோடி டாலர் கொடுக்கலாம்.இவை எல்லாம் தெரிந்த நானோ எமனுக்கு எமன். இப்படி மனோகார பாணியிலே தன் கோபத்தை வசனமாவே சொல்லிடாருகழுவுன பூசணிக்காய் மாதிரி இருந்த எமன் மூஞ்சு சூப்புன பனங்கொட்ட ஆச்சு. சுத்தி முத்தும் பாக்காரு எழுதி கொடுக்காம இப்படி அடவு கெட்டமாட்டாரே,அடுத்த கட்ட மிரட்டலை கொடுக்க "அடே அற்ப மானிடா" னு சொல்லி முடிகலை அதுக்குள்ளே நம்ம நடிகர் திலகம் "இரும்பில் வார்த்த உன் இதயத்தில் ஆயிரம் இடிகள் விழட்டும். இப்ப எமன் மூஞ்சு சூப்புன மாங்கொட்டை ஆகிடுச்சு. நல்ல நாளிலே இவர் வசனம் பேச ஆரமிச்சா நிறுத்த மாட்டாரே, என்ன செய்ய!!! சின்ன புள்ள மாதிரி தலை சொரியுரார்.இவரு வாயை கட்டலைன்னா நம்ம கையை கட்ட வச்சுருவாருஎன்ற முடிவோடு "அதிகமாக பேசிய மானிடா உனக்கு வாய் பூட்டு போடுகிறேன்" எவ்வளவோ பேரு மண்டையை போட வச்சி மண்ணுக்கு உரமாக்குனவரு , நடிகர் திலகம் போட்ட போடுல எமன் லேசா ஆடித்தான் போய்ட்டாரு. சுத்தி நின்ன நம்ம சனங்க எல்லாம் பந்தயம் கட்ட ஆரமிச்சிட்டாங்க யார் ஜெயிப்பா னு.கிரிக்கெட் மாதிரி மேட்ச் பிக்ஸ் பண்ண முடியுமான்னு ஒரு கும்பல் யோசிக்க ஆரமிச்சாச்சு. நமக்கு பிடிகாதவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா தெருவுல போற வார எல்லாருட்டையும் சொல்லி சிரிப்பா சிரிப்போம். இந்த உலகத்துக்கே பிடிக்காத ஆளுக்கு பிரச்சனைனா எப்படி இருக்கும். அதுதான் அங்கேயும் நடந்தது . "இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா" மேல இருந்த அரவாணிகள் இத பாடி கும்மி அடுச்சி குத்தாட்டம் போட்டாங்க . அவமானம் கோபத்தை உண்டாகும்,அந்த கோபம் சில சமயம் அவனையே கொல்லும், இல்லை அடுத்தவர்களை கொல்லும் இது மனிதர்களுக்கு, ஆனால் அரக்கர்கள் கோபம் அடுத்தவர் அழிவுக்கு என்பதை போல பதிலுக்கு பதில் பேசாமல் செய்கையில் இறங்கினார் கையை நல்ல மடக்கி நடிகர் திலகம் மூஞ்சில குத்த ஓங்குறாரு மூஞ்சு கிட்ட போன கை நுறு மைல் வேகத்துல திரும்பி வருது. ஆஜான பாகுவான ஒரு கை எமனுக்கு தடை உத்தரவு போடுது. அது யாருன்னு பாக்குறதுக்குள்ள எமன் வயத்துல ஒரே மிதி. நுறு இடி விழுந்த வலி எமனுக்கு எமன் கிட்னி கழண்டு போற அளவுக்கு அடிச்சவரை பாத்தவுடனே விசிலும், கத்தலும் எமலோகதிலே இருந்த எல்லோரோட காதை பதம் பாத்தது,சிலர் கட்டி இருந்த வேஷ்டி சட்டை எல்லாம் கழட்டி மேல எரிஞ்சு அவரோட அறிமுகத்தை கொண்டாடுறாங்க, கிழிஞ்ச பேப்பர் எல்லாம் மேல எரிந்து கிட்டத்தட்ட குப்ப தொட்டி ஆகிடுச்சு எமலோகம். மக்கள் திலகம் வாழ்க.. புரட்சி தலைவர் வாழ்க .. பொன்மன செம்மல் வாழ்க. ஒத்த அதிர்வு(resonance) அறிவியல் பாடத்திலே படித்திருக்கலாம், அதை நேரில் அங்கு பாக்கமுடிஞ்சது. இந்திரலோகம் நடுங்கியது அதுல இந்திரன் இருந்த நாற்காலி உடைஞ்சி கிழே விழுந்துட்டாரு. அங்கே வந்திருப்பது யார் என்பதற்கு விளக்கம் சொல்லவேண்டிய அவசியமே இல்ல .அவரோட தெய்விக சிரிப்பை மக்கள் பாத்து 20 வருஷம் ஆச்சு.அதனாலே என்னவோ வாழ்த்து அலை ஓயவே இல்லை. ரத்தத்தின் ரத்தங்களின் ஆர்வ அலையை அடக்காமல் புன்முறுவலோடு ரசித்தார் மக்கள் திலகம்.அவரை பாத்த நடிகர் திலகத்தின் உணர்ச்சி அலையை அடக்க முடியாமல் அவரை கட்டி இருக தழுவினார். இருவரின் கண்களிலும் கண்ணீர் அலை. இந்த கண்கொள்ள காட்சியை கண்ட இரு திலகங்களின் அலை கடலென திரண்ட ரசிகர்களின் சந்தோஷ அலை இந்திர லோகத்தின் கூ ரையை பிரித்து எரிந்தது.பூ உலகிலே கானுவத்கரிய இந்த காட்சி மேலுலக அதிசயமே. (இதுக்கு மேல எழுதினா யாரும் படிகமான்டீங்கனு தெரியும், இதோட முடிச்சாலும் என்ன சொல்ல வர்றாருன்னு கேட்கலாம், அதனால வேற வழி இல்லாம தொடரும்..) பொறுப்பு அறிவித்தல் : இது பழைய படம் திருப்பி போட்டு இருக்கேன்,இதோட தொடர்ச்சியான புது படம் கண்டிப்பா நாளைக்கு வரும்
மானிட உயிரை கன்னமிட்டு திருடும் உனக்கல்லவோ மரண தண்டனை கொடுக்க வேண்டும்.உன்னை இந்த உலகம் சாகும் வரை தூக்கிலிட வேண்டும்"
"அதற்குள் உன் கையை வெட்டி என் இரண்டாம் தாய் வீடாகிய இம் மேலோகமண்ணுக்கு உரமாகுகிறேன்.சிக்கிரம் வா... வா.. எருமையே"
23 கருத்துக்கள்:
ம்... நாளைக்கும் வரட்டும்!
பார்த்து.. ச்சி ச்சி படித்து விடுவோம்
அட்ரா சக்கை அட்ரா சக்கை....போட்டு கும்மு கும்முன்னு கும்மு
ஆமா...அங்க நம்ம சாவித்ரி பாட்டி, "ஷண்டாளா"-நு திட்டுற கண்ணாம்பாள் பாட்டி எல்லாம் பார்க்கலியா?
//இந்த கண்கொள்ள காட்சியை கண்ட இரு திலகங்களின் அலை கடலென திரண்ட ரசிகர்களின் சந்தோஷ அலை இந்திர லோகத்தின் கூ ரையை பிரித்து எரிந்தது.பூ உலகிலே கானுவத்கரிய இந்த காட்சி மேலுலக அதிசயமே.//
என்ன என்னமோ சொல்லி கலக்குறீங்க நண்பரே
//ஒத்த அதிர்வு(resonance) அறிவியல் பாடத்திலே படித்திருக்கலாம், //
கனவுலயும் படிச்சத்து தான் வரணுமா?
மக்கள் திலகம்
நடிகர் திலகம்
இவங்களோட நடிகையர் திலகம் வரலியா?
ஹா ஹா...
-/\- கும்பிடறேன் சாமியோவ்.
//எமன் மூஞ்சு சூப்புன பனங்கொட்ட ஆச்சு.
//
இந்த வரிகள் சர்ச்சைக்குள்ளாகலாம்.
//
பூமியிலெ என்ன பஞ்சம் வந்தாலும் மக்கள் பஞ்சம் வந்ததேஇல்லை
//
:0)))
அற்ப மானிட நீ திமிராக காட்டும் நெஞ்சை நிறுத்தியதே நான் என்று தெரியாதா?
அதுவும் தெரியும் அதற்க்கு மேலும் தெரியும், அன்னை தன்ன இன்னுயிரை அவளறியாமல் எட்டி நின்று தட்டி பறிக்கும் கோழை. மக்களின் உயிரை தந்திரமாய் பறிக்க ஆலாய் பறக்கும் குள்ள நரி. மாலை இட்ட மணவாளனை மாய்த்து விட்டு எங்குல பெண்ணுக்கு வேசி பட்டம் கட்ட துடிக்கும் மதி கேட்டவன். உனக்கெல்லாம் மதி ஒரு கேடா.உனக்கெல்லாம் எம அதர்மன் என்றல்லவா பெயரிட வேண்டும்.
பேசாம சினிமாக்கு டயலாக் எழுதபோகலாம் நீங்க என்ன ஒரு நடை....
அருமை
"அதற்குள் உன் கையை வெட்டி என் இரண்டாம் தாய் வீடாகிய இம் மேலோகமண்ணுக்கு உரமாகுகிறேன்.சிக்கிரம் வா... வா.. எருமையே"எவ்வளவோ பேரு மண்டையை போட வச்சி மண்ணுக்கு உரமாக்குனவரு , நடிகர் திலகம் போட்ட போடுல எமன் லேசா ஆடித்தான் போய்ட்டாரு.சுத்தி நின்ன நம்ம சனங்க எல்லாம் பந்தயம் கட்ட ஆரமிச்சிட்டாங்க யார் ஜெயிப்பா னு
அங்க கூட பந்தயமா
வாழ்க நம் மக்களின் கடமை உணர்வு
//அவரு மனசு என்னை சட்டியிலே
போட்ட மனுஷன் மாதிரி தக..தக ன்னு
கொதிச்சிகிட்டு இருக்கு.//
என்ன ஒரு உவமை...?
இடத்திற்கு தகுந்த உவமை சொல்லுரதில
உங்கள யாரும் அடிச்சிக்க முடியாது...
//பூமியிலெ என்ன பஞ்சம் வந்தாலும் மக்கள் பஞ்சம் வந்ததேஇல்லை//
கலக்கல் பஞ்ச்...
//அதுவும் தெரியும் அதற்க்கு மேலும் தெரியும், அன்னை தன்ன இன்னுயிரை அவளறியாமல் எட்டி நின்று தட்டி பறிக்கும் கோழை. மக்களின் உயிரை தந்திரமாய் பறிக்க ஆலாய் பறக்கும் குள்ள நரி. மாலை இட்ட மணவாளனை மாய்த்து விட்டு எங்குல பெண்ணுக்கு வேசி பட்டம் கட்ட துடிக்கும் மதி கேட்டவன். உனக்கெல்லாம் மதி ஒரு கேடா.உனக்கெல்லாம் எம அதர்மன் என்றல்லவா பெயரிட வேண்டும்.உனக்கும் உன் வாகனத்துக்கும் ஒரு வித்தியாசம் கண்டுபிடித்தால் கோடி டாலர் கொடுக்கலாம்.இவை எல்லாம் தெரிந்த நானோ எமனுக்கு எமன்.//
ஹா...ஹா...ஹா...டயலாக்ஸ் அருமை...
நகைச்சுவை உங்களுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது,நச்ரேயன்.
இடுகை செம :-)))!
//நமக்கு பிடிகாதவங்களுக்கு ஏதாவது பிரச்சனைனா தெருவுல போற வார எல்லாருட்டையும் சொல்லி சிரிப்பா சிரிப்போம். இந்த உலகத்துக்கே பிடிக்காத ஆளுக்கு பிரச்சனைனா எப்படி இருக்கும். அதுதான் அங்கேயும் நடந்தது .//
LOL!
ஹா..ஹா..ஹா...
படித்தேன் ரசித்தேன்...
:)))
அருமை!
இந்திரலோகத்தில் திலகங்கள் !!
தலைப்பே அட்டகாசம் போங்க :))
அட சந்திரலேகா இருந்தாங்களே அதெ மறந்துட்டீங்களா?
//எமன் மூஞ்சு சூப்புன பனங்கொட்ட ஆச்சு.
//
ஆஹா என்னாமா கனவுலே கூட கண்டிபுடிச்சிட்டீங்க :)
//
இந்த கண்கொள்ள காட்சியை கண்ட இரு திலகங்களின் அலை கடலென திரண்ட ரசிகர்களின் சந்தோஷ அலை இந்திர லோகத்தின் கூ ரையை பிரித்து எரிந்தது.பூ உலகிலே கானுவத்கரிய இந்த காட்சி மேலுலக அதிசயமே.
//
ஆஹா என்னமா ஒரு ரசனையான கனவுங்கோ :)
ஆஹா என்னமா ஒரு ரசனையான கனவுங்கோ :)
//
அவரு மனசு என்னை சட்டியிலே
போட்ட மனுஷன் மாதிரி தக..தக ன்னு கொதிச்சிகிட்டு இருக்கு.
//
அருமையான உவமானம் :))
அய்யோ நான் என் செய்வேன். இந்த அநீதியை கேட்க யாருமே இல்லையா? இந்த அபலையின் குறை தீர்க்க யாருமே இல்லையா? இந்த மேலோகத்திலும் நீதி செத்துவிட்டதா? தர்மம் மாண்டுவிட்டதா? அமாவாசை இருளில் வந்த அண்டங்காக்கையை போல இருண்ட நெஞ்சம் கொண்ட இந்த இரும்பு மனிதர்களை தட்டிக் கேட்போர் யாருமே இல்லையா?
--- இப்படியெல்லாம் கேக்க எந்த பழைய ந்ஃஅடிகையும் இல்லையா? கதையில இது இல்லாம டச் இல்லையேப்பா?
Post a Comment