இந்திரலோகத்திலே மக்கள் ஆட்சி
*********************************************************************************
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி கதை போல ஆனது எமன் கதை, எம்.ஜி.ஆர் சண்டை போட்டு ரெம்ப நாள் ஆனாலும் மனுஷனுக்கு பெலம் இன்னும் அப்படியே இருக்கு. கிழே விழுந்த இந்திரனும், அடி வாங்கி கிழே விழுந்த எமனும் இரு திலகங்களின் நிற்கும் இடத்திற்கு வாராங்க. எமன் நெளிஞ்சு வழிஞ்சு வாரதை பாத்த இந்திரன்
"எமனாரே வேட்டியிலே ஓனான் விழுந்தது போலே ஏன் அப்படி நெளிகிறீர்"
"என்ன மானிடர்களே இங்கு நடப்பதற்கு யார் பொறுப்பு?"
"நான் பொறுப்பு அல்ல எமனாரை கேளுங்கள்" மக்கள் திலகத்தின் பதில்.
"ஏன் உன் குரல் கம்மலாக இருக்கிறது "
"அதற்கும் நான் பொறுப்பு அல்ல, நீங்க எம்.ஆர் ராதாவை கேட்க வேண்டும்"
"என்ன ஆணவ பேச்சு""அதற்கும் நான் பொறுப்பு அல்ல, நீங்க பிரம்மனை அல்லவா கேட்க வேண்டும்."
எரிச்சலுடம் "உங்களுக்கு வாய் காது வரை நீள்கிறது."
இதற்கு பதில் மக்களிடம் இருந்து,"இதற்கும் அவர் பொறுப்பு அல்ல "
இதை எல்லாம் முன்னமே அனுபவப்பட்ட எமனார், இந்திரரே இவர்கள் பேசி ஜெயிப்பதை விட இந்த மேலோகத்தில் கஷ்டமான விஷயம் வேறு ஒன்றும் இல்லை,ஒருவன் பேசியே கொல்கிறான், ஒருவன் பேசாமலே கொல்கிறான்.
"அப்படியா, இதோ இவர்களை இப்போதே அழித்து விடுகிறேன் பார்."தனது கதாயுதத்தை சுழற்றி இரு திலகங்களை நோக்கி சுழற்ற மக்கள் திலகம் அதை பிடுங்கி அட்டையினால் செய்யப்பட்ட கதாயுதத்தை கையால் முறித்து கசக்கி போடுகிறார்.
"அண்ணே அட்டையை வச்சி நம்மளை எல்லாம் இவ்வளவு நாள் ஏமாத்தி இருக்காரு, நீங்க எப்படி இதை கண்டு புடிச்சிங்க?""தம்பி எனக்கு சினிமாவிலே நடிப்பை தவிர எல்லாம் தெரியும் என்பது நாடறிந்த விஷயம்.அதனாலே எனக்கு சுலபமா கண்டு பிடிக்க முடிச்சது"
ஆகா.. இன்னைக்கு இந்திரருக்கும் சங்கு ஊதிடுவாங்க போல தெரியுது, என்னையாவது ஒரு அடியோட விட்டுடாங்க, இவரை என்ன பண்ணபோராங்களோ என அடி விழுந்த எமனின் நினைவுகள்
மக்கள் திலகம் ஆயிரத்தில் ஒருவன் உடை வாளை எடுத்து ஒரு சுழற்று சுழற்ற இந்திரன் ஆடைகள் எல்லாம் அவிழ்ந்து விழுந்தன The Mask of Zorro மாதிரி. இந்திரனுடைய கோலம் அலங்கோலமானது கோவணத்துடன்.
இந்திரனுடைய கோலம் எல்லோருடையும் விட எமனுக்கு கடும் கோபத்தை உண்டு பண்ணியது.
"இந்திரரே கொடியில் போடுகிற கோவணம் எல்லாம் எப்படி காணாமல் போனது என்பது இப்போதல்லவா தெரிகிறது "
மக்கள் திலகம் தன் வாளை எமனுக்கு நேராக நீட்ட " என்னை விட்டுறுங்க நான் கோவணம் ௬ட கட்டவில்லை"நடிகர் திலகம் ரசிகர்களை பார்த்து "இந்திர லோகத்திலும் இனிமேல் மக்கள் ஆட்சி தான், அனைவரையும் சிறை பிடியுங்கள்"
மக்கள் திலகம் வாழ்க.. நடிகர் திலகம் வாழ்க என்ற ஆரவாரம் மேலோகம் முழவதையும் ஆட்கொண்டது.
"அண்ணே நீங்க நாடோடி மன்னனிலே தமிழ் திரைவுலகிலே புரட்சி செய்தீர்கள், பின்பு மக்கள் தலைவனாக புரட்சி செய்தீர்கள், இந்த இந்திர லோகத்திலேயும் உங்கள் திருக் கரங்களால் புரட்சி செய்து இருக்குறீர்கள், நீங்க இந்த அரியணையிலே ஏறி எங்களை ஆட்சி செய்ய வேண்டுமென உங்க ரசிகர் சார்பாகவும், என ரசிகர் சார்பாகவும் கேட்டு கொள்கிறேன்"
"அரியணை எனக்கு புதிது அல்ல, ஆனால் நீயே நடிப்பிலே பல அரியனைகளை கண்டும், மக்கள் பணிக்கு இன்னும் அரியணை ஏறவில்லை என்ற மனக்குறை எனக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தான், அந்த குறை நிறைவேறும் முன் உன்னை இங்கு அழைத்து வந்த எமனார்க்கும்,இந்திரனுக்கும் பாடம் புகட்டவே யாம் வந்தோம், இந்த அரியணை உனக்குரியது, நீயே இதற்கு தலைவன், ரத்தத்தின் ரத்தங்களாகிய ரசிகப் பெருமக்களின் வேண்டுகோளும் அதுவே" என ௬றி தான் கையிலே வைத்து இருந்த கிரிடத்தை நடிகர் திலகத்திக்கு அணிவிக்கிறார் மக்கள் திலகம்."
மக்கள் திலகம் வாழ்க, நடிகர் திலகம் வாழ்க என்ற கரவொலி அடங்க வெகுநேரம் ஆகிற்று
31 கருத்துக்கள்:
படிச்சுட்டேன் இதோ முழுவதும் படிச்சுட்டு வாரேன்!
கொன்ஞ்சமாதான் படிச்சிருக்கேன் ...........
இருங்க முழுவதுமா படிச்சுடறேன். ரெண்டு நாள் கனவா???
ஆப்பிஸ்ல தூங்குனா இப்படி தான் கனவு கனவா வருமாமே, உண்மையா??
கொர்.. கொர்ர்ர்ர்ர்ர்.. கொர்ர்ர்ர்ர்ர்
//எரிச்சலுடம் "உங்களுக்கு வாய் காது வரை நீள்கிறது."///
அப்போ அதுக்கு மேல??
இருங்க படிச்சுட்டு வரேன்.
//தம்பி எனக்கு சினிமாவிலே நடிப்பை தவிர எல்லாம் தெரியும் //
:-))))
ஐய்யோ 50 டைம்ஸ் படுசிட்டேன் .....
// உடை வாளை எடுத்து ஒரு சுழற்று சுழற்ற இந்திரன் ஆடைகள் எல்லாம் அவிழ்ந்து விழுந்தன The Mask of Zorro மாதிரி //
அய்யய்யோ .... இந்திரனுக்கு பப்பி சேம் ' ஆ இருக்குமே.......??
// மக்கள் திலகம் வாழ்க, நடிகர் திலகம் வாழ்க என்ற கரவொலி அடங்க வெகுநேரம் ஆகிற்று //
அவ்வளவு நேரம் தூங்குனீங்களா .....???
நல்லாருக்கு ......... ஆஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!!!!!
//
இந்திரலோகத்திலே மக்கள் ஆட்சி
//
இதெல்லாம் ஆரம்பிச்சுட்டாங்கள?
//
சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி கதை போல ஆனது எமன் கதை, எம்.ஜி.ஆர் சண்டை போட்டு ரெம்ப நாள் ஆனாலும் மனுஷனுக்கு பெலம் இன்னும் அப்படியே இருக்கு. கிழே விழுந்த இந்திரனும், அடி வாங்கி கிழே விழுந்த எமனும் இரு திலகங்களின் நிற்கும் இடத்திற்கு வாராங்க. எமன் நெளிஞ்சு வழிஞ்சு வாரதை பாத்த இந்திரன்
//
பாட்டு பாடினாரா, "ஆட்டு குட்டி முட்டையிட்டு ........: அந்த பாட்டுதானே :))
//
"எமனாரே வேட்டியிலே ஓனான் விழுந்தது போலே ஏன் அப்படி நெளிகிறீர்"
//
இது ரஜனி ஸ்டைல்!!
//
அவரின் பதிலை எதிர் பாராமல் நடந்தவற்றை அறிந்து கொண்ட இந்திரன் திலகங்களை பார்த்து
//
என்ன பார்வை! திட்டிட்டாரா ??
இதுல செயலலிதா அக்காவையே கானாமுங்கோவ்..............!!!!
//
"என்ன மானிடர்களே இங்கு நடப்பதற்கு யார் பொறுப்பு?"
//
ஐயோ ஐயோ இது என்ன கேள்வி ?
//
"நான் பொறுப்பு அல்ல எமனாரை கேளுங்கள்" மக்கள் திலகத்தின் பதில்.
//
சரியா சொன்னார், அவருதான் மக்கள் திலகமாச்சே :)
//
"ஏன் உன் குரல் கம்மலாக இருக்கிறது "
//
துக்கம் தொண்டையை அடைக்கின்றது
//
"அதற்கும் நான் பொறுப்பு அல்ல, நீங்க எம்.ஆர் ராதாவை கேட்க வேண்டும்"
//
ஆமாம் அவரும் பக்கத்துலேதான் நிக்கறாரு!
//
"என்ன ஆணவ பேச்சு"
//
ரொம்ப பேசறாரு போல ! விட்டா ஜிப்பு வச்சி தச்சிருவாரோ :)
//
"அதற்கும் நான் பொறுப்பு அல்ல, நீங்க பிரம்மனை அல்லவா கேட்க வேண்டும்."
//
அவருக்கு இன்னொரு பேரு இருக்கு லவ்டேல் மேடியை கேட்டா சரியாச் சொல்லுவாரு
//
ஆகா.. இன்னைக்கு இந்திரருக்கும் சங்கு ஊதிடுவாங்க போல தெரியுது, என்னையாவது ஒரு அடியோட விட்டுடாங்க, இவரை என்ன பண்ணபோராங்களோ என அடி விழுந்த எமனின் நினைவுகள்
//
அவரின் நினைவுகளுக்கும் இப்போ சங்கு ஊதிடுவாங்களே :))
//
மக்கள் திலகம் ஆயிரத்தில் ஒருவன் உடை வாளை எடுத்து ஒரு சுழற்று சுழற்ற இந்திரன் ஆடைகள் எல்லாம் அவிழ்ந்து விழுந்தன The Mask of Zorro மாதிரி. இந்திரனுடைய கோலம் அலங்கோலமானது கோவணத்துடன்.
//
மக்கள் திலகத்தை நீங்க மறக்கவில்லை என்பதிற்கு இது சரியான எடுத்துக் காட்டு!
//
இந்திரனுடைய கோலம் எல்லோருடையும் விட எமனுக்கு கடும் கோபத்தை உண்டு பண்ணியது.
//
இல்லையா பின்னே :))
//
நடிகர் திலகம் ரசிகர்களை பார்த்து "இந்திர லோகத்திலும் இனிமேல் மக்கள் ஆட்சி தான், அனைவரையும் சிறை பிடியுங்கள்"
//
என்னா சொன்னாலும் சொல்லுங்க அவரோட பெருந்தன்மை யாருக்குமே வராதுங்க.
//
"அண்ணே நீங்க நாடோடி மன்னனிலே தமிழ் திரைவுலகிலே புரட்சி செய்தீர்கள், பின்பு மக்கள் தலைவனாக புரட்சி செய்தீர்கள், இந்த இந்திர லோகத்திலேயும் உங்கள் திருக் கரங்களால் புரட்சி செய்து இருக்குறீர்கள், நீங்க இந்த அரியணையிலே ஏறி எங்களை ஆட்சி செய்ய வேண்டுமென உங்க ரசிகர் சார்பாகவும், என ரசிகர் சார்பாகவும் கேட்டு கொள்கிறேன்"
//
பெருந்தன்மையான கோரிக்கை. ஆனாலும் உங்க கனவு ரொம்ப வெவரமானதா இருக்கே!
//"என்ன மானிடர்களே இங்கு நடப்பதற்கு யார் பொறுப்பு?"//
நல்ல கலக்கல்தான்
//
"அரியணை எனக்கு புதிது அல்ல, ஆனால் நீயே நடிப்பிலே பல அரியனைகளை கண்டும், மக்கள் பணிக்கு இன்னும் அரியணை ஏறவில்லை என்ற மனக்குறை எனக்கு மட்டுமல்ல தமிழக மக்களுக்கும் தான், அந்த குறை நிறைவேறும் முன் உன்னை இங்கு அழைத்து வந்த எமனார்க்கும்,இந்திரனுக்கும் பாடம் புகட்டவே யாம் வந்தோம், இந்த அரியணை உனக்குரியது, நீயே இதற்கு தலைவன், ரத்தத்தின் ரத்தங்களாகிய ரசிகப் பெருமக்களின் வேண்டுகோளும் அதுவே" என ௬றி தான் கையிலே வைத்து இருந்த கிரிடத்தை நடிகர் திலகத்திக்கு அணிவிக்கிறார் மக்கள் திலகம்."
//
இது அதைவிட சூப்பர். மக்கள் திலகம் என்னைக்குமே மக்கள் திலகம் தான்.
இப்போ கனவுலேயும் கோலோச்ச ஆரம்பிச்சிட்டாரு...........
//ஆண்டி கதை//
அட போங்க நசரேயன்..நானும் ஏதோ ஆண்ட்டி கதைன்னு சொல்லி முழுசா படிச்சிட்டு ஏமாந்துட்டேன்.
எல்லா குருப்பும் இங்க தான் இருக்கா..
நம்ம டீச்சரும் இங்க தான் பட்டறையா ??
// அவருக்கு இன்னொரு பேரு இருக்கு லவ்டேல் மேடியை கேட்டா சரியாச் சொல்லுவாரு ///
வால் பையன்........
மக்கள் திலகம் வாழ்க.
//"அதற்கும் நான் பொறுப்பு அல்ல, நீங்க எம்.ஆர் ராதாவை கேட்க வேண்டும்"//
ஹா...ஹா...ஹா...
//"தம்பி எனக்கு சினிமாவிலே நடிப்பை தவிர எல்லாம் தெரியும் என்பது நாடறிந்த விஷயம்.அதனாலே எனக்கு சுலபமா கண்டு பிடிக்க முடிச்சது"//
என்ன அண்ணே இப்படி வாரி விடிறீங்க...?
Post a Comment