Wednesday, December 31, 2008

உருப்புடாதது_அணிமாவின் தியாகம்



சும்மா மொக்கை பதிவுகளை போட்டு பொழைப்பை ஓட்டிகிட்டு இருந்த எனக்கு உருப்புடாதது_அணிமா போறபோக்குல எனக்கு பட்டாம் பூச்சியை பிடிச்சு காலை ஓடிச்சு என் கையிலே கொடுத்து புட்டாரு, பின்னூட்ட பிதா மகன் கொடுததனாலே அதை புல்லா வாங்கிகிட்டேன், கொடுத்ததோடு விடாம இதை பிரிச்சி கொடுங்க ன்னு சொத்தை பிரிச்சி கொடுக்க மாதிரி சொல்லி புட்டாரு.அவரை பத்தி இன்னும் ஒன்னும் சொல்லணும், எனது முதல் பதிவுக்கு முத போணி பண்ணினவரும் அவருதான்.


யாருக்கு திருப்பி கொடுக்கலாம்ன்னு யோசிக்க பாத்தப்ப ஆளே இல்லாத கடையிலே எப்போதும் டீ வாங்க வார என் சக தோழர்கள் குடுகுடுப்பைக்கும், பழமைபேசிக்கும் தான் குடுக்கிறது முறை, இருந்தாலும் யோசிக்கிறேன்.யோசிக்கும் போது கடை பக்கம் வார ஏனைய நண்பர்களை சும்மா விடலாமா, அது தமிழர் பண்பாடு அல்ல.அதனாலே அவங்களுக்காக



நீ


குண்டுசியையே தூக்கி விட்டாயே


என


பாராட்ட ஓடி வந்த


என்னை


கொணிஊசியால்


குத்தி விட்டாயே


-----------------------------------------------


உனக்காக


அதிகாலையில் இருந்து


அந்தி மாலை வரை காத்திருந்தேன்


மனம் மயக்கும் மாலையில்


வந்த நீயும் காதலிகிறாய்


உன்னுடன் வந்த மந்தியை


என நானும் தெரிந்து கொண்டேன்


------------------------------------------------


என்


நிரந்தர காதலி எங்கோ


பசலை நோயால் வாட


அவசர காதலியான


உன்னுடன் எப்படி


பசை போல்


ஒட்டமுடியும்


-----------------------------------------------------


உன்


கொலுசு மணி ஓசைக்கு


மகிழ்ந்தது என் மனம் மட்டுமல்ல


சேட்டுவின் மனமும் தான்


--------------------------------------------------------------


எல்லோரும் போதும் போதும் என்று சொல்லுவது எனக்கும் கேட்கிறது, அதனாலே வாசகர்கள்(?) நலன் கருதி விட்டுறேன், நீங்களும் விட்டுடுங்க,போறதுக்கு முன்னாடி யாருக்கு விருது கொடுகிறதுன்னு சொல்லனுமா, இது வரைக்கும் யார் யார்க்கு எல்லாம் கிடைக்கலையோ அவங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன், இவ்வளவு பெரிய மனசு பண்ணி விருது கொடுத்த எனக்கு பாராட்டு விழா, பரிசு ஏதும் வேண்டாம் என கேட்டுகிறேன் . விருது கிடைச்ச நீங்க என்ன செய்யணுமுன்னு இங்கே பாருங்க

http://urupudaathathu.blogspot.com/2008/12/butterfly-effect.html


Sunday, December 28, 2008

இதை என்னன்னு சொல்ல

உன்

வாசல் படி வரை

வந்த என்னை வதம்

பண்ணிய

நீ

உன்

இதய வாசல் வரை

வர வேண்டும்

என நினைத்தால்

என்

உயிரே போகுது

-----------------------------------------------------------
உன்

கால் கொலுசை

திருடிய எனக்கும்

உன்னை

திருடியவனுக்கும் சிறை

ஆனால்

நான்

இருக்கப்போவதோ

அரை நாள்

அவன்

இருக்கப்போவதோ

ஆயுள் முழுவதும்


Friday, December 26, 2008

சங்கம் திவால்

சங்க தலைவர் : என்ன பொருளாளரே நம்ம சங்கத்தோட நிதி நிலைமை எப்படி இருக்கு

சங்க பொருளாளர் : சங்கு ஊதுற நிலையிலே இருக்கு , மஞ்ச கடிதாசி கொடுக்க வேண்டியது தான் பாக்கி, சங்கத்திலே கடன் வாங்கி வெளி நாட்டுக்கு போன உறுப்பினார் எல்லாம் கடனை திருப்பி கொடுக்காம கம்பிய நீட்டிடாங்க

சங்க தலைவர் :வெளி நாட்டுல ரூபாய்களை வெட்டி அள்ளிட்டு வந்து கொடுப்போம்னு சொன்னாங்க, இப்ப சங்கத்தையே வெட்டி விட்டுட்டாங்க, சங்க ௬ட்டத்துக்கு வார உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்ல?

சங்க பொருளாளர் : ஒத்த ரூபாய்க்கு சில்லறை மாத்தி வச்சு இருக்கேன், அதை வாங்கி நெத்தியிலே வச்சு கிட்டு போக சொல்லலாம்.

(சங்கத்திலே கடன் வேண்டி விண்ணப்பித்த இரு உறுப்பினர்கள் வருகிறார்கள்)

உறுப்பினர் 1: ஐயா சங்கத்துல 100 ரூபா கடன் வாங்க விண்ணப்பிச்சி 4 வருஷம் ஆச்சு, இதுநாள் வரைக்கும் கால் காசு கையிலே வரலை

உறுப்பினர் 2: என் பெண்டாட்டி முத பிரசவத்துக்கு போறப்ப கடன் கேட்டேன், இப்ப ஆறாவது பிரசவத்திற்கு போயிருக்கா, இன்னும் காச கண்ணுல காட்ட மாட்டுகீங்க , இன்னைக்கு மட்டும் காசு கொடுக்கலை நடகிறதே வேற, காசுக்கு அலங்சியே அரை அடி கால் தேஞ்சு போச்சு.

சங்க பொருளாளர் : அண்ணாச்சி அது பத்திதான் நானும் தலைவரும் யோசிச்சு கிட்டு இருந்தோம்.

உறுப்பினர் 1: நாசமா போச்சு, எத்தனை வருசமா யோசிப்பீங்க, இத நூறு ரூபாயையை நம்பி கல்யாணமும் முடிச்சு ரெண்டு புள்ளைக்கு தகப்பன் ஆகிட்டேன்.

உறுப்பினர் 2: நீ கல்யாணதிற்கு கேட்டது உன் சாவுக்கு தான் கெடைக்கும் போல தெரியுது

சங்க தலைவர் : உங்க கஷ்டம் புரியுது,ஆனா பாருங்க அமெரிக்கா திவால் ஆகிப்போச்சு, ஊரெல்லாம் அதே பேச்சுதான்,வேலை வெட்டி இல்லாத எங்களுக்கும் வேலை இல்லாம போச்சு

உறுப்பினர் 2: ஏலே காசு இல்லனா சொல்லி புடுங்க, அதுக்காக அமெரிக்கா திவால் ஆச்சு, ஆப்பிரிக்கா திவால் ஆச்சுன்னு கதை உடப்புடாது

உறுப்பினர் 1: நீங்க கடன் தரும் வரைக்கும் இந்த நாற்காலி, மேசை எல்லாம் எங்க வீட்டுல இருக்கட்டும்,என் சின்ன வீட்டுக்கு போனா உக்கார முடியல

சங்க பொருளாளர் : அப்படி எல்லாம் செய்யபுடாது அப்பு, ஏற்கனவே நாங்க திருடுனது மிச்சம் இருக்கிற சொத்தே இதுதான்

உறுப்பினர் 2: ஏலே வேட்டியை உருவாம உட்டுட்டு போறோம்னு சந்தோசபடுங்க, வா மாப்ள போகலாம், ஆளுக்கு ஒன்னும் எடுத்துட்டு போவோம்.

சங்க தலைவர் : நல்ல வேலை தப்பிச்சேன், நான் கோவணம் ௬ட போட்டு வரலை .

சங்க பொருளாளர் :தெரியுமே உங்க கோவணத்தை தான் அமெரிக்காகாரன் எப்பவோ உறுவிட்டு போய்ட்டான்னு, சங்கத்துக்குன்னு இருந்த ரெண்டையம் நவட்டிட்டு போய்டாங்க, இருக்க ஒரு ரூபாயை ஆளுக்கு பாதி பாதி எடுத்துக்குவோமா?

சங்க தலைவர்: சங்கத்தை வச்சு கந்து வட்டி பண்ணி கல் காளை மாதிரி இருந்த நம்மளை, திருவோடு எடுக்க வச்சுடான்களே,இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல

சங்க பொருளாளர் :அப்படியே தான்.. இன்னும் கொஞ்சம்.. நீங்க அழுதா இந்த வசனம் கொஞ்சம் தூக்கலா நல்ல இருக்கும், எப்படியாவது கஷ்ட்டப்பட்டு அழுங்க,வேணா தங்க மணியை வரச்சொல்லவா?

சங்க தலைவர் : நானே வயத்தெரிச்சலில் இருக்கேன், என் வாயை கிளறி வாங்கி கட்டாதே, உடைஞ்சு போன சங்கத்தை ஒட்ட வைப்பேன், இது தொலைந்து போன என் கோவணத்தின் மீது சத்தியம்

சங்க பொருளாளர் : தெலுங்கு பட ஹீரோ மாதிரியே கைய காலை ஆட்டிகிட்டு குத்து வசனம் பேசுறீங்க,(யாரவது வந்தா தயவு செய்து விசில் அடிங்கோ) இங்கே தொடரும்ன்னு போடுறீங்களா

சங்க தலைவர் : கடைப்பக்கம் வாரதே ரெண்டு பேரு, அவங்களையும் வர விடாம பண்ணிருவ போல,இந்த அறிவிப்பை சங்க பலகையிலே ஒட்டு

சங்க பொருளாளர் : சரிங்க சாமி

(மறு நாள் காலையிலே அலைகடலென ௬ட்டம், இந்த பதிவுக்கு வார ௬ட்டம் மாதிரி இல்லை, நிஜக் ௬ட்டம்)

சங்க பொருளாளர்: (கைபேசியில்..) தலைவரே சங்கத்து முன்னாடி சினிமா நடிகையை பார்க்க வந்த மாதிரி ஒரே ௬ட்டம்.சங்கத்துக்கு மஞ்ச கடிதாசி கொடுத்தாச்சா?

சங்க தலைவர் : சங்கத்துக்கு கடன் கொடுக்க வேண்டியவன்கிட்ட எல்லாம் வசூல் பண்ணி ரசித்து வாங்கிடு

உறுப்பினர்கள்: நான் தான் முதல்ல வந்தேன்.. நான் தான் முதல்ல வந்தேன்

சங்க பொருளாளர் : இடி விழுந்த இருளாண்டி மாதிரி சொல்லுறாங்க,சங்கத்திலே கொலையே விழுந்தாலும் சலனம் இல்லாம இருக்கும் நிறையை தலைகள் எல்லாம் வந்திருக்கு, நோட்டை நீட்டிவசுல் பண்ண வேண்டியது தான், எல்லோரும் குஸ்புவை பார்க்க வந்தது மாதிரி அவசரப்படாம, கோவிலுக்கு வந்தது மாதிரி வரிசையிலே வந்து துட்டை கொடுங்க

(காசு வசுல் முடிந்த உடனே)

சங்க பொருளாளர் : பணத்தை எண்ணி எண்ணி ரெம்ப அசதி ஆகிப்போச்சி

உறுப்பினர்கள்: எப்ப வருவாக.. எப்ப வருவாக

சங்க பொருளாளர் : தலைவரு இப்ப வருவாரு அடுத்த கடை பக்கம் உளவு பார்க்க போய் இருக்காரு.

உறுப்பினர்கள்: அவரை கேட்கலை, அவுக எப்ப வருவாக..எப்ப வருவாக.

சங்க பொருளாளர் : யாரு அவுக

உறுப்பினர்கள்: அதான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா

சங்க பொருளாளர் : என்னது சில்க் ஸ்மிதாவா எங்க.. எங்க (மனசுக்குள்ளே) அடப்பாவி மக்கா, அவிங்க செத்து பல வருஷம் ஆகிபோச்சுன்னு தெரியாத பச்ச புள்ளைகளா நீங்க, இந்த விஷயத்தை தான் முதல்வர் ஒட்ட சொன்னாரா, படிக்க தெரியாத தாலே இப்படி மாட்டி கிட்டேனே,தெரியாத்தனமா வந்துட்டேன் தலை தெறிக்க ஓடும் முன்னே வழி சொல்லிட்டு போங்களேன்


Wednesday, December 24, 2008

வில்லு விமர்சனம்

இளைய தளபதி விஜய் மீண்டும் ஜெயித்து விட்டார்.தனது வழகமான படங்களை விட வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்து உள்ளது வில்லு. காதல், கோபம், பாசம் மற்றும் சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு அருமை. "இளையபிள்ளை எடுப்பார் கைபிள்ளை இல்லை எடுப்பவருக்கு உதவும் பிள்ளை" என்பதை நிருபிக்கும் படம். சரி சரி முன்னுரைகளை விட்டு கதைக்கு செல்வோம்

கதை படி தஞ்சை அருகில் ஒரு விவசாய குடும்பத்தில் முன்றாவதாக பிறந்த தமிழ் மாறான் தான் விஜய்.சிறு வயது முதல் படிப்பு வராததால் தான் அண்ணன் மற்றும் அக்காள் படிக்க விவசாயம் செய்து உதவுகிறார்.

தனது மாமன் மகளாக வரும் புதுமுகம்(யாருன்னு தெரியலை) நாட்டு வைத்தியம் செய்யும் கதா பாத்திரம் கச்சுதமாக செய்து இருக்கிறார்.

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சனைக்காக விஜய்க்கும் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினருக்கும் தகராறு வருகிறது. அவருக்கு விஜய்க்கும் மோதல், ஆனால் அவர் மகளுக்கும் விஜய் அண்ணனுக்கும் காதல்.

பட்ட படிப்பு படித்த அண்ணனுக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வேலை. விஜய் அக்காள் கல்லூரியில் முதுகலை பட்டம் படிக்கிறாள்.

உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் சுயருபம் தெரிந்த விஜய்,தனது அண்ணன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், அவரையும் மீறி திருமணம் நடக்கிறது.திருமணம் முடிந்த கையோடு மாமனார் வீடு செல்லும் விஜய் அண்ணன் அங்கேயே தங்குகிறார்.

மகன் தான் வீட்டுக்கு வரவில்லை தாங்களாவது பெரியமகனை பார்க்க போகலாம் என அவரை பார்க்க செல்லும் விஜய் தாய் தகப்பனார் அவமான படுத்த படுகிறார்கள். அதை தட்டி கேட்கும் விஜய்க்கும் அவரது அண்ணனுக்கு இடையே உறவு முறிகிறது.

இந்நிலையில் கல்லூரியில் முதுகலை பட்டம் படிக்கும் நிச்சயிக்க பட்ட அக்காள் திருமணம் நின்று விடுகிறது.

பல வருடங்களுக்கு பிறகு மழை பெய்து நெல் அறுவடை செய்யும் நேரத்தில் கன மழை பெய்து வெள்ளம் வந்து எல்லா வற்றையும் அழித்து போடுகிறது. வெள்ள நிவாரண நிதி அரசாங்கத்தில் இருந்து கொடுக்க படுகிறது.

அந்த நிதியை விஜய் திருடி விட்டதாகவும் மேலும் தன் அதை பார்த்த தன் மாமன் மகளை கொலை செய்ததாகவும் விஜய் கைது செய்து 10 ஆண்டுகள் காவல் தண்டனை விதிப்பதோடு முதல் பாதி முடிகிறது.

( இங்க இடைவேளை படத்துக்கு, பதிவுக்கு கிடையாது,படம் போதும்னு நினைக்கிறவங்க வீட்டுக்கு போகலாம்)

இரண்டாவது பாதியில் விஜய் சிறையில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மூலம் விட்டு போன தான் பள்ளி படிப்பை தொடர்கிறார். அவரின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர் 5 வருட சிறை தண்டனை முடிந்து வெளியே வருகிறான்.

இந்நிலையில் தன் வெளி நாட்டு பட்ட படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வரும் உள்ளூர் சட்ட மன்ற உறுபினரின் இளைய
மகள்(நயன் தாரா) ஊருக்கு வருகிறாள். அவளை பகடை காயாய் பயன்படுத்தி நிவாரண பணம் மற்றும் தன் மாமன் மகள் கொலை ஆகியவைற்றை கண்டு பிடிப்பது மற்றும் நின்று போன அக்காள் திருமணத்தை நடத்துவதுதான் மிதி கதை.

நயன் தாராவை தன் வலைக்குள் விழ வைக்க மேலும் தன்னை சிக்க வைத்த தந்தர காரர்களை விஜய் பயன் படுத்தும் தந்திரம் தமிழ் சினிமாவுக்கே புதுசு (தயவு செய்து நம்புங்க..).

உண்மைகள் தெரிய வரும் விஜய்க்கு அதிர்ச்சி அடைகிறான் ஏனெனில் அவரது அண்ணனும் அதிலே சம்பந்த பட்டிருப்பது தெரிய வருகிறது, அவருடன் மாவட்ட ஆட்சியாளரும்,உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரும் கூட்டு சதி செய்து தன்னை மாட்டி விட்டதை கண்டு பிடிக்கிறார்.

அவர்களால் ஏற்படும் தடைகளை உடைத்து எறிந்து நீதிக்கு முன் அவர்களை நிறுத்தி தர்மத்தை நிலை நாட்டுகிறார்


விஜய் ரெம்ப நாளைக்கு பிறகு தன் நடிப்பை(?) வெளிப்படுத்தி இருக்கிறார். படிப்பின் பெருமையை வழியுறுத்தி அவர் பேசும் வசனங்களுக்கு,பாசத்திற்காக அண்ணனிடம் உருகும் போதும் விசில் பறக்கிறது, இப்படி காதல், மோதல், ஆவலுடன் எதிர் பார்த்தல்(suspense) மற்றும் பாசம் எல்லாம் சரி விகிதத்தில் கலந்து கொடுக்கப்பட்ட ஒரு நல்ல கலவை (நான் சொன்னதான் உண்டு).

கில்லியை 10 மடங்கு வேகம் விறுவிறுப்பு.

நடிகைகள் பாட்டுக்கு மட்டுமல்லாமல் நடிப்புக்கும் சிறிது வாய்ப்பு கொடுக்க பட்டு உள்ளது. வடிவேலு காமெடி பிரமாதம் (இதை விடவா !!)

இவ்வளவு நேரமா யாராவது இந்த கதையை யாரவது வாசித்தால் அவர்களுக்கு ஓன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசை இது நிச்சயமாக திரைப் படமாக வந்தாலும் வரலாம்(தமிழ் ரசிகர்களின் தலை எழுத்து அப்படி இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்)

முடிக்க முன்னாடி ஒரு குத்து வசனம்

படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவான் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை)

கதை திருடர்கள் கவனத்திற்கு :

இந்த கதையின் காப்புரிமை(கர்மம் டா சாமி..) யாருக்கும் வழங்கப் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் மீறி திருடுபவர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும்


Tuesday, December 23, 2008

500 பின்னூட்டம் வேணும்

சோமு பதிவு உலகம் வந்து ஒரு வருஷம் ஆச்சி, இவன் என்ன தான் எழுதினாலும் இவன் கடை பக்கம் யாரும் வாரது இல்லை, ஒரு பிரபலமான தமிழ் திரட்டி யில் இவன் இணைந்து இருந்தான். இருந்தாலும் இவன் கடை பக்கம் காத்து ௬ட வரலை, எழுதி எழுதி சலிச்சுபோனான்,இவனோட எந்த பதிவுகளும், அந்த திரட்டியிலே உள்ள "மிளகாய்" இடுகைக்கும், நேயர் விருப்பத்திற்கும் போனதே இல்லை.


சோமுவோட பதிவுகளுக்கு அவனே அனானியா பின்னூட்டம் போட்டும் பார்த்து கருத்து திரட்டி யில் இவன் பதிவு நம்ம ஊரு வானிலை செய்து மாதிரி வராமலே போய்டும்.


அவனோட எழுத்துகள் மேல அவனுக்கே கோபம் வந்திடும், மனதை சமாதான படுத்த அவனாக சில சாக்கு போக்குகளை சொல்லி கொள்வான், கமல் கதை,வசனம் எழுதிற எல்லா படங்களும் நூறு நாள் ஓடுவதில்லை, அதற்க்காக அவர் கதை எழுதாமல் இல்லை, படம் நடிக்காமல் இல்லை, இன்னைக்கு இளைய தளபதி எல்லாராலும்(?) அழைக்க படம் விஜய் ௬ட ஒரு காலத்திலே, இவன் மூஞ்சை எல்லாம் காசு கொடுத்து பார்கனுமான்னு விமர்சிக்க பட்டவர், அதற்காக அவர் நடிப்பதை(?) விட்டு விட்டாரா.


என்னோட எழுத்துக்களுக்கு நானே ரசிகன், அதனாலே நான் தொடர்ந்து எழுதுவேன், இப்படி பல காரணங்களை சொல்லி சமாதானம் அடைவான். என்னதான் ஆறுதல் அடைந்தாலும் கடை காத்து வாங்குதே ன்னு வருத்தமும், வேதனையும் அவனுக்கு உண்டு, எல்லாருடைய கடைக்கும் போய் பின்னூட்டம் போட்டும் பார்த்தான் ஆனாலும் பலன் இல்லை.

எதை பத்தி எழுதினால் தன் கடை பக்கம் வருவான்னு யோசித்த போது,பதிவு உலகத்திலே சிலர் அரசியல் பத்தி எழுதுகிறார்கள், அவர்களை மாதிரி எழுதினால் தனக்கு அரசியல் முத்திரை குத்திவிடுவார்கள், மதம் மத சாயம் பூசப்பட்டு விடும். நாட்டு நடப்புகளை எழுத தெரியாது, தமிழ் இலக்கியங்கள் தெரியாது,ஈழ பிரச்சினையை பத்தி எழுதினா காங்கிரஸ்காரர்களுக்கு பிடிக்காது, அவங்களோட எதிர்ப்பை சந்திக்க வேண்டிய வரும். அதனாலே அவனுக்கு தெரிந்த கவிதை(?), கதை களிலே காலத்தை ஓட்டினான்.எப்படி எழுதினாலும் இவனா அனானியா போட்ட பின்னூடத்தை தவிர யாரும் வருவது இல்லை

ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவானாய் தனது கடைசி பதிவை ஆரமித்தான், அந்த பதிவுக்கு தலைப்பு "500 பின்னூட்டம் வேணும்" ன்னு தலைப்பை வச்சி தனது அனுபவத்தை எழுதினான். அவன் என்ன எழுதினான் ன்னு தெரியனுமுன்னா மறுபடியும் மேல இருந்து படிங்க.
எழுதி பதிவை போட்டதும் ரஜினி படம் பாட்சா மாதிரி ஹிட் ஆகிடுச்சி, அந்த பதிவு மிளகாய் இடுக்கைகும், நேயர்கள் தொப்பிக்கும் போய்டுச்சி, தலைப்புக்கு ஏத்த மாதிரி அவனுக்கு 500 பின்னூட்டமும் கிடைத்தது, படம் எடுத்து முடிச்ச உடனே கையில காசு இல்லாத தயாரிப்பாளர் கால் நடையா திருப்பதி போய் மொட்டை அடிக்க வேண்டியவரை, விமானம் ஏறி அமெரிக்கா நியூ ஜெர்சி பாலாஜி கோவில்ல மொட்டை அடிக்கிற அளவுக்கு வந்ததை போல உணர்ந்தான்.

பயங்கர சந்தோசத்திலே அலுவலகம் வந்தான் சோமு, வந்ததும் அவனுடைய மேலாளர் அழைப்பு அனுப்பு இருந்தார், அதை பார்த்து விட்டு புன்னகையுடன் அவருக்கு வணக்கம் செலுத்தினான், அவர் சோமு நீங்க இன்னைக்கு ரெம்ப சந்தோசமா இருக்கீங்க, ஆனா உங்களுக்கு ஒரு சோக செய்தி, கடந்த ஆறு மாசமா நீங்க வேலை ஒழுங்கா செய்ய வில்லைன்னு புகார் வந்திருக்கு, ஒரு பாரம் டேவேலோப் பண்ண முடியலை உங்களாலே, அதனாலே உங்களை வேலை யை விட்டு தூக்குறோம், நீங்க இப்பவே வீட்டுக்கு போகலாம், காவலர்கள் புடை சூழ அவன் வீட்டுக்கு அனுப்பபட்டான், அவன் சந்தோசத்திலே இடி விழுந்தாலும் அடுத்த பதிவுக்கு கரு கிடைத்ததை நினைத்து சந்தோஷ பட்டுக்கொண்டே நடையை கட்டினான்


Wednesday, December 17, 2008

சுயமா வரன்?

அமெரிக்காவிலே இருந்து கொண்டு என்ன தான் குத்தாட்டம், தொடைஆட்டம், கும்மி ஆட்டம் போட்டாலும்,தனக்கு வரப்போகிற மனைவி மட்டும் கலாசாரத்தை கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என ராபர்ட் தன்னோட மனசுக்குள்ள தீர்க்கமா வச்சு இருந்தான், ஆனா அவள் அழகுக்கு இலக்கணம் ன்னு ஒன்னு இருந்தா அதுக்கு இம்மி அளவும் குறை இருக்கப் புடாது என்பதிலேயும் உறுதியா இருந்தான்.

இப்படி ஒரு அகில உலக எதிர்பார்ப்புகளோட பெண் தேடும் வேலைகளை ஆரமித்தான், ஆரம்பத்திலே புகை படம் பார்க்காம பெண் வீட்டிலே போய் பஜ்ஜி,வடை எல்லாம் சாப்பிட்டு விட்டு வேண்டாம் என்று சொல்லி விடுவான், அதன் பிறகு முறையை மாத்தினான் புகை படம் பார்த்து அதிலே பிடிச்சு இருந்தா,நேரிலே போய் பார்க்கிறது, இதிலேயும் வழக்கம் போல ஒன்னும் அவனுக்கு பிடிச்ச மாதிரி அமைய வில்லை, புகை படத்திலே நல்லா இருக்கா நேரிலே நல்லா இல்லை, நேரிலே நல்லா இருந்தாலும், அவங்க கிட்ட ஏதாவது குறை இவனுக்கு தெரிந்து வேண்டாம்ன்னு சொல்லி விடுவான்.

இந்த கதை(இந்த பதிவு கதையல்ல) ரெண்டு வருசமா ஓடினது நெடுந்தொடர் மாதிரி, இதற்காக நான்கு முறை அமெரிக்காவிலே இருந்து வந்து போன செலவில் ஒரு ஆயிரம் பெண்களுக்கு கல்யாணம் முடித்து வைத்து இருக்கலாம், இவனுக்கு பொண்ணு தேடி தேடி எல்லோரும் அலுத்து போய்ட்டாங்க, இந்த இரண்டு வருட காலத்திலே ராபர்ட்டும் கொஞ்சம் மாறி இருந்தான், ஆரம்பத்திலே நிலைமையிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக மாற ஆரமித்தான்.கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்.

எப்படியோ ஒரு பெண்ணு பிடித்து போக எல்லோரும் பெண்ணை நேரில் பார்க்க போய்ட்டாங்க,ராபர்ட் அவங்க வீட்டுல சொல்லிவிட்டான், கண்டிப்பாக இதுதான் நான் பார்க்கும் கடைசி பெண், வீட்டுக்குள்ளே போய் வழக்கமான சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்ச உடனே, அந்த பெண்ணுடன் அவன் தனியாக பேச வேண்டும்னு கோரிக்கை வைத்தான்.கோரிக்கை ஏற்கப்பட்டு இருவரும் தனி அறையில் சந்தித்தனர்.ராபர்ட் தனக்கு தேவையான கேள்விகளை எல்லாம் கேட்டான், பொறுமையாக பதிலை சொன்ன அவள், கேள்விகள் முடிந்த நிலையில் , அவனிடம் ஒரு புகை படத்தை நீட்டினாள்.

அதை கையில் வாங்கிய ராபர்ட்

"இந்த பொண்ணு யாரு உங்க சொந்தம்மா, இவங்களுக்கு ஏதும் உதவி செய்யனுமா?"

"நீங்க இவளுக்கு நிறைய பண்ணி இருக்கீங்க"

சொல்லி விட்டு பேரு மூச்சு விட்டுவிட்டு

"சரி அதை விடுங்க.. அமெரிக்காவிலே மக்கள் எல்லாம் எப்படி பழகுவாங்க"

"மனிதாபி மானத்தோட பழகுவாங்க, யாரை பார்த்தாலும் ஒரு புன் சிரிப்போடு வணக்கம் சொல்லுவாங்க, நாம வருகிறது தூரத்திலே தெரிந்தால், நாம வரும் வரைக்கும் கதவை திறந்து காத்து நிப்பாங்க"

"அதை ஏன் நீங்க படிக்கவில்லை"

"ஹும் என்ன சொன்னீங்க"

"ஏன் அங்க இருக்கிற நல்ல பழக்கங்களை நீங்கள் உபயோக படுத்திறது இல்லை"

"நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு புரியலை"

"இதை எல்லாம் நீங்க உங்க நடைமுறை வாழ்கையிலே கடை பிடிக்கிற மாதிரி தெரியலை, நான் கொடுத்த புகை படத்திலே உள்ள பெண்ணை நீங்க ஏற்கனவே பார்த்து இருகீங்க, அவங்களை பார்த்து விட்டு நீங்க போகும் போது என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?"

"என்ன நான் இந்த பெண்ணை பார்த்து இருக்கேனா?!!"

"இந்த பெண்ணை இரண்டு வருடத்திற்கு முன் மதுரையிலே இதை மாதிரி ஒரு சம்பவத்திலே சந்தித்தீர்கள், நீங்க இவளை பார்த்து விட்டு வெளியிலே போகும் போது என்ன சொன்னீங்கன்னு கேட்டாலும் உங்களால சொல்ல முடியாது"

ராபர்ட் பொறுமை இழந்தவனாய்

"எதுவாக இருந்தாலும் நேரடியா பேசுங்க, உங்க பிரச்சனை என்ன?"

"நீங்க கையிலே வைத்திருக்கும் புகைப்படத்தில் இருப்பது நானே தான்"

இது வரை அந்த புகைப்படத்தில் இருந்த உருவ ஒற்றுமையை கவனிக்க முடியாமல் இருந்தவன், அவள் சொன்னதும் மீண்டும் உற்று நோக்கினான், அவளையும், புகைப்படத்தையும்

"இருபத்தி ஐந்து வருஷம் என்னால சாதிக்க முடியாததை, 500 ரூபாய் மேக் அப் சாதித்து விட்டது,இது தான் உங்க எதிர் பார்ப்புன்னு எனக்கு தெரியாம போச்சு?"

அதற்க்கு மேலும் அவனால் அங்கு இருக்க முடியவில்லை, வேகமாக அறையை விட்டு வெளியே வந்தான், வந்தவன் வாசலை நோக்கி நடந்தான், வழக்கம் போலே வாசலை கடக்கும் போது அந்த பெண்ணிடம் தான் கண்ட குறையை எல்லோருக்கும் கேட்கும் படி சொல்லி கொண்டு செல்வான், இன்று மாயான அமைதியாய் சென்றான்.


Thursday, December 11, 2008

நான்,Fortran மற்றும் C

என்ன தான் இன்னைக்கு கணணிய தட்டிகிட்டு பொட்டிகடை மாதிரி வியாபாரம் செஞ்சாலும், பழசை கொசு வத்தி போட்டு ஆராய்ஞ்சு பாத்தேன் எப்படி கல்லூயிலே கணணி பாடம் படிச்சேன்னு, இது ஒன்னும் ஆயிரம் வருசக்கதை இல்லை, இன்னையில் இருந்து(2008) 14 வருஷம் பின்னால போனா தெரியும்.
இளநிலை பொறியாளர் படிப்பதற்காக திருச்சி பொறியியல் கல்லூரியிலே முதலாம் ஆண்டு படிச்சுகிட்டு(?) இருந்தேன், அது எனக்கு மட்டுமல்ல எங்கள் கல்லூரிக்கும் தான்.புதுசா ஆரமிச்தாலே என்னவோ எங்களுக்கு ௬ரை கொட்டகை தான் வகுப்பு அறை.
தமிழ் வழியாக பன்னிரண்டு வரை படிச்சதாலே வாத்தியாருங்க இங்கிலிபிசுல நடத்துறது புரியாம வெளி மூலம் வந்த மாதிரி நெளிஞ்சு கிட்டு வகுப்பறையிலே இருப்பேன்,அந்த நேரத்திலே சென்னை நண்பன் ஒருவன் என்னைய பாத்து பரிதாப பட்டு, அவன் சொல்லுறதுக்கு எல்லாம் தலை ஆட்டுற மாங்கா மடையன்(பழமைபேசி விளக்கம் கொடுத்தாச்சு) வேணுமுன்னு நினைச்சு என்னையும் அவன் ௬டத்திலே சேர்த்தான்.அவன் அப்பவே இங்கிலிபிசுல பின்னி படல்(பழமைபேசி விளக்கம் கொடுத்தாச்சு) எடுப்பான்.

பன்னிரண்டு முடிச்சு பொறியியல் கல்லூரி சேரும் முன்னால பல ஆயிரம் ரூபாய்களை முழுங்கி விட்டு மலை முழுங்கியான என்மேல கொலை வெறி கோபத்திலே எங்க விட்டிலே எங்க அப்பாவும்,அம்மாவும்.அதுக்கும் காரணம் இருக்கு, முதல்ல ஒழுங்கா பரிச்சை எழுதலைன்னு இம்ப்ரோவ்மேன்ட் படிக்க ராஜபாளையம் போனேன், அங்கே பீடி(நானே தயாரிச்சது) குடிச்சேன்னு அடிச்சி விரட்டி புட்டாங்க, அதுல ஒரு 15 ஆயிரம் போச்சு. அப்புறமா திருநெல்வேலி கல்லூரியிலே போய் சேத்தாங்க, அங்க ஒரு இருபது போச்சு,என் அண்ணன்(சித்தப்பா மகன்) ௬ட சேர்ந்து கிட்டு அழிச்சாட்டியம் பண்ணினேன்.

குடும்பத்தோட படிப்புக்கு டா டா காட்ட சொல்லலாம்னு கல்லூரி நிர்வாகம் யோசனை பண்ணின நேரத்துல புண்ணியவான் எனக்கு திருச்சி கல்லூரிக்கு சேர அழைப்பு அனுப்பி விட்டு இருந்தாங்க.இங்கே ஒரு இருபதை கட்டிட்டு தப்பிச்சோம் பிழைத்தேன்ன்னு ஓடி வந்தா, தலையை பிச்சு கிட்டு ஓட முடியாம சென்னை நண்பன் ௬ட ஒட்டி கிட்டேன்,அவன் எனக்கு எதுவுமே சொல்லி கொடுகலைனாலும்,நான் அவனுக்கு சிகரட்,தண்ணி எல்லாம் குடிக்க கத்துக் கொடுத்தேன்.அந்த காலத்திலே எனக்கு நல்லா தெரிஞ்சது அது ஒன்னுதான், அன்புமணி ஐயா என்னை மன்னிச்சு விட்ருங்க.
எல்லா பாட வகுப்புகள் எல்லாம் ஆரமிச்சாச்சு, கணணி பாடம் ஒன்னை தவிர, புரிஞ்சும் புரியாமலும் கதையை ஓட்டிகிட்டு இருந்தேன்,இந்த பதிவு மாதிரி,திடீர்னு ஒரு நாள் வாத்தியாரம்மா வந்து நான் உங்களுக்கு கணணி பாடம் எடுக்கப் போறேன்.மொத நாள் அறிமுகத்திலே போச்சு, அடுத்த நாள்ல இருந்து ஒரு முழு நீள ஹிந்தி படம் பாத்த மாதிரி இருந்தது
அவிங்க போர்ட்ரான், சி(fortran,c ) யிலே ப்ராகெட் எல்லாம் போட்டு சிலேபி மாதிரி ப்ரோக்ராம் போட்டாங்க, கூட்டல்,கழித்தல் ப்ரோக்ராம் எழுதிவிட்டு, அதை எக்ஸ்குயுட்(execute) பண்ணும் போது அது அப்படி கேட்கும், நாம இப்படி கொடுக்கணும், அதாவது இன்புட்(input) பத்தி சொல்லி கொடுத்தாங்க.ஒரு நாள்ல இது போய்டும்ன்னு நினைச்சா, தினமும் இதே தொல்லை, அது கேட்கும், நாம கொடுக்கணும், என்னத்தை கேட்கும் என்னைத்தை கொடுக்கணும் ஒன்னும் புரியலை .

அடுத்த நாள் வகுப்பு முடிஞ்சு சாப்பிட போகும் போது சென்னை நண்பனிடம்

"அவன் என்ன பெரிய ஆளா மாப்ள, நம்ம வகுப்புக்கே வர மாட்டானா?"

"இருக்கவங்க இம்சையே தாங்க முடியலை, நீ யாரடா சொல்லுற"

"கம்ப்யூட்டர் வாத்தியாரம்மா அது கேட்கும் இது கேட்கும்ன்னு சொல்லுறாங்க, அவரை சொல்லுறேன்"
என்னைய தங்கமணி பார்க்கிறமாதிரி கேவலமா ஒரு பார்வை பார்த்தான்.
"அட கரிபால்டி(அப்படி தான் மரியாதையா ௬ப்பிடுவாங்க), இது தெரியாம தான் சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கியா, இங்க வா சொல்லுறேன்"
என்னை கணணி ஆய்வு ௬டத்திற்கு ௬ட்டிட்டு போனான், அங்கே டி.வி பெட்டி மாதிரி ஒன்னை காமித்து இதுதான் கம்ப்யூட்டர் இதிலே தான் நீ ப்ரோக்ராம் பண்ணனும், அதிலே இன்புட் கொடுக்கணும் ன்னு சொன்னான்.
எனக்கு பெரிய சந்தேகம் தீர்ந்தது, ஆனா பாட சந்தேகம் தீரவே இல்லை, அதனாலே என்னவோ அந்த பாடம் தேர்ச்சி பெற மூனு வருஷம் ஆச்சு, நான் எடுத்த மதிப்பெண்கள்
5/100,15/100,33/100,45/100 (ஜஸ்ட் பாஸ்)
கல்லூரியின் இறுதியாண்டில் நான் முதல் வகுப்பிலே தேர்வு அடைந்து விட்டேன், எனக்கு கம்ப்யூட்டர் காட்டி கொடுத்த சென்னை நண்பனுக்கு 30 அரியர் இருந்தது.
முக்கிய குறிப்பு :பம்பாய் படத்தின் தாக்கத்தால் எழுதிய காதல் கடிதமும் அதன் விளைவும் அடுத்த பாகத்தில்.


Tuesday, December 9, 2008

திருட்டுப் பூனைகள்

காட்சி: 1 (மாலா வீடு)

வெயில் தன் உச்சத்தை துவங்கும் முன் நாம் மாலாவின் சமையல் அறையில் புகுந்தோம்.அவள் அங்கு கனத்த இதயத்துடன் பாலை கலக்கி கொண்டு இருந்தாள். அந்த பால் சுழலுவதை போல தன் மனமும் சுழலுவதை உணர்ந்தாள். காரணம் தன் கணவன் அமுதன் ௬றிய வார்த்தைகள் நினைத்து நினைத்து மனம் வெந்தாள். அதிலும் அவன் கூறிய கடைசி வார்த்தை

'நீ உயிரோடு இருந்தாலும் எனக்கு பிணம் தன்'.

அதுவே அவளிடம் பேசியதாக கடைசி வார்த்தையாக இருக்கவேண்டுமென என எண்ணி, அவள் செய்துகொண்ட இருந்த செயலுக்கு இடையுராக தொலைபேசி மணி ஒலித்தது,அதற்க்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லாததால்,அது தன் பணியை செய்து விட்டு அமைதியானது. அவள் பாலை குடிக்க முற்பட்டாள், மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது இம்முறை இவளுடைய கைபேசி , ஏதோ நினைவு வந்தது போல அதை கையில் எடுத்தாள்.

மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல், அவள் கூறிய பதட்டமான வார்த்தைகளை கேட்டு, அவள் கூறிய விலாசத்தை குறித்து வைத்து கொண்டு, தான் செய்து கொண்டிருந்த வேலையை மறந்தாள், ஏன் தன்னையும் மறந்தாள், தொலைபேசியில் கேட்ட கடைசி வரிகள் மட்டும் காதில் ஒலித்தது. தன்னை தயார் படுத்திக்கொண்டு வெளியில் கிளம்பினாள்.


காட்சி:2 ( கைபேசி உரையாடல்)

அமுதன் கைபேசி ஒலித்தது, எதிர்முனையில் பேசியது மாலாவிடம் பேசிய அதே குரல்.

அமுதன் 'நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு'.

பதில் 'எல்லாம் நல்ல படியாக நடக்கிறது, நீ எப்ப கிளம்புற'

அதற்கு பதிலாக அமுதன்

'அலுவலகத்தில விடுப்பு சொல்லிவிட்டேன், இன்னும் 5 நிமிசத்துல கிளம்புவேன், நீ கிளம்பிவிட்டாயா?'

அதற்கு அவள் 'இதோ கிளம்பியாச்சு

காட்சி : 3 (மருத்துவ மனை )

மாலா அவசர அவசரமாக ஆட்டோவில் இருந்து இறங்கி மருத்துவமனையின் வரவேற்பு அறைக்கு ஓடினாள். அங்கு கண்டகட்சி அவளின் கோபம் சூரியனையே சுட்டு எரிப்பது போல ஆனது. காரணம் கண்ணன், அங்குள்ள நர்ஸ் அவனிடம் எதோ பேசிக்கொண்டு இருந்தாள்.அவனை நோக்கி வேகமாக சென்று அவனை திட்டி தீர்க்க வேண்டும் என்பதற்காக திட்ட வாய் எடுத்த அவள், நர்ஸ் கூறியதை கேட்டு நிறுத்தினாள்

"சார் இங்க மாலான்னு யாரும் இங்க இல்லை, நான் நல்ல பாத்துட்டுதான் சொல்லுறேன், நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதே பதில் தான். "

"கண்ணன் "


என அழைத்த மாலாவை திரும்ப பார்த்தவுடன்

"மாலா நீ இங்க உயிருக்கு போராடிகிட்டு இருக்கிறதா எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது."

அதற்கு அவள் " இதே அழைப்பு எனக்கும் வந்தது "

"உண்மையாகவா? "

மாலாவின் கைபேசி மணி அடித்தது, எடுத்து பேசியவுடேனே, அவள் பதில் ஏதும் சொல்லாமல் மருத்துவ மனையின் வாசலுக்கு வந்தாள், அவள் பின்னால் கண்ணனும் வந்தான்.

"மாலா என்ன ஆச்சு? "

பதிலே சொல்லாமல் அங்கு நின்று கொண்டு இருந்த ஆட்டோ வில் ஏறி சென்றாள்.

மனதை தைரிய படுத்திகொண்டு அவளை வேறு ஒரு ஆட்டோவில் பின் தொடர்ந்தான்


காட்சி 4: (மாலாவின் வீடு)

வாசலிலே நின்ற கூட்டம் இவளுக்கு தானாய் வழி விட்டது.

உள்ளே சென்ற மாலா அமுதன் அகால மரணத்தை கண்டு தன்னை அறியாமல் அழுகை பீறிட்டது. அதகுள் அங்கு வந்து சேர்ந்த கண்ணன் நடப்பதை அறிந்தாலும் நடந்ததை யூகிக்க முடியாமல் அமுதன் அருகில் கிடந்த பொண்ணை பார்த்து அவனும் அழ ஆரமித்தான், அது வேறுயாருமல்ல அவனது மனைவி. அழுகையை அடக்கி கொண்டு சமையல் அறைக்கு சென்ற மாலா தான் விஷம் கலக்கி வைத்திருந்த பால் பாத்திரம் காலியாக இருப்பதை பார்த்தாள்.

ஆறு மாதங்களுக்கு பிறகு...

காட்சி:5 (கண்ணன் வீடு)

"என்னங்க அலுவலகத்துல இருந்து சீக்கிரமா வந்துடீங்க, உடம்பு ஏதும் சரி இல்லையா?"

என்று மாலா வாசலில் வரும் கண்ணனை பார்த்து கேட்டுக்கொண்டே அவனை நோக்கி செல்கிறாள்.

கண்ணன் பதில் ஏதும் கூறாமல் அவளிடம் ஒரு கடிதத்தை நீட்டுகிறான். அதை படித்த மாலா உள்ளம் உடைத்து கிழே விழுந்தாள்.

அந்த கடிதத்தின் சாரம்சங்களாவது

இனிய புதுமண தம்பதிகளுக்கு வணக்கம்,

காதலித்தீர்கள் காதல் கை கூடாமல் கலைந்து ஆளுக்கொரு வாழ்கையை அமைத்துக்கொன்டீர்கள். கால ஓட்டத்தில் விபத்தாய் மீண்டும் நடந்த சந்திப்பு உங்கள் காதலின் இரண்டாம் அத்தியாத்திற்கு அடித்தளமானது.

திசை மாறிய பறவைகள் உல்லாச பறவைகள்யானிர்கள். உங்கள் ஓட்டத்தை தடுக்க முயற்சி செய்தவர்கள், நீ உனக்காக வெட்டிய குழியில் விழுந்து மாண்டு விட்டார்கள். உங்கள் களங்கத்தை நீக்க அவர்கள் இன்னுயிரை தியாகம் செய்து விட்டார்கள்.

உண்மையை ஒழிந்தது பொய்யை வெளிச்சமிட்டு காட்டிய உங்கள் முகமுடியை விரைவில் தோலுரித்து காட்டுவேன்.அப்போது உண்மையின் சக்தியை உணர்ந்து கொள்வீர்கள்.

அன்புடன்,

விபரம் அடுத்த மடலில்

பொறுப்பு அறிவித்தல் : இது ஒரு மீள் பதிவு


Thursday, December 4, 2008

ராம்கோபால்வர்மாவின் அடுத்த கதை

பொறுப்பு அறிவித்தல் : மும்பை தீவிரவாத தாக்குதலில் இறந்த மக்களின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்

படத்தோட எழுத்து போடும் போது கூகிள் எர்த், ஏ.கே 47 துப்பாக்களை, சாட்டிலைட் போன் பயன்படுத்தும் முறைகளை காட்டிவிட்டு விட்டு, தீவிர வாதிகள் படகை கடத்தும் முறை எல்லாத்தையும் விளக்கமாக சொல்லப்படுகிறது.

புனேயிலே சோனு மும்பைக்கு ரயில் ஏற தயாரா இருக்காங்க, அவங்க யாரையோ தீவிரமா தேடிக்கிட்டு அவங்க கைபேசியிலே இருந்து எதோ ஒரு எண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறாள்.ரயில் கிளம்பினதும் வெறுப்பாக அவள் இடத்திற்கு வரும் போது, அவள் யாரை தேடிக்கொண்டு வந்தாளோ அவன் அவள் இடத்தில் இருப்பதை பார்த்து, அவனிடம் சண்டை போடுகிறாள், அவன் வேறு யாரமல்ல அவளின் காதலன் சுனில்.அவனிடம் இருந்து பிரியா விடை பெற்று மும்பை கிளம்புகிறாள் சோனு.

கள்ள தோணியிலே வந்த தீவிரவாதிகள் மும்பையில் வந்து இறங்குகிறார்கள், அவர்கள் முன்று குழுக்களாக பிரிந்து மும்பை ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.அங்கே இறந்தவர்களை எல்லாம் சகட்டு மேனிக்கு சுட்டு(பழமைபேசி விளக்கம் தருவாரு) தள்ளுகிறார்கள், அந்த கலவரத்தில் ரயில் நிலையம் வந்தடையும் சோனுவையும் தீவிரவாதிகள் பிணைய கைதியாக பிடித்துச் செல்கிறார்கள்.இதற்குள் விபரம் தெரிய வரும் மும்பை தீவிரவாத தடுப்பு படை ரயில் நிலையத்திற்கு வருகின்றனர்,அவர்களில் பலரை சுட்டு தள்ளி விட்டு தீவிரவாதிகள் குழுக்களாக பிரிந்தது மும்பை நரிமன் ஹவுஸ், டிரைடென்ட் ஹோட்டல், தாஜ் ஹோட்டல் பிரிந்து சொல்கிறார்கள், சோனுவையும் இழுத்து செல்கிறார்கள்.

ஊடகங்கள் வாயிலாக தன் காதலி கடத்தப்பட்டதை தெரிந்து கொண்டு அவளை தேடி மும்பைக்கு வருகிறான் சுனில். உள்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு என்.எஸ்.சி யும் ராணுவமும் வரவழிக்க படுகிறது, தீவிரவாதிகள் மூன்று இடங்களுக்கு பிணைக் கைதிகளோடு பிரிந்து சென்று விட்டதாக தகவலும் கிடைக்கிறது.

சுனில் தன் காதலியை தேடி முதலில் டிரைடென்ட் ஹோட்டலுக்கு செல்கிறான்,யாருக்கும் தெரியாமல் ஹோட்டலுக்குள் நுழையும் சுனில் தீவிரவாதிகள் நடத்தும் அட்டூளியத்தை நேரில் பார்க்கிறான், ஹோட்டல் முழுவதும் தேடி அவன் காதலி கிடைக்க வில்லை, இதற்குள் அங்கு இருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினால் கொல்லப்படுகிறார்கள், அடுத்ததாக சுனில் நரிமன் ஹவுஸ்க்கு செல்கிறான். அங்கும் அவனால் சோனுவை கண்டு பிடிக்க முடிய வில்லை,ஆனால் அவனுடைய உதவியால் ஒரு தீவிரவாதியை இராணுவம் உயிருடன் பிடிக்கிறது.

மூன்றாவதாக தாஜ் ஹோட்டலுக்கு செல்கிறான் சுனில், அங்கு தன் காதலியின் தன் காதலியை கண்டு பிடிக்கிறான், அவளை காப்பாற்றி தன்னுடன் வருமாறு சொல்லுகிறான். தீவிரவாதிகள் நடத்திய அட்டூளியத்தை நேரில் பார்த்த சோனு,தன்னை போல அப்பாவி மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை விட்டு விட்டு தான் மட்டும் வர முடியாது என்றும் அவர்களோடு தான் நானும் வெளியே போவேன் இல்லையேல் சாவேன் வீர வசனம் பேசுகிறாள், இதை இடைவேளை வசனமா வைக்க முடியுமான்னு தெரியலை.

ஏற்கனவே கொலை வெறி கோபத்திலே(இந்த பதிவை படிச்சவங்க மாதிரி) இருக்கிற சுனில், இதை எல்லாம் கேட்டு கொதித்து எழுந்து அவனே ஒரு தீவிரவாதியாக மாறி,உண்மை தீவிரவாதிகளை கொன்று, இருந்த பிணைக் கைதிகளை விடுவித்து தன் காதலியை யும் விடுவித்து ஹோட்டல் மேலே இருந்து வெற்றியின் அடையாளத்தை காட்டும் போது, அவனும், அவன் காதலியும் பாதுகாப்பு படைகளினால் சுட்டு கொல்லப் படுகிறார்கள்.

தீவிரவாதிகளுக்கு பலியாகும் மக்களும் போர் வீரர்களே என்பதை உணர்த்தும் கதை,ராணுவத்தை குறை ௬றும் படமுன்னு யாரும் நினைக்க ௬டாது,மேலும் செய்தி தாள் நிறுவங்களின் ௬த்துக்களும், அரசியல் வாதிகளின் கயவாளிதனங்களையும் படமா வெளியே வந்தா பார்க்கலாம். படத்திலே பாட்டே கிடையாது என்பதை சோகத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

பின் அறிவிப்பு : படம்(ராமநாராயணன் பாம்பு இல்ல) எடுக்கணுமுன்னு யாரும் குடுகுடுப்பை மாதிரி போட்டி நிறைய டாலர் வச்சுக்கிட்டு என்ன பண்ணன்னு தெரியாம இருந்த, அவிங்க கோவணம் இந்த படத்திருக்கு தாயாரிப்பாளர் ஆனா பிறகு கிழியும்,இவ்வளவு தூரம் வந்த நீங்க கொஞ்சம் கதை பத்தி கதைச்சுட்டு போங்கோ


Tuesday, December 2, 2008

வட அமெரிக்கா பதிவர்கள் சந்திப்பின் ரத்தின சுருக்கம்

முக்கிய அறிவிப்பு :இரண்டு மணி நேர பதிவர் சந்திப்புக்கு நான்கு மணி நேரம் பயணம் செய்து வந்த ச்சின்னப்பையன், சத்தியராஜ்,[இளா,மருத நாயகம்](ஜெர்சி சிட்டி --> பென்சில்வேனியா -->ஜெர்சி சிட்டி --> எடிசன்) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

சந்திப்பு குறித்த நேரத்திலே ஆரமித்தாலும் தாமதமா தான் நான்/நாங்க போனோம். மும்பை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும், இலங்கை இனப்படுகொலைக்கு இறந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தி விட்டு, நேராக பதிவர் அறிமுக விழாவிற்கு சென்றோம்.

கே.ஆர்.எஸ் ஆன்மிகம் பத்தியே எழுதுறதை எல்லாம் பாத்து, அவர் எல்லாம் தாடி வச்சு முனிவர் மாதிரி இருப்பாருன்னு நினைச்சேன், ஆனா அங்கே ரெம்ப இளமைய வந்தார்.

இலவசகொத்தனார் பெயரை வச்சு எங்க ஊரு கொத்தானார் மாதிரி இருப்பாரோன்னு நினைச்சேன், ஆனா அவரு பதிவை இலவசமா கட்டுர கொத்தனார்ன்னு அப்புரம்மா தான் தெரிஞ்சது, விளக்கம் கிழே
http://elavasam.blogspot.com/2006/01/1.html

இளா பத்தி சொல்லனுனா இன்னொரு பெரிய பதிவே போடலாம், சுருக்கமா சொன்ன அவரு சிக்ஸ் பாக் இல்லாத பாலிவுட் நடிகர் மாதிரி இருந்தார்.

மருதநாயகம் கமல் மாதிரி முக அலங்காரம் பண்ணி வயசை குறைக்க வில்லை,ஆனா அவர் அளவுக்கு சுத்த தமிழ்ல பேசல நாலும், நல்லாவே தமிழ் பேசுனாரு

மோகன்கந்தசாமி வாலிப புள்ள ஆனா என்னை மாதிரி வாயசான ஆள் மாதிரி வந்தார்

ச்சின்னப்பையன் பேசினா ப்பெரியபையன் மாதிரி இருந்தது, அப்படி ஒரு அமைதியா இருந்தாரு, வீட்டிலே ஏதும் கடின பயிற்சி கொடுத்தாங்களான்னு தெரியலை !!

சத்தியராஜ் நிறை குடம் என்பது தெள்ள தெளிவா தெரிஞ்சது

சுதன் நான் பேசினா கை தட்டனுமுன்னு சொல்லி ௬ட்டிடுபோனேன், என்னை தவிர எல்லோருடைய பேச்சுக்கும் கை தட்டினாரு

ரோஹன் இவரை பத்தி நிச்சயம் சொல்லி ஆகணும்,சென்னை எல்லை கோட்டை தாண்டிய வுடனே எலிசபெத் ராணி பேரன்/பேத்தி மாதிரி பேசும் தமிழ் மக்கள் மத்தியிலே,தமிழ் நாட்டு வாடை கொஞ்சம் ௬ட இல்லனாலும், தமிழ் படிக்கணும்,தமிழ் பேசனுமுன்னு அவர் சொல்லும் போது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது, அவர் தமிழிலும் பேசிக்காட்டினார், நமிதாவை விட நல்லா தமிழ் பேசுகிறார், அவருக்கு தமிழ் நாட்டுல பெரிய எதிர்காலம் இருக்குன்னு சொல்ல மறந்து விட்டேன்.

மொக்கைச்சாமி பெயரு தான் மொக்கை, உருப்படியானதை தவிர வேறு ஏதும் பேச வில்லை

தமிழோவியம் கணேஷ் மற்றும் ஜெய் அந்த காலத்திலே இருந்து பதிவுகளை வாசித்து கொண்டு வெளியே இருந்து ஆதரவு தெரிவிக்கும் நல்ல உள்ளங்கள், அவங்களோட சூடான இடுக்கைக்கு ஒரு பதிவு போகணுமுன்னா அதுக்கு ஒரு வரை முறை இருக்கு, அது இந்த பதிவுக்கு மட்டுமல்ல எனது எந்த பதிவுக்கும் பொருந்தாது, விவரம் வேண்டும் என்றால் அடுத்த பதிவர் சந்திப்புக்கு வரவும்.

இப்படியாக அறிமுகத்தை முடித்து விட்டு ட்விட்டர் பத்தி தகவல் களை தெரிந்து கொண்டோம் பழுத்த பதிவர்களிடம் இருந்து, அப்புறமா மொக்கை பதிவு எப்படி கண்டு பிடிப்பது என்பதை பற்றிய கேள்வி கொஞ்ச நேரம், அதற்க்கு கொத்தனார் ஒரு விளக்கம் கொடுத்தாரு, அதை சொன்ன வுடனே என் மனசிலே நினைச்சது நல்ல வேளை அவர் என் பதிவை எல்லாம் படிக்க வில்லைன்னு மனசுக்குள்ளே நினைத்து கொண்டேன்(இந்த பதிவு உட்பட), அந்த விளக்கம் என்ன வென்றால்............. ..................... ............ இது தான்.

எல்லோரும் ஏன் அமெரிக்கா வரைபடத்தை தலையில் வச்சு தூங்குறாங்க என்பதை பத்தி விவாதம் ஆரமிச்சதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலை.முழு நேர வலை பதிவர்கள் பற்றி கொஞ்சம் பேச்சு அடிபட்டது.அப்புறமா சாப்பாடு அதை யாரும் நல்ல வேளை புகை படம் எடுக்க வில்லை,முடித்து விட்டு வெளியே வந்து சிறிது நேரம் மொக்கை போட்டு விட்டு கடை யை காலி செய்தோம்.

பதிவர்களின் சந்திப்பின் புகை படங்கள்

http://mohankandasami.blogspot.com/2008/11/blog-post_30.html

http://www.boochandi.com/2008/12/2-of-2.html

http://www.boochandi.com/2008/12/1-of-2.html

(தலைப்பில் உள்ள ரத்தின சுருக்கம் பழமைபேசி விளக்கம் தருவாரு)