Monday, June 15, 2009

உயிர் காக்கும் மருத்துவம்

"டாக்டர் ஐயா ஒரு அவரச கேஸ், முச்சி பேச்சி இல்லாம வந்து இருக்கு."

இதை கேட்டதும் போன மாதம் வாங்கும் போது இருந்த வெள்ளை நிறம் மாறி மஞ்சள் நிறமாகிப் போன தனது மேல் உடையை எடுத்து அணிந்து கொள்கிறார், நர்ஸ் அதில் இருந்து வரும் வாசனைக்கு மூக்கு சாய்க்காமல் தன் முகத்திலே பரபரப்பை காட்ட நடித்து தோல்வியுற்று முகத்தை வெறுபக்கமா திருப்பி அறையை விட்டு ஓடுகிறாள், அவள் ஓடுவத்தின் காரணம் தெரியாமல் மருந்துவரும் அவள் பின்னால் ஓடுகிறாள் நோயாளியை தேடி.நோயாளியை அடைந்து

"நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை எல்லாம் கொடுத்தாச்சா?"

"குடுக்கணும், எங்க ஆரம்பிக்கன்னு தெரியலை டாக்டர்?"

"இதயம், நாடித்துடிப்பு எல்லாம் பாருங்க?"

"பார்த்தேன் எல்லாம் சாதாரணமாத்தான் இருக்கு"

"நோயாளி கண்ணை திறந்து பாருங்க?"

கண்ணை திறக்கும் போது நோயாளி முழித்துக்கொண்டு

"டாக்டர், நர்ஸ் என் கண்ணை பிடுங்குறாங்க, சொல்லுங்க.. ஏற்கனவே எனக்கு மாலைகண் நோய் இருக்கு, நல்ல கண்ணா பாத்து பிடுங்குங்க,"டாக்டர் இந்த ஆஸ்பத்திரியிலே கிட்னி எல்லாம் திருட மாட்டீங்க தானே?"

"நீங்க பயபடுகிற அளவுக்கு ஒன்னும் நடக்காது"

"நீங்க கொஞ்சம் கண்ணை முடுறீங்களா?"

"டாக்டர் ஏன் கண்ணை மூட சொல்லி கிட்னியை திருடப் போறீங்களா ?"

ஸ்ஸ்ஸ்ஸ், வாயை மூடுங்க..

"வாயை மூடினால் எப்படி பேச ......"

"டாக்டர் இந்த ஆளு மயக்க ஊசி போடாமலே மயங்கிட்டன்"

"அவன் மயங்கினது உன் கை மருந்து வாசனைக்கு"

"டாக்டர் இப்ப என்ன பண்ணல்லாம்?"

"கையை நல்ல சோப்பு போட்டு கழுவிட்டு, இவரை உள்ளே சேருங்க"

நோயாளி உள்ளே சேர்த்து அடுத்த அரைமணி நேரத்திலே டாக்டர் அறைக்கு ஓடிய நர்ஸ்

"டாக்டர்.. டாக்டர்.. ஒரு முக்கிய செய்தி?"

"செய்தியை சொல்லும் முன்னே நீ முக்கிய செய்தியா மாறிடுவ போல இருக்கு, கொஞ்சம் மெதுவா வரவேண்டியாதானே?"

"நாமே கொஞ்ச நேரம் முன்னாடி உள்ளே சேர்த்த நோயாளி காவல் துறையாலே தேடப்படும் குற்றவாளி, இதோ பாருங்க இவனோட படம் போட்ட காவல் துறை விளம்பரம்"


இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது இன்னொரு நர்ஸ் ஓடி வருகிறார்கள்.

"டாக்டர் சீக்கிரம் வாங்க, அந்த நோயாளி அங்கே கலவரம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்"

இருவரும் நோயாளிகள் அறையை நோக்கி செல்கின்றனர்,அங்கே அவர் கட்டில் மேலே ஏறி நிற்பதை பார்க்கின்றனர்.உடனே டாக்டர்

"தயவு செய்து கட்டிலை விட்டு கிழே இறங்குங்க"

"டாக்டர் என்னை வெளியே அனுப்புவேன்னு சொல்லுங்க, அப்பத்தான் இறங்குவேன், நான் இங்கே இருந்தா நீங்க என்னை மேல அனுப்பி விடுவீங்க"

"இவரை யாரு கொண்டு வந்தது இங்கே"

"நானாகவே வந்தேன் டாக்டர்"

"நான் உங்களை உடனே வெளியே அனுப்புறேன், நீங்க முதல்ல இறங்குங்க"

நர்ஸ்சிடம் கண்ணை காட்ட, அவர்கள் தயார் நிலையிலே இருப்பதாக கண்ணால் மறுமொழி கூறினார்கள்.நோயாளி கிழே இறங்கியதும்

"நீங்க இந்த பேப்பர் ல கையெழுத்து போட்டு விட்டு கிளம்பவும்"


"சரி பேனா கொடுங்க"

பேனா எடுக்கும் போது நர்ஸ் வைத்து இருந்த மயக்க ஊசி கிழே விழுகிறது, அதைப் பார்த்ததும்

"எனக்கு மயக்க ஊசி போட்டு என் கிட்னியை எடுக்க போறீங்களா?"

"அடங்குடா.." என்ற நர்ஸ் அவனை கிழே தள்ளி விடுகிறார்.

"டாக்டர்.. டாக்டர் சீக்கிரம் வாங்க இங்கே"

"நான் மருந்து எடுத்துட்டு வாரேன்"

"தேவை இல்லை உங்க கைய குடுங்க" என்றவள் டாக்டர் கையை நோயாளின் முகத்திலே வைக்க அவன் மயங்கி விடுகிறான்.

"எப்படி?"

"நீங்களும் நம்ம ௬ட்டம்தானே"

"சரி.. சரி.. நான் போய் கையை கழுவிட்டு வாரேன், அதுக்குள்ளேயும் நீங்க இவனுக்கு ஊசி போட்டு வையுங்க"

அடுத்த கால் மணி நேரத்திலே மருத்துவர் அறையிலே அவர் சில கட்டளைகள் இடுகிறார், எனக்கு என்னவோ அவன் மனநிலை பாதிக்க பட்டவனாக தெரிகிறான், அதற்கான சோதனை செய்ய வேண்டும், நீங்கள் ஆயத்தம் செய்யுங்கள் நான் வருகிறேன்.

மறு நாள் காலை :

நோயாளியாய் நேற்று பார்த்த நண்பர்,கை கடிக்கரத்தை பார்த்து கொண்டு

"என்ன இன்னும் ஆளைகானும், பொருளை கை மாத்தி விட்டுட்டு வேலைக்கு போகணும்"

அவன் பேசி முடிப்பதற்குள் அவனுக்கு பக்கத்திலே ஒரு கார் வந்தது, அதன் கதவு திறந்து அவன் உட்பிரவேசித்தான், உள்ளே இருந்த ஆள்களை நேட்டம் விட்டவன் ஒரு பெண்ணை பார்த்து

"ஏய்.. நீ எப்படி இங்கே உன்னை நேத்து மருத்துவ மனையிலே பார்த்து இருக்கேன்"

"கொஞ்சம் பேசாம வாரியா, நீ பண்ணின காரியத்தாலே நாம எல்லோரும் மாட்டி இருப்போம், மேடத்தை ஏதும் குறை சொல்லாதே"

என் முன் இருக்கையிலே அமர்ந்தவரின் குரலை கேட்டு பதில் ஏதும் சொல்லாமல் தன கையிலே இருந்த பையை தொட்டு பார்த்தான்.

"ஐயயோ..பொருளை காணும்.. பொருளை காணும்.. வண்டிய நிறுத்துங்க,நான் ரெண்டு கொண்டு வந்தேன், ஆனா ஒண்ணு தான் இருக்கு"

"டேய் நீ பேசாம வண்டிய ஓட்டு, பொருள் பத்திரமா இருக்கு, நீ கொஞ்சம் அமைதியா இரு" மீண்டும் அவரின் குரல்.

வண்டி ஊருக்கு ஒதுக்கு புறமாக நின்றது, முன் இருக்கையிலே இறங்கியவர் ஒரு மரத்தின் மறைவிலே சென்று ஒரு பெட்டியை எடுத்து வந்தார்.

"மேடம் நீங்க கேட்ட 5 லட்சம், உங்க உதவியை நாங்க மறக்க மாட்டேன்"

பையை வாங்கிய அவள் "என்னை பாகத்திலே இருக்கிற பேருந்து நிலையத்திலே விட்டுடுங்க"

அவளை இறக்கி விட்டதும்

"எதுக்கு அந்த அம்மாவிடம் நீ ரூபா கொடுத்தே"

"அடிச்ச பொருளை எப்படி எடுத்திட்டு வரணுமுன்னு தெரியலை, உன்னை எல்லாம் நல்ல சுண்ணாம்பு காவையிலே வச்சி அவிக்கணும், நீ தவறி விட்டுவைத்த பொருளை அவங்கதான் கொண்டு வந்து கொடுத்தாங்க"

"எத்தனி கொடுத்தாங்க?"

"நாம நினைச்சது ரெண்டு, ஆனா அவங்க ஒண்ணு இலவசமா கொடுத்தாங்க, ஆக மொத்தம் முணு,சரி எனக்கு நேரம் ஆச்சி நான் கிளம்புறேன் அப்புறம் பேசலாம் "

அடுத்த காலையிலே செய்து தாள்களில் :

"பயங்கரம் மருத்துவ மனையிலே மருத்துவர் இருவரிடம் கிட்னி திருட்டு, குற்றவாளிக்கு வலைவீச்சு" அதைபடித்து கொண்டு இருந்த நோயாளி நண்பன் தன் இடுப்பிலே ஒரு வித வலி வரையும் தன் இடுப்பை தடவிய போது கையிலே தென்பட்டது மருத்துவ மனை தையலும் கட்டும்.

பொறுப்பு அறிவித்தல் :
நான் எதோ மருத்துவ அவியல் மன்னிக்கணும் அறிவியல் சம்பதமா எழுதி இருப்பேன்னு நினைத்து யாரவது வந்து இருந்தால் அவங்களுக்கு நான் சொல்வது என்னனா, கள்ளு கடையிலே எப்படி ஆட்டுப்பால் கிடைக்கும்


22 கருத்துக்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப ஜாலியா எழுதியிருக்கீங்க தல..,

நகைச்சுவை தாண்டவமாடுகிறது. அற்புதம்.

அதேபோல் கிட்னி எடுப்பதெல்லாம் அவ்வளவு சாதாரணமாக எடுக்க முடியாது.ல்

Anonymous said...

கள்ளு கடையிலே எப்படி ஆட்டுப்பால் கிடைக்கும்

//

அடடா.... ரொம்ப அருமை.

ஆ.ஞானசேகரன் said...

//கள்ளு கடையிலே எப்படி ஆட்டுப்பால் கிடைக்கும்//




நண்பரே நல்ல நகைசுவையுடன் எழுதியுள்ளீர்கள், அதென்ன கள்ளுக்கடை அதைப்பற்றியும் எழுதுங்க....

T.V.ராதாகிருஷ்ணன் said...

ந..ந..ந..


(நல்ல நகைச்சுவை நசரேயன்)

RAMYA said...

இப்போதைக்கு உள்ளேன் மட்டும் நாளைக்கு வாரேன்!

குடுகுடுப்பை said...

ஆட்டுப்பால் வேண்டாம் கள்ளே குடுங்க

அ.மு.செய்யது said...

//டாக்டர் ஐயா//

ம‌ருத்துவ‌ர் ஐயா என்று ஆர‌ம்பித்திருந்தால் க‌ளேப‌ர‌மாக‌ இருந்திருக்கும்.

அ.மு.செய்யது said...

//டாக்டர் ஏன் கண்ணை மூட சொல்லி கிட்னியை திருடப் போறீங்களா ?"//

ந‌ச‌ரேய‌ன் ட‌ச்.

அ.மு.செய்யது said...

// ஒரு வித வலி வரையும் தன் இடுப்பை தடவிய போது கையிலே தென்பட்டது மருத்துவ மனை தையலும் கட்டும்.//

அட்லீஸ்ட் ஒரு ஜிப் வ‌ச்சி த‌ச்சிருந்தாலாவ‌து உள்ள‌ என்ன‌ன்ன‌ போச்சுன்னு தொற‌ந்து பாத்துக்கலாம்.
( உப‌ய‌ம்: விவேக் )

அ.மு.செய்யது said...

//கள்ளு கடையிலே எப்படி ஆட்டுப்பால் கிடைக்கும்//

அப்ப‌டியெல்லாம் சொல்லாதேள்..ந‌ல்ல‌ விழிப்புண‌ர்வு ப‌திவு.

புதியவன் said...

//கள்ளு கடையிலே எப்படி ஆட்டுப்பால் கிடைக்கும்//

உங்களுக்கு ரொம்ப பொறுப்பு தான்...

sakthi said...

நான் எதோ மருத்துவ அவியல் மன்னிக்கணும் அறிவியல் சம்பதமா எழுதி இருப்பேன்னு நினைத்து யாரவது வந்து இருந்தால் அவங்களுக்கு நான் சொல்வது என்னனா, கள்ளு கடையிலே எப்படி ஆட்டுப்பால் கிடைக்கும்

அதானே அப்படி எல்லாம் நம்பலைங்க
நசரேயன் அண்ணா...

ஷண்முகப்ரியன் said...

"பயங்கரம் மருத்துவ மனையிலே மருத்துவர் இருவரிடம் கிட்னி திருட்டு, குற்றவாளிக்கு வலைவீச்சு" //

இது வரை வராத,நான் எங்கும் படிக்காத தீம்,நச்ரேயன்!

Thamiz Priyan said...

கலக்கல்!
கிட்னி எடுப்பதெல்லாம் அவ்வளவு சாதாரணமாகசொல்லிட்டீங்களே.. ;-))

Anonymous said...

இங்கப் போய் அறிவியல் ரீதியா எதிர்ப்பார்போமா? ஆட்டுப்பாலைத் தான் எதிர்ப்பார்த்தோம் நல்ல களியாட்டுப்பால்.... நகைசுவைத் தென்றல் நீங்கள்....

புல்லட் said...

உப தொழிலா வடிவேலுக்கு வசனம் எழுதுங்க சார்... படம் பிச்சிக்கினு ஓடும்...ஹிஹிஹ!

Suresh Kumar said...

நல்ல நகைச்சுவை

Vidhoosh said...

// நர்ஸ் அதில் இருந்து வரும் வாசனைக்கு மூக்கு சாய்க்காமல்//

:)) என்ன இது. அடிக்கடி இப்படி உண்மையெல்லாம் போட்டு உடச்சுண்டு.

Vidhoosh said...

இங்க சிரிப்பா சிரிச்சிட்டு இந்த (http://enganeshan.blogspot.com/2009/06/blog-post_15.html) லிங்க்-ல இருக்கற பதிவப் படிச்சேனா .... தலை கிர்ர்ர்...

சந்தனமுல்லை said...

//
நோயாளியாய் நேற்று பார்த்த நண்பர்,கை கடிக்கரத்தை பார்த்து கொண்டு

"என்ன இன்னும் ஆளைகானும், பொருளை கை மாத்தி விட்டுட்டு வேலைக்கு போகணும்"//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! கிட்னி ஒரு பொருளாகிடுச்சா!!

வில்லன் said...

//கள்ளு கடையிலே எப்படி ஆட்டுப்பால் கிடைக்கும்//

வாஸ்தவமான பேச்சு. மலையாள படம் கதை வசனம் (திருட்டு பூனைகள், காதலிக்கு கல்யாணம்) எழுதுற நசரேயன் எப்படி அறிவியல் கட்டுரை எழுத முடியும்.

Tech Shankar said...

Punch.. gr8. Here also the same
//.கடைசியாக அழுதது எப்பொழுது?

கலயாணம் கட்டிக்கிட்டு தினமும் அழுகிறேன், குறிப்பா என்னத்தை சொல்ல