மென்துறையிலே வெளிநாட்டு பயணம்
கர்நாடகத்திலே இருந்து காவிரி தண்ணிக்கு தான் தடை(டா) உத்தரவு இருக்கு, நல்லவேளை தமிழனுக்கு வேலை கொடுகத்திலே இல்லை, அப்பேற்பட்ட ஊரிலே எனக்கும் வேலை கிடைத்தது. தேடு வண்டியின் உதவியோடு வேலையை ஆரம்பித்த நான், அடிமாடா போன நான் பொமேரியன் நாய் குட்டி ஆகிட்டேன்.
செஞ்சு கிட்டு இருந்த வேலை முடிஞ்ச உடனே, நீ நல்லா தேடுறன்னு சொல்லி உன்னை வெளி நாட்டு தான் அனுப்புவோம் சொல்லி ஒரு ஓரமா உக்கார வச்சுட்டாங்க, நான் இன்னிக்கு வரும், நாளைக்கு வரும்முன்னு காத்து இருந்து ஆறு மாசம் ஓடிபோச்சு, என்னடா கோவிலுக்கு நேந்து விட்ட கடா மாதிரி இருக்கோ மென்னு இருந்தப்பத்தான், உனக்கு புது வேலை கனடாவில் இருக்கு நீ அடுத்த வாரமே கிளம்பனும் உன் பேப்பர் எல்லாம் கொடு விசா எடுக்கணும் ன்னு சொன்னங்க.

எங்க ஊரிலே இருந்து தினமும் நாலு பேரு வெளிநாடு போயிட்டு வருவாங்க, அதனாலவோ என்னவோ எங்க ஊரிலே இருந்து என்னை வழி அனுப்ப ரெண்டு லாரி யில் சொந்த்தக்காரங்க வந்துட்டாங்க.விசா வந்தாச்சு, விமான பயண சீட்டு வந்தாச்சு, எங்க மேனேஜர் வேற நிறைய ப்ராஜெக்ட் சம்பந்தமா நிறைய டாகுமென்ட் எல்லாம் கொடுத்தார், நான் எப்ப வேணுமுனாலும் உனக்கு ப்ராஜெக்ட் சம்பந்தமா தகவல் தருவேன் அதனாலே கைபேசியை அணைக்க வேண்டாமுன்னு சொல்லிட்டாரு.
நீங்க ரெம்ப நல்ல மனுஷன் உங்களுக்கு என்னால குஸ்பு,நயன்தாரா மாதிரி கோவில் கட்ட முடியாவிட்டலும், என் மனசுல கட்டிகிறேன்னு நினைச்சி கிட்டேன்.
ஊரிலே இருந்து வந்த எல்லோரும் விமான நிலையம் வந்தோம், கட்டுகங்கா ௬ட்டத்தை பார்த்ததும் விமான நிலையம் திணறி போச்சி,மந்திரி வெளிநாட்டு போனாலே அவ்வளவு ௬ட்டம் வருகிறது சந்தேகம் தான், ௬ட்டத்தோடு விமான நிலையம் வாசலுகுள்ளே போகும் போது அலைபேசியிலே அழைப்பு வந்தது, எடுத்து பேசினேன்.
"ஹலோ நசரேயன், எங்கே இருக்கீங்க"
"விமான நிலையம்"
"நீ போற ப்ராஜெக்ட் தேதி தள்ளி வச்சாச்சி, அதனாலே நீங்க வீட்டுக்கு கிளம்பி வாங்க"
"பெட்டி எல்லாம் செக் இன் பண்ணிட்டேன்"
"ஒன்னும் கவலைப்படத்தேவை இல்லை, ஏற்கனவே உன் விமான சீட்டு ரத்து பண்ணியாச்சி, அவங்களே உன் பெட்டிய கொண்டு வந்து கொடுப்பாங்க"
அப்படி சொல்லி போனை வைக்கலை என் பக்கத்திலே எல்லா பொட்டியும் இருக்கு, வேற வழி இல்லாம வீடுக்கு வந்தேன், அடுத்து ஒரு வாரம் வெளியே தலையை காட்டலை, போஸ்டர் ஒட்டாத குறையா எல்லோரிடமுன் வெளிநாடு போறேன்.. வெளி நாடு போறேன்.. சொல்லி வச்சி இருந்தேன்.
அடுத்த ரெண்டு வாரத்திலே மறுபடியும் ௬ப்பிட்டு அடுத்த வாரம் வேற ப்ராஜெக்ட் க்கு நீ கனடா போற இந்த தடவை எல்லாம் பக்கவா இருக்கு, நீ கண்டிப்பா போவ, வீட்டிற்கு போன் பண்ணினேன், லாரியிலே வர ஆள் இல்லாததினாலே எல்லோரும் ஒரு வேனிலே வந்தார்கள். இந்த முறை போன் கால் ஏதும் வரலை, நான் விமானம் உள்ளே பொய் விட்டேன். கை பேசி எல்லாம் அணைக்க சொன்னார்கள், இனிமேல தொல்லை இல்லை கண்டிப்பா கனடா போய்டுவேன்னு நிம்மதி வந்தது.
விமானம் கிளம்பும் முன் " செல்பாணி.. செல்பாணி.. உங்களுக்கு ஒரு தகவல்" ரெண்டு மூணு தடவை ௬ப்பிட்டங்க, நான் யாரோ ன்னு நினைச்சி அமைதியா இருந்தேன், கொஞ்ச நேரத்திலே விமான அழகி வந்து என் சீட்டை வாங்கி பார்த்து
"எவ்வளவு நேரம் உங்களை ௬ப்பிடுவது..சீக்கிரம் எழுந்து வாங்க"
நான் அப்பத்தான் பேரை பார்த்தேன், என்னோட கடைசி பெயரு செல்லப்பன், எங்க அப்பா பேரு அதைதான் அம்புட்டு கொலை பண்ணி ௬ப்பிட்டு இருக்காங்க.
"என்ன விஷயம்னு கேட்டேன்"
"பெட்டிய எடுத்துகிட்டு இறங்குங்க, உங்க திட்டம் கைவிடப்பட்டு விட்டது, நீங்க வீட்டுக்கு போகாலாம்"
"ஐயா என் செக் இன் பெட்டி எல்லாம் ?"
"நீங்க வெளியே வரும் போது உங்களோட வரும்"
வெறுங்கையோடு திரும்பி வந்தேன்,வெளிநாட்டு பயணமே வெறுத்துப்போச்சி, அலுவலகம் போனா இதைபத்தி எல்லாம் யாரும் கண்டுக்கலை, அவங்களுக்கு இது ரெம்ப சாதரணமா இருந்தது. ஒரு மாதம் கழித்து மீண்டும் ஆரம்பித்தார்கள். நான் சொன்னேன்
"ஐயா எனக்கு வெளிநாடு வேண்டாம், நான் இங்கேயே இருந்துக்கிறேன்"
"நசரேயன், இந்த தடவை 100 சதவிதம் உறுதி நீங்க கண்டிப்பா போறீங்க, இதோ கிளிஎன்ட்(client) கடிதம்"
ஆசை யாரை விட்டது, சரின்னு சொன்னேன், ரெண்டு தடவை வழி அனுப்ப வந்து நொந்து போன சொந்தக்காரங்க எல்லாம் என் அம்மாவிடம் "உன் மகனை வெளிநாடு போயிட்டு போன் பண்ணச்சொல்லு அப்பத்தான் நம்புவோம் என் கூறிவிட்டார்கள்.எங்க அம்மாவும் வரலைன்னு சொல்லிட்டாங்க.
ரெண்டு தடவை ஊரிலே இருந்து சொந்தக்காரங்க வந்ததினாலே நண்பர்கள் எல்லாம் பாட்டிலை கண்ணிலே காட்டலைன்னு கொலைவெறி கோபத்திலே இருந்ததாலே, அந்த தடவை நல்லா தண்ணியிலே குளித்தோம். மறுநாள் 2 மணிக்கு விமானம், இங்கே இரவு கும்மாளம் நடக்குது.அடிச்சி முடிஞ்சி தூங்கி எழுது கிளம்பி விமான நிலையம் சென்றேன் காலை 11 மணிக்கு. போனதும் டிக்கெட் காட்டிவிட்டு உள்ளே சென்றான், பெட்டிகளை செக் இன் செய்யும் இடத்திற்கு சென்றேன், நான் விமான சீட்டை கொடுத்தேன். வாங்கிய பெண்மணி என்னையும் விமான சீட்டையும் பார்த்தாள்.
"நேத்து ராத்திரி 2 மணிக்கு போக வேண்டிய விமானத்துக்கு இப்ப வந்து இருக்கீங்க"
"மேடம் நல்லா தேதியை பாருங்க இன்னைக்கு ரெண்டு மணிக்கு"
"இன்னைக்கு தேதிக்கு அதி காலையிலே 2 மணிக்கு போக வேண்டிய விமானம், நீ மதியம் வந்து இருக்க,இது 24 மணி நேர கணக்கு "
"இப்ப என்ன செய்ய?"
"வீட்டுக்கு போங்கோ,உங்க அலுவலத்திலே சொல்லி மறு படி டிக்கெட் எடுக்க சொல்லுங்க"
மறுபடியும் டிக்கெட் எடுக்க சொன்னா என் வேலைக்கே டிக்கெட் எடுத்துவிடுவாங்கனு நினைத்து வேற வழி இல்லாம திரும்பி வந்தேன், நண்பர்களிடம் கலந்து ஆலோசனை செய்ததால் ஒரு முடிவு எடுத்து, மேலாளருக்கு போன் பண்ணினேன்.
"ஹலோ நான் நசரேயன் பேசுறேன்"
"என்ன நசரேயன் அதுக்குள்ளயுமா கனடா போய் விட்டீர்கள்"
"இல்லை, எங்க தத்தா இறந்து விட்டார், அதனாலே நான் ஊருக்கு போக வேண்டிய கட்டாயம், நான் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத ஒரு அவசரம்"
உண்மையிலே எங்க தாத்தா செத்து நாலு வருஷம் ஆச்சி, அவரு என்னை திட்டுவாரோன்னு நினைத்தேன்,ஆனா அவரு
"சரி பரவா இல்லை, நீங்க எனக்கு மெயில் அனுப்புங்க, நான் அலுவலகத்திலே சொல்லி மறு பதிவு செய்ய சொல்கிறேன்" ன்னு சொன்னார்.
அடுத்த ரெண்டு நாள் கழித்து மறுபடி டிக்கெட் எடுத்தார்கள், நான் கிளம்பும் நாள் அன்று நியூயார்க் ரெட்டை கோபுரத்தை சாய்ச்சி புட்டாங்க, பயத்திலே கனடா திட்டம் கை விடப்பட்டது,இந்த தடவை நான் விமான நிலையம் போகும் முன்னே தகவல் கிடைத்தது. அதுக்கு அப்புறம் எங்க வெளிநாடு போக, உலக வரைபடத்தை கையிலே வைத்து இன்னும் சுத்து கிட்டு இருக்கேன் உள்ளூரை.

41 கருத்துக்கள்:
//நான் கிளம்பும் நாள் அன்று நியூயார்க் ரெட்டை கோபுரத்தை சாய்ச்சி புட்டாங்க, //
சந்தேகக் கேஸ் போயிட்டிருக்கா தல..,
வெளியேதானே இருக்கீங்க ?
அட்ச்சி ஆடுங்க...ஆனா, நீங்க இங்க இருந்துட்டு கதையில ஏன் உங்க பேரு? வேற நசரேயனுக்கு பதிலா, கோந்துராயன்னு மாத்திடுங்க...இஃகிஃகி!
so sad..
aamaa nijamaaththaan solreengkala?
அங்கேயிருக்கிற நம்ம மென்பொருள் வல்லுநர்(?!?)களையெல்லாம் திரும்பிப் போக சொல்றாங்க. இப்பப் போயி, கனடா போறேன், உகாண்டா போறேன்னுகிட்டு?
வந்துட்டேன்... மொதல்ல என்ட்ரி போட்டுறேன். அப்புறமா பின்னுட்டம் போடுறேன்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இருக்குற market situation la ஒருவரும் வாரத்துக்கு ஒரு பதிவு கூட போட மாட்டகாங்க நீங்க மட்டும் எப்படி டெய்லி ஒரு பதிவு போட முடியுது. முடியல... அதான் வாய் விட்டு கேட்டுட்டேன்.
//எங்க ஊரிலே இருந்து தினமும் நாலு பேரு வெளிநாடு போயிட்டு வருவாங்க, அதனாலவோ என்னவோ எங்க ஊரிலே இருந்து என்னை வழி அனுப்ப ரெண்டு லாரி யில் சொந்த்தக்காரங்க வந்துட்டாங்க.//
உங்க ஊரிலே இருந்து தினமும் நாலு பேரு வெளிநாடுக்கு இல்ல வெளிஊருக்கு போயிட்டு வருவாங்க.....தவறை திருத்தி விடவும்.
யோவ் உங்க ஊருல எத்தன பேருக்கு எழுத படிக்க தெரியும் உண்மைய சொல்லிரும். முதியோர் கல்வி உங்க ஊருல நெறைய தெருவுல நடத்துறாங்கன்னு கேள்விபட்டேனே. வழக்கமா ஊருக்கு ஒரு முதியோர் கல்வி நிலையம் இருக்கும் ஆனா உங்க ஊருல தெருவுக்கு ஒன்னாமே அப்படியா......
//எங்க ஊரிலே இருந்து தினமும் நாலு பேரு வெளிநாடு போயிட்டு வருவாங்க, அதனாலவோ என்னவோ எங்க ஊரிலே இருந்து என்னை வழி அனுப்ப ரெண்டு லாரி யில் சொந்த்தக்காரங்க வந்துட்டாங்க.//
ரெண்டு லாரிலய இல்ல மட்டு வண்டிலயா
//எனக்கும் வேலை கிடைத்தது. தேடு வண்டியின் உதவியோடு வேலையை ஆரம்பித்த நான், அடிமாடா போன நான் பொமேரியன் நாய் குட்டி ஆகிட்டேன்//
இதை தான் குருட்டு பூனை விட்டத்துல பஞ்ச மாதிரின்னு சொல்லுவாங்களோ!!!!!!!!!!!
//அடிமாடா போன நான் பொமேரியன் நாய் குட்டி ஆகிட்டேன்//
கண்டிப்பா... அடிமாடா போனா மாடு மாதிரி வேல பாக்கணும். பொமேரியன் நாய் குட்டி ஆகிட்டா..... வேலையே பாக்க வேண்டாம்ல. சும்மா சுத்தி வநதாபோதும்.... நாய் குட்டி வேல நமக்கு ஆகாது. அதுல வடக்கூர் காரங்க ரொம்ப கில்லாடி......
//அதனாலவோ என்னவோ எங்க ஊரிலே இருந்து என்னை வழி அனுப்ப ரெண்டு லாரி யில் சொந்த்தக்காரங்க வந்துட்டாங்க.//
அவங்க புத்திய காட்டிட்டாங்களா.... மானத்த வாங்கிட்டான்களே லாரில கட்டுசோத்த கட்டிட்டு வந்து.
//ரெண்டு தடவை வழி அனுப்ப வந்து நொந்து போன சொந்தக்காரங்க எல்லாம் என் அம்மாவிடம் "உன் மகனை வெளிநாடு போயிட்டு போன் பண்ணச்சொல்லு அப்பத்தான் நம்புவோம் என் கூறிவிட்டார்கள்.எங்க அம்மாவும் வரலைன்னு சொல்லிட்டாங்க.//
ஐயோ பாவம். எனக்கு இந்த பாட்டு தான் ஞாபகம் வருது.
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
//எங்க ஊரிலே இருந்து என்னை வழி அனுப்ப ரெண்டு லாரி யில் சொந்த்தக்காரங்க வந்துட்டாங்க.//
வீட்டுல ஸ்பீக்கர் செட் கட்டி பாட்டு போட்டு மைக்ல அறிவிப்பு கொடுத்தியளா..... இல்ல... வீடு வீடா போயி வெத்தல பாக்கு வச்சி அழசியலா......
லாரி வாடகை யாரு கொடுத்தா!!!!!!!!!!!!!!!!! காந்தி கணக்கா................... ஒரே காமெடி போங்க......
//அடுத்த ரெண்டு நாள் கழித்து மறுபடி டிக்கெட் எடுத்தார்கள், நான் கிளம்பும் நாள் அன்று நியூயார்க் ரெட்டை கோபுரத்தை சாய்ச்சி புட்டாங்க, பயத்திலே கனடா திட்டம் கை விடப்பட்டதா,இந்த தடவை நான் விமான நிலையம் போகும் முன்னே தகவல் கிடைத்தது. அதுக்கு அப்புறம் எங்க வெளிநாடு போக, உலக வரைபடத்தை கையிலே வைத்து இன்னும் சுத்து கிட்டு இருக்கேன் உள்ளூரை.//
விதி வலியது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
// Joe said...
அங்கேயிருக்கிற நம்ம மென்பொருள் வல்லுநர்(?!?)களையெல்லாம் திரும்பிப் போக சொல்றாங்க. இப்பப் போயி, கனடா போறேன், உகாண்டா போறேன்னுகிட்டு?//
இப்ப இருக்குற நெலவரதுக்கு உகாண்டா போறது ரொம்ப உத்தமம்.
கலக்கல் தல!!!
வாய்ப்பே இல்லே!!!
:-))))))))))))))))))))
பழமை சொன்ன மாதிரி கோந்துராயன் பேர் வெச்சிருக்கலாம்.
கர்நாடகத்திலே இருந்து காவிரி தண்ணிக்கு தான் தடை(டா) உத்தரவு இருக்கு, நல்லவேளை தமிழனுக்கு வேலை கொடுகத்திலே இல்லை, அப்பேற்பட்ட ஊரிலே எனக்கும் வேலை கிடைத்தது. தேடு வண்டியின் உதவியோடு வேலையை ஆரம்பித்த நான், அடிமாடா போன நான் பொமேரியன் நாய் குட்டி ஆகிட்டேன்.
என்ன ஒரு உவமை
என்னடா கோவிலுக்கு நேந்து விட்ட கடா மாதிரி இருக்கோ மென்னு இருந்தப்பத்தான்,
அப்படின்னா என்ன அர்த்தம்
எங்க ஊரிலே இருந்து தினமும் நாலு பேரு வெளிநாடு போயிட்டு வருவாங்க, அதனாலவோ என்னவோ எங்க ஊரிலே இருந்து என்னை வழி அனுப்ப ரெண்டு லாரி யில் சொந்த்தக்காரங்க வந்துட்டாங்க.
போதுமா???
உனக்கு ப்ராஜெக்ட் சம்பந்தமா தகவல் தருவேன் அதனாலே கைபேசியை அணைக்க வேண்டாமுன்னு சொல்லிட்டாரு.
ரொம்ப சின்சியர் ஆபிசர் போல
நீங்க ரெம்ப நல்ல மனுஷன் உங்களுக்கு என்னால குஸ்பு,நயன்தாரா மாதிரி கோவில் கட்ட முடியாவிட்டலும், என் மனசுல கட்டிகிறேன்னு நினைச்சி கிட்டேன்.
எங்கியோ கட்டினா சரி
வேற வழி இல்லாம வீடுக்கு வந்தேன், அடுத்து ஒரு வாரம் வெளியே தலையை காட்டலை, போஸ்டர் ஒட்டாத குறையா எல்லோரிடமுன் வெளிநாடு போறேன்.. வெளி நாடு போறேன்.. சொல்லி வச்சி இருந்தேன்.
அப்போ போகலை
எனக்கு இந்த விமான சமாச்சாரமெல்லாம் தெரியாது... ஆனா உங்க எழுத்து சுவாரசியம்.
//எங்க ஊரிலே இருந்து தினமும் நாலு பேரு வெளிநாடு போயிட்டு வருவாங்க, அதனாலவோ என்னவோ எங்க ஊரிலே இருந்து என்னை வழி அனுப்ப ரெண்டு லாரி யில் சொந்த்தக்காரங்க வந்துட்டாங்க.//
ஆகா...!
//நான் கிளம்பும் நாள் அன்று நியூயார்க் ரெட்டை கோபுரத்தை சாய்ச்சி புட்டாங்க, பயத்திலே கனடா திட்டம் கை விடப்பட்டதா//
அவ்வ்வ்வ்வ்!
பதிவு சுவாரசியம்! :-)
இது உண்மையா..??
//அடிமாடா போன நான் பொமேரியன் நாய் குட்டி ஆகிட்டேன்.//
ஆஹா...என்ன ஒரு அழகான வளர்ச்சி...
//நீங்க ரெம்ப நல்ல மனுஷன் உங்களுக்கு என்னால குஸ்பு,நயன்தாரா மாதிரி கோவில் கட்ட முடியாவிட்டலும், என் மனசுல கட்டிகிறேன்னு நினைச்சி கிட்டேன்.//
உங்க நன்றியுணர்ச்சிய நெனச்சா மெய்சிலிர்க்க வைக்கிறதண்ணே...
நல்லா இருக்கு....
:-)
உண்மை இல்லையே...??
அனுபவக் கதையா காமடிக் கலக்கலா என்றெல்லாம் யோசிக்க வைக்காமல் படிப்பவரை ஈர்க்கிறது எழுத்தின் ஃப்ளோ. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் நசரேயன்:))!
சம்பவம் உண்மைன்னா சிரிப்பதா அழுவதான்னு தெரியலை ஆனால் படிக்கும் போது நல்லாச் சிரிச்சாச்சி....எதையும் தாங்கும் இதயம் உங்களுடையது......
நீங்கள் சொல்வது போல், இன்ஃபோஸிஸில் இருக்கும் என் தம்பிக்கு இரண்டு முறை நடந்திருக்கிறது. அதிலிருந்து அவன், ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் எங்களுக்கே சொல்கிறான்.
பயணம் நல்லா சொன்னீங்க, இபொழுது எங்கே இருகிங்க நண்பரே? நல்ல எழுதுநடை பாராட்டுகள்
படிக்கிறதுக்கு நல்லாயிருக்கு பாஸ் உங்க எழுத்து நடை.
சும்மா கலக்கறீங்க
:-))))
நல்ல வேல.... பிளைட்டுல பாதி தூரம் போயிகிட்டு இருக்கும்போது .... ப்ரஜச்ட் கேன்சல்னு கீழ தள்ளிவுடாம இருந்தாங்களே..... !!!! அத நெனச்சு சந்தோஷ படுங்க.........!!!!!!!!
அச்சச்சோ.......சுவாரஸ்யமா சொல்லியிருக்கீங்க சோகமான விஷயத்தையும்!!!!
:-))))))))))))))))))))
நீங்கள் சொல்வதில் பிடித்த விஷயம்,அது உண்மையா, பொய்யா என்று கண்டே பிடிக்க முடியவில்லை என்பதுதான்,நச்ரேயன்.!
Post a Comment