வட அமெரிக்க பதிவர் சந்திப்பு
சந்திப்பு அப்படின்னு ஒண்ணு நடத்தி பல வருஷம் ஆனதாலே சந்திக்கலை, வட அமெரிக்க வலைப் பதிவர்கள் எல்லாம்(?) Fetna விலே வந்து குமியப் போறதாகவும், சென்னையிலே இருந்து அண்ணன் அப்துல்லா அவர்கள் சிறப்பு விருந்தினரா கலந்து கொள்வதின் நிமித்தமாகவும் இந்த சந்திப்பை நடத்தலாம் என்று சங்கம் இல்லாவிட்டாலும் பொது குழு ௬டி முடிவு எடுத்த படியாலே சந்திப்பு நடை பெறுகிறது.
ஜூலை 3, வாட்டர்பெரி, கனெக்டிகெட்டிலே பதிவர் சந்திப்பு நடைபெறும் என்பதை தாழ்மையோட தெரிவித்து கொள்கிறேன். சந்திப்பு நிகழ்ச்சி நிரல் எல்லாம் தயார் செய்யலை. ௬ட்டம் ௬டுவதைப் பொறுத்து முடிவு செய்தது கொள்ளலாம்.
ஆட்டோ அனுப்ப விலாசம் தெரியாம இருந்தவங்களுக்கு எல்லாம் நற்செய்தி, நல்ல வாய்ப்பு வரும் போது தவற விடக்௬டாது, அதனாலே பதிவர்கள் மட்டுமில்லாமல், வாசகர்களும் கலந்து கொள்ளலாம், எனக்கு எல்லாம் வாசகர்கள் கிடையாது என்பது நல்லாவே தெரியும், ஆனா பதிவர் மனிஷ் அதாங்க பழமைபேசி, பதிவுலகிலே பல வருடங்கள் நின்று கொடி ஆட்டிக்கொண்டு இருக்கும் இளா,மேலும் அஞ்சா நெஞ்சன் அண்ணன் ச்சின்ன பையன், பாஸ்டன் ஸ்ரீராம், மற்றும் பெருசு அவர்கள் எல்லாம் வருகை தர இருக்கிறார்கள்
சிறப்பு விருந்தினரா குடுகுடுப்பையாரும்,முகிலனும் நேரத்திலே கலந்து கொள்ள வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதால் சந்திப்பு வருகிற எல்லோருமே சிறப்பு விருத்தினர் தான். இந்த பதிவர் சந்திப்பு மாநாடு(?) பற்றி தொடர்பு
கொள்ள வேண்டியவர்கள்.
சிறப்பு விருந்தினர்
pazamaipesi@gmail.காம்(com)
வருகை பதிவேட்டை பதிவு செய்ய விரும்புபவர்கள், மற்றும் ஆசி வழங்குபவர்கள் பின்னூட்ட பெட்டியிலும் தொடர்பு கொள்ளலாம்.
கனெக்டிகெட்டிலே நடக்கும் பதிவர் சந்திப்பை எப்படி வட அமெரிக்கா என்று சொல்லலாம் என்று கேட்பவர்கள் எல்லாம் கண்டிப்பாக பதிவர் சந்திப்புக்கு வரவும்.