Showing posts with label மரணமொக்கை. Show all posts
Showing posts with label மரணமொக்கை. Show all posts

Monday, October 24, 2011

குடுகுடுப்பை என்ற சத்குரு

ஒரத்தநாட்டு வாய்க்காலில் துண்டை போட்டு மீன் பிடித்து சுட்டு தின்னுபுட்டு, உத்திராபதியோடு எருவமாடு மேய்ச்சிகிட்டு,கணினியிலே எருவமாடு படம் வரைய படித்ததாக ஒரு சர்டிஃபிகேட்டும் வச்சிருப்பாரு.பெயிண்டும், பைப்பும் விற்கும் ஹார்ட்வேர் கடைக்கு சிவி அனுப்பி நோகாம நொங்கு திங்க வேலையா குடுங்கன்னு சாஃப்ட்வேர் வேலை தேடிய மகான். பறப்பன ஊர்வன நடப்பன எல்லாம் இந்திரா அம்மையார் இளைய மருமக மேனகா காந்திக்கு மொட்டை கடிதாசி எழுதி இந்தாளு இங்க இருந்தா எங்க இனத்துக்கு பாதுகாப்பு இல்லைன்னு ஒப்பாரி வச்சதாலே அமெரிக்காவிலே தெலுங்கு படிக்க நாடு கடத்தப்பட்டவர்.

ஊரில் ஒரு எருவமாட்டுக் கன்னுக்குட்டியை ஆட்டையப் போட்டு வரும்போது எதிரில் ஆட்டயப்போட்ட மாட்டுக்கு சொந்தக்காரன் வந்ததால் போர்த்துக் கொண்டிருந்த போர்வையை அதன் மேல் போர்த்தி குடுகுடுப்பைக்காரன் போல் நடித்து எஸ்ஸானதை மறைத்து எங்கேயோ இவர் போட்ட பின்னூட்டத்தை குடுகுடுப்பைக்காரன் சொன்னது போல் உள்ளது என்று நெஞ்சை நக்கியதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டதாக புருடா விடுபவர்.

பாயசத்தில் ஏலக்காய் போடுவது பார்ப்பனீயம், அதனால் சேமியா பாயசத்தில் சென்னாக்குன்னி பவுடர் போட வேண்டும் என்று அடம் பிடித்து தங்கமணி கடுப்பாகி சட்டுவத்தால் போடு போடு என்று போட்ட பிறகு அடங்கினதை இவர் மறைத்தாலும் அமெரிக்க உளவுத் துறையில் பதிவாகி இருக்கிறது. ரண்டு டாலர் விலை குறைவு என்பதற்காக சிக்கன் புளி சோறு வாங்கி பிரியாணி என்று ஃப்ரீசரில் வைத்துத் தின்றதை மறந்து தாய்த் தமிழ்நாட்டின் பிரியாணியை மஞ்சா சோறு என்று நக்கலடித்தவர்.

நடிகைக்கு நாய் பேர ஊழலில் ஆட்டை போட்டதை தேம்ஸ் நரி அதுசரி கண்டு பிடித்து விட்டதால் சட்டத்துறைத்தலைவர் என்ற டம்மி போஸ்ட் கொடுத்து சரிக்கட்டப் பார்த்து முடியாமல் கூட்டாக பங்கு போட்டுக் கொண்டவர். அந்தப் பணத்தை இருவரும் சுவர்த் தெருவில் முதலீடு செய்வதும் வெள்ளிக் கிழமையானால் ஜட்டியோடு நிக்கேன் என்று இவரும், நான் கோவணமும் போய் கையால் பொத்திக் கொண்டு நிக்கேன் என்று அவரும் பஸ் விட்டாலும், திங்கள் கிழமை இருக்கும் காசை திரும்பவும் சுவர்த் தெருவில் முதலீடு செய்வார்கள். திங்கள் ஜட்டி, செவ்வாய் பனியன், புதன் கால் சட்டை, வியாழன் மேல் சட்டை, வெள்ளி டை என்று முழு உடை அணிவதும் மாலையில் சுவர்வீதிக்காரன் உருவிக் கொண்டு அனுப்புவதும் வாரா வாரம் நடக்கும் காமெடி.

சொந்தமாக தோசை சுடத் தெரியாமல் பெண் கவிஞர்கள் யாராவது ஒரு தோசை சுட்டால் அசந்த சமயம் ஆட்டையப் போட்டு ஒரு தோசை சுட்டு திருப்பிப் போட்டு எதிர்த்தோசை என்று விளம்பரம் போடுவார். கல்லூரி ஆஸ்டலிலும், மேன்சனிலும் தாழ்ப்பாள் இல்லாத கழிப்பறையில் பாதுகாப்புக்காக விசிலடித்துப் பழகியதை கவினை மிரட்ட பயன்படுத்தி என்னமோ கதிரி கோபால் நாத்திடம் பயிற்சி பெற்ற வித்துவான்போல் பீலா விட்டு வீடியோ எடுத்து பஸ்ஸில் மிரட்டுகிறார்.

ரௌத்திரம் பழகும் கலகலப்ரியாவே இந்த வீடியோவைப் பார்த்து பாதி நாட்கள் தூக்கத்தில் அலறி பாரதி படத்தை தலைமாட்டில் வைத்துக் கொண்டு தூங்குவதாக ஸ்விஸ் உளவுத்துறை கண்டனம் தெரிவித்திருக்கிறது.

எங்காவது மதச் சண்டை நடந்தால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு கையரிப்பு தாளாமல் ஒரு கமெண்ட் போட்டு விட்டு இரவெல்லாம் தூங்காமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பல்லு கூட விளக்காமல் வேலைக்குப் போய் ட்ராஃபிக்கில் தூங்கி ஆக்ஸிடண்ட் ஆக்கி பட்டர்ஃப்ளை எஃபெக்ட் என்று பதிவு போடுவார்.

சமீபகாலமாக திமுக தீவிரவாதி அபிஅப்பா, அதிமுக அராஜகவாதி உ.த. அண்ணன், நாம் எந்த கட்சிக்கு ஆதரவு என்று அவ்வப்போது தங்கபாலுவுக்கு ஃபோன் போட்டு உசாராக அதன் படி சப்போர்ட் செய்யும் சஞ்சய்காந்தி, மரம்வெட்டி, தண்ணிதொட்டி, சிவப்புகட்டி கட்சி எல்லாம் குரவளையைக் கடித்துக் கொண்டு குத்துயிரும் குலை உயிருமாய் அடித்துக் கொண்டிருக்கும்போது நம்ம தலைவர் அங்கே வடிவேலு மாதிரி போவார். ‘எச்சூஸ் மீ! வைகோ ரெம்ப நல்லவர். நீங்களெல்லாம் ஆதரவு கொடுத்தால் அவர்தான் அடுத்த பிரதமர்’ என்று ஒரு பிட்டு போடுவார். ஸ்டன் பாமில் அடிபட்டவர்கள் போல் சித்தம் தடுமாறி அபிஅப்பா ரத்தத்தின் ரத்தமே என்றும் உ.த. அண்ணன் உடன் பிறப்பே என்றும் சஞ்சய் எந்தப் பக்கம் ஓடுவது என்று தெரியாமல் இளங்கோவனுக்கு நம்பர் மாத்தி அடிப்பதும் என்று தெறித்து ஓடும்போது கிக்கிக்கீ என்று சிரிப்பார்.

மனவாடு மொழி கற்றுக் கொள்கிறேன் என்று அவர்கள் மொழியைக் கொல்லுவதும், தெலுங்குப்படம் பார்ப்பதும் என்று இவர் கொடுத்த டார்ச்சர் தாங்காமல் தெலுங்கானாவுக்கு கடத்திவிடுவோம் என்று மிரட்டியதின் பேரில் இப்போது அய்யா அடங்கி இருப்பதை சி.ஐ.ஏ. கண்டு பிடித்துள்ளது.மீள் பதிவு, மீள் மீள் பதிவு, மீள் மீள் மீள் பதிவுன்னு மீள் பதிவு மட்டுமே 200+ போட்டு அசத்திய ஒரே ஆள் குடுகுடுப்பை தான், குறிப்பா டியூஷன் டீச்சர் விமர்சனத்தை 49 தடவை மீள்பதிவிட்டவர்

வீட்டிலே சட்டியிலே சோறு இல்லை என்பதற்காக சட்டிகுரு எழுத்துப்பிழையாக சத்குருவாக மாறிவிட்டது.என்ன இருந்தாலும் பதிவுலகில் என் மூத்தவர். இவரைப் பார்த்துதான் நான் பிழையோடு எழுதக் கற்றுக் கொண்டேன் என்று நன்றியுடன் பெருமை கூர்ந்து வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன். வணக்கம்.



வசனம் உதவி :பாலா அண்ணன் 


Sunday, August 14, 2011

சுதந்திர தின சிறப்பு செய்தி


நண்பர்களே இந்த இனிய இரவிலே பொதுஜன்மான நான் பொதுவான அறிக்கைய ஓசியிலே கூகிள் ஆண்டவர் வழியாக நள்ளிரவிலே சொல்லகடமைப் பட்டுள்ளேன். இரவு செய்திக்கு பின்னால் இந்தியா இரவிலே சுதந்திரம் அடைந்தது என்பதை தவிர வேறு ஏதும் இல்லை. சுதந்திரம் என்பது சுசியம் போல சாப்பிட சாப்பிட இனிப்பாக இருக்கும் என்று சுசியம் பெருமாள் கூறியுள்ளார். இந்த பொன்னான நாளிலே தலைவர்கள் மட்டுமே யாரோ எழுதிகொடுத்ததை மனப்பாடம் பண்ணாமல் வரி வரியாக படித்து அறிக்கை விட முடியும் என்ற ௬ற்றை பொய்யாக்கவே இந்த சொந்த சரக்கு அறிக்கை.

இலக்கியம் கெட்ட கேட்டுக்கு படிப்பா, இந்தியா கெட்ட கேட்டுக்கு சுதந்திரமா என்று பக்கத்து தெரு பாயா விற்கும் ஆயா கேட்டுகொண்டிருந்தாள். தொலைகாட்சிகளிலே சினிமா நடிகைகளின் கன்னிபேட்டிக்கும், கவர்ச்சி உடைக்கும் இடையிலே உலவி வருகிறது இந்த சுதந்திரம்.நானும் இத்தகைய பேட்டிகளை கண்ணை மூடாமல் பார்த்து இருக்கேன்.இப்ப ஆலமரத்துக்கு கீழே சொம்பை வச்சி நாட்டாமை பண்ணுவதாலே இந்த விளிம்பு நிலை எதிப்பை கடைநிலையிலே இருந்து காட்டவில்லை என்பதை சொல்லிகொள்கிறேன். வில்லங்கம் வரும்போது வில்லனாக இருக்க வேண்டும், சத்தம் இல்லாதபோது சூப் சாப்பிட வேண்டும் என்ற ரஷ்ய பழமொழிக்கு ஏற்ப நாமும் நடந்தால் நாடும் வீடும் எருக்கம் செடிபோல தண்ணி ஊத்தாமலே செழித்து வளரும்.

அறிக்கை விடும் ௬ட்டமும்,அதைப் படிக்கும் ௬ட்டமும் அதிகம் இருப்பதினாலே வெத்திலை போடும் வாயும் அறிக்கைவிடுகிறது இந்தியாவுக்கு வாஸ்து சரீல்லை என்று, வீட்டுக்கு வாஸ்து சரீல்லை என்றால் இடித்துகட்டலாம்,நாட்டுக்கே வாஸ்து சரில்லை என்றால் இடித்தா கட்டமுடியும் என்று பகுத்தறிவு பகலவன் பல்குடிக்கி கேட்கிறார்.சுதந்திரம் என்பது சுதந்திரமாக போகவும் வரவும் வேண்டும். சுதந்திர தினம் என்று குண்டு துளைக்காத மேடையைப் போட்டு கம்பிகளுக்கு நடுவிலே இருந்து அச்சா அச்ச்சாசோ என்று பேசுவது சிறை அதிகாரி கைதிகளிடம் பேசுவது போல் இல்லை, ஒரு கைதியின் பேச்சை கேட்க நாட்டு மக்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்பது போல இருக்கிறது.

எவ்வளவு நாளைக்குதான் இந்த புளிப்பு மிட்டாயை வாங்கி சாப்பிட சீருடையில் செல்லவேண்டுமென மாணவரணி கேட்கிறது, மாணவரணியாக இருந்தாலும் மகளிர் அணியாக இருந்தாலும் பதில் ரெண்டுதான்தான் பல் இருக்கவன் பக்கடா திங்கான் மற்றும் நோகாம நொங்கு திங்க முடியாது.

குத்தூசி முதல் கோணிப்பை வரை ஊழல்களை வைத்துகொண்டு சைக்கிள் பஞ்சர் ஒட்டும் கடையிலே இருந்து கொண்டு பாரத் மாதாவுக்கு ஜெ  என்று லா லா பாடிக்கொண்டு இருந்தால் லாலி பாப் ௬ட கிடைக்காது.சுதந்திர தேவி சிலையை தற்காலிகமாக மூடிவிட்டதைப் போல சுதந்திரத்தையும் தற்காலிகமாக மூடிவிட்டு இன்றைய தினத்திலே ஆகும் செலவை ஊழலிலே முதலீடு செய்தால் நாடு இன்னும் பத்துவருசத்திலே வல்லரசாகும் என்பதை தெரிவித்து கொண்டு வாய்பளித்த அனைவருக்கும் நன்றி ௬றி விடைபெறுகிறேன்.

இந்த கட்டுரையைப் படித்துவிட்டு தேசியார்வம் பொங்கிவழிந்தால் அருகிலே உள்ள கொடி ஏற்றும் மேடையை அணுகவும்.  


Thursday, July 21, 2011

தற்கொலை தடுப்பு சேவை மையம்


தற்கொலை தடுப்பு வாசகர் சேவைக்கு அழைத்து இருக்கும் வாடிக்கையாளரே நீங்க ஏற்கனவே டிக் 20, இல்ல மூட்டை பூச்சி மருந்து குடித்து இருந்தால் உடனே சவ ஊர்தி வண்டிக்கும், மருத்துவ மனை ஆம்புலன்ஸ் க்கும் அழையுங்க,நீங்க மண்டையப் போடாம இருந்தா திரும்பி வந்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள். அப்படி இல்லையெனில் எண் ரெண்டை அழுத்துங்க.

ரெண்டை அழுத்துனத்துக்கு நன்றி, உங்களுக்கும், தற்கொலை தடுப்பு சேவை அதிகாரிக்கும் இடையே உரையாடல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக பதிவு செய்யப்படும்,காரணம் எங்க ௬ட பேசிய பிறகு நீங்க எங்கையாவது போய் மண்டையபோட்டா, உங்களுக்கு சங்கு ஊத நாங்கள் காரணம் இல்லை என்று எங்களை தற்பாதுகாத்துகொள்ள இந்த உரையாடலை சேமித்து வைக்கிறோம் என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன், உங்கள் பெயரை உச்சரித்து எங்களின் விரிவான சேவை பிரிவுகளுக்கு செல்லலாம். தயவு செய்து உங்கள் பெயரி உச்சரிக்கவும்

"என் பெயர் ......."

மன்னிக்கணும் உங்கள் பெயர் புரியவில்லை, மீண்டும் ஒரு முறை ௬றவும், "என் பெயர் ..." , மீண்டும் மன்னிப்பு கேட்கிறோம், உங்க பேரு புரியலை, மறுபடி ஒரு தடவை சொல்லுங்க.. என் பெயர் ... இல்ல புரியலை.. என் பேரு .. புரியவே இல்ல, அரைமணி நேர போராட்டத்திற்கு பிறகு பொறுமை இழந்த வாசகர்  

உங்க பெயர் இன்னும் புரியலை என்று தானியங்கி குரல் கேட்ட கேள்விக்கு

"அட எளவெடுத்த சனியனே"

நன்றி "அட எளவெடுத்த சனியனே" உங்கள் பெயர் நல்ல பெயர், தயவு செய்து எங்களின் விரிவான சேவைகளை ௬ர்ந்து கேளுங்கள், உங்களுக்கு வேலை வெட்டியே இல்ல, எப்போதுமே சும்மாதான் இருப்பீங்கன்னா எண் ஒன்றை அழுத்துங்கள், வேலைப்பணி அதிகமா இருக்கு, அதனாலே மன அழுத்தம் அதிகமா இருந்தா ரெண்டை அழுத்துங்கள். யோசிக்க எதுவும் இல்ல, அதனாலே உங்களுக்கு தற்கொலை பண்ணுகிற யோசனை இருந்தா எண் மூன்றை அழுத்துங்கள். காதல் தோல்வி இல்ல காதல்கள் தோல்வி இருந்தா எண் ஐந்தை அழுத்துங்கள், கணவன் மனைவி பிரச்சனை, கள்ளக்காதல் பிரச்சனயா இருந்தா எண் எழு, இப்ப சொன்ன எல்லா பிரச்சனையும் இருந்தா 
பூஜ்ஜியம், பிரச்னை எதுவுமே இல்லைனா, தொலைபேசிய கீழே வச்சிட்டு நாங்க அணிப்பி வைக்கிற சேவை கட்டண பணத்தை பார்த்து மாரடைப்பு வராமல் இருந்தா நலம்.

     
 உங்களுக்கு எல்லா பிரச்சனையும் இருக்கிறதா சொல்லி இருக்குகீங்க அட எளவெடுத்த சனியனே, உங்க பிரச்சனையின் வீரியம் அறிந்து உங்களுக்கு சேவை செய்ய ஒரு குழு இருக்கிறது உங்களுடன் உரையாட, அதனாலே நீங்க மனம் விட்டு தாராளமா பேசுங்க. சொல்லுங்க திரு அட எளவெடுத்த சனியன்.

"எப்படி சொல்லன்னு தெரியாம துக்கம் தொண்டைய கவ்வி பிடிக்குது"

"ஐயா கவ்வின கழுதையை எறக்கி வைக்கத்தானே நாங்க இருக்கோம்,நீங்க கவலைய மறந்து அள்ளிப்போடுங்க"

"வாழ்க்கையிலே மண் விழுந்துபோச்சி"

"சோத்திலே விழுந்த மண்ணுக்கும், மனசிலே இருக்கிற புண்ணுக்கும் ஒரே வழிதான், ரெண்டையும் எடுத்து வெளியே போட்டுட்டு பொழைப்பை பார்க்கணும்"

"குத்துவசனம் கேட்க நல்லா இருக்கு,ஆனா நடைமுறைபடுத்த முடியலை"

"வசனத்தையே வாழ்க்கையா பாருங்க, வழி தான்னாலே பிறக்கும்."

"நீங்க எப்போதுமே இப்படி வெட்டியாத்தான் பேசுவீங்களா?"

"ஐயா நீங்க இப்பவரைக்கும் உங்க பிரச்சனை என்னன்னு சொல்லவே இல்ல"

"சொல்லுறேன்.. இவ்வளவு நாளா என் உள்ளத்திலே சுவிஸ் வங்கியிலே ஒளித்து வைத்து இருந்த கருப்பு கள்ளப்பணம் மாதிரி மறைத்து வைத்த எல்லாத்தையும் சொல்லுறேன்"

அரைமணி நேர கொசுவத்திக்கு அப்புறமா மிஸ்டர் அட எளவெடுத்த சனியன் உங்க பிரச்சனைய எப்படி தீர்க்கிறதுன்னு யோசிக்கிறோம். உங்க கோரிக்கைய எப்படி நிறைவேத்துவதுன்னு,ஆனா நீங்க எதிர்பார்க்கிற விஷயம் நடக்குமான்னு தெரியலையே

"வாசகர் சேவை,எல்லாத்தையும் காப்பாத்துவோமுன்னு சொன்னீங்க,என்னைய காப்பாத்துங்க"

சரி எங்க மின் அஞ்சல் முகவரிக்கு உங்க புகைப்படம் அணிப்பு வையுங்க, தசவல் சொல்லுறோம்.அடுத்த நாள் காலையிலே தற்கொலை வாசகர் சேவையிலே இருந்த மணமாகாத பெண்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டனர்.

பின் குறிப்பு :

கொசுவத்தியிலே நடந்த சம்பவம் என்னன்னு சொல்ல நான் கடைமைபடலை இருந்தாலும் சொல்லவேண்டியது என்னோட கடமை,அதாகபட்டதவது தற்கொலை வாசகர் சேவையை அழைத்த அந்த மாமனிதன், தங்களின் சேவையிலே உள்ள அனைத்து பிரச்சனைகளும் எதிர் காலத்திலேயே எனக்கு வர வாய்ப்பு இருப்பதாலே,அடிக்கடி உங்கள் சேவைக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, உங்கள் தற்கொலை தடுப்பு சேவையிலே வேலை செய்யுற ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்னோட வாழ்கையிலே வெளிச்சம் கிடைக்கும்,அதனாலே உங்கள் சேவையிலே இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டார்.சேவை அதிகாரிகளும் அந்த மாமனிதனின் புகைப்படத்தை அனுப்ப சொல்ல, அதை பார்த்த அனைத்து பெண்களும், இப்படி ஒரு அழகான வாலிபருக்கு எதிர் காலத்திலேயே பிரச்சனையா என்று ஏங்கி தற்கொலை செய்துகொண்டனர்.அந்த மாமனிதர் யாரென்றும்,அவர் புகைப்படம் எப்படி இருக்கும் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை     


Monday, December 27, 2010

எனது குப்பைகள் - நூல் வெளியீட்டு விழா

ஒரு அழகிய தருணத்தை எதிர்பார்த்து வழி மேல் கல்லை வைத்து காத்து இருக்கும் என்னுடைய  பலகோடி(?) ரசிகப் பெருமக்களுக்கு விருந்தாக வருகிறது "எனது குப்பைகள்" நூல்.  குப்பை என்று பெயர் வைத்தால்,ஒருமையை கொடுத்து நான் ஒரு சுயநலவாதி என்ற பிம்பம் தந்து கம்பத்திலே கட்டி வைத்து அடிக்க வாய்ப்பு இருப்பதாலே, "குப்பைகள்" என்று பன்மை சேர்த்து நானும் ஒரு பொதுநலவாதி என்பதை அடிக்கோடிட்டு சுட்டி காட்டவே "கள்" சேர்த்து இருக்கிறேன்.

கல்லூரி சாலையிலே "கள்" குடித்துவிட்டு கட்டை மாட்டு வண்டியிலே சென்றாலும், கார வீட்டு கார் பிடித்து அமெரிக்கா சென்று, என்ன வேலை செய்கிறோம் என்று தெரியாமல் இருந்தாலும், தமிழுக்கு அறிய பல தொண்டுகள் செய்து "கொண்டியாரங்கள்ளி" என்ற வரலாற்று காவியம் படைத்த குடுகுடுப்பையார்,எனது குப்பைகள் நூலின் அறிமுக ஏற்புரை எடுப்பதாக கட்சி கொடியின் மேல் சபதம் செய்து இருக்கிறார்.அவரின் அறிமுக உரையின் முன்னோட்டம் இதோ

"ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாது என்பதற்கான இலக்கணமே இந்த எனது
குப்பைகள்,குப்பை என்பது களையப்பட வேண்டிய ஒன்று இந்த புத்தகத்தைப் போல".

வாழ்க்கையிலே தான் சந்தித்த கதாபாத்திரங்களை வெளியிட்டு கலைத்தாயின் தீராப் பசியை மணிமேகலை வைத்து இருந்த அமுதசுரபியை கந்து வட்டிக்கு கடன் வாங்கி தீர்த்துக்கொண்டு இருக்கும் பதிவுலக மன்னன் எங்கள் அண்ணன், இல்லாத கட்சிக்கு பொல்லாத மாணவர் அணித்தலைவர், இருண்டு விடாதே என்று வானத்தைப் பார்த்து பாடிய கவுஜையாலே வானம் மயங்கி, வனம் போல  மப்பும், மந்தாரமுமாக, கொப்பும் கிளையுமாக இருக்கிறது, பாலகன்(?) போல இருப்பதாலே அவரை பாலா அண்ணன் என்று அழைக்கிறோம்(?).இவ்வளவு புகழுக்கு சொந்தக்காராக இருந்தாலும், எனது குப்பைகளுக்கு ஏற்புரை வழங்குவதாக காசு வாங்காம வாக்கு கொடுத்து இருக்கிறார்.அவரின் ஏற்புரையின் முன்னோட்டம் இதோ உங்கள் பார்வைக்கு

"தொல்காப்பியத்துக்கு பிறகு தமிழிலே சிறந்த இலக்கண நூல் வெளிவரவில்லை என்பது உலகறிந்த உண்மை, அப்பேற்பட்ட பெருமை கொண்ட தொல்காப்பியர் இந்த குப்பையைப்   படித்தால் நிச்சயம் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும், ஆமா கொலை பண்ணினா ஆயுள் தண்டனை தானே கொடுப்பாங்க(?)".

இவரை தெரியும் என்பதிலே எனக்கும், டமிழ் மம்மிக்கும் பெருமை, சொல்லின் செல்வர், தமிழை வில்லாக்கி, வார்த்தைகளை அம்பாக்கி, படிப்பவர்களை கவரும் தமிழ் அம்பு. வட்டார சொல், வழக்குச்சொல் மற்றும் வழக்கு ஒழிந்த சொல் ஒவ்வொன்றையும் நேர் வரிசையாகவும், குறுக்கு வரிசையாகவும் அடுக்கி கட்டம் கட்டி சொடக்கு போட்டு சொடுக்கு விளையாடுவார். ஊர்ப்பழமை பேசுவதிலே பெருசுகளுக்கு இணையானவர்.

"ஒரு புத்தகம் எப்படி இருக்கோனுமுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா என்ற  ஊர்ப்பழமையைப் படிங்(க), ஒரு புத்தகம் எப்படி இருக்கக்௬டாதுன்னு தெரிஞ்சிக்கோனுமுன்னா இந்த குப்பைப் படிங்(க) ன்னு எங்க அப்பச்சி கனவிலே கவி காளமேகம் வந்து சொல்லி இருக்".

ரஜினி படம் போல புத்தகம் வெளிவரும் முன்னே, உலகெங்கிலும் உள்ள ரசிகர் பெருமக்கள் புத்தகம் வாங்க அலை அலையாய் இணையத்திலேயும், வலையிலேயும்  ஆர்வமாக இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிவித்து உள்ளது. இப்படி ஒரு புத்தக அலையைப் பார்த்ததில்லை என மன்னார் பதிப்பகம் தெரிவித்து உள்ளது. குறிப்பாக முகிலன் புத்தகத்தின் பிரதிகளை சாக்குமுட்டையிலே வைத்து இலங்கைக்கு கடத்த இருப்பதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து இருக்கிறது.விளக்கம் கேட்டு மத்திய அரசு, மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியாவிலே கலவரம் மிகுந்த பகுதியாகிய மைலாப்பூரிலே பொது மக்களிடம்    மிகவும் பிரசித்தி பெற்ற விதூஷ் பக்கோடாவை விட புத்தக எண்ணிக்கை அதிகமாக விற்கும் என தகவல் கிடைத்ததாலே,முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விதூஷ் ஐயாயிரம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து, தோட்டாக்கள் போன்ற பக்கோடாவை புத்தகத்தாள்களை கிழித்து சுத்தி கொடுக்க யோசனை செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பப்புவிடம் வாங்கிய பல்புகள் பளிச்சென மின்னுவதாலே, அந்த ஒளியை குறைக்க ரெண்டாயிரம் பிரதிகளுக்கு சந்தனமுல்லை முன் பதிவு செய்து இருப்பதாக பப்பு ரசிகர்மன்ற அமெரிக்க கிளை தெரிவித்து உள்ளது .

இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் புத்தக அலை புயல் அலையாக இருப்பதாக  தகவல் கசிந்து இருக்கிறது, குறிப்பாக அவுஸ்திரேலியாவிலே முன் அறிவிப்பு ஏதுமின்றி தமிழகத்தின் மின் அறிவிப்பு போல கடைய ஆட்டயப் போட்ட கூகிள் ஆண்டவரிடம் பல தெருமுனை போராட்டங்களை நடத்தி,கடை திரும்ப கிடைக்க போராடி வரும் தங்க மங்கை, வைர மங்கை இப்படி பல பட்டப்பெயர்கள் இருந்தும், தங்கமும், வைரமும் வெங்காய விலைபோல இருப்பதாலே, அதை எல்லாம் உதறித்தள்ளிவிட்டு  அவுஸ்திரேலியா கும்மி கழக தலைவி என்ற ஒரு பட்டத்தை மட்டும் வைத்து இருந்த/இருக்கும் சின்ன அம்மிணி, ஒரு லட்சம் பிரதிகளுக்கு முன் பதிவு செய்து இருப்பதாக ஏஜென்சி செய்திகள் கூறுகிறது.

தில்லி தமிழ் சங்கத்தின் சார்பாக கோடை வெப்பம் தணிக்க புத்தகம் இலவசமாக வழங்க ஏற்பாடு நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மாபெரும் நூல் வெளியீட்டு திருவிழாவை நேரடி ஒலி,ஒளி(ழி)   பரப்பு செய்ய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டா போட்டி  போடுகின்றனர். விழாவிலே ௬ட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாலே தமிழக மற்றும்  இந்திய காவல்துறைகளுக்கு  கிரகம் சரியில்லாததாலே அனுமதி வழங்கவில்லை, அதனால் விழா செவ்வாய் கிரகத்திலே நிகழும் 23345 வருடம், தை 30 ம் தேதி நடைபெறுகிறது. அனைவரும் கல்லோடு வந்து விழா(லா) வை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.