முன் நவினத்துவம் - ஆரம்பம்
முன்னுரை : இந்த கதை பின்னொரு காலத்திலேயே நடப்பதாக ஒரு கற்பனை.
ஜி வீட்டிலே பெரிய விவாதம் ஓடிக்கொண்டு இருந்தது, அது அவரோட தலைமையிலே நடந்து கொண்டு இருந்தது.அந்த காலத்திலேயே அனைவரும் தங்கள் பெயர்களை சுருக்கி ஒரு வரியில் வைத்து கொள்வது நடைமுறை.
"எனக்கு இந்த "லாட்டோ சேன்ஜ்*" சுத்தம்மா பிடிக்க வில்லை"ஜி மனைவி, "அங்கே வேலை செய்யுற எனக்கே பிடிக்க வில்லை, இருந்தாலும் அரசாங்க விதியை மீற முடியுமா?"
"அதிலே வெளிவரும் பட்டியலை திருட முடியுமா?"
"இந்த கேள்வியை எத்தனை தடவை கேட்டாலும், இதே பதில் தான், அந்த பட்டியல் தயாரிக்கிறது ஒரு சூப்பர் கம்ப்யூட்டர், அதிலே இருந்து வெளிப்படும் தகவல்கள் அனைத்தும் மிக ரகசியமாக வைத்திருக்கும், அது இந்திய அரசாங்க அதிகாரிகளின் பார்வைக்கு நேரடியாக செல்லும், அனைத்து உத்தரவுகளும் அங்கிருந்தே வரும்"
"சரி.. சரி எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன்.." வாசல் வரை சென்றவள், திரும்பி வந்து
"எங்கே என் ஷூ மோட்டார்*" என் கேட்கும் போது வாசலில் வாகன சத்தம் வருகிறது, ஷூ வை கழட்டி விட்டு வீட்டுக்குள்ளே ஜோ நுழைகிறாள்.
ஜோ அம்மா "எத்தனை தடவை சொல்லுவது என் ஷூ எடுத்திட்டு போகாதேன்னு"
ஜோ, அம்மாவின் அர்ச்சனைகளை காதில் வாங்கி கொள்ளாமல் வீட்டிற்குள் சென்று பிரிட்ஜ் லே இருந்து காலரி மாத்திரைகளை* எடுத்து விழுங்கினாள்.
"அம்மா, நீ இன்னைக்கு அலுவலகத்துக்கு லேட், அதனாலே உன் சம்பளம் கட்டு"
இதற்க்கு பதில் ஏதும் ௬றாமல் தன் ஷூ வை மாட்டி கொண்டு விரைந்தாள்.
என்னம்மா நீ டெல்லிக்கு போகலையா?"
அப்பா தெரிஞ்சு பேசுகிறாரா, இல்லை தெரியாமல் பேசுகிறாரா என்ற குழப்பத்துடன்
"நான் போகலை"
"கல்லூரிக்கு?"
"என் ஷூ மோட்டரை சரி பண்ணிட்டு போகணும் "
"சரியாத்தான் இருக்கு"
அப்படியா!! என்ன பிரச்சனை? எப்படி சரி பண்ணுனீங்க?
என்று அடுக்கடுக்காக கேட்ட கேள்விகளுக்கு ஒரு பதில் கொடுத்தார்
"உன்னோட அவரசர பிரச்சனைதான்,நீ போகிற அவசரத்திலே சரியா கவனிக்கலை"
ஜோ வுக்கு இருந்த குழப்பம் சந்தேகமாக மாறியது, நான் வெளியே போக ௬டாது என்பதற்காக போடப்பட்ட சதியா என்று என்ன ஆரம்பித்தாள்
"புளியங்குடியிலே இருந்து டெல்லிக்கு விமான நேரம் 15 நிமிஷம்""ஹும் என்னப்பா"
"புதுசா விமான சேவை விட்டு இருக்காங்க, அது பேப்பர் ல போட்டு இருக்குன்னு சொல்லுறேன்."
இன்னைய தேதிக்கு எங்க ஊருல ரயில்லே இல்லை பிற்காலத்திலே விமானம் எல்லாம் வருமுன்னு சொன்னா என்னை மாதிரி எருமை எல்லாம் யாரோ ப்ளைன் ஓட்டுதுன்னு சொன்னா நம்பவா முடியும்
ஜி ௬றியதை எல்லாம் காதில் வாங்காமல் எதோ நினைத்தவளாய் கல்லூரிக்கு கிளம்பினாள் ஜோ.
அவள் விரல் பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது, அதை எடுக்காமல் விட்டு விட்டாள், மீண்டும் அழைப்பு வந்தது இம்முறை ஜி க்கு வந்தது
************************************************************************
*காலரி மாத்திரை : அந்த காலத்திலேயே விவசாயம் எல்லாம் அழிந்து உணவு பொருட்கள் மாத்திரை வடிவிலே வந்தது
*ஷூ மோட்டார்:காலில் மாட்டி கொண்டு செல்லும் வாகனம்(மீண்டும் சந்திப்போமா அடுத்த பாகத்தில்)