Wednesday, December 24, 2008

வில்லு விமர்சனம்

இளைய தளபதி விஜய் மீண்டும் ஜெயித்து விட்டார்.தனது வழகமான படங்களை விட வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும் அமைந்து உள்ளது வில்லு. காதல், கோபம், பாசம் மற்றும் சண்டை காட்சிகளில் விறுவிறுப்பு அருமை. "இளையபிள்ளை எடுப்பார் கைபிள்ளை இல்லை எடுப்பவருக்கு உதவும் பிள்ளை" என்பதை நிருபிக்கும் படம். சரி சரி முன்னுரைகளை விட்டு கதைக்கு செல்வோம்

கதை படி தஞ்சை அருகில் ஒரு விவசாய குடும்பத்தில் முன்றாவதாக பிறந்த தமிழ் மாறான் தான் விஜய்.சிறு வயது முதல் படிப்பு வராததால் தான் அண்ணன் மற்றும் அக்காள் படிக்க விவசாயம் செய்து உதவுகிறார்.

தனது மாமன் மகளாக வரும் புதுமுகம்(யாருன்னு தெரியலை) நாட்டு வைத்தியம் செய்யும் கதா பாத்திரம் கச்சுதமாக செய்து இருக்கிறார்.

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சனைக்காக விஜய்க்கும் உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினருக்கும் தகராறு வருகிறது. அவருக்கு விஜய்க்கும் மோதல், ஆனால் அவர் மகளுக்கும் விஜய் அண்ணனுக்கும் காதல்.

பட்ட படிப்பு படித்த அண்ணனுக்கு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வேலை. விஜய் அக்காள் கல்லூரியில் முதுகலை பட்டம் படிக்கிறாள்.

உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் சுயருபம் தெரிந்த விஜய்,தனது அண்ணன் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், அவரையும் மீறி திருமணம் நடக்கிறது.திருமணம் முடிந்த கையோடு மாமனார் வீடு செல்லும் விஜய் அண்ணன் அங்கேயே தங்குகிறார்.

மகன் தான் வீட்டுக்கு வரவில்லை தாங்களாவது பெரியமகனை பார்க்க போகலாம் என அவரை பார்க்க செல்லும் விஜய் தாய் தகப்பனார் அவமான படுத்த படுகிறார்கள். அதை தட்டி கேட்கும் விஜய்க்கும் அவரது அண்ணனுக்கு இடையே உறவு முறிகிறது.

இந்நிலையில் கல்லூரியில் முதுகலை பட்டம் படிக்கும் நிச்சயிக்க பட்ட அக்காள் திருமணம் நின்று விடுகிறது.

பல வருடங்களுக்கு பிறகு மழை பெய்து நெல் அறுவடை செய்யும் நேரத்தில் கன மழை பெய்து வெள்ளம் வந்து எல்லா வற்றையும் அழித்து போடுகிறது. வெள்ள நிவாரண நிதி அரசாங்கத்தில் இருந்து கொடுக்க படுகிறது.

அந்த நிதியை விஜய் திருடி விட்டதாகவும் மேலும் தன் அதை பார்த்த தன் மாமன் மகளை கொலை செய்ததாகவும் விஜய் கைது செய்து 10 ஆண்டுகள் காவல் தண்டனை விதிப்பதோடு முதல் பாதி முடிகிறது.

( இங்க இடைவேளை படத்துக்கு, பதிவுக்கு கிடையாது,படம் போதும்னு நினைக்கிறவங்க வீட்டுக்கு போகலாம்)

இரண்டாவது பாதியில் விஜய் சிறையில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மூலம் விட்டு போன தான் பள்ளி படிப்பை தொடர்கிறார். அவரின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர் 5 வருட சிறை தண்டனை முடிந்து வெளியே வருகிறான்.

இந்நிலையில் தன் வெளி நாட்டு பட்ட படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வரும் உள்ளூர் சட்ட மன்ற உறுபினரின் இளைய
மகள்(நயன் தாரா) ஊருக்கு வருகிறாள். அவளை பகடை காயாய் பயன்படுத்தி நிவாரண பணம் மற்றும் தன் மாமன் மகள் கொலை ஆகியவைற்றை கண்டு பிடிப்பது மற்றும் நின்று போன அக்காள் திருமணத்தை நடத்துவதுதான் மிதி கதை.

நயன் தாராவை தன் வலைக்குள் விழ வைக்க மேலும் தன்னை சிக்க வைத்த தந்தர காரர்களை விஜய் பயன் படுத்தும் தந்திரம் தமிழ் சினிமாவுக்கே புதுசு (தயவு செய்து நம்புங்க..).

உண்மைகள் தெரிய வரும் விஜய்க்கு அதிர்ச்சி அடைகிறான் ஏனெனில் அவரது அண்ணனும் அதிலே சம்பந்த பட்டிருப்பது தெரிய வருகிறது, அவருடன் மாவட்ட ஆட்சியாளரும்,உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினரும் கூட்டு சதி செய்து தன்னை மாட்டி விட்டதை கண்டு பிடிக்கிறார்.

அவர்களால் ஏற்படும் தடைகளை உடைத்து எறிந்து நீதிக்கு முன் அவர்களை நிறுத்தி தர்மத்தை நிலை நாட்டுகிறார்


விஜய் ரெம்ப நாளைக்கு பிறகு தன் நடிப்பை(?) வெளிப்படுத்தி இருக்கிறார். படிப்பின் பெருமையை வழியுறுத்தி அவர் பேசும் வசனங்களுக்கு,பாசத்திற்காக அண்ணனிடம் உருகும் போதும் விசில் பறக்கிறது, இப்படி காதல், மோதல், ஆவலுடன் எதிர் பார்த்தல்(suspense) மற்றும் பாசம் எல்லாம் சரி விகிதத்தில் கலந்து கொடுக்கப்பட்ட ஒரு நல்ல கலவை (நான் சொன்னதான் உண்டு).

கில்லியை 10 மடங்கு வேகம் விறுவிறுப்பு.

நடிகைகள் பாட்டுக்கு மட்டுமல்லாமல் நடிப்புக்கும் சிறிது வாய்ப்பு கொடுக்க பட்டு உள்ளது. வடிவேலு காமெடி பிரமாதம் (இதை விடவா !!)

இவ்வளவு நேரமா யாராவது இந்த கதையை யாரவது வாசித்தால் அவர்களுக்கு ஓன்று மட்டும் சொல்லிக்கொள்ள ஆசை இது நிச்சயமாக திரைப் படமாக வந்தாலும் வரலாம்(தமிழ் ரசிகர்களின் தலை எழுத்து அப்படி இருந்தால் நாம் என்ன செய்ய முடியும்)

முடிக்க முன்னாடி ஒரு குத்து வசனம்

படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவான் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை)

கதை திருடர்கள் கவனத்திற்கு :

இந்த கதையின் காப்புரிமை(கர்மம் டா சாமி..) யாருக்கும் வழங்கப் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் மீறி திருடுபவர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும்


59 கருத்துக்கள்:

Anonymous said...

rights not sold yet
(karmam da saami) part is really funny

who knows, as you said, you may be getting money for this story real soon.

நசரேயன் said...

ஐயா,
உங்கள் வருகைக்கு நன்றி..
உங்க வாக்கு பலிச்சுதுன்ன என் பொழப்பு மட்டு இல்லாம எங்க அண்ணாச்சி பிலு கேட்ஸ் (அதாங்க bill gates) அவரு பிழைப்புமுல்லா
கேட்டு போய்டும்

பரிசல்காரன் said...

:-)))

http://urupudaathathu.blogspot.com/ said...

எதுக்கு இந்த கொல வெறி ???
ரசித்தேன் சிரித்தேன் ...
இதுக்கு மேல என்ன சொல்ல ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவன் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை)///

நம்பிட்டேன்..
ஆனாலும் இது ரொம்ப ஓவருங்கோ..

Anonymous said...

வில்லு லொல்லு!!

Sen22 said...

வில்லு விமர்சனம்... Superuuuuu...

நசரேயன் said...

/*எதுக்கு இந்த கொல வெறி ???
ரசித்தேன் சிரித்தேன் ...
இதுக்கு மேல என்ன சொல்ல ??
*/
நன்றி தலைவரே..
இதுக்கே மலைச்சா எப்படி?
இன்னும் ரோபோட், மர்ம யோகி எல்லாம் பின்னால வருது(இந்த வம்பு தானே வேண்டாம், உடனே பின்னாடி திரும்புறீங்க :))

நசரேயன் said...

/*வில்லு லொல்லு!!*/
நன்றி மணி

நசரேயன் said...

/*வில்லு விமர்சனம்... Superuuuuu...*/
நன்றி ஐயா..

நசரேயன் said...

/*
:-)))
*/

நன்றி ஐயா..

Anonymous said...

இந்த கதைய படம் எடுத்தா ப்ரோடுசெர் பாவம். தலைல துண்ட போட்டுட்டு போக வேண்டியதுதான். நல்லவேளை யாரும் ப்ரோடுசே பண்ண ரெடியா இல்ல. ரொம்ப சந்தோசம்.

குடுகுடுப்பை said...

லொள்ளு விமர்சனம் அப்ப்டின்னு வெக்கலாம்

நசரேயன் said...

/*லொள்ளு விமர்சனம் அப்ப்டின்னு வெக்கலாம்*/
அடுத்த விமர்சனத்துக்கு பேர் வச்சுட்டா போச்சு

நசரேயன் said...

/*
இந்த கதைய படம் எடுத்தா ப்ரோடுசெர் பாவம். தலைல துண்ட போட்டுட்டு போக வேண்டியதுதான். நல்லவேளை யாரும் ப்ரோடுசே பண்ண ரெடியா இல்ல. ரொம்ப சந்தோசம்.


*/

அதனாலேதான் நானே எழுதி, தயாரிச்சு நடிக்க்கலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்

Anonymous said...

This is the first time am seeing ur blog- very nice...had a good laugh reading this vijay episode- v.funny ! Keep up the good work.
- Mona

நசரேயன் said...

/*
This is the first time am seeing ur blog- very nice...had a good laugh reading this vijay episode- v.funny ! Keep up the good work.
- Mona
*/

வாங்க அனானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அடிக்கடி வாங்க

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நீங்களும் நம்ம ஆளுதானா...........

பழமைபேசி said...

ஓ, மீள் பதிவா? நான் அரண்டு போய்ட்டேன்...

நசரேயன் said...

/*ஓ, மீள் பதிவா? நான் அரண்டு போய்ட்டேன்...*/
புதுப் பதிவு உங்களுக்கு தெரியாம வருமா?

ஆளவந்தான் said...

//இந்த கதையின் காப்புரிமை(கர்மம் டா சாமி..) யாருக்கும் வழங்கப் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் மீறி திருடுபவர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும்//

கதை எழுதினவர் மேல “தற்கொலைக்கு” தூண்டுதல் வழக்கு போடணும் தெரியும்ல...
:)

Anonymous said...

:-)))

குடுகுடுப்பை said...

மீள்பதிவு காலம்

Anonymous said...

கிகிகிகிகிகி

T.V.ராதாகிருஷ்ணன் said...

sUUUUUUUUUUUUUper

ஓட்டு பொறுக்கி said...

வில்லு படத்தோட ஒரு சண்டை காட்சி தான் youtube ல வந்துச்சு, படம் முழுசா போட்டது எனக்கு தெரியாம போச்சான்னு கொஞ்சம் ஆடித்தான் போய்டேன் ..

S.R.Rajasekaran said...

இதுல ஆச்சர்யப்பட என்ன இருக்கு உண்மைலேயே இதுதான் கத

S.R.Rajasekaran said...

\\\கில்லியை 10 மடங்கு வேகம்\\\

தியேட்டர விட்டு ஒடுரதுலையா

S.R.Rajasekaran said...

\\\நயன் தாராவை தன் வலைக்குள் விழ வைக்க\\\

ஆமா ,ஆமா திமிங்கலம் புடிக்கிற வலைய பயன் படுத்துறது தமிழ் சினிமாவுக்கே புதுசு

S.R.Rajasekaran said...

\\\படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவான் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை)\\\

தமிழ்ல இருக்குற வார்த்தைய எல்லாம் மாத்தி மாத்தி போட்டா அதுக்கு பேரு பஞ்ச் டயலாக்கா

S.R.Rajasekaran said...

இருந்தாலும் சொல்றேன்
இந்த கதை யோட காப்புரிமைய எனக்குமட்டும் கொடு எப்படியாவது ஆந்திரால போயி போளசிக்குவேன்

நசரேயன் said...

/*
//இந்த கதையின் காப்புரிமை(கர்மம் டா சாமி..) யாருக்கும் வழங்கப் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் மீறி திருடுபவர்கள் மீது தேசிய பாது காப்பு சட்டம் பாயும்//

கதை எழுதினவர் மேல “தற்கொலைக்கு” தூண்டுதல் வழக்கு போடணும் தெரியும்ல...
:)


*/
ஒ..அப்படியெல்லாம் சட்டம் இருக்கா, தகவலுக்கு நன்றி

நசரேயன் said...

/*
வில்லு படத்தோட ஒரு சண்டை காட்சி தான் youtube ல வந்துச்சு, படம் முழுசா போட்டது எனக்கு தெரியாம போச்சான்னு கொஞ்சம் ஆடித்தான் போய்டேன் ..
*/
வங்க ஒட்டு பொறுக்கி

சந்தனமுல்லை said...

:-))

//படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவான் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

தலையை சுத்துதே!!!

ஆளவந்தான் said...

//படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவான் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை
//

நோட் பண்ணுங்கடே.. நோட் பண்ணுங்கடே.. அடுத்த குத்து வசனம் ரெடி

ஸ்ரீதர்கண்ணன் said...

முடியல முடியல :))))))))

sindhusubash said...

உங்களை டீச்சர் தளத்தில் அடிக்கடி பார்த்திருக்கேன்.ஆனா இப்படி எல்லாம் கதை சொல்லுவீங்கனு எதிர்பார்க்கலை!!!! keep it up

Anonymous said...

இந்தப்பதிவுக்கு 500 கேட்டிருந்திருக்கலாம். :)

Poornima Saravana kumar said...

இப்படி ஒரு பதிவப் போட்டதிற்கு 500 பின்னூட்டம் வேணும் பதிவுக்கு நீங்க கேட்டதை விட அதிகமாப் போட்ட மக்களுக்கு நன்றி சொல்லி போட்டு இருந்தால் இப்போ 1000பின்னூட்டம் வந்திருக்கும். எல்லாம் மிஸ் பண்ணிடிங்க போங்க. இனிமேல் இப்படி செய்யாதிங்க. என்ன மாதிரி புத்திசாலித் (யப்பாடா ஒரு வழியா கிடைச்ச கேப்ல நம்மைப் புகழ்ந்தாச்சு ) தனமா யோசிக்கணும். எதன ஐடியா வேணும்னா நம்ம கிட்ட கேளுங்க..

Anonymous said...

:)

Anonymous said...

சூடாயிருச்சு

Anonymous said...

ஆமா ராசா அது தான் கதையா இருக்குமோ

Poornima Saravana kumar said...

விசய்னா நெம்ப பிடிக்குமோ??

நசரேயன் said...

வாங்க கடையம் ஆனந்த் டி.வி.ஆர் ஐயா, குடுகுடுப்பை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நசரேயன் said...

/*
இந்தப்பதிவுக்கு 500 கேட்டிருந்திருக்கலாம். :)
*/
1000 வருது விரைவில்

நசரேயன் said...

/*
:-))

//படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவான் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

தலையை சுத்துதே!!!
*/
எனக்கும் தான்

நசரேயன் said...

/*
//படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவான் எல்லாம் அறிவாளியும் இல்லை ( இதை படித்தவர்களை சொல்லலை
//

நோட் பண்ணுங்கடே.. நோட் பண்ணுங்கடே.. அடுத்த குத்து வசனம் ரெடி
*/
நிச்சயமா?

நசரேயன் said...

/*முடியல முடியல :))))))))*/
என்னாலையும் தான்

நசரேயன் said...

/*
உங்களை டீச்சர் தளத்தில் அடிக்கடி பார்த்திருக்கேன்.ஆனா இப்படி எல்லாம் கதை சொல்லுவீங்கனு எதிர்பார்க்கலை!!!! keep it up
*/
நன்றி சிந்துசுபாஷ்

நசரேயன் said...

/*ஆமா ராசா அது தான் கதையா இருக்குமோ*/
இருந்தா வழக்கு தொடருவேன் :)

நசரேயன் said...

/*
விசய்னா நெம்ப பிடிக்குமோ??
*/
எழுதினது நான் அதனாலே பிடிக்கும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

அடக்கஷ்டமே

நெசமாவே இதுதான் வில்லு பட கதைன்னு படிச்சிகிட்டு வந்தா கடைசியில விட்டீங்களே ஒரு அம்பு

அங்க ஓட் ஆரம்பிச்சவதான் இங்க வந்து நின்னேன்.


///படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவன் எல்லாம் அறிவாளியும் இல்லை
ஆமாங்க. சரியாதான் சொல்லியிருக்கீங்க.

நசரேயன் said...

/*
அடக்கஷ்டமே

நெசமாவே இதுதான் வில்லு பட கதைன்னு படிச்சிகிட்டு வந்தா கடைசியில விட்டீங்களே ஒரு அம்பு

அங்க ஓட் ஆரம்பிச்சவதான் இங்க வந்து நின்னேன்.


///படிக்காதவன் காட்டு மிராண்டியும் இல்லை.. படிச்சவன் எல்லாம் அறிவாளியும் இல்லை
ஆமாங்க. சரியாதான் சொல்லியிருக்கீங்க.
*/
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்

Anonymous said...

இந்த மாதிரி விமர்சனம் எழுதுறத விட்டுருங்க. இப்படி எழுதிதான வானரம் ஆயிரம் படத்த ஊத்தி மூடிடிங்க.

இதுல காப்புரிம வேற கருமம் கருமம்

Mahesh said...

என்னய்யா இது ஆளாலுக்கு கதை சொல்றீங்களே? உண்மையான கதைதான் என்ன?

ஆனா சினிமாக் கதைய விட உங்க கதையேல்லாம் சூப்பரா இருக்கு...

win said...

this is not the story sir.

As you know the story which you have said is 10 times better than what we see on the screen.

Worst movie I have ever seen.

Only plus point in the movie is nayantara.

no sensible comedy,no sensible screen play,no sensible acting not even from prakash raj

Anonymous said...

Hi,

I am following ur blog regularly.Seems like u are anti-vijay.

நசரேயன் said...

/*Anonymous said...
Hi,

I am following ur blog regularly.Seems like u are anti-vijay.
*/
சத்தியமா இல்லைங்கோ அனானி, அப்படி ஏதாவது உங்களுக்கு தென்பட்டால் பின்னூட்டதிலே தெரிவிக்கவும்

நசரேயன் said...

/*win said...
this is not the story sir.

As you know the story which you have said is 10 times better than what we see on the screen.

Worst movie I have ever seen.

Only plus point in the movie is nayantara.

no sensible comedy,no sensible screen play,no sensible acting not even from prakash raj
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி