Friday, June 26, 2009

ஓசையில்லா மனசு

பயண களைப்பு இன்னும் தீராத நிலையிலும், அவனைப் பற்றி யோசித்த களைப்பிலே இன்னும் கடுப்பாகி போனாள் கலை, இத்தனை வருஷம் கழித்து அவனை பார்ப்பேன் என்றும் நினைக்காத நிலையிலே, இன்று அவனுக்கு மேலாளர் ஆன்சைட்ல, அவன் பண்ணின காரியத்துக்கு அவன் மேல ஆத்திரம் விறகு கட்டை மாதிரி பத்தி எரிந்தாலும், அதை அணைக்க அவளை சாந்தப் படுத்த முயற்சி செய்து கொண்டு இருந்தாள், அன்று என்ன நடந்ததுனு கொசுவத்தியை அவளே சுத்த மனம் இல்லாம இருக்கும் போது நான் சுத்தினா நாகரிகம் இருக்காது.அந்த இடத்தை விட்டு வேற ப்ராஜெக்ட் போகும் எண்ணம் இருந்தாலும், இந்த சந்தர்ப்பத்திலே அவனுக்கு நல்ல படம் காட்டனும் என்ற எண்ணமும் இருந்தது.

வியாபார உக்தியிலே நீங்க எதை கொடுத்தாலும் ரெண்டு மாசத்திலே முடித்துவிடுவோம்,இந்த வசனத்தை எல்லா முதாலளிமாரிடம் பேசியே தான்னோட முதலாளிக்கு வருமானத்தை ஈட்டும் நாணயமானவர்களினால் கிடைத்த ப்ராஜெக்ட் இது,அதனாலே அது ஒரு வாரத்திற்கு அவளால் வேற சிந்தனைக்கு இடம் இல்லாம போனது, கடைசி வரைக்கு அப்படியே போய் இருந்தால், நான் இதை எழுதி உங்களை இப்படி கொலைவெறி மொக்கை போட வேண்டிய அவசியம் இருந்து இருக்காது, அடுத்த வார வெள்ளி கிழமை கலை அலுவலகத்தை விட்டு அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தாள் மறுநாள் நயாகரா சுற்றி பார்க்க சொல்ல இருப்பதால், தனக்கு வேண்டிய பொருட்களை ஷாப்பிங் பண்ண கிளம்பினாள்.

அலுவலகத்துக்கு கிழே மணி நின்று கொண்டு இருந்தான். கலை வருவது தெரிந்ததும் அவளிடம் பேச்சு கொடுத்தான்.

"கலை, உன்௬ட கொஞ்சம் தனியாப் பேசணும்"

"எனக்கு நேரமில்லை, அதுமில்லாம இந்த மாதிரி வழி மறித்து பேசுறது, எனக்கு பிடிக்காது"

"இந்த பைல்ல இருக்க டாகுமென்ட்ஸ் படிச்சிட்டு வாங்க, திங்கள் கிழமை சந்திக்கலாம்" அவள் கையிலே கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

"ஸ்டுப்பிட்" ன்னு சொன்னது அவனுக்கு கேட்கலைனாலும், சொன்னதிலே அவளுக்கு சந்தோசம். வீட்டிக்கு போய், அதை ஒரு மூலையிலே விட்டு எரித்தாள்.

திங்கட் கிழமை, மணியின் மேலாளர் அழைப்பு விடுத்தார் காலையிலே,ப்ராஜெக்ட் ஆரம்பிக்கும் முன்னே கிளைன்ட் எஸ்காலேசன் எப்படி வந்ததுனு யோசனையிலே அவர் கதவை திறந்து உள்ளே போன மணி.அங்கே கலையும் இருந்தாள்.அவளைப் பார்த்ததும், காரணம் என்னவா இருக்கும் என்பதை ஊகித்தாலும், என்னனு தெரிஞ்சிக்க உள்ளே நுழைந்தான்.

"மணி, நான் உங்களுக்கு ப்ராஜெக்ட்க்கு ப்ரோபோசல் எழுத சொன்னா, நீங்க உங்க லைப் க்கு ப்ரோபோசல் எழுதி கொடுக்குறீங்க"

"வாட் டூ யு மீன் ?"

"ஐ மீன், வாட் டூ யு மென்ட் ஹியர்" கையிலே உள்ள கடிதத்தை காட்டினாள்.

"நரேஷ், அது என்ன கடிதமுனு கலை சொன்னாங்க?"

"காதல் கடிதம் !!!"

"கலை நீங்க அதை கொஞ்சம் படிச்சி காட்டுங்க?"

"அன்புள்ள கலைக்கு,

இது எப்படி நடந்ததுன்னு எனக்கு தெரியலை,என்னோட அனுமதி இல்லாம நடந்து இருக்கு, உங்களிடம் யாரவது கேட்டால், உங்களுக்கு இதிலே விருப்பம் இல்லைன்னு சொல்லிடுங்க"
அன்புடன்
மாணி வண்ணான் "


"மாணி வண்ணான்???"

"ரமேஷ், ரெம்ப நாள் கழிச்சி தமிழ்ல எழுதினேன், அதான் இப்படி"

"ரெம்ப முக்கியம் இந்த எழுத்து பிழை ரமேஷ், இதை இவன் ஏன் எழுதனும் ?"

"கலை இது காதல் கடிதமா ?,எனக்கு ஒண்ணுமே புரியலை, ஒரே பின்நவினத்துவம் மாதிரி இருக்கு ?"

"உனக்கு காரணம் தெரியும், ஏன் எழுதினேன்னு?"

"வாட் நான்சென்ஸ் திஸ், எனக்கு எப்படி தெரியும்?"

சரி, நானே சொல்லுறேன், ரமேஷ் நான் சொல்வது உண்மை, ஒரு சிறு விளக்கம் கொடுத்தான், ரமேஷ் அதை கேட்டு விட்டு கலையிடம் விசாரித்தான்.அவளால அதுக்கு பதில் சொல்லமுடியாமல் மவுனமா இருந்தாள்.

"இப்ப சொல்லுங்க ரமேஷ், நான் செய்ததிலே என்ன தப்பு இருக்கு?"

"மணி,கலை நாம செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு, நீங்க ரெண்டு பெரும் பேசி ஒரு முடிவு எடுங்க, ஆனால் ப்ராஜெக்டை பாதிக்க ௬டாது, எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு,நான் கிளம்புறேன்" அடுத்த நிமிஷம் இருவரும் தனித்து விடப்பட்டனர்.

"நீ நல்லவன்னு பேர் எடுக்க, அடுத்தவங்களை கெட்டவங்க ஆக்காதே" என்று அவன் எழுதிய கடிதத்தை கிழித்து எறிந்து விட்டு சென்றாள்.

ஒருவாரம் கழித்து,மணிக்கு மொபைலுக்கு போன் வந்தது இந்தியாவிலே இருந்து அவன் அம்மாவிடம் இருந்து சம்பிரதாய பேச்சுகள் எல்லாம் முடிந்து அவனிடம்

"டேய் நான் போன வாரம் போட்டோ அனுப்பிய வீட்டிலே இருந்து தகவல் சொல்லி அனுப்பி இருக்காங்க"

"அம்மா வாரம் ஒரு போட்டோ அனுப்பி வைக்குறீங்க, எந்த பொண்ணு, எந்த போட்டோ?"

சரி..சரி.. நான் மறுபடியும் அனுப்பி வைக்கிறேன், நீயே பாரு, இன்னொரு விசயமும் இருக்கு, அதையும் அனுப்பி வைக்கிறேன்"

"என்ன அது?"

"மெயில் பாரு புரியும்?"

போன் அனைத்து விட்டு மெயில் செக் பண்ணினான், அதிலே வந்த புகைபடத்தை பார்த்து விட்டு,அவனால் நம்ப முடிய வில்லை,பின் குறிப்பிலே இருந்த நம்பர் க்கு போன் பண்ணிய போது எதிர் முனையிலே

"ஹலோ, கலை ஹியர், மே ஐ நோ, ஹூ இஸ் ஆன் தி லைன்" பதில் சொல்லாம போன் இணைப்பை துண்டித்தான்.

மறுபடி வீட்டுக்கு போன் பண்ணினான்

"அம்மா, நீங்க சரியான போட்டோ தான், அனுப்பி வச்சீங்காளா?"

"ஆமா, அது தான் போட்டோ"

"இந்த பெண்ணை சம்மதிக்க வாய்ப்பு இல்லையே!!!!!"

"இந்த பெண்ணோட அப்பாவிடம் நேத்து பேசினேன், அவங்க பெண்ணு இப்ப அமெரிக்காவிலே தான் இருக்கு, அது கிட்டயும் உன் போட்டோவை அனுப்பி சம்மதம் கேட்டு தான் முடிவு எடுத்து இருக்கு, அந்த பெண்ணோட போன் நம்பர் அவரு தான் கொடுத்தாரு, நீயே பேசிக்கோ"

"சரி, நீங்க போன் வையுங்க"

அன்று மாலை கலை அலுவலகத்தை விட்டு வெளியே வரும் போது

"கலை, நான் காபி குடிக்க போகிறேன், நீயும் வருகிறாயா?"

"நான் காபி குடிக்கிறது இல்லை"

"அப்ப டீ?"

"கம் ஆன் மணி, ஸ்டாப் திஸ் நான் சென்ஸ்?"

"என் ௬ட நீ வரலையா?"

"நான் முன்னமே பதில் சொல்லிட்டேன்"

"சரி , நாளைக்கு பார்க்கலாம்" என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் பக்கத்து
"ஸ்டார் பக்ஸ்" கடைக்குள் நுழைந்தான்.கடையிலே காப்பியை வாங்கி விட்டு திரும்பிய போது அவனுக்கு எதிரே கலை நின்று கொண்டு இருந்தாள்.

"வரலைனு சொன்னே?"

"மனசை மாத்திகிட்டேன்"

"ம்.. எனக்கும் தெரியும் ?"

"வாட் டூ யு மீன்?"

"யு நோ, வாட் ஐ மென்ட்?"

"நீ சின்ன வயசிலே எனக்கு கொடுத்த காதல் கடிதத்துக்கு தண்டனை கொடுக்க முடிவு பண்ணிட்டேன்"

"அதை ஏத்துக்க நானும் தாயார் தான்"

இருவருமே சிரித்து கொண்டனர்,அதற்க்கு மேல அங்கே நிற்பது நாகரிகம் இல்லை என்ற காரணத்திலே அப்படியே ப்ரோக்ளின் பிரிட்ஜ் க்கு வந்து அப்படியே கிழே போனால் தண்ணீர் அதை தொட்டு விடும் முன் எழுத்து வருது..

கதை,
திரைகதை,
வசனம்
நசரேயன்

ஆனா எழுத்தை பார்க்க யாரும் இல்லை, எல்லோரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள்.


26 கருத்துக்கள்:

சிநேகிதன் அக்பர் said...

தல கதை ஒரே பின்ந‌வினத்துவமா இருக்கு..

எப்படி இப்படி எல்லாம்...

நாந்தான் முதல்ல.

பழமைபேசி said...

//மாணி வண்ணான்???"//

அதுக்கு நாந்தானா?

அப்துல்மாலிக் said...

நல்லாயிருந்தது கதையோட்டம்

//கதை,
திரைகதை,
வசனம்
நசரேயன்
//

நம்புறோம் அதுக்கு ஏன் இதெல்லாம்

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை நல்லா இருக்கு

ILA (a) இளா said...

hmm
ஒத்துக்க முடியாத முடிவு

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாங்க இங்கே

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-))

ராஜ நடராஜன் said...

எனக்கு ஒண்ணுமே புரியல!நீங்க பேசாம காதலன் காதலி போன் டயலாக்கே தொடருங்கள்:)

Anonymous said...

ஒண்ணும் புரியலை :)

நசரேயன் said...

//
ராஜ நடராஜன் said...

எனக்கு ஒண்ணுமே புரியல!நீங்க பேசாம காதலன் காதலி போன் டயலாக்கே தொடருங்கள்:)
June 26, 2009 5:19:00 PM EDT
சின்ன அம்மிணி said...

ஒண்ணும் புரியலை :)
//
அம்புட்டு குழப்பமாவா இருக்கு, இப்ப கொஞ்சம் மாத்தி இருக்கேன்.ஏதாவது முன்னேற்றம் இருக்கானு பாத்து சொல்லுங்க

ஆ.ஞானசேகரன் said...

//கதை,
திரைகதை,
வசனம்
நசரேயன்//

வாழ்த்துகள் நண்பரே

Unknown said...

" வாட் யூ மீன் " ..... " ப்ராஜக்ட் " இந்த ரெண்டு வார்த்தையும் பெரும்பாலான இடங்களை கதையில் நிரப்பி முதல் இடத்தை பிடித்துள்ளது.....!!


" ப்ராஜக்ட் " -- இந்த வார்த்தைய கேட்டாலே ஒரே அலர்ஜி நமக்கு.....


" வாழ்க அமெரிக்க தமிழ் காதல் " .. " வாழ்க டயரக்டர் நசரேயன் " ........

Vidhoosh said...

//மாணி வண்ணான்???"//
இது ஒன்றுதான் வித்தியாசமானதாக இருக்கு. மத்தபடி கதையில் ஏகப்பட்ட வார்த்தைகள் copy paste செஞ்சா மாதிரி repeat ஆகிட்டே இருப்பதால் :(

Mahesh said...

அடுத்த டைரடக்கரு "தல"பதி நஜரேயன் வாள்க !!!

குடந்தை அன்புமணி said...

வாழ்த்துகள் நண்பரே!

http://urupudaathathu.blogspot.com/ said...

Onnumae puriyala!!!

சந்தனமுல்லை said...

எழுதும்போது ஸ்பெல்லிங் மிஸ்டேக் வரும்..பேசும்போது கூடவா!! :-)

சந்தனமுல்லை said...

// தல கதை ஒரே பின்ந‌வினத்துவமா இருக்கு..

எப்படி இப்படி எல்லாம்...

நாந்தான் முதல்ல.

June 26, 2009 2:48:00 PM EDT
Blogger பழமைபேசி said...

//மாணி வண்ணான்???"//

அதுக்கு நாந்தானா?//

LOL!

வழிப்போக்கன் said...

கதை நல்லாயிருந்தது...

Prabhu said...

அய்யா, டேரடக்கரே...கழுதை, சின்ன வயசுல குடுத்த ஒரு லெட்டருக்கு இவ்ளோ ஆர்பாட்டமான, ஆடம்பரமான அமெரிக்கத் தெருவில சுத்தற கதையா?

பெரிய ஷங்கரா வருவீங்க போலயே!

அ.மு.செய்யது said...

தல..ஒரு ஃபார்ம்ல தான் எழுதறீங்க போல....

யு நோ வாட் ஐ மென்ட் ??

வால்பையன் said...

புரடியூசர் சிக்கிட்டாரா!

அவரையும் புரூக்ளீன் பிரிட்ஜுல தள்ளி விட்டிங்களா?

வில்லன் said...

என்ன கிறுக்கு புடிசசு போச்சா???? சுத்தமா ஒன்னும் புரியல..... திரும்ப வெளக்கமா இன்னொரு பதிவு போடவும்.

வில்லன் said...

இப்படியெல்லாம் புரியாத பதிவு போட்டா கடைய மூட வச்சுருவோம் சாகிரத்தை

வில்லன் said...

//கதை,
திரைகதை,
வசனம்
நசரேயன்

ஆனா எழுத்தை பார்க்க யாரும் இல்லை, எல்லோரும் தலை தெறிக்க ஓடி விட்டார்கள்.//

சரியாய் சொன்னீர்......... ஒரு வாரத்துக்கு கட பக்கம் வரதா ஐடியாவே இல்ல எனக்கு

கடவுள் said...

:-))