Friday, May 29, 2009

திமுக பெயர் மாற்றம் -கலைஞர் அறிக்கை

கழக உடன் பிறப்புகளே,

1949 ல் இருந்து கழகத்திலே என்னை இணைத்து இன்று வரை எனக்கு இட்ட பணியை மனநிறைவோடு செய்து வருகிறேன். கழகம் 1967 முதல் முதலா அரிதி பெரும்பான்மையாக அரியணையிலே ஏறிய போது அண்ணாவுக்கு தோள் கொடுத்தேன். அடுத்த இரண்டு வருடத்திலே அண்ணா இந்த பூஉலகை விட்டு விட்டு கழக பணிகளை என் தோள் மீது இறக்கி வைத்து விட்டு இந்த தம்பியை பிரிந்து சென்றார். அண்ணாவிற்கு பின் கழக தலைமையை ஏற்று நடத்த நான் பட்ட இன்னல்கள் என்னில் அடங்கா.வாழ்க்கை ஓட்டப் பந்தயத்திலே முன்னால் வர தீயை தீண்டினேன். தென்றலை தாண்டியதில்லை.

முயற்சியிலே மனம் தளராமல் ஓடினேன், கை மேல் பலனாய் அண்ணாவின் மறைவுக்கு பின் கழக தலைமைக்கும், மக்கள் தலைமைக்கும் முதல்வன் ஆனேன். அன்றிலிருந்து அரியணையை காக்கவும், கழகத்தை காக்கவும் நான் கடந்து வந்து காட்டு பாதைகளை நினைக்கும் போது கண்கள் பனிக்கவில்லை, இதயம் இனிக்க வில்லை.

கழகப் பொருளாளர் அண்ணன் எம்.ஜி,ஆர் கழக கணக்கு வழக்குகளை பற்றிய விவகாரங்களை கேட்டதும், அரியணை போட்டியிலே எனக்கு அடுத்து நிற்கும் நண்பனை புறம் தள்ள கட்சியிலே இருந்து நீக்க வழி செய்தேன்.சென்றவர் திரும்பி வந்தார் புது அணியாய், அதுவரை காங்கிரஸ் கட்சியோடு மல்லு கட்டிய கழகம், புது கழகத்தோடு மல்லு கட்ட ஆரம்பித்தோம்.விளைவு விட்டு தந்தேன் அரியணையை, காத்து இருந்தேன் பத்து வருடம் இலவு காத்த கிளி போல. இந்த இடைப்பட்ட காலத்திலேயே எனது போர் வாளாக இருந்த கழகத் தூண் தம்பி வைகோ சுறாவளியாகவும், சுனமியாகவும் கழகத்தை கலக்கினார்.

கழகத்தை கலக்கிய போர் வாள் அரியணைக்கு வெகு பக்கத்திலே தென்றலாய் வந்த அவரை புயலாய் விரட்டி அடிக்க வேண்டிய சோதனை, சோதனையும் வேதனையும் என்னை கொல்ல, நானே கொலை குற்றம் சாட்டினேன், நாடு நன்மையடைய, மக்கள் வளம் பெற, வளர்த்த கடா மார்பிலே பாய்ந்ததாக போர் வாளை திருப்பி அனுப்பினேன், வாளாய் போனவர் வந்தார் புது அணியாய், வாழையடி வாழையா தொண்டு செய்ய செயல் வீரர்களை அனுப்பினேன், கடமையை செய்து புது கழகத்தை உடைத்தார்கள். வாள் வெற்று பலூன் ஆனது.

திராவிட கழகத்திலே இருந்து அண்ணா, திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றை மட்டுமே உருவாக்கினார், ஆனால் நானோ அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு பெரிய கிளை கழகங்களை உருவாக வகை செய்தேன்.

கழகப் பணிகளை திறம்பட செய்ய குடும்பத்தையும், கழகத்தையும் இணைத்தேன், மா மனிதன் மாறன் வந்தார், அவர் பின் இளைய மாறன் வந்தார்,வந்தவர் உண்ட வீட்டுக்கு பிண்டம் வைத்தார், உதறி தள்ளினேன், ஓரம் கட்டினேன்.அடிப்பது போலே அடித்தேன், அழுவது போல அழுது கழகத்திலே மீண்டும் இணைத்தேன்.முத்தவன் இந்திய தாய்க்கும், இளையவன் தமிழ் தாய்க்கும் கடன் பட கட்டளை இட்டேன். கனவாய் வந்த கானல் நினைவாய் நடை முறையானது.

கடந்த 60 பது வருட பொது வாழ்வு பணியிலே நான் கடந்து வந்த பாதைக்கு அன்பும், ஆதரவும் தந்த உடன் பிறப்புகள், இந்த மாற்றத்திற்கும் இனி வரும் மாற்றத்திக்கும் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலே கழகத்திலே பெயரை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி எனப் பெயர் மாற்றம் செய்து பொது குழுவில் பேராரசியர் அன்பழகன் முன் மொழிந்த தீர்மானத்தை நான் வழி மொழிகிறேன்.

ஆகையால் இன்றிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம், திருக்குவளை முத்துவேல் கருணாநிதி என் அழைக்கப்படும், இந்த சந்தோச சமயத்திலே தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாரு கொண்டாட அவைத் தலைவர் அன்பழகன் கேட்டு கொள்கிறார்.

அடுத்து வரும் தீர்மானமாகிய உதய சூரியன் படத்திலே எனது படத்தை இணைக்க பொது குழுவிலே எடுத்த முடிவுக்கு நான் உடன் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதற்காக தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம் என நானே கேட்டு கொள்கிறேன்.

இனிவரும் காலங்களை எனது சந்ததியரும்,எனது தமக்கையார் சண்முக சுந்தரம்மாள், பெரிய நயம் அம்மாள் சந்ததியரும் கழகப்பணிகளில் தங்கள் திருப்பாதங்களை பதித்து தமிழ் தாய்க்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டு செய்வார்கள் என்பதையும் மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.

அன்புடன்,
திரு.மு.கருணாநிதி


Thursday, May 28, 2009

அமெரிக்க காதல்

மலை 6 மணிக்கு W.T.C யிலே இருந்து ரயிலை பிடிக்க அலுவலகத்திலே இருந்து அவசமாக கிளம்பினேன்,கட்டுகடங்கா ௬ட்டத்திருக்கு நடுவிலே ரயிலில் எனக்கும் ஒரு இடம் கிடைத்து உட்கார, என் பக்கத்திலே சிறிது நேரத்திலே ஒரு வடக்கூர் அண்ணாச்சி வந்து உட்கார்ந்தார்.கொஞ்ச நேரத்திலே அழகான வடக்கூர்காரி உள்ளே வந்தாள், அவளை பார்த்து கொண்டு இருக்கும் போதே பக்கத்திலே இருந்த அண்ணாச்சி அவளை பெயர் சொல்லி அழைத்தான். அவளும் கை கட்டி விட்டு இவர் பக்கத்திலே வந்து உட்கார்ந்தாள்.ரெண்டு பெரும் குசலம் விசாரிச்சி கிட்டாங்க.அதற்குள் ரயிலில் ஏறிய வெள்ளைக்கார ஜோடிகள் ரெம்ப நாணயமான முறையிலே காதல் பண்ணிக்கொண்டு இருந்தார்கள்.

அமெரிக்கா வந்த புதுசிலே இப்படித்தான் இவங்க சபையிலே காதல் என்கிற பெயரில் கட்டி பிடி விளையாடும் போது, நான் பட்டி காட்டு காரன் மிட்டாய் கடையை பார்த்தது மாதிரி ஓசி படம் பார்ப்பேன்.நான் படம் பார்கிறேன்னு அவங்க எல்லாம் கவலைப்பட்ட மாதிரி தெரியலை,ஆனா பக்கடா தின்பவனை விட்டு விட்டு என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள்.அப்பத்தான் எனக்கும் தெரிந்தது இங்கே ஓசி படம் காட்டினாலும்,கண்டுக்காம உன் வேலையத்தான் பார்க்கணும் வேடிக்கை பார்க்க ௬டாதுன்னு.பால் வடியும் முகத்தோட இருக்கிற என் மாதிரி பச்சை பிள்ளைக்கு எம்புட்டு சோதனை வருது.அதுக்கு அப்புறமா அவங்க ஆட்டத்தை நேரிலே பார்க்க மாட்டேன், ரயில் கண்ணாடி வழியத்தான் பார்ப்பேன்.

வெள்ளையம்மா, வெள்ளையப்பன். கருப்பம்மா, கருப்பையன். வெள்ளையம்மா, கருப்பையன், கருப்பம்மா, வெள்ளையப்பன் இப்படி பல தரப்பட்ட வித்தியாசமான ஜோடிகளை பார்த்து இருக்கிறேன். இவங்க துண்டு போடுறதே போது இடத்திலே காதல் பண்ணத்தான்னு நினைப்பேன்.அன்றைக்கு வெள்ளைக்கார ஜோடிகளின் ஆட்டத்தை பார்க்க வசதி இல்லாததாலே வடக்கூர் மக்கள் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தேன்.


கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசிகிட்டு இருந்தாங்க, அப்புறம் சத்தம் நின்னு போச்சி, பேசி களைப்பு அடைத்த ஜோடிகள்அமைதியானாங்க. கொஞ்ச நேரத்திலே பக்கத்திலே நொங்கு குடிக்கிற சத்தம் கேட்டது, அமெரிக்காவிலே நோகாம நொங்கு தின்கிறது யாருன்னு சுத்திப் பார்த்தேன், ஒன்னும் தெரியலை, கொஞ்ச நேரத்திலே தொக்கம் எடுக்கிற சத்தம் கேட்டது.மறுபடியும் சுத்திப் பார்த்தேன்,நம்ம வடக்கூர் அண்ணாச்சி பக்கத்திலே இருந்து சத்தம் வந்தது, அப்படி என்னதான் பண்ணுறாருன்னு பார்த்தா வடக்கூர்காரியோட வாயிலே என்னவோ தேடுறாரு, அப்படி அங்கே என்ன புதையலை தேடுறாருன்னு உத்து பார்த்தா அவளுக்கு முத்தம் கொடுத்து கிட்டு இருந்தாரு. அவரு கொடுக்கிற வேகத்துக்கு இதயம், கிட்னி, சிறுகுடல், பெருங்குடல் எல்லாம் அள்ளி வெளியே போட்டு இருப்பாரு .அவ்வளவு ஆர்வம்மா மண்டிகிட்டு இருக்காரு.வெளி நாட்டு வியாதி அண்ணாச்சியையும் தொத்தி விட்டது போல என நினைச்சிகிட்டேன்.

வெள்ளையம்மா, கருப்பு அண்ணாச்சி களை மட்டுமே பார்த்து விட்டு வடக்கூர் ஜோடிகளை பார்க்கும் போது கொஞ்சம் வயது எரிச்சலாத்தான் இருந்தது, வாய்ப்பு கிடைக்க வில்லைன்னு இல்லை, இப்படி கலாச்சாரம் காத்திலே களவு போகுதேன்னு,ஹும்.. என்ன செய்ய பக்கடா திங்கவனிடம் என்டா நம்ம ஊரு மானத்தை கப்பல் ஏத்துரன்னு கேட்கவா முடியும்.என்ன தான் பொது இடமா இருந்தாலும் வேடிக்கை பார்த்த குற்றத்திற்காகவும், கேள்வி கேட்டு அவங்க ப்ரைவசியிலே தலை இட்டுவிட்டேனு என்னை ஸு(sue)
பண்ணிவிடுவான். அதற்க்கு அப்புறம் அவங்க பேசவே இல்லை, கை, கால், கண், உதடு தான் பேசியது.


வெளியூர்காரங்க இப்படி காதல் பண்ணும் போது வேடிக்கை பார்த்த நான் உள்ளூர்காரங்க காதலை பார்க்க முடியவில்லை.எது எப்படியே காதல் வாழட்டுமுனு நினைச்சிகிட்டு நான் மெதுவா இடத்தை காலி பண்ணி அவங்க கண்ணுக்கு தெரியாத இடத்து சென்றேன்.

பிரயாணம் முடிந்து இறங்க வேண்டிய இடம் வந்தது நானும் இறங்கினேன் ௬ட வந்த வடக்கூர் ஜோடிகளும் இறங்கியது. வெளியே வந்து பேருந்துக்காக காத்து இருந்தேன், அங்கேயும் வந்து விட்டார்கள். சிறிது நேரத்திலே இன்னொரு புது வடக்கூர்காரன் வந்தான்.அவன் பழைய வடக்கூர் காரியப்பார்த்து கை காட்டினான், அவளும் கை காட்டி விட்டு பழைய வடக்கூர் காரனைப்பார்த்து

"ஹேய்.. என் புருஷன் வந்துட்டான், நான் போறேன், அப்புறம் பார்க்கலாம்"

எனக்கு என்னவோ ஹிந்தி படம் பார்த்த மாதிரியே இருந்தது, ரயில நொங்கு தின்னுட்டு இங்கே வந்து இன்னொருத்தனை புருஷன்ன்னு சொல்லுறா. யோசிச்சி முடிக்கும் முன்னே அடுத்து ஒரு கேள்வியை கேட்டா

"உன் பொண்ணாட்டி எங்கே"

"இப்ப வந்திடுவா, நீ போ.. நான் அப்புறம் பேசுறேன்.."

இது நல்ல துண்டு போட்ட காதலர்கள் அல்ல, கள்ளத்துண்டு போட்டு நொங்கு தின்கிற ஜோடி.ஒரே மனசு கஷ்டமாப்போச்சி, திருட்டு படம் பார்க்காம தனியா நல்ல புள்ள மாதிரி போய்டமேன்னு, எப்படியும் இன்னொரு நாள் இவங்க படத்தை ஓசியிலே பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு பயணத்தை இன்னும் தொடர்கிறேன்.


Friday, May 22, 2009

தாவணி தேவதை

அன்றைக்கு வகுப்பின் கடைசி நாள், இதை விட்டா இனிமேல ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு தெரியும்.இன்றைக்கு எப்படியாவது அவளிடம் ஆட்டோ கிராப் வாங்கணும் என்ற முடிவோடு கிளம்பினேன்.அவள் யார் என்பதை ஒரு மொக்கை கொசு வத்திக்கு அப்புறம் உங்களுக்கே புரியும்.

நான் எட்டுலே இருந்து பன்னிரண்டு வரை ஒரே பள்ளி௬டத்திலே படித்தாலும் 11 படிக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன்,இது வரைக்கும் டவுசர் போட்ட நான் பேன்ட் சட்டை போட ஆரம்பித்த நேரம்.இது நாள் வரைக்கும் பாவடை சட்டையிலே பள்ளிக்கு வந்த சக வகுப்பு தோழிகள், தாவாணியிலே வந்தார்கள், என் கண்ணுக்கு அவங்க தேவைதைகளாவே தெரிந்தனர்.அவங்க கண்ணுக்கு நான் எப்படி தெரிந்து இருப்பேன் என நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அந்த தேவதைகளிலே என்னை கவர்ந்தது மாவட்டத்திலே ரெண்டாவது வந்தவள் பத்தாம் வகுப்பிலே, இப்படி நல்லா படிக்கிற,அழகான பெண்ணுக்கு துண்டு போடுவது எவ்வளவு கஷ்டமுன்னு போட்டவங்களுக்கு தெரியும், அவளை முதலில் பார்த்ததும் மனசுல பட்டாம் பூச்சி பறந்தது, சினிமா படம் மாதிரி தனியா அவளை நினைத்து ஒரு பாட்டு பாடலாமுன்னு கிளம்பும் முன்னே எனக்கு ஒரு அடி விழுந்தது.

"அவ என் ஆளு, பார்த்த அடிப்பேன்" என் சகதோழன் ௬றினான்.

கலரிலே நான் கருவா குஞ்சு அவள் எலுமிச்சை நிறம்,இப்படி எலுமிச்சை நிற அழகிகளை கொண்டதாலே என்னவோ எங்க ஊருக்கு லெமன் சிட்டின்னு பேரு வந்தது.மாசக் கணக்கா துவைக்காம போட்டாலும், நண்பர்கள் நாற்றத்திலே முகம் சுழித்தாலும், அப்படி ஒரு ஆனந்தம், போடுவதற்கு வேற பேன்ட் இல்லன்னா வேற என்ன செய்ய முடியும்.

பார்த்த நாளிலே ஒருதலையா துண்டு போட்டு மனசிலே உட்கார்ந்தவள் ஒரு நெடுந்தொடர் மாதிரி ரெண்டு வருஷம் அப்படியே இருந்தாள், என் வாழ் நாளிலே அதிக நாள் ஒரு தலையா, இந்த தறுதலை துண்டு போட்டு வைத்த பெருமை குட்டைச்சியை சேரும்.இதுக்கெல்லாம் ஆஸ்கார் விருது கொடுப்பாங்களானு தெரியலை. நான் எதோ துண்டு போட்ட உரிமையிலே அவ பட்ட பெயரை சொல்லி விட்டேன், நீங்களும் அப்படி ௬ப்பிட்டீங்கன்னா, என்னை தேடுகிற ஆட்டோ இனிமேல உங்களையும் தேடும்.இப்படிப்பட்ட ஒரு தெய்விக காதலை தான் வெளியே சொல்ல முடியலை, குறைந்த பட்சம் நினைவு சின்னமாக ஒரு ஆட்டோ கிராப் வாங்க வேண்டும் என நினைத்தேன். இது நாள் வரைக்கும் ஒரு தலையா துண்டு போட்டு இருந்தாலும், அவளிடம் ஒரு வார்த்தை ௬ட பேசியது இல்லை.அன்றைக்கு தைரியத்தை வர வளைத்து அவள் முன் சென்று புத்தகத்தை நீட்டினேன்.

முதல்ல என்னைப் பார்த்து வேடன்கிட்ட அகப்பட்ட மான் மாதிரி விழித்தாலும், அப்புறமா சுதரிச்சி கொண்டு அட..சீ இந்த கருவப்பயலுக்கா இப்படி ஒரு பயம் என் நினைத்து என்ன வேண்டும் என்று சைகையிலே கேட்டாள்.நானும் எதுவும் பேசாமல் நேட்டோடை நீட்டினேன்.அதை புன்னகையுடன் வாங்கி அதிலே எழுத்தினாள்.அவள்எழுதி கொடுத்தது தான் தாமதம், நன்றி ௬ட சொல்லாம ஒரே ஓட்டமா வந்தேன், சினிமாவா இருந்த இந்த இடத்திலே ஒரு காதல் பாட்டு இருந்து இருக்கும். நிஜத்திலே காதலனும், காதலியும் தெருவிலே நின்னு கட்டி பிடிச்சி பாட்டு பாட முடியுமா,பாட்டு முடியும் முன்னே பாடையே கட்டிடுவாங்க பாடின ரெண்டு பேருக்கும்.

அவள் எழுதி கொடுத்த பக்கத்தை எடுத்து பார்த்தேன், மறுபடி பார்த்தேன், என்ன எழிதி இருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை, இத்தனைக்கும் அவ தமிழ்ல தான் எழுதி இருக்கிறாள், எனக்கு தான் அறிவு குறைவு என்று நல்லா படிக்கிற நண்பர்களையும் கேட்டு பார்த்தேன், அவர்களுக்கும் தெரியவில்லை, அவளின் எழுத்துக்களை ௬ட்டி,கழித்து, வகுத்து, பெருக்கி பார்த்தேன் என் மர மண்டைக்கு ஒன்னும் புரியலை. அர்த்தம் கண்டு பிடிக்க இல்லாத மூளை யை கசக்கி பார்த்தேன், அடுத்த ரெண்டு மாசத்திலே செலவே இல்லாமல் மொட்டை அடித்தது தான் மிச்சம்,அதற்குள் தேர்வு முடிவுகளும் வந்து விட்டது.எல்லோரும் எதிர் பார்த்தது போல அவள் மாவட்டத்திலே முதல் மதிப்பெண் வாங்கி இருந்தாள்.

வழக்கம் போல அந்த வருடமும் தேர்வில் ஆண்களை விட பெண்களே அதிக மதிப்(பெண்)களும், தேர்ச்சி சதவிதமும் அதிகம்.அதிலே பெண் இருக்கிறதாலே, அவங்களுக்கு மதிப்பெண் சொந்தமான்னு தெரியலை.அவங்க நல்ல புரிஞ்ச்சு படிப்பாங்களா இல்லை புத்தகத்தை வரி விடாம படிச்சி எழுதி நல்ல மார்க் வாங்க்குவாங்களானும் தெரியலை.இப்படி ஒவ்வொரு தேர்வு சமயத்திலும் சுனாமி மாதிரி வார பெண்கள், கால ஓட்டத்திலே கடற்கரை மணல் போல இருப்பதே தெரிவதில்லை.பெண் தெய்வங்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமியிலே படிப்பிலே எப்போதும் முன்னிலையிலே இருக்கும் அவங்களுக்கு ஒரு 33 சதவித இட ஒதுக்கீடு வாங்க முடியலை.

எனக்கு விபரம் தெரிஞ்ச நாளிலே இருந்து ஒவ்வொரு வருசமும் தேர்தல் முடிவு வந்த உடனே முத மார்க் வாங்கின எல்லோரும் நான் கலெக்டர், டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்வேன்னு தினத்தந்தி, தினமலர்ல பேட்டி எல்லாம் படிக்கிறேன், ஆனா இதுநாள் வரைக்கும் யாரவது ஒருத்தர், நான் முன்பு சொன்னது போல நான் ஏழை களுக்கு சேவை செய்யுறன்னு திரும்பி வந்ததே கிடையாது. நான் நல்லா படிக்கததாலே என்னவோ இந்த கேள்வி அடிக்கடி எனக்கு வரும்.சரி..சரி ஊர் கதையை விட்டு விட்டு என் கதைக்கு வாரேன்.

நான் எதோ தப்பி தவறி தேறிவிட்டேன், மருத்துவ, தொழில் நுட்ப கல்லூரிக்கு செல்ல நுழைவு தேர்வுக்கு உள்ளுரிலே படிக்க சென்றேன்.அவள் அதிக மார்க் வாங்கி இருந்ததால் நெல்லைக்கு சென்று படிக்க சென்றாள்.இந்த இடைப்பட்ட காலத்திலேயே அவளுக்கே தெரியாமல் அவளை ரெண்டு, மூனு தடவை பார்த்து இருப்பேன்.

நுழைவு தேர்வு எழுதி எடுத்த மதிபெண்களுக்கு ஒரு பொறியியல் கல்லூரியிலே இடம் கிடைத்தது எனக்கு. எந்த ஒரு வலிக்கும் காலம் பதில் சொல்லும் என்பது எனக்கு சில காலம் கழித்து தெரிய வந்தது, அவள் எழுத்துக்கு அர்த்தம் தேடி அலைந்த நான், கல்லூரி சென்று புது இடம், புது நண்பர்களை சந்தித்த சூழ்நிலையிலே அவளின் நினைவுகள் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா அகல ஆரம்பித்தது.எப்போதாவது அவளோட நினவு வந்தாலும் என்னை அதிகம் பாதிப்பது இல்லை.


காலம் கடந்தது, படித்து முடித்து, வேலைக்கு அலைந்து, ஒரு வேலையை பிடித்து ஒரு நிலைக்கு வர பல வருடங்கள் ஆனது,ரெம்ப நாள் கழித்து நான் ஊருக்கு சென்றேன், நான் விசாரித்த வரையிலே அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறினார்கள்.அவள் ஒன்றும் மருத்துவராகவோ, பொறியாளரோ இல்லை, இளநிலை பட்ட படிப்பு முடித்து இருக்கிறாள் என்பது தெரியவந்தது.அவள் படித்த வேகத்திற்கு அவளின் பட்ட படிப்பு எனக்கு ஆச்சரியமே.

ஒரு நாள் சாலை ஓரம் இருக்கும் கடையிலே நான் டீ குடித்து கொண்டு இருந்தேன்,பேருந்திலே இருந்து ஒரு குண்டு பெண்மணியும், இரு குழந்தைகளும், இன்னொருவர் இறங்கினார்கள்,அவளின் முகத்தை பார்த்த ஞாபகம் என்று சற்று உற்று கவனித்தால், அவளே தான் அவள்.என்னால் நம்ப முடியாத அளவுக்கு மாற்றம், நான் என் மனதிலே அவள் இப்படித்தான் இருப்பாள் கற்பனைக்கு எதிர் மாறாக இருந்தாள்.முன்பெல்லாம் அவளை பார்க்கும் போது அவளை என்னைப் பார்க்க வைக்க வேண்டுமே என்று ஏதாவது செய்வேன், அன்றைக்கு அவளிடம் இருந்து மறைய கடைக்குள் ஓடினேன். வந்த வேலை முடிந்து திரும்பி சென்னைக்கு வந்து விட்டேன், நீண்ட நாளுக்கு பிறகு மனம் அவளை சுற்றியது, மறுபடியும் எனக்கு ஆட்டோ கிராப் எழிதி கொடுத்த புத்தகத்தை பார்த்தேன், அதை ஒரு நோட்டில் எழுதினேன், "பிழைகளை சரி செய்க".

ஒரு வேளை நான் பதிவுகளில் விடும் எழுத்து பிழையா இல்லை தீராத பிழையா என்பது ஒரு புதிரே.இந்த உலகிலே புரிந்து கொள்ள முடியாத பிழைகள் கடல் போல இருக்கும் போது இதை மட்டும் என்னால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.


Monday, May 18, 2009

தயவு செய்து இழவு விழுந்ததாக விளம்பரம் தேட வேண்டாம்

அண்ணன் எப்ப சாய்வான் திண்ணை எப்ப காலியாகும் என்பதைபோல முடிவு வரும் முன்னே முடிந்து விட்டது போல முடிச்ச அவிழ்க்க போராடும் உடகங்கள், தன் சுய விளம்பரத்தை அதிகப்படுத்த பிணம் தின்னி கழுகுகளாக அலைகிறார்கள். இழவு வீட்டிலே விளம்பரம் செய்து பழக்கப்பட்ட நீங்க, இப்ப விழாத இழவுக்கு கொடி பிடிக்காதீங்க சாமிகளா.

யாவாரம் சரிஇல்லைனா கடைய இழுத்து மூடுங்க,இன்னும் தேர்தல் செய்திகளே முடியாத நிலையிலே உங்களுக்கு செய்தி பஞ்சம் வந்து விட்டதா?

இவ்வளவு நாள் வரைக்கும் ஈழ பிரச்சனைய எண்ண நேரம் இல்லாம இருந்த நீங்க,இப்ப இழவு விழும் முன் தார தப்பட்டைய எடுத்து கிட்டு எங்க சாமி போறீங்க, இன்னைக்கு நேத்தா இலங்கையிலே மரணம் நடக்குது கடந்த முப்பது வருசமாத்தான் நடக்குது. அப்ப எல்லாம் கிடைக்காத வருமான செய்தி இப்ப கிடைக்கும் முன்னே நீங்களே உண்மை என் தம்பட்டம் அடிக்கிறது எந்த வைகையிலே நியாயம்?


உபகாரம் பண்ணலைனாலும் உபத்திர்யம் பண்ணாம இருங்க,இதை மனசுல வச்சிகிட்டு வேலை செய்யுங்க

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.



நடுநிலமைக்கும், நாட்டமைதனத்துக்கும் பெயர் இல்லாமல் செய்த உடகங்களே கொஞ்சம் செய்திகளை பிரசரிக்கும் அவசரத்திலே ஒரு கணம் யோசித்து உண்மையை சொல்ல முயற்சி செய்யுங்கள். இதே நிலை நாளை உங்களுக்கும் வரலாம், நீங்க கடை நடத்தி கொண்டு நல்ல வியாபாரம் செய்யும் நேரத்திலும், உங்களை அடுத்தவன் இழுத்து மூடிவிடுவான்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.


அதனாலே நீங்க இன்னறைக்கு பரப்பும் வதந்திகள் உங்களை நிச்சயம் ஒரு நல்ல வந்தடையும். இதை எல்லாம் அந்த காலத்திலேயே எங்க ஆளு சொல்லிட்டு போய்ட்டாரு நான் ஒன்னும் புதுசா சொல்ல தேவை இல்லை.

இதியாவிலே செய்தி பஞ்சம் வந்த மாதிரி நீங்க சுடு தண்ணியை காலிலே ஊத்தின மாதிரி பக்கத்து வீட்டு வந்தந்திகளுக்கு அலைய வேண்டாம்.உண்மைகளை ஏற்க்காமல் இருக்க முடியாது, அதே போல உங்களைப்போல பொய் பரப்பும் பச்சொந்திகளையும் ஏற்க்க முடியாது. உடக சுதந்திரங்களை பயன்படுத்தி உங்க சொந்த செய்திகளை பரப்பும் எண்ணத்தை கை விடுங்கள்.பொறுத்தார் பூமி ஆழ்வார், பொறுமை கடலினும் பெரிது என்பதை போல பொறுத்து பூமியை ஆளுங்கள், இப்படி கொழுத்து திரிந்து ஆழ வேண்டாம்.


Thursday, May 14, 2009

ஐ.டி அவலம் - அமெரிக்கா

முன்னாள் மொக்கைகள் பாகம் 1,பாகம் 2,பாகம் 3.
மத்தபடி நடப்பு மொக்கை கிழே
**************************************************************************************************************************
ஆட்டோகாரன் தெளிச்சி அடைந்து எழுந்திரிக்கும் முன் வீட்டுக்கு தெரு நாய் விரட்டினா ஓடுற வேகத்தை விட வேகமா ஓடி வந்து சேர்ந்தேன்.வந்து பார்த்தால் வீட்டு முன்னே போலீஸ் வந்து இருக்கு,தப்பு மேல தப்பு பண்ணி என்னை மட்டுமல்ல வாழ்க்கையையும் தொலைக்க வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளான நான் ஒரு ஓரமா மறைந்து இருந்து போலீஸ் போன பத்து நிமிடம் கழித்து நான் போனேன், ஒரே பயத்தோட நண்பனிடம்

"என்ன மச்சான் போலீஸ் வந்தது, ஏதாவது பிரச்சனையா?"

"கவல துறை எப்போதும் களவாணிகளை தேடாது, சில சமயம் என்னை மாதிரி நல்லவங்களையும் தேடி வரும், கடவு சீட்டு விண்ணப்பத்துக்கு காவல்துறை தேடி வந்தாங்க"

போன உயிர் திரும்பி வந்த உணர்வு எனக்கு,நான் அவனிடம்

"மச்சான் எனக்கு வேலை போய்டுச்சு"

"ஒ..அப்படியா"

"என்ன மச்சான், நானே எவ்வளவு வேதனையிலே இருக்கேன், நீ ரெம்ப சாதாரணமா சொல்லுற"

"நீ போலீசை பாத்து அரண்டு போனதிலே நினைத்தேன், உன் வேலைக்கு சங்கு ஊதிட்டாங்கனு,அதுமட்டுமில்லை இதுக்கு எல்லாம் ஐ.டி ஆளுங்க புகார் கொடுக்க ஆரம்பித்தால் ஒரு நுனி நாக்கு அழகி நிரந்தரமா போலீஸ் ஸ்டேஷன்ல தான் இருக்கணும்,காவல் துறையை பத்தி கவலை வேண்டாம்"

"வயத்து எரிச்சலை கிளப்பாதே மச்சான், நானே கொலை வெறியிலே இருக்கேன்"

"நீ என்னவோ இஸ்ரோவிலே இருந்து ஏவின ராக்கெட் உங்கிட்டே திரும்பி வந்தாலே உனக்கு வேலை போன மாதிரி வருத்தப்படுற, மச்சான் நீ ரெண்டு நாள் தாக்கு பிடிச்சதுக்கே ஒரு மாசம் லீவ் எடுக்கலாம்"

"இப்ப என்னடா பண்ண?"

"வேலை இருக்கவனுக்கு ஒரு வேலை,இல்லாதவனுக்கு ஆயிரம் வேலை, மறுபடி தேடிக்கலாம், காதல் தோல்வியா தாடி வச்சி யோசிக்க, இது தண்ணி அடிச்சி யோசிக்க வேண்டிய விஷயம்"

"ஐ.டி யை நம்பி இருக்கிற வேலையை விட்டு வந்தது, அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதை ஆகி போச்சி டா"

"ஐ.டி உலகமே இப்படித்தான், வேண்டும் என்றால் தலையிலே தூக்கி வச்சு ஆடுவாங்க, தேவை இல்லைனா அப்படியே குப்பை தொட்டியிலே போட்டுட்டு போய்டுவாங்க,நீ பேசாம என் ௬ட அமெரிக்கா வந்துவிடு, நாம அங்கே போலாம்"

"டேய்.. உள்ளுர்லே விலை போகாத மாடு இது, நீ என்னவோ புளியங்குடியிலே இருந்து தென்காசிக்கு பஸ்ல போற மாதிரி சொல்லுற,அமெரிக்கா போகிற அளவுக்கு இன்னும் அறிவு வளரலை"

"அமெரிக்கா போகிற அளவுக்கு விசா எடுக்க அறிவு இருந்தா போதும், நம்ம மனவாடுகளை பார், குஜ்ஜுக்கும், சிங்கத்துக்கும் அடுத்த படியா அமெரிக்காவிலே இன்னைக்கு கொடியை நாட்டிகிட்டு இருக்காங்க,அதிலே கால் வாசி பேரு ஹைதரபாத் அமீர்பேட்டையிலே படிச்சவங்க"

"அண்ணா பல்கலைகழகம் மாதிரியா?"

"அதுக்கும் மேல மச்சான், அண்ணா பல்கலைகழகத்துக்கு சான்றிதல் அங்கே இருந்துதான் வருது, அவ்வளவு பெரிய பிரிண்டிங் பிரஸ் இருக்கு,நூறுக்கு இன்ஜினியர், இரு நூறுக்கு டாக்டர், ஐநுறுக்கு எம்.சி.ஏ ன்னு ௬வி..௬வி.. வித்துகிட்டு இருக்காங்க, அங்கே வாங்கிட்டு போய் அமெரிக்காவிலே பச்சை அட்டை வாங்கி நிறைய பேரு இருக்காங்க"

"மச்சான், நீ இன்னைக்கு தண்ணி போடலையோ, ரெம்ப சலம்பலா இருக்கு"

"எல்லாம் தயாரா இருக்கு, இங்க பாத்தியா,உனக்குத்தான் காத்து கிட்டு இருக்கேன்"

பக்கத்திலே இருந்த குவாட்டரை எடுத்து, அப்படியே வாயிலே ஊத்தினேன்.

"எனக்கு வேலை போன சோகத்திலே குடிச்சா குவாட்டர் ௬ட இனிக்குது"

"இனிக்காம என்ன செய்யும், குடிகார கட்ட கோவிந்தனை ஏமாத்த குவாட்டர் பாட்டிலே பெப்சி ஊத்தி வச்சி இருந்தேன், அதை தான் நீ குடிச்ச,மச்சான் உனக்கு பிடிச்ச பட்ட சாராயம், வெளி நாட்டு இறக்குமதி இந்தா குடி"


அந்த அரக்கனை வாங்கி அப்படியே குடித்தேன், இப்ப கொஞ்சம் தெம்பு வந்தது.


"அமெரிக்கா போக என்னடா செய்யணும்??"


"பட்ட சரக்கு.. பட்டைய கிளப்புது பாத்தியா, இதே ரெசியும் அப்படியே வச்சிக்கலாம், கொஞ்சம் நாக்கை சுழட்டி, சுழட்டி இங்கிலீஷ் பேசணும், அதாவது யாருக்குமே புரியாத மாதிரி பேசணும், நீ அமெரிக்காவிலே வேலை வாங்க அது போதும்"


"தண்ணி அடிச்சவன் மாதிரி இங்கிலிஷ்ல பேசினா வேலை இருக்குன்னு சொல்லுற"


"ஆமா.. ஆமா"


"மச்சான், எனக்கு ஒரு சந்தேகம்"


"அமெரிக்கா போகும் முன்னாலே உனக்கு சந்தேகம் வந்துவிட்டதா, நீ சீக்கிரமே ப்ராஜெக்ட் மேனேஜர் ஆகிடுவ மச்சான், கேள்வியை கேளு"


"இப்படி புறவாசல் வழியே போறதையும், சுவர் ஏறி குதிச்சி உள்ளே போகிற வழியே பத்தி யோசிக்கிற நீ மாட்டினா, தேசிய பாதுகாப்பு சட்டமா? குண்டர் சட்டமா?"


"டேய் போன வாரம் வரைக்கும் நான் நேர் வழியிலே தானே போனேன், இந்த ரெண்டாவது ஆட்டம் நீ வந்த பிறகுதான் கரிபால்டி, படிச்ச உடனே வேலை கிடைக்க நீயும் நானும் அண்ணா பல்கலை கழகமோ, ஆர்.ஈ.சி யோ இல்லை, ௬ரை கொட்டைகையிலே மண்ணை ௬ட்டி உக்கார்ந்து படிச்ச நாம எல்லாம் எந்த வேலைக்கு போனாலும் முன் அனுபவம் வேண்டும்னு சொல்லுறாங்க, நமக்கு தெரிஞ்ச முன் அனுபவம் சைட் அடிச்சி அடி வாங்கினதுதான்.இதை வச்சி ஜெயில்ல வேணா வேலை வாங்கலாம்.இப்ப நீ வேலைக்கு போறதுக்கு நான் செய்யுற குறுக்கு வழி நானா பண்ணலை, எனக்கு ஒருத்தன் சொல்லி குடுத்தான், அவரு இன்னைக்கு நாசாவிலே வேலை பார்க்கிறாரு, நான் உனக்கு சொல்லி குடுக்கேன்"


"என்னவோ அறிவியல் ஆராய்ச்சி மாதிரி சொல்லுற,எனக்கு நாம பண்ணுறது சுத்தமா பிடிக்கலை"


"இந்த உலகத்திலே அனுபவம் இல்லாம ஒரே ஒரு இடத்திலே தான் வேலை கிடைக்கும்"

"அது என்ன வேலை மச்சான்!!!"


"கல்யாண மாப்பிளை தான், நீ இப்ப இருக்கிற நிலைமையிலே ஊரிலே ஆடு மேய்கிற உங்க அத்தை மகள் ௬ட உன்னை கட்டிக்க மாட்டாள்.இப்ப உன்னை பார்த்த உடனே துண்டை தூக்கி கொண்டு ஓடுறவங்க எல்லாம்,நீ அமெரிக்கா போன உனக்கு துண்டு போட வரிசையா நிப்பாங்க, இன்னொரு முக்கியமான விஷயம்,யார்ட்டையும் சொல்லாதே"

"என்ன மச்சான் அது?"

உன் காதை கொண்டா "நம்ம ஊரு நடிகைகள் எல்லாம் அமெரிக்காவிலே தெருவிலே நின்று சுடு நாய் (ஹாட் டாக்) விக்கிற, அங்க இருக்கிற பெட்டி கடையிலே பான் பராக் விக்கிற அமெரிக்கா தொழில் அதிபர்களைத்தான் திருமணம் செய்வேன்னு ஒத்தை காலிலே நிக்காங்கலாம்.அவங்களுக்கே இப்படி அடிபிடி சண்டைனா, அமெரிக்கா ஐ.டி க்கு எப்படி இருக்கும்,உள்ளூர் அழகியிலே இருந்து உலக அழகி வரைக்கும் துண்டு போட காத்து இருப்பாங்க "

"நீ இது வரைக்கும் சொன்ன யோசனையை எல்லாம் விட கடைசி என்னக்கு ரெம்ப பிடிச்சி இருக்கு,மச்சான் நடிகையை கல்யாணம் முடிக்கவாது நான் அமெரிக்கா வாரேன்,ஆமா மச்சான் பாலிவுட் நடிகையா ? கோலிவுட் நடிகையா"

"இப்ப எல்லாம் வடக்க இருந்துதான் வருது, அதனாலே இங்கே முடிச்சாலும், அங்கே முடிச்சாலும் ஒன்னுதான்"

"மச்சான் எனக்கு தூக்கம் வருது, நாளைக்கு கலையிலே பார்க்கலாம்"

"டேய் போகும் முன்னாடி உன் முகத்தை கண்ணாடியிலே பாத்துக்கோ, நடிகை புருசனோட அழகை கண்ணாடியும் ரசிக்கட்டும்"

(நாளை வரும் வரை நானும்)


Monday, May 11, 2009

அமெரிக்காவிலே நடு விரலை காட்டாதீங்க

அமெரிக்கா வந்த புதுசிலே நம்ம ஊரு மாதிரி சிகப்பு விளக்கு இருக்கும் போது சாலையை கடக்கிறது வழக்கமா இருந்தது, இப்படி ஒரு நாள் சாலையிலே சிகப்பு விளக்கில் நடந்து கொண்டு இருக்கும் போது கார்ல வந்த வெள்ளையம்மா பிரேக் போட்டு விட்டு என்னைப் பார்த்து நடு விரலை காட்டினாங்க, நானும் பதிலுக்கு நடு விரலை காட்டினேன்.அவங்க மறுபடியும் ரெண்டு கையை உயர்த்தி நடு விரலை காட்டினாங்க, நானும் ஆர்வமா அதையே செய்தேன்.காரை நிறுத்து விட்டு நேராக என்னை பார்த்து வந்தாள்.நானும் பக்கத்து கடைக்கு பீர் வாங்கத்தான் போறன்னு நினைச்சி கிட்டு நடையை கட்டினேன், அவங்க நேர என்கிட்டே வந்து "ஹலோ.. வாட் தி ... அதுவரைக்கும் தான் எனக்கு புரிந்தது.

ஒருவேளை வெள்ளையம்மா சமைத்த சாப்பாட்டை அவளே சாப்பிட்டாளோ என்னவோ அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்து விட்டது.நடுவிரலை காமிச்ச என்னை சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தாள். அவ பேசுறது ஒண்ணுமே புரியலைன்னாலும் திட்டுதான்னு மட்டும் அவங்க முக அழகை பார்த்து தெரிந்தது.என்கிட்டே வரும்போது கொய்யப் பழமா இருந்த அவங்க முகம் கோவை பழம் மாதிரி சிவந்து போச்சி


அமைதியா இருங்கன்னு நடு விரலை காட்டினேன், திட்டி முடிச்சவ மறுபடியும் ஆரம்பித்துவிட்டாள், மதுரைக்கு வந்த சோதனையா இருக்குன்னு வெள்ளையம்மாவை பார்த்து சிரிச்சி கிட்டு மட்டும் இருந்தேன்.அவ என்ன பேசுறான்னு தெரிஞ்சத்தானே பதில் சொல்ல முடியும்.என்னோட ஓட்டை இங்கிலீஷ்ச வச்சி தடுத்துப்பார்த்தேன், அடை மழை பெய்து வேற வழி இல்லாம காவிரியிலே தண்ணியை திறந்து விட்டால் வருகிற காட்டாற்று வெள்ளம் போல வெள்ளையம்மா மூச்சி விடாம திட்டினாங்க



பக்கத்திலே நின்று கொண்டு இருந்த தங்கமணி வேகமா பேப்பர் பேனா எடுத்து என்னவோ எழுத ஆரம்பித்தாள்.வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்க நான் குறிப்பு எழுதுறது மாதிரி எழுத ஆரம்பித்தாள்.

எப்படியாவது தொடர் திட்டு தாகுத்தல்ல இருந்து தப்பிக்க நான் வெள்ளையம்மாளிடம்

"நீங்க வணக்கம் சொன்னீங்க, நானும் பதிலுக்கு சொன்னேன், அதுக்காக என்னை ஏன் வாட்டி எடுக்குறீங்க"

"என்னது வணக்கம் சொன்னியா!!!"

"ஆமா..ஆமா"

"நான் உனக்கு வணக்கம் சொல்லலை, சிகப்பு விளக்கு எரியும் போது, உங்க அப்பன் வீட்டு ரோடு மாதிரி வந்தே, அதுக்கு தான் உன்னை திட்டினேன், கார் கண்ணாடி மூடி இருந்தா நடு விரலை காட்டி திட்டுவோம்,இது தெரியாதா !!!"

"நான் ஊருக்கு புதுசு, நடு விரல்ல நாலு வார்த்தை இருக்குன்னு எனக்கு சத்தியமா எனக்கு தெரியாது"

நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியலைனாலும் கோபம் கொஞ்சம் குறைஞ்சி போச்சு, கோவைப் பழம் கொய்யப் பழம் ஆகிடுச்சி,அப்படியே சமாதான ஆகி கார் எடுத்து விட்டு கிளம்பிட்டாங்க.நண்பர்களிடம் அதை பத்தி விசாரித்தால் "கெட்ட வார்த்தைடா, இங்கே யாரையும் பார்த்து நடுவிரலை மட்டும் காட்டாதேன்னு" சொல்லிவிட்டார்கள்.

நாடு விரலை காட்டி விட்டேன்னு என்னை கொலை வெறி கோபத்திலே நடு சாலையிலே கேட்ட கேள்விகளுக்கு நடுவிரல் எவ்வளவோ தேவலாம்,எனக்கு தெரிந்த வரையிலே பொது இடங்களிலே இவங்க தடித்த வார்த்தைகளை தவிர வேற எதையும் சத்தமா பேசுறது இல்லை, நான் இங்கே வந்து நல்லா படிச்சதே அடுத்தவனை எப்படி ஆங்கிலத்திலே திட்டலாமுனு தான்.இவங்க சொல்லுறதைப் பார்த்தால் நடுவிரல் எதோ உப்புக்கு சப்பாணியா கையிலே ஒட்டிகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.

அலுவலகத்திலே இடைவிடாத அடைமழை பணிகளுக்கு மத்தியிலே கூகிள் ஆண்டவரிடமும் இதை பத்தி கேட்டேன்.அவரு சொன்னாரு 13 ம் நூற்று ஆண்டுல ஆங்கில வெள்ளைக்கார துரை மார்க்கும், பிரெஞ்சு வெள்ளைக்காரக் துரை மார்க்கும் நம்ம ஊரிலே போடுற வாய்க்க வரப்பு தகராறு மாதிரி, இன்னைக்கு நமக்கும் நம்ம பங்காளிகளுக்கும் நடக்கிற எல்லை தகராறு மாதிரி, அவங்களுக்கும் வந்து இருக்கு,இந்த சண்டை கிட்டத்தட்ட நூறு வருஷம் நடந்ததாம்.அதில் துரை மார்கள் ரெண்டு பெரும் மாறி மாறி சண்டை போட்டு ஜனத்தொகையை பாதி அழிச்சாங்க, ஒரு கால கட்டத்திலே பிரெஞ்சு துரைமார்கள், ஆங்கிலேய துரை மார்கள் வில் வீரர்களை பிடிச்சி, அவங்க கட்டை விரலை வெட்டி எடுத்துடுவாங்க.

இப்படி கட்டை விரலை கண்டம் பண்ணினாலும், போரிலே ஜெயிக்கும் போது வெள்ளை கார துரை மார்கள் நாடு விரலை காட்டு வாங்க, நீங்க கட்டை விரலை எடுத்தாலும் நடு விரல் செய்கூலி சேதாரம் இல்லாம நல்லத்தான் இருக்குங்கிற அர்த்தத்திலே சொல்லுவாங்க,இந்த கதையை திரிச்சி, மரிச்சி, உருட்டு,உழண்டு இங்க கொண்டு வந்து விட்டு என்னையும் வெள்ளையம்மாவிடம் நாக்க பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்க வச்சி பிட்டாங்க.

கூகிள் ஆண்டவர் என்கிட்டே சொன்னதை சொன்னேன், உண்மையிலே வேற அர்த்தம் இருக்கான்னு பழமை பேசி மணி அண்ணனைத்தான் கேட்கணும், அவரு விரலுக்கு ஒரு பதிவு போடுவாரு.

ஆக, இப்படி தப்பான அர்த்தத்திலே தப்பே பண்ணாத என்னை தப்பு தப்பு ன்னு தப்பிட்டங்க, இப்படி தப்பாவே யோசிக்கிற இவங்க நம்ம ஊரு யோகா, புளி, பருப்பு, வெங்காயம்,இட்லி, வடை,தோசை எல்லாத்துக்கும் காப்பு உரிமை வாங்கி வைத்து இருக்காங்கன்னு சொன்னா நம்பாம இருக்க முடியுமா?

கலவரம் நடக்கும் போது தங்கமணி வேகமா குறிப்பு எடுத்தாங்களே என்ன ஆச்சின்னு யாரும் கேட்க மாட்டீங்கன்னு தெரியும், கேட்டா அதுக்கு ஒரு பதிவை போட்டு மொக்கை போடுவேன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். அதனாலே நானே சொல்லி விடுகிறேன்.

வெள்ளையம்மா போனே உடனே "ஆமா, என்னை ஒருத்தி வகை தெரியாம, வசை பாடிகிட்டு இருக்கும் போது, நீ என்ன பண்ணினே?"

"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"




Thursday, May 7, 2009

கந்தசாமி விமர்சனம்

மஜா, பீமா விலே வாங்கிய அடியிலே அஸ்திவாரம் ஆட்டம் கண்டு கொண்டு இருக்கும் விக்ரமிற்கு கந்தசாமி ஒரு கற்பக சாமி.அவரது சரிவை தூக்கி நிறுத்த வந்து இருக்கும் ஏணி தான் கந்த சாமி, திரையிலே பார்ப்பவர்களை ஈர்க்கும் காந்தசாமி இந்த கந்தசாமி.முன்னுரையை முழக்கி நீட்டி மொக்கை அடிக்காம நேர கதைக்கு ஓடுவோம், அதுக்காக நீங்க வேற கடைப்பக்கம் ஓடவேண்டாம்.

கந்தசாமி வெளி நாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஆள் அனுப்பும் அலுவலகத்திலே வேலை செய்கிறார். சென்னையில் அவரோட முக்கிய வேலை திருட்டுத்தனமா ஆளுங்களை வெளி நாட்டுக்கு அனுப்புவதுதான், அவர்கள் கொடுக்கும் பணத்திலே கிராமங்களுக்கு நல்லது செய்கிறார், இவ்வளவு செய்யலைனா தமிழ் பட கதாநாயகனா இருக்க முடியாது.

இப்படி நகரும் கதையிலே புயலாய் சிரேயாவின் வரவு கண்களுக்கு விருந்தாய் அமைகிறது.அது விருந்தா இல்ல விருதாவன்னு பார்கிறகவங்க சொல்லணும். சிரேயா தான் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும் அதற்க்கு விக்ரமின் உதவியை நாடுகிறார்.விக்ரம் திருட்டு தனமா பெண்களை வெளிநாட்டு அனுப்புவதில்லை என் ௬றி அனுப்பி விடுகிறார்.


திருடனா
இருந்தாலும் தாய் குலங்கள் மேல மரியாதையை இருந்தாத்தான் தமிழ் சினிமாவிலே நிலைத்து நிக்க முடியுமுன்னு அப்படி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறன்.அவரு சொன்னதை கதாநாயகி ஏத்து கிட்டா பத்து நிமிஷத்து மேல படம் எடுக்க முடியாதுன்னு, விடா முயற்சியா விக்ரம துரத்தி வாரங்க நாயகி,இதை வழக்கமான நாயகி, நாயகனை விரட்டுற மாதிரி இல்லாம கொஞ்சம் வித்தியாசமா இருக்கு.இதெல்லாம் படத்திலேதான் நடக்கும், ஆனா நிஜத்திலே துண்டு போட அலைந்தே கால் தேய்ஞ்சி கை ஆகிவிடும்.

விக்ரம் கை,காலை பிடிச்சி சம்பதம் வாங்கும் முன்னே ஒரு குத்து பாட்டு ரெண்டு சண்டை முடிந்து இருக்கும்னு நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இருக்காது.ஒரு வழியா நாயகன் சம்மதிக்க, நாயகி இன்னும் ஒரு நிபந்தனை விதிக்கிறாங்க, ஆனா அதுக்கு என்னவோ அவரு உடனே சம்மதிச்சி விடுகிறார்,நீ ௬ட வந்தா ராஜ பக்சே வேசத்திலே வன்னிக்கே வருவேன்னு ஒரு வசனத்தை சொல்லி,இதுவரைக்கும் உள்ளூர்ல மெய்ஞ்ச கதை வெளிநாடு அதாவது சுவைன் ப்ளு கண்ட மெக்சிகோவுக்கு போகுது.

சிரேயாவின் நடவடிக்கை மேல சந்தேகப் படுகிற விக்ரம், அவங்க வேலை தேடி வரலை,யாரையோ தேடி வந்து இருக்காங்கனு தெரிய வருகிறது.கஷ்டப்பட்டு அதையும் கண்டு பிடிக்கிறார் நாயகன்.அந்த விவரங்களை சிரேயாவிடம் கேட்கும் போது தான் தன் அண்ணனை தேடி வந்து இருப்பதாக உண்மையை சொல்லுகிறார்.அவரை கண்டு பிடிக்க தனக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.அவரின் புகை படத்தை பார்த்து விக்ரம், தான் தான் அவனை திருட்டு தனமாக வெளிநாடு அனுப்பி வைத்த தாகவும் சொல்லி அவளுக்கு உதவி செய்வதாக வாக்கு கொடுக்கிறார்.

இங்கே இடை வேளை வருமுன்னு யாரும் நினைச்சா அதற்க்கு கதை ஆசிரியர் பொறுப்பு இல்லை.ஒருவழியா ரெண்டு பேரும் தேடி சிரேயா அண்ணனை கண்டு பிடிக்கிறார்கள், ஆனா அவரு ஒரு போதை பொருள் கடத்தும் கும்பலிடம் மாட்டி கொண்டு இருக்கிறார் என்பது தெரிய வருகிறது, உள்ளூர் காவல் துறை உதவியுடன் அங்கே செல்லும் அவரை மீட்டு வருகிறார்கள்.மீட்டு வந்து அண்ணனை பார்த்த சந்தோசத்திலே அண்ணனை சிரிச்சி கிட்டே சுட்டு தள்ளுறாங்க சிரேயா,இப்படி ஒரு காட்சி எந்த படத்திலேயும் வரலை, இனிமேலும் வருமான்னு சந்தேகமே

இப்பவும் இடைவேளை விடலைன்னா எல்லோரும் தெறிச்சி ஓடிடுவாங்கன்னு பார்பவர்களின் நலம் கருதி இடைவேளை டீ, காபி குடிக்கிறவங்க, போயிட்டு வாங்க.

என்னதான் பாதி படம் ஓடினாலும் இனிமேல்தான் கதையே ஆரம்பிக்குதுன்னு சொன்னா நம்பவா முடியும், சிரேயா தான் யாரு என்கிற கொசுவத்தி சுத்த வேண்டிய கட்டாய நிலை, அவங்க இந்திய உளவுத்துறை அதிகாரி என்பதையும் நம்ம நாட்டிலே இருந்து வெளிநாட்டிற்கு தப்பி சென்ற கும்பல் இந்தியாவுக்கு எதிரா தேச விரோத சக்திகளில் ஈடு படுவதாக இந்திய உளவுத்துறைக்கு தகவலுடன் புகைப்படமும் வந்ததால் அவர்களை அழிக்கும் முயற்சியே இது என்பது தெரிய வருகிறது,ஆனா இதை எல்லாம் கேட்க விக்ரம் வெளியிலே இல்லை,
ஜெயில்ல இருக்காரு, அவரு மேல வெளிநாட்டுக்கு சட்ட விரோதமா ஆள் அனுப்பிய குற்றத்திற்காக கைதாகி கம்பி எண்ணி கொண்டு இருக்கிறார்.


அவரிடம் இந்திய உளவுத்துறை விசாரணை நடத்த வருகிறது, அவர்களிடம் சிரேயா கொன்றது தீவிரவாதி இல்லை என்பதும், அவரை நன்றாக தனக்கு தெரியும் என்பதையும் சொல்லுகிறார்.நம்ப மறுக்கும் அதிகாரிகளை இறந்தவரின் கிராமத்திற்கு சென்று அவர் நிரபராதி என்றும், அவர்கள் ஒரு குழுவாக செயல் பட்டு வெளிநாட்டு சென்று கிராமங்களுக்கு நன்மை செய்வதாகவும் தானே அக்குழுவின் தலைவர் என்பதை சொல்லுகிறார்

இப்படி முடிச்சி மேல முடிச்சி இருக்கிற கதையின் நோக்கம் என்ன என்று யாருக்காவாது சந்தேகம் வந்தால் உண்மைய சொல்லுறது ஒரு விமர்சகரோட கடமை, தவறான தகவல் தந்த அந்த குழுவின் நோக்கம் என்ன, மேலும் விகரமின் கனவுத்திட்டம் நிறை வேறியதா என்பது தான் மீதி கதை உண்மையை கண்டு பிடிக்கிற விக்ரமுக்கு துணையாக சிரேயா, படத்தோட இறுதியிலே துணைவி ஆகிவிடுகிறார்கள்.

கதையோட இறுதியிலே அந்த கருப்பு ஆடு உளவுத் துறையின் தலைவர் என்பதை கண்டு பிடித்து சூரசம்காரம் செய்கிறார் இந்த கந்தசாமி. இதோட படமும் முடியுது விமர்சனமும் முடியுது. படத்திலே குத்து வசனம் எல்லாம் கிடையாது, படம் நல்ல படியா தியேட்டர் விட்டு ஓடாம நின்னு ஓடினா போதும் என்று நினைத்து விட்டார்கள் போல தெரியுது