Monday, June 22, 2009

தீண்டா நட்பு

கல்லூரி முடிச்சி ஆறு மாசம் பல இடங்களில் தேடி அலைந்து பெங்களூரில் வேலை கிடைத்தது, முதல் நாள் வேலைக்கு சென்றேன், அறிமுக படலங்களை எல்லாம் முடித்து, நான் செய்ய வேண்டிய வேலையை பற்றி திட்ட மேலாளார் விளக்கினார், என்னுடன் வேலை செய்ய வேண்டிய நபர் விடுமுறையிலே இருப்பதாகவும் அவர் திரும்பி வந்த பின் இன்னும் விளக்கமாக பேசுவோம் என சொன்னார்.

நான் வேலையிலே சேர்ந்து ஒருவாரம் கழித்து என்னிடம் புதிதாய் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தனர், நாங்கள் செய்ய வேண்டிய வேலையை பற்றி கலந்துரையாடினோம்,நாங்கள் செய்ய வேண்டிய வேலை அதிகம் இருப்பதால் பெரும்பாலும் தாமதமாகவே இரவு வீட்டுக்கு சொல்ல நேரிடும் என்று என்னிடம் சொன்னார்கள். நான் ஒருபெண் என்பதால் இரவு பத்துமணிக்கு மேல் என்னை வீட்டுக்கு போக சொல்லி விடுவார்கள்.சக திட்ட தோழன் என்பதால் நானும், அவரும் நல்ல நண்பர்கள் ஆனோம்,குடும்ப விசயங்களை பகிர்ந்து கொள்வோம்.

ஆரம்பத்திலே என்னிடம் சகசமாக பழகினாலும், கொஞ்ச நாள்களில் அவன் நடவடிக்கைகளில் எனக்கு சந்தேகம் வந்தது, அவன் என்னை நடத்தும் முறைகளை வைத்து, காலையிலே அலுவலகத்திலே வந்ததும் என்ன காலை உணவு சாப்பிட்டாய் என்று கேட்பான், நானும் பதில் சொல்வேன், சில நேரங்களில் நான் சாப்பிட வில்லை என தெரிந்தால் எனக்கு ஏதாவது வாங்கி கொடுப்பான்.முதல் இரண்டு முறைகளில் எனக்கு சந்தோசமாக இருந்தாலும் அதன் பின் எனக்கு சங்கடமாகிப் போனது.

இரவு நேரங்களில் நான் வீட்டுக்கு சொல்ல ஆட்டோவை அழைத்து வந்து விடுவான், நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்க மாட்டான், மறுப்பு சொல்ல முடியாமல் நானும் சம்மதிப்பேன், சில நேரங்களில் ஆட்டோ வின் பின்னே அவனும் வண்டியிலே வீடுவரை வருவான், என்னை ஒருகுழந்தையை போல நடத்துவதாக எண்ணிய அவன் மேல் எனக்கு வெறுப்பு அதிகமானது.

சில சமயங்களில் அவன் என்னை காதலிக்கிறானா என்ற சந்தேகமும் எனக்கு ஏற்பட்டது,அவனின் செயல்பாடுகள் என்னை மிகவும் பாதித்தது, கொஞ்ச நாளிலே நான் அதிகம் வெறுப்பவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தான், அவன் மீது உள்ள கோபத்தை காட்ட அலுவலக பணிகளில் அவனுக்கு நான் செவி சாய்ப்பதில்லை, இருந்தாலும் அவன் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அவன் மீது இருந்த கோபத்தீயை அணைக்க நான் அவனிடன் பேச முடிவு எடுத்தேன், அவனிடன் நேரிடையாக சொன்னேன், உன் நடவடிக்கைகள் எனக்கு பிடிக்க வில்லை, நீ என்னை காதலிகிறாயா? என கேட்டேன், அவன் அதற்கு ஏதும் பதில் சொல்லாமல், என கேள்விக்கு பிடி கொடுக்காமல் பேசினான், எனக்கு ஆத்திரம் அதிகமானதே தவிர பிரச்சனை தீரவில்லை. இறுதியிலே நான் உண்மையை சொன்னேன் நான் ஏற்கனவே ஒருவரை காதலிக்கிறேன், உன்னிடம் அப்படி எண்ணம் இருந்தால், அதை மறந்து விடு என்றேன்.நீ செய்யும் செயல்கள் என்னை தீராத மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது, என்னை நீ உன்னில் ஒருத்தியாகவோ, இல்லை உனக்கு பிடித்தவர்களில் ஒருத்தியாகவோ நடத்த வேண்டாம். நட்பின் வட்டத்தை நீ மீறுவதைப் போன்ற பிம்பத்தை என்னால் ஏற்க முடியாது.

அவன் முகத்தை வைத்து அகத்தை என்னால் உணரமுடியவில்லை,எனக்கு வாழ்த்துகள் ஒன்றை தவிர வேறு ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு கடந்து சென்றான், என மனதின் இருளும் என்னை விட்டு கடந்து சென்றது, அன்றிரவு ஒருகுழந்தையை போல உறங்கினேன், மறுநாள் காலை எனக்குள் ஒருபுது மாற்றம், புதிதாய் பிறந்ததை போல, வழக்கத்துக்கு மாறனா உற்சாகத்துடன் அலுவலகம் சென்றேன்.

அலுவலக வழக்கமான வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, என பக்கத்து இருக்கையை திரும்பி பார்த்தேன், எப்போதும் எனக்கு முன்னால் வரும் அவன் அன்று வரவில்லை, அன்று போனது அடுத்த நாளும் போனது, ஆனால் அவன் வரவில்லை.அடுத்த வாரம் அலுவலகத்திலே புதிதாய் ஆள் வேண்டி விண்ணப்பம் செய்தார்கள், அப்போது தான் எனக்கு தெரிந்தது அவன் இனி வேலைக்கு வரப் போவதில்லை என்று, புது அலுவலகத்திலே உடனே சேர இருந்ததால், அவனால் நேரிலே வந்து அனைவரிடம் விடை பெற்று செல்ல முடியவில்லை என திட்ட மேலாளார் சொன்னார்.என்னால் அன்று முழுவதும் வேலையிலே கவனம் செலுத்த முடியவில்லை, நடந்தவற்றிற்கு நான் காரணமாய் இருக்குமோ என்று என்னுள் ஒருகுற்ற உணர்வு.

அடுத்த வாரத்திலே புது ஆள் அவனுக்கு பதிலாக வேலைக்கு வந்தார், மீண்டும் அலுவலக பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன், புதிதாய் வந்தவர் என்னிடம் வேலை வாங்குவதிலே கவனம் அதிகமாக இருந்தது, என்னால் வேலைக்கு சம்பந்தமில்லாத விசயங்கள் பேச முடியவில்லை,அவர் எனக்கு மேல் அதிகாரியாக மட்டுமே இருந்தார்.இப்போது யாரும் என்னிடம் கேட்பதில்லை நான் காலையிலே என்ன சாப்பிட்டேன் என்று, நான் இரவு வேளைகளில் ஆட்டோவில் செல்லும் போது யாரும் என் பின்னால் வருவதில்லை, இருந்தும் என் நினைவுகள் என்னால் தீண்டப் படாத நட்பை தீண்டும் பாதையிலே இன்றளவும் அவனை சுற்றி நிழலாடுகிறது.


26 கருத்துக்கள்:

Anoch said...

Hi Nice blog,Very interesting post.keep it up.I am giving some adsense tips here,just read them up as well.
Online Free Videos, NET WORKING,Google Adsense System

பழமைபேசி said...

தளபதி, வருங்கால முதல்வர் எல்லாம் இப்ப கிளப்புறீங்களே? உங்க இடுகைகள்ல பிழை திருத்துறதெல்லாம் போயி, மத்தவங்க இடுகைகள்ல பிழை திருத்துற அளவுக்கு.... சபாசு, சபாசு!

என்னய்யா இது, சேந்தாப்புல ஒரு பத்து நாள் இந்தப் பக்கம் வரலை, ஏகத்துக்கு முன்னேறிட்டாங்க போல... பலே! பலே!! வாழ்த்துகள்! வெகுசன பத்திரிகைல வர்றதுன்னா என்ன சும்மாவா??

RAMYA said...

//
கல்லூரி முடிச்சி ஆறு மாசம் பல இடங்களில் தேடி அலைந்து பெங்களூரில் வேலை கிடைத்தது,
//

வேலை கிடைச்சுடுச்சா அவ்வளவு சீக்கிரமாவா :))

RAMYA said...

//
என்னுடன் வேலை செய்ய வேண்டிய நபர் விடுமுறையிலே இருப்பதாகும் அவர் திரும்பி வந்ததும் இன்னும் விளக்கமாக பேசுவோம் என சொன்னார்.
//

பேசிட்டாலும்..............

RAMYA said...

//
நான் வேலையிலே சேர்ந்து ஒருவாரம் கழித்து என்னிடம் புதிதாய் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தனர், நாங்கள் செய்ய வேண்டிய வேலையை கலந்துரையாடினோம்
//

நிஜம்மாதானே :)

RAMYA said...

//
நான் ஒருபெண் என்பதால் இரவு பத்துமணிக்கு மேல் என்னை வீட்டுக்கு போக சொல்லி விடுவார்கள்
//

யாரு இது ?

RAMYA said...

//
சக திட்ட தோழன் என்பதால் நானும், அவரும் நல்ல நண்பர்கள் ஆனோம்,குடும்ப விசயங்களை பகிர்ந்து கொள்வோம்.
//

நட்புன்னா அப்படிதான் இருக்கணும்!

RAMYA said...

//
ஆரம்பத்திலே என்னிடம் சகசமாக பழகினாலும், கொஞ்ச நாள்களில் அவன் நடவடிக்கைகளில் எனக்கு சந்தேகம் வந்தது, அவன் என்னை நடத்தும் முறைகளை வைத்து,
//


ஐயோ இதென்ன பீதியை கிளப்பறீங்க?

RAMYA said...

//
காலையிலே அலுவலகத்திலே வந்ததும் என்ன காலை உணவு சாப்பிட்டாய் என்று கேட்பான், நானும் பதில் சொல்வேன், சில நேரங்களில் நான் சாப்பிட வில்லை என தெரிந்தால் எனக்கு ஏதாவது வாங்கி கொடுப்பான்.முதல் இரண்டு முறைகளில் எனக்கு சந்தோசமாக இருந்தாலும் அதன் பின் எனக்கு சங்கடமாகிப் போனது.
//

ம்ம்ம் அப்புறம் என்னாச்சு? ரொம்ப சுவாரசியமா இருக்கே??

குடுகுடுப்பை said...

நான் ஏதோ கூடா நட்புன்னு நெனச்சிட்டேன்
இது தீண்டா நட்பு , இதுதான் நடப்பு

T.V.ராதாகிருஷ்ணன் said...

அப்புறம் நீங்க அமெரிக்க வந்துட்டீங்க...:-))

rapp said...

//அப்புறம் நீங்க அமெரிக்க வந்துட்டீங்க...:-))//

:):):)ha ha ha

வில்லன் said...

//நான் ஒருபெண் என்பதால் இரவு பத்துமணிக்கு மேல் என்னை வீட்டுக்கு போக சொல்லி விடுவார்கள்//

ஆமா நீறு எப்ப பெண் ஆநீறு!!!!!!!!!!!!!!! ஹி ஹி ஹி

வில்லன் said...

//இப்போது யாரும் என்னிடம் கேட்பதில்லை நான் காலையிலே என்ன சாப்பிட்டேன் என்று, நான் இரவு வேளைகளில் ஆட்டோவில் செல்லும் போது யாரும் என பின்னால் வருவதில்லை இருந்தும் என நினைவுகள் என்னால் தீண்டப் படாத நட்பை தீண்டும் பாதையிலே இன்றளவும் அவனை சுற்றி நிழலாடுகிறது.//

எதுக்கு காலை சிற்றுண்டிக்கு அப்புறம் ஆடோவுக்கு காசு கொடுக்க ஒரு இளிச்சவாயன் இல்லி என்றா ???? இதெல்லாம் ரொம்ப அதிகம். ஒருத்தன் கொஞ்சம் ஜோல்லுவடிச்சா கவுதிடுவின்களே....... நல்ல வேலை "நான் அவன் இல்லை"

Unknown said...

நகைச்சுவையாகவே அதிகம் இங்கே படித்து பழக்கமான எங்களுக்கு இது ஒரு வித்தியாசமானதாக இருக்கின்றது ...

கதையின் நாயகி மட்டுமே பேசிய நிலையாக இருந்தது ...

\\என்னால் தீண்டப் படாத நட்பை தீண்டும் பாதையிலே இன்றளவும் அவனை சுற்றி நிழலாடுகிறது.\\

பல விதமான எண்ணங்கள் எழுந்தன இதனை வாசிக்கையில்


ரொம்ப நல்லாயிருந்திச்சி நசரேயன்.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல நடை... பாராட்டுகள்

ஷண்முகப்ரியன் said...

இல்லை என்று தெரிந்ததின் பின்னேதான் இருந்ததின் அருமையை மனம் புரிந்து கொள்ளும்.

மெல்லிய உளவியல் வலியை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்,நச்ரேயன்.

சந்தனமுல்லை said...

//Blogger T.V.Radhakrishnan said...

அப்புறம் நீங்க அமெரிக்க வந்துட்டீங்க...:-))//

:-))))

சந்தனமுல்லை said...

//Blogger குடுகுடுப்பை said...

நான் ஏதோ கூடா நட்புன்னு நெனச்சிட்டேன்
இது தீண்டா நட்பு , இதுதான் நடப்பு//

அவ்வ்வ்வ்! தத்துவம்! :-)

Unknown said...

இருப்பது இல்லாமல் இருக்கும் போதுதான் இருந்தது இல்லாமல் இருப்பது போல இருக்கும்..
கொஞ்சம் சிரிச்சிட்டு இன்னைய பொழுதை ஆரம்பிக்கலாம்னு வந்தேன். பாத்தா ஒரே பீலிங்ஸு...:(

நல்லா இருக்கு நசரேயன். வளர்க உங்கள் எழுத்து...

வால்பையன் said...

குத்துங்க எசமான் குத்துங்க
இந்த பொம்பளைங்களே இப்படி தான் எசமான்!

அப்துல்மாலிக் said...

நல்ல கதையோட்டம்

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்....

ஈரோடு கதிர் said...

சுவாரஸ்யமான நடை.... ரசித்தேன்

ஈரோடு கதிர் said...

//குத்துங்க எசமான் குத்துங்க
இந்த பொம்பளைங்களே இப்படி தான் எசமான்!///

வால்... சிரித்துக்கொண்டே இருக்கிறேன்....

அ.மு.செய்யது said...

இது ஆனந்த விகடன் ல எழுதுறதுக்கு ஒத்திகை சிறுகதை தான ???

உண்மைய ஒத்துகிடுங்க....

Anonymous said...

yesuvadian.blogspot.com is very informative. The article is very professionally written. I enjoy reading yesuvadian.blogspot.com every day.
payday loan
payday loans