முன்ன பின்ன விமர்சனம் எழுதினது கிடையாது, நானே எழுதி படம் வெளிவரும் முன்னாடி போட்ட விமர்சனம் எல்லாம் கடையிலே விளம்பரத்துக்காக முன்னாடி ஒட்டி வச்சி இருக்கேன். படம் பார்க்க வருகிறீர்களான்னு பிரபல பதிவர் இளாவை கேட்டா, நான் தியேட்டர்ல படம் பார்த்துகிட்டு இருக்கேன்னு சொல்லிட்டாரு, நீங்க முன்னாடி வந்து விமர்சனம் எழுதுங்க, நான் உங்களைப் பார்த்து வழக்கம் போல நகல் எடுத்துக்கிறேன்னு சொன்னேன், அவரு இன்னும் விமர்சனம் வெளியிடலை, குடுகுடுப்பையும் இன்னும் படம் பார்க்கலையாம், வந்த விஷயம் சொல்லாமா என்னய்யா இவன்னு கேட்குறீங்களா, இதோ அடுத்த பாரா விமர்சனம் தான்.
வழக்கம் போல துண்டு போடுற கதைதான், இந்திய திரைப் படங்களிலே துண்டு போடாம எதாவது படம் இருந்தா அந்த படத்துக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம், எவ்வளவு துண்டு கதை வந்தாலும், சுவாரசியம் என்பது ஒரு தனித்திறமைதான், அந்த வகையிலே விண்ணைத்தாண்டின்னு பெயர் இருந்தாலும் மனசுக்குள்ளே வந்து உட்காரத்தான் செய்யுது. படம் ஆரம்பித்த உடனே நாயகன் போடுற துண்டை நாயகி வாங்குகிறாளா ..நாயகி வாங்குகிறாளா..நாயகி வாங்குகிறாளா, இப்படியே போகுது.
துண்டு போட்ட ஒருத்தனை எப்படி நண்பனாக ஏத்துக்க முடியுமுன்னு உளவியல் அறிஞ்சர்கள் எல்லாம் கொலைவெறியோடு யோசித்து கொண்டு இருக்கும் போது, இல்லை அவன் போட்ட துண்டை நான் கையிலே வாங்கல, ஆனா மனசிலே வாங்கிட்டேன் என்று நாயகி சொன்னவுடனே தான் விண்ணைத்தாண்டி ௬ரையை பிச்சிகிட்டு வந்தது, பின்ன நான் அந்த காலத்திலேயே இப்படியெல்லாம் முயற்சி செய்து பார்த்து இருக்கிறேன், அடிச்சி விரட்டி புட்டாங்க. சில சமயங்களிலே நாயகனின் மனநிலையையும் வசனத்தையும் பார்க்கும் போது நாயகி துண்டை வாங்கினா தேவலாமுன்னு தோணுது.
படம் முழுவதும் நிறையை பேசுறாங்க, ஆனா ரசிக்கும் படியாவும் இருக்கு, கஜனி முகமது மாதிரி காதல்ல பலதடவை படை எடுத்து தோத்து போனவங்க எல்லாம் பழைய கொசுவத்தி ஞாபகம் வந்து தூக்கத்தை கெடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.காதல் அளவுக்கு அதிகமாவே இருக்கு
காட்சிகளும் சரி, நடிக, நடிகைகளும் சரி ரெம்ப இளமையாவே இருக்காங்க, முக ஒப்பனை ரெம்ப குறைவு என்பதும் ஒரு காரணம், ஆனா என்னைவிட ஒன்னும் யூத் இல்லை பால அண்ணே, படத்தின் முதல் பாதி நாசா விட்ட ராக்கெட், இரண்டாவது பாதி இஸ்ரோ விட்ட ராக்கெட் மாதிரி வேகம் கொஞ்சம் குறைவுதான், ஆனாலும் போய் சேருமா சேராதா என்ற பயம் எப்போதுமே இருப்பது போல, நாயகனும், நாயகியும் சேருவார்களா என்பதிலே அந்த வேகக்குறைவு நம் கண்ணுக்கு தெரிவதில்லை.
பாடல்கள், பின்னணி இசையையெல்லாம் பேசுற அளவுக்கு எனக்கு இன்னும் வயசு ஆகலை, எங்க ஊரு பக்கம் எல்லாம் பாட்டுக்கு வந்தவங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம வந்துட்டாங்க, இல்லனா சிம்புவுக்கு பதிலே என்னை கதாநாயகனா போடணுமுன்னு படத்தயாரிப்பாளர் சொல்லிவிடுவார் என்கிற பயமாவும் இருக்கலாம்.
வழக்கம் போல பெண்ணுங்க எல்லாம் ரெம்பவே உசார்னு இதுவரைக்கும் யாருக்குமே புரியாதவங்களுக்கு படம் கண்டிப்பா பிடிக்கும்.காதலன், காதலிக்காக உருகுறான், அதுக்கு பலனா அவனுக்கு இனாம அடிக்கடி ஓசி முத்தம் கிடைக்குது, சம்பந்தமே இல்லாம கல்யாண ஆசையை காட்டி கடைசியிலே தாலி கட்டும் நேரத்திலே கல்யாணம் பிடிக்கலைன்னு நாயகி சொல்லிவிட,பக்கத்திலே மாப்பிள்ளையா நிற்கிற இன்னொரு பாவப்பட்ட ஜீவன் கதா பாத்திரம் இருக்கு,நொங்கு தின்னவனுக்கும் கிடைக்கலை, ௬ந்தலை எடுக்க போனவனுக்கும் கிடைக்கலை, ரெண்டு பெரும் என்ன செய்யன்னு தெரியாம இருக்கிற காசயெல்லாம் வரியா கட்டுறாங்க டாஸ்மாக்குல நல்ல வருமானம் அரசாங்கத்துக்கு. நாயகனும் காத்து இருக்க, இந்த பலி ஆடும் காத்து இருக்க, யாரு தலையிலே தண்ணியை தெளிச்சி நாயகி வெட்டுகிறாள், அதாவது வாழ்க்கை துண்டை வெட்டுகிறாள் என்பதே படத்தின் முடிவு.
இறுதியிலே எதிர் பாராத திருப்பம், என் அறிவுகண்ணுக்கு ஆரம்பிக்கும் போதே தெரிஞ்சி போச்சி, அதையெல்லாம் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.படத்தை இந்தியிலே எடுத்த தமிழ் வெற்றியை விட மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்பதிலே சந்தேகமே இல்லை. விண்ணைத்தாண்டி எல்லோரும் மனசிலே நிற்கிறார்கள்.
ஒரு சில பின்னூட்டங்கள் தியேட்டர்ல போட்டது,
"உன்னை இப்படியே பிடிச்சிகிட்டு ஆயுசு பூரா நிப்பேன்" ன்னு ஒரு வசனம்.
"எப்பா எங்களால எல்லாம் அம்புட்டு நேரம் காத்து இருக்க முடியாது"
நாயகியோட கல்யாணம் நின்னதும், நாயகனும் நாயகியும் பேசிகிட்டே இருப்பாங்க
"அல்லோ .. சீக்கிரம் பாட்டை போடுங்க"
நாயகி, நீயும், நானும் நண்பர்கள்ன்னு அடிக்கடி சொல்லும்போது
"லவ் யு ன்னு சொல்லு, இப்பவே வணக்கம் போட்டுருவாங்க"
நீங்களும் படத்தை தியேட்டர்ல பாருங்க இப்படி நிறைய பின்னூட்டம் போட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.தலைப்பிலே இருக்கிற "இலக்கியவாதியின் பார்வையில்" என்பது நான் வழக்கம் போல விடும் எழுத்துப்பிழைன்னு நான் சொல்லி தெரியவேண்டிய அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.
30 கருத்துக்கள்:
தியேட்டர் பின்னூட்டங்கள்:)!
//விண்ணைத்தாண்டி எல்லோரும் மனசிலே நிற்கிறார்கள்.//
சரி பார்த்திடுறோம்.
தியேட்டர்ல பின்னூட்டங்கள், படத்தை விட நல்லா இருக்கும் போல. ஹா,ஹா,ஹா,ஹா.....
//இல்லனா சிம்புவுக்கு பதிலே என்னை கதாநாயகனா போடணுமுன்னு படத்தயாரிப்பாளர் சொல்லிவிடுவார் என்கிற பயமாவும் இருக்கலாம்.//
ஏன் இப்படியெல்லாம் பயமுறுத்தறீங்க.
நல்லாதான் எழுதி இருக்கீங்க
இலக்கிய ‘வியாதி‘ தொல்ல தாங்க முடியலப்பா
:-))))
நசரேயன் பார்வையில் விமர்சனம் அருமை! ரசித்தேன் படத்தையல்ல சொல்லிய விதத்தை
:)). யாரு பிரம்ப காட்டி மிரட்டி சீக்கிரம் போடுன்னு மிரட்டினா? 10 இடுகைக்குண்டான அவ்வளவு பிழையும் இந்த ஒன்னில. இதெல்லாம் விட்டு இலக்கிய வாதியின் பார்வையில் எழுத்துப் பிழையாம்:))
அண்ணாச்சி சினிமாக்கு போனா அங்க கதாநாயகனுக்கு கூட துண்டு பிரச்சினையாகுதா:))
/முக ஒப்பனை ரெம்ப குறைவு என்பதும் ஒரு காரணம், ஆனா என்னைவிட ஒன்னும் யூத் இல்லை பால அண்ணே, /
இந்த லொள்ளு வேற:))
விமர்சனம் அருமை
உங்க ஊரில படம் சப் டைட்டிலுடன் ஓடுச்சா என்ன?
விமர்சனம் அருமை.. படம் பார்த்த திருப்தி. :-)))
எம்புட்டு அலும்பு!...
:-)))
அருமை
துண்டு போடுவதில் வல்லவர் அண்ணன் நசரேயன் வாழ்க......அண்ணே புளியங்குடியில் எத்தனை துண்டு போட்டீங்க
நசர்..ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க PLS.
படம் பாக்கலாமா வேணாமா !
:-)))) என்னா லொல்லு! தியேட்டர் பின்னூட்டங்கள் - கலக்கல்!
நன்றி ராமலக்ஷ்மி அக்கா :-கண்டிப்பா பாருங்க
நன்றி Chitra
நன்றி சின்ன அம்மிணி :- இப்பவே பயபடக்௬டாது,இன்னும் கொஞ்சம் நாள் இருக்கு
நன்றி தமிழ் உதயம்
நன்றி sathish :- சதீஷ் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே
நன்றி டி.வி.ஆர் ஐயா :- ஐயா நான் படம் பார்த்துவிட்டு எழுதினதுதான்.
நன்றி அபுஅஃப்ஸர் :- உண்மையைத்தான் சொல்லுறீங்களா
நன்றி வானம்பாடிகள் பால அண்ணே :- கொஞ்சம் எழுத்து பிழை தான், திருத்தி கொடுக்கிற ஆளு தூங்கிட்டாங்க, இப்ப கொஞ்சம் திருத்திட்டேன்.
நன்றி உலவு.காம்
நன்றி pappu :- ஆமா படம் சப் டைட்டிலுடன் ஓடுது, நீ எழுதுவதை எல்லாம் வாசிக்கிறேன்,ஆனா பின்னூட்டம் போட நேரம் இல்லை ன்னு சொன்னா நம்பனும்.
நன்றிங்க அமைதிச்சாரல்.
நன்றி பா,ரா அண்ணன்.
நன்றி ஆனந்த்
நன்றி அத்தரி :- நேரிலே பார்க்கும் போது சொல்லுறேன் புள்ளி விவரமா
நன்றி ஹேமா : - படம் பார்க்கலாம், உங்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும், முடிவு பிடிக்குமான்னு தெரியலை.
நன்றி சந்தனமுல்லை :- என்னது லொல்லா!!!! எங்கே இருக்கு???
பதிவை விட :))))))தியேட்டர் பின்னூட்டங்கள் கலக்கல்.சிம்புக்கும் மென்மையான காதலுக்கும் பொருந்துதா?இன்னும் பார்க்கலை
ரசித்தேன்..
நெம்ப அலும்புடா சாமீய்......
=))... super appu...
//எங்க ஊரு பக்கம் எல்லாம் பாட்டுக்கு வந்தவங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம வந்துட்டாங்க, இல்லனா சிம்புவுக்கு பதிலே என்னை கதாநாயகனா போடணுமுன்னு படத்தயாரிப்பாளர் சொல்லிவிடுவார் என்கிற பயமாவும் இருக்கலாம்.எங்க ஊரு பக்கம் எல்லாம் பாட்டுக்கு வந்தவங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம வந்துட்டாங்க, இல்லனா சிம்புவுக்கு பதிலே என்னை கதாநாயகனா போடணுமுன்னு படத்தயாரிப்பாளர் சொல்லிவிடுவார் என்கிற பயமாவும் இருக்கலாம்.//
mkkum... intha karpanailaye vazhkkai oadidum....
சிம்புவுக்கு பதிலே என்னை கதாநாயகனா போடணுமுன்னு படத்தயாரிப்பாளர் சொல்லிவிடுவார் என்கிற பயமாவும் இருக்கலாம்.//
அந்த திரிஷா ஆண்டி மேல உங்களுக்கு எப்பவுமே ஒரு கண்ணு!!!
பட கருத்து நல்லாயிருக்குங்க.
நசர்க்கும் - வோட்டா
அட இலக்கியவியாதியாயிட்டாறுன்னு முடிவே செஞ்சிட்டாங்களா
--------------------
இரசிச்ச விமர்சணம்(அதுதானே)
படத்தை எப்படியும் பார்த்தே ஆகனும்
சிம்பு+த்ரிஷா இரண்டையும் பிடிக்காது இருந்தாலும் பார்ப்போம்.
பின்னூட்டங்களுக்காகவாவது பார்த்திடனும்.
பின்னூட்டம் நல்லா இருந்திச்சி..
வருச ஆரம்பிச்சதுல இருந்து எழுத்துப் பிழை இல்லாம நம்ம தளபதி எழுதுறாரேன்னு சந்தோசப்பட்டுட்டு இருந்தேன். அந்த நினைப்புல ஒரு லாரி மண்ணைக் கொட்டிப்புட்டீரேய்யா??
ஆமா என்ன வில்லனக் காணோம்?
//பாடல்கள், பின்னணி இசையையெல்லாம் பேசுற அளவுக்கு எனக்கு இன்னும் வயசு ஆகலை, எங்க ஊரு பக்கம் எல்லாம் பாட்டுக்கு வந்தவங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம வந்துட்டாங்க//
அடடா இப்படியெல்லாம் வேற நெனப்பா......உங்க ஊருல உள்ளவங்களுக்கு கடைசி ஊர்வலத்துக்கு ஒரு மேளம் போடுவங்கல்லா அத மட்டும் தான "கம்போஸ்" பண்ண முடியும்..... அதுக்கு பேறு போனது உங்க ஊரு ஆச்சே..... எங்க ஊருல இருந்து எல்லாம் உங்க ஊருக்கு சவ ஊர்வலதுல தார தப்பட்டை அடிக்க ஆளுங்கள கூப்பிட வருவாங்களே.......
/விண்ணைதாண்டி வருவாயா -இலக்கியவாதியின் பார்வையில் //
யாரந்த இலக்கிய வியாதி??????? எதாவது தொத்து வியாதியா???? "நக்கீரர்" நசரேயன கொஞ்சம் தள்ளி இருக்க சொல்லூங்க......இல்லன்ன நியூ ஜெர்சில இருந்து உமக்கு பரவிற போகுது......
// சி. கருணாகரசு said...
சிம்புவுக்கு பதிலே என்னை கதாநாயகனா போடணுமுன்னு படத்தயாரிப்பாளர் சொல்லிவிடுவார் என்கிற பயமாவும் இருக்கலாம்.//
அந்த திரிஷா ஆண்டி மேல உங்களுக்கு எப்பவுமே ஒரு கண்ணு!!! ///
திரிஷா நசறேயனுக்கு பொண்ணு மாதிரி இருப்பா..... நசறேயனுக்கு எப்பவயுமே அந்த காநதிமதி மேல ஒரு "கண்ணு"..... பேசாம குடுகுடுப்பை எடுக்குற படத்துக்கு (நம்புவோம்... கண்டிப்பாக குடுகுடுப்பை படம் எடுப்பாருன்னு) நசரேயன கதாநாயகனாகவும் காந்திமதிய கதாநாயகியாகவும் போட்டுறலாம்.... கதாநாயகன் கதாநாயகி செலவாவது மிச்சமாகும்.....
/நாயகனும் காத்து இருக்க, இந்த பலி ஆடும் காத்து இருக்க, யாரு தலையிலே தண்ணியை தெளிச்சி நாயகி வெட்டுகிறாள்//
ஆஹா அப்ப கல்யாணம் கட்டுற ஆம்பளைங்க எல்லாரும் "பலியாடு"ன்னு சொல்லுரிங்க அப்படித்தான..... மணப்பெண்கள் எல்லாம் என்ன பலி ஆட்டை வெட்டுற "பூசாரிகளா"?
/முகிலன் said...
பின்னூட்டம் நல்லா இருந்திச்சி..
வருச ஆரம்பிச்சதுல இருந்து எழுத்துப் பிழை இல்லாம நம்ம தளபதி எழுதுறாரேன்னு சந்தோசப்பட்டுட்டு இருந்தேன். அந்த நினைப்புல ஒரு லாரி மண்ணைக் கொட்டிப்புட்டீரேய்யா??
ஆமா என்ன வில்லனக் காணோம்?//
இன்னும் "உயிரோடு" தான் இருக்கேன்... நெறைய வேலை.... எங்க ஊருல (மாடும் மாடு சார்ந்த எடமும்) நல்ல மழை அதனால நெறைய நேரம் மாடு மேய்க்குறோம் நானும் அண்ணாச்சி குடுகுடுப்பையும்.....அதான் கடப்பக்கம் வரவே முடியல....
Post a Comment