Tuesday, February 23, 2010

நான்காவது மரணம்

மணியை எப்ப சந்தித்தேன், எப்படி அவன் எனக்கு நண்பன் ஆனான்னு இன்னும் புரியலை, ஆனா நாங்க ரெண்டு பேரும் பள்ளியிலே ஒண்ணா சுத்துவோம்.எங்க வீட்டிலே அந்த காலத்திலேயே பீடி சுத்துவது தான் தொழில், நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது மணி என்கிட்டே கேட்டான், நீ சாயங்காலம் வரும் போது ரெண்டு பீடி எடுத்திட்டு வான்னு.நான் பிறந்திலே இருந்து பீடியை  பார்த்தவன், இது நாள் வரைக்கும் அதை குடிக்கனுமுன்னு தோணலை, ஆனா நண்பன் மணி நான் எடுத்திட்டு போன பீடியை எடுத்து குடிக்க ஆரம்பித்ததும் எனக்கும் ஆசை வந்து விட்டது, மிச்சம் இருந்த ஒரு பீடியை நானும் குடிச்சேன்.


பீடி எல்லாம் குடிச்சி முடிச்ச உடனே பெரிய ஆள் தோரணையிலே நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போய்ட்டோம், அந்த சம்பவத்திற்கு அப்புறம் நானும், அவனும் ஊருக்கு ஒதுக்குபுறமா அடிக்கடிபோய் பீடி குடிப்போம்.நான் படிச்ச பள்ளியிலே எட்டு வரைக்கும் தான் இருந்தது, ஒன்பதாம் வகுப்புக்கு வேற பள்ளிக்கு போக வேண்டும், மணியோட குடும்ப  சூழ்நிலை அவன் எட்டாம் வகுப்புக்கு மேல படிக்கலை, நான் வேற பள்ளிக்கு போனாலும் அடிக்கடி நாங்க ரெண்டு பேரும் சந்தித்து கொள்வோம்.


நான் ஒன்பதாம் வகுப்பு முடிச்ச  உடனே மணியை கொஞ்ச நாளா காணலை, அவனை தெருக்களிலே பார்க்க முடிவதே இல்லை.பத்தாம் வகுப்பு படிச்சிகிட்டு இருக்கும் போது ஒரு நாள் தற்செயலா மணியைப் பார்த்தேன், ஆள் மிக சோகமா இருந்தான், விவரம் கேட்டேன் ஒண்ணும் சொல்லவே இல்லை, பீடியும் கேட்கலை. 


அதற்கு பின் நான் மணியை சந்திக்கலை, பத்தும் முடித்து,பதினொன்னாம் வகுப்புக்கு போனேன், ஒரு நாள் காலையிலே பள்ளிக்கு வரும்போது மணியின் தெருவிலே இருக்கும் ஒருவர் என்னிடம் 


"ஏலே.. உன் சேக்காளி மணி செத்து போயிட்டாண்டா" ன்னு சொன்னார், கேட்டதும் நேர மணி வீட்டுக்கு போனேன், உண்மையிலே மணி செத்து தான் போனான், கொஞ்ச நேரம் அவங்க வீட்டிலே இருந்து விட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றேன், மணி இறந்த சோகத்திலே மணியின் நினைவா என்கிட்டே பீடியை தவிர வேற ஏதும் இல்லை, அதனாலே என்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு மணி எனக்கு சொல்லிக்கொடுத்தை சொல்லிக் கொடுத்தேன்.முன்னாலே நானும் மணியும் ஒதுங்கும் இடத்திற்கு இப்போது என்னோடு நான்கு பேர் சேர்ந்தார்கள்.

அதிலே ஒருத்தன் தான் திருப்பதி, அவன் எங்க ௬ட வருவான், பீடி குடிக்க இல்லை, எங்களை திட்டுவதற்கு, அவன் திட்டி முடிச்ச உடனே நாங்க எல்லாம் கிளம்பிவிடுவோம், ஊருக்குள்ளே எல்லாம் அந்த காவாலிபயலுக ௬ட சேரக் கூடாதுன்னு  பல தடவை அவனுக்கு புத்திமதி கிடைச்சாலும், அதெல்லாம் அவன் சட்டைசெய்வது கிடையாது, எப்பவுமே எங்க ௬ட தான் இருப்பான்.

பதினொன்று முடித்து விட்டு, பன்னிரெண்டுக்கு போனோம், எங்களோட மணியும் கூடவே வந்தான் பீடியாக, தாவரவியல் சோதனைக்கு அடுத்த நாள் செம்பருத்தி பூ பறிக்க ஊருக்கு அருகிலே இருந்த தோட்டத்திற்கு செல்ல முடிவு எடுத்தோம், அதிகாலையிலே இன்னொரு நண்பனையும் திருப்பதியையும் நேராக தோட்டத்திற்கு வர சொல்லிவிட்டு நான் நேராக அங்கே   சென்றேன். எனது நண்பர்களை காணவில்லை, நானே அவர்களுக்கும் சேர்த்து பூக்களை பறித்து விட்டு, திருப்பதி வீட்டுக்கு செல்ல தீர்மானித்தேன்.

அவன் வீட்டுக்கு வரும் வழியிலே இன்னொரு நண்பன் பரபரப்பாக வந்தான், வந்தவன் என்னுடன்

"ஏலே திருப்பதி செத்து போயிட்டாண்டா"

"என்னடா சொல்லுற"  

"ஆமா, அவன் தூக்குல தொங்கிட்டான்"

ரெண்டுபேரும் வேகமா திருப்பதி வீட்டுக்கு போனோம், வீட்டு முன்னாலே சிறு ௬ட்டம், விஷயம் கேள்விப்பட்டு மேலும் மக்கள் ௬ட ஆரம்பித்தார்கள், நாங்கள் வீட்டுக்குள்ளே சென்றோம், அப்போதுதான் அவன் தூக்கு மாட்டி இருந்த கயிற்றை விட்டு அவனை கீழே இறக்கி வைத்து இருந்தார்கள்.எங்களுக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியலை, அந்த இடத்தை விட்டு மட்டும் சீக்கிரம் கிளம்பனும் என்பதைத் தவிர வேறொன்றும் தோணவில்லை.   ஊருக்குள்ளே அடுத்த ரெண்டு மாதத்துக்கு அவனைப் பத்தியே பேச்சு,எல்லோரும் பேசி முடிச்சிட்டு மறந்தாலும், எங்களால அதைமறக்கமுடியலை.

நண்பனை இழந்த சோகத்தை மறக்க ஒரு வார இறுதியிலே சங்கரன்கோவிலுக்கு சென்றோம்,அப்போதுதான் வைகோ திமுகவை விட்டு வெளியே தள்ளப்பட்டு கட்சி ஆரம்பித்த உடனே நடக்கும் முதல் ௬ட்டம், மக்கள் ௬ட்டத்தோடு ௬ட்டமாக போனோம், மதுபானக் கடை முன்னே எங்களை விட்டது, திருப்பதியை மறக்கனுமுன்னு குடித்தோம், அவனைப் பத்தியே பேசிக்கொண்டு இருந்தோம்.கொஞ்ச நாள்ல மணி ஞாபகம் வரலைனல்லும் பீடி குடிச்சோம், திருப்பதி ஞாபகம் வரும்போது தண்ணி அடிச்சோம்.

பன்னிரண்டு முடித்து கல்லூரிக்கு வந்தேன், பழைய நண்பர்கள் யாரும் இல்லை, புது நண்பர்கள் வந்தார்கள், அவர்களுக்கு தெரியாத மணியையும், திருப்பதியையும் அறிமுகம் செய்தது வைத்தேன். கல்லூரியிலே நான் முதலிலே பீடி குடிக்கவும், தண்ணி அடிக்கவும் சொல்லிக் கொடுத்தது ஜகதீஷ்க்கு. அவனும்,நானும் முதல் வருடத்திலே நல்ல நண்பர்கள், இரண்டாம் வருடத்திலே அவன் வேறு வகுப்புக்கு சென்று விட்டாலும் எங்கள் நட்பு தொடர்ந்தது பீடியும், தண்ணியுமாக.

நாலு வருஷம் கல்லூரி முடிச்சதும், நாங்கள் வேலை தேடி பெங்களூர் சென்றோம், ஆறு மாதத்திற்கு பிறகு ஆள், ஆளுக்கு ஒரு வேலையிலே சேர்ந்தோம், வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழித்து நான் இரண்டு சக்கர வாகனம் வாங்க முடிவு எடுத்தேன், வேலை முடிந்து நண்பர்களை நேராக டீலர் கடைக்கு வரச்சொல்லி விட்டு நான் அங்கே போனேன், ஜகதீஷ் தவிர அனைவரும் வந்து விட்டார்கள். மற்றவர்களிடம் கேட்டேன், அவனும், இன்னொரு நண்பன் ஒருவனும்    பைக்கில் கிளம்பி விட்டார்கள் என்று சொன்னார்கள்.

புது வண்டியுடன் வீட்டுக்கு வந்து விட்டு கோலாகல விருந்து முடித்துவிட்டு தூங்கினோம், இரவிலே காவல் துறையினர் வந்து   நான் தங்கி இருந்த வீட்டுக் கதவை தட்டினார்கள், கன்னடத்திலே கேட்டார்கள், எனக்கு புரியலை, கன்னடம் தெரிந்த ஒரு நண்பனை எழுப்பினேன். அவன் விவரம் கேட்டு விட்டு, ஜகதீஷ் விபத்துல சிக்கி இருக்கான், அவனை அரசாங்க மருத்துவ மனையிலே சேர்த்து இருக்காங்களாம் என்றவுடன் அடுத்த அரை மணி நேரத்திலே மருத்துவமனையை அடைந்தோம்.நாங்கள் அவனை பிணவறையிலே தான் பார்த்தோம்.

அவன் உறவினர்கள் எல்லோருக்கும் தகவல்சொல்லி அனைவரும் வந்து விட்டார்கள்,அடுத்த நாள் மதியம் உடலை வாங்கிக் கொண்டு அவர்கள் தமிழ் நாட்டுக்கு கொண்டு சென்றார்கள், எனது அலுவலக வேலையால் என்னால் செல்ல முடியவில்லை, ஒரு வாரம் கழித்து மருத்துவ அறிக்கையிலே அவன் தலை எதிரே வந்த வாகனத்தின் முன் பகுதிலே மோதி இறந்து இருக்கிறான் என்று தெரிய வந்தது, அவன் தலைக்கவசம் அணித்து இருந்தால், அவன் பிழைத்து இருக்கக்கூடும்.

அடுத்த மாதத்திலே வேலைக்கு அவசரமாக பைக்கிலே போய் கொண்டு இருந்தேன்,  முன்னால் போய்க் கொண்டு இருந்த வேன் திடீரென பிரேக் போட்டவுடன், நான் வந்த வேகத்துக்கு என்னால் வண்டியை நிறுத்த முடியாமல் வேனிலே முட்டினேன், வண்டியிலே இருந்து தூக்கி எறியப்பட்டு தலை வேனின் பின்புறத்திலே மோதியது. மணி, திருப்பதி, ஜகதீஷ் அனைவரும் எனக்காக காத்து கொண்டு இருந்தனர்.

ஜகதீஷ் இறந்தபின் நடந்தவற்றை நினைத்து பார்த்தேன், முதலில் மணியைப் புகையில்லாமல் புதைத்தேன், பின்னர் திருப்பதியை தண்ணி இல்லாமல் புதைத்தேன், இப்போது அவர்கள் நினைவுகள் மட்டும் என்னிடம், இந்த இரண்டையும் தவிர வேற என்ன செய்தேன் என்று நினைக்கும் முன் கீழே விழுந்ததிலே தலை லேசாக வலிக்க ஆரம்பித்தது. அதற்குள் என்னைச் சுற்றி ௬ட்டம் வந்து என்னை தூக்கி ஓரமாக வைத்து விட்டு என்னிடம் எதோ கேட்டார்கள், என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை, அதற்குள் கூட்டத்தில்  நின்ற ஒருவர் என்னோட தலைக்கவசத்தை என் தலையிலே இருந்து எடுத்தார், அப்போது சுவாசித்த காற்றிலே புது உலகம் கண்டேன், தலையை தடவிப் பார்த்தேன், எந்த வித சேதமும் இல்லை. அடுத்த ஐந்து நிமிடத்திலே மீண்டும் பயணம் செய்ய ஆயத்தமானேன். 


சொல்ல மறந்துட்டேன் இந்த தலைக்கவசம் ஜகதீஷ் இறந்த பின் வாங்கினது தான், நடந்த முன்று மரணங்களும், நடக்கப் போகும் என்னோட நான்காவது மரணமும் நிச்சயமே என்றாலும், தன்னாலே போக வேண்டிய உயிரை வீணாக தள்ளி விட வேண்டாமே.


26 கருத்துக்கள்:

goma said...

உலுக்கி விட்டீர்கள்

goma said...

வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம்......

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

அருமை..:)

முகிலன் said...

நல்ல கதை..

அமைதிச்சாரல் said...

//மரணமும் நிச்சயமே என்றாலும், தன்னாலே போக வேண்டிய உயிரை வீணாக தள்ளி விட வேண்டாமே.//

அற்புதமான பாடம்..

ஹேமா said...

அருமை அருமை அருமை நசர்.

சாதாரண நிகழ்வுகள் போல வாழ்வை விழுங்கிக்கொண்டிருக்கும் சில யதார்த்தங்கள்.

Anonymous said...

நல்லவேளை. நான் உங்க நண்பன் இல்லை :)0

பிரியமுடன்...வசந்த் said...

தலைக்கவசம் மேட்டர் நச் தல...

சந்தனமுல்லை said...

:-) நல்லா இருக்கு....அவங்க காத்துக்கிட்டு இருக்காங்கன்னு சொன்னதும் நெஞ்சை பஞ்சாக்கும் முயற்சியோன்னு நினைச்சுட்டேன்...

சந்தனமுல்லை said...

எப்படியெல்லாம் புதுமையை புகுத்தி எழுதறீங்க...:-P

பழமைபேசி said...

//மணியை எப்ப சந்தித்தேன், எப்படி அவன் எனக்கு நண்பன் ஆனான்னு இன்னும் புரியலை, ஆனா நாங்க ரெண்டு பேரும் பள்ளியிலே ஒண்ணா சுத்துவோம்.//

நான் அல்ல, நான் அல்ல!!

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல கதை.

Chitra said...

மணி, திருப்பதி, ஜகதீஷ் அனைவரும் எனக்காக காத்து கொண்டு இருந்தனர்.

.............மறு பிறவியாய் இருக்கும் வாழ்க்கையிலும் "இவர்கள்" இன்னும் இருக்கிறார்களா?

நல்ல கதை.

வானம்பாடிகள் said...

//பழமைபேசி said...

//மணியை எப்ப சந்தித்தேன், எப்படி அவன் எனக்கு நண்பன் ஆனான்னு இன்னும் புரியலை, ஆனா நாங்க ரெண்டு பேரும் பள்ளியிலே ஒண்ணா சுத்துவோம்.//

நான் அல்ல, நான் அல்ல!!//

/அதிலே ஒருத்தன் தான் திருப்பதி, அவன் எங்க ௬ட வருவான், பீடி குடிக்க இல்லை, எங்களை திட்டுவதற்கு, அவன் திட்டி முடிச்ச உடனே நாங்க எல்லாம் கிளம்பிவிடுவோம்/

நானுமல்ல நானுமல்ல. :))

தமிழ் பிரியன் said...

நல்லா சுவாரஸ்யமா எழுதிட்டீங்க.. :-)

க.பாலாசி said...

கதை நல்லாருக்குதுங்க...

இதுல பீடிக்கு ஏதாவது சம்பந்தம் இருக்குங்களா??

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்கு

V.Radhakrishnan said...

அருமையாக எழுதி இருக்கீங்க, பாராட்டுகள். கவனத்துடன் வாழ்வோம், வேண்டாதவைகளைத் தள்ளிவிடுவோம்.

புளியங்குடி said...

கதைபோலத் தந்துவிட்டீர்கள். கதையாகவே இருந்திருக்கலாம்.

நட்புடன் ஜமால் said...

மரணமும் நிச்சயமே என்றாலும், தன்னாலே போக வேண்டிய உயிரை வீணாக தள்ளி விட வேண்டாமே.]]

“நச்”

---------------------

இலக்கியவியாதி ஆகும் முயற்சியை விட்டுட்டு - சிரிப்பலைகளோடு வாங்க

வில்லன் said...

//மணி இறந்த சோகத்திலே மணியின் நினைவா என்கிட்டே பீடியை தவிர வேற ஏதும் இல்லை, அதனாலே என்னுடன் படிக்கும் நண்பர்களுக்கு மணி எனக்கு சொல்லிக்கொடுத்தை சொல்லிக் கொடுத்தேன்.முன்னாலே நானும் மணியும் ஒதுங்கும் இடத்திற்கு இப்போது என்னோடு நான்கு பேர் சேர்ந்தார்கள்.//

ஆஹா வந்துட்டாரையா வாத்தியார்..... அந்த மணி இறந்ததே உம்மாலதான???????/ "சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் ஆண்டி"ன்ன கதையா எதோ ஒரு நேரம் பீடி கேட்டதுக்காக அப்ப அப்ப கொடுத்து அவன கொன்னு போட்டீரேவே?????? இந்த பாவம் எல்லாம் சும்மா விடாது.... ஆமா எதையோ நெனஞ்சி உருகுனாப்புல இருக்கு.....""மணியின் நினைவா என்கிட்டே பீடியை தவிர வேற ஏதும் இல்லை""" அப்படின்னா நீறு மட்டும் அத வச்சு வச்சு குடிக்க வேண்டியது தான...... அத விட்டுபுட்டு கூட நாலு பெற சேத்து கெடுத்தாப்புல இருக்கு........

வில்லன் said...

//பன்னிரண்டு முடித்து கல்லூரிக்கு வந்தேன், பழைய நண்பர்கள் யாரும் இல்லை, புது நண்பர்கள் வந்தார்கள், அவர்களுக்கு தெரியாத மணியையும், திருப்பதியையும் அறிமுகம் செய்தது வைத்தேன். //

வாழ்க மணி வாழ்க திருப்பதி....... யோவ் எனக்கு அறிமுகம்பண்ணிவச்ச மணியும் திருப்பதியும் இவங்கதானா????????? சொல்லவே இல்லையே என்கிட்டே அறிமுகபடுதும்போது..............நான் இந்த மணியும் திருப்பதியையும் மற்ற நண்பர்களுக்கு அறிமுகபடுத்தி வைக்க முயற்சி பண்ணுறேன்..... முடிஞ்சா.....அண்ணாச்சி குடுகுடுப்பைக்கு இந்த வார இருதியில் வீடு தேடி போயி அறிமுகபடுத்தி வச்சுர்றேன்..... சரியா...

வில்லன் said...

//சொல்ல மறந்துட்டேன் இந்த தலைக்கவசம் ஜகதீஷ் இறந்த பின் வாங்கினது தான், நடந்த முன்று மரணங்களும், நடக்கப் போகும் என்னோட நான்காவது மரணமும் நிச்சயமே என்றாலும், தன்னாலே போக வேண்டிய உயிரை வீணாக தள்ளி விட வேண்டாமே.//

என்னதான் அடுத்தவன் எழவுக்கு கொஞ்சம் இல்ல ரொம்பவே காரணமா இருந்தாலும்...... கடைசில இப்படி ஒரு "மேசேஜ" போட்டு எங்கள காப்பாத்திட்டிங்க தல......அதுக்கே நீறு முன்னால செஞ்ச மூணு கொலைகளையும் மன்னிச்சு விட்டுரலாம்...

வில்லன் said...

//முகிலன் said...


நல்ல கதை..//
என்னதிது??????? முகிலன்.... "தல" என்ன கதையா சொன்னாரு அப்புறம்னு கேக்க....அவரே மூணு கொலைய செஞ்சுட்டு நம்மகிட்ட வாக்குமூலம் கொடுதுருக்காறு அவருக்கு தண்டனை என்னான்னு சொல்லாம சும்மா நல்ல கதைன்னு பின்னுட்டம் போட்டுருக்கீறு...... எங்க நம்ம நக்கீரர் பழமை & அண்ணாச்சி கு.ஜ.க..தலைவர்.... ஞாயத்த கேப்போம்....

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

அருமை ,அருமை. பகிர்வுக்கி நன்றி

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in