தெலுங்கானவுக்கு அலப்பறை தீர்வு
இவ்வளவு நாளா தெலுங்கானா எதோ தண்ணி பிரச்சனைன்னு நினைச்சிகிட்டு இருந்தேன், போன வாரம் தான் தெரிஞ்சுது, ஒரு குடும்ப பிரச்சனைன்னு,௬ட்டு குடும்பமா இருந்த அண்ணன், தம்பிகளிடம் மனக்கசப்பு வந்து, மனசிலே புகைந்து கொண்டு இருந்த புகை, இப்ப சாலை வரைக்கும் வந்து இருக்காம். தெலுங்கான பகுதி மக்களுக்கு, ஆந்திரா மக்கள் ௬ட வாழப் பிடிக்கலையாம். சேர்ந்து இருக்கிற ரெண்டு பேருக்கும் ஒத்து வரலைன்னா வெட்டி விடுவது புதுசா, பல காலமா அப்படித்தானே நடக்குது, அதனாலே அவங்க கேட்டதை கொடுங்க சாமி.
யார்ட்ட கோரிக்கை வைக்கன்னு தெரியலை,உள்துறையா, வெளித்துறையா, வெளியே விசாரிச்சா பிரதமரை தவிர யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாமுன்னு சொல்லுறாங்க,தெலுங்கானாவை கழட்டி விட தெலுங்கு தடையா இல்லையாம், இங்கிட்டு இருக்கிற அவுக சொந்தக்காரங்களுக்கு பிடிக்கலையாம், அதனாலே போறேன்னு சொல்லுறவங்களை, காவிரி மாதிரி அணை கட்டி தடுத்து வச்சி இருக்காங்களாம்.
தெலுங்கானா போய்ட்டா ஆந்திரா தனியா ஆகிவிடும் பயமாமே, எதுக்கு பயப்படனும், எங்க தமிழ் நாட்டோட வாங்க, நாங்க உங்களை சேத்துக்கிறோம், கொஞ்ச காலத்துக்கு முன்னாடி சாம்பாரும், சில்லிவாடும் ஒண்ணாத்தானே இருந்தோம், நீங்க பிரிஞ்சி போகும் போது தெலுங்கு அதிகம் பேசுற திருத்தணி எல்லாம் விட்டா கொடுத்தோம் நாங்க தானே வச்சிக்கிட்டோம்.
ஆந்திராவும், தமிழ் நாடும் இணையும் போது எவ்வளவோ நன்மைகள் இருக்கு,இனிமேல பாலாறு பிரச்சனையே இருக்காது, கொஞ்ச நாள்ல அப்படி ஒரு ஆறு இருந்ததா யாருக்குமே தெரியாது. தமிழ் நாட்டை தமிழுலு ன்னு மாத்திவிடலாம், ஏற்கனவே சித்தூர், நெல்லூர் எல்லாம் தமிழ் பேரு இருக்கிறதாலே, சித்துருழு, நெல்லுருழு ன்னு மாத்திடலாம், எங்க நெல்லை மாவட்டம் இருக்கிறதாலே இப்படி ஒரு பெயர் மாற்றம்.
நிர்வாக வசதிக்காக சென்னைக்கு பக்கத்திலே ஒரு துணை நகரம் அமைத்து சென்னைலு ன்னு பெயர் வைக்கலாம், இப்படி எல்லாம் நடந்தா நாயுடு கோவப்படுவாருன்னு நினைச்சா, அங்கே நாயுடுவா இருந்தவரை நாயக்கர் ஆக்கிவிடாலாம், மதுரை திருமலை நாயக்கர் மகாலை நாய்டுமகால்ன்னு மாத்தலாம், நம்ம முகிலன் ஊரான கந்தக காட்டு பக்கம் நிறைய தெலுங்கு பேசுற மக்கள் இருக்கிறார்கள், அதனாலே இந்த பெயர் மாற்றம் ஒண்ணும் அவ்வளவு குழப்பம் விளைவிக்காது.ரெட்டி, ரெட்டியாவும், ராவ், ராவாவுமே இருக்கட்டும்.அந்த பெயரே சால பாகா உந்தி.
சற்று முன் கிடைத்த செய்தி குடுகுடுப்பையாரிடம் இருந்து: யோவ் சென்னையிலே ஏற்கனவே நாய்டு ஹால் இருக்கிறது, பேரை மாத்தும்.
இந்தி பேசத்தெரியாததாலே அங்கே கொட்டி கிடக்கும் வாய்ப்புகள் எல்லாம் பறிபோவதாக கேள்விப்பட்டு இருக்கேன், வடக்கூர் எல்லாம் எதோ சிங்கப்பூர்,மலேசியா போல செல்வ செழிப்போடு, பாலும் தேனும் ஓடுது, தமிழ் நாட்டிலே எல்லாம் சாப்பாட்டுக்கே வழி இல்லாம அடுத்தவங்க கிட்ட கை ஏந்தி நிற்கிறோமா?, இன்றைய தேதிக்கு தமிழ் நாட்டு பொருளாதாரம் இந்திய பொருளாதார சராசரியை விட அதிகம், இதை நான் சொல்லலை சாமிகளா விக்கி பீடியா சொல்லுது, இன்றைக்கு இந்தி மொழிக்கு ஊற்றா இருக்கிற உத்திர பிரதேசத்திலே தான் படிப்பறிவு மிக குறைவு என்பதையும் சொல்லுது.ஆக கல்வி தகுதியிலும் சரி, பொருளாதாரத்திலும் அவங்க நம்மளை விட உயர்ந்தவர்கள் இல்லைன்னு சொல்லலாம்.
21 கருத்துக்கள்:
தமிழ் தெரிஞ்ச நம்மகிட்டேயே தமிழுக்கு சொம்பு அடிச்சே களைச்சி போக வேண்டிய நிலைமையா இருக்கு, ஒரு சோடா குடிச்சா தேவலாம்,இந்திக்கு எதிர் சொம்பு அடிச்சதிலே சொல்ல வந்த விசயமே மறந்து போச்சி, அதனாலே இத்தோட முடிச்சிக்கிறேன்
...............ha,ha,ha,ha.....
.......... நீகாரு அம்பாசடர்காரு ............ சூப்பர் செப்பெந்தி . !!!
நான் போட வேண்டிய பதிவு இது. அதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.
கேரளாவையும் , தமிழ்நாட்டையும் ஒன்றாக இணைக்கவேண்டும் என்று ஒரு பதிவு போடலாமென்றிருந்தேன் இனி கிடையாது.
மாவட்ட த்திற்கு ஒரு முதல்வர் என்று சொல்லிவிட்டால்..தமிழக கட்சிகளின் ஆதரவு ஓகோ என்று இருக்கும்
அதென்ன கர்னாடகா விட்டீரு:))
//நீங்க பிரிஞ்சி போகும் போது தெலுங்கு அதிகம் பேசுற திருத்தணி எல்லாம் விட்டா கொடுத்தோம் நாங்க தானே வச்சிக்கிட்டோம்.//
ஒருதலைப்பட்சமாக எழுதியதை கண்டிக்கிறேன். நாம் திருப்பதியை தாரைவார்த்ததை மறந்துவிட்டீர்கள்
//...............ha,ha,ha,ha.....
.......... நீகாரு அம்பாசடர்காரு ............ சூப்பர் செப்பெந்தி . !!!//
:))))))))))) repeateeeiiiiii
யோவ் பேர எழுதும்போது ஒழுங்கா எழுதுய்யா.
முகிலருடுன்னு மாத்திக்கிட்டேன்..
// வானம்பாடிகள் said...
அதென்ன கர்னாடகா விட்டீரு:))
//
கர்நாடகா பேடா சார். அது வேலில போற ஓணான வேட்டியில விட்டுக்கிற மாதிரி..
அண்ணே, நம்ம மதுரையில இருந்து தெக்கால இருக்குற மாவட்டத்தையெல்லாம் தனி கண்டமா கேக்கலாம்ணே..
மாநிலம், நாடுன்னெல்லாம் கேட்டு போரடிச்சுப்போச்சி. என்ன சொல்லுதீய?
டிஸ்கி1: இது நான் வந்து போனதற்கான
அடையாளம் மட்டுமே.
டிஸ்கி 2: :)))
டிஸ்கி 3: டிஸ்கி 2 நான் என்ன பார்த்து
சிரிச்சிகிட்டது.
எங்க ஏரியா ராஜா அண்ணாமலை புரம் நட்ட நடுவிலே கட்டின பறக்கும் ரயில்லோட ஸ்டேஷனுக்கு ,மந்தவெளி ரயில்நிலையம்ன்னு பேர் வச்சிருக்காங்க...நாங்கல்லாம் சரி சரின்னு போகலை...
//T.V.ராதாகிருஷ்ணன் said...
மாவட்ட த்திற்கு ஒரு முதல்வர் என்று சொல்லிவிட்டால்..தமிழக கட்சிகளின் ஆதரவு ஓகோ என்று இருக்கும்//
ஹா ஹா .............
அண்ணே அப்படியே நீங்க புளியங்குடிக்கு கலெக்ட்ர் ஆகிடுங......நான் ஆழ்வார்க்குறிச்சிக்கு கலெக்டர் ஆகிடுறேன்
எல்லாம் இந்த ஒரு ‘லு’ லதான் இருக்கு போல, பேசாம அப்படியே செஞ்சுருவோம்லே...சாரி செஞ்சுருவோம்லு.
நசர்காரு அட்டகாசலு காரு
கட்ட பஞ்சாயித்து நல்லத்தான் செய்யிறிங்க.... நல்லாயிருக்கு.
பொழப்பு இப்படி சந்தி சிரிப்பது இந்த படுபாவிகளுக்கு தெரியலையே....
நேனு சீமாலோ உன்னானு அந்துகே காஸ்தா பாதகா உந்தி.....எந்த மாத்திரம் தமில்பில்லனைனா விஸ்வாசம் ஒதுலுக லேக இ கமெண்டு...
அரசியலையும் விடலையா நீங்க !
//இப்படி எல்லாம் நடந்தா எனது பெயரை நாசரேயலுன்னு மாத்திக்கிறேன், குஜமுக சார்பிலே குடுகுகுடுப்பை, குடுகுடுகாரு என்றும், முகிலரு என்று முகிலனும், அண்ணையா குஜமுக மாணவர் அணித்தலைவர் வானம்பாடிகள், வானம்பாடிலுன்னு பேரை மாத்திகிறதா கட்சி ௬ட்டத்திலே வழக்கம் போல என்னையை கேட்காம தீர்மானம் எடுத்து இருக்கிறார்கள்.//
எங்க பேர எப்படி மாத்திக்கறதாம்......அண்ணாச்சி "அது சரி" பேரு எப்படி மாறும்....
//இந்தி பேசத்தெரியாததாலே அங்கே கொட்டி கிடக்கும் வாய்ப்புகள் எல்லாம் பறிபோவதாக கேள்விப்பட்டு இருக்கேன், வடக்கூர் எல்லாம் எதோ சிங்கப்பூர்,மலேசியா போல செல்வ செழிப்போடு, பாலும் தேனும் ஓடுது, தமிழ் நாட்டிலே எல்லாம் சாப்பாட்டுக்கே வழி இல்லாம அடுத்தவங்க கிட்ட கை ஏந்தி நிற்கிறோமா?, இன்றைய தேதிக்கு தமிழ் நாட்டு பொருளாதாரம் இந்திய பொருளாதார சராசரியை விட அதிகம், இதை நான் சொல்லலை சாமிகளா விக்கி பீடியா சொல்லுது, இன்றைக்கு இந்தி மொழிக்கு ஊற்றா இருக்கிற உத்திர பிரதேசத்திலே தான் படிப்பறிவு மிக குறைவு என்பதையும் சொல்லுது.ஆக கல்வி தகுதியிலும் சரி, பொருளாதாரத்திலும் அவங்க நம்மளை விட உயர்ந்தவர்கள் இல்லைன்னு சொல்லலாம்.//
உங்கள் சொந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் எதிர்க்கிறோம்....
இப்படி எல்லாம் பேசுற "நீங்க" ஏன் உங்கள் பொன்னான தமிழ்நாட்ட விட்டுட்டு "பெங்களூரு" போயி பொட்டி தட்டனும்........ "பெங்களூரு" போயி பொட்டி தட்டுற நீங்க ஏன் மும்பை டெல்லி போயி பொட்டி தட்ட கூடாது.....ஏன்னா பெங்களூரில் உங்களுக்கு மொழி பிரச்சனை இல்லை தமிழ்ல பேசினா சமாளிச்சுக்கலாம்....ஆனா உங்களால் வடக்கே சமாளிக்க முடியாது....
அது ஏன் உங்க ஊருலயே மாடு மேசிருக்க்லாம்ல... எதுக்கு அமெரிக்காவுக்கு வந்து வெள்ளைஅப்பன்/வெள்ளையம்மாவ பாக்கணும்... துண்டு போடணும்? ஏன்னா இங்க அந்த மொழி பிரச்சனை இல்லை...... அரை குறை இங்கிலீஷ் பேசி சமாளிச்சுக்கலாம்...... ஏன் தமிழ் இல்லை இங்கிலீஷ் தெரியாத மாநிலம் இல்லை நாட்டில் நீங்கள் வேலை பார்க்க துணிவதில்லை... எல்லாம் பயம்.... அதை மறைக்க இப்படி ஒரு "சப்பை" கருத்து.... சொந்த கருத்துன்னு ...
எங்களுடைய வாதம் தமிழ் நாட்டுல ஒரு கவேர்மேண்டு வேலைக்கு நாயா பேயா அலையுறத விட ரொம்ப சுலபமா நீங்க வட மாநிலங்களில் கவேர்மேண்டு வேலை வாங்கிவிடலாம்...... ஆனாலும் ஹிந்தி தெரியாத காரணத்தால் அங்கு நீங்கள் தாக்கு புடிக்க முடியாது..... தமிழ் நாட்டில் கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாக நீங்கள் வாங்கலாம்...
ஏன் என்றால் அங்கு காவல் நிலையத்தில் "தலைமை காவல் அதிகாரியால்" கூட இங்கிலீஷ் பேச முடியாது.... எங்காவது போக/வாங்க எல்லாவற்றுக்கும் ஹிந்தி தெரிய வேண்டும்....இல்லையேல் நம்ம பாடு திண்டாட்டமே.....அதற்காகத்தான் சொல்லுறோம் தவிர அவங்களால நம்மை விட பொருளாராததில் ஒருக்காலும் மேலே வரவே முடியாது.... ஏனென்றால் அவர்களிடம் உழைப்பு குறைவு பேச்சு அதிகம்...... வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.... கொஞ்ச காலம்.... உண்மையான உழைப்பே உங்களை உயர்த்தும்......
ஹா ஹா! நல்ல தீர்வுதான் நசரேயல்காரு.
http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_10.html
உங்கள் பங்கை ஆற்ற வாருங்கள் நேரமிருந்தால்.
Post a Comment