Thursday, February 11, 2010

எனது காதலர் தினங்கள்


தீபாவளி, பொங்கல், மாட்டு பொங்கலுக்கு கொண்டாட்டிகிட்டு இருந்த நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் துண்டை கையிலே வச்சிக்கிட்டு திரிந்தாலும்  காதலர் தினம்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாது,

பெரும்பாலும் வெளிநாட்டுகாரங்க பண்டிகை எல்லாம் பட்டணத்திலேதான் கொண்டாடுவாங்க, அதே மாதிரி கல்லூரி வந்ததும் முதல்   முறையா வலேண்டின் தினமுன்னு கேள்வி பட்டு, நண்பன்கிட்ட  கேட்டேன்

"மச்சான், வலேண்டின் துண்டு போடுறதிலே பெரிய கில்லாடியா? அவரு பிறந்த அன்னைக்கு காதலர் தினமுன்னு சொல்லுறாங்க"

"மாப்புள, அந்த போட்ட துண்டை யாரும் வாங்கலையோ என்னவோ, துண்டு போட்ட எல்லோரையும் சேத்து வச்சி இருக்காரு.அவரோட மகத்தான மாமா வேலையை பாராட்டி, அன்றைக்கு காதலர் தினமுன்னு வச்சிட்டாங்க, அதனாலே இந்த பதினாலாம் தேதி காதலியோட முகத்திலே முழிக்கலைனா ஆயிசுக்கும் துண்டு போட முடியாம போயிடுமுன்னு வசதிக்கு தகுந்த மாதிரி வாயிலே, கையிலோ கொடுப்பாங்க."

"சரி இருக்கவங்க கொடுக்கிறாங்க, இல்லாத நம்ம மாதிரி ஆளுங்க என்ன செய்ய"

"என்னது நம்மளா?"

"இல்ல மச்சான், என்னையத்தான் சொன்னேன்"

"ரோஜா பூவை வாங்கிட்டு அலைய வேண்டியது தான்"

அடுத்த நாளே கையிலே காசு இல்லாட்டியும் பூக்கடைக்கு போய் சுட்டுட்டு வந்த ரோசா பூ வை கையிலே எடுத்து கிட்டு கல்லூரிக்கு போனேன், என் கையிலே ரோசா பூ வை பார்த்ததும், ௬ட படிக்கிற புள்ளைக மட்டுமில்ல, வயலிலே வேலை பார்த்து கொண்டு இருந்த கிழவிகள் எல்லாம் பூகம்பம் வந்தது மாதிரி தெறிச்சி ஓடிட்டாங்க.

அல்லோ பாலா அண்ணன் நீங்க இங்கே முக்கியமா ஒண்ணு கவனிக்கணும், அவங்க எல்லாம் தெறிச்சி ஓடிட்டதாலே நான் அழகு குறைச்சலா இருந்து இருப்பேனோன்னு நினைக்க ௬டாது,காரணம் என்னன்னா  
நான் வடக்கூர் பாலிவுட்காரிக்கு நாலாந்தரமாவும், ஹாலிவுட்காரிக்கு  நாற்பதாவது தரமாவும் வாக்கப் படவேண்டிய என்னை காதல்ன்னு ஒரு உள்ளூர் வட்டத்துக்குள்ளே அடைச்சி வைக்க இந்த பெண்களுக்கு பிடிக்கலைன்னு நான் ரோஜா பூ எடுத்திட்டு வந்ததும் எல்லோரும் தெறிச்சி ஓடிட்டாங்க .

கண்டம் விட்டு கண்டம் பாயப்போற இந்த கருவாலியை கவுக்க௬டாது என்கிற நல்ல எண்ணத்திலே அவங்க எல்லாம் வழி விட்டுட்டாங்க.அதோட அங்கேயே என்னோட காதல் தினக் கொண்டாட்டத்தை முடிச்சிகிட்டேன்.

அடுத்து வாய்ப்பு வேலைக்கு பெங்களூர் வந்த போது கிடைச்சது, நம்ம ஊரு புள்ளைக கிட்ட பருப்பு வேகலைன்னதும், ௬ட வேலை பார்த்த வடக்கூர்காரி சிரிக்க சிரிக்க பேசுவா, அவ பேசுறது எனக்கு புரியலைனாலும், நான் நல்லாவே சிரிப்பேன், என்னையும் நம்பிகிட்டு இருந்தவ ஒரு நாள் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பேசி கிட்டு இருந்து இருக்கா, அது புரியாம நான் பேய் மாதிரி சிரிக்க உண்மைய கண்டு பிடிச்சிட்டா, பேசுறது புரியலைனா இன்னொரு தடவை சொல்லுன்னு கேளுன்னு சொல்லிட்டா.அதற்கு அப்புறம் அவ சிரிக்கலன்னா நான் சிரிக்கவே மாட்டேன்,

நானும் பெப்ரவரி எப்ப வருமுன்னு காத்து கிடந்து, வந்த உடனே அவ கிட்ட கேட்டேன், காதலர் தினத்திலே எங்கே போற ன்னு கேட்டேன்.

"போற அளவுக்கு ஆள் கிடைக்கலைன்னு சொன்னா?"

நான் தொகுதிலே இன்னும் வேட்பு மனு தாக்கல்  இல்லை, அப்ப சுயேச்சையா களம் இறங்கி ஜெயிச்சிடலாமுன்னு நானும் ரோசா பூவை வாங்கிட்டு பதினாலாம் தேதி போனேன்.

சாயங்காலம் வரைக்கும் இலவு காத்த கிளி மாதிரி இருந்து, அலுவலகம் முடிய கொஞ்ச நேரம் முன்னாடி அவகிட்ட போனேன், அவ அவளைத்தேடி யாரோ வந்து இருப்பதாக போனாள், நான் அவ பின்னால போனேன், அங்கே பார்த்தா என்னை விட அழகான ஒரு வடக்கூர் காரன் அவளுக்கு பூ கொடுத்து கிட்டு இருந்தான், அப்பவே நான் கொண்டு போன பூவை காதிலே வச்சிகிட்டேன்.

வாடிப்போன ரோசாவையும், வதங்கி போன மனசோடையும் வீட்டுக்கு போக பேருந்திலே ஏறினேன். போகும் போது அருகிலே இருந்த பள்ளி மாணவி, நீங்க கையிலே வைத்து இருக்கும் ரோசா பூவை எனக்கு தரமுடியுமான்னு கேட்டாள்.

"இல்லை இது வேற காரணத்திற்க்காக வாங்கினது"

"காதலிக்கு மட்டும் தான் ரோசா பூன்னா, அப்ப நேரு மாமா கொடுத்ததை எல்லாம் என்னன்னு சொல்லுவீங்க,இது அன்பை பரிமாற ஒரு தினம், அது காதலியா இருக்க வேண்டிய கட்டமில்லை"

அவ பேசினது கேட்டு பெரிய மனுசன்னு நினைச்சிகிட்டு இருந்த நான் ஒரு குழந்தையை போல ஆனேன். இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே இருக்கு. 



34 கருத்துக்கள்:

நசரேயன் said...

சோதனை மேல் சோதனை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
சோதனை மேல் சோதனை//

ஆமாம்..சிறிது நேரமாக முயன்று பேஜ் ஓபன் ஆகாம..இப்பதான் படிக்க முடிஞ்சது

Anonymous said...

//ரோஜா பூ எடுத்திட்டு வந்ததும் எல்லோரும் தெறிச்சி ஓடிட்டாங்க .//

யாரும் ராக்கி கட்டலையா :)

ஆர்வா said...

சூப்பரப்"பூ"

ப்ரியமுடன் வசந்த் said...

நான் தொகுதிலே இன்னும் வேட்பு மனு தாக்கல் இல்லை, அப்ப சுயேச்சையா களம் இறங்கி ஜெயிச்சிடலாமுன்னு நானும் ரோசா பூவை வாங்கிட்டு பதினாலாம் தேதி போனேன்.
//

உங்களுக்கு அமெரிக்க சுதந்திர தேவி பக்கத்துல சிலை வைக்கணும்ண்ணே
:)))

vasu balaji said...

/ நான் வடக்கூர் பாலிவுட்காரிக்கு நாலாந்தரமாவும், ஹாலிவுட்காரிக்கு நாற்பதாவது தரமாவும்/

தரமில்ல ஓய். தாரம்னு சொல்ல வந்தீரோ? அது பொம்பளையாளுக்கில்லா சொல்றது. வர வர கொட்டம் தாங்கமுடியலை:))

சாந்தி மாரியப்பன் said...

//சுட்டுட்டு வந்த ரோசா பூ வை கையிலே எடுத்து கிட்டு கல்லூரிக்கு போனேன்,//

மனசை மாதிரியே அதுவும் கருகிப்போச்சா!!!!

சந்தனமுல்லை said...

/அவ பேசினது கேட்டு பெரிய மனுசன்னு நினைச்சிகிட்டு இருந்த நான் ஒரு குழந்தையை போல ஆனேன். இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே /

ஸ்..ப்பா! எந்த குழந்தை துண்டு போடறதை பத்தில்லாம் பதிவு போடும்?!! :-))))

சந்தனமுல்லை said...

/வயலிலே வேலை பார்த்து கொண்டு இருந்த கிழவிகள் எல்லாம் பூகம்பம் வந்தது மாதிரி தெறிச்சி ஓடிட்டாங்க./

அவ்வ்வ்....கிழ்விகளே தெரிச்சு ஓடற அளவுக்கா!! :-))))

மாதேவி said...

பெப்ரவரி வந்தாலே சிரித்து மாளாது போல் இருக்கிறது.

Chitra said...

நான் வடக்கூர் பாலிவுட்காரிக்கு நாலாந்தரமாவும், ஹாலிவுட்காரிக்கு நாற்பதாவது தரமாவும் வாக்கப் படவேண்டிய என்னை காதல்ன்னு ஒரு உள்ளூர் வட்டத்துக்குள்ளே அடைச்சி வைக்க இந்த பெண்களுக்கு பிடிக்கலைன்னு நான் ரோஜா பூ எடுத்திட்டு வந்ததும் எல்லோரும் தெறிச்சி ஓடிட்டாங்க ..........

உங்க அப்ரோச் பிடிச்சிருக்கு. நல்ல attitude.

goma said...

உங்களுக்கு வயசு ஏறாமலேயே இத்தனை லொள்ளு........

க.பாலாசி said...

//அடுத்த நாளே கையிலே காசு இல்லாட்டியும் பூக்கடைக்கு போய் சுட்டுட்டு வந்த ரோசா பூ வை கையிலே எடுத்து கிட்டு கல்லூரிக்கு போனேன், என் கையிலே ரோசா பூ வை பார்த்ததும், ௬ட படிக்கிற புள்ளைக மட்டுமில்ல, வயலிலே வேலை பார்த்து கொண்டு இருந்த கிழவிகள் எல்லாம் பூகம்பம் வந்தது மாதிரி தெறிச்சி ஓடிட்டாங்க.//

பாவம் அவங்கல்லாம்.... ரொம்ப கொடுமைய அனுபவிச்சிருக்காங்க..

//இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே//

ஹா..ஹா... நல்ல ஜோக்...

ஹேமா said...

ம்ம்ம்..நசர் காதல்தின ரோஜாவா !அது சந்தோஷம்தானே.
அப்புறம் என்ன சோதனை.
சந்தோஷமா இருங்க.

நட்புடன் ஜமால் said...

காதுல வைக்கிற அளவுக்கு சின்னப்பூவா கொண்டு போனீங்க அண்ணே!

கபீஷ் said...

//என்னை விட அழகான ஒரு வடக்கூர் காரன் //

அப்படி இருக்க வாய்ப்பே இல்லியே :-) இல்ல தன்னடக்கத்துல சொல்றீங்களா?

Unknown said...

துண்டு அப்பிடியே ரோஜாவா ப்ரமோசன் ஆயிருக்காக்கும்? ஹூக்கும்.

அத்திரி said...

//இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே //


ஹா ஹா.....அண்ணாச்சி புளியங்குடிக்கு அடுத்த வாரம் போறேன். யார்க்கிட்டயாவது ஏதவது சொல்லனுமா>??????????

Paleo God said...

அவ பேசினது கேட்டு பெரிய மனுசன்னு நினைச்சிகிட்டு இருந்த நான் ஒரு குழந்தையை போல ஆனேன். இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே//

எனக்கு தெரிங்சு முகிலன் மட்டும்தான் அப்படியே இருக்காப்ல.. (போட்டோவ சொன்னேன்..:)

அந்த வடக்கூர் மேட்டர்..சம்சாரம் அது மின்சாரம் படத்த கண்ணு முன்னாடி காமிச்சி..செம காமெடி..:))
--
சூப்பர்..:))

Paleo God said...

அவ பேசினது கேட்டு பெரிய மனுசன்னு நினைச்சிகிட்டு இருந்த நான் ஒரு குழந்தையை போல ஆனேன். இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே//

எனக்கு தெரிங்சு முகிலன் மட்டும்தான் அப்படியே இருக்காப்ல.. (போட்டோவ சொன்னேன்..:)

அந்த வடக்கூர் மேட்டர்..சம்சாரம் அது மின்சாரம் படத்த கண்ணு முன்னாடி காமிச்சி..செம காமெடி..:))
--
சூப்பர்..:))

வில்லன் said...

/தீபாவளி, பொங்கல், மாட்டு பொங்கலுக்கு கொண்டாட்டிகிட்டு இருந்த நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் துண்டை கையிலே வச்சிக்கிட்டு திரிந்தாலும் காதலர் தினம்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாது, //
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிற வரைக்கும் பஸ் ஆவது பாதுருக்கீரா இல்லையா.....உங்க சொந்த ஊருல (புளியன்குடில) மாட்டுவண்டி மட்டும்தான போகும்.......

வில்லன் said...

/ நசரேயன் said...


சோதனை மேல் சோதனை//

என்னது உமது பதிவுக்கு நீரே பின்னூடமா??????? அவளவு மோசமா போச்சா...கடை அப்படியா காத்தாடுது....

வில்லன் said...

//"வேலன்டைனோடமகத்தான மாமா வேலையை பாராட்டி, அன்றைக்கு காதலர் தினமுன்னு வச்சிட்டாங்க, //

அட ச அப்படி ஒரு நல்ல குணம் படைச்ச ஒரு புன்னியவான, ஒரு நிமுசத்துல "மாமா" ஆக்கிபுட்டீரேயா?????

வில்லன் said...

/நான் வடக்கூர் பாலிவுட்காரிக்கு நாலாந்தரமாவும், ஹாலிவுட்காரிக்கு நாற்பதாவது தரமாவும் வாக்கப் படவேண்டிய என்னை காதல்ன்னு ஒரு உள்ளூர் வட்டத்துக்குள்ளே அடைச்சி வைக்க இந்த பெண்களுக்கு பிடிக்கலைன்னு நான் ரோஜா பூ எடுத்திட்டு வந்ததும் எல்லோரும் தெறிச்சி ஓடிட்டாங்க //

ஆகா!!!! அப்ப முடிவே பண்ணிடியலா "கிளவிங்களுக்கு" மட்டும்தான் உங்களால துண்டு போடா முடியும்னு.... ச இவளவோ தரம் கொறஞ்சி போவீருன்னு நெனைக்கவே இல்லையா???????????????

வில்லன் said...

//சுட்டுட்டு வந்த ரோசா பூ வை கையிலே எடுத்து கிட்டு கல்லூரிக்கு போனேன்,//


எப்படி ரோட்டுல "சவ" ஊர்வலம் போம்போது போடுவாங்களே அதுல பொறக்கிட்டு போனதா........ ஒரு ரோசாபூ வாங்க விக்கில்லாத உமக்கெல்லாம் காதல் ஒரு கேடா?

வில்லன் said...

//வயலிலே வேலை பார்த்து கொண்டு இருந்த கிழவிகள் எல்லாம் பூகம்பம் வந்தது மாதிரி தெறிச்சி ஓடிட்டாங்க.//

என்னது கிழவிகள் எல்லாம் ஓடிட்டாங்களா????? சட்ட கிட்ட போட்டுட்டு போனீரா இல்ல ஆர்வ கோளாறுல அம்மணமா ஓடிட்டீரா...... நீறு செஞ்சாலும் செய்வீருவே!!!!!

வில்லன் said...

//அவ பேசினது கேட்டு பெரிய மனுசன்னு நினைச்சிகிட்டு இருந்த நான் ஒரு குழந்தையை போல ஆனேன். இன்னைய வரைக்கும் அந்த குழந்தைக்கு வயசே ஏறலை அப்படியே //

இல்லன்னாலும் உங்க வயச சொல்லிட போரியலாக்கும்.......உமக்கும் குடுகுடுப்பைக்கும் நம்ம ஊரு நடிகைங்க மாதிரி என்றும் பதினாறு.....இளமை முதிராது....

வில்லன் said...

//
வாடிப்போன ரோசாவையும், வதங்கி போன மனசோடையும் வீட்டுக்கு போக பேருந்திலே ஏறினேன். போகும் போது அருகிலே இருந்த பள்ளி மாணவி, நீங்க கையிலே வைத்து இருக்கும் ரோசா பூவை எனக்கு தரமுடியுமான்னு கேட்டாள்.


"இல்லை இது வேற காரணத்திற்க்காக வாங்கினது"//

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது
இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ, அது இங்கேயே
உனக்கு கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை
மற்றொருவருடையதாகிறது,
மற்றொரு நாள் அது வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்.

மேலே சொன்னது உமக்கு நன்றாகவே பொருந்தும்.....

அன்புடன் நான் said...

வருத்தத்தை கூட நல்லா சொல்லியிருக்கிங்க..... பராட்டுக்கள்.

அரங்கப்பெருமாள் said...

அட..விடுண்ணே...இதெல்லாம் ஒரு கவலையா? கஜினி முகமது எத்தன வாட்டி போரிட்டார் தெரியுமா?

ரோஜாப் பூ கடை எங்கன்னு தேடுண்ணே.

அப்துல்மாலிக் said...

இதெல்லாம் கற்பனையா வராது, அந்த ரோஜாபூவை எங்க காதுலே வெக்கிறியலா?

ரசிச்சேன்.. கடைசிலே சொல்லப்பட்ட ட்விஸ்ட் அருமை

எட்வின் said...

கனவுல மட்டும் தானா!!!

இந்த பதிவு யூத்ஃபுல் விகடனின் காதல் பக்கத்தில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.
http://youthful.vikatan.com/youth/Nyouth/feb14/index.asp

ராஜ நடராஜன் said...

நசரேயன்:)

ராஜ நடராஜன் said...

எட்வின் என்னமோ நல்ல செய்தி சொல்றாரே!

போன வருசம் காதலர் பேச்சு.
இந்த வருடம் காதலர் தினமா?

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!