Monday, February 8, 2010

ஒரு எழுத்தாளரின் விலை

இருபது வருட உழைப்பிற்கு கிடைத்த மகிழ்ச்சி இந்த சந்தோஷ முகத்தை கண்டு சந்தோசப் படக்கூடிய ஒரே ஜீவன் இப்போ என் பக்கத்திலே இல்லையே என்ற வருத்தம்,சந்தோசத்தோடு கடந்து சென்றவன் சுற்றம் மறந்தேன், இந்த உலகமே சமவேளியிலே சுழல்வதை போல உணர்ந்த நான் சடுதியிலே மறந்து விட்டேன். சாலையை கடந்த நான் எதிரே வந்த வாகனம் என் மீது மோதுவதை மட்டும் உணர்ந்தேன்,என்னை சுற்றிலும் அபயக்குரல்கள்கள் ஆனால் என் காதுகள் மையான அமைதியாய் இருந்தது.    
அடுத்த அரைமணி நேரத்திலே குற்றம் செய்யாத என் முகவரி தேடி முகவரியை குற்றவாளியை போல தொட ஆரம்பித்தது.
காவல் அதிகாரி ஒருவர் என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தார், 


"ஐயா எதோ புத்தக கண்காட்சியிலே கடைக்கு கொடுக்கும் அனுமதி சீட்டு பையிலே இருக்கு, ரெண்டு புத்தகமும் பையிலே இருக்கு"


ஆமா அந்த புத்தகம் என்னோடதுதான், அந்த எழுத்துக்கு சொந்தக்காரனும் நான்தான்,விடலை வயசிலே பொழுது போகாமல் கிறுகிய நான், வாலிப வயசிலே எழுத ஆரம்பித்தேன், நான் என்னை நேசித்ததை போல என் எழுத்தையும் நேசித்தேன்.எழுத்தின் மேல் உள்ள ஆசையிலே என்னை எழுத்தாளன் என்ற வட்டத்திற்குள் தள்ளியது, ஏனோ தெரியவில்லை என் எழுத்தை என்னை தவிர யாரும் நேசிக்க வில்லை.


"ஐயா இவரோட பையிலே இந்த விலாசமும் படமும் இருந்தது"


"அப்படியா, அந்த ஊரு காவல் நிலையத்திலே தகவல் சொல்லு, அவங்க வீட்டுக்கு சென்று விசாரிக்க சொல்லு"


அந்த விலாசமும் புகைபடமுன் என்னை சார்ந்தது தான்,இந்த உலகிலே என்னை மட்டுமே நேசித்த அந்த ஜீவன் தான்,  என்னை காதலிக்கு கரம் பிடித்த என் மனைவி தான் அது, எழுத்தாளர் கனவிலே இருந்த என்னை வீண் வேலை செய்பவன் என்று எல்லோரும் வெறுத்து ஒதிக்கிய போது, என்னை நம்பி வந்தவள் தான் அவள், மகளின் ஆசைக்கு தடை செய்ய முடியாமல் பாசம் தடுத்து விட்டதால் அவளின் பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு எங்கள் திருமணம் இனிதே நடந்தேறியது.
"உங்க வீட்டுகாரர் எங்கே போய் இருக்கிறாரு?" என்ற காவலரின் கேள்விக்கு பதில் சொல்ல பீடி தட்டை எடுத்து வைத்து கொண்டு வெளியே வந்தாள்.


"அவரு சென்னை போய் இருக்கிறாரு, என்ன விசயம்?"


"வீட்டிலே பெரியவங்க யாரும் இருந்தா ௬ப்பிட்டு காவல் நிலையம் வா, பயபடுற மாதிரி ஒண்ணும் இல்லை"


காரணத்தை சொல்லாமல் கடந்து சென்ற காவல் அதிகாரி போனபின், அவளின் தந்தையை அழைத்து கொண்டு காவல் நிலையம் நோக்கி புறப்பட்டாள்புகைபழக்கம் உடலுக்கு கேடு என்று சொன்னாலும்,எங்கள் வாழ்க்கை வளர்வது அடுத்தவரின் புகையிலே தான். வேலையில்லாத எங்களின் வயிற்றை நிரப்பியது இந்த பீடி தொழில் தான், இன்றைய வரையிலும் நான் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கவலையை மறக்க வைத்தது அவளின் உழைப்பு தான்,அவளின்  தந்தை அச்சு தொழில் நடத்தி வந்தாலும், சுய மரியாதையை இழக்காமல் இருக்க செய்வது இந்த பீடி தொழில் தான்.
மனைவியின் பாதி சம்பளம் எனது படைப்புகளை அனுப்புவதற்கே சரியாக இருக்கும், இன்று வரை அதற்காக என்னிடம் குறைபட்டதில்லை. நான் பேனாவுக்கும், தாள்களுக்கும், தபால் துறைக்கும் கொடுத்த பணம் எங்களிடம் இருந்தால் ஆயிசு முழுவதும் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்காது.
காவல் துறையிடம் வாங்கி கொண்டு 
சென்னை விலாசத்தை வாங்கி கொண்டு என் மனைவியும், மாமனாரும் பேருந்திலே பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
பதினைந்து வருடமாக பெய்யாத மழை எங்கள் ஊர் விவசாயிகளை மட்டுமல்ல என்னையும் மகிழ்வித்தது  
மழைதுளியின் வாழ்வு காலம் பூமியை  வந்தடைந்து சக தோழர்களுடன்  கலந்து வெள்ளமாவதைப் பார்த்து கொண்டு இருந்தவன்,
என் மனைவியிடம் நான் அவளின் தந்தையுடன் அச்சு கடைக்கு வேலைக்கு போகிறேன் என்று சொன்னேன். அவளோட வாழ் நாளிலே கேட்ட முதல் சந்தோஷ நிகழ்ச்சியைப் போல அவளின் முகத்தில்  அளவில்லா மகிழ்ச்சி.
மாமனாரின் கடையிலே வேலைக்கு சேர்ந்து அச்சி தொழிலின் நுட்பங்களை கற்று கொள்ள ஆரம்பித்தேன். எனது வேலையின் ஆர்வம் எல்லோருக்கும் மன நிம்மதியை தந்தது,
கொஞ்ச நாளிலே எனது படைப்புகளை அச்சு கோர்க்க ஆரம்பித்தேன்.


 ஐநூறு பிரதிகளை எடுத்து கொண்டு சென்னை புத்தக் கண்காட்சிக்கு முன்னால் ஓரத்திலே நானும் கடையைப் போட்டு இருந்தேன். உள்ளே உள்ள புத்தகங்களின் விலையை பார்த்து பிரமித்து விட்ட என் போன்ற ஏழைகள் எனது பக்கம் திரும்பின புத்தகத்தின் விலை 10 ரூபா என்று தெரிந்ததும் ஒரு சில புத்தகங்களை வாங்கி சென்றனர்,மாலை ஆகும் முன்னே அனைத்து புத்தகங்களும் விற்று தீர்ந்தது.எனது முதல் சம்பாத்தியம் இப்போது எமனின் காணிக்கைக்கு காத்து நிற்கிறது.
"டாக்டர் என்ன ஆச்சி?"


"ஒன்றும் செய்ய முடியாது, நீங்க சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லியாச்சா?"


"ம்ம்.. அவங்க எல்லாம் கிளம்பி வந்து கொண்டு இருக்கிறார்கள்."


என் மனைவி வந்து விட்டாள், அவளின் கடைசி பார்வையை பார்த்து விட்டு கண் முடியவன் நீண்ட உறக்கமாகிய மரணத்தை தழுவினேன்.
அடுத்த ரெண்டு மாதத்திலே


என் மாமனாரின் அச்சு அலுவலத்திலே எனது புகைப்படம் மாட்டப்பட்டு, வாழும் வரை அவர்களுக்கு  உதவாக்கரையாக இருந்த நான் தெய்வமாய் இருந்தேன். அவர் எனது படைப்புகளை பிரதிகளை எடுத்து இறந்து போன எனது எழுத்துகள் மறுபடி பிறந்து கொண்டே இருந்தது. நான் நிரந்தரமானவன் எந்த நிலையிலும் மரணம் இல்லை என்ற கண்ணதாசன் வரிகள் ஒலித்து கொண்டு இருந்தது.26 கருத்துக்கள்:

பழமைபேசி said...

new template.... congrats!

முகிலன் said...

கதை நல்லா இருக்கு..

எழுத்து பிழை கொறஞ்சிருக்கு.. :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

ராமலக்ஷ்மி said...

கதை நன்றாக இருக்கிறது நசரேயன்.

Anonymous said...

ஒரு சந்தோஷமான கதை எழுதுங்க தளபதி

வில்லன் said...

தலைக்கு ஒரு ஓ போடுங்க.... ஒரு எழுத்து பிழை கூட இல்லாம பதிவு போட்டுருக்காரு............

வில்லன் said...

யோவ் குடுகுடுப்பை இது தென்பாண்டி சிங்கம் "நசரேய பாண்டியர்" பதிவு....எப்படி இருக்கு "டச்சிங்கா" பாத்திருல்லா...... இத திருடி ஒரு "டப்பிங்" பதிவு போட்டுராதீரும் "எதிர் கவுஜன்னு"......

வில்லன் said...

// சின்ன அம்மிணி said...


ஒரு சந்தோஷமான கதை எழுதுங்க தளபதி//


"தலை" சோகத்துல தாடி வச்சுருக்குற (french beard அப்படின்னு சொல்லிகுராறு.... பாத்தா அஞ்சு ஆறு மாசமா மொகத்துல கத்தியே படாத மாதிரி பரிதாபமா இருக்கு!!!!!! என்ன சோகமோ தெரியல????? அநேகமாக அந்த "வண்ணத்து பூச்சி" நினைவாக வாடலாம்.....உண்மை நிலவரம் விசாரிக்க ஏற்பாடு பண்ணப்பட்டுள்ளது ....) காலம்.... பதிவு இப்படி அப்படி சோகமாதான் இருக்கும்.... கொஞ்சம் சகிசுகுங்க....

வில்லன் said...
This comment has been removed by the author.
வில்லன் said...

//என் மாமனாரின் அச்சு அலுவலத்திலே எனது புகைப்படம் மாட்டப்பட்டு, வாழும் வரை அவர்களுக்கு உதவாக்கரையாக இருந்த நான் தெய்வமாய் இருந்தேன். //

தூக்கு தூக்கி படத்தில் சொன்னது போல
"கொண்டு வந்தால் தந்தை
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்
சீர் கொண்டுவந்தால் தங்கை
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் கப்பன் தோழன்!!!!!!!!!"

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்..... வாரி வாரி வழங்கும் போது வள்ளல்/இளிச்சவாயன் ஆகலாம்...

வில்லன் said...

//மகளின் ஆசைக்கு தடை செய்ய முடியாமல் பாசம் தடுத்து விட்டதால் அவளின் பெற்றோர்களின் முழு சம்மதத்தோடு எங்கள் திருமணம் இனிதே நடந்தேறியது.//

அந்த பச்சபுள்ள வாழ்க்கைல இப்படி மண்ணைஅள்ளி போடுட்டானே படுபாவி.. நான் பச்சப்புள்ளன்னு சொன்னது நம்ம கதைநாயகன (புரியாதவங்க நசரேயன் அவமானம் படிங்க மொதல்ல) ...... படுபாவின்னு சொன்னது அந்த பொண்ணோட பெற்றோர்கள (அப்பாவ)...........

Karuppu said...

HI,,

Romba nallaa irukku.. Thanks to NASAREAYA PANDIAN

Keep writting... (Naanka venamnnu sonna eluthaamava pokapporeenka),,,, :)

வில்லன் said...

இதனால அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

குடுகுடுப்பையும் நானும் பகைமையை மறந்து கூட்டணி அமைத்து கட்சி வளர்ச்சிக்காக இன்று இரவு பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்....பலதரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அப்பட்டமாக ஊரறிய நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அண்ணன் குடுகுடுப்பை தி.கு.ஜ.மு.க தலைவர் பதவியை இழந்துவிட்டார்...ஆனாலும் அந்த பதவி வேற ஊரு காரருக்கு கொடுக்க மனதில்லாத காரணத்தினால் ஒரே ஊருக்காரரான (டல்லஸ்) எனக்கு அந்த பதவியை மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்துவிட்டார்.... கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்ட அறிவிப்புகள் அதிவிரைவில் என்னால் அறிவிக்கப்படும்....லஞ்சம் கொடுத்து பதவி வாங்கின அனைவர் பதவியும் "பணால்"........ புதிய பதவி வேண்டுவோர் உடனே என்னை மட்டும் அணுகவும்.... குடுகுடுப்பைஇடம் பணம் கொடுத்து எமாறாதிர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஜெகநாதன் said...

நல்ல ப்ளோ! ரசித்தேன்!!

goma said...

பட படக்க வைத்து விட்டீர்....
அருமை...காவியத்தில் காதல் என்றால் மாதிரி ....எழுத்தும் ஓவியமும் இன்னமும் அவரவர் பெற்றொர்களால் ஏற்றுக் கொள்ளப் படாத நிலையில்தான் 90விழுக்காடு விழுந்து கிடக்கின்றன

Anonymous said...

இறந்தவருக்காக கலங்குவதா அந்த பெண்ணுக்காக கலங்குவதா? நல்ல கதை நசரேயன்...

Chitra said...

வாழும் வரை அவர்களுக்கு உதவாக்கரையாக இருந்த நான் தெய்வமாய் இருந்தேன். அவர் எனது படைப்புகளை பிரதிகளை எடுத்து இறந்து போன எனது எழுத்துகள் மறுபடி பிறந்து கொண்டே இருந்தது.


................கதை தான் என்றாலும், நிஜம் போன்று நெகிழ வைத்தது.

Sangkavi said...

நல்லா இருக்கு....

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

கதை நல்லாருக்குங்க..

எறும்பு said...

நல்லா இருக்கு....

:)

அமைதிச்சாரல் said...

கதை நல்லா இருக்கு நசரேயன்.

சந்தனமுல்லை said...

எதுக்கு நெஞ்சை பஞ்சாக்கும் முயற்சி?!

ஹேமா said...

அப்போ....நீங்க சொல்றது வாழ்க்கைல எதுவும் நிரந்தரம் இல்லன்னு இல்ல.நிரந்தரமான விஷயங்களும் இருக்கு.
உண்மைதான்.நல்லாருக்கு கதை.

கலகலப்ரியா said...

start la irunthu mmudiyara varaikkum arumaiyaana flow.. aarambam chummaa athiruthilla..!

அண்ணாமலையான் said...

சிறப்பா இருக்கு

வானம்பாடிகள் said...

அருமை நசரேயன்