உயர் திரு அலுவலக நிர்வாகிகளுக்கு,
உங்கள் அலுவலகத்திலே மேலாளராக இருந்து சமீபத்திலே இறந்து போனவரின் பதவிக்கு வேலை வேண்டி இந்த விண்ணப்பம், இந்த வேலைக்கு பலமுறை விண்ணப்பம் செய்த போது நீங்க இன்னும் ஆள் இருப்பதாக பதில் எழுதுனீர்கள்.நானும் பொறுமையாக காத்து கொண்டு இருந்தேன்.அவருடை மருத்துவ குறிப்புகள் படி ஆறு மாதத்துக்கு முன்னமே மேலோகம் போக வேண்டியவர், அவர் மரண கிணறு தாண்டி இவ்வளவு நாள் உயிரோடு இருந்தது மிகப் பெரிய ஆச்சரியம்.அவரு உசுரு போற வரைக்கும் என் உசுரு என்கிட்டே இல்லை, அவரோட துக்க செய்தி கேள்வி பட்டுத்தான் எனக்கு உயிரே வந்தது.
போன வாரம் எதேர்ச்சையாக உங்கள் அலுவலக காவலாளியை தொடர்பு கொண்ட போதுதான் எனது வேலைக்கு தகுதி உள்ள பொறுப்பிலே இருக்கும் மேலாளர் காலமாகி விட்டதாக எனக்கு தகவல் கிடைத்து.நீங்க எல்லோரும் கடையை அடைத்து விட்டு துக்கம் விசாரிக்க போயிட்டதாகே கேள்விபட்டேன்.நல்ல வேளை அவர் காலமாகிவிட்டது என் வேலை காலாவதி ஆகும் முன் கிடைத்து விட்டது.தயவு செய்து இனிமேல இந்த மாதிரி சம்பவங்களை பத்திரிக்கையிலே விளம்பரப் படுத்துங்க,அப்பத்தான் என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் உதவியா இருக்கும்.
நீங்க எப்போதுமே வேலை காலி இல்லை .. காலி இல்லை ன்னு பதில் சொல்லுவீங்க, ஆனா இப்ப மேல போன மேலாளர் எனக்குன்னு ஒரு காலி இடம் ஒதுக்கீடு பண்ணி கொடுத்திட்டு போய் இருக்கிறார்.
நாம எல்லோரும் துக்கம் அனுசரிச்சி கிட்டு இருக்கும் போதே இந்த வேலைக்குக்கு விண்ணப்பம் செய்ய வேண்டியது என்னோட கடமை,மேலும் இந்த நேரத்திலே ஊடு குழப்பம் ஏதும் நடைபெறாது என நம்புகிறேன்.லஞ்சம் கொடுத்து நான் உட்கார வேண்டிய நாற்காலியை யாரும் தட்டி பறித்து விட மாட்டார்கள் என நம்புகிறேன்.என்னோட நேர்மை எல்லோருக்கும் இருக்கனுமுன்னு எதிர் பார்க்கிறேன்.
நான் இறந்தவரின் வீட்டிற்கு சென்று இறப்பை உறுதி செய்ததற்கான புகைப்படத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து உள்ளேன்.மேலும் அவரை சுடு காட்டுக்கு வழி அனுப்புவதிலே இருந்த இடியாப்ப சிக்கலை இட்லி சிக்கலைப் போல மாற்றி விரைவாக முடிக்க உதவினேன். அதற்கான நன்றி கடிதம் அவரின் உறவினரிடம் இருந்து பெற்றதையும், அவரின் சாம்பல் அஸ்தியை காரியம் முடிந்த உடனே அவரது வீட்டிலே சேர்த்து விட்டேன்.
இணைத்துள்ள புகைப்படங்களிலும், சான்றிதல்களிலும் இருந்து நான் எவ்வளவு கடின உழைப்பாளி என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.மேலும் இறந்தவர் நான் வசிக்கும் பகுதியிலே இருப்பதால் அவருடைய அன்ற அலுவலக வேலைகளை அவரின் உறவினர்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
போனவர் போனாலும் அவருடைய ஆதரவிலே இருக்கின்றவர்களுக்கு கிடைக்க வேண்டியதிலே யாரும் ஊழல் பண்ணவேண்டாம். நான் பொறுப்பேற்ற பின்பு எனக்கு தெரிய வந்தால் சம்பந்தப் பட்டவர்கள் வேலை காலி ஆகிவிடும். எனக்கு ஒருத்தர் மண்டையப் போட்டவுடனே கிடைத்த வேலை, நீங்க மண்டையைப் போடாமலே உங்க வேலை அடுத்தவங்களுக்கு கிடைத்து விடும் என்பதை எச்சரிக்கையோடு சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன்.
நம்ம அலுவலக காவலாளி என் வேலையையும் காத்தார் அவருக்கு என் நன்றி.இனிமேல என்னை மாதிரி வேலை தேடி வருபவர்களிடம் தாராளமா வேலை காலி இல்லைன்னு சொல்லி வையுங்க, பாவம் அவரும் பொழைச்சிட்டு போகட்டும்
பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல, இரவல் சரக்கு
26 கருத்துக்கள்:
வழமை போலவே... இஃகிஃகி!
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.. :))
உலகம் இப்படித்தானே என்கிறது வாழ்க்கை எள்ளி நகையாடியபடி.
நல்ல பகிர்வு. தமிழாக்கம் நன்று.
ஹா ஹா ஹா ஹா . நல்ல பதிவு. என்ன செய்ய உண்மை அப்படித்தான் இருக்கிறது...
//அவரோட துக்க செய்தி கேள்வி பட்டுத்தான் எனக்கு உயிரே வந்தது.//
என்னா வில்லத்தனம்.
super
சரியாகக் கணிக்கப்பட்ட பதிவு
:-)))
யார் வந்தா என்ன, போனா என்ன நம்ம நிலையே கவலைக்கிடமா இருக்கையில் ந்னு நினைச்சு எழுதிய விண்ணப்பம்.. :)
எனக்கு ஒருத்தர் மண்டையப் போட்டவுடனே கிடைத்த வேலை, நீங்க மண்டையைப் போடாமலே உங்க வேலை அடுத்தவங்களுக்கு கிடைத்து விடும் என்பதை எச்சரிக்கையோடு சொல்ல கடமைப் பட்டு இருக்கிறேன்.
.............அம்மாடியோவ்! என்ன ஒரு மிரட்டல்!
:))
கலக்கல்....
The BLACKEST HUMOUR,AMONG THE ONES I HAVE READ RECENTLY.:))
NICE ONE, NASREYAN.
/அவரு உசுரு போற வரைக்கும் என் உசுரு என்கிட்டே இல்லை, அவரோட துக்க செய்தி கேள்வி பட்டுத்தான் எனக்கு உயிரே வந்தது.
/
இப்போ எனக்கு உங்க மேலேதான் லேசா இல்ல ஸ்ட்ராங்கா டவுட் வருது!! :-)))
/நான் இறந்தவரின் வீட்டிற்கு சென்று இறப்பை உறுதி செய்ததற்கான புகைப்படத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து உள்ளேன்/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
:)). எங்க பிழைன்னு சொல்லிடுவாங்களோன்னு இரவல் சரக்குன்னு சொல்லையே:))
வேலை தேடறதுல இப்படியும் ஒரு டெக்னிக் இருக்குதா?பேரிச்சம் பழம் போச்சே:)
நல்லாயிருக்கு ..... வாழ்த்துகள்
//ஆனா இப்ப மேல போன மேலாளர் எனக்குன்னு ஒரு காலி இடம் ஒதுக்கீடு பண்ணி கொடுத்திட்டு போய் இருக்கிறார்.//
சரிதான்..
ellam sari. nenga eppa poga porenga.. enaku unga post venum :D
அடடா, நீங்களாக வேறொரு வேலையை உருவாக்கி இருந்திருக்கலாமே! யதார்த்தம் சொல்லிவிட்டீர்கள், அருமையாக இருந்தது.
//உங்கள் அலுவலக காவலாளியை தொடர்பு கொண்ட போதுதான் //
டீ செலவே எக்கச்சக்கமா ஆகியிருக்குமே..
// முகிலன் said...
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.. :))//
பீட்டோ பீட்டுன்னு ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!
அட...இப்பிடியெல்லாம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்ன்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டே.
அமெரிக்காவிலயும் நம்ம ஊர்ப் பருப்பு வேகுதா நசர் !
"செத்தவன் சு** செமந்தவன் தலை மேல"
//பொறுப்பு அறிவித்தல் : சொந்த சரக்கு அல்ல, இரவல் சரக்கு //
அப்படின்னா யார ஆட்டயபோட்டு எடுத்தது.... யாரந்த இளிச்சவாயன்....
//நம்ம அலுவலக காவலாளி என் வேலையையும் காத்தார் அவருக்கு என் நன்றி.இனிமேல என்னை மாதிரி வேலை தேடி வருபவர்களிடம் தாராளமா வேலை காலி இல்லைன்னு சொல்லி வையுங்க, பாவம் அவரும் பொழைச்சிட்டு போகட்டும் //
அப்படின்னா "அப்ளை" பண்ணினது காவலாளி வேலைக்கா?? இதுக்கா இந்த அழிச்சாட்டியம்..... அட சீ!!!!!!!!
Post a Comment