பொன்னியின் செல்வன் எழுதப்படவில்லை என்றால் இன்று சோழர்களின் புகழ் வரலாற்றிலே இவ்வளவு பெருமை அடைந்து இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் இதே காரணத்தை வைத்து தஞ்சைக்கு அருகிலே எங்க ஊரை விட ஒரு குக்கிராமத்திலே பிறந்த ஜக்கமாவின் புகழ் பாடும் நேற்றைய குடுகுடுப்பை இன்று குடுகுடுப்பை சோழன், இலக்கிய வியாதி தமிழிலே ஆங்கிலத்திலே என்ன என்ன பெயர்களை தந்து பட்டப் பெயராக வைத்து கொள்ள முடியுமே அதை எல்லாம் எடை தாங்க முடியாமல் இன்று நண்பர் முகிலன் போட்ட போதிலே மீண்டும் குடுகுடுப்பையாகி மீண்டும் இருந்த இடத்திற்கு வந்து இருக்கிறார்.
அவரின் கட்சியிலே அடி மாட்டு தொண்டாக சேர்ந்து என்னுடைய கடின உழைப்பினால் கட்சியிலே மிக பிரபலம் அடைந்து எங்கே கட்சியிலே நான் பெரியவனாகி விடுவேனோ என்ற பயத்திலே "நசரேயன் அட்டுழியம்" என்று தலைப்பு வைத்து இடுகையிட்டு இந்த களங்கம் இல்லா முத்தை, ஆட்டு கடையிலே தோல் உறிப்பது போல உறித்து என்னை பசுத்தோல் போர்த்திய புலி என்று நிருப்பிக்க எண்ணினார். நானும் பாண்டிய நாட்டிலே பிறந்த எனக்கு புலிக்கொடி அணித்து தனது பெருந்தன்மை காட்டுகிறார் என்று நினைத்தேன். முகிலன் இப்போது தோல் உறித்து காட்டியபோது தான் தெரிகிறது அது புலி அல்ல புளி என்றும், கோழி யோடு விரவிய புளி சாதம் என்றும்.
அது மட்டுமா கட்சியிலே எங்கே செயலாளர் பதவியோ, தலைவர் பதவியோ கொடுத்தால் எங்கே அவர் நாற்காலியை தட்டி பறித்து விடுவேன் என்று எனக்கு கள்ளகாதல் செயலாளர் என்று நான் எழுதிய கதையின் தலைப்பை வைத்து ஒரு உப்பு பதவியை தந்து, நான் பிறக்கும் போது மாணவரா இருந்தவரை மாணவர் அணி தலைவரையும், நான் பிறக்கும் போது சிறுவராய் இருந்தவரை சிறுவர் அணி தலைவரையும் போட்டு என்னை இழிவு படுத்தி விட்டார். இந்த அவமானத்தை எல்லாம் சகித்து கொண்ட நான் அவரிடம் நான் ஒரு பனங்காட்டு நரி என்று சொன்னபோது, நீ ஒரு சூப்பின பனக்கொட்டை என்று உண்மையை சொல்லி விட்டார் கட்சி ௬ட்டத்திலே.
அமெரிக்காவிலே இருக்கும் செல்வாக்கை பயன் படுத்தி பிரித்தானியாவிலேயும் நுழையும் ஆசையிலே இல்லாத அரசியலுக்கு ஒரு பொல்லாத பதவியை உருவாக்கி "அது சரி" யையும் "ஆமா சரி" என்று போட வைக்க முயற்சி செய்கிறார். அது மட்டுமா உலகின் பல்வேறு பகுதிகளில் தன கிளைகளை நிறுவ பல பதிவர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருபதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
கட்சியிலே ஆங்கில இலக்கிய குழுவிற்கு என்னை தலைமை தாங்க வைக்கிறேன் என்று என்னிடம் சொல்லி என்னை ஆங்கிலம் பேசச்சொல்லி நான் "funny" என்று சொன்னால் பன்னி என்று face என்று சொன்னால் அதை base என்றும் நினைத்து என்னை வைத்தை மீண்டும் ஒரு இடுகை வெளியிட்டார். இப்படி கட்சிக்கு மாடாய் உழைத்த என்னையும் அவர் மேய்க்கும் மாடுகளை போலவே நினைத்து விட்ட தன்னை சோளக்கஞ்சி சாப்பிட்டதாலே சோழன் என்று சொல்லிகொண்ட குடுகுடுப்பையார் மீண்டும் குடுகுடுப்பையாக மாறியதற்கு நன்றி மாற்றிய முகிலனுக்கும் நன்றி. இவ்வளவு நேரம் இதையும் ஒரு பொருட்டாக வாசித்த அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.
36 கருத்துக்கள்:
நன்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது.. :)))
இப்பத்தான்யா கட்சிக்கு ஒரு தேசியக்கட்சியோட பண்புகள் வந்திருக்கு...:)
வாழ்க! வாழ்க!.
அரசியல் கண்ணுல பட்டதுள்ள அதான் ஒரு விளம்பரம் :-).
யம்மாடி ...பெரிய பெரிய ஆராய்ச்சியெல்லாம் பண்றீங்க....
[i mean it]
சோழர் பாண்டியர் சண்டையைக் கிளப்பி மூவரும் பாண்டியர் என்று புதுக் குழப்பம் விளைவித்து குடும்பக் கட்சியாக மாற்ற நினைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.:))
//இதையும் ஒரு பொருட்டாக வாசித்த அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி. //
நன்றி நன்றி!
/இவ்வளவு நேரம் இதையும் ஒரு பொருட்டாக வாசித்த அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.
/
avvvvvv
:-)) நசரேய பாண்டியன்னு நிங்க போட்டுகிட்டா பாண்டியர்கள்கிட்டேயே அடி வாங்கனும்னுதானே சோழ குடுகுடுப்பைய வெறும் குடுகுடுப்பையாரா மாத்திட்டீங்க...எப்பூடி...எங்க ஆராய்ச்சி?!!
நடக்கட்டும்
கட்சி பொதுக்குழு கூட்டத்தை மதுரையில வச்சுகிட்டா கணக்கு கேட்க வசதியா இருக்கும்.
(ஒரு ஆராய்ச்சிக்கான தலைப்பை இப்படி மொக்கை போட்டு கவுத்துப்புட்டிங்களே!அவ்வ்வ்வ்வ்வ்வ்..)
:-))
இதையும் படிக்க வச்சிட்டியளே :)
இல்ல ...இல்ல...நம்பி வந்தது என் பிழை தான்.
உடனே பொதுக்குழுவைக்கூட்டுங்க. :-))).
ஓ... இதுல இவ்வளவு விசயமிருக்கா???
//.. நான் பிறக்கும் போது மாணவரா இருந்தவரை மாணவர் அணி தலைவரையும், நான் பிறக்கும் போது சிறுவராய் இருந்தவரை சிறுவர் அணி தலைவரையும் போட்டு ..//
:-))
//இதையும் ஒரு பொருட்டாக வாசித்த அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி. //
எங்களுக்கு இது தேவைதான்..
தம்பி வா தலைமை ஏற்க என்று ஒரு அறிக்கை விட்டால் முடிந்தது..,
கட்சி களை கட்ட ஆரம்பிச்சிட்டு.
நசரேயரே ....நடத்துங்கள் நடத்துங்கள்.நன்மையாகவே முடியட்டும்.நடுவில எங்காச்சும் பிகரைப் பாத்துட்டு பாட்டுப் படிச்சிட்டு நிக்காம விஷயத்தில கவனமா இருங்க.
குடுகுடுப்பையாவது சோழனாவது
கழகத்தை விட்டு வெளிநடப்பு செஞ்சுட்டு வாங்க நசர்
புதுகழகம் ஆரம்பிச்சுடுவோம்..
பாண்டிய ராஜ்யம் அமைப்போம்...
:)))))
//ராஜ நடராஜன் said...
கட்சி பொதுக்குழு கூட்டத்தை மதுரையில வச்சுகிட்டா கணக்கு கேட்க வசதியா இருக்கும்.
//
கட்சியின் இலக்கிய அணித் தலைவர் வரும் மே மாதம் மதுரைக்கு சுற்றுப் பயணம் வருவதால், அந்த சமயம் மதுரையில் கட்சியின் இலக்கிய அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். அதில் சிலபல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும்.. (மதுரை பாண்டியர்களின் தலைநகரம் என்பதை கருத்தில் கொள்க)..
ஆவ்வ்வ்வ் இந்த சோழ,பாண்டிய சண்டை இன்னமும் முடியல்லையா? இடுகையை படித்ததற்க்கு நன்றி சொன்னா பத்தாது. அனாசின் வாங்க காசு கொடுக்கனும் தெரியுமில்லை?. நாங்க பணம் கொடுத்தா ஓட்டுப் போடும் ஜாதி. எப்படி வசதி?
=))...
பத்திரிக்கை செய்தி..
// ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர் காலத்தை தவறாக சித்தரிப்பதால், அப்படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி கு.ஜ.மு.க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆயிரத்தில் ஒருவனுக்கு தடை கோரி கு.ஜ.மு.க தலைவர் குடுகுடுப்பை சோழன் மனு தாக்கல் செய்துள்ளார்..... தாக்கல் செய்துள்ள மனு கூறியிருப்பதாவது:-
’’ஆயிரத்தில் ஒருவன்' என்ற சினிமா சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் சோழர் காலத்தில் நடந்ததாக சில காட்சிகள் காட்டப்படுகின்றன. உண்மையிலேயே சோழர் காலம் என்பது ஒரு பொற்காலமாக கருதப்பட்டது. உலகத்திலேயே ஜனநாயக ஆட்சியை கொண்டுவந்த முதல் ஆட்சி சோழர் காலத்தில்தான் அமைந்தது. ஆனால், சோழர்கால சம்பவங்கள் என்று `ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் சில காட்சிகளை புகுத்தியுள்ளனர். அதில், சோழர்காலம் நாகரிகமற்ற மனிதர்களும், காட்டுமிராண்டிகளும் இருந்த காலகட்டம் என்பது போல் படத்தில் காட்சிகள் வருகின்றன. மனிதர்களை பலி கொடுப்பது போலவும், மக்களை சோழ அரசன் அடிமைகளாக வைத்திருந்தது போலவும் காட்சிகள் உள்ளன. மேலும், சோழர் காலத்து மக்கள் பிச்சைகாரர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதைவிட கொடுமையாக பசியாக இருக்கும் பெண் தனக்கு உணவு கிடைப்பதற்காக அரசன் முன்பு மார்பை காட்டிக்கொண்டு நிற்பது போன்ற காட்சியும் வருகிறது. படத்தின் தொடக்கத்தில், `இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே' என்று டைட்டிலில் கூறப்பட்டிருந்தாலும், அதில் உண்மையாக நடந்த சம்பவத்தையும், அப்போது இருந்த நபர்களையும் பற்றி தவறாக சித்தரிக்கின்றனர். கற்பனை என்பது நடந்த சம்பவத்தை கூறுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த படத்தால் சோழர் காலத்தை பற்றிய தவறான எண்ணம் வருங்கால தலைமுறைக்கு ஏற்படும் ஒரு மனிதனின் வரலாற்றை கற்பனையாக மாற்றி சித்தரிப்பதற்கு உலகத்தில் யாருக்கும் உரிமை கிடையாது. இதுபோன்ற படத்தால் வரலாறுகள் தவறாக கருதப்பட்டுவிடும். எனவே, இந்த படத்தை மேற்கொண்டு திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த படத்துக்கு தணிக்கை துறை வழங்கியுள்ள சான்றிதழை ரத்து செய்வதற்கு தணிக்கை துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
///பொன்னியின் செல்வன் எழுதப்படவில்லை என்றால் இன்று சோழர்களின் புகழ் வரலாற்றிலே இவ்வளவு பெருமை அடைந்து இருக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது, ஆனால் இதே காரணத்தை வைத்து தஞ்சைக்கு அருகிலே எங்க ஊரை விட ஒரு குக்கிராமத்திலே பிறந்த ஜக்கமாவின் புகழ் பாடும் நேற்றைய குடுகுடுப்பை இன்று குடுகுடுப்பை சோழன், இலக்கிய வியாதி தமிழிலே ஆங்கிலத்திலே என்ன என்ன பெயர்களை தந்து பட்டப் பெயராக வைத்து கொள்ள முடியுமே அதை எல்லாம் எடை தாங்க முடியாமல் இன்று நண்பர் முகிலன் போட்ட போதிலே மீண்டும் குடுகுடுப்பையாகி மீண்டும் இருந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். //
முகிலன் என்ன சும்மாவா பாண்டியநாட்டு சிங்கம் ஆச்சே???????...... சும்மா ஒரு சவுண்டு விடுறதுக்குள்ள அண்ணாச்சி நடுங்கிட்டாறுள்ள....ஒரேநாலுல குடுகுடுப்பை சோழன், முதலாம் குடுகுடுப்பை சோழன் வெறும் குடுகுடுப்பை எல்லா சோழனும் "காலி"..... வெல்லட்டும் எங்கள் பாண்டிய குலம்....... வெற்றி வெற்றி..... மகத்தான வெற்றி "அவதாரை" மிஞ்சும் வெற்றி...... ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி....
// முகிலன் said...
இப்பத்தான்யா கட்சிக்கு ஒரு தேசியக்கட்சியோட பண்புகள் வந்திருக்கு...:)//
என்ன இப்படி சின்னதா சொல்லிட்டிய...... நம்ம கட்சி UNIVERSAL கட்சி ஆச்சே தலைவா.....
/முகிலன் இப்போது தோல் உறித்து காட்டியபோது தான் தெரிகிறது அது புலி அல்ல புளி என்றும், கோழி யோடு விரவிய புளி சாதம் என்றும். //
யோவ் அண்ணாச்சி குடுகுடுப்பை..... இனியும் நீறு இந்த பதிவுலகுல நடமாடனுமா............. கொஞ்சம் நஞ்சம் இருந்த மானத்தையும் நசரேயன் தன்னோட பதிவு மூலமா வாங்கு வாங்குன்னு வாங்கிட்டாரு ... பேசாம "பதிவுலக" கடைய மூடிட்டு கோழி கலந்த புளிசாதம் கடை ஆரம்பியும் வே....
// முகிலன் said...
//ராஜ நடராஜன் said...
கட்சி பொதுக்குழு கூட்டத்தை மதுரையில வச்சுகிட்டா கணக்கு கேட்க வசதியா இருக்கும்.
//
கட்சியின் இலக்கிய அணித் தலைவர் வரும் மே மாதம் மதுரைக்கு சுற்றுப் பயணம் வருவதால், அந்த சமயம் மதுரையில் கட்சியின் இலக்கிய அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். அதில் சிலபல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும்.. (மதுரை பாண்டியர்களின் தலைநகரம் என்பதை கருத்தில் கொள்க)..//
இல்ல முடியாது "மாநகர்" தூத்துக்குடிதான் தலைநகரம்.... இல்ல தலை உருளும் தலைநகர் மதுரைல..........எப்படி உள்கட்சி பூசல் ஆரம்பிசுடோம்ல..........
//சோளக்கஞ்சி சாப்பிட்டதாலே சோழன் என்று சொல்லிகொண்ட குடுகுடுப்பையார் மீண்டும் குடுகுடுப்பையாக மாறியதற்கு நன்றி மாற்றிய முகிலனுக்கும் நன்றி. //
ஆகா!!!!!!!!!!!!!!! இந்த உண்மை எனக்கு தெரியாம போச்சே...."யோவ் குடுகுடுப்பை" சோத்துக்கு வழியில்லாம சோளக்கஞ்சி சாப்பிட்ட நீரெல்லாம் சோழன்???? அட தூ??????????????? நெத்தியடி தல.... இதவச்சு வாங்கிருவோம்ல அண்ணாச்சி மானத்த (கோவணத்த)..... பொறுத்திருந்து பாருங்கள் எங்கள் ஆட்டத்தை!!!!!!!!!!!!!!!!!!!!!!
என்ன சத்தம் இங்கே, அசல் படத்துக்குக்காக சோழனை கட் பண்ணினா இங்கே தேவையில்லாத வெற்றி விழா நடக்குது. வரலாறை படிங்கப்பு.நெல்லையைப் போல பாளையக்காரர்கள் அல்ல, சோழர்கள் பின்னர் 1700 ஆம் ஆண்டிலிருந்து தொண்டை மண்டலம். இப்போதும் எப்போதும் நான் சோழன் சோழன் சோழன்.
கட்சியின் இலக்கிய அணித் தலைவர் வரும் மே மாதம் மதுரைக்கு சுற்றுப் பயணம் வருவதால், அந்த சமயம் மதுரையில் கட்சியின் இலக்கிய அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும். அதில் சிலபல முக்கிய முடிவுகளும் எடுக்கப்படும்.. (மதுரை பாண்டியர்களின் தலைநகரம் என்பதை கருத்தில் கொள்க)..
மதுரை சோழர் கையில் அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
இப்படி ஒரு மொக்கைக்கு இந்தத்தலைப்பு தேவையா?
வானம்பாடிகள் said...
சோழர் பாண்டியர் சண்டையைக் கிளப்பி மூவரும் பாண்டியர் என்று புதுக் குழப்பம் விளைவித்து குடும்பக் கட்சியாக மாற்ற நினைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.:))
//எனக்கும் பாண்டியனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் பகுதி பாண்டியனால் ஒருகாலும் ஆளப்படவில்லை. இன்று வரை சோழர்கால கூற்றம்,வளநாடு,நாடு,கிராமம் என்ற முறையிலேயே கிராம நாட்டாமை அமைப்பு உள்ளது என்பதை அறியத்தருகிறேன்.சோழர்கால பொன்னியம்மன் கோவில் கூட இன்னும் இடிபாடுகளோடு உள்ளது.
//குடுகுடுப்பை said...
என்ன சத்தம் இங்கே, அசல் படத்துக்குக்காக சோழனை கட் பண்ணினா இங்கே தேவையில்லாத வெற்றி விழா நடக்குது. வரலாறை படிங்கப்பு.நெல்லையைப் போல பாளையக்காரர்கள் அல்ல, சோழர்கள் பின்னர் 1700 ஆம் ஆண்டிலிருந்து தொண்டை மண்டலம். இப்போதும் எப்போதும் நான் சோழன் சோழன் சோழன்.//
பின்ன என்ன மய்துககு அப்படி ஒரு நீலிகண்ணீர் பதிவு அசலும் அரங்கபெருமாளும். தலைப்புல உம்மோட பதிவு கூடத்துல அப்பு... வச்சாறுள்ள "எங்க அண்ணாச்சி" "நாட்டாம" "பாண்டியர் குல சிங்கம்" "அஞ்சா நெஞ்சன்" முகிலன் உமக்கு ஆப்பு......
//குடுகுடுப்பை said...
இப்படி ஒரு மொக்கைக்கு இந்தத்தலைப்பு தேவையா?//
தலைப்பு என்னங்குறது முக்கியம் இல்ல அப்பு... வச்சுருக்குற ஆப்பு என்னங்குறது தான் ரொம்ப முக்கியம்.....
இப்படியெல்லாம் பேசி மக்களை(வாசகர்களை) ஏமாத்த வேண்டாம்....
இதனால அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குடுகுடுப்பையும் நானும் பகைமையை மறந்து கூட்டணி அமைத்து கட்சி வளர்ச்சிக்காக இன்று இரவு பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்....பலதரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அப்பட்டமாக ஊரறிய நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அண்ணன் குடுகுடுப்பை தி.கு.ஜ.மு.க தலைவர் பதவியை இழந்துவிட்டார்...ஆனாலும் அந்த பதவி வேற ஊரு காரருக்கு கொடுக்க மனதில்லாத காரணத்தினால் ஒரே ஊருக்காரரான (டல்லஸ்) எனக்கு அந்த பதவியை மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்துவிட்டார்.... கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்ட அறிவிப்புகள் அதிவிரைவில் என்னால் அறிவிக்கப்படும்....லஞ்சம் கொடுத்து பதவி வாங்கின அனைவர் பதவியும் "பணால்"........ புதிய பதவி வேண்டுவோர் உடனே என்னை மட்டும் அணுகவும்.... குடுகுடுப்பைஇடம் பணம் கொடுத்து எமாறாதிர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Post a Comment