நியூயார்க் ரசிகன்
பல நாளுக்கு அப்புறம் இந்திய தொலைக்காட்சியிலே ரிமோட் நின்றது,
நான் நியூயார்க்ல சந்திச்ச அதே நடிகையோட பேட்டி போட்டுக்கிட்டு இருந்தாங்க, ரெம்ப ரசித்து பார்த்து கொண்டு இருந்தேன்,அதிலே ஒரு கேள்வி கேட்டாங்க.
"உங்களுக்கு இவ்வளவு ரசிகர் ௬ட்டம் இருக்கு, நீங்க மிக பிரபல புள்ளிகளிலே ஒருவர், உங்க மனசை கொள்ளை கொண்டு போகிற ஆணை இனிமேல தான் பார்க்க போறீங்களா?"
"ஏற்கனவே பார்த்து இருக்கிறேன், நியூயார்க்ல சந்தித்து இருக்கேன், இன்றைக்கு என்னோட காதலுக்கு எவ்வளவோ பேரு காத்து கிட்டு இருக்கும் போது, என்னையும் ஒரு சக மனுசியாக பாவித்த ரசிகர் ஒருவர் தான் என் இதயத்தை கொள்ளை கொண்டு போனவர், என்னோட காதலையும் ஒரு சாதாரண நிகழ்வாகவே மதித்தார், அதில் இருந்து என்னோட அழகு, கர்வம் எல்லாம் மறந்து நான் ஒரு சாதாரண பெண்ணாவே எப்போதுமே நினைச்சுக்குவேன், அதுவே என்னோட வெற்றிக்கு ஒரு காரணம்"
இந்த பதிலுக்கு அப்புறம் என்னோட கொசுவத்தி சுத்த ஆரம்பித்து, குளிர்காலத்திலே வெளியே போக முடியாம பனிக்கரடி மாதிரி வீட்டுக்குள்ளே ஒளிந்து கிடந்தாலும், வெயில் காலங்களிலே நியூயார்க் நகரை சுற்றி பார்ப்பது தான் பொழுது போக்கு, ஹட்சன் ஆற்றின் ஓரத்திலே இருக்கும் நியூயார்க் நகரை அடுத்த கரையான நியூஜெர்சியிலே இருந்து பார்க்கும் போது நியூயார்க் நகர கட்டங்கள் எல்லாம் சுவரிலே வரையப் பட்ட ஓவியம் போல இருக்கும், அதை ரசித்து கொண்டு இருந்த ஒரு காலை பொழுதிலே , என் கண் எதிரே மெதுவாக ஓடிக்கொண்டு இருந்த ஒரு அழகிய பெண்ணை பார்த்தேன், அதற்கு பின்னால் சூட்டிங், கட் என்று ௬விகொண்டு இருந்த கும்பலை காவல் துறை அதிகாரிகள் வளைத்து அவர்களை எல்லாம் கைது செய்யும் முயற்சியிலே ஈடுபட்டு இருந்தார்கள், அதைத் திரும்பி பார்த்த அந்த பெண் கீழே விழுந்து விட்டாள்.
கீழே விழுந்த அவளை தூக்கி விட எத்தனித்தேன், அதற்குள் அவள் "நான் ஒரு இந்தி நடிகை, நான் இங்கே சூட்டிங் வந்தேன், பின்னால் இருப்பவர்கள் எல்லாம் என்னுடன் வந்தவர்கள்."
"இங்கே நீங்க சூட்டிங்ன்னு சொன்னா உங்களையெல்லாம் தீவிரவாதிகள் என்று உள்ளே தள்ளிடுவாங்க, பிலிம்மிங் என்று சொல்லணும்" என்று சொல்லி முடிக்கும் முன் அவளும் எழுந்து விட்டாள்.
"நீங்க இப்ப அங்கே போனீங்கன்னா உங்களையும் கைது செய்வாங்க, என் ௬ட வந்தா உங்களை நான் நீங்க தங்கி இருக்கிற இடத்திற்கு அழைச்சிட்டு போறேன்."
அடுத்த ஒரு மணி நேரத்திலே அவங்க தங்கி இருந்த ஹோட்டலை அடைந்தோம், அங்கே இவர்கள் தங்கி இருந்த அறைகள் எல்லாம் காவல் துறையால் சீல் வைக்கப் பட்டு, அனுமதி மறுக்கப் பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.வேறு வழி இல்லாததாலே என்னுடன் வர சம்மதித்தாள்.
ஒரு வாரத்திற்கு அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்,இந்த நாட்களிலே அவளுடன் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்து, நியூயார்க் நகர் முழுவதும் எங்கள் காலடி படாத இடம் இல்லாத அளவுக்கு நடந்தே சுத்தி வந்தோம், சுதந்திர தேவி சிலையை பார்த்து கொண்டு இருந்த போது, அங்கே வந்த தமிழ் நண்பர்கள் சிலர் அவர்களுக்குள்ளே எங்களைப் பார்த்து
நான் பள்ளிக்கே நாற்பது நாள் தொடர்ந்து போனதில்லை, ஆனா அவளை நாற்பது நாளும் பார்க்கப் போனேன்.சில சமயங்களிலே படத்திலே நடித்த நாயகனுக்கும் காதிலே புகை வரும் நாங்க போடுற கடலையிலே,ஆரம்பமே இல்லை என்றாலும் முடிவு கண்டிப்பா இருக்கும் என்ற விதிக்கு ஏற்ப, எங்க கடலைபயணமும் முடிவுக்கு வந்தது, படப்பிடிப்பு முடிந்து மீண்டும் தாயகம் திரும்ப தயார் ஆனார்கள்.
அவளை வழி அனுப்ப நியூயார்க் விமான நிலையம் சென்றேன், நிறைய பேசிக்கொண்டே வந்தாள், நானும் தான், போகும் நேரமும் வந்தது, என்னைப் பார்த்து ஐ மிஸ் யு ன்னு சொன்னா, இந்த மிஸ் எதுக்கு என்னை மிஸ் பண்ணுறாங்கன்னு நினைச்சேன்.
எங்கள் இருவருக்கும் இடையே நடந்த சம்பாசனைகள் எல்லாம் ஆங்கிலத்திலே இருந்தாலும்,பதிவுலகிலே தமிழ், ஆங்கிலம் என்று பல துறைகளிலே கலக்கி கொண்டு இருந்த மணி அண்ணனை தொடர்பு கொண்டேன்.கதையை எல்லாம் பொறுமையா கேட்டாரு பதிலும் சொன்னாரு
"ஐ மிஸ் யு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கு, ஆங்கிலத்திலே யு ன்னா, நீ, நீங்க போன்ற ஒருமை, பன்மை எல்லாம் ஒரே வார்த்தையிலே இருக்கு, அதனாலே யு என்பது உங்களையும், ஏன் நியூயார்க் நகரையும் குறிக்கலாம், அதனாலே இதை வச்சி அவங்களுக்கு உங்க மேல காதல்ன்னு சொல்லமுடியாது."
"ஐ லவ் யு ன்னு சொல்லி இருந்தா?"
"ஆங்கிலத்திலே அன்பு, பாசம், நேசம் என்ற எல்லா வார்த்தைக்கும் ஒரு வார்த்தை லவ், அதையும் வச்சி சொல்ல முடியாது"
"சரி அண்ணே"
"சரி அப்புறம் பார்க்கலாம், சிலவற்றை படிக்கலாம், ஆனா புத்தகமா போட முடியாது" கடைசியிலே சொன்னதுக்கு என்ன அர்த்தமுன்னு கேட்கும் முன்னே இணைப்பு துண்டிக்கப் பட்டது.
ஒரு மாதம் கழித்து அவளிடம் இருந்து மின் அஞ்சல் வந்தது, விஷயம் எல்லாம் மேல் அடுக்கு ஆங்கில இலக்கிய நடையிலே எழுத பட்டு இருந்ததாலே, பல முறை படிச்சும் புரியலை, மீண்டும் மணி அண்ணனுக்கு போன் போட்டேன்.ஒவ்வொரு வரியா வாசிக்க, அவரும் பொறுமையா விளக்கம் சொன்னாரு, எல்லாம் முடிச்ச பின்னே அவரு கேட்டாரு
"அப்புறம் வேற ஏதும் இருக்கா?"
"கீழே முறுக்கு இருக்கு"
"என்ன நசரேயன்.. மின்அஞ்சலில் நாயர் டீ கடையா நடத்துறாரு?"
"முறுக்கு, சிலேபி, மைசூர் பாகு கலந்த மாதிரி எழுத்து.."
"இந்தி"யா இருக்கும்..
"உங்களுக்கு இந்தி படிக்க தெரியுமா ?"
" நான் அந்த காலத்திலேயே ரயில் நிலையத்திலே இருந்த இந்தி எழுத்தை அழித்து இருக்கேன், நான் எப்படி படிச்சி இருப்பேன்."
"நானும் எங்க ஊரிலே ரயில் நிலையம் இல்லைன்னு.. தபால் நிலையத்திலே உள்ள பேரை அழித்து இருக்கேன்"
"நம்ம பதிவர்கள் யாருக்கும் இந்தி தெரியுமான்னு தெரியலை?"
"அண்ணே, இந்த முறுக்கை பதிவர் விதுஷ் கடையிலே பார்த்து இருக்கேன், நான் ௬ட யோசிப்பேன், அந்த முறுக்கு வீட்டிலே சுட்டதா .. இல்லை கடையிலே சுட்டதா.."
"அவங்க.. கிட்ட கேட்கலாமா.."
"அவங்க கடையை அடைச்சிட்டு விடுமுறைக்கு போய்ட்டாங்க..நானும், முகிலனும் தான் கடைசியிலே கடைய சாத்தினோம்."
"நமக்கு தெரிஞ்ச பதிவர்கள் யாரிடமாவது.."
"சின்ன அம்மணிக்கு இப்பதான் சாமி வந்து இருக்கு, அடுத்த முறை சாமி வரும்போதுதான் கேட்க முடியும்.."
"பதிவர் சந்தனமுல்லை இடுகையிலே குச்சி .. குச்சி .. கோன்..ஹை ஏதும் பாத்து இருக்கீங்களா?"
"அவங்க குச்சி ஐஸு, கோன் ஐஸு எல்லாம் விக்கிறது இல்ல, பல்ப் தான் பார்த்து இருக்கேன்.."
"பல்பா?"
"ஆமா பப்புகிட்ட வாங்குற பல்பு தான் பார்த்து இருக்கேன்."
சொல்ல மறந்துட்டேன் குடுகுடுப்பை பத்து வருசமா இந்தி படிச்சி கிட்டு இருந்ததா சொன்னாரு,அடுத்த வினாடியே குடுகுடுப்பைக்கு அழைப்பு தொலைபேசியிலே விடப்பட்டது..
"தலைவரே..முக்கிய விஷயம் .. இந்தியிலே எழுதி இருக்கிறது என்னனு தெரியனும்."
"யோவ் .. என்ன வடக்கூர் பக்கம் காத்து அடிக்கு.. இந்திக்கு எதிர் சொம்பு அடிச்சிகிட்டு இருந்தியரு"
"அஞ்சல் அனுப்பி இருக்கேன் .. கொஞ்சம் பாத்து சொல்லுங்க .."
"என்ன கோழி கிறுக்கினமாதிரி இருக்கு"
"நீங்க பத்து வருசமா இந்தி படிச்சீங்கன்னு மணி அண்ணே சொன்னாரு"
"ஆமா .. பத்து வருசமா ஒரே வகுப்பிலே இருந்தேன்.ஆனா"
"புரியுது... ஒரு துண்டு மனசு.. துண்டுக்கு தானே தெரியும்"
"யோவ்.. வீட்டிலே ஒரு வேளை கஞ்சி கிடைக்கதையும் கெடுத்துருவியரு போல இருக்கு,சரி.. சொல்லுறன் கேட்டுகோங்க.. ஜெய் ஹிந்த் பாரதமாதா " அப்படின்னு எழுதி இருக்கு"
"என்ன தலைவரே சொல்லுறீங்க!!!!"
"ஆமா, அந்த படத்தை எல்லாம் பாருங்க எதாவது புரியுதான்னு பாருங்க"
ஒரு ஆறு மாதத்துக்கு உள்ளே ஆயிரம் தடவை ரெண்டு படத்தை பார்த்தது தான் மிச்சம் ஒண்ணுமே புரியலை, அதற்குள் கால சக்கரம் சுழன்று வெகு நாட்களுக்கு அப்புறம் நான் சந்தித்த அந்த நடிகையை தொலைக் காட்சியிலே பார்த்தேன்.
அலைபேசி சிணுங்கியது எடுத்தேன் எதிர் முனையிலே மணி அண்ணன், நான் பார்த்த அதே பேட்டியை அவரும் பார்த்து இருக்கிறார், நசரேயன் அந்த நியூயார்க் ரசிகர் நீங்க தான், மன்னிச்சுடுங்க என் யோசனை கொஞ்சம் பிழையாப் போச்சி
"விடுங்க அண்ணே, சிலதை படிக்கலாம், ஆனா புத்தகமா போட முடியாது, இன்னொரு சந்தோசமான செய்தி எனக்கு கல்யாணம் ஏப்ரல் மாதம் பத்திரிகை மின் அஞ்சலிலே அனுப்புறேன்."
"திருமணம் நல்லபடியா நடைபெற வாழ்த்துக்கள்"
அப்படின்னு எழுதிட்டு பின்னாடி வந்த குரலை கேட்டு திரும்பி பார்த்தா
"என்னப்பா பண்ணுற?"
"அப்பா ஒரு யூத் கதை எழுதி இருக்கேன்"
"யூத்தை மொத்தமா குத்தைகைக்கு எடுத்த மாதிரி பேசுற, தள்ளிப் போ, நான் நிக் சைட்ல கேம் விளையாடனும்"
"சரி நான் கிளம்புறேன்"
"இனிமேலயாவது வயசுக்கு தகுந்த கதை எழுது"
39 கருத்துக்கள்:
//நீங்க பத்து வருசமா இந்தி படிச்சீங்கன்னு மணி அண்ணே சொன்னாரு"//
கோத்து வுட்டுட்டீங்களே தளபதி? இஃகிஃகி!!
தளபதி, குகு என்ன ஆனாரு? ஹட்சன் பக்கம் வந்து பட்சிகளைத் தேடுறாரோ?? ஆளே காணோமே???
//"அவங்க கடையை அடைச்சிட்டு விடுமுறைக்கு போய்ட்டாங்க..நானும், முகிலனும் தான் கடைசியிலே கடைய சாத்தினோம்."//
அவங்களுக்கு தெரியுமாம். இப்படி எசகுபிசகா ஏதாச்சும் கேப்பீங்கன்னு. :)
பேட்டியின் துவக்கத்திலேயே தெரிஞ்சிடிச்சி அந்த ரசிகர் நீங்களாத்தான் இருக்க முடியும்
ஹிந்தியிலே வேற ஏதோ எழுதியிருக்கும்
உங்களுக்கு படிச்சி காட்டினவங்க பொறாமையில மாற்றி சொல்லியிருக்கலாம் :P
படிச்சிட்டேன். அப்புறமா கமெண்ட வர்றேன். :-))
ஹிந்தியில என்ன எழுதியிருந்திச்சின்னு தெரியாம குடுகுடுப்பை சும்மா அடிச்சி விட்டிருந்திருக்காரு. என் கிட்ட அனுப்பி கேட்டாரு. இது தான் அந்த ஜாங்கிரியோட அர்த்தம்..
“அடேய் மடையா, ஒரு தடவை எனக்கு உதவி பண்ணுனதுக்கு நன்றியா நான் உன்னைப் பத்தி டி.வில சொல்லிட்டேன். இதுக்கப்புறமும் எதாவது நினைச்சிக்கிட்டு துண்டை தோள்ல போட்டுக்கிட்டே அலையாத”
=))
//"நம்ம பதிவர்கள் யாருக்கும் இந்தி தெரியுமான்னு தெரியலை?"//
தொடர்ந்து வந்த உரையாடல் கலக்கல்:))!
//"முறுக்கு, சிலேபி, மைசூர் பாகு கலந்த மாதிரி எழுத்து.."
"இந்தி"யா இருக்கும்..
//
:))))))))
தமிழை தவிர மற்ற இந்திய மொழியெல்லாமே அப்பிடித்தான் இருக்கும் நசர்
/நியூயார்க்ல சந்தித்து இருக்கேன், இன்றைக்கு என்னோட காதலுக்கு எவ்வளவோ பேரு காத்து கிட்டு இருக்கும் போது, என்னையும் ஒரு சக மனுசியாக பாவித்த ரசிகர் ஒருவர்/
எங்கள பார்த்தா எப்புடி தெரியுது. நாம எப்ப அண்ணாச்சி துண்டு இல்லாம இருந்திருக்கோம்.
/மணி அண்ணனை தொடர்பு கொண்டேன்./
அடடா! வெள்ளையா இருக்கிறவரு பொய் சொல்லமாட்டாருன்னு நினைச்சிட்டீரோ:))
/அடுத்த வினாடியே குடுகுடுப்பைக்கு அழைப்பு தொலைபேசியிலே விடப்பட்டது./
திருடப் போயி தலையாரி வீட்டுல ஒளியறதுங்கறது இதானோ!
/நசரேயன் அந்த நியூயார்க் ரசிகர் நீங்க தான், மன்னிச்சுடுங்க என் யோசனை கொஞ்சம் பிழையாப் போச்சி/
இது அண்ணன் கொசுவத்தி வாங்கினப்புறம் போல.
அநியாயத்துக்கு அழிம்பு
"யூத்தை மொத்தமா குத்தைகைக்கு எடுத்த மாதிரி பேசுற, தள்ளிப் போ, நான் நிக் சைட்ல கேம் விளையாடனும்"
.........உங்கள் கனவில் என்னவெல்லாம் தென்படுது.
மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள் சுவாரஸ்யமான பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதான பாத்தேன்,எங்கிட்டு நடிகைக்கு வாழ்வு கொடுத்து பெரிய தியாகி ஆகிடுவீங்கலோன்னு நினைச்சேன்.
//ஒரு ஆறு மாதத்துக்கு உள்ளே ஆயிரம் தடவை ரெண்டு படத்தை பார்த்தது தான் மிச்சம் ஒண்ணுமே புரியலை,//
ஒருவேளை ஏதாவது பின் நவீனத்துவ கவிதயா இருக்குமோ!!! :-))))))
ஓட்டுக் குத்தியாச்சு ஒன்னும் சொல்ல முடியல!!!
//ஜெரி ஈசானந்தா. said...
அதான பாத்தேன்,எங்கிட்டு நடிகைக்கு வாழ்வு கொடுத்து பெரிய தியாகி ஆகிடுவீங்கலோன்னு நினைச்சேன்.//
நானும் அதாங்க நெனச்சேன்... கடைசியில ஏமாத்திட்டாரு...ஒரு இன்ட்ரஸ்டிங் லவ்ஸ்டோரி மிஸ் ஆயிடுச்சு... (இது வேற மிஸ்ங்க)
/"சரி அப்புறம் பார்க்கலாம், சிலவற்றை படிக்கலாம், ஆனா புத்தகமா போட முடியாது" /
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! :-)))
ஆவ்வ்வ்....நான் பல்பு வாங்குறது நியுயார்க் வரை எரியுதாஆஆ!!
என்ன இருந்தாலும், சாமி வந்தது சின்ன அம்மிணீக்கா..உண்மைய மறைச்சு எழுதிட்டாங்களா மேடம்?!! :-)))
/"புரியுது... ஒரு துண்டு மனசு.. துண்டுக்கு தானே தெரியும்"
/
நோட் பண்ணுங்கப்பா...நோட் பண்ணுங்கப்பா!! காலம் போன காலத்துலே ஃப்லீங்ஸூ...ஹூம்!!
சூப்பரா இருந்துச்சு...உங்க கதை...
/"யூத்தை மொத்தமா குத்தைகைக்கு எடுத்த மாதிரி பேசுற, தள்ளிப் போ, நான் நிக் சைட்ல கேம் விளையாடனும்/
ஹிஹி..சேதாரம் அதிகம் போலிருக்கு!!! :-))
சார் வணக்கம்
சூபரா எழுதிருக்கிக்க (சத்தியமா இது வஞ்ச புகழ்ச்சி அணி இல்ல )
//அப்புறம் என்னோட கொசுவத்தி சுத்த ஆரம்பித்து,//
சார் நீங்களும் நம்மூர் தானா?
//"மச்சான்..கருங்குரங்கு அழகு கிளியோட சுத்துரத்தை இப்பத்தான் நேரிலே பார்த்து இருக்கேன்" //
பயபுள்ளைக சில பேரு உண்மைய மட்டுமே பேசுறாங்க
//"ஐ மிஸ் யு என்பதற்கு பல அர்த்தங்கள் இருக்கு, ஆங்கிலத்திலே யு ன்னா, நீ, நீங்க போன்ற ஒருமை, பன்மை எல்லாம் ஒரே வார்த்தையிலே இருக்கு, அதனாலே யு என்பது உங்களையும், ஏன் நியூயார்க் நகரையும் குறிக்கலாம்,//
//"என்ன நசரேயன்.. மின்அஞ்சலில் நாயர் டீ கடையா நடத்துறாரு?"//
சார் இதுக்கு பேர்தான் பொறாமை, வயிதெருச்சல் ( வூட்ல சொல்லி உப்பு , மொளகா எடுத்து தல சுத்தி போடா சொல்லுங்க சார் )
//குளிர்காலத்திலே வெளியே போக முடியாம பனிக்கரடி மாதிரி வீட்டுக்குள்ளே ஒளிந்து கிடந்தாலும்//
ithu enna puthukkathai.... kulirkalathla karadithaan veettukkulla olinjukkum... panikkaradi ean..
=)).. adappaavame... kadaisila ipdi aagipoche..
மனுசனுக்கு எப்படியெல்லாம் அழும்பா கனவு வருது:)
:) நல்ல கதை..
கடைசி வரைக்கும் "செம ஸ்பீட்''ல போச்சு..நல்ல காமெடி..:)
ஸூப்பர்..
கடைசில ஏதோ தீஞ்ச மாதிரி ஃபீலிங்..:)))
Good one Nasareyan....
எப்படியெல்லாம் விடறாங்கப்பா ரீலு. அப்பப்பா தாங்க முடியலை நயன்.( நான் இப்ப நயன்தாரா கிட்டே உட்கார்ந்து பேசி கிட்டு இருக்கிறதை உங்க கிட்ட சொல்ல மாட்டேன். நீங்க பொறாமைப் படுவீங்க)
நன்றி மணி அண்ணே :- குடுப்ஸ்க்கு அளவு கடந்த வேலையாம்
நன்றி சின்ன அம்மிணி :-அப்படித்தான் இருக்கும்
நன்றி நட்புடன் ஜமால் :- ஆமா அவரு மாத்திதான் சொல்லி இருப்பாரு
நன்றி அமைதிச்சாரல் :- பின் நவீனத்துவதத்துவமே தான்
நன்றி முகிலன் :- இப்படி இரு உள்குத்து இருக்குன்னு தெரியாம போச்சே
நன்றி ராமலக்ஷ்மி அக்கா
நன்றி பிரியமுடன்...வசந்த்
நன்றி வானம்பாடிகள் அண்ணே :- அண்ணே பிழை விடாம எழுதி இருக்கேனா ?
நன்றி பித்தனின் வாக்கு :- நீங்க வாக்கு சொன்னா சரியாத்தான் இருக்கும்
நன்றி Chitra :- அதான் யூத்ன்னு சொல்லுறேன்
நன்றி சசிகுமார்
நன்றி ஜெரி ஈசானந்தா
நன்றி தேவன் மாயம் மருத்துவர்
நன்றி க.பாலாசி
நன்றி சந்தனமுல்லை :- என்ன கும்மி?, சின்ன அம்மணி நான் அப்படி சொல்லவே, இது உள் நாட்டு சதி, நீங்க வதந்திகளை நம்பவேண்டாம்.
நன்றி மங்குனி அமைச்சர் :- ஆமா நம்ம ஒரு தான்
நன்றி பிரியா :- சேதாரம் ரெம்ப அதிகம் தான்
நன்றி ராஜ நடராஜன் :- அண்ணே எங்கே ரெம்ப நாளா ஆளையே காணும்
நன்றி முத்துலெட்சுமி/muthuletchumi அக்கா
நன்றி மணிப்பக்கம்
நன்றி வினோத்கெளதம்
நன்றி ஷங்கர் :- அளவுக்கு அதிகமாவே தீஞ்சி போச்சி
நன்றி இனியா
/"ஏற்கனவே பார்த்து இருக்கிறேன், நியூயார்க்ல சந்தித்து இருக்கேன், இன்றைக்கு என்னோட காதலுக்கு எவ்வளவோ பேரு காத்து கிட்டு இருக்கும் போது, என்னையும் ஒரு சக மனுசியாக பாவித்த ரசிகர் ஒருவர் தான் என் இதயத்தை கொள்ளை கொண்டு போனவர், என்னோட காதலையும் ஒரு சாதாரண நிகழ்வாகவே மதித்தார்//
என்ன சந்தில சிந்து பாடினாபுல இருக்கு..... இங்க போட்டு அங்க போட்டு கடைசில நடிகைக்கே துண்டு போட ஆரம்பிச்சாச்சா நல்ல முன்னேற்றம் தான்... நடக்கட்டும் நடக்கட்டும்.... பல்லுள்ளவன் பக்கடா தின்கிறான்......நம்மளால வேடிக்கை மட்டும் தான் பாக்கமுடியுது....
/பழமைபேசி said...
தளபதி, குகு என்ன ஆனாரு? ஹட்சன் பக்கம் வந்து பட்சிகளைத் தேடுறாரோ?? ஆளே காணோமே???//
குடுகுடுப்பைக்கு ஆபீஸ்ல ஆப்பு.... அதபத்தி நான் ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன்.... அவன் அவன் பதிவு போடுறிங்க நான் மட்டும் என்ன சும்மா பின்னுட்டம் போட்டா நல்லா இல்லல்ல.... அதான் இப்படி ஒரு முடிவு.....
/அடுத்த ஒரு மணி நேரத்திலே அவங்க தங்கி இருந்த ஹோட்டலை அடைந்தோம், //
நல்லவேளை அடுத்த ஒரு மணி நேரத்திலே உங்க வீட்டை அடியாம இருந்திங்களே.... அதுவரைக்கும் மானம் போகல... இல அம்புடுதேன்..........
/நான் பள்ளிக்கே நாற்பது நாள் தொடர்ந்து போனதில்லை, ஆனா அவளை நாற்பது நாளும் பார்க்கப் போனேன்.//
அப்ப சோத்துக்கு என்ன பண்ணினிங்க...... பொட்டி தட்டலன்ன சோறு கெடைக்காதே அதான் கேட்டேன்.......
/" நான் அந்த காலத்திலேயே ரயில் நிலையத்திலே இருந்த இந்தி எழுத்தை அழித்து இருக்கேன், நான் எப்படி படிச்சி இருப்பேன்."//
இப்ப புதுசா உங்க ஊருக்கு ரயில் விடுருக்கான்களா..... எதோ மாட்டு வண்டி மட்டும்தான் போகும்னு கேள்விபட்டேன்.....
/"இனிமேலயாவது வயசுக்கு தகுந்த கதை எழுது"//
அப்படி போடு போடு போடு........அடிச்சு சொல்லு வெளக்குமாதாள........
//"நம்ம பதிவர்கள் யாருக்கும் இந்தி தெரியுமான்னு தெரியலை?"//
ஏன் தெரியாது..... எனக்கு தெரியும் ஹிந்தி நல்லா....ஏன் என்னிடம் கேட்கவில்லை...... ஆத்து தண்ணிதானன்னு அள்ளி குடிக்க நான் ஒன்னும் மட்டமானவன் இல்லை தலைவா.....என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே.....
:)) என்ன இந்த முறுக்கு முறுக்கி இருக்கீங்க. LOL
முறுக்கு முள்ளு முறுக்கா கை முறுக்கான்னு பாத்திருந்தா தெரிஞ்சிருக்கும். எல்லாம் கடை முறுக்குதான். வீட்ல வச்சு சாப்டறது.. :))
நல்லா அடிச்சி விளையாடிருக்கீங்க :))))
Post a Comment