Saturday, February 13, 2010

குடுகுடுப்பையின் சிந்தனைக்கவுஜ - சிறப்பு விளக்கம்


இந்த தலைப்பை பார்த்த உடனேயே கொலைவெறி கோபம் வந்து இருக்கும், இருந்தாலும் உண்மை என்னனு சொல்லைனா வரலாறு மன்னிக்குமா இந்த மொக்கை எழுத்தாளனை. அருவா, கம்பு, ஆட்டோ, சுமோ எடுத்தவங்க எல்லாம் கொஞ்சம் அமைதி காக்கவும்.


"அதுல என்ன சொல்லி இருக்கு"ன்னு கவுஜைய ஆரம்பித்து இருக்காரு குடுகுடுப்பை, அது எதுலன்னு எழுதின அவருக்கு தெரியலைனாலும், அங்கே "அ" முதல் எழுத்து வந்து இருக்கு, அப்படின்னா அங்கே உள் குத்து இருக்குன்னு அர்த்தம். வள்ளுவரும் இப்படித்தான் "அ" விலே ஆரம்பித்து இருக்காரு. 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு


ஆக வரியிலே ஒரு "அ" போட்ட மாதிரியும் ஆச்சி, வள்ளுவருக்கு ஒரு வணக்கம் சொன்ன மாதிரியும் ஆச்சி.யோவ் குடுகுடுப்பை என்னைய போய் இப்படி எல்லாம் சிந்திக்க வச்சிடீரே.

அடுத்த வரியை நல்லா உன்னிப்பா கவனீங்க, அதிலே ஒண்ணுமே இருக்காது, இருந்தாலும் அதை ஏன் எழுதணும், "இதிலே இப்படி சொல்லி இருக்கு", இங்கே ஒரு இலக்கியமே ஒளிஞ்சி கிடக்கு, அதாவது "அதிலே", "இதிலே"  எதுகை மோனை. இதையெல்லாம் நுட்பமா கவனிக்கலைனா தெரியாது.அடுத்த வரி பாருங்க கண்ணிலே நிற்கிற மாதிரி வரி, "அதிலே சிந்திக்க சொல்லி இருக்கு", வச்ச தலைப்பு ஒரு வரியாவது கவுஜையிலே வரணும், அதற்கு எழுதப் பட்டது தான்.இதிலே வேற எந்த வித மான உள் நோக்கமே இல்லை.   

அடுத்த ரெண்டு வரிதான் கவுஜையோட மைய கருத்து, முந்திய வரியிலே இருந்து லெப்ட்,ரைட் ன்னு இங்கிலிபிசி லே ரெண்டு வார்த்தை அதிகமா சேர்ந்து இருக்கு.அதாவது நான் தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் ரவுடி என்பதை நிருபிக்க எழுத்தப் பட்டது. 


அடுத்த வரி சமுதாய தொலை நோக்கு பார்வை கொண்டது,சிந்தனை என்பது கட்டாயம் வேண்டும் என்று கட்டளை இடவில்லை, ஆனா சிந்திக்கலைனா இப்பபட்ட கவுஜைகள் மூலமாக தண்டனை வழங்கப்படும் என்று அன்பாக கூறுகிறார் குடுகுடுப்பையார். 


"அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு"  

"அதுல தடைசெய்யப்பட்டிருக்கு"

இந்த ரெண்டு வரிக்கும் சிந்தனை செய்ய தடை செய்ய பட்டு இருப்பதாலே நான் நிறுத்திக்கிறேன், ஒருவேளை முகிலனுக்கு தெரியலாம் இதன் விளக்கம் என்ன என்று, அவர் கவிதைகளுக்கு விளக்கம் கொடுப்பதிலே வல்லவர் என்று பட்டம் வாங்கியவராச்சே அடுத்த வரும் வரிகளிலே எல்லாம் கேள்வி கணைகளை தொடுத்து இருக்கிறார், இப்படி எல்லாம் கேள்வி கேட்க மனுஷன் எங்கே படிச்சாருன்னு தெரியலை, இதுல..இதுல எதையோ சொல்ல முயற்சி செய்தது இருக்கிறார், ஆனா அது எதிலே ன்னு தெரியலை. பாருங்க நான் இப்ப அந்த அதிலே, இதிலேயை படிச்சி கந்தலாகிட்டேன்.  


அசல் இங்கே 

 27 கருத்துக்கள்:

முகிலன் said...

அந்தக் கவிதையை படித்ததிலிருந்து முகிலன் ஒரு மாதிரியாகவே திரிகிறார். ஒரே இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். பேசவும் இல்லை, சாப்பிட மட்டுமே செய்கிறார். இந்த நிலைக்குக் காரணமான குடுகுடுப்பையின் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுக்க இருக்கிறேன்.

- முகிலனின் தங்கமணி.

குடுப்ஸ் said...

"அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு"
"அதுல தடைசெய்யப்பட்டிருக்கு"

இந்த ரெண்டு வரிக்கும் சிந்தனை செய்ய தடை செய்ய பட்டு இருப்பதாலே நான் நிறுத்திக்கிறேன்//

இல்லாட்டி மட்டும்

நட்புடன் ஜமால் said...

இலக்கியவியாதிகளின் தொல்லை தாங்களைப்பா ...

வீ வாண்ட் நசரேயன் ரிட்டர்ன்ஸ் ...

க.பாலாசி said...

பேசாமா நான் அந்த கவுஜயவே நாலுதடவ படிச்சிருக்கலாம்...

Karuppu said...

பாஸ், நான் சிங்கப்பூர்ல தனியா தங்கி இருக்கேன் ... உயிரோட ஊருக்கு போகணும்... இந்த மாதிரி ரொம்ப மொக்கைய எழுதாதீங்க Mr.குடுகுடுப்பை and Mr.நசரேயன் உங்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்கள்....உங்க blog's படிச்சதுக்கு அப்புறம் என்னோட மூளை வேலை செய்யல.... அதனால ஒரு வருடர்திற்கான சம்பளத்தை என்னோட ICICI ல deposit பண்ணிடுங்க....

// அந்தக் கவிதையை படித்ததிலிருந்து முகிலன் ஒரு மாதிரியாகவே திரிகிறார். ஒரே இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். பேசவும் இல்லை, சாப்பிட மட்டுமே செய்கிறார். இந்த நிலைக்குக் காரணமான குடுகுடுப்பையின் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுக்க இருக்கிறேன்.

- முகிலனின் தங்கமணி.//

repeateyy..

ஷங்கர்.. said...

.._...|..____________________, ,
....../ ..---___________----____/
...../_==o;;;;;;;;_______.:/
.....), ---.(_(__) /
....// (..) ), ----"
...//___//
..//___//
.//___//

டுமீல்..

படிச்சிட்டு சுட்டுக்குங்க..
நானும் அதையேதான் பண்ணிக்கிட்டேன். :)

Raj Muthu Kumar said...

If there is a negative vote. I vote for you 10 times. :-?

ஹேமா said...

ஏன் நல்லா>>>>>>>>தா>>>>>>>>>>னே இருக்கு கவிதை.நசர் பேசாம இருங்க.காதலர் தினமும் அதுவுமா !

சந்தனமுல்லை said...

ஸ்...ப்பா! இதுக்கு ஒரு முடிவே இல்லையா...

- சோழ தூதை எதிர்நோக்கி....

சந்தனமுல்லை said...

/குடுப்ஸ் said...

"அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு"
"அதுல தடைசெய்யப்பட்டிருக்கு"

இந்த ரெண்டு வரிக்கும் சிந்தனை செய்ய தடை செய்ய பட்டு இருப்பதாலே நான் நிறுத்திக்கிறேன்//
/

:-))))

பழமைபேசி said...

//ஷங்கர்.. said... //


எப்பிடி இதெல்லாம்?

அமைதிச்சாரல் said...

//இதுல..இதுல எதையோ சொல்ல முயற்சி செய்தது இருக்கிறார், ஆனா அது எதிலே ன்னு தெரியலை//

தட்டானுக்கு சட்டை போட்டா குட்டையன் கட்டையால் அடிப்பான்... இதோட விடையைத்தான் அதுல கொஞ்சம் மாத்திச்சொல்லியிருக்கார்.

அது சரி said...

தளபதி,

உங்க அட்ரஸ் அவசரமா வேணுமே...

முகிலன் said...

// அது சரி said...
தளபதி,

உங்க அட்ரஸ் அவசரமா வேணுமே...
//

ஆட்டோ அனுப்பரதுக்கா? முதல்ல சோழன்னு பொய் சொல்லிட்டிருக்கிறவர் வீட்டுக்கு அனுப்புங்க

குடுப்ஸ் said...

இந்த வேலையெல்லாம் விட்டுட்டு, துண்டு போடற வேலைய பாருய்யா

முகிலன் said...

குடுப்ஸ்? என்ன குடுகுடுப்பைச் சோழர் பேரை சுருக்கிட்டார்?

வில்லன் said...

/முகிலன் said...

அந்தக் கவிதையை படித்ததிலிருந்து முகிலன் ஒரு மாதிரியாகவே திரிகிறார். ஒரே இடத்தை வெறித்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். பேசவும் இல்லை, சாப்பிட மட்டுமே செய்கிறார். இந்த நிலைக்குக் காரணமான குடுகுடுப்பையின் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுக்க இருக்கிறேன்.

- முகிலனின் தங்கமணி.//

ஆஹா இப்படிஎல்லாம் வேற கெளம்பிட்டிங்களா தங்கமணிய சாக்கா வச்சு...... நடக்கட்டும் நடக்கட்டும்.... கேடைக்குரதுல என்னோட "கமிசன" வெட்ட மறந்துராதிங்க அப்பு.....

வில்லன் said...

/குடுப்ஸ் said...


"அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு"
"அதுல தடைசெய்யப்பட்டிருக்கு"

இந்த ரெண்டு வரிக்கும் சிந்தனை செய்ய தடை செய்ய பட்டு இருப்பதாலே நான் நிறுத்திக்கிறேன்//

இல்லாட்டி மட்டும்//

யாரந்த குடுப்ஸ் பா..... அப்ப அப்ப மாறுவேசம் போட்டுட்டு அலயுற "எமகாதகன்" "எம்டன்" குடுகுடுப்பையா??????

வில்லன் said...

நம்ம பதிவுலகத்துல ரெண்டு வெட்டிபசங்க... ஒன்னு நசரேயன் இன்னொன்னு குடுகுடுப்பை......

வெட்டிபசங்க ரெண்டானா (நசரேயன் & குடுகுடுப்பை) பதிவுலகுக்கு திண்டாட்டம்.....

வில்லன் said...

/முகிலன் said...


// அது சரி said...
தளபதி,

உங்க அட்ரஸ் அவசரமா வேணுமே...
//

ஆட்டோ அனுப்பரதுக்கா? முதல்ல சோழன்னு பொய் சொல்லிட்டிருக்கிறவர் வீட்டுக்கு அனுப்புங்க////

சோழன்னு பொய் சொல்லிட்டிருக்கிறவர் ரெண்டு நாளா வீட்டுப்பக்கம் காணோம்.... பலதடவை தேடியாச்சு கெடைக்கல....என்ன ஆனாருன்னு தெரியால..... யாராச்சும் ஆட்டோ வச்சு கடதிட்டாங்கலான்னு சந்தேகமா இருக்கு..... கொஞ்ச நாளைக்கு இந்த கொசு (குடுகுடுப்பை, குடுப்ஸ், முதலாம் குடுகுடுப்பை சோழன்.... என்னவேனா வச்சுக்குங்க) தொல்லை இருக்காதுன்னு நெனைக்கேன்...........

வில்லன் said...

/ முகிலன் said...


குடுப்ஸ்? என்ன குடுகுடுப்பைச் சோழர் பேரை சுருக்கிட்டார்?//
பதிவுலகுல எதிர்ப்பு அதிகமாய்டுச்சு. எதிரிகள் பலம் அதிகமாயிடுச்சு......... எப்பவேனாலும் யாராலும் ஆட்டோ வச்சு தாக்கப்படும் அபாயம். அதான் இந்த மாறுவேஷம்...... தினம் ஒரு புது பெயரு....... தலைமறைவு வாழ்க்கை.............

ராஜ நடராஜன் said...

சிற(ரி)ப்பு விளக்கம் புரியறதுக்கு முன்னாடி முந்திய பந்திக்கு போயிட்டு வந்துடறேன்.

ராஜ நடராஜன் said...

சிற(ரி)ப்பு விளக்கம் புரியறதுக்கு முன்னாடி முந்திய பந்திக்கு போயிட்டு வந்துடறேன்.

ராஜ நடராஜன் said...

அங்க போயிட்டு இங்க வந்துட்டேன்:)

ஜெரி ஈசானந்தா. said...

வில்லன் என்று பெயர் வைத்துகொண்டு ,பதிவுகளில் கதாநாயகனாக வலம் வருகிறீர்கள். தொடர்வோம்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இந்த மொக்கைக்கு அந்த மொக்கையே மேல் போல..

முடியல..

இதையே தான் அங்க போட்டேன்..

உங்களுக்கு ரெண்டு தடவ போடறேன்..

முடியல.

முடியல

முடியல..(இது போனஸ்..)

கமலேஷ் said...

என்னா நடக்குது இங்க...ஒன்னும் புரியலையே...