அமெரிக்காவிலே நடு விரலை காட்டாதீங்க
அமெரிக்கா வந்த புதுசிலே நம்ம ஊரு மாதிரி சிகப்பு விளக்கு இருக்கும் போது சாலையை கடக்கிறது வழக்கமா இருந்தது, இப்படி ஒரு நாள் சாலையிலே சிகப்பு விளக்கில் நடந்து கொண்டு இருக்கும் போது கார்ல வந்த வெள்ளையம்மா பிரேக் போட்டு விட்டு என்னைப் பார்த்து நடு விரலை காட்டினாங்க, நானும் பதிலுக்கு நடு விரலை காட்டினேன்.அவங்க மறுபடியும் ரெண்டு கையை உயர்த்தி நடு விரலை காட்டினாங்க, நானும் ஆர்வமா அதையே செய்தேன்.காரை நிறுத்து விட்டு நேராக என்னை பார்த்து வந்தாள்.நானும் பக்கத்து கடைக்கு பீர் வாங்கத்தான் போறன்னு நினைச்சி கிட்டு நடையை கட்டினேன், அவங்க நேர என்கிட்டே வந்து "ஹலோ.. வாட் தி ... அதுவரைக்கும் தான் எனக்கு புரிந்தது.
ஒருவேளை வெள்ளையம்மா சமைத்த சாப்பாட்டை அவளே சாப்பிட்டாளோ என்னவோ அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்து விட்டது.நடுவிரலை காமிச்ச என்னை சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தாள். அவ பேசுறது ஒண்ணுமே புரியலைன்னாலும் திட்டுதான்னு மட்டும் அவங்க முக அழகை பார்த்து தெரிந்தது.என்கிட்டே வரும்போது கொய்யப் பழமா இருந்த அவங்க முகம் கோவை பழம் மாதிரி சிவந்து போச்சி

அமைதியா இருங்கன்னு நடு விரலை காட்டினேன், திட்டி முடிச்சவ மறுபடியும் ஆரம்பித்துவிட்டாள், மதுரைக்கு வந்த சோதனையா இருக்குன்னு வெள்ளையம்மாவை பார்த்து சிரிச்சி கிட்டு மட்டும் இருந்தேன்.அவ என்ன பேசுறான்னு தெரிஞ்சத்தானே பதில் சொல்ல முடியும்.என்னோட ஓட்டை இங்கிலீஷ்ச வச்சி தடுத்துப்பார்த்தேன், அடை மழை பெய்து வேற வழி இல்லாம காவிரியிலே தண்ணியை திறந்து விட்டால் வருகிற காட்டாற்று வெள்ளம் போல வெள்ளையம்மா மூச்சி விடாம திட்டினாங்க
பக்கத்திலே நின்று கொண்டு இருந்த தங்கமணி வேகமா பேப்பர் பேனா எடுத்து என்னவோ எழுத ஆரம்பித்தாள்.வீட்டுக்கு மளிகை சாமான்கள் வாங்க நான் குறிப்பு எழுதுறது மாதிரி எழுத ஆரம்பித்தாள்.
எப்படியாவது தொடர் திட்டு தாகுத்தல்ல இருந்து தப்பிக்க நான் வெள்ளையம்மாளிடம்
"நீங்க வணக்கம் சொன்னீங்க, நானும் பதிலுக்கு சொன்னேன், அதுக்காக என்னை ஏன் வாட்டி எடுக்குறீங்க"
"என்னது வணக்கம் சொன்னியா!!!"
"ஆமா..ஆமா"
"நான் உனக்கு வணக்கம் சொல்லலை, சிகப்பு விளக்கு எரியும் போது, உங்க அப்பன் வீட்டு ரோடு மாதிரி வந்தே, அதுக்கு தான் உன்னை திட்டினேன், கார் கண்ணாடி மூடி இருந்தா நடு விரலை காட்டி திட்டுவோம்,இது தெரியாதா !!!"
"நான் ஊருக்கு புதுசு, நடு விரல்ல நாலு வார்த்தை இருக்குன்னு எனக்கு சத்தியமா எனக்கு தெரியாது"
நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியலைனாலும் கோபம் கொஞ்சம் குறைஞ்சி போச்சு, கோவைப் பழம் கொய்யப் பழம் ஆகிடுச்சி,அப்படியே சமாதான ஆகி கார் எடுத்து விட்டு கிளம்பிட்டாங்க.நண்பர்களிடம் அதை பத்தி விசாரித்தால் "கெட்ட வார்த்தைடா, இங்கே யாரையும் பார்த்து நடுவிரலை மட்டும் காட்டாதேன்னு" சொல்லிவிட்டார்கள்.
நாடு விரலை காட்டி விட்டேன்னு என்னை கொலை வெறி கோபத்திலே நடு சாலையிலே கேட்ட கேள்விகளுக்கு நடுவிரல் எவ்வளவோ தேவலாம்,எனக்கு தெரிந்த வரையிலே பொது இடங்களிலே இவங்க தடித்த வார்த்தைகளை தவிர வேற எதையும் சத்தமா பேசுறது இல்லை, நான் இங்கே வந்து நல்லா படிச்சதே அடுத்தவனை எப்படி ஆங்கிலத்திலே திட்டலாமுனு தான்.இவங்க சொல்லுறதைப் பார்த்தால் நடுவிரல் எதோ உப்புக்கு சப்பாணியா கையிலே ஒட்டிகிட்டு இருக்கிற மாதிரி தெரியுது.
அலுவலகத்திலே இடைவிடாத அடைமழை பணிகளுக்கு மத்தியிலே கூகிள் ஆண்டவரிடமும் இதை பத்தி கேட்டேன்.அவரு சொன்னாரு 13 ம் நூற்று ஆண்டுல ஆங்கில வெள்ளைக்கார துரை மார்க்கும், பிரெஞ்சு வெள்ளைக்காரக் துரை மார்க்கும் நம்ம ஊரிலே போடுற வாய்க்க வரப்பு தகராறு மாதிரி, இன்னைக்கு நமக்கும் நம்ம பங்காளிகளுக்கும் நடக்கிற எல்லை தகராறு மாதிரி, அவங்களுக்கும் வந்து இருக்கு,இந்த சண்டை கிட்டத்தட்ட நூறு வருஷம் நடந்ததாம்.அதில் துரை மார்கள் ரெண்டு பெரும் மாறி மாறி சண்டை போட்டு ஜனத்தொகையை பாதி அழிச்சாங்க, ஒரு கால கட்டத்திலே பிரெஞ்சு துரைமார்கள், ஆங்கிலேய துரை மார்கள் வில் வீரர்களை பிடிச்சி, அவங்க கட்டை விரலை வெட்டி எடுத்துடுவாங்க.
இப்படி கட்டை விரலை கண்டம் பண்ணினாலும், போரிலே ஜெயிக்கும் போது வெள்ளை கார துரை மார்கள் நாடு விரலை காட்டு வாங்க, நீங்க கட்டை விரலை எடுத்தாலும் நடு விரல் செய்கூலி சேதாரம் இல்லாம நல்லத்தான் இருக்குங்கிற அர்த்தத்திலே சொல்லுவாங்க,இந்த கதையை திரிச்சி, மரிச்சி, உருட்டு,உழண்டு இங்க கொண்டு வந்து விட்டு என்னையும் வெள்ளையம்மாவிடம் நாக்க பிடுங்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்க வச்சி பிட்டாங்க.
கூகிள் ஆண்டவர் என்கிட்டே சொன்னதை சொன்னேன், உண்மையிலே வேற அர்த்தம் இருக்கான்னு பழமை பேசி மணி அண்ணனைத்தான் கேட்கணும், அவரு விரலுக்கு ஒரு பதிவு போடுவாரு.
ஆக, இப்படி தப்பான அர்த்தத்திலே தப்பே பண்ணாத என்னை தப்பு தப்பு ன்னு தப்பிட்டங்க, இப்படி தப்பாவே யோசிக்கிற இவங்க நம்ம ஊரு யோகா, புளி, பருப்பு, வெங்காயம்,இட்லி, வடை,தோசை எல்லாத்துக்கும் காப்பு உரிமை வாங்கி வைத்து இருக்காங்கன்னு சொன்னா நம்பாம இருக்க முடியுமா?
கலவரம் நடக்கும் போது தங்கமணி வேகமா குறிப்பு எடுத்தாங்களே என்ன ஆச்சின்னு யாரும் கேட்க மாட்டீங்கன்னு தெரியும், கேட்டா அதுக்கு ஒரு பதிவை போட்டு மொக்கை போடுவேன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும். அதனாலே நானே சொல்லி விடுகிறேன்.
வெள்ளையம்மா போனே உடனே "ஆமா, என்னை ஒருத்தி வகை தெரியாம, வசை பாடிகிட்டு இருக்கும் போது, நீ என்ன பண்ணினே?"
"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"

57 கருத்துக்கள்:
ஒருவேள இந்த மாதிரி ஒரு பதிவு போடுவீங்கன்னு தெருஞ்சு .... அந்த அம்முனி முன்னாடியே திட்டீருச்சோ........????
WTF
மிஸ்டர் பீன் சீரியல் ஒன்னுல இப்படி தான் ரோட்ல போற எல்லோருக்கும் நடுவிரலை காட்டுவார் பீன்!
நல்ல காமெடி அது!
//"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"
//
ஹாஹா சிரித்தேன்
நல்ல பதிவு தல
ஹாஹா சிரித்தேன்
நல்ல பதிவு தல
//கலவரம் நடக்கும் போது தங்கமணி வேகமா குறிப்பு எடுத்தாங்களே என்ன ஆச்சின்னு யாரும் கேட்க மாட்டீங்கன்னு தெரியும்//
இதெல்லாம் எங்களுக்கு சொல்லாமலே புரிஞ்சிபோச்சி!!! ஆனா அத பத்தி (தங்கமணி திட்டினத) ஒரு பதிவு போட்டா ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்ல.....
படிச்சு முடிச்சு.. நடுவிரலை காட்டுனேன் :)
//கூகிள் ஆண்டவர் என்கிட்டே சொன்னதை சொன்னேன், உண்மையிலே வேற அர்த்தம் இருக்கான்னு பழமை பேசி மணி அண்ணனைத்தான் கேட்கணும், அவரு விரலுக்கு ஒரு பதிவு போடுவாரு.//
சீக்கிரத்துல வர்றேன் இருங்கடி!
அமைதியா இருங்கன்னு நடு விரலை காட்டினேன், திட்டி முடிச்சவ மறுபடியும் ஆரம்பித்துவிட்டாள், மதுரைக்கு வந்த சோதனையா இருக்குன்னு வெள்ளையம்மாவை பார்த்து சிரிச்சி கிட்டு மட்டும் இருந்தேன்.///////////
ஏய்...ஏய்.... மிஸ்டர் இதுக்கு எதுக்கு மதுரைய இழுக்குறே! எங்க ஊரு என்ன பாவம் பண்ணுச்சு!
//
நானும் பக்கத்து கடைக்கு பீர் வாங்கத்தான் போறன்னு நினைச்சி கிட்டு நடையை கட்டினேன்,
//
எப்பவும் பீர் தான் ஞயாபகம் போல.
//
அவங்க நேர என்கிட்டே வந்து "ஹலோ.. வாட் தி ... அதுவரைக்கும் தான் எனக்கு புரிந்தது.
//
ஐயோ பாவம் இப்படி ஒரு பிரச்சனையா ??
//
ஒருவேளை வெள்ளையம்மா சமைத்த சாப்பாட்டை அவளே சாப்பிட்டாளோ என்னவோ அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்து விட்டது.நடுவிரலை காமிச்ச என்னை சகட்டு மேனிக்கு திட்ட ஆரம்பித்தாள்.
//
இதுதான் நசரேயன் பஞ்ச் :))
//
அவ பேசுறது ஒண்ணுமே புரியலைன்னாலும் திட்டுதான்னு மட்டும் அவங்க முக அழகை பார்த்து தெரிந்தது.என்கிட்டே வரும்போது கொய்யப் பழமா இருந்த அவங்க முகம் கோவை பழம் மாதிரி சிவந்து போச்சி
//
ஐயோ பாவம் :-)
//
அமைதியா இருங்கன்னு நடு விரலை காட்டினேன், திட்டி முடிச்சவ மறுபடியும் ஆரம்பித்துவிட்டாள், மதுரைக்கு வந்த சோதனையா இருக்குன்னு வெள்ளையம்மாவை பார்த்து சிரிச்சி கிட்டு மட்டும் இருந்தேன்
//
இது சூபர் ஜோக்!! மதுரை :-)
//
அவ என்ன பேசுறான்னு தெரிஞ்சத்தானே பதில் சொல்ல முடியும்.என்னோட ஓட்டை இங்கிலீஷ்ச வச்சி தடுத்துப்பார்த்தேன், அடை மழை பெய்து வேற வழி இல்லாம காவிரியிலே தண்ணியை திறந்து விட்டால் வருகிற காட்டாற்று வெள்ளம் போல வெள்ளையம்மா மூச்சி விடாம திட்டினாங்க
//
யாரு மூஞ்சியிலே முளிச்சாரோ, நம்ப நெல்லைப் புயல் நல்ல திட்டு வாங்கி இருக்கின்றார்.
ஆனாலும் இது கனவுதானே பரவா இல்லை ;)
//
"நீங்க வணக்கம் சொன்னீங்க, நானும் பதிலுக்கு சொன்னேன், அதுக்காக என்னை ஏன் வாட்டி எடுக்குறீங்க"
//
நீங்க உருளைக்கிழங்கு அதான் உங்களை வாட்டி எடுக்கறாங்க :)
//
"நான் ஊருக்கு புதுசு, நடு விரல்ல நாலு வார்த்தை இருக்குன்னு எனக்கு சத்தியாமா எனக்கு தெரியாது"
//
ஆமா ஆமா எனக்குகூட இந்த விஷயம் தெரியாது :-)
//
நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியலைனாலும் கோபம் கொஞ்சம் குறைஞ்சி போச்சு, கோவைப் பழம் கொய்யப் பழம் ஆகிடுச்சி
//
அப்பா நல்ல வேளை இல்லேன்னா உங்க கதி என்ன ஆகயிருக்கும் !!
//
கூகிள் ஆண்டவர் என்கிட்டே சொன்னதை சொன்னேன், உண்மையிலே வேற அர்த்தம் இருக்கான்னு பழமை பேசி மணி அண்ணனைத்தான் கேட்கணும், அவரு விரலுக்கு ஒரு பதிவு போடுவாரு.
//
காத்துக் கொண்டு இருக்கின்றோம் பழமைபேசி அண்ணா!!
//
வெள்ளையம்மா போனே உடனே "ஆமா, என்னை ஒருத்தி வகை தெரியாம, வசை பாடிகிட்டு இருக்கும் போது, நீ என்ன பண்ணினே?"
"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"
//
ஆஹா தங்கமணிங்களுக்கு நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க :)
//
ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி
அருமையான வார்த்தை நடை தல. விரல் காட்டினா இப்படியா? வெள்ளக்காரியும், நசரேயனும் இந்த தலைப்பில பதிவு எழுத வேண்டியது தான்.
அப்ப எந்த ஊர்ல காட்டலாம்? :))))
Hi guys, who wants to know the meaning can better ask 'Baru Niveditha', he will explain about the same with lot of "bin naveenathuvam" adjectives.
//ஹலோ.. வாட் தி ... //
ஐய் !!! அடுத்த வார்த்தை என்ன சொல்லியிருப்பாங்கன்னு எனக்கு தெரியுமே !!
கல கல பதிவு நசரேயன்.
சரளமான சிரிப்பு.நன்றி,நச்ரேயன்.
//என்கிட்டே வரும்போது கொய்யப் பழமா இருந்த அவங்க முகம் கோவை பழம் மாதிரி சிவந்து போச்சி//
ஆஹா...என்ன ஒரு உவமை...
//"நீங்க வணக்கம் சொன்னீங்க, நானும் பதிலுக்கு சொன்னேன், அதுக்காக என்னை ஏன் வாட்டி எடுக்குறீங்க"//
ஹா...ஹா...இது கலக்கல்...
//ஆக, இப்படி தப்பான அர்த்தத்திலே தப்பே பண்ணாத என்னை தப்பு தப்பு ன்னு தப்பிட்டங்க,//
தப்பினதுல இப்ப சுத்தமாயிட்டீங்களா...?
//"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"//
அப்பவே உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சாச்சு...
ரொம்ப நல்ல பதிவு நசரேயன் மிகவும் ரசித்து படித்து சிரித்தேன்...
//ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"//
:-)))))))))))))))
இந்த விஷயம் பத்தி எழுத ரெண்டு நாள் நீங்க தாமதிச்சு இருந்தாலும் நான் எழுதியிருப்பேன்...
நான் எழுதனும்ன்னு யோசிச்சுட்டு இருந்த நேரத்துல நீங்களே எழுதிட்டீங்க...
:-)
அண்ணி அவங்க எடுத்த நோட்ஸ் எனக்கும் தருவாங்களா?? ;))
அண்னே... இங்கயும் அதே நிலமைதானுங்க!
அம்புட்டு ட்ராபிக்ல பாதை நாகரீகம் (Road manners)தவறி எத்தனை பேரு எத்தனை இங்கிலிபீசு படத்துல நடு விரலக் காட்டுறாங்க!நீங்க நடுவிரலக் காட்டுனதுக்கு அந்தக்காவுக்கு கோபம் வந்துருச்சே:)
ஹா ஹா ஹா ஹா
சிகப்பு விளக்கு எரியும் போது, உங்க அப்பன் வீட்டு ரோடு மாதிரி வந்தே, அதுக்கு தான் உன்னை திட்டினேன், கார் கண்ணாடி மூடி இருந்தா நடு விரலை காட்டி திட்டுவோம்
////
எதுக்காக திட்டினாங்கன்னு படிச்சு தெரிஞ்சுட்டேன். அது சரி பாபா ஸ்டைலில் காட்டினால் அங்கே என்ன சொல்றாங்கன்னு ஒரு தரம் பார்த்து சொல்லுங்க... நாங்க சந்தேகத்தை தீர்த்துகிறோம்.
////
நம்ப நடிகர் சிம்பு எல்லா விரலும் காட்டுறாரே, அப்போ அவர் பொல்லாத போக்கிரியா ?
நளதமயந்தி படத்தில் heroine மாதவனை கூப்பிட்டு அவளுடைய முன்னாள் ஏமாற்று காதலனை நோக்கி எல்லா விரலையும் மடக்கி நாடு விரல் மட்டும் நீட்டி சைகை காண்பிக்க சொல்லும் ஒரு காட்சி வரும். ஆஸ்திரேலியாவிலும் அது வழக்கம் என்று தோன்றுகிறது.
விடுங்கண்ணே.., ஏய் படத்தை ஹாலிவுட்ல எடுத்து விடுவோம்..
எங்கூருல நடுவிரலைக் காட்டினா தண்டனை தான்!!!
ஆமா அதுக்கு என்னா அர்த்தம்
(எல்லாரைப் போலவே நானும் தெரியாதமாதிரியே போயிடுறேன்)
நம்ம ஊரு மாதிரி சிகப்பு விளக்கு இருக்கும் போது சாலையை கடக்கிறது வழக்கமா இருந்தது,
ஆரம்பத்துலே மானத்த! வாங்கிட்டியே
நானும் ஆர்வமா அதையே செய்தேன்
இதென்ன சின்னபிள்ளங்க விளையாட்டு மாதிரி இருக்கு
நானும் பக்கத்து கடைக்கு பீர் வாங்கத்தான் போறன்னு நினைச்சி கிட்டு
நல்லவேளை முத்தம் கொடுக்கத்தான் வந்தாள்ன்னு நினைக்காம இருந்தியே
என்கிட்டே வரும்போது கொய்யப் பழமா இருந்த அவங்க முகம் கோவை பழம் மாதிரி சிவந்து போச்சி
மானங்கெட்ட வசவு வாங்கும்பொது வர்ணனை வேறயா
அமைதியா இருங்கன்னு நடு விரலை காட்டினேன்
இதுக்கு ஒரு வெள்ளை துண்ட காட்டினாலும் சமாதானத்துக்கு வந்த மாதிரி இருக்கும் .அப்படியே 'துண்டு' போட்ட மாதிரி இருக்கும்
மதுரைக்கு வந்த சோதனையா இருக்குன்னு வெள்ளையம்மாவை பார்த்து சிரிச்சி கிட்டு மட்டும் இருந்தேன்
துன்பம் வரும்போது சிரிக்கனும்ன்னு நினச்சி சிரிச்சியா ,இல்லனா ஜொள்ளு விட்டு சிரிச்சியா
காட்டாற்று வெள்ளம் போல வெள்ளையம்மா மூச்சி விடாம திட்டினாங்க
அவ நினைச்சிருப்பா இங்கிலீசு தெரியாம ஒரு பக்கி மாட்டிக்கிட்டான் இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்னு போளந்துகட்டிடா
கார் கண்ணாடி மூடி இருந்தா நடு விரலை காட்டி திட்டுவோம்,இது தெரியாதா !!!"
அப்ப கார் கதவு திறந்து இருந்தா கால காட்டி திட்டுவாங்களோ
நான் சொன்னதை நம்பின மாதிரி தெரியலைனாலும் கோபம் கொஞ்சம் குறைஞ்சி போச்சு
ஆரம்பத்திலே தனியா கூட்டிட்டு போய் டமால்ன்னு கால்ல விழுந்திருந்தா மானம் இவ்ளோ தூரம் பஞ்ச்சர் ஆனதை தடுத்து இருக்கலாம்
"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"
மாப்பிள்ள அப்படியே அதுல ஒரு காப்பிய பேக்ஸ் அனுப்பு .ஏன்னா விளக்குமாத்து அடி வாங்கும்போது தமிழ்ல திட்டினா அடி கொஞ்சம் அதிகமா விழுது
பழமைபேசி said...
சீக்கிரத்துல வர்றேன் இருங்கடி!
இது சம்பந்தமா பழமைபேசி ஆப்பிரிக்க நாட்டு மலை அடிவாரத்துல அகண்ட தோல் பொருள் ஆராச்சிகள் மேற்கொண்டு இருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு வந்ததும் கட்டை விரலை பத்தி ஒரு பள்ளையம் தொடர் இடுவார்
=)).. நடு விரலோட மத்த வரலாறு எல்லாம் நோண்டி ஆராய ஆரம்பிச்சா நாஆஆஆறிப்பூடும்.. சாக்கிரத..
"ம்ம்.. நானும் எவ்வளவு நாள் தான் தமிழ்ல உங்களை திட்டுறது, அதான் அவ திட்டும் போது குறிப்பு எடுத்து வச்சேன்"
//
சூப்பர்
ஒருவேளை வெள்ளையம்மா சமைத்த சாப்பாட்டை அவளே சாப்பிட்டாளோ என்னவோ அவளுக்கு அப்படி ஒரு கோபம் வந்து விட்டது
ஹா ஹா ஹா
நம்ம ஆள் காட்டி விரலால்தானே எச்சரிப்போம்!
Post a Comment