அமெரிக்க மாப்பிள்ளை
பழைய மாதிரியா இருந்தா பேருந்திலே படிகட்டிலே பயணம் செய்ய ஓடுவேன், இப்ப இடம் பிடிக்க ஓடுகிறேன்,வயசு ஆகுது என்பதை சொல்லாம உணர்த்துகிறது.வழக்கம் போல முட்டி மோதி, அடிபட்டு கலவரக்காரனைப் போல இடம் பிடித்தேன்.வழக்கம் போல பேருந்து ௬ட்டத்தை நோட்டம் விட்டேன், துண்டு போடும் படியா யாரவது இருக்காங்களான்னு,ஒரு சில பேரு இருந்தாலும் நான் ரசிக்கிற மாதிரி யாரும் இல்லாத நிலையிலே வழக்கம் போல வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
பேருந்து கிளம்ப ஆரம்பித்ததும்
"அங்கிள்.. எனக்கு கொஞ்சம் வழி விட முடியுமா, நான் ஜன்னல் ஓரத்திலே உட்கார்ந்து கொள்கிறேன்"
பள்ளி மாணவனின் கோரிக்கையை தட்ட முடியாமல் அவனை அமர வைத்தேன்.
அவனுக்கு பின்னால் நின்ற ஒரு பெண்ணின் பக்கம் என் பார்வை மூக்கனாங்கயிறு அவிழ்ந்த காளையை போல போனது,அந்த முகத்தை நொடியை விட வேகமான நேரத்திலே அடையாளம் கண்டு பிடித்தேன், அதற்குள் என்னையும் அவள் கண்டு கொண்டாள்.

அவள் என் முன்னாள் காதலி என்று ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை, காதலுக்கு கண் இல்லை என்பதை நிருபித்த காதல் , கல்லூரியிலே நகைசுவையாக பேசுகிறேன் என் நினைத்து நான் பேசும் மரண மொக்கைகளை ரசிக்க ஆரம்பித்தாள், கால ஓட்டத்திலே என்னையும் ரசிக்க ஆரம்பித்தாள். நான் வெளியே சொல்லி கொள்ளும் அளவுக்கு அழகன் இல்லை, கண்ணாடிக்கு முன்னாள் நின்று கொண்டு நான் அழகன் என்று சொல்வதை கேட்கும் கண்ணாடிக்கு உயிர் இருந்தால் கண்ணத்திலே அடிக்கும் அளவுக்கு அழகு. இந்த உண்மையும் எனக்கு தெரிய வந்தது அவள் என்னை விட்டு போன பிறகு தான்.
அதுவரைக்கு கலவரம் இல்லா காவிரி ஆத்து தண்ணியா ஓடிகிட்டு இருந்த அவளை கலவரம் பண்ணி கிணத்து தண்ணியா மாத்திட்டேன், ஆரம்பம் என்னவே நல்லத்தான் போச்சு, கொஞ்ச நாள்ல அவளிடம் எனக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது, கொஞ்ச நாள்ல அவளிடம் எனக்கு எதிர்ப்பார்ப்புகள் அதிகம் ஆகிவிட்டது, அவள் என்னிடம் மட்டுமே பேச வேண்டும், என்னை பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் என எதிர்பார்த்தேன்.அதற்கான காரணம் இன்னைக்கு வரைக்கும் தெரியலை, இப்ப எல்லாம் என்னை காதலிகிறேன்னு சொல்லிட்டு யாரு ௬ட ஊர் சுத்தினாலும் கவலை படாத பரந்த மனப்பான்மையா இருந்தாலும் காதலை காதால ௬ட கேட்க முடியலை. காதலி கை விட்டு போனதுக்கு அப்புறம் தான் காதலின் மகிமையும், மகத்துவமும் தெரிய வந்தது.
அன்றைய சம்பவத்திற்கு அப்புறம் காலசுழற்சியிலே கரைகாண விழுந்து விட்ட நான், நிறைய பேருக்கு துண்டு போட்டு பார்த்தேன்,நான் போட்ட துண்டுகள் எல்லாம் பந்து போல திரும்பி வந்தது, அந்த முயற்சியிலே மூன்று முறை விழுப்புண்களும், உட்காய குத்துகள் வாங்கி இருக்கிறேன்.
ஒரு முறை காதல் அனுபவம் இருப்பதால் எப்படியாவது கையிலே, காலிலே விழுந்து ஒன்னையாவது தேத்தல்லாம் என்று நம்பிக்கையில் புறப்பட்ட எனக்கு பொக்கை வாயும், பல் செட்டும் நண்பர்கள் ஆனார்கள்.இன்றைக்கு அவளைப் பார்க்கும் போது எதோ நான் புதிதாய் பிறந்து விட்டதாய் ஒரு எண்ணம், அன்றைக்கு என்னவோ எலும்புக்கு போர்வையாக தோல் போர்த்திய பெண்ணாக எனக்கு தெரிந்த அவள், இன்றைக்கு ஆயுள் முழுவதும் ரசித்தாலும் ரசிப்புக்கு தன்னிறைவு அடைய முடியாத நிலையிலே மனம் இருக்கும்,இதிலருந்தே தெரிந்து கொள்ளலாம் நான் எப்படி காஞ்சி பொய்ட்டேன்னு.
நான் கொசு வத்தி போடுற அவசரத்திலே அவள் பக்கத்திலே நின்ற பள்ளி குழந்தையை கவனிக்க தவறி விட்டேன். எனக்கு தான் யாரும் பெண்ணு கொடுக்கலை, அவ இருக்கிற அழகுக்கு மாப்பிள்ளை வரிசையிலே காத்து நின்னு கல்யாணம் முடித்து இருப்பாங்க என்பதை உணர்ந்தேன்.என் சந்தேகத்தை உறுதி செய்ய
"உன் பொண்ணு பெயரு என்ன ?"
"இவ என் பொண்ணு இல்லை,எங்க அக்கா மகள், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை."
அந்த கடைசி வார்த்தையை கேட்டதும் புவி ஈர்ப்பு விசையை தாண்டி தமிழ் பட கதாநாயகன் மாதிரி காத்திலே மிதந்தேன்.
"ஆமா இதுதான் உங்க பையனா?"
"இல்ல, எனக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை."
ரெண்டு பேருக்கும் ஒரே ஆச்சரியம்,ஒரு சின்ன மவுன இடைவேளைக்கு பிறகு துண்டு போட இன்னும் இடம் காலியாக இருப்பதை தெரிந்து
"நான் நடந்த சம்பவத்தை நினைத்து, நான் வேதனை படாத நாளே இல்லை"
"நான் அதைஎல்லாம் மறந்து பல வருடம் ஆச்சி, அது விவரம் கெட்ட வயசு"
"நம்மோட பழைய உறவுகளை புதுபித்தால் என்ன?"
ம்ம்ம். என்ன?
"பழைய படி மீண்டும்.."
"அதற்கான சாத்திய ௬றுகள் ரெம்ப குறைவு, நான் உன்னை மறந்து பல வருஷம் ஆகி விட்டது."
"வேற யாரையும்..?"
"இல்லவே.. இல்லை"
"கல்லூரியிலே எதிர் காலத்தை பத்தி யோசிக்காததாலே, காதலே எதிர் காலமா தெரிஞ்சது, இப்ப எதிர் காலத்தை பத்தி யோசிக்கிறதாலே காதல் கண்ணுக்கே தெரிவதில்லை,காதல் கத்தரிக்கா மாதிரி செடியிலே இருக்கிற வரைக்கும் தான் வளரும்."
அருகிலிருந்த பையன்
"ஆண்டி கத்தரிக்கா கதை நல்லா இருக்கு"
"நீ இன்னும் பழைய சம்பவத்தை மறக்கலை"
"அந்த சம்பவத்தை என் மனசுலே இருந்து அழிச்சி பல வருடம் ஆச்சி "
"நீயும் வழக்கம் போல அமெரிக்கா மாபிள்ளையை கல்யாணம் பண்ண போறியா?"
"ம்ம்ம்.."
இனிமேல துண்டு போட வழி இல்லைன்னு தெரிஞ்ச உடனே வாழ்த்து சொல்ல மனசு வரமா வயத்து எரிச்சலிலே
"இப்படி நல்லா இருக்கிருகிற பெண்களை எல்லாம் அமெரிக்க மாப்பிள்ளை தள்ளிட்டு போய்டா, உள்ளுர்ல இருக்கிற நான் பொண்ணுக்கு எங்க போக?
அவங்களை சொல்லி குத்தம் இல்லை, நீங்களும் அமெரிக்க மாப்பிள்ளையா இருந்தாதான் கழுத்து நீட்டுவேன்னு ஒத்தை காலில் நிக்குறீங்க.நான் வயறு எரிஞ்சு சொல்லுறேன், இப்ப பொட்டிய கட்டிக்கிட்டு போறவங்க எல்லாம், கண்டிப்பா திரும்பி வருவாங்க, அங்கே வேலை இல்லாம,நீ இன்னொருத்தனை கல்யாணம் முடிக்கும் போது வாழ்த்தி வழி அனுப்ப நான் ஒன்னும் கதாநாயகன் இல்லை, சாதரண மனுஷன் எனக்கு அடிச்சா வலிக்கும், இப்பவும் வலிக்குது,இவ்வளவு நாளும் உன்னை ஒரு தடவையாவது மறுபடி பார்க்க மாட்டோமான்னு நினைக்காத நாள் இல்லை,இன்னையோட நானும் உன் நினைப்பை அழிச்சிட்டு நானும் என் பிழைப்பை பார்க்க போகிறேன்."
பையன் "விடுங்க அங்கிள் பல் இருக்கவன் பக்கடா தின்பான்"
இப்படி பேசிட்டு புயலாய் ஓடும் பேருந்தை விட்டு இறங்கி போய் விட்டேன்.
நான் போன பின் என்னைபற்றி பேசியவைகள் எனக்கு தெரியாமலே போய் விட்டது இன்றளவும்.
"ஏன் சித்தி பொய் சொன்ன?"
"உண்மைதான் நாளைக்கு அமெரிக்க மாப்பிள்ளை வீட்டுக்கு வாரங்க"
என்று பொய் சொன்னாலும், நடந்த உண்மைகளை மறக்க முடியலை, ஆம்.. அவனுக்கு எப்படி தெரியும், என் ரெண்டாவது காதலின் தோல்வியும், அதன் விளைவால் நான் தற்கொலைக்கு முயன்றதும், இப்படி வாழ தகுதி இல்லாத என்னை இன்று வரை காதலிக்கும் அந்த நல்ல மனிதனை ஏமாற்ற மனம் இல்லாமல் அமெரிக்க மாப்பிளையை கனவில் திருமணம் செய்து கொள்ள போகிறேன்.
பேருந்திலே இவ்வளவு நடக்குது, சக பயணிகள் என்ன செய்தார்கள் என்று யாரவது நினைத்தால் அதுக்கு கதை ஆசிரியர் பொறுப்பு அல்ல

24 கருத்துக்கள்:
//இப்ப பொட்டிய கட்டிக்கிட்டு போறவங்க எல்லாம், கண்டிப்பா திரும்பி வருவாங்க//
நல்லா இருங்கய்யா..
//
ILA said...
//இப்ப பொட்டிய கட்டிக்கிட்டு போறவங்க எல்லாம், கண்டிப்பா திரும்பி வருவாங்க//
நல்லா இருங்கய்யா..
//
ரிப்பீட்டேய் :)
அட போங்கப்பா.. கதையிலயாவது காதலர்களை சேத்துவைப்பீங்கனு பாத்தா..இப்டியா பண்ணுவீங்க :)
ஏன்யா. நீ கொடுத்த சாபம்தான் எல்லோரையும் போட்டு வாங்குதா இப்ப... அவ்வ்வ்...
”பல் இருக்கவன் பக்கடா தின்பான்" - இந்தப் பொன்மொழி மேல் உங்களுக்கு என்ன இவ்வளவு பற்று? இது இல்லாம ஒரு கதை கூட எழுத மாட்டேங்கறீங்களே...நீங்களே கண்டு பிடிச்சதா..கத்தரிக்கா கதை மாதிரி! :-)
//ண்ணாடிக்கு முன்னாள் நின்று கொண்டு நான் அழகன் என்று சொல்வதை கேட்கும் கண்ணாடிக்கு உயிர் இருந்தால் கண்ணத்திலே அடிக்கும் அளவுக்கு அழகு. //
எப்படி இப்படியெல்லாம் எழுத முடியுது...மிகவும் அருமை...
//பேருந்திலே இவ்வளவு நடக்குது, சக பயணிகள் என்ன செய்தார்கள் என்று யாரவது நினைத்தால் அதுக்கு கதை ஆசிரியர் பொறுப்பு அல்ல//
அப்ப வேறு யாருதான் பொறுப்பு...?...பேருந்தின் டிரைவரா...? இல்ல கண்ட்ரக்டரா...?
ரொம்ப நாளைக்கு பிறகு எழுதியிருக்கீங்க...
படிச்சுட்டு வரேன்...
கலக்கலா இருக்கு...
அவங்களை சேத்து வச்சு சாதாரண தமிழ் படம் மாதிரி முடிக்காம பிரிச்சு வச்சு முடிச்சாச்சு...
இப்ப சந்தோஷமா???
:-)
இருக்கையில் வந்து உட்கார்ந்ததும் முதல் பின்னூட்டம் உங்களுக்குத்தான்.எல்லோரும் சொல்லி வச்ச மாதிரி காணாமப் போறீங்க.சொல்லி வச்சமாதிரி திரும்பவும் ஒண்ணா திரும்பறீங்க!பழமை மட்டும்தான் விடுவனா பாருன்னு தொடர்கிறார்.
முதல் பாதி வரை கதை மாதிரி உணர்வு வரல.பேச ஆரம்பிச்சீங்களோ இல்லையோ கதைக்குள்ள பூந்திட்டீங்க:)
’காதலாவது, கத்திரிக்காயாவது’ க்குக் காரணம் இந்த கத்திரிக்கா கதைதானா?
ரொம்ப நல்லா இருக்கு தளபதி
//ILA said...
//இப்ப பொட்டிய கட்டிக்கிட்டு போறவங்க எல்லாம், கண்டிப்பா திரும்பி வருவாங்க//
நல்லா இருங்கய்யா..
//
ஏன் இப்படி இளா வயித்தெரிச்சல கொட்டிக்கறீங்க :)
இப்ப அமெரிக்க மாப்பிள்ளையா ஆகிருக்கீங்க...அப்பிடியே பிக்கப் பண்ணி வில்லன்,ஹீரோ...இன்னும் பிக்கப்பண்ணி சி.எம்னு போய்க்கிட்டே இருங்க
:))
செம்ம பீலிங்ஸா போச்சுங்க...
மறுபடியும் யு.எஸ் ஆ ?? இல்ல இன்னும் இந்தியாவிலா ??
பார்த்து பல வருசம் ஆன மாதிரி இருக்குங்க..
நல்லா இருக்கு கதை.. :)) ஆனா, சேத்து வெச்சிருக்கலாம்.. :)))
///ச்சின்னப் பையன் said...
ஏன்யா. நீ கொடுத்த சாபம்தான் எல்லோரையும் போட்டு வாங்குதா இப்ப... அவ்வ்வ்...///
ஹ் ஹா ஹா.
இப்போ போயிட்டு அப்புறமா வரேன்..
தல நல்ல இருக்கு கதை..
//
"கல்லூரியிலே எதிர் காலத்தை பத்தி யோசிக்காததாலே, காதலே எதிர் காலமா தெரிஞ்சது, இப்ப எதிர் காலத்தை பத்தி யோசிக்கிறதாலே காதல் கண்ணுக்கே தெரிவதில்லை,காதல் கத்தரிக்கா மாதிரி செடியிலே இருக்கிற வரைக்கும் தான் வளரும்."
//
ரொம்ப நல்லா இருக்குங்க நசரேயன். பாட்டி சொல்லற மாதிரி கதை சொல்லி இருக்கீங்க.
நீங்க இப்போ இப்படி மாறிட்டீங்களா?
ஒரே சோகமா இருக்கு :))
//
அருகிலிருந்த பையன்
"ஆண்டி கத்தரிக்கா கதை நல்லா இருக்கு"
//
மண்டை மேலே தட்டுங்க. வயத்தெரிச்சலை கொட்டிக்கறான் இல்லே :))
//
என்று பொய் சொன்னாலும், நடந்த உண்மைகளை மறக்க முடியலை, ஆம்.. அவனுக்கு எப்படி தெரியும், என் ரெண்டாவது காதலின் தோல்வியும், அதன் விளைவால் நான் தற்கொலைக்கு முயன்றதும், இப்படி வாழ தகுதி இல்லாத என்னை இன்று வரை காதலிக்கும் அந்த நல்ல மனிதனை ஏமாற்ற மனம் இல்லாமல் அமெரிக்க மாப்பிளையை கனவில் திருமணம் செய்து கொள்ள போகிறேன்.
//
சூப்பர் ட்விஸ்ட். பாவமா இருந்திச்சு அவங்களை நினைக்கும் போது!
ரொம்ப நாள் கழிச்சி எழுதி இருக்கீங்க, ஒரு மார்க்கமாதான் இருக்கு.
கத்தரிக்காய், பல்லு, பக்கோடா அது சரி.
கதை நல்லா வந்திருக்கு.
//இப்ப அமெரிக்க மாப்பிள்ளையா ஆகிருக்கீங்க...அப்பிடியே பிக்கப் பண்ணி வில்லன்,ஹீரோ...இன்னும் பிக்கப்பண்ணி சி.எம்னு போய்க்கிட்டே இருங்க
:))//
Gethu comment!
Repeat-ey!
AppadiyE namma kadhaiya oru pArvai pArthudungaNNE!
http://tinyurl.com/mandhiranimidam
Post a Comment