Friday, May 22, 2009

தாவணி தேவதை

அன்றைக்கு வகுப்பின் கடைசி நாள், இதை விட்டா இனிமேல ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு தெரியும்.இன்றைக்கு எப்படியாவது அவளிடம் ஆட்டோ கிராப் வாங்கணும் என்ற முடிவோடு கிளம்பினேன்.அவள் யார் என்பதை ஒரு மொக்கை கொசு வத்திக்கு அப்புறம் உங்களுக்கே புரியும்.

நான் எட்டுலே இருந்து பன்னிரண்டு வரை ஒரே பள்ளி௬டத்திலே படித்தாலும் 11 படிக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன்,இது வரைக்கும் டவுசர் போட்ட நான் பேன்ட் சட்டை போட ஆரம்பித்த நேரம்.இது நாள் வரைக்கும் பாவடை சட்டையிலே பள்ளிக்கு வந்த சக வகுப்பு தோழிகள், தாவாணியிலே வந்தார்கள், என் கண்ணுக்கு அவங்க தேவைதைகளாவே தெரிந்தனர்.அவங்க கண்ணுக்கு நான் எப்படி தெரிந்து இருப்பேன் என நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

அந்த தேவதைகளிலே என்னை கவர்ந்தது மாவட்டத்திலே ரெண்டாவது வந்தவள் பத்தாம் வகுப்பிலே, இப்படி நல்லா படிக்கிற,அழகான பெண்ணுக்கு துண்டு போடுவது எவ்வளவு கஷ்டமுன்னு போட்டவங்களுக்கு தெரியும், அவளை முதலில் பார்த்ததும் மனசுல பட்டாம் பூச்சி பறந்தது, சினிமா படம் மாதிரி தனியா அவளை நினைத்து ஒரு பாட்டு பாடலாமுன்னு கிளம்பும் முன்னே எனக்கு ஒரு அடி விழுந்தது.

"அவ என் ஆளு, பார்த்த அடிப்பேன்" என் சகதோழன் ௬றினான்.

கலரிலே நான் கருவா குஞ்சு அவள் எலுமிச்சை நிறம்,இப்படி எலுமிச்சை நிற அழகிகளை கொண்டதாலே என்னவோ எங்க ஊருக்கு லெமன் சிட்டின்னு பேரு வந்தது.மாசக் கணக்கா துவைக்காம போட்டாலும், நண்பர்கள் நாற்றத்திலே முகம் சுழித்தாலும், அப்படி ஒரு ஆனந்தம், போடுவதற்கு வேற பேன்ட் இல்லன்னா வேற என்ன செய்ய முடியும்.

பார்த்த நாளிலே ஒருதலையா துண்டு போட்டு மனசிலே உட்கார்ந்தவள் ஒரு நெடுந்தொடர் மாதிரி ரெண்டு வருஷம் அப்படியே இருந்தாள், என் வாழ் நாளிலே அதிக நாள் ஒரு தலையா, இந்த தறுதலை துண்டு போட்டு வைத்த பெருமை குட்டைச்சியை சேரும்.இதுக்கெல்லாம் ஆஸ்கார் விருது கொடுப்பாங்களானு தெரியலை. நான் எதோ துண்டு போட்ட உரிமையிலே அவ பட்ட பெயரை சொல்லி விட்டேன், நீங்களும் அப்படி ௬ப்பிட்டீங்கன்னா, என்னை தேடுகிற ஆட்டோ இனிமேல உங்களையும் தேடும்.இப்படிப்பட்ட ஒரு தெய்விக காதலை தான் வெளியே சொல்ல முடியலை, குறைந்த பட்சம் நினைவு சின்னமாக ஒரு ஆட்டோ கிராப் வாங்க வேண்டும் என நினைத்தேன். இது நாள் வரைக்கும் ஒரு தலையா துண்டு போட்டு இருந்தாலும், அவளிடம் ஒரு வார்த்தை ௬ட பேசியது இல்லை.அன்றைக்கு தைரியத்தை வர வளைத்து அவள் முன் சென்று புத்தகத்தை நீட்டினேன்.

முதல்ல என்னைப் பார்த்து வேடன்கிட்ட அகப்பட்ட மான் மாதிரி விழித்தாலும், அப்புறமா சுதரிச்சி கொண்டு அட..சீ இந்த கருவப்பயலுக்கா இப்படி ஒரு பயம் என் நினைத்து என்ன வேண்டும் என்று சைகையிலே கேட்டாள்.நானும் எதுவும் பேசாமல் நேட்டோடை நீட்டினேன்.அதை புன்னகையுடன் வாங்கி அதிலே எழுத்தினாள்.அவள்எழுதி கொடுத்தது தான் தாமதம், நன்றி ௬ட சொல்லாம ஒரே ஓட்டமா வந்தேன், சினிமாவா இருந்த இந்த இடத்திலே ஒரு காதல் பாட்டு இருந்து இருக்கும். நிஜத்திலே காதலனும், காதலியும் தெருவிலே நின்னு கட்டி பிடிச்சி பாட்டு பாட முடியுமா,பாட்டு முடியும் முன்னே பாடையே கட்டிடுவாங்க பாடின ரெண்டு பேருக்கும்.

அவள் எழுதி கொடுத்த பக்கத்தை எடுத்து பார்த்தேன், மறுபடி பார்த்தேன், என்ன எழிதி இருக்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை, இத்தனைக்கும் அவ தமிழ்ல தான் எழுதி இருக்கிறாள், எனக்கு தான் அறிவு குறைவு என்று நல்லா படிக்கிற நண்பர்களையும் கேட்டு பார்த்தேன், அவர்களுக்கும் தெரியவில்லை, அவளின் எழுத்துக்களை ௬ட்டி,கழித்து, வகுத்து, பெருக்கி பார்த்தேன் என் மர மண்டைக்கு ஒன்னும் புரியலை. அர்த்தம் கண்டு பிடிக்க இல்லாத மூளை யை கசக்கி பார்த்தேன், அடுத்த ரெண்டு மாசத்திலே செலவே இல்லாமல் மொட்டை அடித்தது தான் மிச்சம்,அதற்குள் தேர்வு முடிவுகளும் வந்து விட்டது.எல்லோரும் எதிர் பார்த்தது போல அவள் மாவட்டத்திலே முதல் மதிப்பெண் வாங்கி இருந்தாள்.

வழக்கம் போல அந்த வருடமும் தேர்வில் ஆண்களை விட பெண்களே அதிக மதிப்(பெண்)களும், தேர்ச்சி சதவிதமும் அதிகம்.அதிலே பெண் இருக்கிறதாலே, அவங்களுக்கு மதிப்பெண் சொந்தமான்னு தெரியலை.அவங்க நல்ல புரிஞ்ச்சு படிப்பாங்களா இல்லை புத்தகத்தை வரி விடாம படிச்சி எழுதி நல்ல மார்க் வாங்க்குவாங்களானும் தெரியலை.இப்படி ஒவ்வொரு தேர்வு சமயத்திலும் சுனாமி மாதிரி வார பெண்கள், கால ஓட்டத்திலே கடற்கரை மணல் போல இருப்பதே தெரிவதில்லை.பெண் தெய்வங்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமியிலே படிப்பிலே எப்போதும் முன்னிலையிலே இருக்கும் அவங்களுக்கு ஒரு 33 சதவித இட ஒதுக்கீடு வாங்க முடியலை.

எனக்கு விபரம் தெரிஞ்ச நாளிலே இருந்து ஒவ்வொரு வருசமும் தேர்தல் முடிவு வந்த உடனே முத மார்க் வாங்கின எல்லோரும் நான் கலெக்டர், டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்வேன்னு தினத்தந்தி, தினமலர்ல பேட்டி எல்லாம் படிக்கிறேன், ஆனா இதுநாள் வரைக்கும் யாரவது ஒருத்தர், நான் முன்பு சொன்னது போல நான் ஏழை களுக்கு சேவை செய்யுறன்னு திரும்பி வந்ததே கிடையாது. நான் நல்லா படிக்கததாலே என்னவோ இந்த கேள்வி அடிக்கடி எனக்கு வரும்.சரி..சரி ஊர் கதையை விட்டு விட்டு என் கதைக்கு வாரேன்.

நான் எதோ தப்பி தவறி தேறிவிட்டேன், மருத்துவ, தொழில் நுட்ப கல்லூரிக்கு செல்ல நுழைவு தேர்வுக்கு உள்ளுரிலே படிக்க சென்றேன்.அவள் அதிக மார்க் வாங்கி இருந்ததால் நெல்லைக்கு சென்று படிக்க சென்றாள்.இந்த இடைப்பட்ட காலத்திலேயே அவளுக்கே தெரியாமல் அவளை ரெண்டு, மூனு தடவை பார்த்து இருப்பேன்.

நுழைவு தேர்வு எழுதி எடுத்த மதிபெண்களுக்கு ஒரு பொறியியல் கல்லூரியிலே இடம் கிடைத்தது எனக்கு. எந்த ஒரு வலிக்கும் காலம் பதில் சொல்லும் என்பது எனக்கு சில காலம் கழித்து தெரிய வந்தது, அவள் எழுத்துக்கு அர்த்தம் தேடி அலைந்த நான், கல்லூரி சென்று புது இடம், புது நண்பர்களை சந்தித்த சூழ்நிலையிலே அவளின் நினைவுகள் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமா அகல ஆரம்பித்தது.எப்போதாவது அவளோட நினவு வந்தாலும் என்னை அதிகம் பாதிப்பது இல்லை.


காலம் கடந்தது, படித்து முடித்து, வேலைக்கு அலைந்து, ஒரு வேலையை பிடித்து ஒரு நிலைக்கு வர பல வருடங்கள் ஆனது,ரெம்ப நாள் கழித்து நான் ஊருக்கு சென்றேன், நான் விசாரித்த வரையிலே அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூறினார்கள்.அவள் ஒன்றும் மருத்துவராகவோ, பொறியாளரோ இல்லை, இளநிலை பட்ட படிப்பு முடித்து இருக்கிறாள் என்பது தெரியவந்தது.அவள் படித்த வேகத்திற்கு அவளின் பட்ட படிப்பு எனக்கு ஆச்சரியமே.

ஒரு நாள் சாலை ஓரம் இருக்கும் கடையிலே நான் டீ குடித்து கொண்டு இருந்தேன்,பேருந்திலே இருந்து ஒரு குண்டு பெண்மணியும், இரு குழந்தைகளும், இன்னொருவர் இறங்கினார்கள்,அவளின் முகத்தை பார்த்த ஞாபகம் என்று சற்று உற்று கவனித்தால், அவளே தான் அவள்.என்னால் நம்ப முடியாத அளவுக்கு மாற்றம், நான் என் மனதிலே அவள் இப்படித்தான் இருப்பாள் கற்பனைக்கு எதிர் மாறாக இருந்தாள்.முன்பெல்லாம் அவளை பார்க்கும் போது அவளை என்னைப் பார்க்க வைக்க வேண்டுமே என்று ஏதாவது செய்வேன், அன்றைக்கு அவளிடம் இருந்து மறைய கடைக்குள் ஓடினேன். வந்த வேலை முடிந்து திரும்பி சென்னைக்கு வந்து விட்டேன், நீண்ட நாளுக்கு பிறகு மனம் அவளை சுற்றியது, மறுபடியும் எனக்கு ஆட்டோ கிராப் எழிதி கொடுத்த புத்தகத்தை பார்த்தேன், அதை ஒரு நோட்டில் எழுதினேன், "பிழைகளை சரி செய்க".

ஒரு வேளை நான் பதிவுகளில் விடும் எழுத்து பிழையா இல்லை தீராத பிழையா என்பது ஒரு புதிரே.இந்த உலகிலே புரிந்து கொள்ள முடியாத பிழைகள் கடல் போல இருக்கும் போது இதை மட்டும் என்னால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.


55 கருத்துக்கள்:

நட்புடன் ஜமால் said...

\\கலரிலே நான் கருவா குஞ்சு அவள் எலுமிச்சை நிறம்\\

நல்லாக்கீது ...

குடுகுடுப்பை said...

நல்லா இருக்குதுண்ணேன்.

வால்பையன் said...

கதை மாதிரி தெரியலையே!

உண்மையிலேயே நடந்த மாதிரியில்ல இருக்கு!

தினேஷ் said...

//மாசக் கணக்கா துவைக்காம போட்டாலும், நண்பர்கள் நாற்றத்திலே முகம் சுழித்தாலும், அப்படி ஒரு ஆனந்தம், போடுவதற்கு வேற பேன்ட் இல்லன்னா வேற என்ன செய்ய முடியும்.//

வேற என்ன செய்ய முடியும் ? , இப்ப இப்படி ஒரு பதிவ போட முடியும்..

ஆதவா said...

கொஞ்சம் பெரிசா இருக்கிறதால, காலையில வந்து படிக்கிறேங்க.

நட்புடன் ஜமால் said...

காமெடி கொஞ்சம் கம்மியா இருக்கோ இந்த முறை ...

vasu balaji said...

நல்லயிருக்கு.

புல்லட் said...

உண்மைக்கதையா? நல்லாருக்கு... எனக்கும் உப்பிடி அனுபவங்கள் இருக்கு... ஆறாம் வாப்பு படிக்கும்போதே தொடங்கிட்டுது.. ஹிஹி!

சந்தனமுல்லை said...

நல்ல முடிவு :-))

அ.மு.செய்யது said...

நல்லா சுத்தினீங்க கொசுவத்தி..

ஆமா லெமன் சிட்டி எந்த ஊர சொல்லுவாங்க ??

நசரேயன் said...

நன்றி T.V.Radhakrishnan ஐயா

நன்றி நட்புடன் ஜமால் --> அது என் கலர் இல்லை, நான் முரட்டு சிகப்பு :):). ஆமா கொஞ்சம் காமெடி கம்மி, அதான் சிறுகதை போட்டிக்கு அனுப்பிவிட்டேன்.

நன்றி வால்பையன் --> சொந்தம் பாதி, புனைவு பாதி

நன்றி சூரியன் --> உண்மைதான்

நன்றி ஆதவா --> கண்டிப்பா, கடை திறந்தே இருக்கும்

நன்றி பாலா
நன்றி புல்லட் பாண்டி

நன்றி சந்தனமுல்லை

நன்றி அ.மு.செய்யது --> அது எங்க ஊரு தான், புளியங்குடி

Prabhu said...

குமால்டியா இருக்குங்க உங்க கதை.

தேவன் மாயம் said...

ஒரு நாள் சாலை ஓரம் இருக்கும் கடையிலே நான் டீ குடித்து கொண்டு இருந்தேன்,பேருந்திலே இருந்து ஒரு குண்டு பெண்மணியும், இரு குழந்தைகளும், இன்னொருவர் இறங்கினார்கள்,அவளின் முகத்தை பார்த்த ஞாபகம் என்று சற்று உற்று கவனித்தால், அவளே தான் அவள்.என்னால் நம்ப முடியாத அளவுக்கு மாற்றம், நான் என் மனதிலே அவள் இப்படித்தான் இருப்பாள் கற்பனைக்கு எதிர் மாறாக இருந்தாள்.முன்பெல்லாம் அவளை பார்க்கும் போது அவளை என்னைப் பார்க்க வைக்க வேண்டுமே என்று ஏதாவது செய்வேன், அன்றைக்கு அவளிடம் இருந்து மறைய கடைக்குள் ஓடினேன். வந்த வேலை முடிந்து திரும்பி சென்னைக்கு வந்து விட்டேன், நீண்ட நாளுக்கு பிறகு மனம் அவளை சுற்றியது,///

பல அழகுப்பெண்களின் வாழ்க்கை இப்படி ஆகிவிடிவது வேதனை!!

புதியவன் said...

//நான் எட்டிலே இருந்து பன்னிரண்டு வரை ஒரே லே படித்தாலும்//

ஒரே பள்ளி௬டத்தில படிக்கிறது தப்பில்ல ஒரே வகுப்புல படிக்கிறது தாங்க தப்பு...

புதியவன் said...

//இது நாள் வரைக்கும் பாவடை சட்டையிலே பள்ளிக்கு வந்த சக வகுப்பு தோழிகள், தாவாணியிலே வந்தார்கள், என் கண்ணுக்கு அவங்க தேவைதைகளாவே தெரிந்தனர்.//

தாவணிகள் தேவதைச் சிறகுகளா தெரிஞ்சிருக்குமே...

புதியவன் said...

//இதுக்கெல்லாம் ஆஸ்கார் விருது கொடுப்பாங்களானு தெரியலை.//

எதுக்கும் முயற்சி செஞ்சி பாருங்க கிடைத்தாலும் கிடைக்கலாம்...

புதியவன் said...

//முன்பெல்லாம் அவளை பார்க்கும் போது அவளை என்னைப் பார்க்க வைக்க வேண்டுமே என்று ஏதாவது செய்வேன், அன்றைக்கு அவளிடம் இருந்து மறைய கடைக்குள் ஓடினேன்.//

ஏன் அப்படி...?

கார்த்திகைப் பாண்டியன் said...

ஜிவ்வுன்னு ஒரு காதல் கதை.. எல்லாப் பயளுக்குமிப்படி ஒரு கதை உண்டு நண்பா

ஆ.ஞானசேகரன் said...

//இதுநாள் வரைக்கும் யாரவது ஒருத்தர், நான் முன்பு சொன்னது போல நான் ஏழை களுக்கு சேவை செய்யுறன்னு திரும்பி வந்ததே கிடையாது. நான் நல்லா படிக்கததாலே என்னவோ இந்த கேள்வி அடிக்கடி எனக்கு வரும்//

நானும் நினைத்து பார்த்தது உண்டு. நல்ல காதல் பதிவு நண்பா பாராட்டுகள்..

ஆதவா said...



கவிப்பேரரசு. வைரமுத்துவின் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வந்தது... அந்த கவிதையில் காதலியின் கணவன், நீங்களே இவளைக் கல்யாணம் செய்திருக்கலாம் என்று முடித்திருப்பார்... அப்படியே நினைத்தேன்..

ம்ம்..... பெருமூச்சு விட்டுக்கோங்க....

Joe said...

//
அன்றைக்கு அவளிடம் இருந்து மறைய கடைக்குள் ஓடினேன்.
//
ஏன், அவளுக்கு டீயும், குழந்தைகளுக்கு பிஸ்கட்டும் வாங்கிக் கொடுக்க காசில்லையா? ;-)

அப்துல்மாலிக் said...

சம்பவம் சொல்லப்பட்ட விதம் அருமை, பள்ளிக்கால வாழ்க்கையில் ஆரம்பித்து, காதல் வளர்த்து, அதை சொல்லமுடியாமல் தவித்து, சில காலம் களித்து பார்க்கையில் நொந்து நூடுல்ஸாகி இருந்தனைப்பார்த்து... மற்றுமொறு ஆட்டோகிராஃப் கதைதான் ஞாபகம் வந்தது...

நிறைய பெண்களின் வாழ்க்கை இப்படிதான் இருந்திருக்கிறது, இருக்கிறது...

அத்திரி said...

//எலுமிச்சை நிற அழகிகளை கொண்டதாலே என்னவோ எங்க ஊருக்கு லெமன் சிட்டின்னு பேரு வந்தது.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அத்திரி said...

// என்னை தேடுகிற ஆட்டோ இனிமேல உங்களையும் தேடும்.//

இந்த வாட்டி ஊருக்கு வந்திருக்கும்போது தேடினாங்களமே.....

குடந்தை அன்புமணி said...

//அவள் ஒன்றும் மருத்துவராகவோ, பொறியாளரோ இல்லை, இளநிலை பட்ட படிப்பு முடித்து இருக்கிறாள் என்பது தெரியவந்தது.அவள் படித்த வேகத்திற்கு அவளின் பட்ட படிப்பு எனக்கு ஆச்சரியமே.//

நன்றாக படிக்கும் பெண்களை வீட்டில் படிக்க வி்ட்டால்தானே! அவர்களுக்கு சீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைத்துவிடுவார்கள். (படிக்க வைக்க வசதி இருக்காது என்பதும் உண்மை)

குடந்தை அன்புமணி said...

//ஒரு நாள் சாலை ஓரம் இருக்கும் கடையிலே நான் டீ குடித்து கொண்டு இருந்தேன்,பேருந்திலே இருந்து ஒரு குண்டு பெண்மணியும், இரு குழந்தைகளும், இன்னொருவர் இறங்கினார்கள்,அவளின் முகத்தை பார்த்த ஞாபகம் என்று சற்று உற்று கவனித்தால், அவளே தான் அவள்.என்னால் நம்ப முடியாத அளவுக்கு மாற்றம், நான் என் மனதிலே அவள் இப்படித்தான் இருப்பாள் கற்பனைக்கு எதிர் மாறாக இருந்தாள்//

திருமணம் ஆனதும் பெண்கள் தங்கள் அழகைப்பற்றி கவலைப்படுவதுமில்லை.

ஷண்முகப்ரியன் said...

’ஆட்டோகிராஃப்’ படத்தின் முதல் பகுதியை நினைவூட்டியது உங்கள் கதை.
ஆனால்’பிழைகளை சரி செய்க’ நல்ல ஆண்டி கிளைமாக்ஸ்.
யதார்த்தமான ரொமான்ஸுக்கு எப்போதும் இருக்கும் மரியாதை இந்தக் கதைக்கும் உண்டு,நச்ரேயன்.

ப்ரியமுடன் வசந்த் said...

//எனக்கு விபரம் தெரிஞ்ச நாளிலே இருந்து ஒவ்வொரு வருசமும் தேர்தல் முடிவு வந்த உடனே முத மார்க் வாங்கின எல்லோரும் நான் கலெக்டர், டாக்டர் ஆகி ஏழைகளுக்கு சேவை செய்வேன்னு தினத்தந்தி, தினமலர்ல பேட்டி எல்லாம் படிக்கிறேன், ஆனா இதுநாள் வரைக்கும் யாரவது ஒருத்தர், நான் முன்பு சொன்னது போல நான் ஏழை களுக்கு சேவை செய்யுறன்னு திரும்பி வந்ததே கிடையாது.//

உண்மை தான் கத நல்லாயிருந்துச்சு தல

Mahesh said...

அண்ணே... கற்பனைதானே இது? எங்கியோ போயிட்டீங்க...

ரசித்தேன் !!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.பெண் தெய்வங்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமியிலே படிப்பிலே எப்போதும் முன்னிலையிலே இருக்கும் அவங்களுக்கு ஒரு 33 சதவித இட ஒதுக்கீடு வாங்க முடியலை.
//

அது வந்து....,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//"அவ என் ஆளு, பார்த்த அடிப்பேன்" என் சகதோழன் ௬றினான்.//

எனக்கு இந்த மாதிரி நெறய நண்பர்கள். நெறய தங்கைகள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//11 படிக்கும் போதுதான் அவளைப் பார்த்தேன்,இது வரைக்கும் டவுசர் போட்ட நான் பேன்ட் சட்டை போட ஆரம்பித்த நேரம்.//

அப்போ நீங்க மோகன் காலத்து ஆள். ரைட்டா தல..,

sakthi said...

என் கண்ணுக்கு அவங்க தேவைதைகளாவே தெரிந்தனர்.அவங்க கண்ணுக்கு நான் எப்படி தெரிந்து இருப்பேன் என நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை.


hahahahaha

sakthi said...

கலரிலே நான் கருவா குஞ்சு அவள் எலுமிச்சை நிறம்,இப்படி எலுமிச்சை நிற அழகிகளை கொண்டதாலே என்னவோ எங்க ஊருக்கு லெமன் சிட்டின்னு பேரு வந்தது.

unga oor per enna nasreyan anna

sakthi said...

நிஜத்திலே காதலனும், காதலியும் தெருவிலே நின்னு கட்டி பிடிச்சி பாட்டு பாட முடியுமா,பாட்டு முடியும் முன்னே பாடையே கட்டிடுவாங்க பாடின ரெண்டு பேருக்கும்.

therinja sari

நசரேயன் said...

நன்றி பாப்பு

நன்றி மருத்துவர் தேவன்மயம்

நன்றி புதியவன்

நன்றி கார்த்திகைப் பாண்டியன் --> உண்மைதான், எல்லோருக்கும் இப்படி ஒரு கதை இருக்கும்

நன்றி ஆ.ஞானசேகரன்

நன்றி ஆதவா

நன்றி ஜோ --> ஆமா, நானே ஓசி டீ குடிச்சி கிட்டு இருந்தேன்..

நன்றி அபுஅஃப்ஸர்

நன்றி அத்திரி --> நம்புங்க அத்திரி எங்க ஊரிலே எல்லோரும் அம்புட்டு சிகப்பு

நன்றி குடந்தை அன்புமணி

நன்றி ஷண்முகப்ரியன் ஐயா

நன்றி பிரியமுடன்.........வசந்த்

நன்றி மகேஷ் --> நான் எழுதிற எல்லாமே கனவு தான்னு சொன்னா நம்பவா போறீங்க ?

நன்றி கலகலப்ரியா

நன்றி மருத்துவர் SUREஷ் --> நான் மோகன் படம் பார்த்து இருக்கேன், ஆனா இன்னும் யூத் நான்

நன்றி சக்தி--> என் ஊரு புளியங்குடி தங்கச்சி, அது ஒரு மாநகரம்

RAMYA said...

ரொம்ப தாமதமா வரேன். கதை அருமையோ அருமை. உங்கள் கனவு நாளுக்குநாள் மெருகேறிக் கொண்டே வருகின்றது.

"கருவா குஞ்சு" யாருங்க அது :)

ஒரு முழு படம் பாத்தா எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. குண்டா இருந்தா என்னா?

நட்பா போயி பேசி இருக்கலாம் இல்லையா??

குழந்தைகளை பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டிருக்கலாம் இல்லையா??

இதெல்லாம் செய்யாமல் கடைக்குள்ளே ஓடினா எப்படிங்க?

Anonymous said...

நல்ல நினைவலைகள் நண்பா. இந்த நினைவலைகளை வார்த்தைகளில் வடித்து படிப்போர் கண் முன் நிற்கும் வகையில் பதிவு இருப்பது உங்களின் மேலான படைப்பாற்றலை காட்டுகிறது.

ஊரில் உங்களை சந்திக்க முடியாதது எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.

Vidhoosh said...

ஹ்ம்ம். நல்ல கதை. நல்ல flow. அங்கங்கே சின்னச் சின்ன நடைமுறை touches. வாழ்த்துக்கள்.

நசரேயன் said...

நன்றி ரம்யா --> ஹும் ... ௬ட வந்தது அவ புருஷன், அதான் ஓடிட்டேன், கருவா குஞ்சு நான் இல்லை

நன்றி ஆனந்த் --> அடுத்த முறை கண்டிப்பா சந்திக்கலாம்


நன்றி விதூஷ்

கோபிநாத் said...

நல்லாயிருக்கு ;-))

சென்ஷி said...

//"பிழைகளை சரி செய்க".//

:-))

நல்லாயிருக்குது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

-சென்ஷி

SUMAZLA/சுமஜ்லா said...

நல்லா இருக்குங்க! எதார்த்தத்தை எதார்த்தமா எழுதியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

வில்லன் said...

//கலரிலே நான் கருவா குஞ்சு அவள் எலுமிச்சை நிறம்,இப்படி எலுமிச்சை நிற அழகிகளை கொண்டதாலே என்னவோ எங்க ஊருக்கு லெமன் சிட்டின்னு பேரு வந்தது.//

அட மாங்கா.... உங்க ஊரு புளியங்குடி.. இங்கிலிசுல "புளி" என்ற சொல்லுக்கு வார்த்தையே கெடையாது... அதனால எந்த மாங்கா மடையனோ லெமன் பட்டின்னு சொல்லிட்டு போய்ட்டான் பரதேசி.....

வில்லன் said...

//கலரிலே நான் கருவா குஞ்சு அவள் எலுமிச்சை நிறம்,இப்படி எலுமிச்சை நிற அழகிகளை கொண்டதாலே என்னவோ எங்க ஊருக்கு லெமன் சிட்டின்னு பேரு வந்தது.//

உங்க ஊரு கலரா பத்திதான் ஒலகத்துக்கே தெரியுமே .... அப்புறம் என்ன சும்மா "எலுமிச்சை நிற அழகி" அப்படி இப்படின்னுட்டு.... அடக்கி வாசிங்க....இல்ல என்ன பண்ணுவேன்னு தெரியாது.. அநியாயமா என்ன எழுத்தாளன ஆக்கிறாதிங்க....

வில்லன் said...

உண்மைய சொலுங்க உங்க தேவதை எப்படி இருப்பாங்க. சிவாஜி படம் அங்கவை சங்கவை மாதிரி..... ஏன்னா நமக்குதான் கம்பு குச்சிக்கு சேலை கட்டினாலே தேவதையா தெரியுமே...... நம்ம taste அப்படி.....

வில்லன் said...

என்னையா இப்பதான் தேவதைனு சொன்னேரு அதுக்குள்ளே என்ன குட்டைச்சி ஆயிட்டா

வில்லன் said...

//அதை ஒரு நோட்டில் எழுதினேன், "பிழைகளை சரி செய்க".

ஒரு வேளை நான் பதிவுகளில் விடும் எழுத்து பிழையா இல்லை தீராத பிழையா என்பது ஒரு புதிரே.இந்த உலகிலே புரிந்து கொள்ள முடியாத பிழைகள் கடல் போல இருக்கும் போது இதை மட்டும் என்னால் எப்படி புரிந்து கொள்ள முடியும்.//

அட வெண்ண!!!!! இந்த கூத்த பாருயா!!!! அவ சொன்னது உம்மோட மொள்ளமாரி தனங்கள... உலகிலே புரிந்து கொள்ள முடியாத பிழைகள இல்ல..

வில்லன் said...

//அதை ஒரு நோட்டில் எழுதினேன், "பிழைகளை சரி செய்க"//

அவ என்ன ஹிந்திலயா எழுதினா..... இந்த தமிழ வசிக்க பாத்து வருஷம். நீரெல்லாம் தமிழுக்காக தடி எடுத்து பாட்ட தொலச்சி .... நல்ல காமெடி போங்க

நசரேயன் said...

நன்றி கோபிநாத்
நன்றி சென்ஷி
நன்றி SUMAZLA/சுமஜ்லா
நன்றி வில்லன்

Joe said...
This comment has been removed by the author.
Joe said...

வில்லன்,
ஆங்கிலத்தில் புளி என்பதற்கு Tamarind
என்றொரு வார்த்தை இருக்கிறது.

Sorry about the typo in the previous comment.

thamizhparavai said...

புன்னகைக்க ஆரம்பித்து,புண் பட்டு நிற்க வைத்தது கதை. கிளைமேக்ஸ் நல்லாருக்கு...
வாழ்த்துக்கள் நசரேயன்...

ரவி said...

தாவணி தேவதை : நசரேயன்

நசரேயனுக்கே உரிய நகைச்சுவையான மற்றும் அமெச்சூரான நடை...கொஞ்சம் எழுத்துப்பிழைகள்...சந்திப்பிழைகள்...கதையின் மேட்டர் சூப்பர். சொன்ன விதத்தில் கொஞ்சம் வளவளா. உண்மைக்கதையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை...

என்னுடைய மதிப்பெண் 40 / 100

Radhakrishnan said...

எழுத்து நடை உடன் பேசுவது போல் அமைந்தது இந்த கதையின் சிறப்பு. காதலும், கல்யாணமும் என யதார்த்தம் சொன்னவிதமும் அருமை.

நல்லவேளை அந்தப் பெண் ஒல்லியாக இல்லை ;)

மிக்க நன்றி ஐயா.