Monday, May 18, 2009

தயவு செய்து இழவு விழுந்ததாக விளம்பரம் தேட வேண்டாம்

அண்ணன் எப்ப சாய்வான் திண்ணை எப்ப காலியாகும் என்பதைபோல முடிவு வரும் முன்னே முடிந்து விட்டது போல முடிச்ச அவிழ்க்க போராடும் உடகங்கள், தன் சுய விளம்பரத்தை அதிகப்படுத்த பிணம் தின்னி கழுகுகளாக அலைகிறார்கள். இழவு வீட்டிலே விளம்பரம் செய்து பழக்கப்பட்ட நீங்க, இப்ப விழாத இழவுக்கு கொடி பிடிக்காதீங்க சாமிகளா.

யாவாரம் சரிஇல்லைனா கடைய இழுத்து மூடுங்க,இன்னும் தேர்தல் செய்திகளே முடியாத நிலையிலே உங்களுக்கு செய்தி பஞ்சம் வந்து விட்டதா?

இவ்வளவு நாள் வரைக்கும் ஈழ பிரச்சனைய எண்ண நேரம் இல்லாம இருந்த நீங்க,இப்ப இழவு விழும் முன் தார தப்பட்டைய எடுத்து கிட்டு எங்க சாமி போறீங்க, இன்னைக்கு நேத்தா இலங்கையிலே மரணம் நடக்குது கடந்த முப்பது வருசமாத்தான் நடக்குது. அப்ப எல்லாம் கிடைக்காத வருமான செய்தி இப்ப கிடைக்கும் முன்னே நீங்களே உண்மை என் தம்பட்டம் அடிக்கிறது எந்த வைகையிலே நியாயம்?


உபகாரம் பண்ணலைனாலும் உபத்திர்யம் பண்ணாம இருங்க,இதை மனசுல வச்சிகிட்டு வேலை செய்யுங்க

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.



நடுநிலமைக்கும், நாட்டமைதனத்துக்கும் பெயர் இல்லாமல் செய்த உடகங்களே கொஞ்சம் செய்திகளை பிரசரிக்கும் அவசரத்திலே ஒரு கணம் யோசித்து உண்மையை சொல்ல முயற்சி செய்யுங்கள். இதே நிலை நாளை உங்களுக்கும் வரலாம், நீங்க கடை நடத்தி கொண்டு நல்ல வியாபாரம் செய்யும் நேரத்திலும், உங்களை அடுத்தவன் இழுத்து மூடிவிடுவான்.

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.


அதனாலே நீங்க இன்னறைக்கு பரப்பும் வதந்திகள் உங்களை நிச்சயம் ஒரு நல்ல வந்தடையும். இதை எல்லாம் அந்த காலத்திலேயே எங்க ஆளு சொல்லிட்டு போய்ட்டாரு நான் ஒன்னும் புதுசா சொல்ல தேவை இல்லை.

இதியாவிலே செய்தி பஞ்சம் வந்த மாதிரி நீங்க சுடு தண்ணியை காலிலே ஊத்தின மாதிரி பக்கத்து வீட்டு வந்தந்திகளுக்கு அலைய வேண்டாம்.உண்மைகளை ஏற்க்காமல் இருக்க முடியாது, அதே போல உங்களைப்போல பொய் பரப்பும் பச்சொந்திகளையும் ஏற்க்க முடியாது. உடக சுதந்திரங்களை பயன்படுத்தி உங்க சொந்த செய்திகளை பரப்பும் எண்ணத்தை கை விடுங்கள்.பொறுத்தார் பூமி ஆழ்வார், பொறுமை கடலினும் பெரிது என்பதை போல பொறுத்து பூமியை ஆளுங்கள், இப்படி கொழுத்து திரிந்து ஆழ வேண்டாம்.


37 கருத்துக்கள்:

ILA (a) இளா said...

வரும் செய்திகள் வரட்டும். நடப்பது நடக்கட்டும். முடிந்தது முடிந்ததுதான். இழவு வீட்டில் ஒப்பாரி வைக்கத்தான் முடியும். கொன்றவனை கொன்றொழிக்கவா முடியும்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ILA said...
வரும் செய்திகள் வரட்டும். நடப்பது நடக்கட்டும். முடிந்தது முடிந்ததுதான். இழவு வீட்டில் ஒப்பாரி வைக்கத்தான் முடியும். கொன்றவனை கொன்றொழிக்கவா முடியும்?//

repeateyyyyyyyy

கலையரசன் said...

ஒப்பாரி வைக்க வேண்டாம்,
மவுனமாய் இருந்தால் அதுவே போதும்!
www.kalakalkalai.blogspot.com

Anonymous said...

illa nayee,
tv radhakrishnan nayee,
vaiya mudungada. mudincha rajapakse va kollapparuda muthevi

ஆதவா said...

நசரேயன்... எல்லோருக்கும் ஒவ்வொருவித உணர்வுகள் எண்ணங்கள்.. நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.. காலையிலிருந்து நானும் பல ஊட்கங்கள் தேடிப்பார்த்தேன்.... எதற்கு? பிரபாகரன் இறந்துவிட்டார் என்று செய்தி கேட்டு சந்தோஷப்படுவதற்கா??? இல்லை.... என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள...

இப்ப மட்டும் என்ன வந்துட்ட என்று கேட்கவேண்டாம்... தினமும் மக்கள் டிவியில் ஈழ மக்கள் இறக்கும் செய்திகள் கேட்டு வருத்தப்பட்டு வருகிறேன்.

நீங்கள் இப்படி ஒரு பதிவு போடுவதால் இதைக்கூட ஒரு விளம்பரமாக இன்னொரு பதிவர் எடுத்துக் கொண்டால்??

உண்மையைச் சொல்லப்போனால், பிரபாகரன் இறந்தாரா இல்லையா என்பதை விட, தமிழின மக்களின் வாழ்வு அடுத்து எப்படி இருக்கும் என்பதில்தான் எனது நோக்கமெல்லாம்!!!

உணர்வுகள் என்பது மெல்லிய இழை சார்... அதை அறுக்காதீங்க.. இருந்துட்டு போவட்டும்.

sakthi said...

அண்ணன் எப்ப சாய்வான் திண்ணை எப்ப காலியாகும் என்பதைபோல முடிவு வரும் முன்னே முடிந்து விட்டது போல முடிச்ச அவிழ்க்க போராடும் உடகங்கள், தன் சுய விளம்பரத்தை அதிகப்படுத்த பிணம் தின்னி கழுகுகளாக அலைகிறார்கள். இழவு வீட்டிலே விளம்பரம் செய்து பழக்கப்பட்ட நீங்க, இப்ப விழாத இழவுக்கு கொடி பிடிக்காதீங்க சாமிகளா.


நெத்தியடி நசரேயன் அண்ணா

டவுசர் பாண்டி said...

//எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.//

இந்த குறளுக்கு அர்த்தம் புரிகின்றதா?
மீண்டும் இந்த குறளை, வாசிக்கவும்.
அதற்குள் ஏன் இந்த ஆவேசம்?

ILA (a) இளா said...

நசரேயன்,
ஒப்பாரி வைச்சா தப்பா? நம்மளால என்ன செய்ய முடியும்னு நினைக்கிறீங்க? மகிந்தாவ கொன்னுற முடியுமா? போர்களத்துத்தான் போவ முடியுமா? பதிவுதானே போட முடியும்? அழறதுகூடவா பதிவுல செய்ய முடியாது?
We expected the Worst, let we console us.

Tamil Twitter said...

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
http://www.ponmaalai.com/2009/05/blog-post_5990.html

Anonymous said...

கருத்தை முந்தி கொண்டு கொடுப்பது உங்கள் கந்தசாமி

அ.மு.செய்யது said...

கோபமும் விரக்தியும் இப்படி தான் சில நேரங்களில் பிரதிபலிக்கும்.

பொய் செய்திகளை நம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமே வெளியிட்டு விட்டது.

RAMYA said...

செய்தியை நம்பறதா வேண்டாமா என்ற எண்ணம் ஒருபுறம்.

நடக்கப் போகும் நாளைய நிகழ்வுகளை எண்ணி அஞ்சும் எண்ணங்கள் ஒருபுறம்.

எண்ணங்கள் அதன் ஓட்டத்தில் ஓடுகின்றன, நாமும் அதனுடன் ஓடுகின்றோம்.

செய்திகள் செய்திகளாகவா வருகின்றது? என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை :(

Anonymous said...

// இதியாவிலே செய்தி பஞ்சம் வந்த மாதிரி நீங்க சுடு தண்ணியை காலிலே ஊத்தின மாதிரி பக்கத்து வீட்டு வந்தந்திகளுக்கு அலைய வேண்டாம். //

என்னய்யா இது தொப்புள் கொடி திடீர்னு பக்கத்து வீடாயிடுச்சி !!!

Anonymous said...

மவுனமாய் இருந்தால் அதுவே போதும்!

Suman said...

ennadaa ithu..avananvan karutha soldrathukku kooda nattila thadai vanthittathu...

Anonymous said...

http://www.nerudal.com/nerudal.6277.html

கிரி said...

தேவையான பதிவு ..நன்றி நசரேயன்

புதியவன் said...

உங்கள் உணர்வுகளை எழுத்துக்களில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்...

தீப்பெட்டி said...

//தேவையான பதிவு ..நன்றி நசரேயன்//

வழி மொழிகிறேன்....

தமிழ் said...

நன்றி நண்பரே

குடந்தை அன்புமணி said...

தங்களின் உணர்வுகள் புரிகிறது. இந்த விசயத்தில் ஆதவனின் கருத்தே என் கருத்தும்!

jothi said...

// தமிழின மக்களின் வாழ்வு அடுத்து எப்படி இருக்கும் என்பதில்தான் எனது நோக்கமெல்லாம்!!!//

எல்லா தமிழனின் கவலையும் அதுவே.

வால்பையன் said...

என்ன செய்ய தொலைகாட்சி மாதிரி நமது ப்ளாக்கர்களுக்கும் ந்மது தமிழ் வலையுலகில் முதன்முறையாகன்னு செய்திகளை முதன் முதலாக வெளியிடுவதில் பெரும் ஆர்வத்துடன் திரிகிறார்கள்!

Suresh said...

மிக சரியாக சொன்னிங்க நண்பா...

இதுலயும் விளம்பரம்... தேடுறாங்க :-(

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ் பத்திரிக்கைகளும், டி.வி. சேனல்களும் ஒரு பக்கம் ஒத்து ஊத, வலைப்பதிவர்கள் சிலரே அதை ஆதாரத்துடன் வெளியிடுவது வேதனையளிக்கிறது.

இப்போது தேவை நம்பிக்கை...

உபகாரம் பண்ணலைனாலும் உபத்திர்யம் பண்ணாம இருங்க,இதை மனசுல வச்சிகிட்டு வேலை செய்யுங்க

Venkatesh Kumaravel said...

இப்படி சாட்டையடி போல எழுதப்பட்டிருக்கும் சூளுரையிலும் சில முதுகெலும்பற்ற பேடிகள் தங்கள் பதிவுகளின் சுட்டியினை அளித்திருக்கிறார்கள். இவர்கள் மீது கோபப்பட வேண்டாம் என்கிறீர்களா இளா, டி.வி.ஆர்? வாய்க்கரிசியில் பொங்கித்தின்ன முற்படும் ஓநாய்களுக்கும் கழுகுகளுக்கும் பதிவுலகம் சரணாலயமாகிவிட்டது.

அத்திரி said...

பிரபாகரன் மரணம் குறித்த செய்திகள் பொய்யாக வேண்டும் என்பதே என் மன நிலை

geethappriyan said...

நண்பா உனக்கும் எனக்கும் கூட பங்காளி செத்த தீட்டு உண்டுப்பா..அதனால கோவத்தை விடு,வேதனையை பகிர்,
இந்த துயரமான வேளையிலும் சுட்டமொழி சன்னாசி என்னும் இழிமகன் எப்படி ஒரு கிண்டல் பதிவு போட்டிருக்கான் பார்,அவனை முடிந்தால் கிழி.
சுட்டி இதோ
http://snapjudge.com/2009/05/19/%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/

vasu balaji said...

பொறுப்பான கருத்துக்கள். ஏதோ ஒன்றெழுதி காசு பார்த்தாகணும்.

Anonymous said...

Intha Ulagathil Suriyanai Thottavanum illai. Thalaivar Prabakaranai Suttavanum illai.

( Nile Raja )

வில்லன் said...

//எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.//

அதுக்காக நாம எல்லாரும் நாடு கடந்து போயி கொழும்புல என்ன நடக்குன்னு போயி பாத்துட்ட வர முடியும். என்ன இது சின்ன புள்ள தனமா. ஊடகங்கள்ல வெளிஎடுரத நம்பித்தான ஆகணும்.

வில்லன் said...

வாளை எடுத்தவன் வாளால் தான் சாவான். இது சத்தியம். நம்ம யங் ப்ரைம் மினிஸ்டேர் தலைவர் ராஜீவ கொன்னவன் அவர மாதிரியே செத்துட்டான். எளவு வீட்டுல வந்து அழாம நடக்க வேண்டிய காரியத்த பாருங்க. அந்த படு பாவியாள வீடு வாசல் பிள்ள குட்டிய இளந்த நம்ம இனத்து மக்களை காப்பாத்த உதவி பண்ணுங்க. தப்பி தவறி கூட மீண்டும் அந்த தீவிரவாதி கும்பல் தலையெடுக்க உதவி பண்ணிராதிங்க.

வில்லன் said...

விடுதலை புலிகளுக்கு சப்போர்ட் பண்ணும் வலை பதிவர்களே. தையவு செய்து கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லவும்.

விடுதலை புலிகளுக்கும் தலிபான்களுக்கும் என்ன வித்தியாசம். அவன் மதத்துக்காக போராடுகிறான் இவன் இனத்துக்காக போராடுகிறான்.... என்ன பெரிய வித்தியாசம்.

இவனுக்கு உதவிசெய்த நம்ம நாட்டு பிரதமர கொன்னுடாங்க... அப்புறம் எப்படி நம்ம அவனுக்கு சப்போர்ட் பண்ண முடியும். முதலில் நாம் எல்லோரும் இந்தியன் அப்புறமே இன உணர்வு மத உணர்வு. இப்படி சப்போர்ட் பண்ணினா நமக்கும் தலிபானுக்கு சப்போர்ட் பண்ணுற பாகிஸ்தனுக்கும் என்ன வித்தியாசம்.

எவளவு பேசுற நீங்க எவளவு பணம் குடுத்திங்க நசுக்கப்பட்ட நம்ம இனம் மீண்டும் புது வாழ்வு பெற. சும்மா வெட்டியா பதிவ போட்டு நேரத போக்குறதுக்கு எதாவது பிரயோஜனமா பண்ணி காசு கோலேச்ட் பண்ணி அனுப்ப வழி பாருங்க நாலு பேரு உங்கள மனசார வாழ்த்துவன்... இத படிச்சா அங்க பட்டியல சாவுற அவன் வயேறு நெறைய போறது இல்ல.

வில்லன் said...

ஆமா ஆடு நனைதுன்னு ஏன் ஓநாய்கள் அழுது. ஒண்ணுமே புரியலையே. எங்க அந்த ரத்த ஆறு ஓடும்னு சொன்ன தமிழ்நாடு அரசியல் வாதி. மொதல்ல அவரு ரத்தத்த சிந்த சொலுங்க பாப்போம். இப்படி வெட்டியா பேசி அரசியல் பண்ணுற ஆரசியல் வாதிங்க ரத்தத்த எடுக்குறதுல தப்பே இல்ல. கருணை கொலைகளாக கருதப்படும்.

வில்லன் said...

Anonymous said...
illa nayee,
tv radhakrishnan nayee,
vaiya mudungada. mudincha rajapakse va kollapparuda muthevi

பேர சொல்ல வக்கில்லாத பொறம்போக்கு நாயே நீ வாய மூடுடா பொட்டை.

நட்புடன் ஜமால் said...

very nice post brother ...


I too felt as below
(like Aadav said)

நீங்கள் இப்படி ஒரு பதிவு போடுவதால் இதைக்கூட ஒரு விளம்பரமாக இன்னொரு பதிவர் எடுத்துக் கொண்டால்??

geethappriyan said...

HELLO ISAC
WHY YOUR BLOG IS SO EMPTY?FIRSTLY PUT SOME NASTY POEMS ATLEAST.
THEY KILLED RAJIV BECAUSE RAJIV SENT PEACE FORCE ,THAT FORCE KILLED 11000,INNOCENT TAMILS,THEY RAPED SCHOOL GIRLS,HOUSEWIFES BEFORE THEIR FAMILY MEMBERS,SRILANKAN WRITTEN HIS NAME ON TAMIL WOMAN CORPSE BREAST,AND THEY PUT A BOARD TAMIL WOMANS BREAST AVAILABLE,
HAVE U EVER INTO THIS KIND OF HUMILIATION,OR ILL TREATMENT?
READ THE HISTORY FULLY BEFORE POST A COMMENT,EVERYONE ADMIRE PRABAKARAN BECAUSE OF HIS BRAVE AND DEDICATION.
YOU CANT BE PATIENCE AFTER THIS KIND OF A RECKLESS BEHAVIOR OF EX PM,SO HE DESERVE TO DEAD.