திமுக பெயர் மாற்றம் -கலைஞர் அறிக்கை
கழக உடன் பிறப்புகளே,
1949 ல் இருந்து கழகத்திலே என்னை இணைத்து இன்று வரை எனக்கு இட்ட பணியை மனநிறைவோடு செய்து வருகிறேன். கழகம் 1967 முதல் முதலா அரிதி பெரும்பான்மையாக அரியணையிலே ஏறிய போது அண்ணாவுக்கு தோள் கொடுத்தேன். அடுத்த இரண்டு வருடத்திலே அண்ணா இந்த பூஉலகை விட்டு விட்டு கழக பணிகளை என் தோள் மீது இறக்கி வைத்து விட்டு இந்த தம்பியை பிரிந்து சென்றார். அண்ணாவிற்கு பின் கழக தலைமையை ஏற்று நடத்த நான் பட்ட இன்னல்கள் என்னில் அடங்கா.வாழ்க்கை ஓட்டப் பந்தயத்திலே முன்னால் வர தீயை தீண்டினேன். தென்றலை தாண்டியதில்லை.
முயற்சியிலே மனம் தளராமல் ஓடினேன், கை மேல் பலனாய் அண்ணாவின் மறைவுக்கு பின் கழக தலைமைக்கும், மக்கள் தலைமைக்கும் முதல்வன் ஆனேன். அன்றிலிருந்து அரியணையை காக்கவும், கழகத்தை காக்கவும் நான் கடந்து வந்து காட்டு பாதைகளை நினைக்கும் போது கண்கள் பனிக்கவில்லை, இதயம் இனிக்க வில்லை.
கழகப் பொருளாளர் அண்ணன் எம்.ஜி,ஆர் கழக கணக்கு வழக்குகளை பற்றிய விவகாரங்களை கேட்டதும், அரியணை போட்டியிலே எனக்கு அடுத்து நிற்கும் நண்பனை புறம் தள்ள கட்சியிலே இருந்து நீக்க வழி செய்தேன்.சென்றவர் திரும்பி வந்தார் புது அணியாய், அதுவரை காங்கிரஸ் கட்சியோடு மல்லு கட்டிய கழகம், புது கழகத்தோடு மல்லு கட்ட ஆரம்பித்தோம்.விளைவு விட்டு தந்தேன் அரியணையை, காத்து இருந்தேன் பத்து வருடம் இலவு காத்த கிளி போல. இந்த இடைப்பட்ட காலத்திலேயே எனது போர் வாளாக இருந்த கழகத் தூண் தம்பி வைகோ சுறாவளியாகவும், சுனமியாகவும் கழகத்தை கலக்கினார்.
கழகத்தை கலக்கிய போர் வாள் அரியணைக்கு வெகு பக்கத்திலே தென்றலாய் வந்த அவரை புயலாய் விரட்டி அடிக்க வேண்டிய சோதனை, சோதனையும் வேதனையும் என்னை கொல்ல, நானே கொலை குற்றம் சாட்டினேன், நாடு நன்மையடைய, மக்கள் வளம் பெற, வளர்த்த கடா மார்பிலே பாய்ந்ததாக போர் வாளை திருப்பி அனுப்பினேன், வாளாய் போனவர் வந்தார் புது அணியாய், வாழையடி வாழையா தொண்டு செய்ய செயல் வீரர்களை அனுப்பினேன், கடமையை செய்து புது கழகத்தை உடைத்தார்கள். வாள் வெற்று பலூன் ஆனது.
திராவிட கழகத்திலே இருந்து அண்ணா, திராவிட முன்னேற்ற கழகம் ஒன்றை மட்டுமே உருவாக்கினார், ஆனால் நானோ அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு பெரிய கிளை கழகங்களை உருவாக வகை செய்தேன்.
கழகப் பணிகளை திறம்பட செய்ய குடும்பத்தையும், கழகத்தையும் இணைத்தேன், மா மனிதன் மாறன் வந்தார், அவர் பின் இளைய மாறன் வந்தார்,வந்தவர் உண்ட வீட்டுக்கு பிண்டம் வைத்தார், உதறி தள்ளினேன், ஓரம் கட்டினேன்.அடிப்பது போலே அடித்தேன், அழுவது போல அழுது கழகத்திலே மீண்டும் இணைத்தேன்.முத்தவன் இந்திய தாய்க்கும், இளையவன் தமிழ் தாய்க்கும் கடன் பட கட்டளை இட்டேன். கனவாய் வந்த கானல் நினைவாய் நடை முறையானது.
கடந்த 60 பது வருட பொது வாழ்வு பணியிலே நான் கடந்து வந்த பாதைக்கு அன்பும், ஆதரவும் தந்த உடன் பிறப்புகள், இந்த மாற்றத்திற்கும் இனி வரும் மாற்றத்திக்கும் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலே கழகத்திலே பெயரை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி எனப் பெயர் மாற்றம் செய்து பொது குழுவில் பேராரசியர் அன்பழகன் முன் மொழிந்த தீர்மானத்தை நான் வழி மொழிகிறேன்.
ஆகையால் இன்றிலிருந்து திராவிட முன்னேற்ற கழகம், திருக்குவளை முத்துவேல் கருணாநிதி என் அழைக்கப்படும், இந்த சந்தோச சமயத்திலே தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு இல்லாதவாரு கொண்டாட அவைத் தலைவர் அன்பழகன் கேட்டு கொள்கிறார்.
அடுத்து வரும் தீர்மானமாகிய உதய சூரியன் படத்திலே எனது படத்தை இணைக்க பொது குழுவிலே எடுத்த முடிவுக்கு நான் உடன் படவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். இதற்காக தொண்டர்கள் யாரும் தீ குளிக்க வேண்டாம் என நானே கேட்டு கொள்கிறேன்.
இனிவரும் காலங்களை எனது சந்ததியரும்,எனது தமக்கையார் சண்முக சுந்தரம்மாள், பெரிய நயம் அம்மாள் சந்ததியரும் கழகப்பணிகளில் தங்கள் திருப்பாதங்களை பதித்து தமிழ் தாய்க்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டு செய்வார்கள் என்பதையும் மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்,
திரு.மு.கருணாநிதி
47 கருத்துக்கள்:
திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தான் அவருடைய பெயர்.
நல்ல நடை!:-)
damaasu..
எடுங்கடா ஆட்டோவ!
//
குடுகுடுப்பை said...
திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தான் அவருடைய பெயர்.
//
நன்றி.. நானும் கட்சி பெயரை மாத்தி விட்டேன்
/திருக்குவளை முத்துவேல் கருணாநிதி//
மிக சரி
கஷ்டம்டா சாமீ!
என்னது திருந்தாத முட்டாள் கண்மணிகளா
வஞ்சப் புகழ்ச்சி அணியில் இதற்கு மேல் பொருத்தமாக யாராலும் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மக்களின் தலையெழுத்தை நினைத்தால் ரொம்ப பயமாக இருக்கிறது. வேதாளமும் சாத்தானும் மாறி மாறி ஆட்சிபீடத்தில் அமர்ந்து நாட்டைச் சுரண்டுவதைப் பார்த்தால், நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட அரசியலவாதிகளைக் கண்டு என்று உரக்கக் கத்தத் தோன்றுகிறது.
திரும்பி முன்னாடி கவனிங்க
ஆட்டோ நிக்குதான்னு பாருங்க
வாலபய்யன்- எடுங்கடா ஆட்டோவை. கலக்கல்.
இனிமேல் ஆட்டோ கிடையாது, டிராக்டர் தான், நாங்க உரம் மற்றும் ரசாயன மந்திரி ஆயிட்டோம்ல.
திருக்குவளை முத்துவேல் கருணாநிதி//// இதுதான் அவரு பேரா?
ஆனாலும் இவனுங்க ரொம்ப மட்டம். அவன் அரசில்யல்ல இருந்தா பசங்களும் இருக்கனும்னு கட்டாயமா?
கருணாநிதிக் கிழவர் எடுக்கும் அரசியல் முடிவுகள் எப்போதும் பிழையானவை. ஆனால் தமிழில் எழுத்துப்பிழை விடமாட்டார். (அட கருணாநிதி பற்றி ஒரு நல்ல விஷயம்)..
எது கருணாநிதி எது உங்கள் இடைச்செறுகல்ன்னு ஒண்ணும் புரியல.மறுபடியும் பார்த்துட்டு வருகிறேன்.
(வாலு எப்ப ஆட்டோ ஸ்டாண்டு தலைவர் ஆனாரு)
கலைஞரே முரசொலிய விட்டுட்டு பதிவுலகம் வந்த மாதிரி இருக்குதுங்க.இனி மேல் உரமூட்டையும் ட்ராக்டரும்தானு வேற ஆளுக பேசிக்கிறாங்க.இனிமேல் சிக்னல்ல வெள்ளைக்காரிக்கு நடு விரலக் காட்டாம ட்ராக்டர் ஏதாவது வருதான்னு சூதானமா பார்த்துப் போங்க!
குடும்ப அமைச்சர் பதவிக்காக , மம்மி சோனியா வேண்டுகோளுக்கு ..... சாரி .... கட்டளைக்கு இணங்கி ... இ.மு.க ( இத்தாலி .முருகவேல். கருணாநிதி ) என்றுகூட மாதிக்குவாரு.....
அண்ணாச்சி அடுத்த முறை புளியங்குடிக்கு வரும் போது கண்டிப்பா ஆட்டோ ரெடியா இருக்கும்....
:-)))))
Singapore Mouthayen Mathivoli, "Enna Kodumai sir Ithu?"
//திருக்குவளை முத்துவேல் கருணாநிதி//
இது உங்க கனவில் தென்பட்டதா...?
ஏங்க உங்களுக்கு இந்த கொலை வெறி???? நல்லாத்தான் இருக்கு!!! நான் அவரேதான் எழுதறாரோன்னு நினைச்சேன்... அப்படி கச்சிதமா இருக்கு!
//Keith Kumarasamy said...
கருணாநிதிக் கிழவர் எடுக்கும் அரசியல் முடிவுகள் எப்போதும் பிழையானவை. ஆனால் தமிழில் எழுத்துப்பிழை விடமாட்டார். (அட கருணாநிதி பற்றி ஒரு நல்ல விஷயம்)..
//
தமிழில் முதல் எழுத்தாக புள்ளி வச்ச எழுத்து வரக்கூடாதாம். தொல்காப்பியத்துக்கு உரை எழுதுன அவருக்கு தெரியாதா? ஆனா பாருங்க அவரு மகன் பேரு ஸ்டாலின்... இதை இசுடாலின் என்று எழுத முடியாதா? அல்லது அவருக்கு தெரியாதா?
லக்கிலுக் சார் இதை இன்னும் பாக்கலையா.
கலக்கலா இருக்கு கருணாநிதியின் உண்மையான சிந்தனைகளை நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்
எதுக்கும் தப்பி ஓட ரெடியா இருங்கண்ணே...
:-)
எந்நேரமும் வீட்டுக்கு ஸ்கார்ப்பியோவோ அல்லது டாட்டா சுமோவோ வரலாம்..
:-)
அருமையான நடை..
வாழ்த்துகள்.
பின்னிட்டீங்க போங்க...ஹாஹாஹா!
பெயரில் ஒரு திருத்தம் ,
அரவேக்காடுகள் பிற்காலத்தில் குடும்ப அரசியலை பற்றி பேச வாய்ப்புள்ளதால் பெயரை கீழ் கண்டவாறு மாற்றலாம்.
" திருக்குவளை முத்துவேல் கருணாநிதி Pvt., Ltd. "
சுருக்கமா ,
" D.M.K Pvt., Ltd. "
சிலருக்கு பிறரை குற்றம் சொல்லுவதுதான் வேலை
சிலருக்கு பிறரை குற்றம் சொல்லுவதுதான் வேலை
But blogger told the truth
தல கலக்கிட்டேள்
உங்க கனவுலே இப்படியெல்லாம் தென்படுமா
கலக்கல் எழுத்தோட்டம்
//திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தான் அவருடைய பெயர்.//
நல்ல தகவல்
// குப்பன்_யாஹூ said...
வாலபய்யன்- எடுங்கடா ஆட்டோவை. கலக்கல்.
இனிமேல் ஆட்டோ கிடையாது, டிராக்டர் தான், நாங்க உரம் மற்றும் ரசாயன மந்திரி ஆயிட்டோம்ல.///
சூப்பர்...
நண்பா, வச்சபுகழ்ச்சியில் பின்னிடீங்க...
//லக்கிலுக் சார் இதை இன்னும் பாக்கலையா.//
அவனுக்கு சாரு சூத்து கழுவவே நேரம் இல்ல. இங்க எதுக்கு வருவான்? காரியம் ஆக வேண்டிய இடத்தில் ஜால்றா போட மட்டும் வருவான்.
சக்க ஓட்டு தலைவா.. ரசிச்சு சிரிச்சேன்..;-)
கடந்த 60 பது வருட பொது வாழ்வு பணியிலே நான் கடந்து வந்த பாதைக்கு அன்பும், ஆதரவும் தந்த உடன் பிறப்புகள், இந்த மாற்றத்திற்கும் இனி வரும் மாற்றத்திக்கும் உறுதுணையாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையிலே கழகத்திலே பெயரை திருக்குவளை முத்துவேல் கருணாநிதி எனப் பெயர் மாற்றம் செய்து பொது குழுவில் பேராரசியர் அன்பழகன் முன் மொழிந்த தீர்மானத்தை நான் வழி மொழிகிறேன்.
ரொம்ப தைரியம்ங்கண்ணா உங்களுக்கு
ஆனால் நானோ அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இரண்டு பெரிய கிளை கழகங்களை உருவாக வகை செய்தேன்.
ஆமா ஆமா
எத்தனை சிறப்பான பணியிது
மா மனிதன் மாறன் வந்தார், அவர் பின் இளைய மாறன் வந்தார்,வந்தவர் உண்ட வீட்டுக்கு பிண்டம் வைத்தார், உதறி தள்ளினேன், ஓரம் கட்டினேன்.அடிப்பது போலே அடித்தேன், அழுவது போல அழுது கழகத்திலே மீண்டும் இணைத்தேன்.முத்தவன் இந்திய தாய்க்கும், இளையவன் தமிழ் தாய்க்கும் கடன் பட கட்டளை இட்டேன். கனவாய் வந்த கானல் நினைவாய் நடை முறையானது.
இது கவிதையாய் வடிக்க வேண்டிய வரிகள் அன்றோ நசரேயன் அண்ணா
ஆஹா மேட்டரு சீரியஸா இருக்கும் போல...
நசரேயன் உஜார்.
அசத்தல்.
அத்திரி said...
அண்ணாச்சி அடுத்த முறை புளியங்குடிக்கு வரும் போது கண்டிப்பா ஆட்டோ ரெடியா இருக்கும்....
//
ஹி...ஹி...ஹி.
// குப்பன்_யாஹூ said...
வாலபய்யன்- எடுங்கடா ஆட்டோவை. கலக்கல்.
இனிமேல் ஆட்டோ கிடையாது, டிராக்டர் தான், நாங்க உரம் மற்றும் ரசாயன மந்திரி ஆயிட்டோம்ல.//
நல்ல வேல ரயில்வே மந்திரி கொடுக்கல... இல்ல எடுடா ரைலன்னு சொல்லி ஒரே களேபரமா போயிருக்கும். டிராக்டர்ரோட நின்றது ரொம்ப சந்தோசமே.
இப்பவும் அண்ணன் எப்ப சாய்வான் திண்ணை எப்ப காலியாகும்னு இருக்குறவங்க மத்தில அரசியல் பண்ண முடியுமா. அறுபது வருட அரசியல் வாழ்க்கைனா சும்மாவா... எதோ காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போன மாதிரி விட்டுற முடியுமா. நாங்க என்ன குடும்பம் குட்டி இல்லாதவங்களா.. குடும்பம் குட்டி இல்லாதவங்களே கணக்குல அடங்காம சொத்து சேக்கும் போது பெரிய குடும்பம் (மூணு பொண்டாட்டி) உள்ள என்ன நீங்க கேள்வி கேக்க மாட்டிங்க தானே...
யோவ் டிராக்டர் ஜெர்சிசிட்டி பக்கமா வர்றதா கேள்வி. கொஞ்சம் பாத்து ஓரமா போங்க. இல்ல இந்த PATH ட்ரைன்ல சல்சா பண்ண முடியாம போய்டும்.
நன்றி சந்தனமுல்லை
நன்றி ILA
நன்றி வால்பையன்
நன்றி சூரியன்
நன்றி அபி அப்பா
நன்றி விஜய்
நன்றி பிரியமுடன்.........வசந்த் --> பார்த்தேன் ஆட்டோ இல்லை
நன்றி குப்பன்_யாஹூ
நன்றி pappu
நன்றி Keith Kumarasamy
நன்றி ராஜ நடராஜன்
நன்றி லவ்டேல் மேடி
நன்றி அத்திரி --> எழுத சொன்னது நீங்கதான்னு சொல்லிவிடுகிறேன்
நன்றி முரளிகண்ணன்
நன்றி Mouthayen
நன்றி புதியவன் --> இப்போதைக்கு கனவு
நன்றி ஆதவா
நன்றி குறும்பன்
நன்றி அவன்யன்
நன்றி Suresh Kumar
நன்றி வேத்தியன்
நன்றி வண்ணத்துபூச்சியார்
நன்றி புல்லட் பாண்டி
நன்றி அஹோரி
நன்றி புல்லட் பாண்டி
நன்றி K.S.Muthubalakrishnan
நன்றி அபுஅஃப்ஸர்
நன்றி ஆ.ஞானசேகரன்
நன்றி கார்த்திகைப் பாண்டியன்
நன்றி புல்லட் பாண்டி
நன்றி sakthi
நன்றி அ.மு.செய்யது
நன்றி பாலா
நன்றி கடையம் ஆனந்த்
நன்றி வில்லன் --> இங்கே ஆட்டோ கிடையாது கால் டாக்ஸி தான்
திருவளதான் முர்புத்தி கருணாநிதி ன்னு கூட சொல்லலாம்
சோம்பேறித்தனத்தை நினைவு படுத்தியதற்கு நன்றி.தமிழிஷ் இணைத்து விட்டேன் உங்க புண்ணியத்தால்.
Post a Comment