Wednesday, June 17, 2009

திருவிழா நாடகங்கள் - நடிகைக்கு அடி

முன்னாள் மொக்கை இங்கே, நடப்பு கிழே
*******************************************************************************
விறகு கட்டையை எடுத்துகிட்டு என்னைத்தான் அடிக்க வாராருன்னு பயந்து போயிட்டேன், வந்தவரு நேர அதை அவரோட தங்கமணிக்கு அடுப்பு விறகுக்கு கொடுத்தாரு, என்னிடம் வந்தவரு எலே இந்தா சின்ன நோட்டு ஒரு காட்சி எழுதி காட்டுன்னு சொன்னார். நானும் எழுதி கொடுத்தேன், ஒரு சில குறைகளை சுட்டி காட்டி என்னிடமே எல்லாத்தையும் எழுத கொடுத்தாரு.

வீட்டு பாடம் எழுதாம பள்ளிக்கு போய் இம்போசிசன்(Imposition) எழுதின முன் அனுபவத்திலே,அந்த வருஷம் நாடக நடிகர்களுக்கு அவர்களின் காட்சிகளை எல்லாம் நானே எழுதி கொடுத்தேன், எல்லாம் எழுதி முடித்தவுடன் ஒரு ரெண்டு ரூபாய் கொடுத்து டீ வாங்கி குடிச்சுக்கோ ன்னு சொல்லிட்டாரு, அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சி இந்த தடவையும் மேடை மேல ஏறி நடிகைகளை பார்க்க முடியாதுன்னு.

நாடக நடக்கும் நேரத்திலே மேடையிலே வலது பக்கத்தில் ஒலி,ஒளி அமைப்பிலே இருந்து இருவர் நிற்பார்கள், அவர்களின் வேலை, காட்சிக்கு ஏற்ப திரை சீலைகளை மாற்றுவர், வீடு என்றால் வீடு படம் போட்ட திரை சீலை பின்னால் இருக்கும், இது எப்படி அவர்களுக்கு தெரியும், நாடக நோட்டிலே ஒவ்வொரு காட்சி ஆரம்பிக்கும் முன்னே இருக்கும் முன்னே அந்த காட்சி எங்கு நடைபெறுகிறது, அதிலே பங்கு பெரும் நட்சத்திரங்கள் உட்பட தகவல் இருக்கும்.நாடக அமைப்பிலே இருந்து ஒருவர் காட்சி வாரியாக அது நடைபெறும் இடம், அதிலே பங்கு பெரும் நட்சத்திரங்கள், அந்த காட்சியிலே பயன்படும் பொருட்கள் அடக்கிய பட்டியல் வைத்து இருப்பார், அவர் அந்த காட்சிக்கு தேவையான பின்புலத்தை திரை சீலை மாற்றுபவருக்கு சொல்லுவார்.இவரு மேடையோட ஒரு பக்கத்திலே இருப்பாரு.

மேடைக்கு இடது பக்கத்திலே ஒருவர் நின்று கொண்டு நாடகத்திலே வரும் வசனங்களை கதா பாத்திரங்களோடு பேசுவார், பேசவேண்டிய வசனம் மறந்து போய் தலையை சொரிந்து கொண்டு மேடையிலே நிற்காமல் இருக்க ரெம்ப உதவியா இருக்கும்.

இதிலே நான் எந்த இடத்தை, ஏன் தேர்ந்து எடுத்தேன்னு காரணம் சொல்லி உங்களை கலவரபடுத்த விரும்ப வில்லை,எப்படியே கஷ்டப்பட்டு உழைச்சி வலது பக்கத்தை இடத்தை பிடித்து விட்டேன்.

ஒவ்வொரு காட்சி முடிந்ததும் நாடகம் பார்க்கிற மக்கள் சோர்ந்து போகாமல் இருக்க, ஒலி,ஒளி அமைப்பாளர் காட்சிக்கு சம்பந்தமான பாடலை பாடுவார், இந்த நேரத்திலே அடுத்த காட்சிக்கு தேவையான பொருட்களை தாயார் செய்வதும், நடிகர் நடிகைகைகளை தயார் செய்வதும் வழக்கம், எல்லாம் தயார் ஆனாவுடனே விசில் அடிக்கப்படும், உடனே அந்த காட்சியிலே நடிக்க வேண்டியவர்கள் மேடைக்கு வருவார்கள்.அதோட அந்த வேலை முடிந்து விடும், அப்புறம் வேடிக்கை பார்ப்பேன்.நாடக நடிகைகளை பக்கத்திலே இருந்து பார்த்ததிலே எங்க ஊரு காரங்க அவர்களுடன் சேர்ந்து ஆடிப் பாடியதை எல்லாம் பார்த்து நானும் நாடகத்திலே நடிக்கணும் முடிவு பண்ணினேன்.

அடுத்த வருஷம் கல்லூரியிலே சேர்ந்து இருந்தேன், திருவிழாவுக்கு விடுமுறை இல்லாததாலே,நடிகையோட ஆடிப் பாடனும் என்பதற்காக அவசர விடுமுறை எடுத்து வந்தேன்.கலைவெறி என்னை விட வில்லை,பழைய படியே நாடக நடிகர்களுக்கு வசனம் எழுதி கொடுத்தேன், அந்த வருஷம் யாரையும் தாக்கி நகைச்சுவை செய்ய வழி இல்லை. அவங்க நகைச்சுவைக்கு ஊறுகாயா இருந்தவர் காலமாகி விட்டதாலே அவரை தாக்கி எழுத முடியலை.

நாடகத்தோடு இருந்த ரெண்டு வருட தொடர்பிலே எனக்கு ஒரு ஆசை வந்தது. நான் யாரிடம் சொல்லாமல் ஒரு ஐந்து காட்சிக்கு நகைச்சுவை ன்னு நான் நினைச்சி எழுதி நாடக அமைப்ப்பாளரிடம் கொடுத்தேன்.

எழுதியதை படித்து விட்டு என்னை பார்த்தவர், "ஏல நீயா எழுதினியா, யாரவது எழுதியதை சுட்டுட்டு வந்துட்டியா"

"நான் தான் எழுதினேன்",அவர் நம்பின மாதிரி தெரியலை,ஆனா எப்படியே எழுத்து பிடிச்சி போய் நாடகத்திலே சேத்துகிட்டாரு.எழுதினதுக்கு பரிசா என்னையும் நடிக்க சொன்னாரு அவரு சொன்ன உடனே தூக்கம் எல்லாம் காணமப் போச்சி, எப்படி நடிக்கனுமுனு நானே ஒத்திகை பார்ப்பேன்.நாடகம் நடக்கும் தேதி வரைக்கும் நடிகர்கள் மட்டுமே ஒத்திகை எடுப்பார்கள், நாடக நடிகைகள் நாடகம் நடக்கும் அன்றைக்கு காலையிலே தான் ஊருக்கு வருவார்கள்.அதுநாள் வரைக்கும் ஒத்திகை அறை பக்கம் போகாத நான், அன்றைக்கு காலையிலே போய் காத்து கிடந்தேன்.

நாடக நடிகர்கள், நடிகைகள் நெருங்கி நடிக்கனுமுன்னு அவங்களுக்கு பிரியாணி, சோப்பு, சீப்பு, பாசிமணி, ஊசி மணி எல்லாம் வாங்கி கொடுப்பாங்க, என்னோட பொருளாதாரம் ரெம்ப மோசமா இருந்ததினாலே நான் வீட்டிலே இருந்து காசை திருடி இதெல்லாம் நானும் வாங்கி கொடுத்தேன்.

நான் அப்பத்தான் கல்லூரியிலே நடன குழுவிலே சேர்ந்து நடனம் கத்து கொண்டு வந்தேன்.

பாடலுக்கு ஒத்திக்கை செய்யும் போது என்னைப் பார்த்த நாடக நடிகை

"ஏன் அந்த கருப்பு அண்ணாச்சி பாட்டை போட்டு உடற்பயிற்சி செய்யுறாரு, அங்கே உடம்பிலே எழும்பும் தோலும் நல்ல வெளியே தெரியுது, இந்த உடற்பயிற்சி தேவையா?"

நவின நடன அமைப்பு அவங்க கண்ணுக்கு இப்படி தெரியுதே ஒரே வருத்தமா போச்சி.என்னோட ௬ட நடிக்கிற நடிகையோட காலிலே விழுந்து என் ௬ட நான் அமைக்கும் நடனத்துக்கு ஏத்த மாதிரி ஆட சம்மதிக்க ஆரமித்தேன், முதல்ல மறுத்த அந்த நடிகை ஒரு பவுடர் டப்பா வாங்கி கொடுத்த உடனே சம்மதித்தார்கள்.

பாட்டுக்கு ஒத்திகை பார்க்கும் போது நான் கையை காலை ஆட்டும் போது அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி விழுந்துட்டாங்க. எல்லோரும் ஓடி வந்து தண்ணி எல்லாம் தெளிச்சு பார்த்தாங்க, ஒன்னும் பிரயோசனம் இல்ல.எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு

(அவங்களுக்கு என்ன ஆச்சின்னு அடுத்த மொக்கையிலே பார்க்கலாமா)


16 கருத்துக்கள்:

Unknown said...

தலைவரே...
நடிகை செம பிகரா..?

சுமார் பிகரா...?

இல்ல சப்ப பிகரா....??

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்... நல்லாதான் நடிக்குரீங்க நண்பா,..

குடுகுடுப்பை said...

நடிகை நாட்டியம் ஆடுவாள் அடுத்த மொக்கையில்

Unknown said...

//அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி விழுந்துட்டாங்க. //

எல்லாரும் அந்த நர்ஸ் போல "வாசனைக்கு மூக்கு சாய்க்காமல்" இருக்க முடியுமா. எழுந்ததும் அந்த பவுடர் டப்பாவோட ஒரு லைப்பாய் சோப்பும் திருப்பி கொடுக்கப் போறாங்க.. பாருங்க.

Unknown said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

புதியவன் said...

//"ஏன் அந்த கருப்பு அண்ணாச்சி பாட்டை போட்டு உடற்பயிற்சி செய்யுறாரு, அங்கே உடம்பிலே எழும்பும் தோலும் நல்ல வெளியே தெரியுது, இந்த உடற்பயிற்சி தேவையா?"//

ஏரோபிக் உடற்பயிற்சியை கண்டு பிடிச்சது நீங்க தானா...?

புதியவன் said...

//எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு//

உங்க கலைவெறி
கொலைவெறியா போயிடுச்சாண்ணே...?

sakthi said...

எப்படி நடிக்கனுமுனு நானே ஒத்திகை பார்ப்பேன்.நாடகம் நடக்கும் தேதி வரைக்கும் நடிகர்கள் மட்டுமே ஒத்திகை எடுப்பார்கள், நாடக நடிகைகள் நாடகம் நடக்கும் அன்றைக்கு காலையிலே தான் ஊருக்கு வருவார்கள்.அதுநாள் வரைக்கும் ஒத்திகை அறை பக்கம் போகாத நான், அன்றைக்கு காலையிலே போய் காத்து கிடந்தேன்.


உங்கள் காத்திருப்பு பயனளித்ததா....

sakthi said...

ஏன் அந்த கருப்பு அண்ணாச்சி பாட்டை போட்டு உடற்பயிற்சி செய்யுறாரு, அங்கே உடம்பிலே எழும்பும் தோலும் நல்ல வெளியே தெரியுது, இந்த உடற்பயிற்சி தேவையா?"

அருமையான கேள்வி

sakthi said...

பாட்டுக்கு ஒத்திகை பார்க்கும் போது நான் கையை காலை ஆட்டும் போது அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி விழுந்துட்டாங்க. எல்லோரும் ஓடி வந்து தண்ணி எல்லாம் தெளிச்சு பார்த்தாங்க, ஒன்னும் பிரயோசனம் இல்ல.எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு


ஹ ஹ ஹ ஹ

என்ன சாப்பிட்டுட்டு போயிருந்தீங்க...

தமிழ் அமுதன் said...

intha vaara kungumam vaara ithalil ungal pathivu....

RAMYA said...

இந்த வாரம் குங்குமம் வாரப் பத்திரிக்கையிலே உங்களோட "காதலன் காதலி" இடுகை வெளியிட்டிருகின்றார்கள்.

வாழ்த்துக்கள் நண்பா!!

RAMYA said...

இந்த பதிவை இன்னும் படிக்கலை, படிச்சப்புறம் பின்னூட்டம் போடப்படும் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பா :))

Nalla Thambi said...

adadey Nalla erukey unnoda kathai sollura murai...

வில்லன் said...

//முதல்ல மறுத்த அந்த நடிகை ஒரு பவுடர் டப்பா வாங்கி கொடுத்த உடனே சம்மதித்தார்கள்.

பாட்டுக்கு ஒத்திகை பார்க்கும் போது நான் கையை காலை ஆட்டும் போது அவங்க மூக்கிலே கை பட்டு மயங்கி விழுந்துட்டாங்க. எல்லோரும் ஓடி வந்து தண்ணி எல்லாம் தெளிச்சு பார்த்தாங்க, ஒன்னும் பிரயோசனம் இல்ல.எல்லோருக்கும் பயம் வந்து விட்டது நாடக நடிகை மண்டைய போட்டாங்களோன்னு//

யோவ் பவுடர் டப்பா வங்கிகொடுதீரா இல்ல மயக்கமருந்து வாங்கி கொடுதிரா!!!!!!!!!!!!

ராஜ நடராஜன் said...

நாடகத்துக்குள்ள இத்தனை விசயம் இருக்குதா?