Friday, July 3, 2009

பதிவரும், பதிவியும்

"ஹாய்.. எப்படி இருக்கீங்க?"

"ம்ம்.. நலம்.. என்னோட நேத்தைய இடுகை எப்படி"

"நச்.. பட்டைய கிளப்பீட்டீங்க... அழுத்தமான வரிகள், இதயம் கனத்தது "

"அழுத்தமான வரிகள் எங்கே இருக்கு, நான் நகச்சுவை இடுகை போட்டேன்."

"அது உனக்கு, படிக்கிற எங்களுக்கு அப்படித்தான் இருக்கு"

"உண்மையாவா ?"

"இல்லை..இல்லை.. ஒரு இடுகைக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை உனக்கு போட்டேன், காபி, பேஸ்ட் பிரச்சனை"

"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது"

"ம்ம்.. தனி பைல்ல வைக்கிறேன் இனிமேல"

"என்னோட இடுகை எப்படி இருக்கு?"

"சூப்பரோ... சூப்பர்"

"உண்மையாவா?"

"ஆமா, அதும் மூனாவது பத்தியிலே ஒரு "க்" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா ? , சான்சே இல்லை, நான் இன்னும் அந்த "க்" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்"

"நீங்க பெரிய நுண் எலகியவாதியா இருப்பீங்க போல, இடுகையை முழம் போட்டு ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்க "

"எப்படி பினவினத்துவத்திலே பின்னி படல் எடுக்குறீங்க?, அதும் கடைசி வரி இன்னும் மனசிலே இருக்கு, 'கஞ்சா குடித்தான்', படிக்கிற எல்லோரும் கஞ்சாவா இருக்குமுன்னு நினைக்கும் போது, அது கஞ்சாவும் இருக்குன்னு யாருக்கு தெரியும். சோளக்கஞ்சி, கேப்பங்கஞ்சி, இப்படி ரெண்டு வாரிதையிலே ரெண்டாயிரம் அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்"

"இவ்வளவு திறமையுள்ள இடுகைக்கு, இடுகை வெளியிட்டு ரெண்டு நாளாச்சி, இன்னும் ரெண்டு ஹிட் ௬ட வரலை, அதுல ஒரு ஹிட் நான்"

"இன்னொன்று நான்..உங்களுக்காவது பரவாஇல்லை ரெண்டுநாளிலே ரெண்டு ஹிட், எனக்கு ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் ரெண்டு ஹிட் தாண்டலை"

"சரி அதை விடுங்க,அடுத்த இடுகை என்ன?"

"பெண்ணாதிக்கம் உள்ள இடுகை, அதுதான் என்ன பண்ணனு யோசித்து கொண்டே இருக்கேன், எல்லாம் எழுதி விட்டேன்,ஆணாதிக்க வாதிகள் சண்டைக்கு வரக்௬டாது, என்னாலே வலைப்பதிவர்கள் போராட்டம், கடை அடைப்புன்னு கிளம்பக்௬டாது, அதனாலே தான் இடுகையை வெளிடாம இருக்கேன்"

"என்னது ஆணாதிக்கமா!!!! அது எங்கே எங்கே இருக்கு?, கல்யாணம் ஆனவங்களுக்கு நல்லா தெரியும் யாரு ஆதிக்கம் பண்ணுறான்னு, கல்யாணம் ஆகாதவங்க துண்டு போட ஆள் தேடி சுத்திகிட்டு இருப்பாங்க, இப்படி எல்லாம் பெண்களை சுத்தியே ஆண்கள் வாரதாலே தான் ஆண் ஆதிக்கமுன்னு சொல்லுறாங்க"

"யாம்மாடியோ.. எம்புட்டு பெரிய தத்துவம், இப்படி எளிமையா சொல்லிட்டீங்க, நீங்க சொன்னது உண்மைதான், கலயாணம் ஆனா நாளிலே இருந்து என் வீட்டிலே அவரு தான் சமையல்"

"என் வீட்டிலேயும் நான் தான் சமைக்கிறேன்"

"என் அறிவு கண்ணை திறந்துடீங்க"

"ப்ளீஸ்..இடுகையோட ஒரு வரி கதை சொல்லுங்க, இடுகை வெளியாகிற வரைக்கும் எனக்கு பொறுமை இருக்காது.. "

"இடுகையிலே ஒரு பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து ஒரு ஆண் திருமணம் செய்யுற மாதிரி, திருமணத்துக்கு அப்புறம் மறு வீட்டுக்கு ஆண் சொல்வதாகம், திருமணத்துக்கு அப்புறம் ஆண் பேரிலே இருக்கிற சொத்தை எல்லாம் பெண் பெயரிலே எழுதி வைக்கிற மாதிரி கதை, வழக்கமான குடும்ப சண்டை வந்தால் ஆண் கோவிச்சிக்கிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்டுவாரு,எப்படி இருக்கு ?"

"எனக்கு இப்பவே வயத்தை கலக்குது?"

"ஏன் வீட்டிலே உங்க தங்கமணி சமையலா ?"

"இல்லை இடுகையோட விஷயம் கேள்விப்பட்டு"

"இந்த இடுகை விஷயம் உண்மை, துத்துக்குடி பக்கம் ஒரு ஊரிலே உண்மையா நடக்குது?..ஹி.. ஹி, அது எங்க ஊரு தான் "

"ஆகா .. எனக்கு இப்பத்தான் பல உண்மைகள் தெரியுது, நீங்க என் அறிவு கண்ணை திறந்துடீங்க, என் தலையிலே ஒளி வட்டம் தெரியுது, மனிதனா இருந்த நான் மகான் ஆகிட்டேன்"

"கூல் டவுன்..கூல் டவுன்.. என் இவ்வளவு உணர்ச்சி படுறீங்க.. என்னாச்சு?"

"இல்ல என் தங்கமணியும் உங்க ஊரு தான்ங்கிற உண்மை எனக்கு இப்பத்தான் தெரிஞ்சது"

"அப்படியா!!!! ரெம்ப சந்தோசம், இனிமேல சண்டை வந்தா என் பேரை சொல்லுங்க ?"

"ஏன் அடியே விழாதா ?"

"இல்ல அடி குறைவா விழும்"

"ஆமா உங்க உண்மையான பேரு என்ன ?"

"... இதுதான்.. யாரிடமும் சொல்லாதீங்க?"

"என் தங்கமணி பேரும் இதுதான்"

"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா ?"

"வாவ்வ்.. எப்படி இப்படி தெளிவா சொல்லுறீங்க, நீங்க ஒரு திர்க்கதரிசி "

"அடச்சீ.. நான் தான் உன் பொண்டாட்டி"

"கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது, இது பின்னூட்ட காபி இல்லை"

"வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்"

47 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

"பதிவரும், பதிவியும் உதையும்”

Mahesh said...

இஃகி இஃகி இஃகி !!!

Anonymous said...

:))

ILA

தினேஷ் said...

:) நல்லா பனித்தது..

ராஜ நடராஜன் said...

//"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது"//

இதென்ன புது டெக்னிக்!!!!!!

அ.மு.செய்யது said...

கடைசில வச்ச ட்விஸ்ட்டு அல்டிமேட்டு..

மறுபடியும் நீங்க "ஆலிவர் டிவிஸ்ட்டுனு" ப்ரூப் பண்ணிட்டீங்க தல.

ஹா......ஹா....

சந்தனமுல்லை said...

:-)))))//"அழுத்தமான வரிகள் எங்கே இருக்கு, நான் நகச்சுவை இடுகை போட்டேன்."

"அது உனக்கு, படிக்கிற எங்களுக்கு அப்படித்தான் இருக்கு"//

அவ்வ்வ்வ்வ்வ்!

சந்தனமுல்லை said...

//அ.மு.செய்யது said...

கடைசில வச்ச ட்விஸ்ட்டு அல்டிமேட்டு..

மறுபடியும் நீங்க "ஆலிவர் டிவிஸ்ட்டுனு" ப்ரூப் பண்ணிட்டீங்க தல.

ஹா......ஹா...//

ரிப்பீட்டு!

sakthi said...

சந்தனமுல்லை said...

//அ.மு.செய்யது said...

கடைசில வச்ச ட்விஸ்ட்டு அல்டிமேட்டு..

மறுபடியும் நீங்க "ஆலிவர் டிவிஸ்ட்டுனு" ப்ரூப் பண்ணிட்டீங்க தல.

ஹா......ஹா...//

ரிப்பீட்டு!

நானுமுங்க ரீப்பீட்டிடுகிறேன் நசரேயன் அண்ணா....

sakthi said...

"ஆமா, அதும் மூனாவது பத்தியிலே ஒரு "க்" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா ? , சான்சே இல்லை, நான் இன்னும் அந்த "க்" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்"

நல்லா யோசிக்கறாங்கய்யா....

sakthi said...

சோளக்கஞ்சி, கேப்பங்கஞ்சி, இப்படி ரெண்டு வாரிதையிலே ரெண்டாயிரம் அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்"

புதிய குறள்

sakthi said...

ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா ?"

ஹ ஹ ஹ ஹ

ஏன் அண்ணா இப்படி ஒரு சுயவிளக்கம்...

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... எப்படி யெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்//

:-)))

ஆ.ஞானசேகரன் said...

//"எனக்கு இப்பவே வயத்தை கலக்குது?"//

எப்படி எப்படியோ யோசிக்கின்றீர்கள்

Anonymous said...

//அடச்சீ.. நான் தான் உன் பொண்டாட்டி"//

இஃகி இஃகி

Anonymous said...

ada nijamave appidi oru ooru irukkungo, Nadanthathu ennala pakkalaya!!

Unknown said...

ஏனுங் பதிவி .... இது உங்க ரொம்பநாள் கனவா.....?? நெம்ப சந்தோசமுங்.......!!!! நல்லாருங்க.... நல்லாருங்க...!!!!!

துளசி கோபால் said...

ஹைய்யோ ஹைய்யோ:-)))

எப்படிங்க இப்படி!!!!

கலக்கல்.

மித்ரு மை ஃப்ரெண்ட்.

Anonymous said...

:)

சென்ஷி said...

ஹா ஹா ஹா

செம்ம கலக்கல்! :))))

Anonymous said...

சந்துல சிந்து பாடுவது இது தானோ...
நைசா இந்த பதிவுலக டெக்னிக் எல்லாம் சொல்லீட்டீங்க...பெரிய ஆள் சார் நீங்க.....ஆனால் இந்த காபி பேஸ்ட் மேட்டரு உண்மைத்தாங்கோ... பரவலா இருக்கு...

//"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது"//

இது செம காமிடி...வழக்கம் போல நல்லாவே சிரிச்சேன்....

Unknown said...

///அதும் மூனாவது பத்தியிலே ஒரு "க்" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா ? , சான்சே இல்லை,///

ஹா ஹா ஹா ...லேட்டா வந்தாலும்/.

:))

ராமய்யா... said...

கலக்கல்

RAMYA said...

//
"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது"
//

இப்படி எல்லாம் வேறே பண்றீங்களா?

RAMYA said...

//
"ஆமா, அதும் மூனாவது பத்தியிலே ஒரு "க்" போட்டு அது அடைப்புக்குள்ளே (க்) இப்படி போட்டீங்களா, அந்த எழுத்துக்கு எவ்வளவு அர்த்தம் தெரியுமா ? , சான்சே இல்லை, நான் இன்னும் அந்த "க்" பத்தி யோசித்து கிட்டு இருக்கேன்"
//

இத்தை பத்திதான் நானும் யோசிச்சு யோசிச்சு
ஒண்ணுமே புரியலையே.

ஒரு "க்" இவ்வளவு பெரிய சர்ச்சையாகிவிடுமா?

வால்பையன் said...

அவ்ளோதானா!

இல்ல பூரிகட்டை எதாவது உடஞ்சதா!

RAMYA said...

//
"எப்படி பினவினத்துவத்திலே பின்னி படல் எடுக்குறீங்க?, அதும் கடைசி வரி இன்னும் மனசிலே இருக்கு, 'கஞ்சா குடித்தான்', படிக்கிற எல்லோரும் கஞ்சாவா இருக்குமுன்னு நினைக்கும் போது, அது கஞ்சாவும் இருக்குன்னு யாருக்கு தெரியும். சோளக்கஞ்சி, கேப்பங்கஞ்சி, இப்படி ரெண்டு வாரிதையிலே ரெண்டாயிரம் அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்"
//

ரெண்டாயிரமா அர்த்தம் இருக்கிற ஒரு குட்டி குறள்??

ஐயோ எனக்கு ஒண்ணுமே புரியலையே
இது நசரேயன் ப்லோக்தானே :))

RAMYA said...

//
"இன்னொன்று நான்..உங்களுக்காவது பரவாஇல்லை ரெண்டுநாளிலே ரெண்டு ஹிட், எனக்கு ரெண்டு மாசம் ஆகியும் இன்னும் ரெண்டு ஹிட் தாண்டலை"
//

இது சூப்பர் :))

RAMYA said...

//
"என்னது ஆணாதிக்கமா!!!! அது எங்கே எங்கே இருக்கு?, கல்யாணம் ஆனவங்களுக்கு நல்லா தெரியும் யாரு ஆதிக்கம் பண்ணுறான்னு, கல்யாணம் ஆகாதவங்க துண்டு போட ஆள் தேடி சுத்திகிட்டு இருப்பாங்க, இப்படி எல்லாம் பெண்களை சுத்தியே ஆண்கள் வாரதாலே தான் ஆண் ஆதிக்கமுன்னு சொல்லுறாங்க"
//

புது மாதிரி விளக்கமா இருக்கு :)

RAMYA said...

//
யாம்மாடியோ.. எம்புட்டு பெரிய தத்துவம், இப்படி எளிமையா சொல்லிட்டீங்க, நீங்க சொன்னது உண்மைதான், கலயாணம் ஆனா நாளிலே இருந்து என் வீட்டிலே அவரு தான் சமையல்"
//

சாப்பாடு நல்லா இருக்குமான்னு கேளுங்க :))

RAMYA said...

//
"ப்ளீஸ்..இடுகையோட ஒரு வரி கதை சொல்லுங்க, இடுகை வெளியாகிற வரைக்கும் எனக்கு பொறுமை இருக்காது.. "
//

ஒரு வரி கதை சொன்னா கேக்கறவங்க கதை அதோட முடிஞ்சிடும்னு சொல்லுங்க :-)

RAMYA said...

//
"இடுகையிலே ஒரு பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்து ஒரு ஆண் திருமணம் செய்யுற மாதிரி, திருமணத்துக்கு அப்புறம் மறு வீட்டுக்கு ஆண் சொல்வதாகம், திருமணத்துக்கு அப்புறம் ஆண் பேரிலே இருக்கிற சொத்தை எல்லாம் பெண் பெயரிலே எழுதி வைக்கிற மாதிரி கதை, வழக்கமான குடும்ப சண்டை வந்தால் ஆண் கோவிச்சிக்கிட்டு அவங்க அப்பா வீட்டுக்கு போய்டுவாரு,எப்படி இருக்கு ?"
//

ஹா ஹா ஐடியா நல்லா இருக்கு :))
இதெல்லாம் உங்க கனவுலே வந்துச்சா??

RAMYA said...

//
"ஆகா .. எனக்கு இப்பத்தான் பல உண்மைகள் தெரியுது, நீங்க என் அறிவு கண்ணை திறந்துடீங்க, என் தலையிலே ஒளி வட்டம் தெரியுது, மனிதனா இருந்த நான் மகான் ஆகிட்டேன்"
//

ஆஹா!! இதெ படிக்கும்போது எனக்கு கூட என் தலைக்கு பின்னாடி ஒளிவட்டம் சுத்தறது போல ஒரே பீலிங்கா இருக்கு :-)

RAMYA said...

//
"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா ?"
//

கடைசியிலே பாயிண்ட் பிடிச்சுட்டாங்களே :))

RAMYA said...

//
"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா ?"
//

கடைசியிலே பாயிண்ட் பிடிச்சுட்டாங்களே :))

குடந்தை அன்புமணி said...

ஹா....ஹா....பட்டையைக் கிளப்பீட்டீங்க போங்க... நச் பதிவு. என்ன ஒரு அழுத்தமான வரிகள். ஹா.... ஹா...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) மித்ரு மை ப்ரண்ட் வெர்ஷனா ?

கார்த்திகைப் பாண்டியன் said...

கலக்கல்..:-))))இதுல ரம்யாக்கா கும்மி வேற? ஓகே ஓகே...

கடவுள் said...

நீங்க என் அறிவு கண்ணை திறந்துடீங்க, என் தலையிலே ஒளி வட்டம் தெரியுது, மனிதனா இருந்த நான் மகான் ஆகிட்டேன்"
//

ஒளி வட்டம் எனக்கே உரியது மாமே...

Prabhu said...

ஹி... ஹி...

கடைசில என்ன கொடும சரவணன்...

வீடியோ சாட்ல டிரஸ் அவுத்திட்டிருப்பாங்க! அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த இரஸ் போட்டிருப்பாங்க! avoid sex in net... இதுதான் மெசேஜ்... இந்த வீடியோ

Prabhu said...

ஹி... ஹி...

கடைசில என்ன கொடும சரவணன்...

வீடியோ சாட்ல டிரஸ் அவுத்திட்டிருப்பாங்க! அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த டிரஸ் போட்டிருப்பாங்க! avoid sex in net... இதுதான் மெசேஜ்... இந்த வீடியோ in youtube. try பண்ணுங்க!

அப்துல்மாலிக் said...

கண்கள் பனித்தன இந்த பதிவை பார்த்துட்டு

நல்லாயிருந்தது தல‌

வில்லன் said...

//"கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது, இது பின்னூட்ட காபி இல்லை"

"வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்"//

வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா மண்டை கணக்கும் அடிக்குற அடில.......

வில்லன் said...

//"ஒ..அப்படியா.. ஒரு நிமிஷம்.. நீங்க ஆளு கருவா குஞ்சு மாதிரி, சட்டைக்கும் உடம்புக்கும் சம்பந்தம் இல்லாம கரடி மாதிரி இருப்பீங்க.. சரியா ?"

"வாவ்வ்.. எப்படி இப்படி தெளிவா சொல்லுறீங்க, நீங்க ஒரு திர்க்கதரிசி "

"அடச்சீ.. நான் தான் உன் பொண்டாட்டி"

"கண்கள் பனித்தது .. இதயம் கனத்தது, இது பின்னூட்ட காபி இல்லை"

"வீட்டுப்பக்கம் வா.. கண்டிப்பா கண்கள் பனிக்கும்"//

ஒரே பதிவா எழுதிகிட்டே இருந்தா இப்படி தான்... நெஜமா இல்ல என் கனவில் தென் பட்டதான்னு ஒரே கொழப்பமா இருக்கும். உப்ப தின்னவன் தண்ணிய குடிச்சி தான ஆகணும்..... வேற வழி.... வீட்டுல போயி அடிய வாங்கிட்டு வலிக்கு எண்ண போடுங்க போங்க.........

வில்லன் said...

// pappu said...
ஹி... ஹி...

கடைசில என்ன கொடும சரவணன்...

வீடியோ சாட்ல டிரஸ் அவுத்திட்டிருப்பாங்க! அப்போ, டின்னருக்கு கூப்டுவாங்க. அங்க வந்தா அக்கவும் தம்பியும்தான் அந்த இரஸ் போட்டிருப்பாங்க! avoid sex in net... இதுதான் மெசேஜ்... இந்த வீடியோ//

போட்டுடாங்கப்பா தப்பா....

pappu
"இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது"

தலைவர் சொன்னத follow பன்னுங்க சரியா......

கிரி said...

//இடுக்கைக்கு போடுற பின்னூட்டத்தை தனித்தனியா பைல்ல சேவ் பண்ணி வச்சிக்கணும், அப்பத்தான் இந்த குழப்பம் வராது//

ஹி ஹி ஹி