Wednesday, December 31, 2008

உருப்புடாதது_அணிமாவின் தியாகம்



சும்மா மொக்கை பதிவுகளை போட்டு பொழைப்பை ஓட்டிகிட்டு இருந்த எனக்கு உருப்புடாதது_அணிமா போறபோக்குல எனக்கு பட்டாம் பூச்சியை பிடிச்சு காலை ஓடிச்சு என் கையிலே கொடுத்து புட்டாரு, பின்னூட்ட பிதா மகன் கொடுததனாலே அதை புல்லா வாங்கிகிட்டேன், கொடுத்ததோடு விடாம இதை பிரிச்சி கொடுங்க ன்னு சொத்தை பிரிச்சி கொடுக்க மாதிரி சொல்லி புட்டாரு.அவரை பத்தி இன்னும் ஒன்னும் சொல்லணும், எனது முதல் பதிவுக்கு முத போணி பண்ணினவரும் அவருதான்.


யாருக்கு திருப்பி கொடுக்கலாம்ன்னு யோசிக்க பாத்தப்ப ஆளே இல்லாத கடையிலே எப்போதும் டீ வாங்க வார என் சக தோழர்கள் குடுகுடுப்பைக்கும், பழமைபேசிக்கும் தான் குடுக்கிறது முறை, இருந்தாலும் யோசிக்கிறேன்.யோசிக்கும் போது கடை பக்கம் வார ஏனைய நண்பர்களை சும்மா விடலாமா, அது தமிழர் பண்பாடு அல்ல.அதனாலே அவங்களுக்காக



நீ


குண்டுசியையே தூக்கி விட்டாயே


என


பாராட்ட ஓடி வந்த


என்னை


கொணிஊசியால்


குத்தி விட்டாயே


-----------------------------------------------


உனக்காக


அதிகாலையில் இருந்து


அந்தி மாலை வரை காத்திருந்தேன்


மனம் மயக்கும் மாலையில்


வந்த நீயும் காதலிகிறாய்


உன்னுடன் வந்த மந்தியை


என நானும் தெரிந்து கொண்டேன்


------------------------------------------------


என்


நிரந்தர காதலி எங்கோ


பசலை நோயால் வாட


அவசர காதலியான


உன்னுடன் எப்படி


பசை போல்


ஒட்டமுடியும்


-----------------------------------------------------


உன்


கொலுசு மணி ஓசைக்கு


மகிழ்ந்தது என் மனம் மட்டுமல்ல


சேட்டுவின் மனமும் தான்


--------------------------------------------------------------


எல்லோரும் போதும் போதும் என்று சொல்லுவது எனக்கும் கேட்கிறது, அதனாலே வாசகர்கள்(?) நலன் கருதி விட்டுறேன், நீங்களும் விட்டுடுங்க,போறதுக்கு முன்னாடி யாருக்கு விருது கொடுகிறதுன்னு சொல்லனுமா, இது வரைக்கும் யார் யார்க்கு எல்லாம் கிடைக்கலையோ அவங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன், இவ்வளவு பெரிய மனசு பண்ணி விருது கொடுத்த எனக்கு பாராட்டு விழா, பரிசு ஏதும் வேண்டாம் என கேட்டுகிறேன் . விருது கிடைச்ச நீங்க என்ன செய்யணுமுன்னு இங்கே பாருங்க

http://urupudaathathu.blogspot.com/2008/12/butterfly-effect.html


24 கருத்துக்கள்:

பழமைபேசி said...

முழுநீள நகைச்சுவை நாடகம் மட்டும் இல்ல, சுருக்குன்னு மனசத் தைக்கிறாப்புல கவிதையும் வரும்ன்னு காண்பிக்கிறாரு வலைஞர் தளபதி.

போடு சபாசு!

குடுகுடுப்பை said...

உன்

கொலுசு மணி ஓசைக்கு

மகிழ்ந்தது என் மனம் மட்டுமல்ல

சேட்டுவின் மனமும் தான் /

கொலுசு தங்கமா?

இராகவன் நைஜிரியா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

புத்தாண்டு பிறக்கும் போதே, விருதுகள் தேடி வந்து கொண்டு இருக்கின்றன.

மேலும் மேலும் பல விருதுகளை பெற வாழ்த்துக்கள்

Anonymous said...

விருதுக்கு வாழ்துக்கள், புத்தாண்டு வாழ்துக்களும்

அத்திரி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

RAMYA said...

விருது வாங்கி விட்டாய் நண்பா
அடுத்த விருது எப்போ நண்பா
விருதுக்கும் ஒரு கவிதையா நண்பா

மேன் மேலும் பல விருதுகள் வாங்கி
அதற்கு பல கவிதைகளை வழங்கி
எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த
வாழ்த்துக்கள் வருவது யாரிடம் - இருந்து
பூலான் தேவிடம் இருந்ததுதான்

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

பிரிச்சி கொடுத்த வள்ளல் வாழ்க வளர்க்க

http://urupudaathathu.blogspot.com/ said...

//"உருப்புடாதது_அணிமாவின் தியாகம்"//

என்னவோ ஏதோன்னு அலறி அடிச்சிக்கிட்டு வந்தா????

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்லவேளை தியாகி அணிமான்னு சொல்லாம விட்டீங்களே ..

அதுக்கே உங்களுக்கு பெரிய கும்முடு

http://urupudaathathu.blogspot.com/ said...

//சும்மா மொக்கை பதிவுகளை போட்டு பொழைப்பை ஓட்டிகிட்டு இருந்த எனக்கு ///

இந்த டகால்ட்டி வேலை தானே வேணாங்கிறது ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//உருப்புடாதது_அணிமா போறபோக்குல எனக்கு பட்டாம் பூச்சியை பிடிச்சு காலை ஓடிச்சு என் கையிலே கொடுத்து புட்டாரு,///

எங்க கொஞ்சம் தெளிவா சொல்லுங்க, உங்க காலை உடைச்சா, இல்ல பட்டாம் பூச்சி கால??

http://urupudaathathu.blogspot.com/ said...

//யாருக்கு திருப்பி கொடுக்கலாம்ன்னு யோசிக்க பாத்தப்ப ஆளே இல்லாத கடையிலே எப்போதும் டீ வாங்க வார என் சக தோழர்கள் குடுகுடுப்பைக்கும், பழமைபேசிக்கும் தான் குடுக்கிறது முறை, ///

இந்த வார்த்தைகளை நீக்கும் வரை கால வரையற்ற உண்ணும் விரதம் இருப்பேன்..
அண்ணே ஒரு டி போடுங்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

///யோசிக்கும் போது கடை பக்கம் வார ஏனைய நண்பர்களை சும்மா விடலாமா, அது தமிழர் பண்பாடு அல்ல.அதனாலே அவங்களுக்காக //

அந்த மொக்கை கவுஜைகளை சமர்ப்பணமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

//நீ
குண்டுசியையே தூக்கி விட்டாயே
என
பாராட்ட ஓடி வந்த
என்னை
கொணிஊசியால்
குத்தி விட்டாயே ///

அதுக்காக இப்படி கடப்பாரையால (கவுஜையால ) குத்தனுமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///உன்
கொலுசு மணி ஓசைக்கு
மகிழ்ந்தது என் மனம் மட்டுமல்ல
சேட்டுவின் மனமும் தான்
-----//////////


உங்க இன்னொரு பேரு சேட்டா??

http://urupudaathathu.blogspot.com/ said...

///என்
நிரந்தர காதலி எங்கோ
பசலை நோயால் வாட
அவசர காதலியான
உன்னுடன் எப்படி
பசை போல்
ஒட்டமுடியும்///


அடப்பாவி??

அவனா நீயி ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//எல்லோரும் போதும் போதும் என்று சொல்லுவது எனக்கும் கேட்கிறது, //

நான் போதும் போதும் அப்படின்னு கேக்க மாட்டேன்..
அட்ரஸ் என்ன என்ன அப்படின்னு தான் கேப்பேன் ..

S.R.Rajasekaran said...

))))))

S.R.Rajasekaran said...

\\\என்
நிரந்தர காதலி எங்கோ
பசலை நோயால் வாட
அவசர காதலியான
உன்னுடன் எப்படி
பசை போல்
ஒட்டமுடியும்\\\


என்ன மாப்பிள்ளை டபுள் ட்ராக் ஓட்டுற மாதிரி தெரியுது

Aero said...

////உன்
கொலுசு மணி ஓசைக்கு
மகிழ்ந்தது என் மனம் மட்டுமல்ல
சேட்டுவின் மனமும் தான்
/////
dei unnala enakum ennoda shanthi-kum sandai...

the Question is "why settu is happy?"

nan soonen antha kolusu settu kadaiku adamanathuku poidum..so settu is happy.

but she said there is secret relation between that girl and settu....

now tell me which is truth?

நசரேயன் said...

வந்து கருத்து சொன்ன அனைவருக்கும் கோடான கோடி நன்றி