இதயம் நின்றது
கண்கள் சந்தித்தபோது
கருவிழிகள் நின்றது
வார்த்தைகள் சந்தித்தபோது
மௌனம் நின்றது
மனங்கள் சந்தித்தபோது
மதங்கள் நின்றது
இதயங்கள் சந்தித்தபோது
இன்னல் நின்றது
திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது
----------------------------------------
தென்றலென தீண்டிய
விழி சுழலின்
ஆழிக் காற்றிலே
சிறகில்லாமல்
பறந்த போது தான் தெரிந்தது
நீ
ஓர் புயலென
34 கருத்துக்கள்:
சூப்பரப்பு,
திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது.
..
எங்கேயோ இடிக்கிரதே
நசரேயன்..என்ன சொல்ல...
ம்..ம்...ம்...
பிரமாதம்
\\”இதயம் நின்றது”\\
அச்சச்சோ ...
\\மனங்கள் சந்தித்தபோது
மதங்கள் நின்றது \\
அருமை ...
\\திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது\\
ஆஹா என்னமோ ஆயிடிச்சி ...
\\தென்றலென தீண்டிய
விழி சுழலின்
ஆழிக் காற்றிலே
சிறகில்லாமல்
பறந்த போது தான் தெரிந்தது
நீ
ஓர் புயலென \\
அருமையான வரிகள் ...
நீ காற்று
நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
வேரோடு புடிங்கிவிட்டாயே
அடடே நீ புயலா ...
// குடுகுடுப்பை said...
சூப்பரப்பு,
திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது.
..
எங்கேயோ இடிக்கிரதே
//
ரிப்பீட்டே...
அண்ணே.. கொஞ்சம் தள்ளி உக்காருங்க.. இடிக்காது...ஹிஹி
அருமை....
//கண்கள் சந்தித்தபோது
விழிகள் நின்றது //
கண்கள் சந்தித்தபோது
மனம் நின்றது!
அருமை
நண்பரே
வாழ்த்துகள்
உன் அண்ணனை சந்தித்தபோது
காதலும் நின்றது
ஆகா கிளம்ப்பிட்டாரையா...
//திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது///
என்ன இப்படி பொளந்து கட்டுரீங்க??
யாரது ? எங்க இருக்காங்க??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
என்னால முடில...
எப்படி இப்படி???
அவ்வ்வ்வ்வ்வ்
உங்க சோகத்த மறக்க நான் தண்ணி அடிக்க போறேன்
lol!
செண்டிமென்டா இருக்கேன்னு படிச்சிக்கிட்டே வந்தா...
//திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது
//
:-)
//சிறகில்லாமல்
பறந்த போது தான் தெரிந்தது
நீ
ஓர் புயலென //
நல்லாருக்கு!!
அருமை.. அருமை.. அப்படின்னு சொல்லியிருக்கலாம். புரிஞ்சிருந்தா. இதுக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு போல :))
இத்தன பேரு சொல்லும் போது நல்லாயில்லாமயா இருக்கும்.
நல்லா இருக்கு !!
நல்லா இருக்கே.....
ஹ்ம்ம்ம்... இப்பிடியெல்லாம் எழுதி எழுதி என்னயும் ஒரு கவிஞ(!)னாக்கிட்டிங்களே.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..... போங்க போய் என் பதிவப் பாருங்க.
//
கண்கள் சந்தித்தபோது
விழிகள் நின்றது
வார்த்தைகள் சந்தித்தபோது
மௌனம் நின்றது
மனங்கள் சந்தித்தபோது
மதங்கள் நின்றது
இதயங்கள் சந்தித்தபோது
இன்னல் நின்றது
திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது
//
ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க
படிச்சதிலே எனக்கு வார்த்தைகள்
நின்றுவிட்டன நண்பா
என்னா எழுதுவதுன்னே
தெரியலை போங்க
அசத்திபிட்டீங்க
சரி நின்ன இதயம் எப்போ
ஓட ஆரம்பிச்சது???
அதே சொல்லவே இல்லே???
உன் கவியை படித்தவுடன்
என் மௌஸ் நின்றது
கி போர்ட் நின்றது
மானிட்டர் நின்றது
ராம் நின்றது
ஹர்ட் டிஸ்க் நின்றது
மொத்தத்தில் என் சிஸ்டம் நின்றது
//
தென்றலென தீண்டிய
விழி சுழலின்
ஆழிக் காற்றிலே
சிறகில்லாமல்
பறந்த போது தான் தெரிந்தது
நீ
ஓர் புயலென
//
போட்டு தாக்கிட்டீங்க
எப்படி தப்பிச்சீங்க??
பறந்தா காற்று
ஓவரா அடிச்சிருக்குமே
சிறகு பிச்சிக்கலை
//
S.R.ராஜசேகரன் said...
உன் கவியை படித்தவுடன்
என் மௌஸ் நின்றது
கி போர்ட் நின்றது
மானிட்டர் நின்றது
ராம் நின்றது
ஹர்ட் டிஸ்க் நின்றது
மொத்தத்தில் என் சிஸ்டம் நின்றது
//
அட இங்கே பாருய்யா
S.R. ராஜசேகர் அவர்கள்
இங்கேயும் கும்மி அடிக்கறாரு
தனியா உக்காந்து டீ அத்தினா
போர் அடிக்குது நான் கிளம்பறேன்
நசரேயன், வாட் ஈஸ் திஸ்? கொஞ்சம் பேரு மனசு வருத்தப்படக்கூடாதுன்னு நல்லாருக்குன்னு சொன்னா, ரொம்ப அப்பாவியா அதை நம்பிட்டு, இப்படியா அடிக்கடி கவுஜ எழுதறது ;-):-)
கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி
நசரேயன் நீங்க கவிதைகளும் எழுதுவீங்களா? வழக்கம் போல கிண்டல் பதிவு எண்ணி வந்தேன். இனிய அதிர்ச்சி
1.புயலைப் பற்றிய கவிதையா, இல்ல புயல் போன்றவரைப் பற்றிய கவிதையா?... நல்லாருக்கு! :)
2.ஒரு சந்தேகம், விழிகள் வேறு - கண்கள் வேறா? (ஆம் என்றால், விளக்கம் தர முடியுமா?)
திருமணம் சந்தித்தபோது
இதயமும் நின்றது
//
அய்யயோ...அப்புறம்?
//1.புயலைப் பற்றிய கவிதையா, இல்ல புயல் போன்றவரைப் பற்றிய கவிதையா?... நல்லாருக்கு! :)
2.ஒரு சந்தேகம், விழிகள் வேறு - கண்கள் வேறா? (ஆம் என்றால், விளக்கம் தர முடியுமா?)//
விழிகள் - கருவிழி மட்டும்.
கண்கள் - கருப்பு வெள்ளை ரெண்டும் சேர்ந்தது.
கருவிழிகள் சந்தித்தபோது
கயல்விழி தோன்றினாள்
இது எப்படி இருக்கு.
இரண்டாவது தான் பட்டென்று தெறிக்கிறது. படிக்கிறப்பயே புயல்ல சிக்கினாப்பல உணர முடியுது. (ஒருவேளை எதுத்தாப்புல இருக்குற சீன அழகினால அப்படி இருக்கோ:-)))
/*
இரண்டாவது தான் பட்டென்று தெறிக்கிறது. படிக்கிறப்பயே புயல்ல சிக்கினாப்பல உணர முடியுது.
*/
ஆமா மாப்பிள்ளை உண்மைதான், அதையே ஒரு அனுபவமா கொஞ்ச நாள் கழிச்சி எழுதலாமுன்னு இருக்கேன்
/*
(ஒருவேளை எதுத்தாப்புல இருக்குற சீன அழகினால அப்படி இருக்கோ:-)))
*/
அமெரிக்க வெள்ளை காரி
மீண்டும் வருகை தந்த அனந்தன், முரளி,ஆனந்த்,வில்லன் அனைவருக்கும் நன்றி
munthuna kavithaiku ithu evlo thevala....nalla iruku....
Post a Comment