Thursday, December 11, 2008

நான்,Fortran மற்றும் C

என்ன தான் இன்னைக்கு கணணிய தட்டிகிட்டு பொட்டிகடை மாதிரி வியாபாரம் செஞ்சாலும், பழசை கொசு வத்தி போட்டு ஆராய்ஞ்சு பாத்தேன் எப்படி கல்லூயிலே கணணி பாடம் படிச்சேன்னு, இது ஒன்னும் ஆயிரம் வருசக்கதை இல்லை, இன்னையில் இருந்து(2008) 14 வருஷம் பின்னால போனா தெரியும்.
இளநிலை பொறியாளர் படிப்பதற்காக திருச்சி பொறியியல் கல்லூரியிலே முதலாம் ஆண்டு படிச்சுகிட்டு(?) இருந்தேன், அது எனக்கு மட்டுமல்ல எங்கள் கல்லூரிக்கும் தான்.புதுசா ஆரமிச்தாலே என்னவோ எங்களுக்கு ௬ரை கொட்டகை தான் வகுப்பு அறை.
தமிழ் வழியாக பன்னிரண்டு வரை படிச்சதாலே வாத்தியாருங்க இங்கிலிபிசுல நடத்துறது புரியாம வெளி மூலம் வந்த மாதிரி நெளிஞ்சு கிட்டு வகுப்பறையிலே இருப்பேன்,அந்த நேரத்திலே சென்னை நண்பன் ஒருவன் என்னைய பாத்து பரிதாப பட்டு, அவன் சொல்லுறதுக்கு எல்லாம் தலை ஆட்டுற மாங்கா மடையன்(பழமைபேசி விளக்கம் கொடுத்தாச்சு) வேணுமுன்னு நினைச்சு என்னையும் அவன் ௬டத்திலே சேர்த்தான்.அவன் அப்பவே இங்கிலிபிசுல பின்னி படல்(பழமைபேசி விளக்கம் கொடுத்தாச்சு) எடுப்பான்.

பன்னிரண்டு முடிச்சு பொறியியல் கல்லூரி சேரும் முன்னால பல ஆயிரம் ரூபாய்களை முழுங்கி விட்டு மலை முழுங்கியான என்மேல கொலை வெறி கோபத்திலே எங்க விட்டிலே எங்க அப்பாவும்,அம்மாவும்.அதுக்கும் காரணம் இருக்கு, முதல்ல ஒழுங்கா பரிச்சை எழுதலைன்னு இம்ப்ரோவ்மேன்ட் படிக்க ராஜபாளையம் போனேன், அங்கே பீடி(நானே தயாரிச்சது) குடிச்சேன்னு அடிச்சி விரட்டி புட்டாங்க, அதுல ஒரு 15 ஆயிரம் போச்சு. அப்புறமா திருநெல்வேலி கல்லூரியிலே போய் சேத்தாங்க, அங்க ஒரு இருபது போச்சு,என் அண்ணன்(சித்தப்பா மகன்) ௬ட சேர்ந்து கிட்டு அழிச்சாட்டியம் பண்ணினேன்.

குடும்பத்தோட படிப்புக்கு டா டா காட்ட சொல்லலாம்னு கல்லூரி நிர்வாகம் யோசனை பண்ணின நேரத்துல புண்ணியவான் எனக்கு திருச்சி கல்லூரிக்கு சேர அழைப்பு அனுப்பி விட்டு இருந்தாங்க.இங்கே ஒரு இருபதை கட்டிட்டு தப்பிச்சோம் பிழைத்தேன்ன்னு ஓடி வந்தா, தலையை பிச்சு கிட்டு ஓட முடியாம சென்னை நண்பன் ௬ட ஒட்டி கிட்டேன்,அவன் எனக்கு எதுவுமே சொல்லி கொடுகலைனாலும்,நான் அவனுக்கு சிகரட்,தண்ணி எல்லாம் குடிக்க கத்துக் கொடுத்தேன்.அந்த காலத்திலே எனக்கு நல்லா தெரிஞ்சது அது ஒன்னுதான், அன்புமணி ஐயா என்னை மன்னிச்சு விட்ருங்க.
எல்லா பாட வகுப்புகள் எல்லாம் ஆரமிச்சாச்சு, கணணி பாடம் ஒன்னை தவிர, புரிஞ்சும் புரியாமலும் கதையை ஓட்டிகிட்டு இருந்தேன்,இந்த பதிவு மாதிரி,திடீர்னு ஒரு நாள் வாத்தியாரம்மா வந்து நான் உங்களுக்கு கணணி பாடம் எடுக்கப் போறேன்.மொத நாள் அறிமுகத்திலே போச்சு, அடுத்த நாள்ல இருந்து ஒரு முழு நீள ஹிந்தி படம் பாத்த மாதிரி இருந்தது
அவிங்க போர்ட்ரான், சி(fortran,c ) யிலே ப்ராகெட் எல்லாம் போட்டு சிலேபி மாதிரி ப்ரோக்ராம் போட்டாங்க, கூட்டல்,கழித்தல் ப்ரோக்ராம் எழுதிவிட்டு, அதை எக்ஸ்குயுட்(execute) பண்ணும் போது அது அப்படி கேட்கும், நாம இப்படி கொடுக்கணும், அதாவது இன்புட்(input) பத்தி சொல்லி கொடுத்தாங்க.ஒரு நாள்ல இது போய்டும்ன்னு நினைச்சா, தினமும் இதே தொல்லை, அது கேட்கும், நாம கொடுக்கணும், என்னத்தை கேட்கும் என்னைத்தை கொடுக்கணும் ஒன்னும் புரியலை .

அடுத்த நாள் வகுப்பு முடிஞ்சு சாப்பிட போகும் போது சென்னை நண்பனிடம்

"அவன் என்ன பெரிய ஆளா மாப்ள, நம்ம வகுப்புக்கே வர மாட்டானா?"

"இருக்கவங்க இம்சையே தாங்க முடியலை, நீ யாரடா சொல்லுற"

"கம்ப்யூட்டர் வாத்தியாரம்மா அது கேட்கும் இது கேட்கும்ன்னு சொல்லுறாங்க, அவரை சொல்லுறேன்"
என்னைய தங்கமணி பார்க்கிறமாதிரி கேவலமா ஒரு பார்வை பார்த்தான்.
"அட கரிபால்டி(அப்படி தான் மரியாதையா ௬ப்பிடுவாங்க), இது தெரியாம தான் சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கியா, இங்க வா சொல்லுறேன்"
என்னை கணணி ஆய்வு ௬டத்திற்கு ௬ட்டிட்டு போனான், அங்கே டி.வி பெட்டி மாதிரி ஒன்னை காமித்து இதுதான் கம்ப்யூட்டர் இதிலே தான் நீ ப்ரோக்ராம் பண்ணனும், அதிலே இன்புட் கொடுக்கணும் ன்னு சொன்னான்.
எனக்கு பெரிய சந்தேகம் தீர்ந்தது, ஆனா பாட சந்தேகம் தீரவே இல்லை, அதனாலே என்னவோ அந்த பாடம் தேர்ச்சி பெற மூனு வருஷம் ஆச்சு, நான் எடுத்த மதிப்பெண்கள்
5/100,15/100,33/100,45/100 (ஜஸ்ட் பாஸ்)
கல்லூரியின் இறுதியாண்டில் நான் முதல் வகுப்பிலே தேர்வு அடைந்து விட்டேன், எனக்கு கம்ப்யூட்டர் காட்டி கொடுத்த சென்னை நண்பனுக்கு 30 அரியர் இருந்தது.
முக்கிய குறிப்பு :பம்பாய் படத்தின் தாக்கத்தால் எழுதிய காதல் கடிதமும் அதன் விளைவும் அடுத்த பாகத்தில்.

43 கருத்துக்கள்:

பழமைபேசி said...

அஃகஃகா!!

குடுகுடுப்பை said...

படிச்சிட்டேன், என்னவிட பெரிய நீங்க பெருசா படிக்கலன்னு மட்டும் சொல்லிக்கறேன்.
மீண்டும் வரேன்

கிரி said...

//தமிழ் வழியாக பன்னிரண்டு வரை படிச்சதாலே வாத்தியாருங்க இங்கிலிபிசுல நடத்துறது புரியாம வெளி மூலம் வந்த மாதிரி நெளிஞ்சு கிட்டு வகுப்பறையிலே இருப்பேன்//

:-)))))

//நான் அவனுக்கு சிகரட்,தண்ணி எல்லாம் குடிக்க கத்துக் கொடுத்தேன்//

ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு

//அட கரிபால்டி//

ஹா ஹா ஹா நான் பள்ளியில் படிக்கும் போது இது ரொம்ப பேமஸ்

புதுகை.அப்துல்லா said...

படித்து முடித்து இன்னமும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன் :)))

மங்கலத்தார் said...

ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. நண்பி ஒருவர் கல்லூரி விரிவுரையாலராக பணி புரிந்தார். முதலாம் ஆண்டு இளநிலை முதல் நாள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம். இவர் சிஸ்டம் இன்புட் அவுட்புட் என ஏதோதோ முடித்த பிறகு மாணவன் ஒருவன் கேட்டானாம். மேடம்! சிஸ்டம் சிஸ்டம்னு சொல்லுறிங்களே அப்படின்னா என்னனு?

T.V.Radhakrishnan said...

ha..ha...haaa

கபீஷ் said...

//நான் அவனுக்கு சிகரட்,தண்ணி எல்லாம் குடிக்க கத்துக் கொடுத்தேன்//

எவ்ளோ நல்லவங்க நீங்க!!
எப்படி பாராட்டரதுன்னே தெரியல!!

பதிவு நல்லாருந்துச்சு!! அதென்ன கடைசியில விளம்பரமா?

வில்லன் said...

//முக்கிய குறிப்பு :பம்பாய் படத்தின் தாக்கத்தால் எழுதிய காதல் கடிதமும் அதன் விளைவும் அடுத்த பாகத்தில்.//

இத எழுதுறதுக்கு முன்னால கொஞ்சம் தங்கமணிகிட்ட முன்னோட்டம் போட்டு அப்ப்ரோவல் வாங்கின நல்லது. இல்லன்ன வழக்கம் போல வெளில படுக்க வேண்டியதுதான். ஆமா. நான் சொல்லுறத சொல்லிபோட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.

வில்லன் said...

என்னோட மலரும் நினைவுகள்
=============================
நான் 20 வருசத்துக்கு முன்னாடி (1989) BSC கம்ப்யூட்டர் படித்தேன். என் கதைய கேட்டா அதவிட கொடுமை. கம்ப்யூட்டர் ஸ்பீட் 16 KB. என்னமோ தப்பா போட்ட கம்ப்யூட்டர் வெடிச்சிரும் அப்படின்னு சொல்லி எங்க வைத்தியர் (எங்க எல்லாரையும் முட்டாள் மடயன்னு தான் பாசமா கூபிடுவார்) பயமுறுத்தினர். அதையும் கேட்டு நமக்கு ஏன் வம்புன்னு ரொம்ப நாளா அந்த கருமத்த தொடல. அப்புறம் 3rd இயர்ல அவரு எங்கள பாத்து பயப்பட்டார் ஏன்னா Floppy டிஸ்க் அண்ட் கிபோர்டு எல்லாம் ஒளிச்சுவைத்து நாங்க அவர பழி வாங்கிடோம்ல. பாவம் அழ ஆரம்பிட்சுட்டார். இந்த கூத்தெல்லாம் திருச்செந்தூர் மாநகராட்சி ஆதித்தனார் கல்லுரில நடந்த கதை. இப்ப அந்த வைத்தியர் இங்க LAல எங்கேயோ தான் மாடுமேச்சுட்டு இருக்கார். நானும் அவர தேடாத இடம் இல்ல.

உருப்புடாதது_அணிமா said...

ஹா ஹா ஹா

சின்ன அம்மிணி said...

ஹஹஹா, ஆனாலும் உண்மையைச்சொன்ன நீங்க நல்லவரு.

Divya said...

\\ன்னைய தங்கமணி பார்க்கிறமாதிரி கேவலமா ஒரு பார்வை பார்த்தான்.\\

:))))

ராஜ நடராஜன் said...

எனக்கெல்லாம் DOS தானுங்க கிடைச்சது.

நசரேயன் said...

/*
அஃகஃகா!!
*/
/*படிச்சிட்டேன், என்னவிட பெரிய நீங்க பெருசா படிக்கலன்னு மட்டும் சொல்லிக்கறேன்.
மீண்டும் வரேன்
*/
வருகைக்கு நன்றி பழமைபேசி, குடுகுடுப்பை

நசரேயன் said...

/*
//தமிழ் வழியாக பன்னிரண்டு வரை படிச்சதாலே வாத்தியாருங்க இங்கிலிபிசுல நடத்துறது புரியாம வெளி மூலம் வந்த மாதிரி நெளிஞ்சு கிட்டு வகுப்பறையிலே இருப்பேன்//

:-)))))

//நான் அவனுக்கு சிகரட்,தண்ணி எல்லாம் குடிக்க கத்துக் கொடுத்தேன்//

ரொம்ப பெரிய மனசு உங்களுக்கு

//அட கரிபால்டி//

ஹா ஹா ஹா நான் பள்ளியில் படிக்கும் போது இது ரொம்ப பேமஸ்
*/
வாங்க கிரி

நசரேயன் said...

/*
படித்து முடித்து இன்னமும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன் :)))
*/
நன்றி அண்ணே நன்றி

நசரேயன் said...

/*
ஒரு சம்பவம் என் நினைவிற்கு வருகிறது. நண்பி ஒருவர் கல்லூரி விரிவுரையாலராக பணி புரிந்தார். முதலாம் ஆண்டு இளநிலை முதல் நாள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம். இவர் சிஸ்டம் இன்புட் அவுட்புட் என ஏதோதோ முடித்த பிறகு மாணவன் ஒருவன் கேட்டானாம். மேடம்! சிஸ்டம் சிஸ்டம்னு சொல்லுறிங்களே அப்படின்னா என்னனு?
*/
வாங்க மங்கலத்தார், என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்களா?

நசரேயன் said...

/*
//நான் அவனுக்கு சிகரட்,தண்ணி எல்லாம் குடிக்க கத்துக் கொடுத்தேன்//

எவ்ளோ நல்லவங்க நீங்க!!
எப்படி பாராட்டரதுன்னே தெரியல!!

பதிவு நல்லாருந்துச்சு!! அதென்ன கடைசியில விளம்பரமா?
*/
வாங்க கபீஷ், ஆமா அடுத்த பதிவுக்கு சுய விளம்பரம் தான்

நசரேயன் said...

வந்து சிரிச்சுட்டு போன ஐயா மற்றும் அணிமாவுக்கு நன்றி

நசரேயன் said...

/*
//முக்கிய குறிப்பு :பம்பாய் படத்தின் தாக்கத்தால் எழுதிய காதல் கடிதமும் அதன் விளைவும் அடுத்த பாகத்தில்.//

இத எழுதுறதுக்கு முன்னால கொஞ்சம் தங்கமணிகிட்ட முன்னோட்டம் போட்டு அப்ப்ரோவல் வாங்கின நல்லது. இல்லன்ன வழக்கம் போல வெளில படுக்க வேண்டியதுதான். ஆமா. நான் சொல்லுறத சொல்லிபோட்டேன் அப்புறம் உங்க இஷ்டம்.
*/
கண்டிப்பா

நசரேயன் said...

/*
என்னோட மலரும் நினைவுகள்
=============================
நான் 20 வருசத்துக்கு முன்னாடி (1989) BSC கம்ப்யூட்டர் படித்தேன். என் கதைய கேட்டா அதவிட கொடுமை. கம்ப்யூட்டர் ஸ்பீட் 16 KB. என்னமோ தப்பா போட்ட கம்ப்யூட்டர் வெடிச்சிரும் அப்படின்னு சொல்லி எங்க வைத்தியர் (எங்க எல்லாரையும் முட்டாள் மடயன்னு தான் பாசமா கூபிடுவார்) பயமுறுத்தினர். அதையும் கேட்டு நமக்கு ஏன் வம்புன்னு ரொம்ப நாளா அந்த கருமத்த தொடல. அப்புறம் 3rd இயர்ல அவரு எங்கள பாத்து பயப்பட்டார் ஏன்னா Floppy டிஸ்க் அண்ட் கிபோர்டு எல்லாம் ஒளிச்சுவைத்து நாங்க அவர பழி வாங்கிடோம்ல. பாவம் அழ ஆரம்பிட்சுட்டார். இந்த கூத்தெல்லாம் திருச்செந்தூர் மாநகராட்சி ஆதித்தனார் கல்லுரில நடந்த கதை. இப்ப அந்த வைத்தியர் இங்க LAல எங்கேயோ தான் மாடுமேச்சுட்டு இருக்கார். நானும் அவர தேடாத இடம் இல்ல.
*/
மரியாதையை செய்யவா .. மண்டையிலே போடவா

நசரேயன் said...

/*
\\ன்னைய தங்கமணி பார்க்கிறமாதிரி கேவலமா ஒரு பார்வை பார்த்தான்.\\

:))))
*/
வாங்க திவ்யா

S.R.ராஜசேகரன் said...

உங்களுக்காவது கம்ப்யூட்டர்ர தொட விட்டாங்கள எங்க பாலிடெக்னிக்-ல 6அடி தூரத்துல நிக்கவச்சி கருப்பு வெள்ளை டி.வி பெட்டி மாதிரி ஒன்னை காமிச்சி இதுதான் கம்ப்யூட்டர் அப்படின்னாங்க.

இத படிச்ச எல்லோருக்கும் அவங்க கல்லூரி நினைவுகள் கண்டிப்பா திரும்ப வந்திருக்கும் .இருந்தாலும் எங்க பேர்வெல் டே அன்னைக்கு எங்க M1 வாத்தியார தண்ணி அடிக்க வச்சி கொடுமை படுத்தினதை நினைச்சா ...... அடடா மனச கனக்க வச்சிட்ட மாப்பிள்ள

S.R.ராஜசேகரன் said...

என்ன பழமைபேசி அண்ணாச்சி படம் உங்க பையன் படமா அதையும் கருப்பு வெள்ளை யா போட்டு இருக்கிங்க

சந்தனமுல்லை said...

ROTFL! படிச்சி வந்தப்புறம்தான் தெரியும், அந்தப் போர்ட்டாரானை எந்த கம்பெனியிலயும் யூஸ் பண்ன மாட்டாங்கன்னு!

குடுகுடுப்பை said...

நான் தனியா பதிவு போடனும் அதனால இங்க ஒன்னும் சொல்லிக்க விரும்பல

நசரேயன் said...

/*
எனக்கெல்லாம் DOS தானுங்க கிடைச்சது.
*/
நான் அதெல்லாம் பாத்ததும் இல்லை கேட்டதும் இல்லை வேலை கிடைக்கும் வரை

நசரேயன் said...

/*ஹஹஹா, ஆனாலும் உண்மையைச்சொன்ன நீங்க நல்லவரு.*/
நன்றி சின்ன அம்மணி

நசரேயன் said...

/*
உங்களுக்காவது கம்ப்யூட்டர்ர தொட விட்டாங்கள எங்க பாலிடெக்னிக்-ல 6அடி தூரத்துல நிக்கவச்சி கருப்பு வெள்ளை டி.வி பெட்டி மாதிரி ஒன்னை காமிச்சி இதுதான் கம்ப்யூட்டர் அப்படின்னாங்க.

இத படிச்ச எல்லோருக்கும் அவங்க கல்லூரி நினைவுகள் கண்டிப்பா திரும்ப வந்திருக்கும் .இருந்தாலும் எங்க பேர்வெல் டே அன்னைக்கு எங்க M1 வாத்தியார தண்ணி அடிக்க வச்சி கொடுமை படுத்தினதை நினைச்சா ...... அடடா மனச கனக்க வச்சிட்ட மாப்பிள்ள
*/
ஒரு பதிவா எழுதி போடு மாப்புள

நசரேயன் said...

/*
ROTFL! படிச்சி வந்தப்புறம்தான் தெரியும், அந்தப் போர்ட்டாரானை எந்த கம்பெனியிலயும் யூஸ் பண்ன மாட்டாங்கன்னு!
*/

உண்மைதாங்க நான் படித்த எதையும் இது நாள் வரையில் என் வேலைக்கு பயன் பட்டதே இல்லை

நசரேயன் said...

/*
நான் தனியா பதிவு போடனும் அதனால இங்க ஒன்னும் சொல்லிக்க விரும்பல
*/
சீக்கிரம் போடுங்க

Suthan said...

:-):-)

onga experience & suggestions nala nanga(Nan & motta) niraya problem sa face panala

பழமைபேசி said...

//S.R.ராஜசேகரன் said...
என்ன பழமைபேசி அண்ணாச்சி படம் உங்க பையன் படமா அதையும் கருப்பு வெள்ளை யா போட்டு இருக்கிங்க
//

அஃகஃகா!! இப்பிடியெல்லாங்கூட ஓட்டுவீங்ளா??

பழமைபேசி said...

ஐயா, இன்னமும் கனவுல எதுவும் தென்படலைங்ளா?

ஆமா, பாலத்துக்கடியில என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க அங்க‌??

RAMYA said...

//
அவன் சொல்லுறதுக்கு எல்லாம் தலை ஆட்டுற மாங்கா மடையன்(பழமைபேசி விளக்கம் கொடுத்தாச்சு)//

என்னா இதெல்லாம் உண்மை
எல்லாம் உதுத்து கொட்டறீங்க
ரொம்ப தைரியம் உங்களுக்கு
இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணினீங்களா?

நம்பவே முடியலை, அப்புறம் எப்படி
த்டீர்னு அறிவு கொளுந்தாநீங்க
ம்ம்ம்ம் அப்புறம் என்னாச்சு ?

சீக்கிரம் பதிவிலே வரும்

துளசி கோபால் said...

படிப்படியா முன்னேறுனேன்னு சொல்லுங்க:-)

தாரணி பிரியா said...
This comment has been removed by the author.
தாரணி பிரியா said...

ஆஹா நம்மளை மாதிரி நாலு பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சா எத்தனை சந்தோசமா இருக்கு.

நான் எங்க கம்யூட்டர் மேடம் கிட்ட அவுட்புட் எந்த வழியா வருமின்னு கேட்டு வாங்கி கட்டிகிட்டு இருக்கேன். CPU மாத்தினா எப்படி மானிட்டர் வால் பேப்பர் எல்லாம் மாறுதுன்னு பெரிய ஆராய்ச்சி எல்லாம் நடத்தி இருக்கோமில்ல :)

சந்தனமுல்லை said...

//அப்புறம் 3rd இயர்ல அவரு எங்கள பாத்து பயப்பட்டார் ஏன்னா Floppy டிஸ்க் அண்ட் கிபோர்டு எல்லாம் ஒளிச்சுவைத்து நாங்க அவர பழி வாங்கிடோம்ல. பாவம் அழ ஆரம்பிட்சுட்டார்.//

அய்யய்யோ! தாங்க முடியலை!! ;-)))

நாங்க பேசிக்-ல ப்ரொக்ராம் மூலமா கப்யூட்டர் மியுசிக் போடற மாதிரி செஞ்சதுக்கே, லேப்-பை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க..:( எங்கே அவங்களை விட நாங்க "அறிவு பக்கெட்"-ஆகிடுவோமான்னு பயம்..lol!

நசரேயன் said...

/*
படிப்படியா முன்னேறுனேன்னு சொல்லுங்க:-)
*/
படிபடியாவும் சில சமயம் நீளம் தாண்டுதல் மாதிரி சுவர் ஏறி குதிச்சும்

நசரேயன் said...

/*
ஆஹா நம்மளை மாதிரி நாலு பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சா எத்தனை சந்தோசமா இருக்கு.

நான் எங்க கம்யூட்டர் மேடம் கிட்ட அவுட்புட் எந்த வழியா வருமின்னு கேட்டு வாங்கி கட்டிகிட்டு இருக்கேன். CPU மாத்தினா எப்படி மானிட்டர் வால் பேப்பர் எல்லாம் மாறுதுன்னு பெரிய ஆராய்ச்சி எல்லாம் நடத்தி இருக்கோமில்ல :)
*/
வாங்க தாரணி பிரியா
நீங்க என்னை விட நல்ல யோசனை பண்ணி இருக்கீங்களே !!

RAMYA said...

இப்படி படிச்சுட்டா அங்கே போய் இருக்கீங்க
தன்னடக்கம் தடுக்கிறதோ நண்பா ?