Tuesday, December 9, 2008

திருட்டுப் பூனைகள்

காட்சி: 1 (மாலா வீடு)

வெயில் தன் உச்சத்தை துவங்கும் முன் நாம் மாலாவின் சமையல் அறையில் புகுந்தோம்.அவள் அங்கு கனத்த இதயத்துடன் பாலை கலக்கி கொண்டு இருந்தாள். அந்த பால் சுழலுவதை போல தன் மனமும் சுழலுவதை உணர்ந்தாள். காரணம் தன் கணவன் அமுதன் ௬றிய வார்த்தைகள் நினைத்து நினைத்து மனம் வெந்தாள். அதிலும் அவன் கூறிய கடைசி வார்த்தை

'நீ உயிரோடு இருந்தாலும் எனக்கு பிணம் தன்'.

அதுவே அவளிடம் பேசியதாக கடைசி வார்த்தையாக இருக்கவேண்டுமென என எண்ணி, அவள் செய்துகொண்ட இருந்த செயலுக்கு இடையுராக தொலைபேசி மணி ஒலித்தது,அதற்க்கு பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லாததால்,அது தன் பணியை செய்து விட்டு அமைதியானது. அவள் பாலை குடிக்க முற்பட்டாள், மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தது இம்முறை இவளுடைய கைபேசி , ஏதோ நினைவு வந்தது போல அதை கையில் எடுத்தாள்.

மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல், அவள் கூறிய பதட்டமான வார்த்தைகளை கேட்டு, அவள் கூறிய விலாசத்தை குறித்து வைத்து கொண்டு, தான் செய்து கொண்டிருந்த வேலையை மறந்தாள், ஏன் தன்னையும் மறந்தாள், தொலைபேசியில் கேட்ட கடைசி வரிகள் மட்டும் காதில் ஒலித்தது. தன்னை தயார் படுத்திக்கொண்டு வெளியில் கிளம்பினாள்.


காட்சி:2 ( கைபேசி உரையாடல்)

அமுதன் கைபேசி ஒலித்தது, எதிர்முனையில் பேசியது மாலாவிடம் பேசிய அதே குரல்.

அமுதன் 'நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு'.

பதில் 'எல்லாம் நல்ல படியாக நடக்கிறது, நீ எப்ப கிளம்புற'

அதற்கு பதிலாக அமுதன்

'அலுவலகத்தில விடுப்பு சொல்லிவிட்டேன், இன்னும் 5 நிமிசத்துல கிளம்புவேன், நீ கிளம்பிவிட்டாயா?'

அதற்கு அவள் 'இதோ கிளம்பியாச்சு

காட்சி : 3 (மருத்துவ மனை )

மாலா அவசர அவசரமாக ஆட்டோவில் இருந்து இறங்கி மருத்துவமனையின் வரவேற்பு அறைக்கு ஓடினாள். அங்கு கண்டகட்சி அவளின் கோபம் சூரியனையே சுட்டு எரிப்பது போல ஆனது. காரணம் கண்ணன், அங்குள்ள நர்ஸ் அவனிடம் எதோ பேசிக்கொண்டு இருந்தாள்.அவனை நோக்கி வேகமாக சென்று அவனை திட்டி தீர்க்க வேண்டும் என்பதற்காக திட்ட வாய் எடுத்த அவள், நர்ஸ் கூறியதை கேட்டு நிறுத்தினாள்

"சார் இங்க மாலான்னு யாரும் இங்க இல்லை, நான் நல்ல பாத்துட்டுதான் சொல்லுறேன், நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதே பதில் தான். "

"கண்ணன் "


என அழைத்த மாலாவை திரும்ப பார்த்தவுடன்

"மாலா நீ இங்க உயிருக்கு போராடிகிட்டு இருக்கிறதா எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது."

அதற்கு அவள் " இதே அழைப்பு எனக்கும் வந்தது "

"உண்மையாகவா? "

மாலாவின் கைபேசி மணி அடித்தது, எடுத்து பேசியவுடேனே, அவள் பதில் ஏதும் சொல்லாமல் மருத்துவ மனையின் வாசலுக்கு வந்தாள், அவள் பின்னால் கண்ணனும் வந்தான்.

"மாலா என்ன ஆச்சு? "

பதிலே சொல்லாமல் அங்கு நின்று கொண்டு இருந்த ஆட்டோ வில் ஏறி சென்றாள்.

மனதை தைரிய படுத்திகொண்டு அவளை வேறு ஒரு ஆட்டோவில் பின் தொடர்ந்தான்


காட்சி 4: (மாலாவின் வீடு)

வாசலிலே நின்ற கூட்டம் இவளுக்கு தானாய் வழி விட்டது.

உள்ளே சென்ற மாலா அமுதன் அகால மரணத்தை கண்டு தன்னை அறியாமல் அழுகை பீறிட்டது. அதகுள் அங்கு வந்து சேர்ந்த கண்ணன் நடப்பதை அறிந்தாலும் நடந்ததை யூகிக்க முடியாமல் அமுதன் அருகில் கிடந்த பொண்ணை பார்த்து அவனும் அழ ஆரமித்தான், அது வேறுயாருமல்ல அவனது மனைவி. அழுகையை அடக்கி கொண்டு சமையல் அறைக்கு சென்ற மாலா தான் விஷம் கலக்கி வைத்திருந்த பால் பாத்திரம் காலியாக இருப்பதை பார்த்தாள்.

ஆறு மாதங்களுக்கு பிறகு...

காட்சி:5 (கண்ணன் வீடு)

"என்னங்க அலுவலகத்துல இருந்து சீக்கிரமா வந்துடீங்க, உடம்பு ஏதும் சரி இல்லையா?"

என்று மாலா வாசலில் வரும் கண்ணனை பார்த்து கேட்டுக்கொண்டே அவனை நோக்கி செல்கிறாள்.

கண்ணன் பதில் ஏதும் கூறாமல் அவளிடம் ஒரு கடிதத்தை நீட்டுகிறான். அதை படித்த மாலா உள்ளம் உடைத்து கிழே விழுந்தாள்.

அந்த கடிதத்தின் சாரம்சங்களாவது

இனிய புதுமண தம்பதிகளுக்கு வணக்கம்,

காதலித்தீர்கள் காதல் கை கூடாமல் கலைந்து ஆளுக்கொரு வாழ்கையை அமைத்துக்கொன்டீர்கள். கால ஓட்டத்தில் விபத்தாய் மீண்டும் நடந்த சந்திப்பு உங்கள் காதலின் இரண்டாம் அத்தியாத்திற்கு அடித்தளமானது.

திசை மாறிய பறவைகள் உல்லாச பறவைகள்யானிர்கள். உங்கள் ஓட்டத்தை தடுக்க முயற்சி செய்தவர்கள், நீ உனக்காக வெட்டிய குழியில் விழுந்து மாண்டு விட்டார்கள். உங்கள் களங்கத்தை நீக்க அவர்கள் இன்னுயிரை தியாகம் செய்து விட்டார்கள்.

உண்மையை ஒழிந்தது பொய்யை வெளிச்சமிட்டு காட்டிய உங்கள் முகமுடியை விரைவில் தோலுரித்து காட்டுவேன்.அப்போது உண்மையின் சக்தியை உணர்ந்து கொள்வீர்கள்.

அன்புடன்,

விபரம் அடுத்த மடலில்

பொறுப்பு அறிவித்தல் : இது ஒரு மீள் பதிவு


17 கருத்துக்கள்:

குடுகுடுப்பை said...

இது ஒரு மறு பின்னூட்டம்.

பழமைபேசி said...

நல்லா இருக்குங்க....

//பொறுப்பு அறிவித்தல் //

இது!

RAMYA said...

ரொம்ப நல்ல இருந்தது, இந்த கதை

முழுவதும் படிச்சிட்டு பிறகு எழுதறேன்

பிண்ணுட்டம் போடறேன்

RAMYA said...

//
அந்த கடிதத்தின் சாரம்சங்களாவது

இனிய புதுமண தம்பதிகளுக்கு வணக்கம்,

காதலித்தீர்கள் காதல் கை கூடாமல் கலைந்து ஆளுக்கொரு வாழ்கையை அமைத்துக்கொன்டீர்கள். கால ஓட்டத்தில் விபத்தாய் மீண்டும் நடந்த சந்திப்பு உங்கள் காதலின் இரண்டாம் அத்தியாத்திற்கு அடித்தளமானது.

திசை மாறிய பறவைகள் உல்லாச பறவைகள்யானிர்கள். உங்கள் ஓட்டத்தை தடுக்க முயற்சி செய்தவர்கள், நீ உனக்காக வெட்டிய குழியில் விழுந்து மாண்டு விட்டார்கள். உங்கள் களங்கத்தை நீக்க அவர்கள் இன்னுயிரை தியாகம் செய்து விட்டார்கள்.

உண்மையை ஒழிந்தது பொய்யை வெளிச்சமிட்டு காட்டிய உங்கள் முகமுடியை விரைவில் தோலுரித்து காட்டுவேன்.அப்போது உண்மையின் சக்தியை உணர்ந்து கொள்வீர்கள்.

அன்புடன்,

விபரம் அடுத்த மடலில்

//


இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா,
அவர்களை தோலுரித்து இந்த சமுதாயத்தின் முன் நிறுத்த வேண்டும்

அனேகமாக இது ஒரு உண்மை கதை என்று நினைக்கிறேன், தொடரவும்

Anonymous said...

ரம்யா, எனக்கும் அப்படித்தான் தோனுது. தலைவா எந்த ஊருல நடந்த உண்மை சம்பவம் சொல்லுங்களேன்.

Anonymous said...

//இது ஒரு மீள் பதிவு//

அப்படின்னா என்ன தலைவா.

கொஞ்சம் புரியும்படியா தமிழ்ல சொல்லுங்க

நசரேயன் said...

/*
//இது ஒரு மீள் பதிவு//

அப்படின்னா என்ன தலைவா.

கொஞ்சம் புரியும்படியா தமிழ்ல சொல்லுங்க
*/
ஏற்கனவே போட்ட படத்தை கொஞ்ச நாள் கழிச்சு போடுற மாதிரி

துளசி கோபால் said...

அதென்ன பூனைகளை இந்தத்திட்டு திட்டறீங்க?

தலைப்பை மாத்து நாட்டாமை.

"திருட்டு மனிதர்கள்"

RAMYA said...

//
வில்லன் said...
ரம்யா, எனக்கும் அப்படித்தான் தோனுது. தலைவா எந்த ஊருல நடந்த உண்மை சம்பவம் சொல்லுங்களேன்.

//


வில்லன் கூறினா சரியாதான் இருக்கும்

நசரேயன் said...

வாங்க
குடுகுடுப்பை,பழமைபேசி,ஐயா அவர்களே

நசரேயன் said...

வாங்க ரம்யா,
உங்கள் வருகைக்கும் கும்மிக்கும் நன்றி

நசரேயன் said...

/*
அனேகமாக இது ஒரு உண்மை கதை என்று நினைக்கிறேன்
*/
நான் அவன் இல்லங்கோ

நசரேயன் said...

/*அதென்ன பூனைகளை இந்தத்திட்டு திட்டறீங்க?

தலைப்பை மாத்து நாட்டாமை.

"திருட்டு மனிதர்கள்"*/

அட ஆமா இல்ல, நீங்க சொன்ன மாதிரி யல்லவா தலைப்பை வச்சி இருக்கணும்

S.R.Rajasekaran said...

(முகமுடியை விரைவில் தோலுரித்து காட்டுவேன்.)

முகமுடியை கழட்டதான் முடியும்


மடல் போட்டது நசரேயன், இல்ல கண்ணன் மனைவியா இருக்குமோ

நசரேயன் said...

/*
(முகமுடியை விரைவில் தோலுரித்து காட்டுவேன்.)

முகமுடியை கழட்டதான் முடியும்


மடல் போட்டது நசரேயன், இல்ல கண்ணன் மனைவியா இருக்குமோ
*/
உண்மைதான்

கிரி said...

//நசரேயன் said...
/*
//இது ஒரு மீள் பதிவு//

அப்படின்னா என்ன தலைவா.

கொஞ்சம் புரியும்படியா தமிழ்ல சொல்லுங்க
*/
ஏற்கனவே போட்ட படத்தை கொஞ்ச நாள் கழிச்சு போடுற மாதிரி//

:-)))))

நசரேயன் said...

/*//நசரேயன் said...
/*
//இது ஒரு மீள் பதிவு//

அப்படின்னா என்ன தலைவா.

கொஞ்சம் புரியும்படியா தமிழ்ல சொல்லுங்க
*/
ஏற்கனவே போட்ட படத்தை கொஞ்ச நாள் கழிச்சு போடுற மாதிரி//

:-)))))

*/
வாங்க கிரி