ராம்கோபால்வர்மாவின் அடுத்த கதை
பொறுப்பு அறிவித்தல் : மும்பை தீவிரவாத தாக்குதலில் இறந்த மக்களின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்
படத்தோட எழுத்து போடும் போது கூகிள் எர்த், ஏ.கே 47 துப்பாக்களை, சாட்டிலைட் போன் பயன்படுத்தும் முறைகளை காட்டிவிட்டு விட்டு, தீவிர வாதிகள் படகை கடத்தும் முறை எல்லாத்தையும் விளக்கமாக சொல்லப்படுகிறது.
புனேயிலே சோனு மும்பைக்கு ரயில் ஏற தயாரா இருக்காங்க, அவங்க யாரையோ தீவிரமா தேடிக்கிட்டு அவங்க கைபேசியிலே இருந்து எதோ ஒரு எண்ணை தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறாள்.ரயில் கிளம்பினதும் வெறுப்பாக அவள் இடத்திற்கு வரும் போது, அவள் யாரை தேடிக்கொண்டு வந்தாளோ அவன் அவள் இடத்தில் இருப்பதை பார்த்து, அவனிடம் சண்டை போடுகிறாள், அவன் வேறு யாரமல்ல அவளின் காதலன் சுனில்.அவனிடம் இருந்து பிரியா விடை பெற்று மும்பை கிளம்புகிறாள் சோனு.
கள்ள தோணியிலே வந்த தீவிரவாதிகள் மும்பையில் வந்து இறங்குகிறார்கள், அவர்கள் முன்று குழுக்களாக பிரிந்து மும்பை ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார்கள்.அங்கே இறந்தவர்களை எல்லாம் சகட்டு மேனிக்கு சுட்டு(பழமைபேசி விளக்கம் தருவாரு) தள்ளுகிறார்கள், அந்த கலவரத்தில் ரயில் நிலையம் வந்தடையும் சோனுவையும் தீவிரவாதிகள் பிணைய கைதியாக பிடித்துச் செல்கிறார்கள்.இதற்குள் விபரம் தெரிய வரும் மும்பை தீவிரவாத தடுப்பு படை ரயில் நிலையத்திற்கு வருகின்றனர்,அவர்களில் பலரை சுட்டு தள்ளி விட்டு தீவிரவாதிகள் குழுக்களாக பிரிந்தது மும்பை நரிமன் ஹவுஸ், டிரைடென்ட் ஹோட்டல், தாஜ் ஹோட்டல் பிரிந்து சொல்கிறார்கள், சோனுவையும் இழுத்து செல்கிறார்கள்.
ஊடகங்கள் வாயிலாக தன் காதலி கடத்தப்பட்டதை தெரிந்து கொண்டு அவளை தேடி மும்பைக்கு வருகிறான் சுனில். உள்துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு என்.எஸ்.சி யும் ராணுவமும் வரவழிக்க படுகிறது, தீவிரவாதிகள் மூன்று இடங்களுக்கு பிணைக் கைதிகளோடு பிரிந்து சென்று விட்டதாக தகவலும் கிடைக்கிறது.
சுனில் தன் காதலியை தேடி முதலில் டிரைடென்ட் ஹோட்டலுக்கு செல்கிறான்,யாருக்கும் தெரியாமல் ஹோட்டலுக்குள் நுழையும் சுனில் தீவிரவாதிகள் நடத்தும் அட்டூளியத்தை நேரில் பார்க்கிறான், ஹோட்டல் முழுவதும் தேடி அவன் காதலி கிடைக்க வில்லை, இதற்குள் அங்கு இருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினால் கொல்லப்படுகிறார்கள், அடுத்ததாக சுனில் நரிமன் ஹவுஸ்க்கு செல்கிறான். அங்கும் அவனால் சோனுவை கண்டு பிடிக்க முடிய வில்லை,ஆனால் அவனுடைய உதவியால் ஒரு தீவிரவாதியை இராணுவம் உயிருடன் பிடிக்கிறது.
மூன்றாவதாக தாஜ் ஹோட்டலுக்கு செல்கிறான் சுனில், அங்கு தன் காதலியின் தன் காதலியை கண்டு பிடிக்கிறான், அவளை காப்பாற்றி தன்னுடன் வருமாறு சொல்லுகிறான். தீவிரவாதிகள் நடத்திய அட்டூளியத்தை நேரில் பார்த்த சோனு,தன்னை போல அப்பாவி மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை விட்டு விட்டு தான் மட்டும் வர முடியாது என்றும் அவர்களோடு தான் நானும் வெளியே போவேன் இல்லையேல் சாவேன் வீர வசனம் பேசுகிறாள், இதை இடைவேளை வசனமா வைக்க முடியுமான்னு தெரியலை.ஏற்கனவே கொலை வெறி கோபத்திலே(இந்த பதிவை படிச்சவங்க மாதிரி) இருக்கிற சுனில், இதை எல்லாம் கேட்டு கொதித்து எழுந்து அவனே ஒரு தீவிரவாதியாக மாறி,உண்மை தீவிரவாதிகளை கொன்று, இருந்த பிணைக் கைதிகளை விடுவித்து தன் காதலியை யும் விடுவித்து ஹோட்டல் மேலே இருந்து வெற்றியின் அடையாளத்தை காட்டும் போது, அவனும், அவன் காதலியும் பாதுகாப்பு படைகளினால் சுட்டு கொல்லப் படுகிறார்கள்.
தீவிரவாதிகளுக்கு பலியாகும் மக்களும் போர் வீரர்களே என்பதை உணர்த்தும் கதை,ராணுவத்தை குறை ௬றும் படமுன்னு யாரும் நினைக்க ௬டாது,மேலும் செய்தி தாள் நிறுவங்களின் ௬த்துக்களும், அரசியல் வாதிகளின் கயவாளிதனங்களையும் படமா வெளியே வந்தா பார்க்கலாம். படத்திலே பாட்டே கிடையாது என்பதை சோகத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
பின் அறிவிப்பு : படம்(ராமநாராயணன் பாம்பு இல்ல) எடுக்கணுமுன்னு யாரும் குடுகுடுப்பை மாதிரி போட்டி நிறைய டாலர் வச்சுக்கிட்டு என்ன பண்ணன்னு தெரியாம இருந்த, அவிங்க கோவணம் இந்த படத்திருக்கு தாயாரிப்பாளர் ஆனா பிறகு கிழியும்,இவ்வளவு தூரம் வந்த நீங்க கொஞ்சம் கதை பத்தி கதைச்சுட்டு போங்கோ
28 கருத்துக்கள்:
இந்த பின்னூட்டம் செல்லாது.
மேலும் செய்தி தாள் நிறுவங்களின் ௬த்துக்களும், அரசியல் வாதிகளின் கயவாளிதனங்களையும் படமா வெளியே வந்தா பார்க்கலாம்.
//
பல பதிவுகளும்
சிரிப்பாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு
//(பழமைபேசி விளக்கம் தருவாரு//
பழமைபேசி எங்கிருந்தாலும் வரவும்
/*
மேலும் செய்தி தாள் நிறுவங்களின் ௬த்துக்களும், அரசியல் வாதிகளின் கயவாளிதனங்களையும் படமா வெளியே வந்தா பார்க்கலாம்.
//
பல பதிவுகளும்
*/
கண்டிப்பா
/*
சிரிப்பாவும் இருக்கு வருத்தமாவும் இருக்கு
*/
உண்மைதான்
/*
//(பழமைபேசி விளக்கம் தருவாரு//
பழமைபேசி எங்கிருந்தாலும் வரவும்
*/
நட்சத்திர வாரமுல்லா அதனாலே மனுஷனுக்கு கொஞ்சம் வேலை அதிகம் தான்
//இதை எல்லாம் கேட்டு கொதித்து எழுந்து அவனே ஒரு தீவிரவாதியாக மாறி//
அப்படித்தாங்க கேடர்களும் (தீவிரவாதி) உருவாக்கப்பட்டதா சொல்றாங்க. ரெம்ப யோசிக்க வைச்சிட்டீங்களே!!!!
//அங்கே இறந்தவர்களை எல்லாம் சகட்டு மேனிக்கு சுட்டு(பழமைபேசி விளக்கம் தருவாரு) தள்ளுகிறார்கள்//
இதுக்கு ஆதாரம் எல்லாங் கிடையாது... பேச்சு வழக்குல கேள்விப் பட்டதுதான். ஆதாரமெல்லாங் கேட்டா நான் அழுதுருவேன்! சரி விளக்கத்தைப் பாப்போம் இப்ப.
யாரோ ஒரு வெவரங் கெட்ட பயங்கரவாதி, ஒரு தமிழ்ப் பதிவரோட பதிவுகளை அவிங்க மொழியில மொழி பெயர்த்துக் குடுக்க, அதைப் படிச்சவிங்க ஒரு பத்து பதினோரு பேரு மும்பைக்கு வந்துட்டாங்க...இன்னும் நெறயப் பேரு நரகத்துல காத்து இருக்காங்ளாம். நான் எப்பிடியும் அங்க இருக்குற எல்லார்த்தையும் அதே மாதர ஆக்குறதுன்னு முடிவு பண்ணித்தான், நாளைக்கு ரெண்டுன்னு போட்டுகிட்டு இருக்கேன்.
//நட்சத்திர வாரமுல்லா அதனாலே மனுஷனுக்கு கொஞ்சம் வேலை அதிகம் தான்//
ஆமா, அங்க இருக்குற மொத்தப் பேரையும் பைத்தியம் ஆக்காம விடுறதில்லை!
/*
//இதை எல்லாம் கேட்டு கொதித்து எழுந்து அவனே ஒரு தீவிரவாதியாக மாறி//
அப்படித்தாங்க கேடர்களும் (தீவிரவாதி) உருவாக்கப்பட்டதா சொல்றாங்க. ரெம்ப யோசிக்க வைச்சிட்டீங்களே!!!!
*/
என்ன செய்ய கனவுல அப்படிதான் வருது
வாங்க பழமைபேசி மற்றும் ஐயா
படம் சோகத்துல ஆரம்பிச்சி சோகத்துலே முடிஞ்சு போச்சி
(ஆனால் அவனுடைய உதவியால் ஒரு தீவிரவாதியை இராணுவம் உயிருடன் பிடிக்கிறது)
(அவனும், அவன் காதலியும் பாதுகாப்பு படைகளினால் சுட்டு கொல்லப் படுகிறார்கள்)
எங்கயோ லாஜிக் உதைக்குதே
/*
படம் சோகத்துல ஆரம்பிச்சி சோகத்துலே முடிஞ்சு போச்சி
(ஆனால் அவனுடைய உதவியால் ஒரு தீவிரவாதியை இராணுவம் உயிருடன் பிடிக்கிறது)
(அவனும், அவன் காதலியும் பாதுகாப்பு படைகளினால் சுட்டு கொல்லப் படுகிறார்கள்)
எங்கயோ லாஜிக் உதைக்குதே
*/
ஓட்டையை படம் எடுக்கும் போது அடைச்சிருவோம்
:(:(:(
//
மூன்றாவதாக தாஜ் ஹோட்டலுக்கு செல்கிறான் சுனில், அங்கு தன் காதலியின் தன் காதலியை கண்டு பிடிக்கிறான், அவளை காப்பாற்றி தன்னுடன் வருமாறு சொல்லுகிறான். தீவிரவாதிகள் நடத்திய அட்டூளியத்தை நேரில் பார்த்த சோனு,தன்னை போல அப்பாவி மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களை விட்டு விட்டு தான் மட்டும் வர முடியாது என்றும் அவர்களோடு தான் நானும் வெளியே போவேன் இல்லையேல் சாவேன் வீர வசனம் பேசுகிறாள், இதை இடைவேளை வசனமா வைக்க முடியுமான்னு தெரியலை.
//
முறத்தால் புலியை அடித்த பெண்கள் நினைவிற்கு வருகிறது.
பெண்கள் எப்பவுமே வீர பரம்பரையாக்கும்.
நசரேயன் உங்க தங்கமணியும் சேர்த்துத்தான்
லேட் க்மெர் லிஸ்ட்லே நான்தான் முதல்னு நினைக்கிறேன்.
கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி
//கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி//
நன்றி சொன்ன கையோட அடுத்த பதிவைப் போடுங்க அப்பு! காத்துட்டு இருக்கமல்லோ!
மீதி கதைய எப்ப யாரு சொல்லுவா. படிக்க ஆவல்.
Nanum unnoda rendu munu story padichiten..hero and herione rendu peraiyum sagadichidura....
avanga mela enna appdi oru kopam?
/*
Nanum unnoda rendu munu story padichiten..hero and herione rendu peraiyum sagadichidura....
avanga mela enna appdi oru kopam?
*/
அடுத்த கதையிலே முடிவு சுபமா இருக்கும்ன்னு நம்புவோம்
வந்தேன்
வந்தேன்
வந்தேன்
நான் தான் 25
///(ராமநாராயணன் பாம்பு இல்ல) எடுக்கணுமுன்னு யாரும் குடுகுடுப்பை மாதிரி போட்டி நிறைய டாலர் வச்சுக்கிட்டு என்ன பண்ணன்னு தெரியாம இருந்த, அவிங்க கோவணம் இந்த படத்திருக்கு தாயாரிப்பாளர் ஆனா பிறகு கிழியும்,இ////
அத நீங்க சொல்லித்தான் தெரியனுமா என்ன??
ஆமா இங்க யாரு தீவிரவாதி??
எனக்கு தெரியும் அது நீங்க இல்ல, எனா நீங்க தீவிர வியாதி
ஹா ஹா ஹா ஹ ஹா
///குடுகுடுப்பை said...
இந்த பின்னூட்டம் செல்லாது.///
இந்த பின்னூட்டம் செல்லுமா??
/*வந்தேன்
வந்தேன்
வந்தேன்
*/
கும்மி அடிச்சு புட்டு போன அணிமாவுக்கு நன்றி
Post a Comment