வட அமெரிக்கா பதிவர்கள் சந்திப்பின் ரத்தின சுருக்கம்
முக்கிய அறிவிப்பு :இரண்டு மணி நேர பதிவர் சந்திப்புக்கு நான்கு மணி நேரம் பயணம் செய்து வந்த ச்சின்னப்பையன், சத்தியராஜ்,[இளா,மருத நாயகம்](ஜெர்சி சிட்டி --> பென்சில்வேனியா -->ஜெர்சி சிட்டி --> எடிசன்) அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
சந்திப்பு குறித்த நேரத்திலே ஆரமித்தாலும் தாமதமா தான் நான்/நாங்க போனோம். மும்பை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும், இலங்கை இனப்படுகொலைக்கு இறந்தவர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தி விட்டு, நேராக பதிவர் அறிமுக விழாவிற்கு சென்றோம்.
கே.ஆர்.எஸ் ஆன்மிகம் பத்தியே எழுதுறதை எல்லாம் பாத்து, அவர் எல்லாம் தாடி வச்சு முனிவர் மாதிரி இருப்பாருன்னு நினைச்சேன், ஆனா அங்கே ரெம்ப இளமைய வந்தார்.
இலவசகொத்தனார் பெயரை வச்சு எங்க ஊரு கொத்தானார் மாதிரி இருப்பாரோன்னு நினைச்சேன், ஆனா அவரு பதிவை இலவசமா கட்டுர கொத்தனார்ன்னு அப்புரம்மா தான் தெரிஞ்சது, விளக்கம் கிழே
http://elavasam.blogspot.com/2006/01/1.html
இளா பத்தி சொல்லனுனா இன்னொரு பெரிய பதிவே போடலாம், சுருக்கமா சொன்ன அவரு சிக்ஸ் பாக் இல்லாத பாலிவுட் நடிகர் மாதிரி இருந்தார்.
மருதநாயகம் கமல் மாதிரி முக அலங்காரம் பண்ணி வயசை குறைக்க வில்லை,ஆனா அவர் அளவுக்கு சுத்த தமிழ்ல பேசல நாலும், நல்லாவே தமிழ் பேசுனாரு
மோகன்கந்தசாமி வாலிப புள்ள ஆனா என்னை மாதிரி வாயசான ஆள் மாதிரி வந்தார்
ச்சின்னப்பையன் பேசினா ப்பெரியபையன் மாதிரி இருந்தது, அப்படி ஒரு அமைதியா இருந்தாரு, வீட்டிலே ஏதும் கடின பயிற்சி கொடுத்தாங்களான்னு தெரியலை !!
சத்தியராஜ் நிறை குடம் என்பது தெள்ள தெளிவா தெரிஞ்சது
சுதன் நான் பேசினா கை தட்டனுமுன்னு சொல்லி ௬ட்டிடுபோனேன், என்னை தவிர எல்லோருடைய பேச்சுக்கும் கை தட்டினாரு
ரோஹன் இவரை பத்தி நிச்சயம் சொல்லி ஆகணும்,சென்னை எல்லை கோட்டை தாண்டிய வுடனே எலிசபெத் ராணி பேரன்/பேத்தி மாதிரி பேசும் தமிழ் மக்கள் மத்தியிலே,தமிழ் நாட்டு வாடை கொஞ்சம் ௬ட இல்லனாலும், தமிழ் படிக்கணும்,தமிழ் பேசனுமுன்னு அவர் சொல்லும் போது மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது, அவர் தமிழிலும் பேசிக்காட்டினார், நமிதாவை விட நல்லா தமிழ் பேசுகிறார், அவருக்கு தமிழ் நாட்டுல பெரிய எதிர்காலம் இருக்குன்னு சொல்ல மறந்து விட்டேன்.
மொக்கைச்சாமி பெயரு தான் மொக்கை, உருப்படியானதை தவிர வேறு ஏதும் பேச வில்லை
தமிழோவியம் கணேஷ் மற்றும் ஜெய் அந்த காலத்திலே இருந்து பதிவுகளை வாசித்து கொண்டு வெளியே இருந்து ஆதரவு தெரிவிக்கும் நல்ல உள்ளங்கள், அவங்களோட சூடான இடுக்கைக்கு ஒரு பதிவு போகணுமுன்னா அதுக்கு ஒரு வரை முறை இருக்கு, அது இந்த பதிவுக்கு மட்டுமல்ல எனது எந்த பதிவுக்கும் பொருந்தாது, விவரம் வேண்டும் என்றால் அடுத்த பதிவர் சந்திப்புக்கு வரவும்.
இப்படியாக அறிமுகத்தை முடித்து விட்டு ட்விட்டர் பத்தி தகவல் களை தெரிந்து கொண்டோம் பழுத்த பதிவர்களிடம் இருந்து, அப்புறமா மொக்கை பதிவு எப்படி கண்டு பிடிப்பது என்பதை பற்றிய கேள்வி கொஞ்ச நேரம், அதற்க்கு கொத்தனார் ஒரு விளக்கம் கொடுத்தாரு, அதை சொன்ன வுடனே என் மனசிலே நினைச்சது நல்ல வேளை அவர் என் பதிவை எல்லாம் படிக்க வில்லைன்னு மனசுக்குள்ளே நினைத்து கொண்டேன்(இந்த பதிவு உட்பட), அந்த விளக்கம் என்ன வென்றால்............. ..................... ............ இது தான்.
எல்லோரும் ஏன் அமெரிக்கா வரைபடத்தை தலையில் வச்சு தூங்குறாங்க என்பதை பத்தி விவாதம் ஆரமிச்சதும் தெரியலை முடிஞ்சதும் தெரியலை.முழு நேர வலை பதிவர்கள் பற்றி கொஞ்சம் பேச்சு அடிபட்டது.அப்புறமா சாப்பாடு அதை யாரும் நல்ல வேளை புகை படம் எடுக்க வில்லை,முடித்து விட்டு வெளியே வந்து சிறிது நேரம் மொக்கை போட்டு விட்டு கடை யை காலி செய்தோம்.
பதிவர்களின் சந்திப்பின் புகை படங்கள்
http://mohankandasami.blogspot.com/2008/11/blog-post_30.html
http://www.boochandi.com/2008/12/2-of-2.html
http://www.boochandi.com/2008/12/1-of-2.html
(தலைப்பில் உள்ள ரத்தின சுருக்கம் பழமைபேசி விளக்கம் தருவாரு)
26 கருத்துக்கள்:
எல்லாரையும் பத்தி நல்ல விளக்கம் கொடுத்தீரு.இந்த சந்திப்பை வெச்சு எதுவும் படம் எடுக்கிர ஐடியா இருக்கா?
ச-ரோ-ஜா மாதிரி.
சண்டைக்காட்சிகள் இல்லாதது கொஞ்சம் வருத்தமே.
மற்றபடி வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.
//மற்றபடி வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது.//
ஏன் குடுகுடுப்பை!!
உங்களைப் பத்தி சொல்லல, நசரேயன்.
பதிவு நல்லாருந்தது தலைப்புக்கு ஏத்த மாதிரி.
//கே.ஆர்.எஸ் ஆன்மிகம் பத்தியே எழுதுறதை எல்லாம் பாத்து, அவர் எல்லாம் தாடி வச்சு முனிவர் மாதிரி இருப்பாருன்னு நினைச்சேன், ஆனா அங்கே ரெம்ப இளமைய வந்தார்//
ஹா ஹா ஹா ஹா
//அவரு சிக்ஸ் பாக் இல்லாத பாலிவுட் நடிகர் மாதிரி இருந்தார்//
:-)))) பார்த்தா இருக்கிற மாதிரி தான் தெரியுது
//என்னை தவிர எல்லோருடைய பேச்சுக்கும் கை தட்டினாரு//
நல்லா தெரிந்து வைத்து இருக்காரு போல :-)
நசரேயன் நீங்க நாடகம் எழுவீங்கன்னு தெரியும்... அதுக்காக பதிவர் சந்திப்பையும் "கேரக்டர் intro" மாதிரி சொல்லிட்டீங்க... கலக்கறீங்க.
//(தலைப்பில் உள்ள ரத்தின சுருக்கம் பழமைபேசி விளக்கம் தருவாரு)//
:-o)
எப்படி பெருத்த ஒளி உருவத்தில சிறுசா இருக்குற இரத்தினத்துல இருக்கோ, அது மாதிரின்னு ஒப்பிட்டுச் சொல்லுறதுதான் இரத்தினச் சுருக்கம்.
http://maniyinpakkam.blogspot.com/2008/10/blog-post_16.html
ஆமா, பதிவர்களைப் பத்தி பேசினோம்னு சொல்லிட்டு, விபரத்தைப் போடலையே?! உள்ளதை உள்ளபடி எழுதுங்க....
நல்ல வேளை பதிவர் சந்திப்புல பழமையார் கலந்துக்கல, இல்லாட்டி அவரு காளமேகர் பாணில பேராண்டி,போண்டி,ஆண்டி(not aunty)அப்படின்னு எழுதி எல்லாரும் பின்னூட்டத்தில அப்படின்னா என்னா? இது என்னா? கேக்கவேண்டி இருந்திருக்கும்.
//கே.ஆர்.எஸ் ஆன்மிகம் பத்தியே எழுதுறதை எல்லாம் பாத்து, அவர் எல்லாம் தாடி வச்சு முனிவர் மாதிரி இருப்பாருன்னு நினைச்சேன், ஆனா அங்கே ரெம்ப இளமைய வந்தார்//
நல்ல வேளை...
இதாச்சும் பரவாயில்லை! ஆபிஸ் பக்கமோ, இல்லை ஜிம் பக்கமோ, வந்துராதீங்க! மயக்கமே போட்டுருவீங்க! :)))
//அவரு சிக்ஸ் பாக் இல்லாத பாலிவுட் நடிகர் மாதிரி இருந்தார்//
சிக்ஸ் பாக் இருக்கான்னு எண்ணனுமாம்!
அதாச்சும் எலும்பை எண்ணப் போறேன் என்பதை எம்புட்டு இனிமையாச் சொல்றாரு பாருங்க நம்ம நாடகாசிரியர் நசரேயன்! :)
இளா, உஷாரு! அடுத்த பதிவர் சந்திப்புக்குள்ளாறவாவது இன்சூரன்ஸ் எடுத்துருங்க! :))
//சிக்ஸ் பாக் //
யோவ், இந்த சிக்ஸ் பாக்’னா என்ன? சொல்லுங்கய்யா(காமெடியா கேக்கல, விவரம் தெரிஞ்சிக்கத்தான்)
அண்ணே, உங்க ரிமோட் கண்ட்ரோல் ரொம்ப தூஊஊஊரமா இருந்துச்சு.. ஆனா என்னோட ரிமோட் பின்னாடியே இருந்துச்சே!!!!!! டக்குன்னு ம்யூட் பண்ணிட்டாங்க!!!!
அது சரி. யாரு பணம் கொடுத்தா சாப்பாட்டுக்கு. இல்ல அதுவும் மொக்கை தானா ஹோட்டலுக்கு. அத கொஞ்சம் வெளக்கமா சொல்ல முடியுமா. எங்களுக்கும் ஹெல்ப்பா இருக்கும். கொஞ்சம் Travel arrange பண்ணின நாங்களும் அட்டென்ட் பண்ணுவோம்ல கலிபோர்னியால இருந்து. கொஞ்சம் பாத்து ஏற்பாடு பண்ணுங்க சார் .
நந்த வனத்தில் ஓர் ஆண்டி. அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி. அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைதாண்டி.
என்ன கூட்டமோ ஒன்னுமே புரியல.நம்ம ஊரு சங்க கூட்டம் மாதிரி ஒரு விறுவிறுப்பா இல்லிய .ஆனாலும் கருப்பு அசிதுக்கு ரெம்பத்தான் ஆச
அண்ணாச்சி! அண்ணாச்சி!!
இடுகையில வந்தாச்சி
சூடான இடுகையிலே
வந்தாச்சி! வந்தாச்சி!!
வாழ்த்தியாச்சி! வாழ்த்தியாச்சி!!
நசரேயன் அண்ணாச்சிய
மனம் போலவே,
வாழ்த்தியாச்சி! வாழ்த்தியாச்சி!!
/////சிக்ஸ் பாக் //
யோவ், இந்த சிக்ஸ் பாக்’னா என்ன? சொல்லுங்கய்யா(காமெடியா கேக்கல, விவரம் தெரிஞ்சிக்கத்தான்)
//////
சிக்ஸ் பேக் என்ப்படுவது..தமிழ் ஹீரோக்கள் கதயில்ல படதிற்க்கு, ரசிகர்களை வரவைக்க செய்துக்கொள்ளும் மேக் அப்.
பொதுக வேளியே அஜானுபகமாக உண்மயில் விஷ்யம் இல்லாமல் இருப்பவர்...புரிஞ்சிதா இளா....
நசரேயன் ..கலக்கிட்டீங் அதுத முறை சென்னை படிவர் சந்திப்பௌயும் எதவது ஹொட்டலில் வைக்க சொல்ல வேண்டும்..
//ILA said...
//சிக்ஸ் பாக் //
யோவ், இந்த சிக்ஸ் பாக்’னா என்ன? சொல்லுங்கய்யா(காமெடியா கேக்கல, விவரம் தெரிஞ்சிக்கத்தான்)
//
six pack body அப்பிடீன்னா, நல்லா கட்டையாட்டம் உடம்பு வெச்சு இருக்குறவனுக்கு, அவனுடைய இடுப்புக்கு மேல, உடம்பின் முன் பகுதியில இடது புறமா மூணு திட்டும், வலது புறத்துல மூணு திட்டும் இருக்கும். அதைத்தான் six packன்னு சொல்லுறது.
அப்பாடா, தீர்ந்தது சந்தேகம். தனுசு ஒரு படத்துல இதை வெச்சிருந்தாராமே. நான் கார்கோ பேண்ட் மாதிரின்னு நினைச்சுட்டு இருந்தேன்.
//ILA said...
அப்பாடா, தீர்ந்தது சந்தேகம். தனுசு ஒரு படத்துல இதை வெச்சிருந்தாராமே. நான் கார்கோ பேண்ட் மாதிரின்னு நினைச்சுட்டு இருந்தேன்.
//
உண்மைதான்! இப்ப, நிறைய இளம் கதாநாயகர்கள் அந்த வகையில இருக்காங்க. ஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி, கமல், சரத்குமார் மட்டுமே இந்த வகையில உடலமைப்பு வெச்சு இருந்தாங்க. இங்க அமெரிக்காவுல, கொக்கா மக்கா, தெருவுல போற வாறவன் எல்லாம் 12-pack கூட வெச்சு இருக்காங்க!
வந்து கருத்து சொன்ன
குடுகுடுப்பை
கபீஷ்
கிரி
மொக்கைச்சாமி
பழமைபேசி
kannabiran, RAVI SHANKAR (KRS)
ILA
ச்சின்னப் பையன்
வில்லன்
S.R.ராஜசேகரன்
அக்னி பார்வை
அனைவருக்கும் கோடன கோடி நன்றி
நசரேயன் உங்கள் பதிவிற்கு வந்தாச்சு, கூட்டம் நடந்த இடத்தையும், தேதியும் முன்கூட்டியே சொல்லி இருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போம் இல்லையா?
கண்டிப்பாக நசரேயன் பேசின பொது கையாவது தட்டி இருப்பொமில்லெ
சரி, அருமையான நண்பர்களுடன் கலந்து கொண்டத்திற்கு சந்தோசம். நம் குடு குடு வையாவது அழைத்திருக்கலாம். அடுத்த முறை முயற்சி செய்யவும்.
/*

*/
அடுத்த பதிவர் சந்திப்புக்கு உங்களுக்கு தனி அழைப்பு அனுப்ப ஏற்பாடு பண்ணி விடுகிறோம்.
குடு குடு மாடு மேய்க்க போய்ட்டாரு
////சுதன் நான் பேசினா கை தட்டனுமுன்னு சொல்லி ௬ட்டிடுபோனேன், என்னை தவிர எல்லோருடைய பேச்சுக்கும் கை தட்டினாரு////
என் பதிவில் சுதனை சோகன் ஆக்கிட்டேனே! சாரி, இப்பவே மாத்திடறேன்
//
*
நசரேயன் உங்கள் பதிவிற்கு வந்தாச்சு, கூட்டம் நடந்த இடத்தையும், தேதியும் முன்கூட்டியே சொல்லி இருந்தால் நாங்களும் கலந்து கொண்டிருப்போம் இல்லையா?
கண்டிப்பாக நசரேயன் பேசின பொது கையாவது தட்டி இருப்பொமில்லெ
சரி, அருமையான நண்பர்களுடன் கலந்து கொண்டத்திற்கு சந்தோசம். நம் குடு குடு வையாவது அழைத்திருக்கலாம். அடுத்த முறை முயற்சி செய்யவும்.
*/
அடுத்த பதிவர் சந்திப்புக்கு உங்களுக்கு தனி அழைப்பு அனுப்ப ஏற்பாடு பண்ணி விடுகிறோம்.
குடு குடு மாடு மேய்க்க போய்ட்டாரு
//
பார்ட் டைம் மாடு மேக்கிறதா? சொல்லவே இல்லே அப்போ நல்ல வருமானம்தான்.
யார் யாரு பார்ட் டைம் இந்த வேலைய செய்யிறீங்க? சொன்னால் கொஞ்சம் வசதியாக இருக்குமில்லே......
/*
பார்ட் டைம் மாடு மேக்கிறதா? சொல்லவே இல்லே அப்போ நல்ல வருமானம்தான்.
யார் யாரு பார்ட் டைம் இந்த வேலைய செய்யிறீங்க? சொன்னால் கொஞ்சம் வசதியாக இருக்குமில்லே......
*/
பட்டியல் தாயார் ஆகிகிட்டு இருக்கு முடிஞ்ச உடனே அறிவிப்பு வெளியிடுவோம்
தல. இடுகையோட தலைப்புக்கு மட்டும் இப்ப கண்டனம் கொடுத்துட்டுப் போறேன். இடுகையைப் படிச்சுட்டு இன்னொரு தடவை முடிஞ்சா வர்றேன்.
னானும் தான் வட அமெரிக்காவுல இருக்கிறதா நினைச்சுக்கிட்டு இருக்கேன். ஒரு வேளை மினசோட்டா எல்லாம் வட அமெரிக்கா இல்லியோ? புதுயார்க், புதுஜெர்சி, பென்சில்வேணும்யா மட்டும் தான் வட அமெரிக்காவா?
நானெல்லாம் கலந்துக்காத வலைப்பதிவர் சந்திப்பை 'வட அமெரிக்கா பதிவர்கள் சந்திப்பு'ன்னு சொன்னதுனால என்னோட வன்மையான, கடுமையான, வயிற்றெரிச்சலுடன் (!!!!) கூடிய கண்டனங்களைப் பதிவு செய்துக்கறேன்.
:-)

மன்னிச்சுருங்கோ..தலைப்பு எல்லாம் ஒரு வசதிக்கும் சுய விளம்பரமும் தானே,
அடுத்த முறை சந்திப்பு நடுக்கும் போது இதை திருத்திடுவோம் :)
super annan
Post a Comment