சங்கம் திவால்
சங்க தலைவர் : என்ன பொருளாளரே நம்ம சங்கத்தோட நிதி நிலைமை எப்படி இருக்கு
சங்க பொருளாளர் : சங்கு ஊதுற நிலையிலே இருக்கு , மஞ்ச கடிதாசி கொடுக்க வேண்டியது தான் பாக்கி, சங்கத்திலே கடன் வாங்கி வெளி நாட்டுக்கு போன உறுப்பினார் எல்லாம் கடனை திருப்பி கொடுக்காம கம்பிய நீட்டிடாங்க
சங்க தலைவர் :வெளி நாட்டுல ரூபாய்களை வெட்டி அள்ளிட்டு வந்து கொடுப்போம்னு சொன்னாங்க, இப்ப சங்கத்தையே வெட்டி விட்டுட்டாங்க, சங்க ௬ட்டத்துக்கு வார உறுப்பினர்களுக்கு என்ன பதில் சொல்ல?
சங்க பொருளாளர் : ஒத்த ரூபாய்க்கு சில்லறை மாத்தி வச்சு இருக்கேன், அதை வாங்கி நெத்தியிலே வச்சு கிட்டு போக சொல்லலாம்.
(சங்கத்திலே கடன் வேண்டி விண்ணப்பித்த இரு உறுப்பினர்கள் வருகிறார்கள்)
உறுப்பினர் 1: ஐயா சங்கத்துல 100 ரூபா கடன் வாங்க விண்ணப்பிச்சி 4 வருஷம் ஆச்சு, இதுநாள் வரைக்கும் கால் காசு கையிலே வரலை
உறுப்பினர் 2: என் பெண்டாட்டி முத பிரசவத்துக்கு போறப்ப கடன் கேட்டேன், இப்ப ஆறாவது பிரசவத்திற்கு போயிருக்கா, இன்னும் காச கண்ணுல காட்ட மாட்டுகீங்க , இன்னைக்கு மட்டும் காசு கொடுக்கலை நடகிறதே வேற, காசுக்கு அலங்சியே அரை அடி கால் தேஞ்சு போச்சு.
சங்க பொருளாளர் : அண்ணாச்சி அது பத்திதான் நானும் தலைவரும் யோசிச்சு கிட்டு இருந்தோம்.
உறுப்பினர் 1: நாசமா போச்சு, எத்தனை வருசமா யோசிப்பீங்க, இத நூறு ரூபாயையை நம்பி கல்யாணமும் முடிச்சு ரெண்டு புள்ளைக்கு தகப்பன் ஆகிட்டேன்.
உறுப்பினர் 2: நீ கல்யாணதிற்கு கேட்டது உன் சாவுக்கு தான் கெடைக்கும் போல தெரியுது
சங்க தலைவர் : உங்க கஷ்டம் புரியுது,ஆனா பாருங்க அமெரிக்கா திவால் ஆகிப்போச்சு, ஊரெல்லாம் அதே பேச்சுதான்,வேலை வெட்டி இல்லாத எங்களுக்கும் வேலை இல்லாம போச்சு
உறுப்பினர் 2: ஏலே காசு இல்லனா சொல்லி புடுங்க, அதுக்காக அமெரிக்கா திவால் ஆச்சு, ஆப்பிரிக்கா திவால் ஆச்சுன்னு கதை உடப்புடாது
உறுப்பினர் 1: நீங்க கடன் தரும் வரைக்கும் இந்த நாற்காலி, மேசை எல்லாம் எங்க வீட்டுல இருக்கட்டும்,என் சின்ன வீட்டுக்கு போனா உக்கார முடியல
சங்க பொருளாளர் : அப்படி எல்லாம் செய்யபுடாது அப்பு, ஏற்கனவே நாங்க திருடுனது மிச்சம் இருக்கிற சொத்தே இதுதான்
உறுப்பினர் 2: ஏலே வேட்டியை உருவாம உட்டுட்டு போறோம்னு சந்தோசபடுங்க, வா மாப்ள போகலாம், ஆளுக்கு ஒன்னும் எடுத்துட்டு போவோம்.
சங்க தலைவர் : நல்ல வேலை தப்பிச்சேன், நான் கோவணம் ௬ட போட்டு வரலை .
சங்க பொருளாளர் :தெரியுமே உங்க கோவணத்தை தான் அமெரிக்காகாரன் எப்பவோ உறுவிட்டு போய்ட்டான்னு, சங்கத்துக்குன்னு இருந்த ரெண்டையம் நவட்டிட்டு போய்டாங்க, இருக்க ஒரு ரூபாயை ஆளுக்கு பாதி பாதி எடுத்துக்குவோமா?
சங்க தலைவர்: சங்கத்தை வச்சு கந்து வட்டி பண்ணி கல் காளை மாதிரி இருந்த நம்மளை, திருவோடு எடுக்க வச்சுடான்களே,இந்த கொடுமையை நான் எங்க போய் சொல்ல
சங்க பொருளாளர் :அப்படியே தான்.. இன்னும் கொஞ்சம்.. நீங்க அழுதா இந்த வசனம் கொஞ்சம் தூக்கலா நல்ல இருக்கும், எப்படியாவது கஷ்ட்டப்பட்டு அழுங்க,வேணா தங்க மணியை வரச்சொல்லவா?
சங்க தலைவர் : நானே வயத்தெரிச்சலில் இருக்கேன், என் வாயை கிளறி வாங்கி கட்டாதே, உடைஞ்சு போன சங்கத்தை ஒட்ட வைப்பேன், இது தொலைந்து போன என் கோவணத்தின் மீது சத்தியம்
சங்க பொருளாளர் : தெலுங்கு பட ஹீரோ மாதிரியே கைய காலை ஆட்டிகிட்டு குத்து வசனம் பேசுறீங்க,(யாரவது வந்தா தயவு செய்து விசில் அடிங்கோ) இங்கே தொடரும்ன்னு போடுறீங்களா
சங்க தலைவர் : கடைப்பக்கம் வாரதே ரெண்டு பேரு, அவங்களையும் வர விடாம பண்ணிருவ போல,இந்த அறிவிப்பை சங்க பலகையிலே ஒட்டு
சங்க பொருளாளர் : சரிங்க சாமி
(மறு நாள் காலையிலே அலைகடலென ௬ட்டம், இந்த பதிவுக்கு வார ௬ட்டம் மாதிரி இல்லை, நிஜக் ௬ட்டம்)
சங்க பொருளாளர்: (கைபேசியில்..) தலைவரே சங்கத்து முன்னாடி சினிமா நடிகையை பார்க்க வந்த மாதிரி ஒரே ௬ட்டம்.சங்கத்துக்கு மஞ்ச கடிதாசி கொடுத்தாச்சா?
சங்க தலைவர் : சங்கத்துக்கு கடன் கொடுக்க வேண்டியவன்கிட்ட எல்லாம் வசூல் பண்ணி ரசித்து வாங்கிடு
உறுப்பினர்கள்: நான் தான் முதல்ல வந்தேன்.. நான் தான் முதல்ல வந்தேன்
சங்க பொருளாளர் : இடி விழுந்த இருளாண்டி மாதிரி சொல்லுறாங்க,சங்கத்திலே கொலையே விழுந்தாலும் சலனம் இல்லாம இருக்கும் நிறையை தலைகள் எல்லாம் வந்திருக்கு, நோட்டை நீட்டிவசுல் பண்ண வேண்டியது தான், எல்லோரும் குஸ்புவை பார்க்க வந்தது மாதிரி அவசரப்படாம, கோவிலுக்கு வந்தது மாதிரி வரிசையிலே வந்து துட்டை கொடுங்க
(காசு வசுல் முடிந்த உடனே)
சங்க பொருளாளர் : பணத்தை எண்ணி எண்ணி ரெம்ப அசதி ஆகிப்போச்சி
உறுப்பினர்கள்: எப்ப வருவாக.. எப்ப வருவாக
சங்க பொருளாளர் : தலைவரு இப்ப வருவாரு அடுத்த கடை பக்கம் உளவு பார்க்க போய் இருக்காரு.
உறுப்பினர்கள்: அவரை கேட்கலை, அவுக எப்ப வருவாக..எப்ப வருவாக.
சங்க பொருளாளர் : யாரு அவுக
உறுப்பினர்கள்: அதான் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா
சங்க பொருளாளர் : என்னது சில்க் ஸ்மிதாவா எங்க.. எங்க (மனசுக்குள்ளே) அடப்பாவி மக்கா, அவிங்க செத்து பல வருஷம் ஆகிபோச்சுன்னு தெரியாத பச்ச புள்ளைகளா நீங்க, இந்த விஷயத்தை தான் முதல்வர் ஒட்ட சொன்னாரா, படிக்க தெரியாத தாலே இப்படி மாட்டி கிட்டேனே,தெரியாத்தனமா வந்துட்டேன் தலை தெறிக்க ஓடும் முன்னே வழி சொல்லிட்டு போங்களேன்
31 கருத்துக்கள்:
//சொத்து //
அவிங்க யாரோட சொத்து? உங்க சொத்தா? மவனே, அப்ப நாங்கெல்லாம்??
ஒரே சிரிப்பு...இஃகிஃகி!
நமீதாவை ஒருத்தன் கடத்திட்டான்னு நான் பதிவு போடறேன் இங்க சிலுக்க தேடுறீங்க
:-))))))
//ஏலே வேட்டியை உருவாம உட்டுட்டு போறோம்னு சந்தோசபடுங்க, வா மாப்ள போகலாம், ஆளுக்கு ஒன்னும் எடுத்துட்டு போவோம்//
ஆஹா,,,,,,,
:-))))))
//
எல்லோரும் குஸ்புவை பார்க்க வந்தது மாதிரி அவசரப்படாம, கோவிலுக்கு வந்தது மாதிரி வரிசையிலே வந்து துட்டை கொடுங்க
//
குஷ்பூவுக்கு கோயில் கட்டின கூட்டத்துக்கு, கோயிலும் குஷ்பூவும் ஒன்னுதானுங்கோ
அனுபவம்னு வகைப்படுத்தியிருக்கீங்க. நீங்கதான் சங்கத் தலைவரா!!!!!!!!!!!!!
//
சங்க தலைவர் : நானே வயத்தெரிச்சலில் இருக்கேன், என் வாயை கிளறி வாங்கி கட்டாதே, உடைஞ்சு போன சங்கத்தை ஒட்ட வைப்பேன், இது தொலைந்து போன என் கோவணத்தின் மீது சத்தியம்
//
பஞ்ச் டயலாக் நல்லாருக்கு :)))
///படிக்க தெரியாத தாலே இப்படி மாட்டி கிட்டேனே,தெரியாத்தனமா வந்துட்டேன் தலை தெறிக்க ஓடும் முன்னே வழி சொல்லிட்டு போங்களேன்
///
அப்டே லெப்ட்ல போயி ரைட்ல...
பழமைபேசி நல்லா வழி சொல்வாரே ??
இந்த பதிவில யாரும் இனிமே ஸ்மைலி போடக்கூடாது
கமெண்டூ தான் போடனும்
//செந்தழல் ரவி said...
இந்த பதிவில யாரும் இனிமே ஸ்மைலி போடக்கூடாது
கமெண்டூ தான் போடனும்//
ஹா ஹா ஹா ;-)
கிகிகிகிகி
ஏற்கனவே நெறைய ஐடியாவோட திரிஞ்சிக்கிட்டிருக்காங்க.
அதோட இது வேறயா.
ரொம்ப நல்லா இருக்கு.
(ஸ்மைலி போடக்கூடாதாம்ல)
//செந்தழல் ரவி said...
இந்த பதிவில யாரும் இனிமே ஸ்மைலி போடக்கூடாது
கமெண்டூ தான் போடனும்
//
சரிங்க ஆப்ப்ப்ப்பீஸர்!!!!!!!!!
//செந்தழல் ரவி said...
இந்த பதிவில யாரும் இனிமே ஸ்மைலி போடக்கூடாது
கமெண்டூ தான் போடனும்
//
:))))
:-))))))
அட சிலுக்குக்கு இன்னும் ரசிகர்கள் இருக்காங்களா ?
:)))))))))))
//
அட சிலுக்குக்கு இன்னும் ரசிகர்கள் இருக்காங்களா ?
:)))))))))))
//
நீங்கள் கேட்பது என்னவோ, “இந்திரா காந்தியை சுட்டுட்டாங்களா?” என்று கேட்பது போல் இருக்குது..
//
சங்க பொருளாளர் : ஒத்த ரூபாய்க்கு சில்லறை மாத்தி வச்சு இருக்கேன், அதை வாங்கி நெத்தியிலே வச்சு கிட்டு போக சொல்லலாம்.
//
பாக்க வந்த இப்படி எல்லாம் செய்வீங்களா?
சிலுக்கு ரசிகர் உங்க உரு
சிலுக்குவார் பட்டியா???
இருக்குற கொஞ்ச நஞ்ச பனைத்தை
இருக்கட்டும்ன்னு போட்டு வச்சா
இந்த மாதிரி எல்லாம் இருந்தா
எப்படி???????????????????
தாமதமா வந்ததிற்கு
மன்னிச்சிடுங்க நண்பா
ஹைய்யா நான் தான் 25th
யாருன்னு தெரியலை
பூலான் தேவி!!!!!!!!!
//
RAMYA said...
சிலுக்கு ரசிகர் உங்க உரு
சிலுக்குவார் பட்டியா???
//
தலைமை ரசிகர் மன்றம் சிலுக்குவார்பட்டி தான்..
உண்மையிலே சிலுக்குவார்பட்டி-னு ஒரு ஊர் இருக்கு தெரியும் தானே.
பழமைபேசி
குடுகுடுப்பை
துளசி கோபால்
கவின்
ச்சின்னப் பையன்
ஆளவந்தான்
அது சரி
செந்தழல் ரவி
கிரி
Thooya
இளைய பல்லவன்
கபீஷ்
PoornimaSaran
கடையம் ஆனந்த்
தாரணி பிரியா
RAMYA
வந்து கருத்துக்களை பதிவு செய்த அனைவருக்கும் கோடான கோடி நன்றி
//என்னது சில்க் ஸ்மிதாவா எங்க.. எங்க (மனசுக்குள்ளே) அடப்பாவி மக்கா, அவிங்க சொத்து பல வருஷம் ஆகிபோச்சுன்னு தெரியாத பச்ச புள்ளைகளா நீங்க//
அவிங்க "சொத்து" இல்லையா "செத்து". அர்த்தமே மாறிபோச்சு போங்க. நீங்கள்எல்லாம் கத எழுதி மன்னாபோவ பாவி மனுசங்களா .
இது என்ன வட அமெரிக்கா வலை பதிவாளர் சங்கம் பத்தினதா?. விவரம் தேவை.
சங்கம் திவால் - தலைப்பு நல்லாத்தான் இருக்கு. எந்த சங்கம் வட அமெரிக்கா வலை பதிவாளர் சங்கமா?
haiyo haiyo.........
Post a Comment