Wednesday, December 17, 2008

சுயமா வரன்?

அமெரிக்காவிலே இருந்து கொண்டு என்ன தான் குத்தாட்டம், தொடைஆட்டம், கும்மி ஆட்டம் போட்டாலும்,தனக்கு வரப்போகிற மனைவி மட்டும் கலாசாரத்தை கட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என ராபர்ட் தன்னோட மனசுக்குள்ள தீர்க்கமா வச்சு இருந்தான், ஆனா அவள் அழகுக்கு இலக்கணம் ன்னு ஒன்னு இருந்தா அதுக்கு இம்மி அளவும் குறை இருக்கப் புடாது என்பதிலேயும் உறுதியா இருந்தான்.

இப்படி ஒரு அகில உலக எதிர்பார்ப்புகளோட பெண் தேடும் வேலைகளை ஆரமித்தான், ஆரம்பத்திலே புகை படம் பார்க்காம பெண் வீட்டிலே போய் பஜ்ஜி,வடை எல்லாம் சாப்பிட்டு விட்டு வேண்டாம் என்று சொல்லி விடுவான், அதன் பிறகு முறையை மாத்தினான் புகை படம் பார்த்து அதிலே பிடிச்சு இருந்தா,நேரிலே போய் பார்க்கிறது, இதிலேயும் வழக்கம் போல ஒன்னும் அவனுக்கு பிடிச்ச மாதிரி அமைய வில்லை, புகை படத்திலே நல்லா இருக்கா நேரிலே நல்லா இல்லை, நேரிலே நல்லா இருந்தாலும், அவங்க கிட்ட ஏதாவது குறை இவனுக்கு தெரிந்து வேண்டாம்ன்னு சொல்லி விடுவான்.

இந்த கதை(இந்த பதிவு கதையல்ல) ரெண்டு வருசமா ஓடினது நெடுந்தொடர் மாதிரி, இதற்காக நான்கு முறை அமெரிக்காவிலே இருந்து வந்து போன செலவில் ஒரு ஆயிரம் பெண்களுக்கு கல்யாணம் முடித்து வைத்து இருக்கலாம், இவனுக்கு பொண்ணு தேடி தேடி எல்லோரும் அலுத்து போய்ட்டாங்க, இந்த இரண்டு வருட காலத்திலே ராபர்ட்டும் கொஞ்சம் மாறி இருந்தான், ஆரம்பத்திலே நிலைமையிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக மாற ஆரமித்தான்.கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்.

எப்படியோ ஒரு பெண்ணு பிடித்து போக எல்லோரும் பெண்ணை நேரில் பார்க்க போய்ட்டாங்க,ராபர்ட் அவங்க வீட்டுல சொல்லிவிட்டான், கண்டிப்பாக இதுதான் நான் பார்க்கும் கடைசி பெண், வீட்டுக்குள்ளே போய் வழக்கமான சம்பிரதாயம் எல்லாம் முடிஞ்ச உடனே, அந்த பெண்ணுடன் அவன் தனியாக பேச வேண்டும்னு கோரிக்கை வைத்தான்.கோரிக்கை ஏற்கப்பட்டு இருவரும் தனி அறையில் சந்தித்தனர்.ராபர்ட் தனக்கு தேவையான கேள்விகளை எல்லாம் கேட்டான், பொறுமையாக பதிலை சொன்ன அவள், கேள்விகள் முடிந்த நிலையில் , அவனிடம் ஒரு புகை படத்தை நீட்டினாள்.

அதை கையில் வாங்கிய ராபர்ட்

"இந்த பொண்ணு யாரு உங்க சொந்தம்மா, இவங்களுக்கு ஏதும் உதவி செய்யனுமா?"

"நீங்க இவளுக்கு நிறைய பண்ணி இருக்கீங்க"

சொல்லி விட்டு பேரு மூச்சு விட்டுவிட்டு

"சரி அதை விடுங்க.. அமெரிக்காவிலே மக்கள் எல்லாம் எப்படி பழகுவாங்க"

"மனிதாபி மானத்தோட பழகுவாங்க, யாரை பார்த்தாலும் ஒரு புன் சிரிப்போடு வணக்கம் சொல்லுவாங்க, நாம வருகிறது தூரத்திலே தெரிந்தால், நாம வரும் வரைக்கும் கதவை திறந்து காத்து நிப்பாங்க"

"அதை ஏன் நீங்க படிக்கவில்லை"

"ஹும் என்ன சொன்னீங்க"

"ஏன் அங்க இருக்கிற நல்ல பழக்கங்களை நீங்கள் உபயோக படுத்திறது இல்லை"

"நீங்க என்ன சொல்ல வாறீங்கன்னு புரியலை"

"இதை எல்லாம் நீங்க உங்க நடைமுறை வாழ்கையிலே கடை பிடிக்கிற மாதிரி தெரியலை, நான் கொடுத்த புகை படத்திலே உள்ள பெண்ணை நீங்க ஏற்கனவே பார்த்து இருகீங்க, அவங்களை பார்த்து விட்டு நீங்க போகும் போது என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?"

"என்ன நான் இந்த பெண்ணை பார்த்து இருக்கேனா?!!"

"இந்த பெண்ணை இரண்டு வருடத்திற்கு முன் மதுரையிலே இதை மாதிரி ஒரு சம்பவத்திலே சந்தித்தீர்கள், நீங்க இவளை பார்த்து விட்டு வெளியிலே போகும் போது என்ன சொன்னீங்கன்னு கேட்டாலும் உங்களால சொல்ல முடியாது"

ராபர்ட் பொறுமை இழந்தவனாய்

"எதுவாக இருந்தாலும் நேரடியா பேசுங்க, உங்க பிரச்சனை என்ன?"

"நீங்க கையிலே வைத்திருக்கும் புகைப்படத்தில் இருப்பது நானே தான்"

இது வரை அந்த புகைப்படத்தில் இருந்த உருவ ஒற்றுமையை கவனிக்க முடியாமல் இருந்தவன், அவள் சொன்னதும் மீண்டும் உற்று நோக்கினான், அவளையும், புகைப்படத்தையும்

"இருபத்தி ஐந்து வருஷம் என்னால சாதிக்க முடியாததை, 500 ரூபாய் மேக் அப் சாதித்து விட்டது,இது தான் உங்க எதிர் பார்ப்புன்னு எனக்கு தெரியாம போச்சு?"

அதற்க்கு மேலும் அவனால் அங்கு இருக்க முடியவில்லை, வேகமாக அறையை விட்டு வெளியே வந்தான், வந்தவன் வாசலை நோக்கி நடந்தான், வழக்கம் போலே வாசலை கடக்கும் போது அந்த பெண்ணிடம் தான் கண்ட குறையை எல்லோருக்கும் கேட்கும் படி சொல்லி கொண்டு செல்வான், இன்று மாயான அமைதியாய் சென்றான்.

76 கருத்துக்கள்:

Thamiz Priyan said...

நல்லா இருந்தது கதை (அ) உண்மை!

பழமைபேசி said...

//மாயான அமைதியாய் சென்றான்.//

சென்றவன் அந்த நினைவுகளைப் பதிவாகவும் இடுகிறான்! இஃகி!ஃகி!!

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

"இம்மி"ன்னா என்ன?

T.V.ராதாகிருஷ்ணன் said...

அப்போ அடுத்து பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டீங்களா? இல்ல..அதே பொண்ணையா?

குடுகுடுப்பை said...

இப்போ மேக்கப் வாங்கி கொடுக்கியலா?

குடுகுடுப்பை said...

பெரிய ஆளாயிட்டீங்க போலருக்கு.

நசரேயன் said...

/*நல்லா இருந்தது கதை (அ) உண்மை!*/
வாங்க தமிழ் பிரியன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நசரேயன் said...

/*
சென்றவன் அந்த நினைவுகளைப் பதிவாகவும் இடுகிறான்! இஃகி!ஃகி!!
*/
நீங்க சொன்னா மறுக்க முடியுமா?

நசரேயன் said...

/*
இப்போ மேக்கப் வாங்கி கொடுக்கியலா?
*/
பாதி சம்பளம் அதுக்கு தான்

நசரேயன் said...

/*
அப்போ அடுத்து பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டீங்களா? இல்ல..அதே பொண்ணையா?
*/
அதே பெண்ணை தான் கல்யாணம் செஞ்சான்னு நினைக்கிறேன்

கபீஷ் said...

5000 ரூபாயில அவுட் ஆயிட்டீங்களே!!! அப்புறமும் ஏனுங்க அவங்க உங்கள கல்யாணம் பண்ணினாங்க, வேண்டாம்னு சொல்லியிருக்கலாம் இல்ல?

நசரேயன் said...

/*
5000 ரூபாயில அவுட் ஆயிட்டீங்களே!!! அப்புறமும் ஏனுங்க அவங்க உங்கள கல்யாணம் பண்ணினாங்க, வேண்டாம்னு சொல்லியிருக்கலாம் இல்ல?
*/
என்ன செய்ய தலை விதி

கிரி said...

//கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்//

பலரின் எதிர்பார்ப்பு கடைசியில் இப்படி தான் ஆகிறது. ஒரு சிலர் இதை புரிந்து கொள்வதே இல்லை. தனக்கு பெண் யாரும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் போது தான் இது நாள் வரை செய்த தவறை உணருகிறார்கள். ஆனால் அது காலம் கடந்ததாகி விடுகிறது.

நசரேயன் பதிவு நல்லா இருக்கு.

ராஜ நடராஜன் said...

//500 ரூபாய் மேக் அப் சாதித்து விட்டது//

நமக்கெல்லாம் இந்த லிப்ஸ்டிக்,ரோஸ் பவுடர் விசயமின்னாலே உவ்வே! மஞ்சள்,குங்குமம்,மல்லிகை மேக்கப்பே நீ வாழ்க!

சந்தனமுல்லை said...

//ஆரம்பத்திலே நிலைமையிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக மாற ஆரமித்தான்.கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்.//

:-))))

சந்தனமுல்லை said...

கலாட்டாவா இருக்கப்போகு்துனு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்தேன்..இப்படி டச்சிங் கதையா மாறிடுச்சே! :-)

http://urupudaathathu.blogspot.com/ said...

முடிவு ரொம்ப நல்லா இருந்தது

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹி ஹி இது யாரோட கதை ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//பழமைபேசி said...

//மாயான அமைதியாய் சென்றான்.//

சென்றவன் அந்த நினைவுகளைப் பதிவாகவும் இடுகிறான்! இஃகி!ஃகி!!///

கண்ணா பின்னாவென்று வழி கிழி மொழிகிறேன் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி சரி,,..
இனி வீட்ல சொல்லி பொண்ணு பாக்க வேண்டியது தான்

http://urupudaathathu.blogspot.com/ said...

500 ரூபாயில அவ்ளோ அழகா காட்ட முடியுமா என்ன??
ஒரு சந்தேகம் தான்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///நசரேயன் said...

/*
அப்போ அடுத்து பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டீங்களா? இல்ல..அதே பொண்ணையா?
*/
அதே பெண்ணை தான் கல்யாணம் செஞ்சான்னு நினைக்கிறேன்///

செஞ்சானா ?? இல்ல செஞ்சீங்களா??
விளக்கம் ப்ளீஸ்

http://urupudaathathu.blogspot.com/ said...

//அமெரிக்காவிலே இருந்து கொண்டு என்ன தான் குத்தாட்டம், தொடைஆட்டம், கும்மி ஆட்டம் ///

நல்லா தான் இருக்கு..
உம்ம ...
வேற என்னத்த சொல்றது?? இப்படி பெரு மூச்தான் விடனும் .

ஆமாம் அது என்ன தொடை ஆட்டம்??

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் இங்க 25

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹே ஹே .... கால் சதம் போட்டாச்சு ..
\

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
நான் கொடுத்த புகை படத்திலே உள்ள பெண்ணை நீங்க ஏற்கனவே பார்த்து இருகீங்க, அவங்களை பார்த்து விட்டு நீங்க போகும் போது என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?"//

இப்படியெல்லாம் பேசுனா எப்படிங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

நசரேயன் said...
/*
இப்போ மேக்கப் வாங்கி கொடுக்கியலா?
*/
பாதி சம்பளம் அதுக்கு தான்
ஹி ஹி

நசரேயன் said...

/*
//கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்//

பலரின் எதிர்பார்ப்பு கடைசியில் இப்படி தான் ஆகிறது. ஒரு சிலர் இதை புரிந்து கொள்வதே இல்லை. தனக்கு பெண் யாரும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லும் போது தான் இது நாள் வரை செய்த தவறை உணருகிறார்கள். ஆனால் அது காலம் கடந்ததாகி விடுகிறது.

நசரேயன் பதிவு நல்லா இருக்கு.
*/
உண்மை தான் கிரி, நானும் நிறைய பார்த்து இருக்கிறேன்

நசரேயன் said...

/*
//500 ரூபாய் மேக் அப் சாதித்து விட்டது//

நமக்கெல்லாம் இந்த லிப்ஸ்டிக்,ரோஸ் பவுடர் விசயமின்னாலே உவ்வே! மஞ்சள்,குங்குமம்,மல்லிகை மேக்கப்பே நீ வாழ்க!
*/
வாங்க ராஜ நடராஜன்..
நீங்க பழமை விரும்பி ராஜ நடராஜன்

நசரேயன் said...

/*
//ஆரம்பத்திலே நிலைமையிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக மாற ஆரமித்தான்.கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்.//

:-))))
*/
வாங்க சந்தனமுல்லை

நசரேயன் said...

/*
//
நான் கொடுத்த புகை படத்திலே உள்ள பெண்ணை நீங்க ஏற்கனவே பார்த்து இருகீங்க, அவங்களை பார்த்து விட்டு நீங்க போகும் போது என்ன சொன்னீங்கன்னு ஞாபகம் இருக்கா?"//

இப்படியெல்லாம் பேசுனா எப்படிங்க
*/
என்ன செய்ய சுரேஷ் பேசவேண்டிய நிலைமை..

நசரேயன் said...

/*
நசரேயன் said...
/*
இப்போ மேக்கப் வாங்கி கொடுக்கியலா?
*/
பாதி சம்பளம் அதுக்கு தான்
ஹி ஹி
*/
வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
ஒருவேளை உங்களுக்கு குறைவா செலவு ஆகலாம்

நசரேயன் said...

/*
கலாட்டாவா இருக்கப்போகு்துனு நினைச்சு படிச்சுக்கிட்டே வந்தேன்..இப்படி டச்சிங் கதையா மாறிடுச்சே! :-)
*/
என்னது நெஞ்சை தொட்டுட்டேனா?

நசரேயன் said...

/*
முடிவு ரொம்ப நல்லா இருந்தது
*/
அணிமா சொன்னா சரியாத்தான் இருக்கும்

நசரேயன் said...

/*
//அமெரிக்காவிலே இருந்து கொண்டு என்ன தான் குத்தாட்டம், தொடைஆட்டம், கும்மி ஆட்டம் ///

நல்லா தான் இருக்கு..
உம்ம ...
வேற என்னத்த சொல்றது?? இப்படி பெரு மூச்தான் விடனும் .

ஆமாம் அது என்ன தொடை ஆட்டம்??
*/
lab dance :):)

நசரேயன் said...

கும்மி அடிச்சுட்டு போன அணிமாவுக்கு நன்றி

S.R.Rajasekaran said...

\\\பஜ்ஜி,வடை எல்லாம் சாப்பிட்டு விட்டு வேண்டாம் என்று சொல்லி விடுவான்\\\

நான் அப்பவே நினைச்சேன் என்னடா மாப்பிள்ளே ரெம்ப குண்டா இருக்கானேன்னு

S.R.Rajasekaran said...

சீரியசா ஒரு மேட்டர் : இந்த பொண்ணு பாக்க போறது அப்புறம் பொண்ணு நல்லா இல்லங்கிறது இதெல்லாம் கண்டு பிடிச்சதே தப்பு

RAMYA said...

//
இப்படி ஒரு அகில உலக எதிர்பார்ப்புகளோட பெண் தேடும் வேலைகளை ஆரமித்தான், ஆரம்பத்திலே புகை படம் பார்க்காம பெண் வீட்டிலே போய் பஜ்ஜி,வடை எல்லாம் சாப்பிட்டு விட்டு வேண்டாம் என்று சொல்லி விடுவான்,
//

சொந்த கதை போல இருக்கு

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...

"இம்மி"ன்னா என்ன?

//

அம்மியா இருக்குமோ

RAMYA said...

//
இந்த இரண்டு வருட காலத்திலே ராபர்ட்டும் கொஞ்சம் மாறி இருந்தான், ஆரம்பத்திலே நிலைமையிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் ஆக மாற ஆரமித்தான்.கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்.
//

நெசமாலுமே நசரேயன் இல்லே போல இருக்கு அந்த ராபர்ட் தான், இப்போ ஒத்துக்கறேன்

RAMYA said...

//
நசரேயன் said...
/*
அப்போ அடுத்து பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணிகிட்டீங்களா? இல்ல..அதே பொண்ணையா?
*/
அதே பெண்ணை தான் கல்யாணம் செஞ்சான்னு நினைக்கிறேன்

//

இன்னும் சந்தேகம் தீரலையா
ஹையோ ஹையோ ஹயயோ

RAMYA said...

//
"இருபத்தி ஐந்து வருஷம் என்னால சாதிக்க முடியாததை, 500 ரூபாய் மேக் அப் சாதித்து விட்டது,இது தான் உங்க எதிர் பார்ப்புன்னு எனக்கு தெரியாம போச்சு?"
//

அட நெசமாலுமா?
இப்படி எல்லாம் நடந்திச்சா?
ஒரு பெரிய கதை போல் இருக்கே

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
சரி சரி,,..
இனி வீட்ல சொல்லி பொண்ணு பாக்க வேண்டியது தான்
//

இன்னும் பாக்கலையா
அப்போ சரி
எல்லாரு கிட்டேயும்
சொல்லி வைப்போம்,
அணிமா விற்கு ஏற்ற
வாயாடி பெண் வேண்டும் என்று

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
500 ரூபாயில அவ்ளோ அழகா காட்ட முடியுமா என்ன??
ஒரு சந்தேகம் தான்..

//

இவுரு எப்பவுமே சந்தேக பிராணி

RAMYA said...

பாவம் நசரேயன்
பாதி சம்பளம்
மேக்கப் செலவு செய்தா
மீதி எப்படி போதும்
பாவம் நம்பர் நசரேயன்
ரொம்ப வெள்ளையா இருக்காரு

RAMYA said...

48

RAMYA said...

49

RAMYA said...

50

RAMYA said...

அப்பாடா 50 தனியா உக்காந்து
டி ஆத்தி ஆத்தி 50 கொண்டு வந்துட்டேன்
ஒரே தாகமா இருக்கு
கொஞ்சம் Soda Please?

குடுகுடுப்பை said...

RAMYA said...

பாவம் நசரேயன்
பாதி சம்பளம்
மேக்கப் செலவு செய்தா
மீதி எப்படி போதும்
பாவம் நம்பர் நசரேயன்
ரொம்ப வெள்ளையா இருக்காரு//

ரம்யாவின் நிறவெறியை வெளிச்சத்துக்கி கொண்டு வருவோம்

Anonymous said...

சூப்பர் கதை :)

CA Venkatesh Krishnan said...

ரொம்ப நல்லாயிருக்கு நசரேயன் !!!

வாழ்த்துக்கள்.

இப்போ ராபர்ட்டோட ஸ்டேடஸ் என்ன?

மோகன் கந்தசாமி said...

நல்லா கெளப்புரீங்கயா பீதிய!

Anonymous said...

நல்லாயிருக்கு :)

பழமைபேசி said...

//வருங்கால முதல்வர் said...
பழமைபேசி said...

"இம்மி"ன்னா என்ன?

//

அம்மியா இருக்குமோ
//

விளக்கஞ் சொல்லி ஒரு பதிவு போடுங்களே?

நசரேயன் said...

/*
//
இப்படி ஒரு அகில உலக எதிர்பார்ப்புகளோட பெண் தேடும் வேலைகளை ஆரமித்தான், ஆரம்பத்திலே புகை படம் பார்க்காம பெண் வீட்டிலே போய் பஜ்ஜி,வடை எல்லாம் சாப்பிட்டு விட்டு வேண்டாம் என்று சொல்லி விடுவான்,
//

சொந்த கதை போல இருக்கு
*/
ஆமா சொந்தமா எழுதினது

நசரேயன் said...

கும்மி அடிச்சிட்டு போன "ரம்" யா வுக்கு நன்றி

நசரேயன் said...

/*
சூப்பர் கதை :)
*/
வங்க சின்ன அம்மணி, நீங்க சொன்ன சரிதான்

நசரேயன் said...

/*
ரொம்ப நல்லாயிருக்கு நசரேயன் !!!

வாழ்த்துக்கள்.

இப்போ ராபர்ட்டோட ஸ்டேடஸ் என்ன?
*/
வங்க இளைய பல்லவன், ராபர்ட் என்ன ஆனான் ன்னு கேட்டுட்டு சொல்றேன்

நசரேயன் said...

/*
நல்லா கெளப்புரீங்கயா பீதிய!
*/
என்ன செய்ய

நசரேயன் said...

/*நல்லாயிருக்கு :)*/
நன்றி தூயா

ரவி said...

அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லவேயில்லை ?

கல்யாணம் ஆச்சா இல்லையா ?

நசரேயன் said...

/*
அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லவேயில்லை ?

கல்யாணம் ஆச்சா இல்லையா ?
*/
ஆமா ஆச்சு, அதே பெண்ணை தான் கட்டினான்

Divya said...

தெளிவான நடையில்.....மிக அருமையான கதை:))

Divya said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க, பாராட்டுக்கள்!!

நசரேயன் said...

/*தெளிவான நடையில்.....மிக அருமையான கதை:))

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீங்க, பாராட்டுக்கள்!!
*/
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Divya

Anonymous said...

//அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லவேயில்லை ? கல்யாணம் ஆச்சா இல்லையா ?//

எங்க கல்யாணம் ஆக. இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் எவன் பொண்ணு கொடுப்பான். கொடுத்தா, கொடுத்தவன அடிக்கணும். கடைசில தாடியும், பீடியும் தான் மிஞ்சினது.

வருண் said...

***கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்****

LOL!

நல்லா இருக்கு இந்தக்கதை, நசரேயன். "வா இந்தப் பக்கம்" னு ஒரு மெளலி படம் இருக்கு. அதுவும் உங்க கதை மாதிர்த்தான் இருக்கும் :-)

Subha said...

என்னதான் சொல்ல நினைக்கிறீங்க?

Aero said...

super da....

நசரேயன் said...

/*
//அப்புறம் என்ன ஆச்சுன்னு சொல்லவேயில்லை ? கல்யாணம் ஆச்சா இல்லையா ?//

எங்க கல்யாணம் ஆக. இந்த மாதிரி ஆளுக்கெல்லாம் எவன் பொண்ணு கொடுப்பான். கொடுத்தா, கொடுத்தவன அடிக்கணும். கடைசில தாடியும், பீடியும் தான் மிஞ்சினது.
*/
அதனாலே தான் தாடி வளர்கிறேன்

நசரேயன் said...

/*
***கடைசியிலே பெண்ணா இருந்தா போதும்ங்கிற எதிர்பார்ப்புக்கு வந்து விட்டான்****

LOL!

நல்லா இருக்கு இந்தக்கதை, நசரேயன். "வா இந்தப் பக்கம்" னு ஒரு மெளலி படம் இருக்கு. அதுவும் உங்க கதை மாதிர்த்தான் இருக்கும் :-)
*/
வாங்க வருண், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

நசரேயன் said...

/*
என்னதான் சொல்ல நினைக்கிறீங்க?
*/
வாங்க சுபாஷினி,மனக்கவலை வேற என்னத்தை சொல்ல

நசரேயன் said...

/*super da....*/
நன்றி