Wednesday, July 28, 2010

திட்டம் போட்டு உசார் பண்ணுவது எப்படி?


இந்த கதை நடந்த காலத்திலே நான் கல்லூரியை முடித்து விட்டு வழக்கம் போல சும்மாதான் இருந்தேன், இப்பவும் சும்மாதானே இருக்கன்னு நீங்க சொல்லலாம். இன்றைக்கு கணிப் பொறியிலே எலிபொறியா இருந்து உலக மகா வேலை செய்தாலும், அன்றைக்கு என் அறிவு எப்படி இருந்து இருக்குன்னு நினைக்கும் போது புல்லரிக்குது, அந்த சம்பவத்தை சொல்லலைனா வரலாறு மன்னிக்காது இந்த மொக்கை எழுத்தாளனை.

வேலைவெட்டி இல்லாம ஏன்டா வீட்டையே சுத்தியே வார, எதாவது வேலை இருந்தா தேடுன்னு சொல்லி எங்க அப்பா தினமும் தொல்லை கொடுக்க, ஊர் எல்லையிலே இருந்த பேருந்து நிலையத்தை சுத்தி வர ஆரம்பித்தேன், எங்க ஊரிலே இருந்து தென்காசி போர பேருந்துகளை எண்ணி, அதிலே போகிற வருகிறவர்களை கணக்கு எடுத்து அரசாங்கத்துக்கும், எனக்கும் கணக்கு சரியா வருகிறதா என்று சரிபார்த்து கொண்டு இருந்தேன். இப்படி ஒரு நாள் கணக்கு பண்ணிக்கொண்டு இருக்கும் போது, என்னைப் பார்த்து யாரோ சிரிக்கிற மாதிரி இருந்தது, திருப்பி பார்த்தா தேவதை மாதிரி இல்லைனாலும்  ஓரளவுக்கு தேறுற அளவுக்கு ஒரு வாலிப பெண் என்னைப் பார்த்து சிரித்து கொண்டு இருந்தாள்.

வலையை விரிக்காமலே தானாக வந்து விழிமீன் மாட்டுதுன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கன்னு, ௬ட வேலை வெட்டி இல்லாத நண்பனிடம் சொன்னேன், அவன் அதுக்கு 

"ஏலே, கருவ மரத்துக்கு தோலை சுத்தி விட்ட மாதிரி ஒரு உடம்பு, அதுக்கு கருப்பு பேன்ட், கருப்பு கட்டம் போட்ட சட்டை போட்டு இருந்தா, உன்னை பார்த்து சிரிக்காம என்ன செய்வா?"

"பொறாமைபடாதே வெண்ணை"

"ஏய், அவ புளியங்குடி அழகி, உன்னை மாதிரி தேவாங்கு எல்லாம் பார்க்கவே ௬டாது"  

அழகின்னு காதிலே விழுந்ததும், மனசிலே மின்சாரம் பாய்ந்து, இதயம், கிட்னி எல்லாத்தையும், வெளியே எடுத்து அவளுக்கு தெரியாமலே அவகிட்ட 
கொடுத்து விட்டேன்.

அடுத்த நாளே கருவாட்டு பானையிலே இருந்த வெள்ளை சட்டையும், நீல நிற பேன்டையும் எடுத்தேன், காலையிலே நானும் கல்லூரி செல்வது போல, நோட்டு ஏதும் இல்லாம பேருந்து நிலையம் சென்றேன், கொஞ்ச நேரத்திலே அவளும் வந்தாள், பேருந்திலே அவளுடன் ஏறினேன், வண்டி கிளம்பியதும்  பேருந்திலே இருந்த ஆட்களை நோட்டம் விட்டேன், என்னைவிட யாரும் அழகா இருக்காங்களான்னு, எல்லாமே பெருசுங்க தான் இருந்தது, நம்பிக்கை ரெம்ப அதிகமாகி விட்டது, இது கண்டிப்பா கல்யாணத்திலே தான் முடியும் என்று கனவு பாட்டு பாட நினைத்தேன். பேருந்து திடிரென நின்று ஒருவனை ஏற்றி கொண்டது, அவனைப் பார்த்த உடனே இலவச மின்சாரத்திலே எரிந்த 500 வாட்ஸ் பலப் போல இருந்த என் முகம், அவிஞ்சி போன கட்டை மாதிரி ஆகிப் போச்சி.ஏன்னா அவன் என்னைவிட மிக மிக அழகா இருந்தான்.
    
பேருந்து கிளம்பிய கொஞ்ச நேரத்திலே அவன் அவள் பக்கம் சென்று கையிலே வைத்து இருந்த தாளை கொடுத்து 

"சுமக்க முடியலை ரெம்ப கஷ்டமா இருக்கு, நீங்க கொஞ்ச வைத்துகொள்ள முடியுமா?"
 அவளும் உடனே புதுசா இங்கிலிபிசு படிச்சி இருப்பா போல "நோ ப்ரோப்லாமு சுகரு" ன்னு சொல்லி வாங்கி வைத்து கொண்டாள். பேருந்து விடுகிற புகையை விட என் காதிலே அதிகமா புகை கிளம்பி ஒரு மேக ௬ட்டம் போல ஆகிடிச்சி, ஓட்டுனர் வண்டிய ஓட்ட சிரமப்படுறார்னு புகையைத் திருப்பி வாங்கிட்டேன். மனசு கேட்கலை வண்டி சொக்கம்பட்டி போனதும் டிக்கெட் எடுக்காமலே இறங்கிட்டேன், வண்டியிலே தென்காசி வரை போய் இருந்தாலும் டிக்கெட் எடுத்து இருக்க மாட்டேன்.  

சொக்கம்பட்டியிலே இறங்கி அங்கே என்௬ட பள்ளிகுடம் படித்த நண்பன் வீட்டுக்கு சென்றேன், கல்லூரி படித்த நானே வேலை இல்லாம இருக்கும் போது  பள்ளிபடிப்பு படிப்பு படித்த அவனுக்கு வேலை எப்படி கிடைக்குமுன்னு நினைத்து கொண்டே போனேன், நான் நினைத்த மாதிரி அவனும் சும்மாதான் இருந்தான். என்னையப் பார்த்து நட்பு பரிமாறி விட்டு வெளியே வந்தோம். ஆளுக்கு ஒரு கட்டைபீடி எடுத்து பத்த வைத்தோம். ஒரு சுண்டு இழுத்து விட்டு நான் 

"முடியலை மாப்ள.. முடியலை "

"முடியலைனா ஆஸ்பத்திரி போக வேண்டியதானே, வேண்ணா சொல்லு எங்க ஊரு ஆஸ்பத்திரி
௬ட்டிட்டு போய் ரெண்டு கிலே அரிசியும், நாலு ஆப்பிள் பழமும் வாங்கி தாரேன்"

மாப்ள நான் அதை சொல்லலைன்னு சொல்லிட்டு  என் சோகக்கதைய சொன்னேன். கேட்டு முடிச்ச உடனே, மாப்ள நீ எனக்கு பீடி குடிக்க சொல்லி கொடுத்து இருக்க, நான் அதுக்கு என்ன கைம்மாறு எப்படி செய்யன்னு தெரியாம இவ்வளவு நாளும் நெஞ்சிலே இருந்து கிட்டே இருந்தது, அதை இன்றைக்கு இறக்கி வைக்கலாம். 

"என்ன மாப்ள சொல்லுற"

"எங்க ஊரு சாராயம் குடிச்சி இருக்கியா?"

"இல்ல மாப்ள"

கைமாறு பண்ணனும், நீ வான்னு ௬ட்டிட்டு போய் 100 மில்லி வாங்கி கொடுத்தான், குடிக்கும் போதே என்னுடைய திட்டத்தை சொன்னேன், அந்த அழகனை வீட்டிலே போய் மிரட்ட சம்மதம் தெரிவித்தான். 

அடுத்த நாளே அவனை மிரட்ட திட்டம் போட்டேன், சொக்கம்பட்டி நண்பன் சொன்னான், ரெண்டு பேரா போய் மிரட்டினா சகுனம் நல்லா இருக்காது, இன்னொரு ஆள் வேணும், நான் உடனே என் தம்பியும் வீட்டிலே சும்மாதானே இருக்கான்,அவனுக்கு போன வாரம் தான் பன்னெண்டாம் வகுப்பு பரிச்சை முடிந்தது, அவனை அழைச்சிட்டு போகலாம், எல்லாம் பேசி முடித்து விட்டு வீட்டுக்கு வந்து மட்டையாகி நல்ல உறக்கம்.

அடுத்த நாள் காலையிலே என் தம்பியை டீ குடிக்க ௬ட்டிட்டு போய் விவரம் சொன்னேன், அவன் உடனே 

"டேய் ஊரிலே ஒன்னு ரெண்டு எனக்குன்னு விட்டு வை, யாரைப் பார்த்தாலும், அவ உன் முத அண்ணி, ரெண்டாவது அண்ணின்னு சொல்லி என்னைய ஒருத்தரையும் நிம்மதியா பார்க்க விட மாட்டேங்குற"   

"இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தான்"

"பேச்சு மாறக்௬டாது"

"கண்டிப்பா" உடனே அவன் என்னிடம் 

"முக்கியமான விஷயம், நான் அவன் மேல கை எல்லாம் வைக்க மாட்டேன், ஏன்னா நான் அடிச்சா அவன் செத்துருவன்"   அப்படின்னு குத்து வசனம் பேசிப்புட்டான், உடனே நான் 

"நான் பார்த்தாலே அவன் செத்துருவான்"

"நான் நெருப்பு"

"நான் கரு நெருப்பு" இப்படி ரெண்டு பெரும் மாறி மாறி அரைமணி நேரம் குத்து வசனம் பேசினதிலே கடையிலே இருந்த அனைவரும் தெரிச்சி ஓடிட்டாங்க, கடைகாரர் எங்களுக்கு ஓசியிலே ரெண்டு டீ கொடுத்து காலிலே விழுந்து கிளம்ப சொல்லி விட்டார்.  

அன்று மாலை எங்க திட்டப் படி மூவரும், அழகன் வீட்டு போனோம், அவன் தெருவிலே ஆள் நடமாட்டம் இருக்கிறதான்னு நோட்டம் பார்த்து கொண்டு இருந்த நேரம் எங்களை நோக்கி ஒருவன் ஓடிக்கொண்டு வந்தான், அவன் அழகன் என்று தெரிந்து விட்டது, உடனே மாப்ள ஆள் வாரன் பிடின்னு சொல்லி முடிக்கல, சொக்கம்பட்டி நண்பன் அவன் கையப் பிடிச்சிட்டன், உடனே அழகன் 

"ஏல, என் கைய பிடிக்காதிய சொல்லிபுட்டேன்"  ன்னு சொல்லி முடிக்கலை ,பின்னால இருந்து வந்த கும்பல், அழகனை தாக்க ஆரம்பித்து.

அவன் உடனே "அண்ணே என்னை மன்னிச்சிடுங்க, இனிமேல நான் அந்த பஸ்ல ஏற மாட்டேன்" ன்னு கெஞ்சுறான், அவனை அடிச்ச கும்பல் எங்களை திருப்பி பார்த்து இவனுவளும், இவன் ௬ட பேசினாங்க, இவனோட சேக்களிகளா இருக்குமுன்னு சொல்லி, அவனை விட்டுட்டு எங்களை தொவைச்சி தொங்க போட்டுடாங்க, என் உடம்பு அவங்களுக்கு அடிக்க ரெம்ப நல்லா இருந்ததோ என்னவோ, என்னைய மட்டும் நல்லாவே கவனிச்சாங்க, நொங்கு தின்னவனை அடிச்சாங்க, சிரட்டையை பார்க்காத என்னையும் எதுக்கு அடிச்சாங்கன்னு தெரியலை, என்னைய நல்லா அடியாளம் கண்டு வச்சிக்கிட்டு போகும் முன்னாலே ஒருத்தன் சொல்லிட்டு போனேன் 

"இனிமேல என் தங்கச்சி  போற தெரு பக்கமோ, பஸ் பக்கமோ பார்த்தேன், அன்றைக்கு உனக்கு சங்குதான்னு"   அம்புட்டு குத்து குத்திட்டு குத்து வசனம் சொல்லிட்டு போய்ட்டான், அன்றைக்கு ஊரை விட்டு ஓடி வந்தவன்தான், இன்னும் ஊருக்குள்ளே காலடி எடுத்து வைக்க முடியலை. ஆனா அந்த சம்பவத்துக்கு நான் போட்ட திட்டம் இன்னைக்கு என்னைய கணிப் 
பொறியாளர் ஆக்கி இருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க.

(பாலா அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி எல்லாம் கதை எழுதினா கொடுப்பாங்களா?)


29 கருத்துக்கள்:

வெறும்பய said...

அருமை நண்பரே...

இதுக்கு தான் ரோட்டுல வர போற பொண்ணுங்களா எல்லாரையும் ரூட் விடக் கூடாது..

நாங்கெல்லாம் எத்தன இடத்தில வாங்கியிருப்போம்...

அமைதிச்சாரல் said...

திட்டம் போட்டீங்க.. சரி. அதோட நிறுத்தியிருக்க்கலாமுல்ல. முதுகு தப்பிச்சிருக்கும் :-)))))

கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே இப்ப எந்த அண்ணிய கல்யாணம் பன்னிருகீங்க..

ஞானபீடமெல்லாம் தெரியாது வேண்ணா டாஸ்மாக்குல பீர் வாங்கித்தாரேன்

ஆரூரன் விசுவநாதன் said...

//பால அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி எல்லாம் கதை எழுதினா கொடுப்பாங்களா?)///

ஏண்ணே.....இது என்ன புது பீடா....

பழமைபேசி said...

//(பால அண்ணே//

ஆமா... அவர் என்றும் பாலகந்தான்!!!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
வலையை விரிக்காமலே தானாக வந்து விழிமீன் மாட்டுதுன்னு
//
கதை எழுதி இருக்கிறதா தான போட்டுரிக்கீங்க, அப்புறம் ஏன் கவுஜல்லாம் இருக்கு...

வானம்பாடிகள் said...

பால அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி எல்லாம் கதை எழுதினா கொடுப்பாங்களா//

அட அத ஏன் கேக்குறீங்க. ஞான பீடம் அறிவுப்பு போட ரெடியா இருக்க, சாகித்திய அகாதமியில இருந்து இது இலக்கியம், நாங்கதான் கொடுப்போம்னு வக்கீல் நோட்டீஸ் வந்திருச்சாம். இது தெரிஞ்சி போய் அரசாங்க உடமையாக்கணும்னு மத்திய மானில அரசுக்குள்ள சண்டையாம். புலிட்சரும் நோபலும் வேற பிச்சிக்கிறாங்களாம்.

எப்புடியோ தொடர்ந்து எளக்கியத்துக்கு எளக்கி விட்டுட்டிருக்கீங்க:))

Chitra said...

(பால அண்ணே எதோ ஞான பீட விருது இருக்காமுல்ல, இப்படி எல்லாம் கதை எழுதினா கொடுப்பாங்களா?)

...... Pulitzer Prize Winner!!! :-)

அப்துல்மாலிக் said...

கத எழுதுறதுலே நீ ஒரு சிங்கம்யா...:)

ஹேமா said...

//"இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தான்"//

தாராள மனசு....எல்லாம் தாங்கும் மனசு உங்களுக்கு நசர்.இதோட விட்டுவச்சு உங்களை அமெரிக்காவுக்குப் போக விட்டாங்களே.அவங்க நல்லவங்கதான் !

அமுதா கிருஷ்ணா said...

ஞான பீடத்திற்கு கதையை அனுப்பிட்டேன்....

Anonymous said...

//கே.ஆர்.பி.செந்தில் said...

அண்ணே இப்ப எந்த அண்ணிய கல்யாணம் பன்னிருகீங்க..//

அதானே, அந்த உண்மை எங்களுக்கு தெரிஞ்சாகணும் :)

முகிலன் said...

இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனையே...

யாரும் இதை நசரேயனின் உண்மை வாழ்க்கையோடு சம்மந்தப்படுத்திப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

:)))))))))

பா.ராஜாராம் said...

ரெண்டு இடுகையா ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்ல்லாம் குறஞ்சு ரொம்ப ஏமாத்தி இருந்தீங்க. இதுல, அந்த குறை இல்லை. போக, வலது ஓரம் எல்லாம் மறையாம முழு ஸ்பெல்லிங் மிஸ்டேக்சையும் பார்க்க வைத்ததுக்கு நன்றி.

கண்ணில் நீர் வர சிரிக்க வைக்க முடியுது உம்மால் ஓய்! :-))

பா.ராஜாராம் said...

என்னடா இவன் ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்லயே இருக்கான் என வருந்த வேணாம். ப்ரியாமணியை பார்க்கிற போது இப்பல்லாம் உங்க நினைவு வருவது போல, இடத்திற்கு தகுந்த நினைவும் வருது.

இந்த கேஸ்ல நானும் இப்படியே. ஒரு நசர் போதும் என திருத்தி தருகிறார்கள் நேசனும், சரவனனும். . அட, நம்மாலு என்கிற சந்தோசமே. :-)

goma said...

புளியங்குடி பஸ்ஸில் பயணம் செய்ய வைத்து விட்டீர்கள்...

goma said...

ஞானபீடம் விருதெல்லாம் இந்த கதைக்கு ஜுஜுபி

ஈரோடு கதிர் said...

வாக்குமூலம் கொடுத்துப்போட்டு.. கற்பனையாம்ல கற்பனை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்ணில் நீர் வர சிரிக்க வைக்க முடியுது உம்மால் ஓய்! :-))//

Repeat

இராமசாமி கண்ணண் said...

அண்ணே இன்னும் எத்தன இடத்துல அடி வாங்கீருக்கீங்க இத மாதிரி :) நீங்க ரொம்ப ரொம்ப நல்லவரோ :)

சே.குமார் said...

நல்லா இருக்கு கதை.
இது உங்கள் சொந்தக் கதையா... இல்ல... கற்பனையில் உதித்ததா நண்பரே...
நல்லா எழுதியிருக்கீங்க...

அப்பாவி தங்கமணி said...

//இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தான்"//
நல்லதொரு குடும்பம்... பல்கலைகழகம் (ஹ ஹ ஹ)

எல்லாஞ்சரி... அதென்ன "கற்பனை"னு வகைபடுத்தி இருக்கீங்க...

thenammailakshmanan said...

கணிப்
பொறியாளர் ஆக்கி இருக்குன்னு சொன்னா நம்பவா போறீங்க.//
அந்த உதைக்கே கணிப் பொறியாளர்னா இன்னும் போட்டு இருந்தாங்கன்னா என்னவா ஆகி இருப்பிங்க நசர்...:)))

RAMYA said...

//"திட்டம் போட்டு உசார் பண்ணுவது எப்படி?"
//

தலைப்பே ஒரே தில்லாலங்கடியா இருக்கே:)

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//
"இது தாண்ட கடைசி அண்ணி, இனிமேல எல்லாம் உனக்குத்தான்"
//

ஐயோ எப்படி எல்லாம் சொல்லி இருக்கீங்களா? அது சரி :)

RAMYA said...

//
இந்தக் கதை முழுக்க முழுக்க என் கனவுதான்...
//

இப்படி நீங்க எவ்வளவு தடவை சொன்னாலும் உங்களை யாரும் நம்பப் போறதில்லே போங்க:)

செமையா நகைச்சுவையுடன் கூடிய இளமைப் பிராய நிகழ்வுகள் என்று சொல்லலாமா நசரேயன்:)

Mahesh said...

ஞான பீடந்தானே.... ஒண்ணு போதுமா நாலஞ்சு வேணுமா??

:)))))))))))))))))))))))))

Vijiskitchen said...

வாவ் சூப்பர் தள்ங்க. நான் இன்றைக்கு தான் பழமைபேசி தளம் வழி இந்த தளத்திற்க்கு தடம் புரண்டு வந்தேன்.
பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு.
மீண்டும் வருகிறேன்.

ரொம்ப நல்லா இருக்கு கதைங்க.