அழகிப் போட்டி குறிப்புகள்
பொறுப்பு அறிவித்தல் :அழகிப்போட்டியிலே கலந்து கொள்ள குறிப்பு கேட்ட ஒருவரிடம் கொடுக்கப்பட்ட விளக்கம்,உரையாடலில் கலந்து கொண்ட நபர்கள் விவரம் தெரியலை,
அதனாலே ஆட்டோ அனுப்ப முடியவில்லை
"அழகிப் போட்டி என்பது அழகுக்கும், அறிவுக்கு சேர்த்தே வைக்கும் போட்டி, அதிலே கேள்வி பதில் பிரிவு ரெம்ப முக்கியம், அவங்க கேட்கிற கேள்விகளுக்கு எல்லாம் பதில் முக்கியம்"
"நான் அழகிப் போட்டிக்கு போறேனா பரிச்சை எழுதப் போறேனா?"
"ரெண்டும் ஒண்ணுதான்,உலக வறுமை ஒழிக்க என்ன செய்யணும், உலக சமாதானத்துக்கு என்ன செய்யணும், புவி வெப்பமாவதை தடுப்பது எப்படின்னு
கேள்விகள் வரும்"
"நிப்பாட்டு.. நிப்பாட்டு.. அழகிப் போட்டிக்கும் இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம், ஒவ்வொரு நாட்டோட தலைவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, தையல்காரர் தைக்க முடியாம கிழிச்சி கொடுத்த உடுப்புகளைப் போட்டு உலாவருகிற எங்க கிட்ட கேட்டு என்ன பயன், இல்ல நாங்க பதில் சொன்ன உடனே எல்லோரும் சொம்பை எடுத்துகிட்டு வந்து தண்ணி ஊத்துவாங்களா?"
"நீ இப்படி எல்லாம் பேசின உன்னை உள்ளூர் கிழவி பட்டம் ௬ட கிடைக்காது"
"சரி சாமி, நான் இனிமேல பேசலை, நீ என்ன சொல்லுறியே கேட்டுக்கிறேன்,கேள்வி பதில் படிக்கலாம், வேற என்ன விஷயம் இருக்கு"
"அழகிப் போட்டியிலே முக்கியமா விஷயம், பூனை நடை"
"அது என்ன பூனை நடை?"
"இப்படி நான் நடக்கிற மாதிரியே நடக்கணும்"
"தண்ணியை போட்டுட்டு நடக்கிறவன் மாதிரி நடந்தா, அது பூனை நடையா?"
"ஆமா.. ஆமா,அவன் தள்ளாடுறது கோப்பையை கவுத்ததுக்கு, நீ தள்ளாடுறது கோப்பையை வாங்குறதுக்கு(ச்சோ.. ச்ச்சோ.. ச்ச்சோ..),இன்னொரு முக்கியமா விஷயம், போட்டியிலே ஜெயித்து வெற்றி பெற்ற உடனே செய்ய வேண்டியது"
"ஜெயிச்சா, பதக்கத்தையும், ரூபாயையும் வாங்கிட்டு இடத்தைக் காலி பண்ண
வேண்டியது தான்"
"அதில்லை பக்கி, இந்த காணொளிகளைப் பாரு" ஒவ்வொரு காணோளிகளைப் பார்த்து விட்டு
"ஏண்டா, இந்த புள்ளிகள் எல்லாம் இப்படி அழுவுதுங்க"
"ஜெயிச்ச சந்தோசம்"
"அவங்க அப்பன், ஆத்தா செத்த அன்னைக்கு ௬ட இப்படி அழுவாதுங்க போல தெரியுது"
"அழகிப் போட்டின்னா சும்மாவா, நீயும் ஜெயிச்ச உடனே ரெண்டு கையையும் எடுத்து வாயிலே வச்சிக்கணும், கையிலே தடவி இருந்த கிளிசரினை கண்ணு கிட்ட கொண்டு போயிட்டு, கண்ணீர் பிதுங்கணும், அப்படியே நீ வைக்கிற ஒப்பாரியிலே, அரங்கமே சோக மழையிலே நனையனும், உன்னோட திறமையைப் பார்த்து வடக்கூர்காரன் உடனே படத்திலே நடிக்க ௬ப்பிடுவான்"
"நான் ஒரு மாறுதலுக்காக குலவை விடவா?"
"நீ குலவை விட்டாலும், கும்மி அடிச்சாலும், அழுறது மட்டும் தத்துருவமா
இருக்கணும்"
"இன்னொரு விஷயம் நான் வடக்கூர்காரன் படத்திலே எல்லாம் நடிக்க மாட்டேன், தமிழ் படத்திலே மட்டும் தான் நடிப்பேன், தமிழ் மக்களுக்கு மட்டுமே சேவை செய்வேன்"
"அது உன் இஷ்டம் தாயீ, தனி மனிசி உரிமையிலே நான் தலையிடமாட்டேன்.அதுமட்டுமில்லை, உன் பேரை அறிவித்த உடனே கை, காலை உதைந்து "ஆஆஆஆஆ ஓஓஓஓ" அலைப்பறையா அலறணும், பக்கத்திலே இருக்கிறவன் காது செவுடு ஆகிற மாதிரி கத்தனும்,ஜெர்மன், பிரெஞ்சு மொழியிலே "ஐ லவ் இந்தியா" லவ் யூ மாமி, லவ் யூ தாடி" ன்னு
சொல்லணும்"
"அங்கிட்டு ஒரு குத்தாட்டமா?"
"அதெல்லாம் நீ சினிமா நடிகை ஆனா உடனே,சேவைன்ன உடனே தான் ஞாபகம் வருது, உன்னைய எங்க அலுவகத்துக்கு பிரதிநிதியா நீங்க இருக்கனுமுன்னு பல பன்னாட்டு நிறுவனங்கள் கெஞ்சுவாங்க, ஆனா நீ குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை, கள்ளச்சாராயம் ஒழிப்பு அப்படின்னு தேர்ந்து எடுக்கணும்"
"ஏன் இதுக்கு முன்னாடி, யாரும் அதை எல்லாம் எடுத்தது கிடையாதா?"
"எடுத்து இருக்காங்க"
"அப்புறம் ஏன் இன்னும் அது ஒழியலை"
"அதெல்லாம் மீட்டர் ஒடுவதுக்கு தான், போட்டியிலே கொடுத்த பித்தளை கம்பியை தலையிலே மாட்டிகிட்டு புகைப் படத்துக்கு நின்னா மட்டும் போதும்"
"ஜெயிச்ச உடனே நீ உலக சுற்றுலாக்கு போகணும், ஆப்ப்ரிக்கவிலே உகாண்டா,போண்டா அப்படின்னு ஒரு நாட்டை தெரிந்து எடுத்துகிட்டு அங்க உள்ள வறுமையை ஒழிக்கனுமுன்னு, நீ ஐந்து நட்ச்சத்திர ஹோட்டல இறைச்சி பிரியாணி சாப்பிட்டுகிட்டே சொல்லணும்"
"ஏன் நம்ம ஊரிலே வறுமையே இல்லையே, இங்க என்ன பணம் செழித்து கிடக்கோ"
"அட பக்கி .. பக்கி, நம்ம ஒரு ஏழை நாடுன்னு வெளியே சொல்ல௬டாது"
"ஒ.. குடிக்கிறது ௬ழா இருந்தாலும், கொப்பிளிக்கிறது பன்னீர் மாதிரி இருக்கணும்னு சொல்லுற, வெற்றி பெறுவதை விட ரெம்ப கஷ்டமா இருக்கும்
போல "
"போட்டி நடக்கும் போது யாராவது தப்பி தவறி ௬ட கறுப்புன்னு சொல்லிட்டா, நிறவெறியை தூண்டி விடுறான்னு கொலைவெறியா அறிக்கை விடனும்"
"நான் ஒன்னும் அம்புட்டு சிகப்பு இல்லையே, கறுப்பை கறுப்புன்னு சொல்லாம வேற எப்படி சொல்லமுடியும்?"
"விவரம் தெரியாமா பேசாதே, நீ மட்டும் அப்படி அறிக்கை விட்டா, உலக நாடுகள் உனக்காக பரிந்து பேசுவாங்க, போட்டியே இல்லாம உனக்கு கோப்பையை கொடுத்திடுவாங்க"
"அப்படியா!!!"
"ஆமா.. ஆமா"
"சொல்லவேண்டியது இவ்வளவு தானா இன்னும் ஏதும் இருக்கா?"
"இருக்கு இனிமேல தான், உலக அழகிப் போட்டுக்கு அறிவிப்பு வரும்"
"அதுவரைக்கும் நான் என்ன செய்ய?"
"கனவு தான்"
"உன் கனவிலே வாரதை எல்லாம் சொல்லிட்டு என்னை கனவு காணச்
சொல்லுகிறாயா?"
.......................
................................
18 கருத்துக்கள்:
அண்ணன் அவர்கள் அடுத்து ஆணழகன் போட்டி குறிப்புகளை அள்ளி வீசப் போகிறார், அதுமட்டுமில்லாமல் அவர் எப்படி ஆணழகன் ஆனார் என்பதையும் சபீனா போட்டு விளக்குவார். நன்றி! வணக்கம்!
அழகு போட்டி என்று அழுக்கு போட்டி...
//அழகு போட்டி என்று அழுக்கு போட்டி...//
முதல்ல யோசித்த தலைப்பு அழுக்கு போட்டிதான்
ஏற்கனவே ஐஸ்வர்யா ராயும், பிரியங்கா சோப்ராவும், சுஷ்மிதா சென்னும் வறுமையை ஒழித்து சாதனை புரிந்து உள்ளனர்.
என்னாச்சி மோனே! இந்த கலக்கு கலக்குறீரு:))யப்பா சாமி! அதும் அந்த பித்தள கம்பிய மாட்டிகிட்டு போஸ் கொடுக்கிறது இருக்கே. அபாரம்.:)))
//
என்னாச்சி மோனே! இந்த கலக்கு கலக்குறீரு:))யப்பா சாமி! அதும் அந்த பித்தள கம்பிய மாட்டிகிட்டு போஸ் கொடுக்கிறது இருக்கே. அபாரம்.:)))
//
இங்க வெயிலே அதிகமா இருக்கு
அது செரி..
அண்ணாச்சி ...அந்த பூனை நடையை ஒருக்கா நடந்து காட்டுங்கோ.
நானும் பழகவேணும் !
//அது என்ன பூனை நடை?"//
விளக்கம் நல்லா இருக்கு.
தலைல புக் வைச்சு கீழ விழாம நடந்து பழகுவாங்களாம்
//"நான் ஒரு மாறுதலுக்காக குலவை விடவா?"
"நீ குலவை விட்டாலும், கும்மி அடிச்சாலும், அழுறது மட்டும் தத்துருவமா
இருக்கணும்//
இது நல்லாத்தானே இருக்கு. ஏன் இதுவரை யாரும் முயற்சி பண்ணலை :-))))
enna sir ennoda comment enga?
ithayum podalana nejamavae mail varum count panna aarambichudunga
naanum tamilla eluthuranae ennoda blog vaanga asanthuduveenga
ஏனுங்கண்ணா இந்த கொல வெறி? இருங்க இருங்க இன்னிக்கி கனவுல பூரா புது பட சீன் எல்லாம் ஒண்ணு ஒண்ணா வரும்
அப்துல் கலாம் "கனவு காணுங்கள்" சொன்னதை இப்படி எல்லாம் தப்பா எடுத்துக்கறாங்களே... கலாம் கலாம் உங்களுக்கு ஒரு சலாம் சலாம், உடனே உங்க statement ஐ வாபஸ் வாங்குங்க... இவங்க காணுற கனவு எல்லாம் தாங்க முடியல....
:))))
தங்களுக்கு விருது இங்கே
http://sandanamullai.blogspot.com/2010/07/blog-post_06.html
ஆமா.. ஆமா,அவன் தள்ளாடுறது கோப்பையை கவுத்ததுக்கு, நீ தள்ளாடுறது கோப்பையை வாங்குறதுக்கு(ச்சோ.. ச்ச்சோ.. ச்ச்சோ..),இன்னொரு முக்கியமா விஷயம், போட்டியிலே ஜெயித்து வெற்றி பெற்ற உடனே செய்ய வேண்டியது"//
ஹாஹாஹா சூப்பர்நசர்.
அழகிப் போட்டின்னா சும்மாவா, நீயும் ஜெயிச்ச உடனே ரெண்டு கையையும் எடுத்து வாயிலே வச்சிக்கணும், கையிலே தடவி இருந்த கிளிசரினை கண்ணு கிட்ட கொண்டு போயிட்டு, கண்ணீர் பிதுங்கணும், அப்படியே நீ வைக்கிற ஒப்பாரியிலே, அரங்கமே சோக மழையிலே நனையனும், உன்னோட திறமையைப் பார்த்து வடக்கூர்காரன் உடனே படத்திலே நடிக்க ௬ப்பிடுவான்" //
இம்ம்புட்டுக் கவனிச்சு இருக்கியளே நசர்..:))
//"அதில்லை பக்கி, இந்த காணொளிகளைப் பாரு" ஒவ்வொரு காணோளிகளைப் பார்த்து விட்டு "ஏண்டா, இந்த புள்ளிகள் எல்லாம் இப்படி அழுவுதுங்க"//
ஒழுங்கா தமிழ்ல எழுத தெரியாது.... அதென்ன காணொளி?
இது என்ன நீங்களும் அந்த வண்ணத்து பூசியும் யாருக்கும் தெரியாம தனியா சந்திச்சு பேசிகிட்ட டியலாக்கா??????? இப்படி பேசித்தான் அந்த வண்ணத்து பூசிய புடிச்சு பொட்டில அடைசியலோ?????
Post a Comment