Tuesday, July 13, 2010

The twilight saga eclipse movie review(ஆலிவுட் படம்)



நான் பெரும்பாலும் ஆங்கில படங்கள் விரும்பி பார்க்கிறது கிடையாது, நான் பச்சை தமிழன் என்பதற்காக அல்ல, அவர்கள் படங்களிலே பேசுகிற வசனங்கள் எனது இலக்கிய அறிவுக்கு எட்டாமல் இருப்பதே காரணம் என்பதை உறுதியா சொல்ல முடியலைனாலும், ஓரளவுக்கு சொல்லமுடியும். இப்படியாக இருந்த நான் இந்த எக்லிப்ஸ் படத்தை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன், காரணம் நான் ஏற்கனவே இந்த ரத்த காட்டேரிகளைப் பற்றிய ஆராட்சியிலே தொல் பொருள் துறை கொடுக்க முடியாத முனைவர் பட்டத்தையும், மருத்துவ பட்டத்தையும்  வாங்கி வைத்து இருந்த காரணத்தினாலே இந்தப் படத்திற்கு சென்றேன்.

படத்தின் கதை எனனைவாக இருக்கும் என்று படம் போட்ட கொஞ்ச நேரத்திலே கொலைவெறியோட யோசித்து கொண்டு இருக்கும் போது அருகிலே இருந்த நண்பன் சொன்னான் இது படத்தோட மூன்றாவது பாகம் என்று, அதோடு யோசிக்கிறதை நிறுத்திக்கொண்டு படத்திலே ஆர்வம் காட்டினேன். நம்ம ஊரிலே மழை வரலைன்னா கழுதைக்கும் மனுசனுக்கும் கல்யாணம் பண்ணி வைப்போம், ஆனா வெள்ளையம்மா ரத்தக் காட்டேரிக்கும், ஓநாய்க்கும் துண்டு போடுறது தான் படத்தின் கதை.

இந்திய திரை உலகங்களிலே நாம் பலமுறை பார்த்து இருக்கும் முக்கோண காதல் கதை தான், ஒரே வித்தியாசம் மனுசி, மனஷனை காதலிக்கலை, அவளுடைய காதலன் ஒருவனுக்கு  எத்தனை வயசுன்னு அவனுக்கே தெரியாது, இன்னொன்று ஓநாய்(இது கொஞ்சம் வாலிப புள்ளை மாதிரி இருக்கு). படத்திலே கடைசியிலே வெள்ளையம்மாவை கை பிடிப்பது இதுவா, அதுவா ன்னு ரசிகர்களை ஏங்க விடாம, படத்தின் ஆரம்பத்திலே நாயகி ரத்தக் காட்டேரிக்கு துண்டு போட்டு வச்சுகிறாங்க. அதே சமயம் சும்மா இருக்கிற ஓநாயை உசுப்பு ஏத்துவதற்கு அது(அவன்) கூடயும் இரண்டு சக்கர வாகனத்திலே சுத்துறாங்க. 

இப்படி ஓநாய் கூட சுத்தினாலும், நாயகி அடிக்கடி ரத்தகாட்டேரிகிட்ட "என்னைய எப்ப கழுத்தை கடிப்ப.. கடிப்பன்னு" பல்லை காட்டி கேட்டாலும், அதுவும் இப்ப இல்லை.. இப்ப இல்லை ன்னு சொல்லிக்கிட்டு இருக்கும், ஏன் கடிக்கலை, கடிச்சா மிச்ச கதைக்கு எங்க போகன்னு எழுத்தாளர் யோசித்து இருக்கலாம். இந்த ஓநாய்க்கும், ரத்தக் காட்டேரிக்கும் ஆகவே ஆகாது, அதுக ரெண்டுக்கும் காவிரி பிரச்சனையோ  என்னன்னு தெரியலை, ரெண்டு பேரும் ஒருத்தரை, ஒருத்தர் முறைச்சுகுவாங்க, இது நாயகிக்கு ரெம்ப வசதியா இருக்கும், ரெண்டு பேரு கூடயும் தனித்தனியா ஊர் சுத்தும்.

நாயகியோட அப்பாவுக்கு நாயகி காட்டேரி௬ட சுத்துறது பிடிக்காது, எப்படியும் மக மனுசனை கல்யாணம் பண்ணமாட்டாள்னு தெரிஞ்சி, மனுசத்தை ஒத்து இருக்கிற ஓநாய்க்கு சரின்னு சொல்லுவாரு.ஓநாய்க்கு, ரத்தக் காட்டேரிக்கும், நாயகிக்கும் இடையிலே காதல் துண்டு நல்லா இருக்குன்னு தெரிந்சாலும், இவரு அடிக்கடி சந்திலே சிந்து பாடிக்கிட்டே இருப்பாரு, அவரு நாயகியப் பார்த்து "நீ ஏன் ரெண்டு பேரை காதலிக்க  ௬டாது" ன்னு பிட்டை போட்டுகிட்டே இருப்பாரு, நாயகி அதையெல்லாம் மறுதிடுவாங்க. ஆக வடை கிடைச்ச காட்டேரி, வடை கிடைக்க போராடும் ஓநாய் இப்படியே கதை பாதி வரை வருகிறது.  இவங்க ரெண்டு பேருமே அடிச்சிகிட்ட பார்க்க நல்லா இருக்காதுன்னு கதையிலே வில்லன் ௬ட்டம் வருகிறது, அவர்கள் நாயகியை கொல்லத்துடிக்கிறார்கள்.

ஏன் எதுக்கு சரியா காரணம் தெரியலை, ஒருவேளை காட்டேரிக்கு அவுக ஆள்கள்ள பெண் இருந்து இவரு வேண்டாமுன்னு சொல்லிட்டாரா , இல்லை நாயகிக்கு நல்ல சொம்பு அடிக்கிறாருன்னு பொறமையான்னு தெரியலை. வில்லன் ௬ட்டம் புதுசா தேத்துன காட்டேரி படையை  வைத்து நாயகியை அழிக்க வருவார்கள். இதை காட்டேரி கூட படிக்கிற சக காட்டேரிகள் ஞானக்கண்ணால் தெரிஞ்சிகிட்டு நாயகிகிட்ட சொல்லுறாங்க. இந்த உண்மை ஓநாய்க்கும் தெரிய வருது, அவரு துண்டு போட்ட ஆளுக்கு ஒரு பிரச்சனைன்னா அவரு சும்மா இருப்பாரா, அவரும் நானும் உதவி செய்யுறேன்னு சொல்லி வருவாரு, காட்டேறியும் வேற வழி இல்லாம சம்மதிக்கும். 

ஓநாயும், காட்டேரியும் நாயகியை கொல்ல வரும் இளங் காட்டேரிகளை சமாளிப்பது எப்படின்னு பயிற்சி எடுக்கும் போது ஓநாய்க்கு தெரியவருகிறது  நாயகிக்கும் காட்டேரிக்கும் விரைவிலே கல்யாணமுன்னு, அதை கேள்விப்பட்டு கோபப்பட்டு ஓநாய் வீட்டுக்கு போக முயல,தடுத்து நிறுத்த நாயகி "எனக்கு முத்தம் கொடுன்னு சொல்லுவாங்க. அம்புட்டு நேரம் கொலைவெறி கோவத்திலே இருந்தவரு, நம்ம ஊரிலே நொங்கு சாப்பிடுற மாதிரி நாயகி வாயிலே உறிஞ்சி குடிப்பாரு,நொங்கு திங்கும் முன்னாடியே நாயா பேயா அலைந்தவர், இனிமேல எப்படி கோவம் வரும்,நாய் குட்டி மாதிரி நாயகி பின்னாடி வந்துடுவாரு.நொங்கை சாப்பிட்டிட்டு மறுபடியும் களத்திலே இறங்கிடுவாரு. இறுதியிலே உள்ளூர் காட்டேரிகளும், ஓநாய்களும் சேர்ந்து புதுசா வந்த காட்டேரிகளை அடித்து விரட்டி விடும். 

கடைசியிலே நாயகி கையிலே காட்டேரி கல்யாணத்துக்கு வாங்கி வைத்து இருந்த மோதிரத்தை போடுவாருன்னு, போட்ட உடனே இடைவேளைன்னு நினைச்சேன், ஆனா படமே முடிஞ்சி போச்சி, அடுத்த பாகத்திலே மிச்ச கதை வரும் போல தெரியுது. 
   


15 கருத்துக்கள்:

T.V.ராதாகிருஷ்ணன் said...

:))))

மின்னுது மின்னல் said...

என்னா ஏதுனு தெரியாம இந்த படத்தை டவுன்லோடு செய்து வைச்சிருக்கேனே :((

vasu balaji said...

இந்த விமரிசனம் மட்டும் கண்ணுல பட்டுச்சோ, அடுத்த பாகம் என்ன அடுத்த படம் கூட எடுக்கமாட்டான்.:)). என்னா ஒரு லொள்ளு.

/அவர்கள் படங்களிலே பேசுகிற வசனங்கள் எனது இலக்கிய அறிவுக்கு எட்டாமல் இருப்பதே காரணம் என்பதை உறுதியா சொல்ல முடியலைனாலும், ஓரளவுக்கு சொல்லமுடியும். //

ஐ. நம்ப கேசு:))

/ நாயகி ரத்தக் காட்டேரிக்கு துண்டு போட்டு வச்சுகிறாங்க.//

ஏன்? நம்ம கையில இருந்த துண்ட என்னா பண்ணீங்க?

//நம்ம ஊரிலே நொங்கு சாப்பிடுற மாதிரி நாயகி வாயிலே உறிஞ்சி குடிப்பாரு,நொங்கு திங்கும் முன்னாடியே நாயா பேயா அலைந்தவர், இனிமேல எப்படி கோவம் வரும்,நாய் குட்டி மாதிரி நாயகி பின்னாடி வந்துடுவாரு.நொங்கை சாப்பிட்டிட்டு மறுபடியும் களத்திலே இறங்கிடுவாரு.//

இதுல ஒன்னும் முனைவர் பட்டமெல்லாம் வாங்கலையோ. நொங்கு தின்றதுக்கு நோபல் பரிசு கொடுங்கப்பா தளபதிக்கு:))

pinkyrose said...

aama enga sir poninga ?!

குழலி / Kuzhali said...

ஆகா இவ்ளோ புரிஞ்சதா உங்களுக்கு, இவ்ளோ எனக்கு புரிஞ்சிருந்தா கூட படத்தை தூங்காம பார்த்திருந்திருப்பேன், ஆனா காசு கொடுத்து போய் தூங்கிட்டு வந்ததுதான் மிச்சம், இத்தனைக்கும் நான் முதல் இரண்டு பாகங்களும் பார்த்துட்டேன்...

சென்ஷி said...

:))))))))))

Unknown said...

இதை தியேட்டருக்குப் போயி பாத்தீகளாக்கும்?

விக்னேஷ்வரி said...

பயம்மா இருக்கு. நான் விமர்சனம் வாசிக்கல.

Unknown said...

வழக்கமான படம்தான்.. கிராபிக்ஸ் கொஞ்சம் தூக்கல்..

ஆனால் கலக்கலான விமர்சனம்... நுங்கு நல்ல உவமானம் ..

பா.ராஜாராம் said...

அருமை வி.காந்த்! :-))

நசரேயன் said...

//குழலி / Kuzhali said...
ஆகா இவ்ளோ புரிஞ்சதா உங்களுக்கு, இவ்ளோ எனக்கு புரிஞ்சிருந்தா கூட படத்தை தூங்காம பார்த்திருந்திருப்பேன், ஆனா காசு கொடுத்து போய் தூங்கிட்டு வந்ததுதான் மிச்சம், இத்தனைக்கும் நான் முதல் இரண்டு பாகங்களும்
பார்த்துட்டேன்...//

தலைவா நான் பார்த்த ஆங்கில படங்களிலே வசனம் ஓரளவு புரிஞ்ச படம் இதுதான்,நானும் இதுக்கு முந்தின பாகம் பார்த்தேன், இந்த அளவுக்கு புரியலை. நீங்க சொல்லுறதைப் பார்த்தா படத்தை இன்னொரு தடவை பார்க்கணுமோ?

Anonymous said...

அச்சச்சோ. தளபதி. இந்த படம் வயசுப்புள்ளைக அதாவது டீனேஜ் பயபுள்ளைக பாக்கற படம். வருசா வருசம் வயசு குறையற மாதிரி நினைப்போ :)

a said...

தல இங்கிலீசு படமெல்லாம் பாக்குது...

ஹேமா said...

அட...வித்தியாசமான பதிவாயிருக்கே !
எப்பிடி கவனிக்காமப் போனேன் !

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இப்படி ஒரு விமர்சனத்த வாழ்க்கைல நான் படிக்கல....மீ எஸ்கேப்...