Tuesday, July 27, 2010

பதிவுலகிலே நான் எப்படிப்பட்ட மகான் ?

பொறுப்பு அறிவித்தல் :


எவ்வளவோ பேரு என்னை தொடர் இடுகை எழுத ௬ப்பிட்டாங்க, அவங்க பேரு எல்லாம் ஞாபகம் இருக்கு, அதை எல்லாம் சொன்னா இந்த இடுகை தாங்காது, அதனாலே பொறுப்பு அறிவித்தல்ல அவங்க கிட்ட எல்லாம் ஒரு மன்னிப்பு கேட்டுகிறேன், தொடர் பதிவுன்னு இல்ல , சில தொடர் கதைகள ஆரம்பித்து அப்படியே விட்டேடேன், என்ன ஆச்சின்னு கேட்க ஆள் இல்லை


1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

நசரேயன், நான் கும்மி அடிக்கும் வார பேருதான், அடிக்கடி பேரு மாத்த நான் என்ன குடுகுடுப்பையா?

2) அந்தப்பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

     உண்மையான பேரு என்னன்னு தெரிஞ்சிக்க இப்படி ஒரு உக்தியா? உண்மையான பேரை சொன்னா ஒரு கோடி கொடுப்பீங்களா?

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

     இந்திய அரசாலே அவசர நிலை பிரகனப் படுத்தப் பட்ட நேரம், என்னுடைய கொலை வெறி கருத்துக்களை பரப்ப உதவியா இருந்த பேனாவை  உடைச்சிடாங்க,அதனாலே கூகுள் ஆண்டவரிடம் சொல்லி பிளாக்கர் ஓசியிலே வேண்டி வாங்கிகிட்டேன். அல்லோ இப்படி எல்லாம் கதை சொல்லுவேன்னு எதிர் பார்த்தீங்களா?

யாஹூ குழுமத்திலே நான் கல்லுரியிலே பரிசு வாங்கிய கவுஜையை தமிழிலே வெளியிட்டேன், அதைப் பார்த்ததும் நண்பன் ஒருவன்,நீ இங்கே சொம்பு அடிச்சது போதும், நாங்க ஏற்கனவே கடையை திறந்து வைத்து இருக்கோம், நீயும் வந்து உன் யாவாரத்தை கவனின்னு சொன்னான்.அந்த கடையிலே துண்டை விரிச்சி உட்கார்ந்தேன், ஈ காக்கா வரலை. கூகுள் ஆண்டவரிடம் கொலைவெறியோடு தேடுறப்ப தமிழ் மணம் கண்ணிலே பட்டு விட்டது, நான் அவங்க கிட்ட சொன்னேன், நாமளும் போகலாமுன்னு சொன்னேன், அவங்க வேண்டாமுன்னு சொல்லிட்டாங்க, அடுத்த நாளே நான் சொந்தமா கடையை திறந்து தமிழ் மணத்திலே நுழைந்து யாவரத்தை ஆரம்பித்தேன்.நான் காலை வைத்து இவ்வளவு நாளும் நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு, இருக்கும்

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

   பிரபலம் என்பதற்கு வரைமுறைகள் அடையாளம் இருந்தா சொல்லுங்க, பாஸ்கல் விதி, கெப்ளர் விதி மாதிரி ஏதும் நடைமுறைகள் இருக்கிறதா என்ன?

கொடுக்கிற காசிலே சம்பள வேலையையோட எதோ கும்மி அடிச்சி பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன், பிரபலத்துக்கு சொம்பு அடிச்சி, பார்க்கிற ஆணிக்கு ஆப்பு அடிச்சா இந்த பிரபலம் சோறு போடுமா?

கேள்வியெல்லாம் போதும், பதிலா சொல்லுன்னு சொல்லுறீங்களா?

கடையை திறந்த அன்றைக்கே எல்லோரும் பிரபலம் தான், தனியா பிரபலம் ஆக வேண்டிய அவசியம் இல்லை.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
  
    எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா நம்பனும்,

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

இதிலே சம்பாதிக்கிற ஒரு பதிவரைச்சொல்லுங்க, நான் பார்க்கிற வேலையை விட்டுட்டு முழு நேரமா கடையை திறந்து யாவாரம் பண்ணுறேன்.
  
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

    ஒரு கடையை வச்சிகிட்டே ஆளுங்களை திரட்டி நாலு பின்னூட்டம் வாங்க நாக்கு தள்ளுது, இந்த லட்சனத்திலே நாலு கடையை வச்சி பின்னூட்டம் போட காசு கொடுத்து தான் ௬ப்பிட்டு வரணும்.


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

எதுக்கு கோபப்படனும், அவரு என்ன என் சொத்தையா எழுதி வாங்கிட்டாரு?


9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அணிமா, இப்ப காணாம போயிட்டாரு 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

யாரும் பயப்பட வேண்டாம், நான் யாரையும் தொடர் இடுகைக்கு அழைக்கலை,வாய்ப்பளித்த சாமியாடி சின்ன அம்மணிக்கு நன்றி

48 கருத்துக்கள்:

ILA(@)இளா said...

:)

இந்தப் பதிவுக்கு இப்படி ஒரு சிரிப்பானே போதும்

நசரேயன் said...

//:)

இந்தப் பதிவுக்கு இப்படி ஒரு சிரிப்பானே போதும்
July 27, 2010 3:48:00 PM EDT //

இதே பெரிய விஷயம்

Mahi_Granny said...

கலக்குறீங்க நசரேயன் பேச்சுத் தமிழும் நகைச்சுவையும் சரளமாய் . அருமை

Mahi_Granny said...

கலக்குறீங்க நசரேயன் பேச்சுத் தமிழும் நகைச்சுவையும் சரளமாய் . அருமை

நசரேயன் said...

//Mahi_Granny said...
கலக்குறீங்க நசரேயன் பேச்சுத் தமிழும் நகைச்சுவையும் சரளமாய் . அருமை
July 27, 2010 3:53:00 PM EDT //

பதிவுலக மக்களே இதையெல்லாம் நான் காசு கொடுத்து சொல்ல சொல்லலை

Mahi_Granny said...

காசு கொடுத்த வாங்க மட்டும் இல்லை சொல்லவும் மாட்டோம் இல்ல

நசரேயன் said...

//
காசு கொடுத்த வாங்க மட்டும் இல்லை
சொல்லவும் மாட்டோம் இல்ல //

உங்களுக்கு சிலை வைக்க பதிவர் சங்கத்திலே இருந்து நடவடிக்கை எடுப்போம்

ILA(@)இளா said...

சே என்ன ஒரு சிந்தனை. எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க? பெரிய எழுத்தாளர் மாதிரி(35 வருசம்) எழுதறீங்க. உங்களுக்கு ஏன் ஆஸ்கார் கிடைக்கலைன்னு தெரியல(ஒஹ் அது சினிமாவுக்கு மட்டும்தானா?)

நசரேயன் said...

//சே என்ன ஒரு சிந்தனை. எப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க? பெரிய எழுத்தாளர் மாதிரி(35 வருசம்) எழுதறீங்க. உங்களுக்கு ஏன் ஆஸ்கார்
கிடைக்கலைன்னு தெரியல//

இந்த குமுறல் எல்லாம் அடுத்த இடுகையில வரும்

அணிமா said...

///அணிமா, இப்ப காணாம போயிட்டாரு ////

அம்புட்டு நல்லவனா நீயி???

அவரு காணாம எல்லாம் போகல!!! ரொம்ப ரகசியமா அமெரிக்காவ ஆட்டய போடுறத பத்தின திங்கிங்ல இருக்கார்!!!
(புள்ள குட்டிய படிக்க வைங்கப்பா)

அணிமா said...

:-)

இது ச்ச்சும்மா பார்மாலிட்டிக்கு!!!

அணிமா said...

//சில தொடர் கதைகள ஆரம்பித்து அப்படியே விட்டேடேன், என்ன ஆச்சின்னு கேட்க ஆள் இல்லை///


ஆச்சின்னா , மனோரமா ஆச்சியவா சொல்றீங்க???

நசரேயன் said...

/////அணிமா, இப்ப காணாம போயிட்டாரு ////

அம்புட்டு நல்லவனா நீயி???

அவரு காணாம எல்லாம் போகல!!! ரொம்ப ரகசியமா அமெரிக்காவ ஆட்டய போடுறத பத்தின திங்கிங்ல இருக்கார்!!!
//

திரும்பி வந்த அணிமாக்கு நன்றி

அணிமா said...

//உண்மையான பேரை சொன்னா ஒரு கோடி கொடுப்பீங்களா?///

உனக்கு ஒரு வெங்கல கிண்ணம் கூட கிடையாது!!!

அணிமா said...

///நசரேயன் said...

திரும்பி வந்த அணிமாக்கு நன்றி///


நான் எங்கேயா போனேன்.. திரும்பி வாரதுக்கு!!!

அணிமா said...

நெம்ப்ப நாள் ஆச்சு, கும்மி அடிச்சு!!!
யாராச்சும் கம்பேனி குடுத்தால் இன்னிக்கு நசரேயன, நார் நாரா, டார் டாரா கிழிச்சிடலாம்.. வாங்கப்பா, வாங்க

அணிமா said...

///இந்த லட்சனத்திலே நாலு கடையை வச்சி பின்னூட்டம் போட காசு கொடுத்து தான் ௬ப்பிட்டு வரணும்.///

அப்படின்னா, நான் போட்ட நாலு பின்னூட்டத்துக்கும் சேர்த்து $ 1000 அனுப்புங்களேன் போதும்@!!

அணிமா said...

சரி நான் இந்த ஆட்டைக்கு வரல...
அப்பலிக்கா வந்து பாக்குறேன்!!!

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
பிரபலத்துக்கு சொம்பு அடிச்சி, பார்க்கிற ஆணிக்கு ஆப்பு அடிச்சா இந்த பிரபலம் சோறு போடுமா?
//

தள : பதிவுல ரொம்ம்ம்ப பிடிச்ச வரி..........

இராமசாமி கண்ணண் said...

:))நல்லா இருக்குண்ணே பதிலெல்லாம் ...

பா.ராஜாராம் said...

தலைப்பு தொடங்கி சிரித்துக் கொண்டே இருக்கிறேன் நசர்.

பொட்டில் அடித்தது மாதிரி சில `பாடங்களும் இருக்கிறது. ஊண்டி பார்க்கிறவர்களுக்கு தெரியும் பாடம்!

வானம்பாடிகள் said...

ஏன்! பிழையெல்லாம் பின்னூட்டத்திலயே செலவாயிருச்சோ. ஒன்னையும் காணோம்.

பழமைபேசி said...

இது யாரோ மண்டபத்தில் எழுதிக் கொடுத்தது.... உங்களோட... அதாவது உங்க எழுத்தோட ஒட்டிப் பிறந்த அது இல்லியே.... அக்காங்.....

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

Karthick Chidambaram said...

:))))

LK said...

/சாமியாடி சின்ன அம்மணிக்கு நன்றி ///

இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு

கே.ஆர்.பி.செந்தில் said...

கடை சூப்பருங்கோ ...

சந்தனமுல்லை said...

:-) எப்படிபட்ட மகான் நீங்க..பதிவுலக்ம் கொடுத்து வைச்சுருக்கணும்!! (போதுமா பில்டப்?!)

அமைதிச்சாரல் said...

//எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா நம்பனும்//

நம்பிட்டோம் :-)))

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வேணும் ஆசிர்வாதம்!! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

super title :)

கண்ணா.. said...

//நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒரு கடையை வச்சிகிட்டே ஆளுங்களை திரட்டி நாலு பின்னூட்டம் வாங்க நாக்கு தள்ளுது, இந்த லட்சனத்திலே நாலு கடையை வச்சி பின்னூட்டம் போட காசு கொடுத்து தான் ௬ப்பிட்டு வரணும்.//

chaneless... சிரிப்பை அடக்க முடியல :))))))))))))))))))))))))))))


ஸேம் ப்ளட் :))))

Chitra said...

நசரேயன் said...

//
காசு கொடுத்த வாங்க மட்டும் இல்லை
சொல்லவும் மாட்டோம் இல்ல //

உங்களுக்கு சிலை வைக்க பதிவர் சங்கத்திலே இருந்து நடவடிக்கை எடுப்போம்.....Alright!!!!!!!! Super!

Chitra said...

கிண்டலாக பேசியே பதில்களில் கலக்கிட்டீங்க....... !!!!!!

க.பாலாசி said...

//பாஸ்கல் விதி, கெப்ளர் விதி மாதிரி ஏதும் நடைமுறைகள் இருக்கிறதா என்ன?//

இன்னுமா இந்த விதியல்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க, பெரிய ஆளுதான் நீங்க...

கலக்கலான நக்கல்ஸ்....

அக்பர் said...

நல்ல நகைச்சுவையா எழுதியிருக்கிங்க பாஸ்.

வால்பையன் said...

//அடிக்கடி பேரு மாத்த நான் என்ன குடுகுடுப்பையா?//


:-)

sakthi said...

என்னுடைய கொலை வெறி கருத்துக்களை பரப்ப உதவியா இருந்த பேனாவை உடைச்சிடாங்க

பேனா இப்போ சரி பண்ணீட்டிங்களா இல்லையா!!!!

sakthi said...

கொடுக்கிற காசிலே சம்பள வேலையையோட எதோ கும்மி அடிச்சி பொழைப்பை ஓட்டிகிட்டு இருக்கேன், பிரபலத்துக்கு சொம்பு அடிச்சி, பார்க்கிற ஆணிக்கு ஆப்பு அடிச்சா இந்த பிரபலம் சோறு போடுமா?


அதே அதே

sakthi said...

ஒரு கடையை வச்சிகிட்டே ஆளுங்களை திரட்டி நாலு பின்னூட்டம் வாங்க நாக்கு தள்ளுது, இந்த லட்சனத்திலே நாலு கடையை வச்சி பின்னூட்டம் போட காசு கொடுத்து தான் ௬ப்பிட்டு வரணும்.


கவலை வேண்டாம் காசு தராமலே பின்னூட்டத்துல் பின்னிடுவோம் அண்ணே!!!

sakthi said...

யாரும் பயப்பட வேண்டாம், நான் யாரையும் தொடர் இடுகைக்கு அழைக்கலை,வாய்ப்பளித்த சாமியாடி சின்ன அம்மணிக்கு நன்றி

என்ன ஒரு பெருந்தன்மை

sakthi said...

எல்லாமே என் கனவிலே தென்பட்டது அப்படின்னு சொன்னா நம்பனும்

நம்பிட்டேன்

சின்ன அம்மிணி said...

//நான் கும்மி அடிக்கும் வார பேருதான், //

தளபதி, விரிவான விளக்கம் தேவை .

சின்ன அம்மிணி said...

//நசரேயன்//

நசர் கே சாம்னே, ஜிகர் கே பாத்

இப்படி அனுராதா போட்வால் ஒரு பாட்டு பாடுவாங்க. உங்களைப்பாத்துதானே பாடினாங்க

ஹேமா said...

//சில தொடர் கதைகள ஆரம்பித்து அப்படியே விட்டேடேன், என்ன ஆச்சின்னு கேட்க ஆள் இல்லை//

எங்களுக்குத் தெரியும் நீங்க இப்பிடித்தான்...சொல்லுவீங்க செய்யமாட்டீங்கன்னு !

//கடையை திறந்த அன்றைக்கே எல்லோரும் பிரபலம் தான், தனியா பிரபலம் ஆக வேண்டிய அவசியம் இல்லை.//

எவ்ளோ அடக்கமா பணிவா இருக்கீங்க நசர் !

இந்தத் அம்மிணி அக்கா என்னையும்தான் மாட்டிவிட்டிருக்கா.உங்க பதிவை அப்பிடியே புரட்டிப் போட்டுக்கிறேன்.
உங்க அனுமதி வேணும் PLS !

RAMYA said...

நல்லா இருக்கு நசரேயன், தப்பிச்சு வந்த நீங்க இப்படி சிக்கி கிட்டீங்களா? எல்லாமே ஒரே சிரிப்பா இருந்துச்சி, எப்படித்தான் இப்படி யோசிப்பாங்களோ போங்கப்பா:)

RAMYA said...

நல்லா இருக்கு நசரேயன், தப்பிச்சு வந்த நீங்க இப்படி சிக்கி கிட்டீங்களா? எல்லாமே ஒரே சிரிப்பா இருந்துச்சி, எப்படித்தான் இப்படி யோசிப்பாங்களோ போங்கப்பா:)

RAMYA said...

பிரபல பதிவர் அணிமாவைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு?

அதெல்லாம் ஒரு காலம் நசரேயன்:(