Thursday, July 22, 2010

ஆறரை அறிவு



வாழ்க்கையிலே எதையும் திட்டமிட்டு செயல் படுத்தி பழக்கம் இல்லாததாலோ என்னவோ இப்பவும் அவரசர அவரசமா மீனம்பக்கம் பன்னாட்டு விமான நிலையம் நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறேன்.மனசிலே ஒரு பயம் இருந்தாலும், நம்ம ஊரு விமானங்கள் நேரத்துக்கு கிளம்பாது என்ற நம்பிக்கை எனக்கு கொஞ்சம் தைரியமா இருந்தது. இப்படி யோசித்துக்  கொண்டு இருக்கும் போதே விமான நிலைய வாயிலை வந்தடைந்தேன். கணணி திரைகளிலே ஓடுகிற விமானங்களின் விவரங்களைப் பார்த்துக்கொண்டே துபாய் செல்லும் பயணிகள் விமான நிலைய சீட்டுகள் வாங்கும் இடத்திற்கு வந்தேன், அங்கு நின்று வரிசையை ஒழுங்கு படித்தி கொண்டவரிடம், விமான எண்ணைக் கொடுத்து அதன் விவரம் விசாரித்தேன். அவரின் பதிலிலே என் உலகமே இருண்டு விட்ட உணர்வு.

என்னோட முகம் மாறுவதைப் பார்த்த அவர் 

"நீங்க அந்த விமானத்திலே போக சீட்டு வாங்கி இருக்கீங்களா?"

"இல்லை" ன்னு சொன்னதும் அவரு பார்த்த பார்வை கட்டை விளக்கு மாத்தை கொண்டு அடிக்கிற மாதிரியே இருந்தது. 

ஆனால் எனக்கு அம்முவைப் பார்க்க முடியாமல் போன வருத்தத்தை விட, அவளிடம் என் காதலை சொல்ல முடியலையேன்னு வருத்தம். தமிழ் படமா இருந்தா இப்படி காதலி ரயிலிலே போகிறதோடு முடித்து, அவளை கடைசியாக பார்க்க முடியாமல் போன நாயகன் கிறுக்கு பிடிச்சி தண்டவாள கம்பியைப் பேர்த்து எடுப்பதோடு கதை முடியும்,படம் பார்த்து விட்டு செல்லும் ரசிகர் எல்லோரும் சோக மழையில் நனைந்து கையிலே இருந்த கண்ணீரை வைத்து முகம் கழுவிட்டு வீட்டுக்கு போவாங்க,ஆனா நிஜ வாழ்க்கையிலே அப்படி நடக்குமா, பிடிச்ச தொல்லை விட்டதுன்னு புதுமுகமா அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம்.நான் அப்படி யோசித்தாலும் என்னவோ என்னை அறியாமலே ஒரு இறுக்கம் மனசிலே, மனசு உடல்ல எங்க இருக்குன்னு தெரியலைனாலும் என்னவோ நாலு கிலே கல்லை தூக்கி வைத்தது மாதிரி ஒரு பாரம்.   

அழுகை கற்பாறையை உடைத்து கொண்டு வரும் காட்டாற்று வெள்ளம் போல திரண்டு, ஒப்பாரியிலே முடிந்தது. என்னோட ௬த்தை பார்க்க சிறு ௬ட்டம் ௬டிவிட்டது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் வந்து விட்டனர். அவர்கள் என்னிடம் நடந்த விவரம் கேட்டனர்,அவரிடம் உண்மையை சொன்னேன்.கேட்ட அதிகாரிகள் என்கிட்டே என்ன பதில் சொல்லன்னு தெரியலைனாலும் ரெம்ப கோவமாவே இருந்தாங்க, அதிலே ஒருத்தரு

"விமானம் போனா என்ன, இப்ப இருக்கிற நவீன உலக்கத்திலே இணையத்திலே பார்த்து கல்யாணம் முடிக்கிறார்கள், நீ என்னவோ காதலி ஊருக்கு போறதைப் பார்க்க முடியலைன்னு செப்பு செம்பு மாதிரி உருகிற, இன்னொரு ஐந்து நிமிச்சத்திலே நீ கிளம்பலை, பிரிவைக் காரணம் காட்டி நொங்கு திங்க வந்த, உன் நொங்கை எடுத்திடுவோம்" 

அந்த சமயமா இன்னொரு ஆள் என் சட்டைப் பிடித்து இழுத்தார், யாருன்னு திரும்பி பார்த்த உடனே 

"யே .. மாப்புளலா.. எப்படி இருக்கடா, உன்னைப் பார்த்து எம்புட்டு நாளாச்சின்னு கேட்டான்.

"மச்சான், நல்லா இருக்கேன்டா, எப்படிடா என்னைய கண்டு பிடிச்ச"  

"நீ இங்க உங்க ஐயா செத்த மாதிரி அழுதுகிட்டு இருக்கிறதை தொலைக் காட்சியிலே பார்த்தேன், விவரம் கேட்க ஓடி வந்திட்டேன்" 

"மச்சான், அம்முவை ஊருக்கு போறதுக்கு முன்னாடி பார்க்க முடியலைன்னு வருத்தம், உனக்கே தெரியும் நான் அம்முவை எவ்வளவு காதலிக்கிறேன்னு"

"என்னது நீ காதலிக்கிறியா!!!, டேய் ஏதும் கள்ளத்துண்டு போட்டுட்டியா?"

"டேய், அவ என் காதலிடா" 

"அட கிறுக்குபயலே உனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் இருக்கும்டா"

"என்னது எனக்கு கல்யாணம் ஆகிடிச்சா!!!!!!!!!!!"

"போற போக்கைப் பார்த்தா காந்தி செத்துட்டாறான்னு கேள்வி கேட்ப போல இருக்கு, சரி வா உன்னை வீட்டுக்கு வண்டி ஏத்தி விடுறேன்"

அதற்குள்ளே விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் வந்து இன்னொரு அதிகாரி காதிலே ஏதோ சொன்னார், அவர் உடனே "இவன் இப்படி தான் ஆறு மாதத்துக்கு முன்னாடி இதே மாதிரி பண்ணி இருக்கான், அன்றைக்கு ஏர் இந்திய விமானம் இன்றைக்கு துபாய் விமானம்."

"என்ன சார் சொல்லுறீங்க" ன்னு நண்பன் கேட்க

"ஆமா தம்பி இது கொஞ்சம் மரை கழண்ட கேசு"

அவர் சொல்லி முடிக்கும் முன்னே, மருத்துவர் என்று தன்னை அறிமுகப் படுத்திய ஒருவர், அதிகாரிகளிடம் பேசி என்னை வெளியே அழைத்து வர முற்ப்பட்டார்,நானும் நண்பனுக்கு பிரியா விடை கொடுக்காமல் மருத்துவரின் பின்னால் போனேன். எனக்கு மூளை குழம்பி விட்டதான்னு நண்பன் நினைத்து கிறுகிறுத்து நடந்து போனான்.

வெளியே அழைத்து வரும் முன் மருத்துவரிடம் 

"ஐயா என் அம்மு................."

"உங்க அம்மு எங்கையும் போகலை, அங்க பாருங்க" அவரு காட்டிய திசையிலே பார்த்தேன், நம்பவே முடியலை,அம்மு ஜீன்ஸ் பேன்ட், சட்டை போட்டு வெள்ளையம்மா மாதிரி என் கண்ணுக்கு தெரிந்தாள். ஓட்டமா ஓடிப் போய் அவளை கட்டி எல்லாம் பிடிக்கலை, அவ பக்கத்திலே போய் அவ கையை பிடித்து கிள்ளிப் பார்த்தேன், நிஜம் தான் என்று என்னைப் பார்த்து சிரித்தாள்.

அவள் சிரித்த சிரிப்பு எனக்கு கிண்கிணி ஒலி அடித்தது மனதிலே, கொஞ்ச நேரத்திலே அது பள்ளி மணி ஓசை மாதிரி கேட்டதும், பள்ளிக்௬டம் போகணுமேன்னு யோசித்ததொடு நினைவு இல்லாமப் போச்சி.

பிரபல மருத்துவ மனையில் மருத்துவரின் அறையிலே அம்மு மருத்துவரின் குறிப்புக்களை ஆர்வமாக கேட்டுக் கொண்டு இருந்தாள். 

"உங்க கணவருக்கு பரிபூரண குணம் ஆகிவிட்டது,இனிமேல எந்த பிரச்சனையும் இல்லை, நீங்க பயப் படவே வேண்டாம்"

"ரெம்ப நன்றி மருத்துவரே, உங்க ஆதரவுக்கும்,ஒத்துழைப்புக்கும் எப்படி நன்றி சொல்லைப் போறேன்னு தெரியலை"

"எல்லாம் உங்களோட தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் தான், 200 கிலே எடை இருந்த நீங்க இப்ப 50 கிலோ ஆகி இருக்குகீங்க" 

"நீங்க ௬ட இந்த யோசனையைச் சொல்லும் போது, நான் உங்களுக்கும்  கிறுக்கு பிடிச்சிரிச்சோன்னு நினைச்சேன்,ஆனா நல்லா வேலை செய்து இருக்கிறது, என்னைய புதுசா பார்க்கிறவங்க எல்லாம், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைன்னு நினைக்குறாங்க,ரெம்ப சந்தோசமா இருக்கு" 

"உங்க வீட்டுக்காரருக்கு  உடம்பு சரியாகிடிச்சின்னு மறுபடியும் கண்ட படி சாப்பிட்டு உடம்பு எடையைக் ௬ட்டக் ௬டாது,அப்புறமா திரும்பவும் அவருக்கு பழைய அம்மு ஞாபகம் வரும்"

"இனிமேல இந்த 50 கிலே தான்"

"உங்க கணவரோட மருத்துவ செலவை கட்டினா எனக்கு ரெம்ப சந்தோசமா இருக்கும்"

"அதை நேத்தே கெட்டிட்டேன்"

"ரெம்ப சந்தோசம், இன்னும் ரெண்டு நாள்ல நீங்க அவரை வீட்டுக்கு ௬ட்டிட்டு போகலாம்"

"ரெம்ப நன்றி"

அடுத்த அரைமணி நேரத்திலே எனது அறையிலே மருத்துவரின் காலடி சத்தம் கேட்டதும், அம்மு .. அம்மு என்று புலம்ப ஆரம்பித்தேன்.அருகிலே வந்த மருத்துவர்

"அடச்சீ, நீ இன்னும் நடிப்பை முடிக்கலையா, அதுதான் நீ நினைச்சது நடந்து போச்சி, அப்புறம் என்ன இன்னும் அம்மு, ரோம்முன்னு, உன்னோட யோசனைப் படி நடந்து, இதை செய்து முடிக்கும் முன்னே எனக்கு கிறுக்கு பட்டம் கட்டிட்ட"

"என்னய  என்ன பண்ண சொல்லுறீங்க டாக்டர்,என்னோட மனைவியோட உடம்பை பரிசோதித்த ஒரு நல்ல மருத்துவர்,அவளுக்கு இருக்கிற நோய்கள் குறைய நிறைய உடற்பயிற்சி செய்யணுமுன்னு சொல்லிட்டாங்க, நானும் பல தடவை சொல்லிப் பார்த்தேன், கேட்கிற மாதிரி தெரியலை, அதனாலே என்னோட ஆறரை அறிவைப் பயன் படுத்தி நானே ஒரு யோசனை கண்டுபிடித்து, ௬ட்டமே இல்லாத உங்களிடம் சொல்லி செயல் படித்தி விட்டேன், இனிமேல பாருங்க கீழ்ப்பாக்கம் போறவங்க எல்லாம் உங்க கிட்டத்தான் வருவாங்க"

"உன்னோட ஆறரை எனக்கு ஏழரையாகி, இப்பத்தான் சரி ஆகி இருக்கு"

"டாக்டர்,நான் அடுத்து எப்ப சோதனை செய்ய வரணும்" 

"ஐயா சாமி, நீ இனிமேல இந்தப் பக்கமே வரக்௬டாது, உனக்கு உண்மையிலே கிறுக்கு பிடிச்சி இருந்தாலும்"  ன்னு சொல்லுறதை கேட்டு என்னால சிரிக்காம இருக்க முடியலை.

(இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வருமுன்னு தெரியலையே.)


26 கருத்துக்கள்:

Anonymous said...

தினுசு தினுசா யோசிக்கிறாங்கப்பா.....பேசாம இவருக்கு யாரவது "ஐடியா மணி" ன்னு பட்டம் கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்

a said...

//
இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வருமுன்னு தெரியலையே.)
//

தள : கோவம் வரல.. குழப்பம் தான் வருது .... .
அந்த டாக்டரோட அட்ரஸ் சொல்லுங்க....
அப்பாயின்மெண்ட் வாங்கணும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஆரம்பத்துல எதோ அறிவியல் கதை மாதிரி சூப்பரா இருக்கும்போலன்னு நம்பி படிச்சேன் ஹ்ம்..
:)

Unknown said...

வழக்கமா ஸ்பெல்லிங் மிஸ்டேக் தான் இருக்கும். இப்போ மீனிங் மிஸ்டேக் வேற இருக்கு. ஒன்னும் புரியல.

vasu balaji said...

இந்த இடுகைக்கு அப்புறம் அம்மு கண்டபடி சாப்புடுறாங்களோ இல்லையோ உமக்கு பழய சோறு கூட கிடைக்காது:)) டெய்லி ஓட்டல்ல சாப்டா உடம்புக்கு ஆவுமா?

Chitra said...

(இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வருமுன்னு தெரியலையே.)

....... இம்பூட்டு வருது..... நல்லா இருங்க, மக்கா!

sakthi said...

அவளை கடைசியாக பார்க்க முடியாமல் போன நாயகன் கிறுக்கு பிடிச்சி தண்டவாள கம்பியைப் பேர்த்து எடுப்பதோடு கதை முடியும்,படம் பார்த்து விட்டு செல்லும் ரசிகர் எல்லோரும் சோக மழையில் நனைந்து கையிலே இருந்த கண்ணீரை வைத்து முகம் கழுவிட்டு வீட்டுக்கு போவாங்க,


anupavam pesuthu poala !!!!

sakthi said...

அவளை கடைசியாக பார்க்க முடியாமல் போன நாயகன் கிறுக்கு பிடிச்சி தண்டவாள கம்பியைப் பேர்த்து எடுப்பதோடு கதை முடியும்,படம் பார்த்து விட்டு செல்லும் ரசிகர் எல்லோரும் சோக மழையில் நனைந்து கையிலே இருந்த கண்ணீரை வைத்து முகம் கழுவிட்டு வீட்டுக்கு போவாங்க,


anupavam pesuthu poala !!!!

sakthi said...

(இதை படிச்ச உங்களுக்கு எல்லாம் எம்புட்டு கோவம் வருமுன்னு தெரியலையே.)

mudiyala anna mudiyala!!!

ராம்ஜி_யாஹூ said...

I have read only 1st 4 lines then stopped.

KRP senthil also has started one story based on meenambakkam Anna International airport

Anonymous said...

இப்படியே ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கிறதுப்பேருதான் ஆறரை அறிவு :)

ஹேமா said...

ஓ...உங்களுக்கு அரை அறிவு கூடுதலா இருக்கா...அதான் நசர்....எனக்குக் கோவமே வரல !அறிவு கூடினாலும் குழப்பம்தான் !

க ரா said...

முடியலைங்க :)

சாந்தி மாரியப்பன் said...

அறிவு அரைகிலோ கூடுதலா இருந்தாலே இப்படித்தான் :-))))

pinkyrose said...

//ஓ...உங்களுக்கு அரை அறிவு கூடுதலா இருக்கா...அதான் நசர்....எனக்குக் கோவமே வரல !அறிவு கூடினாலும் குழப்பம்தான் //

hayyo nasar saar enga ponarnu paartha ippalla puriyuthu!!!

பா.ராஜாராம் said...

ஹா..ஹா...ஹா..

நசர், எனக்கு இப்ப வரையில் வலது ஓரம் வாசிக்க இயலவில்லை. யூகத்தில் வாசித்து சிரிக்கிறேன். மற்ற நண்பர்களாவது வாசிக்கிறீர்களா?

Anonymous said...

தளபதி, பதிவுலகில் நான் எப்படிப்பட்டவர் தொடர்பதிவுக்கு உங்களுக்கு நாளைக்கு அழைப்பு வரப்போகுது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க சாமி... (இந்த பதிவ மட்டும் நம்ம ரங்க்ஸ் கண்ணுல காட்டவே கூடாது....ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல...)

RAMYA said...

//
பிடிச்ச தொல்லை விட்டதுன்னு புதுமுகமா அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம்
//

அது சரி, ட்ரிங் ட்ரிங்.. யாருங்க தங்கமணியா இந்த பதிவ கொஞ்சம் படிங்க:)

RAMYA said...

//
பிடிச்ச தொல்லை விட்டதுன்னு புதுமுகமா அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம்
//

அது சரி, ட்ரிங் ட்ரிங்.. யாருங்க தங்கமணியா இந்த பதிவ கொஞ்சம் படிங்க:)

RAMYA said...

//
"என்னது நீ காதலிக்கிறியா!!!, டேய் ஏதும் கள்ளத்துண்டு போட்டுட்டியா?"
//

அதானே எங்கேடா துண்டை காணோமேன்னு பார்த்தேன் :)

RAMYA said...

//
"அட கிறுக்குபயலே உனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருஷம் இருக்கும்டா"
//

அப்படியா?? அப்படீன்னு கேக்கலையா நசரேயன் :)

RAMYA said...

//
"உங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியாகிடிச்சின்னு மறுபடியும் கண்ட படி சாப்பிட்டு உடம்பு எடையைக் ௬ட்டக் ௬டாது,அப்புறமா திரும்பவும் அவருக்கு பழைய அம்மு ஞாபகம் வரும்"
//

ஹா ஹா அப்போ களிதான்னு சொல்லுங்க:)

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

//
"என்னய என்ன பண்ண சொல்லுறீங்க டாக்டர்,என்னோட மனைவியோட உடம்பை பரிசோதித்த ஒரு நல்ல மருத்துவர்,அவளுக்கு இருக்கிற நோய்கள் குறைய நிறைய உடற்பயிற்சி செய்யணுமுன்னு சொல்லிட்டாங்க, நானும் பல தடவை சொல்லிப் பார்த்தேன், கேட்கிற மாதிரி தெரியலை, அதனாலே என்னோட ஆறரை அறிவைப் பயன் படுத்தி நானே ஒரு யோசனை கண்டுபிடித்து, ௬ட்டமே இல்லாத உங்களிடம் சொல்லி செயல் படித்தி விட்டேன், இனிமேல பாருங்க கீழ்ப்பாக்கம் போறவங்க எல்லாம் உங்க கிட்டத்தான் வருவாங்க"
//

அந்த ஆறரையை கீழ்பாக்கத்துலே தேடறாங்களாம்:-)

'பரிவை' சே.குமார் said...

முதல் முறை உங்கள் தளம்...
அடேங்கப்பா... இப்படியெல்லாம் எப்படி யோசிக்கிறீங்களோ...?
வாழ்த்துக்கள்.... அடிக்கடி வருவேன்.