Wednesday, July 7, 2010

Fetna 2010 நினைவலைகள்


அமெரிக்கா வந்து பல வருடங்கள் எல்லாம் ஆகலை, இருந்தாலும் எங்க ஊரு பக்கம் நடக்கிற தமிழ் விழாக்களுக்கு எல்லாம் போனதில்லை, ஏன்னா நான் பக்கா தமிழன், இப்படி தமிழ் விழாக்களுக்கு போகாமலே கடை நடத்திகிட்டு இருக்கியே நீ ஒரு தமிழனான்னு அப்படின்னு ஒரு கேள்வி மனசிலே, ஆனா விடை கிடைக்கலையேன்னு ரெம்ப அவமானமா போச்சி, இப்படியா கவலையிலே இருக்கும் போது, பிரபல பதிவர் மனிஷ் அதாங்க பழமைபேசி அண்ணன், இந்த வருடம்(2010) Fetna தமிழ் திருவிழா நான் தங்கி இருக்கிற இடத்துக்கு பக்கத்திலே நடக்கிறதா சொன்னாரு.  உடனே மனக்குறையைப் போக்க ஒரு நல்ல வழி வந்து விட்டதுன்னு அண்ணன்கிட்ட துண்டு போட்டு சத்தியம் பண்ணினேன் கண்டிப்பா வருவேன்னு சொல்லிட்டேன். 

என்னையப் பத்தி முன்னாடியே அவருக்கு தெரியுமோ என்னவோ, நான் வாக்கு கொடுத்தா எல்லாம் வரமாட்டேன்னு தெரிஞ்சி என்னையை இலக்கிய வினாடி வினாவிலே கோத்து விட்டுட்டாரு. இதைப் பத்தி வரும் இடுகைக்கள்ள மொக்கை அடிக்கலாம் இப்ப மத்த விசயத்தைப் பார்க்கலாம்.

கடந்த(ஜூலை,2,2010௦) வெள்ளி இரவு பொட்டிய கட்டிக்கிட்டு கல்லூரியிலே என்னோட குப்பை கொட்டிய நண்பன் வீட்டுக்கு போனேன், அங்கு இருந்து விழா நடக்கும் வாட்டர்பெரி 50 மைல் தொலைவிலே இருக்கிறது. எங்களோட வீணாப்போன கல்லூரி குழுவிலே முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற்று இருந்தாலும் கடைசியா அமெரிக்கா வந்தது நான் தான், ஆனா என்னோட நண்பன் 25 அரியர்ஸ் வைத்து இருந்தாலும், அவன் தான் முதல்ல அமெரிக்கா வந்தான். இப்படிப் பல வரலாற்று பின்னணி கொண்ட என்னோட பயணத்திலே விழாவும் ஒரு மைல் கல். இரவு நண்பன் வீட்டிலே தங்கி விட்டு உலகக் கதை, உள்ளூர் கதை எல்லாம் பேசாம என்ன நோக்கத்துக்கு அவன் வீட்டுக்கு போனேனோ அதை சிறப்பாக கொண்டாடினோம். 

அடுத்த நாள் அதாவது(ஜூலை 3,2010) அதிகாலை 8 மணிக்கு எழுந்து கிளம்பி GPS ல விலாசம் போட்டுட்டு  கிளம்பினேன், அரை மணி நேரம் காரை ஓட்டினேன், வண்டி போன போக்கிலே சில இடங்களில் எனக்கு சந்தேகம் வந்தது சரியான விலாசக்கு தான் போறாமான்னு, ஒரு வழியா போய் சேர்ந்தேன், GPS சொன்ன விலாசமான வாட்டர்பெரியைச் சேர்ந்தேன், போன உடனே வண்டியை ஓரமா நிறுத்தி விட்டு மணி அண்ணன் அலைபேசி யை தொடர்பு கொண்டேன், அவரு எடுக்கவே இல்லை, வழக்கமா நான் தான் நண்பர்கள் என்னோட எண்ணுக்கு அழைப்பு விடுத்தா எடுக்கிறதே இல்லை, நாலைந்து தடவை முயற்சி செய்து விட்டு, என்ன செய்யலாமுன்னு யோசித்து கிட்டு இருந்தேன். பிரபல பதிவர் இளா ஞாபகம் வந்தது, அவரோட எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். அவரு எடுத்தார் அவரிடம் வண்டியை எங்கே விட வேண்டும் என்று கேட்டேன், அவரு நேரா போய், இடது பக்கம் திரும்பி அப்புறம் வலது பக்கம் திரும்பினா வண்டியை நிறுத்த இடம் கிடைக்குமுன்னு சொன்னாரு.

நான் அவரிடம் நீங்க வழி காட்டுறது ஒண்ணுமே விளங்கலை பேசமா நீங்க வாங்க வெளியிலே, ரெண்டு பெரும் போயிட்டு வந்திடலாமுன்னு சொன்னேன். அவரு வெளியே வந்து, என்னோட காரிலே ஏறி காரை நிறுத்திவிட்டு Fetna விழா நடைபெற்ற அரங்க முகப்பு வந்தோம்.அரண்மனை
அரங்கம்(palace theater) முகப்பிலே அரண்மனை மாதிரி தெரியலை.

இருவரும் முகப்பை கடந்து உள்ளே சென்று, வரவேற்பு அறையிலே நான் விழாவுக்கு முன்பதிவு செய்து வைத்து இருந்த விவரம் சொல்லி, என்னோட 
நுழைவு சீட்டை வாங்கி கொண்டேன்.

முகப்பிலே சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு உள்ளே சொல்ல முயலும் போது வெளியே இருந்து வந்த பிரபல பதிவரை நான் அடையாளம் கண்டு கொண்டேன், அவர் அருகிலே வரும் வரை காத்து இருந்து அவரைக் ௬ப்பிட்டேன்,

அவர் யார்?  அடுத்த பாகத்திலே 

விழா அரங்கின் முகப்பு படங்கள்


















17 கருத்துக்கள்:

சாந்தி மாரியப்பன் said...

//கல்லூரி குழுவிலே முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற்று இருந்தாலும் கடைசியா அமெரிக்கா வந்தது நான் தான்//

ம்..லேட்டானாலும் லேட்டஸ்ட்டுன்னு சொல்றீங்களாக்கும் :-)))

vasu balaji said...

முதல்ல பாராட்டைப் பிடியுங்க. ஃபெட்னா போய்ட்டு வந்த பலன் ரெண்ட்டே ரெண்டு பிழைதான். :))

அந்த கடைசி படத்த பார்த்த பிறகு அரங்குக்கு உள்ள இருந்ததை விட அங்கதான் இருந்திருப்பீங்கன்னு தோணுது. இந்த தொகுப்பு நல்லாயிருக்கே. ஒரு நாளைக்கு ரெண்டு பார்ட்டா போடலாமே:))

எறும்பு said...

America return abdulla...

choclate enga?? I will come to collect it.

Unknown said...

அப்ப கூடிய சீக்கிரம் நம்ம தளபதி படம் வெளியீடா?

Vidhoosh said...

அந்த பிரபல பதிவர் உங்களை பார்த்து திடுக்கிடும் பயங்கரமான காட்சியை இப்டி சஸ்பென்சில் தொடரும் போட்டுட்டீங்களே..

அப்புறம்.. என்னாச்சு ...

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
ரெண்ட்டே ரெண்டு பிழைதான். :))//

கண்ணுல வௌக்கெண்ணைய ஊத்திகிட்டுல்ல பார்ப்பாங்க போலருக்கு...

ஹேமா said...

அழகா அட்டகாசமாத் தொடங்கியிருக்கீங்க நசர்.
இப்பிடியே சொதப்பாம சொல்லி முடிங்க நல்லபிள்ளை மாதிரி !

பா.ராஜாராம் said...

வலது மூலைல எழுத்து மறையுது பாஸ். கொஞ்சம் என்னன்னு பாருங்க. பிழை கண்டு பிடிக்க முடியல. (பாருங்க பாலாண்ணா வந்து ரெண்டு பிழைதானுட்டு போறார். ரசிகர் மன்றத்துக்குதான் shame-மா கீது) :-)

சீக்கிரம் ஆகட்டும்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா....இதுலயும் suspense ஆ? அதான் இந்த வருஷம் மழையே காணோம்... (!!!!??????)

pinkyrose said...

enna yesu sir aalayae kaanumnu paartha photola pose kuduthuttu nikreenga..


apram nammalu obamava paarthingala paartha pinky rose poo kuduthaangannu solrathukku thaan..

Anonymous said...

நான் மொதல்ல சாப்பாடு பக்கம் எட்டிப்பாத்துட்டு வர்றேன்

Mahesh said...

அப்பாடி... ஒண்ணாவது நனவா இருக்கு !!!

அன்புடன் நான் said...

எப்படியே நண்பரின் ஜாதகத்தையிம் கோர்த்துட்டிங்க.....
படங்கள் மிக அழகாயிருக்கு.... தொடருங்க...

அமுதா கிருஷ்ணா said...

ம்..அசத்தலான ஆரம்பம்..

Ravichandran Somu said...

தொடருங்கள்....

-முன்னாள் பாஸ்டன்வாசி

வில்லன் said...

//இருந்தாலும் எங்க ஊரு பக்கம் நடக்கிற தமிழ் விழாக்களுக்கு எல்லாம் போனதில்லை,//

இந்த கதையெல்லாம் வேண்டாம் தல.... ஒத்த பைசா செலவளிக்கனும்னாலும் நீங்க தங்கமணிகிட்ட தான் கெஞ்சனும்ன்னு ஊரு ஒலகத்துக்கே தெரியும் போது இந்த பதிவு உலகத்துக்கு தெரியாதா என்ன....

வில்லன் said...

//"Fetna 2010 நினைவலைகள்"//
தலைப்பை பாத்ததும் எங்க அங்கையும் போயி துண்ட போட்டு எதாவது வண்ணத்து பூச்சிய புடிக்க ட்ரை பண்ணிநீரோன்னு நெனச்சுட்டேன்... சரியான மொக்கை....